Loading

 

துருவின் வார்த்தைகளிலும் செய்கையிலும் அதிர்ந்திருந்தாள் உத்ரா.

பதட்டமாக உள்ளே வந்த அஜய், “உதி. அந்த கிருபாவுக்காக நம்ம கட்டிக்கிட்டு  இருந்த பில்டிங் இடிஞ்சுருச்சு” என்க, அவள் அசையவே இல்லை.

“பங்கு” என்று அஜய் தோளைத் தட்டவும்தான் நிகழ்வுக்கு வந்தவளிடம்,

“இப்போ வரை 10 கோடி அதுல போட்ருக்கோம் உதி. எல்லாமே ஸ்பாயில் ஆகிடுச்சு. இந்த கிருபா வேற உன்னை உடனே பார்க்கணும் இங்க வரேன்னு சொல்றான்.” என்று என்னசெய்வதென்று புரியாத குரலில் பேச,

அவள் “வரச்சொல்லு” என்றாள்.

 அஜய் முழித்து விட்டு, “அவனுக்கு என்ன பதில் சொல்றது? இந்த விஷயம் மீடியாக்கு போய் ரொம்ப ப்ரெஸ்ஸர் வேற நமக்கு. இதுல அவன் உடனே அவன் குடுத்த பணத்தை கேட்டா, இப்போதைக்கு நம்ம ரொட்டேட் பண்ண கூட முடியாது உதி.” என்று வெகுவாய் குழம்பினான்.

அவள் அவனை அமைதியாய் பார்த்து, “கூல் பங்கு. வர வர நீ ரொம்ப டென்ஷன் ஆகுற. அந்த கிருபாவை ஒரு ஒரு மணி நேரம் கழிச்சு வரச்சொல்லு.” என, துருவை தேடி சென்றாள்.

துருவ் ஏற்கனவே , நான் இங்கு அலுவலகம் ரெடி செய்யும் வரை, இங்கேயே எனக்கு ஒரு அறை வேண்டும் என்று விட, அவள் அவனுக்கென்று ஒரு அறையை ஒதுக்கி கொடுத்திருந்தாள்.

உள்ளே வந்தவள், வேக வேகமாக மடிக்கணினியில் ஏதோ டைப் செய்து கொண்டிருந்த துருவைக் கண்டு, அவன் முன் அவனின் பேகில் வைத்திருந்த ஒரு ‘செக் புக்’ ஐ தூக்கிப் போட்டாள்.

அவன் நிமிர்ந்து என்னவென்று பார்க்க, அவள் “இதுல சைன் பண்ணு.. ” என்றாள் திமிராக.

அதற்கு துருவ் அமைதியாய் பார்க்க, “என்ன லுக்கு? உன் ஹீரோயிசத்தை காட்றதுக்கு சும்மா இருந்த பில்டிங்க  இடிச்சுட்ட. இப்போ நான், நீ சொன்னதுக்கு ஒத்துக்கிட்டு சைன் பண்ணிட்டேன்.

பட் எனக்கு ஆன, லாஸ்க்கு யாரு பதில் சொல்றது. 10 க்ரோர்ஸ் அதுல இன்வெஸ்ட் பன்னிருந்தேன். அதை யாரு உங்க அப்பனா குடுப்பான்.

அது போக, இந்த இயர்ல மட்டும் ரொம்ப முக்கியமான ப்ராஜெக்ட் சைன் பண்ணி அட்வான்ஸ் வாங்கியிருக்கேன்.உன் ப்ராஜெக்ட்ல கான்சென்ட்ரேட் பண்ணனும்னா எனக்கு ஏதாவது ப்ராஃபிட் இருக்கணும்ல?

சோ அவங்களுக்கு நான் திருப்பி குடுக்க வேண்டிய அட்வான்ஸும் உன் கணக்குல தான் சேரும். ம்ம் போடு.” என்று அந்த செக் புக்கை நோக்கி கண்ணைக் காட்ட, அவன் அவளை தான் ரசித்துக் கொண்டிருந்தான் அவளறியாமல்.

வெளியில், அவளை திமிராக ஒரு பார்வை பார்க்க, உத்ரா, அவன் அமர்ந்திருந்த சேரின் பின்னால் சென்று, அவன் நின்ற மாதிரியே அவனை அணைத்த மாதிரி நின்று, ஒரு பேனாவை அவன் கையில் திணித்தாள்.

பின், அவன் செய்தது போலவே, அவன் கையைப் பிடித்து, சிறிது நேரம் முன்பு பயிற்சி செய்த அவனின் கையெழுத்தை அந்த செக் புக்கில் போட்டாள்.

பின் நிமிர்ந்தவள், “தட்ஸ் குட்” என்று அவன் கன்னத்தில் தட்டி,

“நீ இடிச்ச பில்டிங் ஓட ஓனர் வருவான் அவனுக்கு நீயே பதில் சொல்லிடு. அப்பறம் ஈவினிங் பிரஸ் மீட் அரேஞ்சு பண்ணிருக்கேன். அதையும் நீயே பாத்துக்கோ ஓகே வா ஹனி.” என்று அவனைப் பொய்யாய் கொஞ்சி விட்டு, புயல் வேகத்தில் வெளியில் சென்றாள்.

துருவ் அவள் சென்ற திசையையே ரசித்து பின் கடுகடுத்து “திமிரு பிடிச்சவ. என்னை கேட்காமல் பிரெஸ் மீட் அரேஞ் பண்ணிருக்கியா…? உனக்கு இன்னைக்கு குடுத்ததெல்லாம் பத்தாது.” என தீவிரத்துடன் யோசித்துக் கொண்டிருந்தான்.

தன்னறைக்கு வந்த உத்ரா, அஜயிடம், செக்கை கொடுத்து, “இதை கிருபாட்ட குடுத்துடுலாம். அப்படி அவன் கேஷ் ஆ கேட்டா, பேங்க்ல இந்த செக் அ மாத்திடு “என்று கொடுக்க, அவன் தான் திருதிருவென முழித்தான்.

துருவ் கையெழுத்திட்ட செக்கை வாங்கியவன் “அவனா செக் குடுத்தான்” என்று புரியாமல் கேட்க,

அவள் அதற்கு பதில் சொல்லாமல், “அந்த  பிரஸ் மீட் பத்தி இன்ஃபார்ம் பண்ணிட்டியா?” என்று கேட்க அவன் இவள் என்ன பிரச்சனைய இழுத்து வச்சுருக்காளோ என்று புரியாமல் தலையை மட்டும் ஆட்டினான்.

கிருபா உத்ராவிடம் வந்து ‘காச் மூச்’ என்று கத்த, அவனை துருவ் அறைக்கு அனுப்பினாள்.

அங்கு  துருவ் அவனிடம் ஏதோ பேச, வெளியில் வந்த கிருபாவின், முகம் கடுகடுத்து பொட்டிப் பாம்பாய் அடங்கி போய் இருந்தது.

செக் எதையும் வாங்காமல், “நம்ம அக்ரீமென்ட்ட கேன்சல் பண்ணிக்கலாம். இது என் ஃபால்ட் தான்னு நான் பிரஸ்ல சொல்லிக்கிறேன்” என்று சொல்லி விட்டு வெளியில் செல்ல, உத்ராவிற்கு தான் பெரிய ஆச்சர்யம், அது எப்படி உடனே சமாளித்தான் என்று…

துருவிடம் சென்றவள் “என்ன சொன்ன அவன்கிட்ட” என்று கேட்க,

“ஹ்ம்ம் உண்மைய சொன்னேன்” என்றான் அமைதியாய்.

உத்ரா அவனை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு, “மனசுல பாட்சா ரஜினின்னு நினைப்பாக்கும்…”என்று முறைக்க, அவனுக்கு ஒரு போன் வந்தது.

உத்ரா “எடுத்து பேசுங்க துருவேந்திரன். ரொம்ப முக்க்கியமான காலா இருக்க போகுது” என்று  சொல்ல, யோசனையுடன் எடுத்தவனுக்கு, அதில், ஆஸ்திரேலியாவில் அவனின் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது என்ற தகவல் வந்தது.

சற்று அதிர்ந்து, அவன் உத்ராவைப் பார்க்க, அவள் அவனிடம் வாங்கிய செக்கை அவனிடமே கொடுத்து,

“சாரி துருவ். நான் கம்மியா தான் டேமேஜ் பண்ண சொன்னேன். பட் இவ்ளோ லாஸ் ஆகும்னு நான் நினைக்கவே இல்ல” என்று இழுத்து, பாவமாக பேசினாள்.

பின், “இந்த செக்கை வச்சு லாஸ சரி பண்ணிக்கோங்க… ம்ம்” என்று விட்டு,

“இனிமே உன் ஹீரோயிசத்தையும் அப்பறம் உன் காதல் மன்னன் வேலை எல்லாம் என்கிட்ட காட்டாத. இல்ல உசுரோட ஆஸ்திரேலியா போய் சேரமாட்ட.” என்று மிரட்டினாள் அழுத்தமாக.

அவளைப் பார்த்தவனுக்கு சுறுசுறுவென கோபம் எழ, அடக்கிக்கொண்டு அவளை தீயாய் முறைத்தான்.

அப்பொழுது மீரா வந்து துருவிடம், “சார் நம்ம ப்ரொடக்ட்ஸ் எல்லாம் டேமேஜ் ஆகியிருக்கு  நாளைக்குள்ள நமக்கு அந்த ப்ரொடக்ட்ஸ் வேணும் சார்” என்று பதட்டமாய் கூற, அவன் உத்ராவிடம் இருந்து கண்ணை எடுக்காமல், “புதுசா ஆர்டர் பண்ணு” என்றான்.

“நாளைக்கு அங்க வீக் எண்டு சார். இப்போ ஆர்டர் பண்ணுனாலும் டெலிவெரி ஆக ரெண்டு நாள் ஆகிடும்” என்றவள், இப்போ என்ன செய்வது என்பது போல அவனைப் பார்க்க, உத்ரா புருவத்தை உயர்த்தி நக்கலாக சிரித்து விட்டு வெளியில் சென்றாள். 

அவனுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்யவும், உடனே அவனுக்கு தேவையானப் பொருட்கள் கிடைக்காமலும், சற்று அல்லாடிக்கொண்டு தான் இருந்தான் துருவேந்திரன். மதியம் வரையிலும், கடுப்புடன், பிரச்சனையை சரி செய்து, மீராவையும் வேலை வாங்கி அவளை திணறடித்து கொண்டிருந்தான்.

இப்படியே மதியம் வர, சுஜி துருவையும் மீராவையும், ‘இன்னைக்கு என் பெர்த் டே… இங்கயே லன்ச் அரேஞ் பண்ணிருக்கேன்.  சாப்பிட வாங்க’ என்று அழைத்தாள்.

துருவ் அவளை முறைத்து, “எக்ஸ்கியூஸ் கேட்டு உள்ள வரணும்னு பேசிக் சென்ஸ் தெரியாதா. கெட் அவுட்….” என்று கத்த,

சுஜி, “நம்ம சாப்பிட தான கூப்பிட்டோம் இவன் ஏன் காக்கா வலிப்பு வந்த மாதிரி கத்துறான்.” என்று நினைத்து விட்டு, உத்ராவிடம் சொன்னாள்.

அவனையும் கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை தான். ஆனால் அர்ஜுனையும் வரச்சொல்லி இருப்பதால், மீராவையும் அழைத்தனர்.

பின், அவனை மட்டும் விட முடியாதே என்ற ஒரு ஃபார்மாலிட்டிகாக தான் அழைத்தாள்.

சிறிது நேரம் ஓரளவு அவன் பிரச்சனையை சரி செய்து நிமிர்ந்து, மீராவிடம் சில கட்டளைகளை சொன்னவன், அவளை அவர்களுடன் சாப்பிட செல்ல சொன்னான்.

அவள் தயங்கி “நீங்களும் வாங்க சார்” என்க,

துருவ் அவளை ஒரு பார்வைப் பார்த்து, “எனக்கு வேலை இருக்கு” என்றான்.

மீரா “ப்ளீஸ் அ அ அண்ணா” என்று திக்கி திக்கி சொல்ல, அதில் எதுவும் சொல்லாமல், அவளுடன் சென்றான்.

 டைனிங் ஹாலில் துருவ், உத்ரா, அஜய், சுஜி, மீரா ஐவரும் சாப்பிட அமர, அர்ஜுன் சஞ்சயை தூக்கி கொண்டு அங்கு வந்தான்.

சஞ்சய் வந்த உடனேயே வீட்டில் இருந்த அனைவரிடமும் நன்கு ஒட்டிக்கொண்டான். லட்சுமி அவனை வீட்டில் இருக்கட்டும் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்ல, மீராவும், அவனை விட்டு விட்டு வந்தாள்.

இப்போது இவன் ஏன் கூட்டி கொண்டு வந்தான் என்று புரியாமல் பார்க்க,

அர்ஜுன் “சஞ்சு கண்ணா அப்பா உனக்கு ஊட்டி விடவா” என்றான் மீராவை பார்த்து கொண்டே.

அவள் “யாருக்கு யாரு அப்பா? நீங்க எதுக்கு இவனை இங்க கூட்டிட்டு வந்தீங்க” எனக் கோபமாகக் கேட்க,

அர்ஜுன், “யாரை கேட்கணும்” என்றான் முறைப்பாக.

அதில் சஞ்சுவை வெடுக்கென அவள் கையில் வாங்கிக் கொண்டாள்.

அர்ஜுன் விடாமல் அவள் அருகில் சேரை இழுத்து போட்டு, அவளை ஒட்டி அமர, அவள் துருவை பாவமாக பார்த்தாள்.

அர்ஜுனோ அவளின் பார்வையை உணர்ந்து “அங்க என்ன பார்க்குற? யாரும் என்னை எதுவும் கேட்கமுடியாது. உன் பாஸ் தான் உன்னை ஒத்துக்க வைக்க சொன்னாருல சோ… அந்த வேலைய தான் நான் பாக்குறேன்” என்று விட்டு, ‘இதை நான் மூணு வருஷத்துக்கு முன்னாடியே பண்ணி இருக்கணும் டி… இப்போ எப்படி என்கிட்டே இருந்து எஸ்கேப் ஆகுறன்னு நானும் பாக்குறேன்’ என்று மனதினுள் உறுதி கொண்டான்.

உத்ரா தான், “பங்கு ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் தான் டா.” என்று அவன் அவளை இடித்து கொண்டு உட்கார்ந்ததை சொல்ல,

சுஜி, “அர்ஜுன், உன்கிட்ட இருந்து இன்னும் பெர்ஃபார்மன்ஸ் எதிர்பார்க்குறேன்” என அவனை ஏத்தி விட்டாள்.

மீரா, சுஜியை முறைக்க, அவள் “என்கிட்டே முறைச்சு என்ன ஆகப்போகுது சிஸ்டர். இந்த குடும்பத்துட்ட சிக்கிட்டிங்கள்ல… எப்படி சின்னா பின்னமா ஆகா போறீங்கன்னு மட்டும் பாருங்க.”

அஜய், “ஆமா இவள் குடும்பம் பெரிய டாட்டா பிர்லா… வாயை மூடிக்கிட்டு சாப்பிடுடி பஜ்ஜி. டேய் அண்ணா அவங்களை சாப்புட விடுடா” என்று மீராவிற்கு பாவம் பார்த்து சொல்ல, அர்ஜுனும் லேசாக தள்ளி உட்கார்ந்தான்.

பின், விதுனும் வந்து அவர்களுடன் கலந்து கொள்ள, அஜயும், சுஜியும் எப்போதும் போல், சண்டை இட்டு கொண்டு சாப்பிட, அஜய் அவளை பஜ்ஜி என கூப்பிடுவதை பார்த்து, மீரா, அவனிடம் “அதென்ன பஜ்ஜி” என்று கேட்டாள்.

அதில், அனைவரும் சிரி சிரி என சிரிக்க,

சுஜி மீராவிடம் “ஏன் சிஸ்டர்? என் பிறந்த நாள் அன்னைக்கே என்னை இப்படி டேமேஜ் பண்ணனுமா.” என்று பாவமாய் கேட்டாள்.

அவள் புரியாமல் முழிக்க, உத்ரா, “அஜய் அந்த ஃபிளாஷ் பேக்க சொல்லு” என்றதில், சுஜி தடுக்க தடுக்க அவன் ஆரம்பித்தான்.

சில வருடங்களுக்கு முன்பு, பள்ளிக் கல்வியை முடித்து விட்டு, முதல் முதலாய் பல கனவுகளையும், லட்சியங்களையும், தாங்கி, புது புது உறவுகளை தன் வாழ்க்கையில் காட்டப் போகும், அந்த கல்லூரியில் காலடி எடுத்து வைத்தாள் சுஜிதா.

அன்று தான் முதல் நாள் என்பதால், சீனியர்ஸ்  ராகிங், புது மாணவர்களின் பதட்டம் என அந்த கல்லூரியே கலை கட்டி இருந்தது.

சுஜிக்கு ராக்கிங்கை நினைத்து உடலெல்லாம் நடுங்கியது.

 இருந்தும், பாத்துக்கலாம் என்று நினைத்து உள்ளே வந்தாள்.

காலையில் பயத்தில் சரியாக சாப்பிடாமல் வந்ததில் லேசாக, பசி வந்தது. ஆனால் கேன்டீனில் சீனியர்ஸ் நின்று கொண்டிருக்க, அவள் அவர்கள் செல்லும் வரை காத்திருந்து, அவர்கள் நகரவும், டக்கென்று போய் டீயும் பஜ்ஜியும் வாங்கி கொண்டு சேரில் அமர்ந்தாள்.

அன்று, உத்ரா தாமதமாக வர, அஜய் சீக்கிரம் கல்லூரிக்கு வந்திருந்தான்.

வந்தவன், என்ன செய்வதென்று தெரியாமல், கல்லூரியை சுற்றிக் கொண்டிருக்க, அப்பொழுது தான் சுஜி மிரண்டு உள்ளே  வருவதை கண்டு அவளை கவனிக்க ஆரம்பித்தான்.

அவளின் பயந்த முகமும், கேன்டீனில் அவள் சென்று அமர்ந்த விதமும், அவனை ஈர்க்க, அவன் உண்மையிலேயே அவளுக்கு உதவி செய்யும் எண்ணத்தில் தான் அவள் அருகில் சென்றான்.

அவள் முன் நின்ற அஜயை நிமிர்ந்து பார்த்தவள், மீண்டும் பஜ்ஜி சாப்பிடுவதை தொடர்ந்தாள்.

அவன் “ஹெலோ” என்று அழைக்க, அவள் அவனை திமிராக பார்த்து “என்ன” என்றாள்.

அப்படியும் அவன் பொறுமையாய், “நீ ஃபர்ஸ்ட் இயர் ஆ?”

  “என்னை பார்த்தா ஃபர்ஸ்ட் இயர் படிக்கிற மாதிரியா இருக்கு? நான் சீனியர். ஆமா நீ இங்க என்ன பண்ற, கிளாஸ்க்கு போகாம.” என்றாள் கெத்தாக.

‘அடிங்க…என்கிட்டயேவா.’ என எண்ணிய அஜய்,

“உன் ஐடி கார்ட் எங்க?” அவள் முன் அமர்ந்தபடி வினவினான்.

  “அதை எதுக்கு நீ கேட்குற?”

அவனோ, அவனின் வோட்டர் ஐடியைக் காட்டி, ஒரு ப்ரொஃபஸ்ஸர் கிட்ட மரியாதை இல்லாமல் பேசுற. எந்த ஸ்கூல் நீ. இதான் உனக்கு கத்து குடுத்தாங்களா” என கோபமாய் கேட்க, அவள் பஜ்ஜியை வாயில் வைத்து கொண்டு பேந்த பேந்த முழித்தாள்.

அவன் ஏதோ சீனியர் ஆக இருப்பான்.. அவனிடம் கெத்தாக நடந்து கொள்ள வேண்டும் என நினைத்து அவள் இவ்வாறு பேசிட, அவன் பேராசிரியராக இருப்பான் என்று அவள் எண்ணவே இல்லை.

அவளின் பாவனையில் அவனுக்கு வந்த சிரிப்பை சிரமப்பட்டு அடக்கி விட்டு,

“சரி நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு உன்னை மன்னிச்சு விடறேன்”

“கேளுங்க சார் நான் கரெக்ட் ஆ பதில் சொல்லுவேன்”

“எக்ஸ்ப்ளெய்ன் அபௌட், ஊஹீப்புக்கி (uhibbuki )”  என்று கேட்க, அவள் மலங்க மலங்க முழித்தாள்.

“சார் ஃபிசிக்ஸ் புக் கேள்வி பட்ருக்கேன் இதென்ன புக்கு சார்” என்று பாவமாய் கேட்க, அவனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

இருந்தும், அரும்பாடுபட்டு அடக்கி விட்டு, கோபமாகி முகத்தை வைத்து, “இது கூட தெரியல நீ 12 வருஷமா ஸ்கூல்ல என்ன படிச்ச?” என்று கத்த, அவள் யாரும் பார்க்கிறார்களா என்று திரும்பி திரும்பி பார்த்தாள்.

 பின், “சாரி சார்… தெரியாம பண்ணிட்டேன்… ப்ளீஸ் சார்.” என்று கெஞ்ச,

“சரி ஒரு பத்து உக்கி போட்டுட்டு கிளாசுக்கு போ”, என்றதில், அவன் கேட்ட கேள்விக்கு இதுவே பெட்டெர் என நினைத்து உக்கி போட்டு விட்டு, கிளம்ப போக, மீண்டும் அவனிடம் திரும்பினாள்.

அஜய் என்னவென்று பார்க்க, அவள் சாப்பிட்டு கொண்டிருந்த ஒரு பஜ்ஜி தட்டிலேயே இருந்ததில், அதனை சுட்டி காட்டி “பஜ்ஜி சார்” என்றாள்.

  “உன் பேரு என்ன?” 

“சுஜி சார்”

அதில் பஜ்ஜியை அவன் எடுத்து சாப்பிட்டு கொண்டு, “சுஜியை விட பஜ்ஜி நல்லாருக்கே” என்று அவளை நக்கலாக பார்த்து கொண்டே சொன்னதும், அவள் முகத்தை சுருக்கி கொண்டு, வகுப்பிற்கு சென்றாள்.

அஜய் எங்கு சென்றான் என தெரியாமல், உத்ரா வகுப்பறைக்கு சென்று விட, அங்கு வந்த சுஜி, உத்ராவின் அருகில் சென்று அமர்ந்தாள்.

முதலில் உத்ராவும் அவளை கண்டுகொள்ளவில்லை.

பின், சுஜியே “எக்ஸ்கியூஸ் மீ” என  அழைத்து, “கேன் யூ ப்ளீஸ் எக்ஸ்ப்ளெய்ன் அபௌட் ஊஹீப்புக்கி ?” என்று கேட்க,

அவள் “ஐயோ பாவம் மெண்டல் ஆஸ்பத்திரில இருந்து அப்படியே வந்துருக்கு போல” என்று அவளை ஒரு மாதிரியாக பார்க்க, அப்பொழுது அஜய் வகுப்புக்குள் நுழைந்தான்.

அவனை பார்த்ததும், சுஜி வேகமாக எழுந்து நின்று “குட் மார்னிங் சார்” என்று சலியூட் அடிக்க, அனைவரும், அவளை லூசா என்பது போல் பார்த்தனர். பின்னே அவன் காலேஜ் பேக் போட்டு வந்ததை பார்த்தும் விஷ் செய்தால் அதான்.

அஜயும், உத்ராவும் விழுந்து விழுந்து சிரிக்க, அதன் பிறகே, அவன் தன்னை கிண்டல் செய்திருக்கிறான் என்றே அவளுக்கு புரிந்து அவனிடம் சண்டை இட ஆரம்பித்தாள்.

இப்படியே இவர்களின் நட்பும், சண்டையையும், ஆரோக்கியமாகவே வளர்ந்தது. அஜய்க்கும் உத்ராவிற்கு பெரிய நண்பர்கள் பட்டாளம் இருந்தாலும், சுஜி இருவருக்குமே மிகவும் நெருக்கமாகி விட்டாள்.

மீரா, சிரிப்பை அடக்க முடியாமல், கண்ணில் நீர் வரும் அளவுக்கு சிரித்தாள்.

“ஐயோ என்னால முடியல. இவ்ளோ டியூப் லைட் ஆவா இருப்பீங்க” என்று சுஜியை பார்த்து சிரித்து கொண்டே கேட்க, அவள் பாவமாக, “உங்களுக்காவது அந்த ஊஹீப்புக்கினா என்னன்னு தெரியுமா?” என்று கேட்க, அவள் மேலும்  வாய் விட்டு சிரித்தாள்.

அர்ஜுன் அவள் சிரிப்பதை தான் ரசித்துக் கொண்டிருக்க, சஞ்சு தான் அவளை பார்த்து தானும் சிரித்தான்.

இதில், ஒரு சிறு சிரிப்பை கூட சிந்தாமல் சாப்பிட்டது துருவ் மட்டும் தான்.

உத்ரா, ‘சிடு மூஞ்சி ஒரு ஃபார்மாலிட்டிக்காவது சிரிக்கிறானா’ என்று அவனை மானசீகமாக திட்டிக்கொண்டிருந்தாள்.

இப்படியே பேசிக்கொண்டே மீரா, சஞ்சுவிற்கு ஊட்டி விட, அவன் போதும் போதும் என்று சொல்லியும் “இன்னும் ஒரு வாய் டா தங்கம்” என்று கொடுக்க, அவன் உமட்டுவது போல் பாவனை செய்தான்.

மீரா, “நடிக்காத, ஒழுங்கா சாப்புடு.” என்று அதட்டி மிரட்டி ஊட்டுவதை அர்ஜுன் மேலும் ரசிக்க, பின் ஏதோ யோசித்தவன்,

உத்ராவிடம், “உதி நீ கூட சின்ன வயசுல இந்த மாதிரி தான் பண்ணுவ. உன்னை சாப்பிட வைக்கிறதுக்குள்ள, அத்தை படாதபாடு படுவாங்க. நீயும் இப்படித்தான் சாப்பாடை அவாய்ட் பண்ண வாமிட் வருதுன்னு சொல்லி ஏமாத்துவ” என்று சொல்ல, அவள் விழுங்கிய சாப்பாட்டை அப்படியே தட்டில் துப்பி விட்டு, லொக்கு லொக்கு என இரும ஆரம்பித்தாள்.

அவள் அருகில் அமர்ந்த துருவ் நீரை எடுத்து நீட்ட, அவள் அதனை வாங்காமல் வேறு குவளையை எடுத்து குடித்து விட்டு,

“டேய் நாயே… சத்தமா சொல்லாதடா சும்மாவே பத்திரிக்கைக்காரங்க என்னை பத்தி எப்படி தப்பா எழுதலாம்னு ரூம் போட்டு யோசிக்கிறாங்க. இதுல நீ வேற இந்த பையன் என்னை மாதிரி பண்றான்னு சொன்ன. கண்ணு காத்து மூக்கு வச்சு எழுதிடுவாங்க. அப்புறம் இந்த ஜென்மத்துல எனக்கும்  கல்யாணம் நடக்காது. நீங்க எல்லாருமே கடைசி வரை  சிங்கிளா தான் இருக்கணும்.” என பதறினாள்.

“ஹி ஹி இல்ல உதி டக்குன்னு ஞாபகம் வந்துச்சு அதான் சொன்னேன்” என்று அர்ஜுன் அசடு வழிய,

“உன் ஞாபகத்துல தீயை வைக்க” என உத்ரா முறைத்ததில், சுஜி, அஜய், விது மூவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

பின் விது “ஆனால் அர்ஜுன், உதியா அந்த மாதிரி பண்ணுவாள்? ரிஷி தான அப்படி பண்ணுவான்” என்று கேட்க, உத்ராவின் முகம் மாறியது.

“இப்போ இந்த டாக் ரொம்ப முக்கியமா” என்று அவள் கடுகடுக்க,
 மீரா தான் அவள் அர்ஜுனை திட்டுவதைப் பார்த்து மிரண்டு போய் அமர்ந்திருந்தாள்.

பாவம் தனியாகவே வளர்ந்தவள், அவர்கள் விளையாட்டுக்கு பேசுவதை கூட அவளால் உணர முடியவில்லை அவள் உண்மையாகவே திட்டுகிறாளோ என்று பயந்தாள்.

அஜய் மீராவை கவனித்து, “அண்ணி, இங்க நாங்க சண்டை எல்லாம் போடல. நாங்க பேசிக்கிறதே அப்டி தான் நீங்க ரிலாக்ஸ் ஆ இருங்க” என்று சொன்னதும் தான் சற்று இலகுவானாள்.

பின், அஜய் உத்ராவை திசை திருப்ப “ஆமா பங்கு, நீ கல்யாணம் பண்ணலைன்னா நாங்க ஏன் சிங்கள் ஆ இருக்கணும்” என்று கேட்க,

அவள் தன்னை சரி செய்து தெனாவெட்டாக “ஆமா எனக்கு கல்யாணம் நடக்கலைன்னா உங்களுக்கும் கல்யாணம் நடக்க விடமாட்டேன். அதெப்படி நீங்க மட்டும் கம்மிட் ஆகலாம்” என்று சிரிக்க,

“என்னவொரு நல்ல எண்ணம்..” என தலையில் அடித்தவனுக்கு ஒரு போன் வந்தது.

அதில் சொன்ன செய்தியைக் கேட்டு முகம் மாறியவன் அதனை வைத்து விட்டு, உத்ராவிடம், “உதி பிரஸ்ல இருந்து எல்லாரும் வந்துருக்காங்களாம்.” என்றான் பதற்றமாக.

அவள் “எதுக்குடா? அதான் அந்த கிருபாவே நானே பிரஸ்க்கு பதில் சொல்லிக்கிறேன்னு சொல்லிட்டானே. அப்பறம் ஏன்” என்று புரியாமல் கேட்க,

அவன் குழம்பி விட்டு, “தெரியல பங்கு. நீ தான் வரசொன்னன்னு சொல்றாங்களாம். அது போக, நீ ஏதோ உன் கல்யாணத்தை பத்தி அறிவிக்க போறதா சொல்றாங்களாம்.” என்று சொல்ல, அவள் அதிர்ந்து விட்டாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த துருவை பார்த்தவள்,

” இதெல்லாம் உன் வேலை தான” ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் துருவ்.” என்று அவள் ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரிக்க,

அவன் அவளை நக்கலாக நோக்கி, அவனின் ஆள்காட்டி விரலால், அவள் விரலை பிடித்துக் கொண்டு,

“நீ ஆரம்பிச்சு வச்சது தான் ஹனி. நான் முடிச்சு வைக்கிறேன்.” என்றான் ஏளன புன்னகையுடன்.

அவளோ அவனை பார்வையால் எரித்தாள்.

இதில் மற்றவர்கள் அவள் அவனை ஒருமையிலும், அவன் இவளை ‘ஹனி’ என்று அழைப்பதிலும், ‘என்னடா நடக்குது இங்க’ என விழித்திருந்தனர்.

உறைதல் தொடரும்…!
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
19
+1
62
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்