Loading

அத்தியாயம் இருபத்து ஆறு 

காரின் கண்ணாடியை பார்த்து தன் கேசத்தை சரிசெய்தவன் மனதில் 

‘ என்னை ஏன்டா இம்புட்டு அழகா படைச்ச ஆண்டவா ‘ என்று தான் ஓடியது . விசில் அடித்துக் கொண்டு எதார்த்தமாக திரும்ப , மகி நிற்பதை பார்த்து கீழே இறங்கினான். அந்த அழகிற்கே அழகு சேர்க்கும் அழகன்.

” என்ன சந்துரு இவ்வளவு சீக்கிரம் வந்துருக்கிங்க ” என்று அவனை நோக்கிகி வந்தவாறு கேட்டாள் மகி.  அவனே தான் ,  சந்துரு தான் விடிந்தும் விடியாததுமாய் அவனது  காரை கிளப்பிக் கொண்டு சித் வீட்டிற்கு வந்திருந்தான்.

” அது இனி நீ பஸ்ல போக தேவை இல்லை, நானே இறக்கி விட்டு கூப்பிட்டும் வந்திடுறேன் ” என்றான் விழிகளில் இருந்த கூலர்ஸை கலட்டிவாறு.

” அது… இல்லை பரவாயில்லை ” என்று மகி தயக்கமாக அவனுக்கு ஏன் வீன் சிரமம் என யோசிக்க, சந்துருவோ மசிவதாய் இல்லை.

” மகி என்ன ஃபிரண்ட், அண்ணானு சொன்ன மட்டும் பத்தாது , அந்த உரிமையை தரனும் . இப்போ எப்படி என் கூட வரியா இல்லை பஸ்ல போறியா ” என்று கூறியது தான் தாமதம் கார் இருக்கையில் அமர்ந்திருந்தாள் சித்தின் மகிமா.

” குட் கேர்ள் ” என்று மகியை பார்த்து கூறியவன், சற்று தொலைவில் தன் நண்பன் நிற்பதை பார்த்தான்.

” என்ன மச்சான் நீயும் கிளம்பிட்டியா…அதான் இனிமே  வேலை இல்லையே,  கொஞ்சம் பொறுமையா வரலாம்ல ” என அவனை பார்த்து கேட்க, அப்போது தான் மகி சித் தனக்கு பின்னால் தான் நின்றிருக்கிறானா என்று சன்னல் வெளியே தலையை நீட்டி தன்னவனை பார்க்க, அவனின் முகமோ கோபமாக இருந்தது. அதில் தன் மேல் ஏதேனும் தவறு இருக்கிறதா ஒரு முறை யோசித்து மீண்டாள்.

” ஒன்னு இல்ல  ” என்று மொட்டையாக  கூறியவன் வீட்டிற்குள் புகுந்தான். அவனை பார்த்து தலையை சொறிந்த வாரே டிரைவர் சீட்டில் அமர்ந்தான் சந்துரு.

” என்னாச்சு சந்துரு ஏன் கண்ணா ஒரு மாறி இருக்கான் ” என்று தன்னவன் முகமே கோபத்தில் இருப்பதை பார்த்து கேட்க, 

” எனக்கு எப்படி தெரியும் ” என்றவன் கல்லூரியை நோக்கி காரை செலுத்தினான். 

” அது எப்படி மகி .. என்கிட்ட கண்ணானு சொல்லுற ..அவன் கிட்ட பேசுனா சித்னு சொல்லுற , கஷ்டமா இல்லையா ” ஈராறு பல நாள் இருந்த கேள்வியை தொடுக்க, 

” உங்க கிட்ட பேசும் போது நா காதலிச்ச கண்ணாவ தான் பாக்குறேன்…ஆனா அவர பாக்கும் போது , அவரோட காதல் கிடைக்காத, எனக்கு காதலிக்க உரிமையை இழந்த சித்தார்த் கிட்ட பேசுவேன் அதான் ” என்று யோசிக்காமல் அவள் சாதரணமாக கூறினாலும் அந்த வார்த்தைகளின் வலியை சந்துருவால் உணர முடிந்தது. மேலும் பேசி நோகடிக்க வேண்டாம் என நினைத்தவன் அமைதியாக வந்தான்.

மகியின் என்ன ஓட்டங்களோ தன்னவனிடமே இருந்தது. நேற்று நன்றாக தானே பேசினான் அதற்குள் என்ன ஆனது, எதாவது தவறு செய்து விட்டோமா , நேற்று பேசியதை போல் தன் பெயரை ஆசையாக அவன் குரலில் அழைத்து தன்னிடம் பேச மாட்டானா என பல வாரு யோசித்தது.

” மகி இறங்கிற  ஐடியா இல்லையா ” என்று அவளை பார்த்து  சந்துரு கேட்க, அப்போது தான் கல்லூரி வந்து விட்டதை உணர்ந்தவள் தன் தலையிலே அடித்துக் கொண்டு இறங்கினாள். சந்துருவின்  நல்ல  நேரம்  போல  அப்போது தான் சந்தாயாவும் எதிரே  நடந்து வந்து கொண்டிருந்தாள். அன்று பார்த்தது தான் பிறகு வேலை பளுவில் பார்க்க தவறியவன்  இல்லை இல்லை சித் வேலையை கொடுத்து பார்க்க விடாமல் செய்துவிட, சர்ரென இறங்கி மகி முன் நின்றான்.

” ஹாய் மகி ….” என கைகளை தூக்கி ஏதோ கூறவந்த சந்தியா , அவள் அருகில் சந்துரு நிற்பதை பார்த்து கையை இறக்கி கொண்டு கல்லூரி உள் நுழைய பார்த்தாள்.

‘ ஐயோ என்ன நம்ம ஆளு உள்ள யூர்டர்ன் எடுக்குறா ‘ என்றவாறே அவளை போய் வழி மறைத்தான் சந்துரு. அவனை பார்த்த மகிக்கு இப்போது சித் எண்ணம் போய் சிரிப்பு வந்தது.

” என்னங்க பாத்தும் பாக்காத மாறி போறிங்க ” என்று அவன் கேஷுவலாக கேட்டாலும் அதற்கு பதில் அளிக்க முடியவில்லை சந்தியாவினாள்.

” இப்போ கை எப்படி இருக்கு ” என்று அவள் கையை பிடித்து கேட்க, சட்டென்று தன் கையை உறுவிக் கொண்டாள்.

” ம்ம்ம் ” என்று தலையை மட்டும் ஆட்டியவள் உள்ளே நடக்க பார்க்க, தன் கையை சந்தியா செல்ல விடாது தடுத்தான் சந்துரு.

” என்னங்க ..எதுவும் சொல்லமா போறிங்க…அன்னைக்கு நா பேசுனத பத்தி எதாச்சு யோச்சிச்சு பார்த்திங்களா ” என்று அவன் சீரியஸாக கேட்க, அவளுக்கோ பதில் கூற முடியவில்லை.

” மொத வழிய விடுங்க… ” என்றவள் நகர பார்க்க, அவள் பின்னே கேட்டுக் கொண்டே நடந்தான். விரு விருவென நடந்தே வகுப்பறையில் நுழைந்து சிரித்துக் கொண்டாள் சந்தியா.அவளை பின் தொடர்ந்து வந்த சந்துருவோ பல்ப் வாங்கியதில் அசிங்க பட்டு திரும்ப , இடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டு நின்றாள் மகி.அவளை பார்க்காதது போல் நழுவ பார்க்க

” எங்க சார் போறிங்க ” என்று அவன் பின்  சட்டையை பிடித்து இழுத்தாள் .

” ஈஈஈஈஈ ” என பல்பொடி விளம்பரம் செய்பவன் போல் பல்லை காட்ட, சந்துருவை பார்க்க சிரிப்பு சிரிப்பாக வந்தது இருந்தாலும் அதை கட்டுப்படுத்தி

” அங்க அண்ணா –  தங்கச்சி , ஃபிரண்டுனு படம் காட்டிட்டு , இங்க சந்தியா பின்னாடி வர்ரிங்க ” என்று நக்கலாக கேட்க, 

” வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா …ஈஈஈ ” என்று சிரித்து விட, அவளும் சிரித்து விட்டாள்.

” மகி எதாச்சும் ஐடியா சொல்லேன்… உன் ஃபிரண்ட்அ கரெக்ட் பண்ண ” என கண்ணடித்து மகியின்  தோளில் கைகளை வைத்து   கேட்டான்.

” ஹாலோ என்ன பாத்தா எப்படி தெரியுது …ஹான் ” என்று முகத்தை சுருக்கி கேட்க, 

” ஹ இந்த ஏரியா மாமா மாறி இருக்கு ” என்றவன் மகி அடிப்பதற்குல்  ஓடிவிட்டான். ஓடிய சந்துருவை  பார்த்து  சிரித்துக் கொண்டே வகுப்பினுள் நுழைந்தாள் மகி.

” என்ன மகி , சந்தியாவும் சிரிச்சிட்டே உள்ள வரா … நீயும் சிரிச்சிட்டு வர , என்ன நடந்துச்சு அப்படி ” என இருவரையும் பார்த்து சௌமியா கேட்க, சந்தியா சிரித்துக் கொண்டு வந்தாளா என அவளை பார்க்க, மாட்டிக் கொண்ட பூனையை போல  முகத்தை வைத்துக் கொண்டு மகியை பார்த்தாள்.அவள் அருகே சென்ற மகி 

” உங்க விசியம் பா…நான் கேட்க மாட்டேன் ” என கூறி சிரித்தவள்,

” நிஜமா தான் சொல்றேன் சந்தியா… உன்  முடிவு தான்,  சந்துருவுக்கு என்ன பதில்னாலும்  அவர்கிட்ட சொல்லு ” சிரித்துக் கொண்டே கூறி, அவளை லேசாக அணைத்து விடுவித்தாள்.  பின்பு வகுப்புகள் நகர, அதனுடன் சேர்ந்து அவர்களும் சென்றனர். இடைப்பட்ட தருணத்தில் மகி  தான் வேலைக்கு செல்ல வில்லை என்றும் சந்துரு கூறியதை பற்றி கூறினாள். அதை கேட்டதும் மேலும் சந்துரு மேல் மரியாதை உயர்ந்தது சந்தியாவிற்கு. ஏற்கனவே அவன் மருத்துவமனையில் பேசியது அதிசியமாக இருந்தது, அது எப்படி ஒருவன் தான் வேறு ஒருவரை காதலித்து  அதே தோற்றதும் தெரிந்தும் பட்டென தன் காதலை கூறியவனை லேசாக   பிடித்தது. இன்று மேலும் பிடித்து போனது சந்தியாவிற்கு.

நடப்பது நடக்கட்டும் என தனக்கே சமாதானம் செய்து அலுவலகம் வந்து சேர்ந்திருந்தான் சித்தார்த்.  சந்துருவும் கடலைகளை முடித்து வந்திருந்தான் . இருவரும்  பயிர்களின் அடுத்த கட்ட வேலையை  பற்றி பேசியவாறே  நடந்து வந்துக்கெண்டிருந்தனர்.  செய்முறைகளை கூறிக்கொண்டே வந்த சித்தின் வார்த்தைகள் வெளியே வராமல் தொண்டையை கட்ட, விதை நெல்லை பார்த்தவன் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. 

பேசிக் கொண்டு வந்தவனின் குரலை  காணாது திரும்பி பார்த்த சந்துரு தன் நண்பனை பார்த்து அதிர்ச்சியானான். அவன் பார்வை காட்டிய காட்சியில் அவனும் ஆடிவிட்டான். சந்துரு சித் அருகே வர , கண்ணீரை வடித்த வாரே வெளியே ஓடினான் மகியின் கண்ணா. 

சந்துருவிற்கு புரிந்தது நண்பனின் நிலை , இத்தனை வருடங்களாக கண்டுபிடித்தவை கொஞ்சமாக வெற்றி கிட்டி இப்போது சிதைந்து கிடந்தால் யாருக்கு தான் மனம் வலிக்காது. தன்னிலை இல்லாது உயிர் போன வலியில் காரை கிளப்பி கொண்டு கிளம்பியிருந்தான் சித். சந்துரு அவனை பிடிக்க பார்க்க, முடியவில்லையே!.  நிலைமையை கையாள இப்போது மகியின் உதவி தேவை பட அவளுக்கு அழைத்தான் சந்துரு.

வகுப்பறையில் இருந்தவள் போனை கட் செய்ய, நான்கு முறை அழைத்து தோற்று ஐந்தாவது முறையே எடுத்தாள் மகி.

” ஏய் போன் அடிச்சா எடுக்க மாட்டியா ” என்று சந்துரு கத்த, போனை காதில் இருந்து ஒரு முறை எடுத்து உறுதி செய்தாள் மகி பேசிகிறது சந்துரு தானா என்று. எப்போது சிரித்து விளையாட்டாய் பேசுபவன் இன்று எல்லையற்று கத்துவது  அதிரடியாக இருந்தது மகிக்கு.

” கிளாஸ்ல இருந்தேன் …சொல்லு சந்துரு என்ன ஆச்சு , இப்போ கால் பண்ணிருக்க ” என்று அவள் கேட்டதும் , சந்துரு கூறிய பதிலில் அடித்து பிடித்து ஓடி சித்தின் அலுவலகம் வந்திருந்தாள்  மகி. பார்த்தவளுக்கும் அவளின் மன்னவனை போல இதயம் உடைய ஆரம்பித்திருந்தது. 

” எப்…படி இ..து ” என அவளின் வார்த்தைகள் உடைந்து வெளியே வர அது தான் சந்துருவுக்கும் புரியவில்லை.

” தெரியல மகி..நேத்து மட்டும் தான் நாங்க பார்க்க வரல…அதுக்குல்ல  இப்படி ” என்று நிறுத்தினான். 

என்ன செய்வது என தெரியாமல் தினறினாள் மகி. எதற்காக தன் கண்ணா இத்தனை காலம் உழைத்தானோ அது அனைத்தும் வீணாகி இருக்க  உடைந்து போனாள் மகி. 

நெற்கதிர்கள் அங்காங்கே துரு நிற காட்சி அளிக்க அதை பார்க்க பார்க்க முடியவில்லை மகியினாள். 

” சந்துரு கண்ணா … ” என்று இழுக்க, ” இதை பார்த்தும் அழுதிட்டே போய்டான், எங்கு சொல்லாமலே ” என்றான் சந்துரு.

அரிசி பாக்டீரியா பிளைட் என்ற நோய் தாக்கி இருந்தது மகியின் கண்ணா வின் நெற் கதிர்களில். இந்த நோய் வர கூடாது என நினைத்து தான் அத்தனை மரபணு மாற்றங்களை செய்து கண்டுபிடித்தான் ஆனால் இன்று அந்த நோய் அங்காங்கே தன் நிலத்தில் இருந்த கதிர்களில் கண்டதும் உடைந்து விட்டான் சித். இந்த நோய் அவ்வளவு எளிதில் போக்கக்கூடிய நோய் அள்ள, இது வந்துவிட்டாள் ஒன்று தாக்கப்பட்ட கதிர்களை நிமிடத்தில் பிடுங்கி எரிய வேண்டும் இல்லையென்றால் பாக்டீரியாவில் மரபணு மாற்றங்களை செய்ய வேண்டும் . 

” சந்துரு நீங்க கண்ணாவ தேடுங்க … நா ஏதாச்சு பண்ண முடியுதானு பார்கிறேன். கொஞ்ச நாளா இதை பத்தி தான் நானும் படிச்சிட்டு இருக்கேன்.கண்டிப்பா எதாவது பண்ணலாம் ” என்று சந்துருவை  அனுப்பி வைத்தவள் தன் விழிகளில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள் அலுவலக அறையில் நுழைந்தாள். 

நிமிடத்தில் அத்தனை கதிர்களையும் அகற்றுவது சாத்தியம் இல்லை. எத்தனை பேர் செய்தாலும் இதை தடுக்க முடியாது . ஏனென்றால் சில கதிர்களில் அப்போது கூட நோய் ஆரம்பித்திருக்களாம் அது வெளியே தெரியே நாள் எடுக்கும் அது தெரியவதற்குள் அதிலிருந்து பல நெற் கதகர்களுக்கு பரவி விடும் . அதனால் அகற்றுவதை பற்றி யோசிக்காமல் மரபணு மாற்றங்களை தான் செய்தாக வேண்டும். அதை தானே செய்யலாம் என்று முடிவை எடுத்து சித் கண்டுபிடித்த கதிர்களை பற்றி ஆராய ஆரம்பித்திருந்தாள் மகி.

தன்னவன் முகத்தை எப்போது திரும்பி பார்ப்போம் என்று துடியாய் துடித்தது மகிக்கு. கண்ணீருடன் சென்றான் என்பதை கேட்டதிலிருந்து மனம் அனலாய் எரிந்தது. இப்போதே வாரி அணைத்து ‘  ஒன்னும் இல்லை கண்ணா நா  இருக்கேன்  ‘ என கூற வேண்டும் போல்  தோன்றியது மகிக்கு.தன்னவன் முகமே கண் முன்னால் வர பாக்டீரியா பிளைட் நோயை  சரிசெய்யும் வழிமுறைகளை  கண்டுபிடிக்க அவளது கண்கள் அலைந்தது.

பிரியாமல் தொடரும் 😍💋….

உங்களின் புல்லட் வெடி 🎉

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
17
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    8 Comments

    1. Janu Croos

      இது கண்டிப்பா அந்த அரைலூசு ஆனந்த் வேலைதான்…அவன் ஒருத்தன் தான் சித்துக்கு எதிரா வேலை பாக்குறது….மனுஷனா அவன்…
      டேய் அடுத்தவன் உழைப்ப கெடுத்து வாழ நினைக்குறியே இதுக்கு நீ பிச்சை எடுக்கலாம்….நீதான் நல்லது பண்ணல…அடுத்தவன் பண்ற நல்லத ஏன்டா கெடுக்குறீங்க…
      அவனோட எத்தனை நாள் உழைப்பு அத்தனையையும் கொஞ்ச நேரத்துல இல்லாம ஆக்கிட்டீங்கல…
      பாத்து பாத்து பண்ணான்டா எல்லாத்தையும் சித்தோட கண்டுபுடிப்புல தப்பு நடக்க வாய்ப்பே இல்ல…
      இதுக்கெல்லாம் நீ பதில் சொல்லனுமீ ஆனந்த்…

    2. Archana

      ஆனந்த் தானே இது பண்ணான்😡😡😡😡😡😡 அப்படியே அமியே வெச்சு கும்மி அடிச்சிடுங்க அதான் கரெக்டா இருக்கும்😤😤😤😤😤

    3. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் 🥺🥀