Loading

     ஆவி-03

தேவான்ஷி.,ஜீவா தான் தன்னை அழைத்து வந்ததாகக் கூறிட ,அவனோ காச் மூச்சென்று கத்தினான்.

மணிமேகலை சத்தம் கேட்டு மேலே வரவும் தேவான்ஷி அலமாரியில் ஏறி அமர்ந்திட ,வேதாந்த் கதவை மூடி விட்டான்.

மணிமேகலை நம்பாமல் “டேய் என்ன சத்தம் கேட்டுது ?? யார் பேசினா ஏதோ பொண்ணு குரல் கேட்டுச்சே… !!!” என அறை முழுவதும் தன் பார்வையைச் சுழற்றினார்.

“ஒண்ணுமில்லை அத்தை நம்ம வேதா மிமிக்ரி பண்ணான்… ” ஜீவன் சமாளித்தான்.

வேதாவோ, “ஏதேய் !!”எனக் கூறிக் கொண்டே ஜீவாவை பார்க்க  அவனோ “சமாளி” என்று சைகை காட்டினான்.

“ஏன் டா இவன்  மிமிக்ரி பண்ணானா…? இவனுக்கு இவன் வாய்ஸே ஒழுங்கா வராது இதுல இவனுக்கு ஏன் டா இந்த வேண்டாத வேலை…??”  நக்கலடித்த மணிமேகலையை…  முறைத்தவனோ “அச்சோ ஜீவா நம்ம அத்ஸ் கேபி சுந்தராம்பாள் அட்சர சுத்தமா பாடுவாங்க நீ கேட்டதில்லை “என்று வாரினான்.

“டேய் வேதம் நீ ஓதுறதை நிறுத்து….  இப்போ இங்க ஒரு பொண்ணோட குரல் கேட்டுது… யாரை இழுத்துட்டு வந்தீங்க… ” என்றவரை ஜீவன் முறைத்துக் கொண்டு இருந்தான்.

“அத்தை நீங்க வேற ஏன் பொண்ணாவது,  பன்னாவது அதெல்லாம் ஒன்றும் இல்லை… நான் தான் பேசிட்டு இருந்தேன்….  ஆமா டிஃபன் ரெடியா…? பசிக்குது  போய் ரெடி பண்ணி வைங்க. வர்றோம்… “என்று தள்ளாத குறையாக வெளியேற்றினான் வேதாந்த்.

“ஸ்ஸ்ஸ் அப்பா முடியலை…  டேய் ஜேபி,  இதெல்லாம் நமக்குத் தேவையா…??” அலுத்துக் கொண்டான்.

“டேய் அதை விடு . நீ அந்த லூசை திறந்து விடு அலமாரிக்குள் மூச்சு முட்ட போகுது”  என்க,  வேதாந்த் கதவை திறந்து விட்டான்.

விழிகளை உருட்டி உருட்டி விழித்துக் கொண்டிருந்தாள் தேவான்ஷி.

“ஆத்தி யம்மா….முழியை ஏன் இந்த உருட்டு உருட்டுற….  ஆமா நிஜமாவே நீ நீ நீ ஆவியா… ??” சந்தேகமாகக் கேட்டான்  வேதா.

“ப்ப்ச் உங்களுக்கு எப்படி  ப்ரூஃ பண்றது னு சொல்லுங்க… பண்றேன்… ” என்றவள் அலமாரியில் இருந்து தொம்மென்று குதித்தாள்.

வேதா கிண்டலாக,  “எங்க இங்கிருந்தே அந்தப் பீரோவை திறந்து காட்டு பார்க்கலாம்….!!”

“அய்யே…  நீங்க நிறையப் பேய்ப்படம் பார்த்து கெட்டுப் போயிட்டிங்க…  அப்படி எல்லாம் ஆவியால செய்ய முடியாது….”  என்றாள் தேவான்ஷி.

“அப்புறம் நீயெல்லாம் என்ன பேய் ??..  அடப் போமா எங்க சந்திரமுகி அக்கா,  அசால்டா ஒரு கட்டிலை ஒத்த கையால தூக்கி நிறுத்தும் தெரியுமா…?  சரி சரி அந்த ஜெகன் மோகினி படத்தில் வர்ற மாதிரி காலை நீட்டி போட்டு பத்த வச்சு சோறாக்கு பார்க்கலாம்  … !! அதுவும் தெரியாதா… சரி விடு…  இப்ப நீ என்ன பண்ற  குரலை மாத்தி மிமிக்ரி பண்ற…!! அட பேய் மாதிரி மிரட்டவாவது செய்மா…  அப்புறம் உன்னைப் பேய் னு நாங்க எப்படி நம்புவது…”  சலித்துக் கொண்டான் வேதாந்த்.

“ஜேபி சார் ஜேபி சார்…  நான் அது மேல நின்னேன் தானே…  அப்போ நான் ஆவி தானே சொல்லுங்களேன் உங்க ஃப்ரெண்டு கிட்ட….  ” தேவான்ஷி ஜீவனைத் துணைக்கழைத்தாள்.

“ஹ்ஹேன் ஹ்ஹ்ஹே…  அந்த அலமாரி மேல நிக்கிறது பெரிய  பிரமாதமா எங்க வீட்டு குட்டி வாண்டு பொழுதனைக்கும் லாஃப்ட் ல தான் ஏறி குதித்து விளையாடும்…  அதுக்காக அது ஆவி ஆகிட முடியுமா…  ??” வேதா இன்னும் தேவாவிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தான்.

“ப்ப்ச் நீங்க நம்பாட்டி போங்க…..  ஜேபி சார் நீங்க நம்புவீங்க தானே… !!” பரிதாபமாகக் கேட்டாள்.

“ம்ம்க்கும் ரொம்ப முக்கியம்…  ஆமா நீ எப்போ இங்கிருந்து போவ ….” எரிச்சலாகக் கேட்டான்  ஜீவன்.

“எங்க போகணும்… ??”புரியாமல் கேட்டாள் தேவான்ஷி.

“ம்ம்ம் சுடுகாட்டுக்கு…”

“அச்சோ எனக்குப் பயமா இருக்கு பா நான் போக மாட்டேன்…  ஓ மை காட் தனியா இருக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா…??  அதுவும் அங்க ஒரு  ஃபேன் இல்ல ஏசி இல்ல சாப்பிட ஸ்நாக்ஸ் கூட இல்ல… “

“ம்ம்ம் நீ விட்டா டிவி ப்ரிட்ஜ் எல்லாம் வாங்கி வைக்கச் சொல்லுவ போல இருக்கு… ” நக்கலடித்தான் வேதாந்த்.

“ஓஓஓ அதெல்லாம் வைக்க முடியுமா அப்போ எல்இடி டிவி வாங்கி வைக்கிறிங்களா ப்ளீஸ் ப்ளீஸ்… நான் சன் மியூசிக் பார்க்கனும்…” தேவா சந்தோஷமாகக் கேட்டாள்.

“அட கடவுளே ஒரு ஆவியை இந்தப் பாவி கிட்ட கெஞ்ச வச்சுட்டியே ….”வேதா அவளின் வார்த்தைக்கு வார்த்தை நக்கல் அடித்தான்.

“டேய் ! சும்மா இரு டா,   இதோ பாரு ஒழுங்கா இங்கிருந்து ஓடிடு…  நானே எங்க அப்பாவை பார்க்க முடியாத கவலையில இருக்கேன்…  ” கடுப்பாகப் பேசினான்  ஜேபி.

“சார் நான் நல்லா பாட கூடச் செய்வேன்…  நான் வேணுன்னா ஒரு பாட்டு பாடவா…. !!  அப்போ நம்புவீங்க தானே நான் ஆவின்னு  என்றவள் பாட்டுப் பாட துவங்கி விட்டாள். “நானே வருவேன்…  நானேனே வருவேன் ” என்று

வேதா காதைப் பொத்திக் கொண்டவன் “யம்மா தாயே… போதும்…  போதும்… காது வலிக்குது… இப்ப உனக்கு என்ன தான் வேணும்.. ??”

“சார் எங்க அப்பா அம்மாவையும் என் தங்கச்சியையும் பார்க்கணும்…  ப்ளீஸ் சார் அவங்க நான் இல்லாம ரொம்பக் கஷ்டப்படுவாங்க… ” கெஞ்சினாள் தேவான்ஷி.

“அவங்களைக் காட்டினதும் பார்த்துட்டு போயிடணும் , மறுபடியும் வந்து என் உயிரை வாங்க கூடாது… “என்று ஜேபி சொன்னதும்., “சரி “என்று சம்மதித்தாள்.

“கண்டிப்பாகப் போயிடுவேன்” என்றாள் இறுக்கமாக

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

மஞ்சள் சிவப்பு நிற விளக்குகள் எரிந்து கொண்டிருக்க….  ஆங்காங்கே தீப்பந்தங்களும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன.  

நடுக் கூடத்தில் போடப்பட்டிருந்த ஹோம குண்டத்தில்,  தீச்சுவாலை எரிந்து கொண்டிருக்க  ச்சுஸ்ரூபத்தில் (  மரக்கரண்டி) நெய்யை எடுத்து ஊற்றினார்  மந்திரவாதி….  அதன் முன்பாக  அரிசி மாவில் செய்யப்பட்ட மனித உருவ பொம்மைக்கு ஆணி அடித்து அதனைப் படுக்க வைத்திருந்தார்.

சுற்றி வர எலுமிச்சை பழங்கள் வரிசை கட்டி நின்றிட , கையில் சிறு சிறு மண்டை ஓட்டுக்களைப் போல வடிவம் கொண்ட மணிகளால் கோர்க்கப்பட்ட வெண்ணிற மாலை அவரின் கையில்  தவழ்ந்த வண்ணம் இருந்தது. 

எதிரே அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் முகத்தில் பதட்டமும் பயமும் போட்டி போட்டுக் கொண்டு இருக்க , மற்றொரு பெண்ணோ தலை விரி கோலமாக வியர்த்து விறுவிறுத்த முகத்துடன் ஆக்ரோஷமாக உச்சஸ்தாயில் கத்திக் கொண்டிருந்தாள்.

வெளியே  ஜேபி பயபக்தியோடு காத்திருந்தான்.

ஜீவன்,  அந்த மந்திரவாதியின் சீடனிடம் தான் வந்திருப்பதாகக் கூறும் படி சொல்ல  அவனும் உள்ளே சென்றான்.

சிறிது நேரத்தில் ஜேபி அழைக்கப்பட,  உள்ளே சென்றான்.

“வா மகனே சென்ற காரியம் என்னவாயிற்று …?”என்று கேட்டார் அந்த மந்திரவாதி  நிர்மலமான முகத்துடன்.

“இல்ல சாமி எதுவும் நடக்கவில்லை….  ஆனால்…” எனும் போதே ஜேபியை ஆர்வத்துடன் நோக்கினார்.

“ஆனால் என்னப்பா… ?” எனும் போதே அவனது கைபேசி இடைவிடாது அழைத்தது.

வேதாந் தான் அழைத்துக் கொண்டு இருந்தான்.

“பேசி விட்டு வா மகனே…!!” என்க ஜேபி வெளியே வந்தான். 

ஜீவனோ மெலிதான குரலில், “எதுக்குடா சும்மா கூப்பிடுற முக்கியமான ஆளை பார்க்க வந்திருக்கேன்” எனக் கடிந்து கொள்ள… 

வேதாவோ,  “டேய் அந்தப் பொண்ணு . அதான் அந்த ஆவி அந்தரத்தில் தொங்குது டா…  கீழே வர சொன்னா உன்னைக் கூப்பிடுறா…..  சீக்கிரம் வாடா…  அத்ஸ் ஏற்கனவே இதைப் பார்த்துட்டு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க டா….  ஹாஸ்பிடல் அழைச்சுட்டு போகனும் “என்றான் படபடப்பாக.

ஜீவன் துரிதமாக “சரி டா இதோ வந்துட்டேன்”  என்றவன்,  அந்த மந்திரவாதியின் சீடனிடம் அவசர வேலை இருப்பதாகக் கூறி விட்டுக் கிளம்பியிருந்தான்.

அங்கே தேவான்ஷி அந்தச் சாண்டிலியரில் தொங்கியபடி ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்க, ஜீவன் உள்ளே நுழைந்தவனோ… ” ஏய் மெண்டல் ! , எதுக்காக அங்கே தொங்கிட்டு இருக்க…? கீழே இறங்கித் தொலை முதல்ல … உனக்குத் தேவான்ஷி னு பேர் வச்சதுக்குப் பதிலா தேவாங்கு னு வச்சிருக்கலாம் எதைப் பார்த்தாலும் ஏறி தொங்கிட்டு இறங்குடி பிசாசே “எனக் கத்தினான் ஜேபி.

“சார் வேகமா பறந்து போய் உட்கார்ந்து விட்டேன், ஆனா இறங்கத் தெரியல” எனப் பாவமாக உதடு பிதுக்கி கூறியவளை , எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு .,”அங்கேயே தொங்கு…  எனக்கென்ன வந்தது ?”என்று எரிச்சலுடன் கூறினான்.

“சார் நான் ரொம்ப நேரம் தொங்கினா மயக்கம் எனக்கு வராது .என்னை அழைச்சுட்டு வந்த உங்களுக்குத் தான் வரும்…”  என்று சொன்னாள் சாண்டிலியரில் வாகாகக் காலை போட்டு ஆடியபடி

“ஸ்ஸ்ஸ் எனக்கு வர்ற கோவத்துக்கு…!”  பல்லை கடித்தவன் ,”ஏதாவது பண்ணி அந்தப் பேயை கீழே இறக்குடா வேதா…  முடியல என்னால….  “என்றபடி உட்கார  வேதாவோ,” நீ டென்ஷன் ஆகாத மச்சான். இதோ ஒரு நிமிஷம் நான் பார்த்துக்கிறேன் நீ ரெஸ்ட் எடு…” என்று சொல்ல அவனோ,” இதை எனக்கு ஃபோன் பண்ணாமலே செய்து தொலைச்சிருக்கலாம் இல்ல “சலித்துக் கொண்டு அறைக்குச் சென்றான்.

“டென்ஷன் ஆகிட்டானே …. எம்மா பரதேவதை கொஞ்ச நேரம் உன் ரெட்டை வாலை சுருட்டிட்டு அமைதியா இரு. இதோ ஏணியோட வரேன்…  நீயெல்லாம் ஒரு பேயி…  ஸ்ஸ்ஸ் யப்பா….”என்று சலித்துக் கொண்டான் வேதாந்த்.

தேவா உதடு பிதுக்கியபடி,”அண்ணா திட்டாதீங்க…  நான் பேய் தான்…  உங்களுக்கு வேணும் னா ஏதாவது செஞ்சு காட்டுறேன்…” என்றாள்.

“வேண்டாம் தாயே !  நீ ஏதாவது செய்யப் போய் ,அது ஏடாகூடமாக முடிஞ்சா என் நண்பன் அப்புறம் என்னைப் பேயாக்கிடுவான் எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலை… ” என்றவன் ஏணி எடுக்கச் சென்றான்  செல்லும் வழி எல்லாம் புலம்பிக் கொண்டே சென்றான்.

“ச்சே கடைசியில் ஒரு பேய்க்குப் பார்ட் டைம் வேலை பார்க்க வேண்டியதா போயிடுச்சே…!!, இதை எல்லாம் நம்ம காஞ்சனா , சந்திரமுகி, அனபெல் எல்லாம் பார்த்தா நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்க…?  சேம் சேம் பப்பிச் சேம்….” தலையாட்டியபடி பேசியவனை, தனது அறைக்குள் இருந்து கவனித்துக் கொண்டிருந்தான் ஜேபி.

மயக்கம் போட்டு விட்டதாக வேதாவால் கூறப்பட்ட மணிமேகலை அந்த டீலர் கதிர்வேலனை காண வந்திருந்தார்.

கதிர்வேலன் என்றதும்  வெள்ளை வேட்டி சட்டையில்  நெற்றியில் சந்தனக்கீற்றும்  பக்தி பழமாக ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் வருவார் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து போனார் நம் மணிமேகலை.

அங்கே வந்ததோ  சந்தன நிற டீசர்ட்டும்,  அடர் நீல நிற ஜீனும் போட்ட கட்டு மஸ்தான இளைஞன் ஒருவன்… மன்னிக்கவும் ஒருவர்…  டக்டக் ஓசையில் எழுந்து நின்ற மணிமேகலையை விழிகளால் அளந்தவரோ ,” சிட் டவுன்  ப்ளீஸ் மேம்…  “என்ற கதிர்வேலன் எதிர் நாற்காலியில் அமர்ந்தார்.

கதிர் புன்னகையுடன் “ம்ம்ம் சொல்லுங்க  என்ன விஷயமா பார்க்க வந்திருக்கீங்க…அன்ட் உங்க நேம்…?”

“சார் நான்  மணிமேகலை…  ஜேபி  ஹோம் அப்ளையன்ஸஸ் ல இருந்து வரேன்…”  என்றதுமே அவருக்குப் பரிச்சயம் போல முகம் மலர்ந்தது. 

“எஸ் ஐ க்நோ…  உங்க ப்ரதர் தானே சமீபத்தில்  இறந்து போனது..  ஐம் சாரி மிஸ்…  ” எனத் தயக்கம் காட்டி வருத்தம் தெரிவித்தார் கதிர்.

“மணிமேகலை… ” எனப் பெயரைக் கூற

“மிஸ்… மணி.. மணிமேகலை… சாரி லென்த்தா இருக்கு… நான்  மேகா னு நினைவு வச்சுக்கிறேன்…  சாரி மிஸ் மேகா என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்…!  என்னால வர முடியாமல் போச்சு…”  உண்மையிலேயே  வருத்தம் கொண்டார் கதிர்வேலன்.

“இட்ஸ் ஓகே சார்… சடன் டெத் கிராமத்திலேயே சடங்கு எல்லாம் முடிச்சுட்டோம்… நான் இப்போ உங்களைப் பார்க்க வந்தது முக்கியமான விஷயம்…. ?” என நேரடியாக விஷயத்திற்கு வந்தார் மணிமேகலை.

கதிர்வேலனின் முகத்தில் தெரிந்த தீவிரமே, பக்கா பிஸ்னஸ்மேனாக மாறி விட்டார் என்று உணர்த்தியது. 

மணிமேகலை “ரீசன்டா லாஞ்ச் ஆன ஏர் ஃப்யூரிஃபையர் நீங்க தான் டீலர்சிப் எடுத்திருக்கிறதா என் அண்ணன் மகன் ஜேபி இன்ஃபார்ம் பண்ணான்… நீங்க உங்க சப் டீலிங் எங்க அப்ளையன்ஸஸ் கூட வச்சுட்டா நல்லா இருக்கும்…” என்றார்.

சற்று யோசித்த கதிரவனோ…” பட் உங்க விதிமுறை எல்லாம் எனக்கு ஒத்து வர்றது போல இல்லையே மிஸ். மேகா… ” என்றதுமே  சற்று கோப பாவனையைக் காட்டியதோ என்று எண்ணுகின்ற அளவுக்கு இருந்தது மணிமேகலையின் பாவனை.

“சார் நாங்க அடிப்படையான விதிமுறைகளைத் தான் கடைபிடிக்கிறோம்…  உங்க டீலர்சிப் ஸ்டாண்டர்ட் நல்லா இருக்கிறதால தான் நான் வந்ததே…  பட் நீங்க எடுத்த எடுப்பிலேயே இப்படிப் பேசுறீங்க …?”என்றார் கடுகடுவென

“ஆமா என்னுடைய ஸ்டாண்டர்ட் எப்போதுமே கிளாஸியா தான் இருக்கும்.  உங்களை நான் குறைவாகச் சொல்லவில்லை ஆனால் எனக்கு உங்களுடைய விதிமுறைகள் ஒத்து வராது எனச் சொல்றேன்…என்ன ரூல்ஸோ ரெகுலேசனோ..?” என்றார் தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசியபடியும்,  ஜேபி கம்பெனியை பற்றிச் சற்று இளக்காரமாகவும்

மணிமேகலைக்குக் கோபம் வந்து விட்டது…  “சார் ரொம்பப் பேசாதீங்க ஓகே….  எங்க வாடிக்கையாளர்களுக்குத் தகுந்த மாதிரி தான் நாங்க விதிமுறைகள் வச்சிருக்கோம்…  உங்க ரூல்ஸ் தான் எதிலயுமே சிங்க் ஆகாத மாதிரி இருக்கு….  பொருளை தருவாங்களாம்,  பட் ரிப்பேர் ஆனா அதைச் சரி செய்ய வாரண்டி கியாரண்டி எதுவும் தர மாட்டாங்களாம் , நீங்க என்ன சைனா பீஸா வாங்கி விற்குறிங்க …?, எதுவுமே கிடையாது னு சொல்ல,  தரமான ப்ராண்டட்  ஐட்டம்ஸ் தானே… !!” என்று கடுகாய் பொரிந்தவரை கண்ணிமைக்காமல் பார்த்திருந்தார் கதிர்வேலன்.

அவரின் மனதிலோ… ‘தைரியம் தான் என் வீட்டிலேயே வந்து என்னையே திட்ட தனிக் கட்ஸ் வேணும்…  ஆனாலும் திமிர் கொஞ்சம் அதிகம் தான்…’  என்று நினைத்துக் கொண்டார்.

மணிமேகலை பேசுவதை  கதிர்வேலனின் குடும்பமே பார்த்திருந்தது.  ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு விதமான முகப் பாவனைகள்…  இதில் கதிரவனின் தந்தைக்கு மட்டும் சற்று மலர்ச்சியான பாவனை மணிமேகலையைப் பார்த்து.

“குட் பாய் உங்க டீலிங்கும் நீங்களும் …!”என்று எழுந்த மணிமேகலையை அனுப்புவதற்கு மனம் இல்லை கதிர்வேலின் தந்தைக்கு.

“கொஞ்சம் இரு மா..”  என்றவர், ” கதிர் அந்தப் பொண்ணுக்கு தான் சப்டீலிங் தர்ற… இது என்னோட ஆர்டர் “என்று விட்டு போக மணிமேகலை கதிரின் முகம் பார்த்தார்.

“அதான் மேலிடத்தில் இருந்து ஆர்டர் வந்தாச்சே நீங்க போங்க… ஈவ்னிங் அக்ரிமென்ட் சைன் பண்ண மிஸ்டர் ஜேபியை வரச் சொல்லுங்க… ” என்று எழுந்து கொண்டார் கதிர்வேலன்.

“ஓசியில குடுக்கிற மாதிரி தான்…  சரியான ஜீன்ஸ் போட்ட சாமியார்” என்று முணுமுணுத்தபடி வெளியேறினார் மணிமேகலை.

மணிமேகலை வெளியே வந்ததும்  ,” டேய் வேதாந்தம்  டீலர்சிப் நமக்குத் தான்… ஈவ்னிங் அக்ரிமென்ட் சைன் பண்ணிடுங்க தென் இன்னொரு தடவை இந்த மாதிரி சாமியார் கிட்ட டீல் பேச அனுப்பின , உன்னைக் கொன்னுட்டேன்…”  என்று விட்டு இணைப்பை துண்டித்தார்.

இங்கே கதிரின் தம்பி மனைவியோ  .,”என்ன உன் அப்பா அந்தப் பொண்ணைப் பார்த்ததும்  ஹெல் பண்றாரு… காலம் போன கடைசியில் உங்க அண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் போறாரா  … ? என்னம்மோ பண்ணித் தொலைங்க,  ஆனா சொத்து முழுவதும் என் பையன் பேருக்கு எழுதி வச்சுட்டு அப்புறம் உங்க அண்ணனுக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணுங்க எனக்கென்ன வந்தது… ?”என்று முகத்தைத் திருப்பிக் கொள்ள  , அங்கிருந்த கதிர்வேலனின் தங்கை எகிறினாள்.

ப்ரீத்தி “இது நல்லா இருக்கே எல்லாச் சொத்தையும் உங்க பையனுக்குத் தூக்கி கொடுப்பீங்களா நான் விடுவேனா… ?,  அப்புறம் கோர்ட் கேஸ் னு இழுத்து உங்களை என்ன பண்ணுவேன்னே தெரியாது….  அவரோட பிறந்தது நானும் தான்…  எனக்கும் சொத்து மேல உரிமை இருக்கு எதுவா இருந்தாலும் சமபங்கு தான்… “என்றாள்  கோபமாக

கதிர்வேலனின் தந்தைக்கு மனம் நொந்து போனது. 

“உங்களைப் பெத்ததுக்கு நான் பேசாம இருந்திருக்கலாம்…  ச்சே கூடப் பிறந்தவன் துணையில்லாம தனிமரமா நிற்கிறான். அந்தக் கவலை உங்களுக்குக் கொஞ்சமாவது இருக்கா…?, ச்சே நீங்க எல்லாம் என்ன மனுசங்க …?”என்று கடிந்து கொண்டார்.

“நாங்களா உங்க பையனை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் னு சொன்னோம்…  அவருக்கு ஜாதகத்தில் தோஷம் இருக்கு . அதுக்கு நாங்களா பொறுப்பு “என்று நர்த்தனா சொல்ல,” இதுகளோட பேசுறதே வேஸ்ட் “என்ற மனநிலையில் கதிரின் தந்தை அங்கிருந்து செல்ல முற்பட,

கதிரோ “ஏன்ப்பா அவங்களைத் திட்டுறிங்க …?, எனக்குக் கல்யாணம் நடக்காததுக்கு அவங்க காரணம் இல்லையே…!!, இதோப்பாருங்க நர்த்தனா இந்தச் சொத்து உங்க ரெண்டு பேரோட வாரிசுக்கும் தான்….  சப்போஸ் எனக்கு வருங்காலத்தில் கல்யாணம் நடந்தாலும் இந்தச் சொத்துக்களை என் குழந்தைக்காக நான்  கேட்க மாட்டேன் … உடம்பில் வலுவும் மூளையில் வேலை செய்ற திறமையும் இருக்க வரைக்கும் நான் பொழைச்சுப்பேன் புரிஞ்சுதா …!!”என்று விட்டு அங்கிருந்து அகன்றார்.

“ரொம்பச் சந்தோஷம்” என வெடுக்கெனத் திருப்பிக் கொண்டு சென்றாள் நர்த்தனா.

….. தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
13
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. Janu Croos

      இந்தாமா தேவா…என்னம்மா நீ இப்படி பண்றியேமா!!!தொங்குறது ஊஞ்சல் ஆடுறதுனு ஜேபிய மண்டைய பிச்சுக்க வச்சுக்கிறியே…..உன்னால மேகா அத்தை வேற மயங்கிடிச்சு…இதெல்லாம் நல்லாவா இருக்கு….ஏன்மா இப்படி பண்ற?

    2. Archana

      தேவா நிஜமாலே பேய் தானா😂😂😂 சிப்பு சிப்பா வருதே ஏம்மா போய் conjuring, annabella, nun, insidious இதெல்லாம் பார்த்துட்டு வா மா.

    3. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.