Loading

“ஹேய் அர்ச்சனா… உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நேத்து ஆஃபீஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் பிரணவ் சாரும் அந்த அனுவும் மட்டும் ஆஃபீஸ்ல ரொம்ப நேரம் தனியா இருந்து இருக்காங்க டி… நம்ம செக்யூரிட்டி சொன்னார்… என்ன என்ன நடந்து இருக்குமோ ரெண்டு பேருக்கும் இடைல?” என அர்ச்சனாவின் தோழி மீனா கூற, கோபத்தில் பல்லைக் கடித்த அர்ச்சனா, ‘ச்சே… நாம என்ன பண்ணாலும் அது நமக்கு எதிராவே திரும்புதே… விட மாட்டேன்… என்ன நடந்தாலும் பிரணவ் எனக்கு தான்…’ என்றாள் மனதில்.

ஏதோ நினைத்தவளாக கோப்பு ஒன்றை எடுத்துக்கொண்டு பிரணவ்வின் அறைக் கதவை அனுமதி வேண்டி தட்ட, “கம் இன்…” என‌ உள்ளிருந்து பிரணவ்வின் குரல் கேட்கவும் அறைக் கதவைத் திறந்து கொண்டு ஒயிலாக நடந்து சென்றாள்.

பிரணவ் கணினியில் பார்வையை பதித்தவாறே, “சொல்லுங்க என்ன விஷயம்?” என்க, “இந்த ஃபைல்ல நீங்க ஒரு சைன் பண்ணணும் சார்…” என்ற அர்ச்சனா பிரணவ்வின் இடப்பக்கம் வந்து அவனுக்கு மிக நெருக்கமாக குனிந்தவாறு கூறினாள்.

தூரத்தில் இருந்து பார்க்கும் ஒருவருக்கு அர்ச்சனா பிரணவ்வின் மீது சாய்ந்து இருப்பது போல் தோன்றும்.

ஆத்திரத்தில் பல்லைக் கடித்த பிரணவ் கோபமாக தன் இருக்கையில் இருந்து எழுந்துகொள்ள, அதனை எதிர்ப்பார்க்காத அர்ச்சனா ஒரு நிமிடம் தடுமாறி பின் சரியாக நின்று கொண்டாள்.

அர்ச்சனாவை அழுத்தமாகப் பார்த்த பிரணவ், “என்ன வேணும் உனக்கு?” என்க, “சார்… நான்… சைன்…” என வார்த்தை வராது தடுமாறினாள் அர்ச்சனா.

அவளை நெருங்கி அவளின் தாடையை அழுத்தமாகப் பற்றிய பிரணவ், “நான் யாருன்னு சரியா தெரியாம இதெல்லாம் பண்ணிட்டு இருக்க நீ… நான் யாருன்னு தெரிஞ்சா பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ… உனக்கு இந்த வேலைல நிரந்தரமா இருக்கணும்னா என் கிட்ட இருந்து தள்ளியே இரு… அதை விட்டுட்டு சீப்பா பிஹேவ் பண்ண நினைச்சன்னா உண்டு இல்லன்னு பண்ணிடுவேன்… மைன்ட் இட்…” என மிரட்டிவிட்டு, “கெட் லாஸ்ட்…” எனக் கத்தினான்.

அர்ச்சனா அங்கிருந்து செல்லப் பார்க்க, “வன் மினிட்…” என்ற பிரணவ் ப்ளாஸ்கில் இருந்த கொதிநீரை ஒரு குவளையில் ஊற்றி, “இதை எடுங்க…” என்றான் அர்ச்சனாவிடம்.

அர்ச்சனாவும் ஏன் என்று புரியாமல் அதனைக் கையில் எடுக்க, குவளையுடன் சேர்த்து அர்ச்சனாவின் கரத்தை இறுக்கப் பற்றினான் பிரணவ்.

“ஸ்ஸ்ஸ் ஆ…” என அதன் சூடு தாங்காது அர்ச்சனா கத்த, பிரணவ்வின் முகத்தில் அவ்வளவு ஆத்திரம்.

“ஸ்ஸ்ஸ்… வலிக்கிது சார்…” என அர்ச்சனா முணங்க, “இது ஃபைல்ஸை மாத்தி வெச்சதுக்கு…” என பிரணவ் கூறவும், ‘இவருக்கு எப்படி தெரிஞ்சது?’ என அர்ச்சனா அதிர்ச்சி ஆக, “எனக்கு எப்படி தெரியும்னு பார்க்குறீங்களா? இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க மிஸ் அர்ச்சனா?’ என மறு கரத்தால் சிசீடீவியை காட்டினான்.

ஏளனமாக நகைத்த பிரணவ் தன் பிடியில் அழுத்தத்தைக் கூட்டவும், “ஆ…” என அர்ச்சனா வலியில் அலற, பிரணவ்வின் மனது குளிர்ந்தது.

பட்டென பிரணவ் அர்ச்சனாவின் கரத்தை விடவும் கொதிநீர்க் குவளை அர்ச்சனாவின் காலில் விழுந்து அவளின் கால் வெந்து புண்ணானது.

வலியில் அர்ச்சனாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்க, காலைப் பற்றியபடி கீழே அமர்ந்தாள்.

அர்ச்சனாவின் கை, கால் இரண்டுமே வெந்து புண்ணாகி இருக்க, காயம் தந்த வலியை விட அனுபல்லவியின் மீதிருந்த வன்மம் அதிகமாகிக்கொண்டே சென்றது.

அவளின் முகத்துக்கு நேராக குனிந்த பிரணவ், “இது ஜஸ்ட் டெமோ தான்… திரும்ப இப்படி ஏதாவது பண்ணா விளைவு இதை விட கொடூரமா இருக்கும்…” என்றான் பிரணவ் கண்களில் வெறியுடன்.

ஆகாஷிற்கு அழைத்த பிரணவ் அவன் அழைப்பை ஏற்கவும், “இங்க என் கேபின்ல ஒரு பேஷன்ட் இருக்காங்க… வந்து ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க…” என உத்தரவு இட்டு விட்டு அழைப்பைத் துண்டிக்க, கண்களில் கண்ணீருடன் அவனை முறைத்துப் பார்த்தாள் அர்ச்சனா.

தன் இருக்கையில் வாகாக சாய்ந்து அமர்ந்து கொண்ட பிரணவ், “மிஸ் அர்ச்சனா… இந்த பிரணவ்வை பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? என்னைப் பத்தி உங்களுக்கு சரியா தெரியலன்னு நினைக்கிறேன்… அவ்வளவு சீக்கிரமா யாராலயும் இந்த பிரணவ்வை வளைச்சி போட முடியாது…” என்றான் திமிருடன்.

சற்று நேரத்தில் அங்கு வந்த ஆகாஷ் தரையில் காலைப் பிடித்தபடி அமர்ந்திருந்த அர்ச்சனாவைக் கண்டு முதலில் அதிர்ந்தவன் பிரணவ்வைத் திரும்பிப் பார்க்க, அவன் இருந்த தோற்றமே என்ன நடந்து இருக்கும் என்று ஆகாஷிற்கு கூறியது.

இவ்வளவு நாட்களாக பிரணவ்வுடன் இருக்கிறான். அவனுக்கு தெரியாததா தன் பாஸ் யாருடன் எப்படி நடந்துகொள்வார் என்று.

பிரணவ், “ஆகாஷ்… மிஸ் அர்ச்சனாவை பார்த்து பத்திரமா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் நல்ல டாக்டரா காட்டி மெடிசின்ஸ் வாங்கி கொடுங்க… அப்போ தான் சீக்கிரமே குணம் ஆகுவாங்க…” என இருபொருள் பட நக்கல் குரலில் கூறவும் வாயை மூடி சிரித்த ஆகாஷ் அர்ச்சனா பார்த்த பார்வையில் கப்சிப் என வாயை மூடிக்கொண்டு, “வாங்க மேடம்… நான் உங்களை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்…” என அர்ச்சனாவிற்கு எழுந்துகொள்ள கை கொடுத்தான்.

ஆனால் அர்ச்சனாவோ ஆகாஷின் கரத்தைத் தட்டி விட்டு தானே எழுந்துகொள்ள முயல, திடீரென, “ஆ…” என வலியில் கத்திக்கொண்டு மீண்டும் கீழே விழுந்தாள்.

கஷ்டப்பட்டு தன் சிரிப்பை அடக்கிய ஆகாஷ், “அதான் சொல்றேன்ல மேடம்… வாங்க…” என அர்ச்சனாவின் தோளைப் பிடித்து எழ வைத்து அழைத்துச் சென்றான்.

************************************

ஆஃபீஸில் லீவ் போட்டு விட்டு அவர்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்ட்டிற்கு சென்ற அனுபல்லவி கண்ணாடி முன் நின்று தன் விம்பத்தையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன் கரங்கள் இரண்டையும் முகத்தின் முன் கொண்டு வந்தவளுக்கு பிரணவ் பிடித்த இடம் இன்னுமே குறுகுறுப்பது போல் ஒரு உணர்வு.

கன்னங்கள் இரண்டும் வெட்கச் சதுப்பை பூசிக்கொள்ள, அனுபல்லவியின் மனசாட்சியோ, ‘அடக் கூறு கெட்டவளே… கொஞ்சம் கூட இந்த சூடு, சுரணை எதுவுமே இல்லயா உனக்கு? பத்து பேர் சேர்ந்து பண்ண வேண்டிய வேலையை ஒத்த ஆளா உன்ன பண்ண வெச்சி, உன் கை எல்லாம் புண்ணாக்கி வெச்சிருக்கான் அந்த பிரணவ்… நீ என்னன்னா அவனை நினைச்சி பல்லைக் காட்டிட்டு இருக்க…’ எனக் காரித் துப்பியது.

அனுபல்லவி, “அட ச்சே… அனு… வர வர நீ போற ரூட் கொஞ்சம் கூட சரி இல்ல… சரியா பார்த்தா நீ அவர் மேல கோவப்படணும்…” எனத் தலையில் அடித்தபடி தன்னையே திட்டிக் கொண்டவள், “ஆ… வலிக்கிதே… ரொம்பத் தான் கொடுமை பண்ணுறார்…” என வலியில் முகம் சுருக்கினாள்.

“பனை மரத்துக்கு பாதி வளர்ந்து இருக்கான்… என்னை குட்டச்சின்னு சொல்றான்… இடியட்… ஹவ் டேர் ஹீ… பிரணவ் சாருக்கு பீ.ஏ. னா கொழுப்பு கூடிடுமா? நாளைக்கு இருக்கு அவனுக்கு…” எனக் கத்திக்கொண்டே பாதணிகளை ஒவ்வொரு மூலைக்கும் தூக்கி வீசியபடி வந்த தோழியைப் புரியாமல் பார்த்தாள் அனுபல்லவி.

அனுபல்லவி, “என்னாச்சு சாரு? ஏன் இவ்வளவு கோவமா இருக்க? யாரைத் திட்டுற?” எனக் கேட்க, “எல்லாம் அந்த நெட்டக் கொக்கு ஆகாஷை தான்… சச் அ இரிட்டேட்டிங் பர்சன்…” எனப் பல்லைக் கடித்தாள் சாருமதி.

“ஆகாஷ்?” என யோசித்த அனுபல்லவி, “ஓஹ்… பிரணவ் சாரோட பீ.ஏ. வா? அவர் என்ன பண்ணார்?” என்க, “என்ன தான் பண்ணல? ரொம்ப கடுப்படிக்குறான் டி அனு..‌. இன்னைக்கு நீ வேற ஹாஃப் டேல போய்ட்ட… செம்மயா போர் அடிச்சிச்சேன்னு ஏதாவது சாப்பிடலாம்னு கஃபடேரியா போய் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட்டேன்… எங்க இருந்து தான் அந்த மலக் குரங்கு வந்துச்சுன்னு தெரியல… சடன்னா வந்து என் கைல இருந்த ஐஸ் கிரீமை பிடுங்கி சாப்பிடுறான்… அதுக்கப்புறமாவது சும்மா இருந்தானா?” என சாருமதி ஆகாஷை அர்ச்சிக்க, ஏதோ கதை கேட்பது போல் கன்னத்தில் கை வைத்து சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தாள் அனுபல்லவி.

அனுபல்லவி, “அப்புறம் என்ன டி பண்ணினார்?” என ஆர்வமாகக் கேட்க, “அந்தக் கொடுமையை ஏன் டி கேட்குற?” எனச் சோகமாகக் கூறிய சாருமதி மாலை ஆஃபீஸில் நடந்தவற்றை கூறினாள்.

************************************

கஃபடேரியாவில் ஐஸ் கிரீம் வாங்கிக்கொண்டு யாரும் இல்லாத ஒரு மூலையில் போய் அமர்ந்து கொண்ட சாருமதி சுற்றியும் வேடிக்கை பார்த்தபடி ஐஸ் கிரீமை சாப்பிட, திடீரென அங்கு வந்து சாருமதியின் அருகில் அமர்ந்த ஆகாஷ் அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐஸ் கிரீமை தன் பக்கம் இழுத்து சாப்பிட தொடங்கினான்.

கோபத்தில் பல்லைக் கடித்த சாருமதி, “மலக் குரங்கே… ஐஸ் கிரீம் வேணும்னா வாங்கி சாப்பிட வேண்டியது தானே… எதுக்குடா என்னோடதை பறிச்சு சாப்பிடுற?” என்க, “இதைப் போல டேஸ்ட்டான ஐஸ் கிரீம் வேற இல்லயாம் குட்டச்சி…” என்றான் ஆகாஷ் கூலாக.

“அதுக்காக? என்னோடதை பறிச்சி சாப்பிடுவியா நீ? கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லயா?” எனச் சாருமதி ஆவேசமாகக் கேட்கவும் அவளைப் பார்த்து புன்னகைத்த ஆகாஷ், “உன் கிட்ட எனக்கு என்ன டி மேனர்ஸ் பார்க்க வேண்டி இருக்கு குட்டச்சி?” என்கவும் சாருமதியின் பற்கள் அரைபடும் ஓசை அவனுக்குத் தெளிவாகக் கேட்டது.

சாருமதி எண்ணெய்யில் இட்ட கடுகாய் வெடிக்கத் தயாராக, அதற்கு மேலும் தூபம் போடுவது போல், “அது மட்டும் இல்ல குட்டச்சி… ஆல்ரெடி நீ குட்டி அண்டா சைஸ்ல இருக்க… இதுக்கு மேலயும் ஐஸ் கிரீம் சாப்பிட்டா அண்டா சைஸ்ல இருக்குற நீ பீப்பா சைஸ் ஆகிடுவ… அப்புறம் உன் ஃபியூச்சர் ஹப்பி எப்படி உன்ன தூக்க முடியும் குட்டச்சி?” எனக் ஆகாஷ் ஐஸ் கிரீமை வாயில் போட்டு சுவைத்தபடி கூற, “அதைப் பத்தி உனக்கு என்னடா கவலை பனை மரம்? என் ஃபியூச்சர் ஹப்பிக்கு நான் எப்படி இருந்தாலும் பிடிக்கும்…” என்றாள் சாருமதி கண்கள் மின்ன.

ஆகாஷ், “ஹ்ம்ம்… அது என்னவோ கரெக்ட் தான் குட்டச்சி… அதனால தான் நான் ஃபீல் பண்றேன் குட்டச்சி… பிகாஸ் ஃபியூச்சர்ல நான் தானே உன்ன லைஃப் லாங் சுமக்க போறேன் மை டியர் ஃபியூச்சர் வைஃபீ…” எனப் பளீர் புன்னகையுடன் சாருமதியின் தலையில் ஒரு மினி அணுகுண்டை இறக்கவும் அதிர்ச்சியில் வாயைப் பிளந்தவள் கண்கள் வெளியே தெரித்து விடும் அளவுக்கு விரித்தாள். 

உதடு மடித்துப் புன்னகைத்தபடி சாருமதியின் அதிர்ந்த முகத்தை ரசித்த ஆகாஷ் அவள் தன்னிலை மீளும் முன்னே சாருமதியின் உதட்டோரம் ஒட்டி இருந்த ஐஸ் கிரீமை முத்தமிட்டு தன் உதட்டுக்கு மாற்றிக்கொண்டு, “வரேன் குட்டச்சி பேபி…” என்று விட்டு சென்றான்.

அவன் சென்று பல நிமிடங்கள் கடந்த பின்னும் இன்னும் அதே நிலையில் இருந்தவளை ஏதோ கீழே விழும் சத்தம் மீட்டெடுத்தது.

அவசரமாக தலையை உலுக்கிக் கொண்ட சாருமதி, ‘இப்போ நடந்தது எல்லாம் கனவா?’ என யோசிக்க, அவளின் உதட்டின் ஓரம் எஞ்சி இருந்த ஆகாஷின் முத்தத்தின் ஈரம் நடந்தவை அனைத்தும் நிஜம் என எடுத்துரைக்க, “ஆகாஷ்…” எனக் கோபத்தில் பல்லைக் கடித்தாள் சாருமதி.

************************************

சாருமதி மாலை ஆஃபீஸில் நடந்தவற்றை சோகமாகக் கூறி முடிக்கவும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள் அனுபல்லவி.

“நான் எவ்வளவு ஃபீலிங்கா சொல்லிட்டு இருக்கேன்… நீ பாட்டுக்கு சிரிக்கிற…” என சாருமதி கோபப்பட, “ஹஹஹா… இப்படி கூட யாராவது ப்ரபோஸ் பண்ணுவாங்களா சாரு? இதுல கிஸ் வேற…” என மீண்டும் சிரித்தாள் அனுபல்லவி.

அதில் உதட்டைப் பிதுக்கிய சாருமதி ஆகாஷ் முத்தமிட்ட இடத்தை அழுந்தத் தேய்க்க, தோழியின் நிலையை எண்ணி கடினப்பட்டு தன் சிரிப்பை அடக்கிய அனுபல்லவி சாருமதியின் தோளில் கை போட்டு, “சாரு… எதுக்கு இப்போ நீ ஃபீல் பண்ற? ஆகாஷ் உனக்கு ப்ரபோஸ் பண்ணதனாலயா?” எனக் கேட்கவும், “அவன் எப்படி பப்ளிக்ல எல்லார் முன்னாடியும் அப்படி கிஸ் பண்ணலாம்?” என்றாள் சாருமதி பட்டென்று கோபமாக.

அனுபல்லவி, “ஓஹ்… அப்போ அவர் உனக்கு ப்ரபோஸ் பண்ணினது உனக்கு பிரச்சினை இல்ல… கிஸ் பண்ணினது கூட பிரச்சினை இல்ல… அப்படி எல்லார் முன்னாடியும் கிஸ் பண்ணது தான் பிரச்சினை… அப்படி தானே…” என ஒவ்வொரு வார்த்தையாக அழுத்திக் கேட்கவும், “ஆஹ்… அது… அது…” எனத் தடுமாறினாள் சாருமதி.

“எது எதுமா?” என அனுபல்லவி கேலியாகக் கேட்கவும் சுதாகரித்த சாருமதி, “அது எப்படி நேத்து தான் சரியாப் பார்த்து பேசினோம்… இல்ல இல்ல சண்டை போட்டோம்… அதுக்குள்ள எப்படி லவ்? அந்த நெட்டக் கொக்குக்கு வேற வேலை இல்ல… சும்மா என்னைக் குழப்புறான்… நாளைக்கு இருக்கு அவனுக்கு… பிரணவ் சாரோட பீ.ஏ.னா என்ன வேணாலும் பண்ணுவாரா?” எனக் கோபமாகக் கேட்டவள் அங்கிருந்த குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

சாருமதி சென்ற திக்கைப் பார்த்து புன்னகைத்த அனுபல்லவி, “ஹ்ம்ம்ம்ம்… நமக்கெல்லாம் எப்போ தான் இந்த லவ் எல்லாம் செட் ஆக போகுதோ?” எனப் பெருமூச்சு விடவும் பிரணவ்வின் முகம் அவள் கண் முன் வந்து போக, அவசரமாக தலையை உலுக்கி தன்னை சமன் செய்து கொண்டாள்.

************************************

“டேய் பிரதாப்… அர்த்த ராத்திரியில எல்லாம் பேக் பண்ணிட்டு எங்க கிளம்பிட்டு இருக்க நீ?” என அவனின் தந்தை கேட்க, “அதைத் தான்ங்க நானும் இம்புட்டு நேரமா கேட்டுட்டு இருக்கேன்… பதில் சொல்லாம அவன் பாட்டுக்கு எல்லாத்தையும் எடுத்து வைக்கிறான்…” என அவனின் தாய் சலிப்பாகக் கூறினார்.

ஆனால் பிரதாப் என்பவனோ தனக்கு வேண்டியவை எல்லாம் எடுத்து பையில் வைத்தவன், “அம்மா… அப்பா… நான் போய்ட்டு வரேன்… அந்த ஓடுகாலி அனு எங்க இருக்கான்னு தெரிஞ்சிடுச்சி… இந்தத் தடவை அவளால என் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது…” என்கவும் அவனின் தாய், தந்தை இருவரின் முகத்திலும் அப்படி ஒரு வன்மமான பாவனை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்