Loading

                சித்து, “மகிழுக்கு உறவென்று யாருமில்லை.” என்றதில் அதிர்ந்த கவின், “என்னடா சொல்ற?” எனும்போதே ஸ்ரேயாவின் வண்டி வர அதை கண்டதும் அந்த பேச்சு அப்படியே தடைபட்டது. “உங்களுக்கு பின்னாடி கிளம்பி நாங்களே வந்துட்டோம். இவ்ளோ நேரம் என்ன பண்ணீங்க?” என்றான் கவின் அங்கு வந்த ஸ்ரேயாவை பார்த்து.

“நாங்க வந்துட்டே இருந்தோமா அப்ப வழியில ஒரு இளநீர் கடை இருந்ததா, அதான் அப்படியே குடிச்சிட்டு வந்தோம்.” என்றாள் ஸ்ரேயா. “நேத்துதான் மழை பேஞ்சது. இன்னிக்கு இளநீயா. சளி பிடிக்க போகுது.” என்றான் சித்து மகிழை பார்த்துக் கொண்டே.

“நேத்துதானே. இன்னிக்கு காலைலயே வெயில் பார்த்தீங்கல்ல அதான்..” என ஸ்ரேயா பதில் கொடுக்க மகிழோ, “நான் கிளம்பறேன்” என்றவாறே அங்கிருந்து நர்ஸ் ரூமிற்குள் சென்றாள். அதைக்கண்ட சித்து தானும் அவள் பின்னே செல்ல மற்ற இருவரும் அலுவலகத்திற்குள் சென்றனர்.

உள்ளே சென்றதும், “ஹாய் டியர். எப்படி இருக்கீங்க?’ என்றான் எதுவுமே நடக்காதது போல. “என்னவோ ஆறு மாசம் கழிச்சு பார்க்கிற மாதிரி கேட்கறீங்க? இப்பதானே வீட்ல இருந்து வந்தோம்.” என்றாள் மகிழ். “எப்படி இருக்கன்னு கேட்க ரொம்ப நாள் பார்க்காம இருக்கனும்னு யாரு சொன்னா?” என்றான் சித்து.

“இப்ப என்ன வேணும்” என்றாள் மகிழ் கடுப்பாக. “பதில்” என்றான் சித்துவும் விடாமல். “நல்லாயிருக்கேன் பார்த்தா தெரியலயா?’ என்றாள் அவளும். “உன் உடல் நல்லாதான் இருக்கு. ஆனா மனசுதான் ஏதேதோ யோசிச்சு கொஞ்சம் வீக்கா இருக்குன்னு நினைக்கறேன். கரெக்டா.” என்றான் சித்து சிரித்தபடி..

“காலையில வேலை இல்லயா? ஆனா எனக்கு இருக்கு. கொஞ்சம் கிளம்புனா உதவியா இருக்கும்” என்றாள் மகிழ். “நீ பேசாம ரிசைன் பண்ணிடு வதனி. உன் பாஸ் சரியான வீணாப்போனவனா இருக்கான். வேற நல்ல இடமா பார்த்து வேலை தேடிக்கலாம்” என்றதில் அவனை பார்த்தவள்,

“சரி ஓகே நீங்களே பாருங்க. நல்லா ஆபிஸ் இல்ல ஹாஸ்பிட்டல்னாலும் ஓகே தான். எனக்கும் இங்க ரொம்ப டிஸ்டர்ப்பா தான் இருக்கு.” என்றாள் மகிழ். “அப்படியா சொல்ற. சரி நம்ப கல்யாணத்துக்கு அப்பறமா மாறிக்கலாம்.” என்றான் சித்து.

“இன்னும் நான் நீங்க சொன்னதுக்கு ஓகே சொன்னமாதிரி எனக்கு நியாபகம் இல்ல.” என்றாள் மகிழ் கோப்புகளை எடுத்தபடியே. “அச்சோ. என்ன வதனி என்ன இப்படி நினைச்சுட்ட. கண்டிப்பா உன் விருப்பம் இல்லாம உன்னை கல்யாணம் பண்ண மாட்டேன். அதுக்கப்பறம் தான் வேண்டாம்னு சொன்னேன்.” என்றான் சித்து.

அதில் சிரித்துவிட்ட மகிழ், “அது நடக்கும்போது பார்த்துக்கலாம் போய் வேலையை பாருங்க.” எனும்போதே யாரோ வரும் அரவம் கேட்க, சித்து உடனே அவளிடம், “நான் கேட்ட டீடையல்ஸ் எல்லாம் ஈவ்னிங்குள்ள மெயில் பண்ணிடுங்க. மிஸ்.மகிழ்” என்க, அவன் தோளில் ஒரு அடி விழுந்தது.

திரும்பி பார்த்தால் கவின்தான், “அடேங்கப்பா. நீ இதை பத்திதான் இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்த. அப்படிதானே மச்சி.” என்றான். சித்து, “கண்டிப்பா மச்சி. ஆபிஸ்ல நான் எவ்ளோ ஸ்ட்ரிக்ட்னு உனக்கே தெரியும்ல” என்க, “ஆபிஸ்ல நீ யாருன்னும் தெரியும். மகிழ்கிட்ட எப்படி பேசுவன்னும் தெரியும். வா ஒரு முக்கியமான விசயம்” என்றபடி அழைத்து சென்றான் கவின் சித்துவை.

“என்ன விசயம்னு சொல்லு.” எனக் கேட்டுக் கொண்டே தனது அறைக்கு செல்ல, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரை சொல்லி “அந்த கம்பெனிக்கு கொட்டேஷன் அனுப்ப நேத்தே லாஸ்ட் டேட்டாம். நாம இன்னும் அனுப்பவே இல்ல.” என கவின் பதட்டமாக கூற, சித்து, “யாரு சொன்னா அனுப்பியாச்சே.” என்றபடியே இருக்கையில் அமர்ந்தான்.

“இல்ல மச்சி. நேத்து நாம வேற டென்ஷன்ல இருந்ததால நான் கவனிக்கல. அனுப்பல. எனக்கு நல்லா நியாபகம் இருக்கு.” என்றான் கவின். “நீ அனுப்பல. சரிதான். நான் அனுப்பிட்டேன்.” என்றான் சித்து. “ஆபிஸ்ல இருந்து கிளம்பற வரை அனுப்பலயே. அப்பறம் எப்படி?” எனக் கேட்டான் கவின்.

“நேத்துனா நைட் பன்னிரண்டு மணி வரை நேற்றைய தேதிதானே? நைட் அனுப்பிட்டேன் மச்சி. கூல்” என்றான் சித்து இலகுவாக. “நைட் நாம பேசிட்டு படுக்கும்போதே லெவன் இருக்கும். அப்ப அதுக்கு மேல நீ தூங்கலயா? நான் படுத்ததும் தூங்கிட்டனா அதான் தெரியல” என்றான் கவின்.

‘இதுதான் சித்து. என்ன பிரச்சனை நடந்தாலும் தனது வேலை என்று வரும்போது சிறு தொல்லை கூட நேராதவாறு முடித்து விடுவான். அதனால்தான் இவ்வளவு குறுகிய காலத்தில் இரு நிறுவனங்களை நிர்வகிக்கும் அளவு அவனது வளர்ச்சி உள்ளது.’ என பெருமையாக நினைத்தான் கவின்.

அப்போது சித்து, “இட்ஸ் ஓகே. விடு. எனக்கு பழக்கம்தானே.” என்றவன், “எதுக்கும் ஈவ்னிங் நீயே போய் மகிழை டிராப் பண்ணிட்டு வந்துடு. சரியா.” என்க, “ஏன்டா. நீயே போகலாம்ல.” எனக் கேட்டான் கவின். “நான் கேட்டா கண்டிப்பா வேணாம்னு தான் சொல்லுவா. அதான். நீ போய்ட்டு வா. ஏதாவது பிரச்சனைன்னா கால் பண்ணு” என முடித்து விட்டான் சித்து.

அதேபோல சாயங்காலம் பணி முடிந்து மகிழ் கிளம்பும்போது, “வாங்க மகிழ் நானே டிராப் பண்றேன்.” என கவின் அழைக்க அது சித்துவின் வேலை என தெரிந்தாலும் மறுக்காமல் அவனோடு கிளம்பினாள். அங்கு சென்றதும் ஏற்கனவே வீட்டில் இருந்த அகல்யா இருவரையும் வரவேற்க, “பரவால்ல. டைம் ஆச்சு. நான் கிளம்பறேன்” என்றான் கவின்.

மகிழ் சரியென்று தலையாட்ட அகல்யாதான், “இருங்க காபி குடிச்சுட்டு போகலாம்” என்க, கவின் மறுத்துவிட்டு வெளியே வரும்போது சாவி கீழே விழுந்து விட்டது. அதைப்பார்த்த அகல்யா அதை எடுத்துக் கொண்டு வந்தவள், “கேட்க மறந்துட்டேன். உங்க சிஸ்டர் நல்லா இருக்காங்களா?” என்றாள்.

“யாரைக் கேட்கறீங்க?” என அகல்யா கேட்க, “அபியைதான் கேட்டேன் சார்.” எனவும் கவின் ஏதோ சொல்லவர அதற்குள் அவளே, “கேட்டேனு சொல்லுங்க. நன்றி சொன்னதாகவும் சொல்லுங்க.” என அகல்யா கூறும்போதே மகிழ் அவளை அழைக்க இவன் கூற வருவதை கவனியாமலே கிளம்பி விட்டாள் அவள்.

‘அவன் தங்கச்சி என்ன லவ் பண்றா. இவ அவனையே என் தங்கைன்னு சொல்லிட்டு போறா. முடியலடா சாமி’ என நினைத்துக்கொண்டே அவன் வெளியே வர, “என்ன யோசனைலாம் பலமா இருக்கு. இது யாரு அடுத்த கேர்ள் ப்ரண்டா” என சிந்துவின் குரல் கேட்டது.

‘சாத்தானை நினை உடனே வந்து நிற்கும்னு சொல்ற மாதிரியே நினைச்ச உடனே வந்து இருக்கா பாரு’ என நினைத்த கவின், “நீ இன்னும் சென்னைக்கு போகாம இங்க என்ன பண்ற?” எனக் கேட்டு வைத்தான் கவின். “நேத்து போய்ட்டேன் அண்ணா சொன்ன மாதிரி. இன்னைக்கு வந்துட்டேன்” என்றாள் சிந்து.

“இப்ப எதுக்கு வந்த? உன்ன பார்த்தா அவன் டென்ஷன் ஆகிடுவான்.” என்றான் கவின். “அண்ணாவையோ உன்னையோ பார்க்க ஒன்னும் இங்க வரல. இங்க பக்கத்துல தான் என்னோட ஹாஸ்டல் இருக்கு. அங்க போகதான் வந்தேன். அப்பதான் இங்க நீ கடலை வறுத்துட்டு இருந்ததை பார்த்தேன். வரேன்” என அவள் கிளம்பி விட கவினோ குழம்பி நின்றான்.

‘இவ எதுக்கு இப்ப இங்க ஹாஸ்டல்ல தங்கி இருக்கா. எங்க போய்ட்டு வரா. ஒருவேளை வேலைக்கு எதுவும் ஜாயின் பண்ணிட்டாளோ? இருக்காதே. இந்த சோம்பேறி அதெல்லாம் பண்ண வாய்ப்பு இல்ல. அப்படியே இருந்தாலும் இன்னிக்கு சனிக்கிழமை ஆச்சே.’ என ஏதேதோ யோசனையில் நின்றவன், “சரி பார்ப்போம்” என்றபடியே கிளம்பினான்.

வழியில் சரியான டிராபிக்கில் மாட்டி விட வீட்டுக்கு வந்து சேரவே மணி பத்து ஆகிவிட்டது. ஆனால் அப்போதும் சித்து வராததால் வீடு பூட்டியே இருந்தது. ‘ஆமா இவ்வளவு நேரம் வராம என்ன பண்ணிட்டு இருக்கான். அய்யோ என்னடா இது சோதனை. இன்னிக்கு ஃபுல்லா மைண்ட் வாய்ஸ்லயே பேச வேண்டியதா இருக்கு.’ என நொந்து கொண்டவன் உள்ளே சென்று சித்துவுக்கு அழைத்தான்.

அவன் நேரமோ என்னவோ சித்து அழைப்பை எடுக்கவில்லை. என்னாச்சுன்னே தெரியலயே. சரி ஆபிஸ் நம்பர்க்கு கூப்பிட்டு பார்க்கலாம் என நினைத்து ஃபோன் செய்தால் அது அவுட் ஆப் ஆடர் என்றது. கடைசியாக வாட்ச்மேன்க்கு அழைக்க, “அவர் கிளம்பி போய் ஒரு மணி நேரம் இருக்கும் சார்.” என்றார் அவர். அந்த பதிலில் அதிர்ந்து நின்றான் கவின்.

             சென்னையில் சந்துருவோ அன்று முழுதும் வேலைகளுக்கு நடுவிலும் மகியை வரவைக்க ஏதேதோ யோசனை செய்து கொண்டிருக்க, அப்போது அங்கு வந்தான் ஆகாஷ். “சொல்லுங்க ஆகாஷ்.” எனக் கேட்க.. “சார் லிஸ்ட் ரெடி. மொத்தமா நூறு பேர்தான் ராகினியோட குளோஸ் லிஸ்ட்ல இருக்காங்க.

அதுலயும் பாதி பேர் மொய் குடுத்தா போதும். போக வேண்டியது இல்லன்னு நினைக்கறாங்க. இதுல இருக்கிற நாற்பத்தி அஞ்சு பேர் மட்டும் கண்டிப்பா போற பிளான்ல இருக்காங்க.” என அவனிடம் ஒரு பேப்பரை கொடுத்தான் ஆகாஷ். “குட் ஜாப் ஆகாஷ். இதுல நீங்களும் இருக்கீங்க தானே.” என்றான் சந்துரு.

“இல்ல சார். மகி வரதுனால வரலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன். ராகினி ரொம்ப பழக்கம்லாம் இல்ல. ஆனா இப்ப அவங்களே வரல. அதான் வர வேண்டாம்னு நினைக்கறேன்.” என்றான் ஆகாஷ். “ஓ ஆமா கேட்கனும்னு நினைச்சேன். மகி உங்க பேமிலி ப்ரண்ட் ஆர் ரிலேடிவ் ஆ?” எனக் கேட்டான் சந்துரு.

“அப்படில்லாம் இல்ல சார். ஆக்ச்சுவலி இங்க வந்துதான் எனக்கு மகியை தெரியும்” என்றான் ஆகாஷ். “ஆனாலும் மகி உங்களுக்கு குளோஸ் ஆகிட்டாங்க இல்ல.” எனக் கேட்ட சந்துருவின் குரலில் என்ன இருந்ததென ஆகாஷால் அறிய முடியாவிட்டாலும் இயல்பாக அது இல்லை என அவனால் உணர முடிந்தது.

“ஆமாம் சார்.” என ஆகாஷ் பதில் உரைக்க, “ஓகே. நீங்கதான் ஏதாவது பண்ணி மகியை பெங்களூர்க்கு வர வைக்கனும்.” என சந்துரு கூற, ஆகாஷோ, “அது எப்படி சார் நான் சொல்ல முடியும்” என்றான். “இப்ப என்கிட்ட சொன்ன மாதிரிதான். நீ வரலன்னா நானும் போகலன்னு சொல்லுங்க.” என்றான் சந்துரு.

“ஆனா நீங்க ஏன் அவ வரனும்னு நினைக்கறீங்க.” என மனதில் தோன்றிய கேள்வியை ஆகாஷ் கேட்டுவிட அதில் சற்றே தடுமாறினாலும், “அது. எதுக்குன்னா அவங்க மேரேஜ் போக இண்டர்ஸ்டா இருக்காங்க. ஆனா தூரமா இருக்கறதால தான் வரலன்னு சொல்றாங்க. கூட்டிட்டு போன அவங்களும் ஹேப்பி. ராகினியும் ஹேப்பி. அதோட நீங்களும் போகலாம்.” என ஏதேதோ கூறி அவனை அனுப்பிய சந்துருவிற்கே தான் ஏன் இதையெல்லாம் செய்கிறோம் என புரியவில்லை.

இதை விட பெரிய விசயம் என்னவென்றால் திருமணம் பெங்களூருவில் என்பதால்தான் தான் கண்டிப்பாக போக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் முதலில் இருந்தது.

சந்துரு கூறியபடியே ஆகாஷ் தானும் போகவில்லை என மகியிடம் கூற, அவளோ, “ஓ அப்படியா. சூப்பர். அப்ப இந்த வாரமும் வீட்டுக்கு வந்துரு. லாஸ்ட் வீக் மாதிரியே சமைச்சு தரீயா. இந்த வாரம் வேற ஏதாவது ஸ்பெஷலா சமைக்கலாம். நான் யோசிச்சு சொல்றேன். ஓகே.” என இலகுவாக கூற ஆகாஷோ எதில் போய் முட்டிக் கொள்ளலாம் என நினைத்து அவளை பார்த்தான்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்