Loading

அக்ஷராவும் லாவண்யாவும் வண்டியிலிருந்த சிதாராவின் லக்கேஜ்ஜை எடுத்துக் கொண்டிருக்க மொபைலில் அழைப்பொன்றில் இருந்த பிரணவ் பேசி முடித்து விட்டு அவர்களிடம் வந்தான்.

பிரணவ், “யாரு வனிம்மா அந்த பொண்ணு.. உங்க ப்ரென்டா.. சரியான திமிரு பிடிச்சவலா இருப்பா போல..‌ ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம அவ பாட்டுக்கு போறா…” என்க அக்ஷராவும் லாவண்யாவும் அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

எங்கே அவனுக்கு அடையாளம் தெரிய. அவள் தான் முழுவதுமாக தன்னை மறைத்துக் கொண்டு இருந்தாளே.

“என்னண்ணா இப்படி‌ கேக்குறீங்க… நெஜமாலுமே அவள உங்களுக்கு அடையாளம் தெரியலயா…” என‌ அக்ஷரா கேட்க அவளுக்கு இல்லை என்பதாய் இட வலமாக தலையசைத்தான்.

லாவண்யா, “என்ன எங்க கூட விளையாடுரீங்களாண்ணா.. உங்களுக்கு அவள பிடிக்காதுன்றத்துக்காக நீங்க சித்துவ பத்தி இப்படியெல்லாம் பேச‌ வேணாம் அண்ணா..” என்று‌ விட்டு வேகமாக அங்கிருந்து அகன்றனர்.

அவர்கள்‌ கோவமாக சென்றது எதுவும் பிரணவ்வின்‌ கருத்தில் பதியவில்லை.

அவன் தான் ‘சித்து’ என்ற பெயரிலே விழி விரித்து சிலையாகி நின்றானே.

இங்கு வீட்டினுள்‌ நுழைந்த சிதாராவுக்கோ பலத்த வரவேற்பு.

லாவண்யாவின் குடும்பத்தினர் எப்போதும் சிதாராவை தங்கள் வீட்டில் ஒருவராகவே எண்ணுவர்.

சிறு வயதிலிருந்தே இருவரும் தோழிகள். அக்ஷராவுடனான பழக்கம் பள்ளிப்பருவத்தில் ஆரம்பமானது.

அன்றிலிருந்தே மூவரும் நல்ல நண்பர்கள். அவர்களுக்குள் எந்த ரகசியமும் இருக்காது.

ஏனைய நண்பர்களுடன் அரட்டையில் ஈடுபட்டிருந்த சிதாராவிடம் வந்த லாவண்யாவும் அக்ஷராவும் தொண்டையை செறுமி தங்கள் வரவை வெளிப்படுத்தினர்.

அவர்கள் பக்கம் திரும்பி‌ ஒற்றை புருவம் உயர்த்தி என்ன என வினவ அவளைப் பார்த்து இருவரும் இளித்து வைத்தனர்.

பின் சிதாரா எதுவும் சொல்லாமல் அங்கிருந்த அறையொன்றினுள் நுழைந்து கொள்ள இங்கோ இருவரின் மைன்ட் வாய்ஸுமே ஒன்றாக இருந்தது.

“ஆத்தி… இவ பார்வையே சரியில்லயே… உள்ள போனா நம்மள கும்மு கும்முன்னு கும்மி எடுத்துருவாளோ… சரி.. எதுன்னாலும் தாங்கிப்போம்..” என இருவரும் அவளை பின் தொடர்ந்தனர்.

அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த சிதாரா தோழிகள் நுழைந்ததும் அவர்களை கேள்வியாய் ஏறிட்டாள்.

ஆனால் அவர்கள் எதிர்ப்பார்த்தது இல்லாமல் சிதாராவோ அமைதியான குரலில், “ஏன்டி இப்படி பேய பாக்குறது போல பயந்து பாத்துட்டு இருக்கீங்க…” என வினவ, அக்ஷரா, “உனக்கு நெஜமாலுமே எங்க மேல கோவம் இல்லயா சித்து” என்க “நான் எதுக்குடி உங்க மேல கோவபடனும்.. ஓஹ்… அந்த மெஸேஜ்ஜ சொல்றீங்களா.. அது உங்க எல்லாரையும் பாக்க ரொம்ப சந்தோஷமா வந்தேனா, யார என் லைஃப்ல பாக்கவே கூடாதுன்னு நெனச்சிட்டு இருந்தவன பாத்ததும் என்னோட மூடே ஸ்பொய்ல் ஆகிடுச்சி.. அந்த கோவத்துல தான்‌ மெஸேஜ் போட்டேன்… அப்புறம் யோசிச்சு பாத்ததும் தான் புரிஞ்சுச்சி.. நான் எதுக்கு யாரோ ஒருத்தனுக்காக எல்லாம் என்னோட ஃப்ரென்ட்ஸ் கூட கோவிச்சிட்டு இருக்கனும்.. அதுவுமில்லாம நீங்க ரெண்டு பேருமே எப்போதுமே எனக்கு பிடிக்காத விஷயத்த செய்ய மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கை.. சோ ஐம் ஓக்கே நவ்… இப்பவாச்சும் கொஞ்சம் சிரிங்கடி..” என சிரித்தபடி கூறினாள் சிதாரா.

அதைக் கேட்ட தோழிகள் இருவருமே அவளை கட்டியணைத்து இரு கன்னத்திலும் முத்தமிட, “ச்சீச்சீ.. இதெல்லாம் உங்க ஆளுங்களுக்கு குடுங்க..” என கன்னத்தைத் துடைத்தபடி சிதாரா சொல்ல மூவரும் சிரித்தனர்.

அந்த சமயம் அங்கு வந்த லாவண்யாவின் தாய் காயத்ரி, “உங்க பாச மழை எல்லாம் முடிஞ்சிச்சினா சாப்பிட வரீங்களா மூனு பேரும்.. அத்த ரொம்ப நேரமா சித்துவ தேடுறாங்க..” என்று‌ விட்டு செல்ல மூவரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.

இங்கோ அதிர்ச்சியில் விழி விரித்து நின்றவனை கலைத்தது ஆதர்ஷின் அழைப்பு.

“இங்க என்னடா பண்ற தனியா.. வா உள்ள போலாம்..”

“மச்சான்.. நான் தாரா கூட பேசனும்டா.. ப்ளீஸ்டா..” என்ற பிரணவ்வின் பதிலில் அவனை ஆழ நோக்கினான் ஆதர்ஷ்.

அதற்குள் அபினவ்வும் அங்கு வந்து சேர்ந்தான்.

பின் நிதானமாக குரலில் கடுமையை தேக்கி வைத்து, “இங்க பாரு பிரணவ்.. நான் உனக்கு இது முதலும் கடைசியுமா சொல்றேன்.. உனக்கும் சித்துவுக்குமான உறவு எப்பயோ முடிஞ்சி போச்சி.. இல்ல இல்ல.. நீ தான் முடிச்சி வெச்சாய்… உன்னால அவ ரொம்ப கஷ்டப்பட்டுடா.. அகைன் உன்னால அவ கஷ்டப்படுறத நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்… நீ எனக்கு ஃப்ரென்டா இருக்கலாம்.. இதுக்கு முன்னாடி நீ பண்ண தப்புக்கு எதுவும் சொல்லலன்னு நீ பண்ற எல்லா விஷயத்துக்கும் நான் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்னு எதிர்ப்பாக்காதே… இப்ப இருக்கிறது உன்னோட தாரா இல்ல.. ஜஸ்ட் சிதாரா.. எங்க எல்லாருக்கும் சித்து.. அவ்ளோ தான்… உன்னால அவளுக்கு மட்டும் ஏதாச்சும் பிரச்சினை வந்தால் நீ இந்த ஆதர்ஷ ஃப்ரெண்டா மட்டும் தானே பாத்திருக்காய்.. அதுக்கப்புறம் சித்துக்கு அண்ணனா பார்ப்பாய்..” என்று விட்டு உள்ளே சென்று விட்டான் ஆதர்ஷ்.

அபினவ்வோ, “ஆதர்ஷ் சொல்லிட்டு போறதெல்லாம் நீ மைன்ட் பண்ணிக்காத மச்சான்.. அவன் சித்து மேல உள்ள பாசத்துல பேசிட்டு போறான்.. கோவம் கொறஞ்சதும் அவனாவே வந்து பேசுவான்.. வா நாம உள்ள போலாம்..” என பிரணவ்வை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

வீட்டினுள் பாட்டியின் சமையலை அனைவரும் வெளுத்து வாங்கிக்கொண்டு இருந்தனர்.

சிதாரா, “ஆமா.. கேக்கனும்னே இருந்தேன்.. ரெண்டு பேரும் கால் பண்ணப்போ நம்ம ஃப்ரென்ட்ஸ் கூட தானே டூர் அரேன்ஞ் பண்ணி இருக்குன்னு சொன்னீங்க.. இங்க வந்து பாத்தா பாதி பேரே கப்பிள்ஸா வந்து இருக்காங்க..”

“ஃப்ரென்ட்ஸ் டூர் தான் சித்து.. பட் நம்ம எல்லோருமே பொண்ணுங்க.. நாம மட்டும் தனியா போறோம்னு சொன்னா வீட்டுல இருக்கிறவங்க பாதுகாப்பு அது இதுன்னு சொல்லி வேணாம்னு சொல்லிருவாங்க… அதான் நம்ம சீனியர்ஸ்னு சொல்லி ஆது, அபி அண்ணா அவங்க ஃப்ரெண்ட்ஸ்னு கொஞ்சம் பேர வர வெச்சோம்.. நமக்கும் நம்ம ஆளுங்க கூட சுத்தினது போலவும் இருக்கும்..” என கண்ணடித்து கூறினாள் லாவண்யா.

“அது சரி.. நீங்க எல்லாரும் கப்பிளா சுத்துங்க.. நடுவுல எதுக்கு எங்கள மாதிரி சிங்கிள்ஸ்..” என சிதாரா சலிப்பாக சொல்ல, “அப்படி எதுவுமில்ல சித்து.. அவ சும்மா உன்ன கலாய்க்கிறா.. நெஜமாலுமே நம்ம பாதுகாப்புக்கு தான் பசங்க வந்திருக்காங்க.. அதுவுமில்லாம நமக்கு எப்பவும் ஃப்ரென்ட்ஸ் தான் முக்கியம்..” என்றாள் அக்ஷரா.

சிதாரா, “ஓஹ்… அதயும் பாக்கலாம் உங்க பேச்சு எவ்வளவு தூரத்துக்கு உண்மையா இருக்குன்னு.. அதெல்லாம் சரி.. நம்மளோட சீனியர் பசங்க வரது ஓக்கே.. மத்தவங்களுக்கு இங்க என்ன வேலை…” என்க இருவருக்குமே அவள் யாரைக் குறிப்பிடுகிறாள் எனப் புரிந்தது.

“அபி, தர்ஷ் அண்ணா ரெண்டு பேருமே நம்ம கூட வராங்க.. பிரணவ் அண்ணாவும் அவங்க கூட தான் இருக்காங்க.. சோ அவரயும் கூட்டிட்டு வரோம்னு சொன்னாங்க.. எங்களுக்கும் வேணாம்னு சொல்ல முடியல..” என அக்ஷரா பதிலலிக்க ம்ம்ம் என்றதோடு முடித்துக் கொண்டாள்.

மறுநாள் அதிகாலையிலே செல்ல இருப்பதால் அன்று இரவு யாருமே உறங்கவில்லை.

எனவே அனைவரும் வெளியே தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

ஒரு பக்கம் பெண்களும் மறுபக்கம் ஆண்களும் என இருக்க பிரணவ்வின் பார்வை முழுவதும் சிதாராவிடமே இருந்தது.

இதனைக் கவனித்த அபினவ் பிரணவ்வை நெருங்கி அவன் காதில் மெதுவாக, “டேய்.. எனக்கென்னவோ நீ இன்னிக்கி ஆதர்ஷ் கிட்ட அடி வாங்காம இருக்க மாட்டாய் போல..” என்றான்.

அவன் கூறியது பிரணவ்வின் செவிகளை எட்டினால் தானே. அபினவ்வால் தலையில் அடித்துக்கொள்ள மட்டும் தான் முடிந்தது.

பிரணவ்வின் பார்வை தன் மீதே இருப்பதை சிதாராவாலும் உணர முடிந்தது.

அவளுக்கு ஏதோ நெருப்பின் மேல் அமர்ந்து இருப்பது போல் இருந்தது.

ஓரளவுக்கு மேல் முடியாமல் அங்கிருந்து எழுந்தவள் அனைவரிடமும் பொதுவாக, “எனக்கு கொஞ்சம் டையர்டா இருக்கு.. நான் உள்ள போறேன்..” என்று விட்டு யாருடைய பதிலையும் எதிர்ப்பாராமல் வீட்டை நோக்கி நடந்தாள்.

வீட்டினுள் நுழையச் செல்லும் நேரம் சரியாக அவளை மோதுவது போல் வீட்டு வாசலில் வந்து நின்றது ஒரு கார்.

கார் அவளை நோக்கி மோதுவது போல் வரவும் தோட்டத்திலிருந்த அனைவரும் பயந்து அவளின் திசை பார்க்க பிரணவ்வோ, “தாரா.. கார்…” எனக் கத்தினான்.

கார் தன்னை நோக்கி வந்ததும் சிதாராவின் இதயமே ஒரு நிமிடம் நின்றது. அதனால் பிரணவ் அவளை அழைத்ததை அவள் கவனிக்கவில்லை. அது நிறுத்தப்பட்டதும் தான் போன உயிர் திரும்ப வந்தது.

அவ்வளவு நேரம் இருந்த பதட்டம் அகன்று கோவம் அவ்விடத்தை நிரப்பியது.

அதே வேகத்தில் காரிடம் சென்றவள் அதன் ஜன்னலைத் தட்டி கோவமாக, “ஹேய்.. யூ இடியட்… ஓபன் தி டோர்..” என்க கார் ஜன்னலை மெதுவாக கீழிறக்கி அவளைப் பார்த்து சிரித்தான் ஆர்யான்.

அவனை அவ்விடத்தில் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து விட்டாள் சிதாரா.

காரிலிருந்து இறங்கிய ஆர்யான் சிதாராவின் முன் வந்து நின்று அவள் முகத்தின் முன் கை ஆட்ட தன்னிலை மீண்ட சிதாரா ஜிராஃபி என அவனை அணைத்துக் கொண்டாள்.

லாவண்யாவும் அக்ஷராவும் அவர்களை நோக்கி வர தோட்டத்தில் இருந்த ஏனையோர் இருவரையும் வேடிக்கை பார்த்தனர்.

பிரணவ்வோ சிதாரா யாரோ ஒரு ஆடவனைக் கட்டியணைத்ததும் சொல்லொனா மனநிலையில் இருந்தான்.

ஆர்யானை விட்டு விலகிய சிதாரா, “நீ இந்த நேரத்துல இங்க என்ன பண்ணுறாய் ஜிராஃபி..” எனக் கேட்கும் போதே அக்ஷராவும் லாவண்யாவும் அவ்விடத்தை அடைந்தனர்.

ஆர்யானோ லாவண்யாவைப் பார்த்து, “என்ன சிஸ்டர் நீங்க மினி கிட்ட எதுவும் சொல்லலயா..” என்க சிதாரா லாவண்யாவை கேள்வியாய் நோக்கினாள்.

“நீ ஈவ்னிங் குளிச்சிட்டு இருக்கும் போது இவரு கிட்ட இருந்து கால் வந்துச்சி.. நீ ஆல்ரெடி யூ.எஸ் ல இருக்க கிட்ட இவர பத்தி சொல்லி இருந்ததால நான் தான் பேசினேன். அப்போ தான் இவரையும் டூர் வர சொன்னா நல்லா இருக்கும்னு தோணுச்சி.. உனக்கும் ஹேப்பியா இருக்கும்.. நம்ம கூட தான் பசங்களும் வராங்களே.. சோ இவர் வரதுல யாருக்கும் பிரச்சினை இருக்காது. அதான் இவர் கிட்ட கேட்டேன்.. இவருக்கும் ஓக்கே உன் கிட்ட சொல்ல வேணாம் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொன்னாரு.. அதான்டி..” என விளக்கம் அளித்தாள் லாவண்யா.

அதைக் கேட்ட சிதாரா ஆர்யானிடம், “நல்ல நேரம் ஜிராஃபி நீ வந்தது. நான் கூட யோசிச்சிட்டே இருந்தேன் இந்த பக்கிங்க டூர் போய்ட்டு நம்மள கழட்டி விட்டுட்டு அவங்க ஆளுங்க கூட சுத்தினா நமக்கு யாரு கம்பனி குடுப்பான்னு.. சரியா நீ வந்துட்டாய்..” என்க, “நான் இருக்கும் போது என்னோட மினியனுக்கு என்ன தனிமை.. உனக்கு ஆல் டைம் கம்பனி குடுக்கத்தான் நான் இருக்கேனே..” என பெருந்தன்மையாக ஆர்யான் சொல்ல, “அதுவும் சரி தான்..” என சிரித்தபடி கூறினாள் சிதாரா.

அக்ஷரா, “சரி சித்து நம்ம ஃப்ரெண்ட்ஸ் என்ட் சீனியர்ஸ்க்கு இவர இன்ட்ரூ பண்ணி வை.. இப்போதே எல்லோரும் பழகிக்கட்டும்.. அப்போ தான் நாளெக்கி டூர் போனா இவருக்கும் கம்ஃபர்டபிளா இருக்கும்” என்றாள்.

“இன்னும் என்ன சிஸ்டர் அவரு இவருன்னுட்டு இருக்கீங்க.. மை நேம் இஸ் ஆர்யான்.. கால் மீ ஆர்யன் ஆர் அண்ணா. ஆர் சம்திங் எல்ஸ் ஏஸ் யுவர் விஷ்..” என அவர்கள் இருவருக்கும் கட்டளை இட்டான் ஆர்யான்.

இருவருமே ஒரே சமயத்தில், “ஓக்கே அண்ணா.. இப்போ அங்க போலாமா..” என அழைக்க சந்தோஷமாக அவர்களைப் பின் தொடர்ந்தனர் சிதாரா மற்றும் ஆர்யான்.

❤️❤️❤️❤️❤️

மூணாவது அத்தியாயம் எப்படி இருக்கு மக்களே.. நீங்க கேட்டது போல பெரிய யூடியா குடுத்திருக்கேன்.. இதை விட பெரிசா தர டிரை பண்றேன்.. அதே போல உங்க ஆதரவையும் எனக்கு வழங்குங்க.. மறக்காம vote & comments பண்ணுங்க.. நன்றி…

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    9 Comments

    1. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல்

    2. அருமையான குடும்பம் சார்ந்த காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்.

    3. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.