Loading

கடற்கரையில் கண்களை விழித்த மொழிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. தான் விமானத்தில் வந்தது நினைவில் இருந்தது பிறகென்ன நடந்தது எப்படி இந்த கடற்கரையில். மொழி எங்கே அவள் அருகில் தானே அமர்ந்திருந்தாள். மொழி , எழிலன் என சிந்தித்தவள் நினைவில் இப்போது நிறைமதியன் . ஆம் எங்கே அவன் எத்தனை மாத ஏக்கம். எத்தனை முறை அவனை கண்டிப்பிடிக்கும் வழி அறியாது தவறவிட்டாள். மீண்டும் அவனை தொலைத்துவிட்டாளோ. அவனை கண்ட இரு விநாடி நினைவுகூட அவளுக்கு கிடைத்த புதையலை போலவல்லவோ?.

தான் மட்டும் உயிருடன் இருக்கையில் மற்ற மூவரின் நிலைமை என்ன. கடைசியாய் அந்த விமானத்தில் கண்மூடி இருந்தவளுக்கு கேட்டது அந்த வெடிப்பது போன்ற சத்தம் மட்டுமே. ஒரு வேலை விமானம் விபத்திற்குள்ளாகிவிட்டதோ . தான் மட்டும் எப்படி இங்கே உயிரோடு. நினைவுகள் தானாய் சென்றது அந்த குழந்தைக்கு கொடுத்த சிகிச்சைகளுக்கு. மனதின் அழுத்தம் மீண்டும் வந்து குடிகொண்டது.இப்பொது மற்றவர்களை தேடுவது அவசியம்.

பயம்.பயம்.பயம் மட்டுமே நெஞ்சில் விரவி இருந்தது. அந்த மூவர் இல்லையேல் என் செய்வாள் என்ற பயம்.

பயம். மகிழ்ச்சியின் ஜீவனை வேரோடு எடுத்து செல்லும் திராணி உடையது. இதனை தாண்டி கடந்திடாவிடில் மகிழ்ச்சியின் நிறையை அடைந்திட தான் முடியுமோ.

விழியும் அதனை கடந்திடும் காலம் வெகு தொலைவில் இல்லையே. மகிழ்ச்சியின் நிறைவை அடைவதற்கான அவளின் பயணம்.

தொலைவில் இருந்து கேட்டது ஒரு குரல், “யாராச்சு இருக்கீங்களா ?”

குரல் வந்த திசை நோக்கி வேகமாய் மிக வேகமாய் ஓடினாள் எப்படியாவது அவர்களை கண்டுவிடமாட்டோமா என்கிற ஏக்கம் அவளை சூழ்ந்திருந்தது.

அந்த குரலின் உரிமையாளன் அவன் தான் ஆம் அவன் தான் நிறைமதியன். நிம்மதி பெருமூச்சு அவனுக்கு ஒன்றும் நேரவில்லை . தான் அவனை தொலைக்கவும் இல்லை. அவளை கண்ட அவன் கண்களிலும் பிரித்தறிய முடியா விழியின் மொழிகள். என்னவென கண்டுகொள்ள முடியவில்லை அவன் இமைகளின் வார்த்தைகள் அவன் மட்டுமே அறிவான். மொழிபெயர்ப்பு செய்யும் திறமை யாருக்கு இருக்கும்?.

மனதின் அழுத்தங்களில் , வருத்தங்களில் வெகுவாய் சோர்ந்து விட்டாள். மிக பலவீனமாய் உணர்ந்திருந்தவள் கண்களில் அவளின் தவிப்பு. தவிப்புகள் அவளை தன்னிலை இழக்கச் செய்ய அவனை நோக்கி நடந்தவள் இப்பொது ஓடினாள் வேகமாய் ஓடி சென்று அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள் அழுதாள் கரைந்தாள். எத்தனை அழுகை நிறுத்த முடியவில்லை. அவள் தவிப்பை உணர்ந்தானோ, பயத்தை உணர்ந்தானோ நிறைமதியன் ?.. அவளை தடுக்கவில்லை தன்னிலிருந்து விலக்கவில்லை , அதற்காக ஆறுதலும் சொல்லவில்லை. கைகளாலும் சரி, வார்த்தைகளாலும் சரி ஆறுதல் உரைக்கவில்லை. அவள் அழுது தீரும்வரை அமைதி காத்தான் அவள் ஆசுவாசம் அடைய நேரம் கொடுத்தான்.

சிறிது நேரத்தில் ஆசுவாசம் அடைந்தவளுக்கு அப்போது தான் உரைத்தது அவனை அணைத்து அழுதது . 

“ அம்மா புட் ஐசு. நான் யாருனு தெரியுதா. என்னை லாம் பார்க்கவே தோணல ல” என்றான் எழிலன்.

தலையை குனிந்தபடியே அவனிடம் இருந்து விலகி எழிலனை பார்த்து பேந்த பேந்த விழித்தவள் தெரியாத உணர்வின் பிடியில் கண்களை வேறு புறம் திருப்பிக்கொண்டாள்.

எழிலனோ நிறையிடம், ” நான் உன் கூடவே தான டா இருக்கேன் . நான் தானே அவ பிரெண்டு நியாயப்படி என்னை பார்த்து தானே சந்தோச படணும் நான் உயிரோட இருக்கறதுக்கு. இவ என்ன என்னை பார்க்கவே மாட்டேங்கிறா”, என்றான் நண்பி தன்னை கவனிக்காத ஏமாற்றத்தில் சற்று சத்தமாய் அவளுக்கு கேட்கும் வண்ணம்.

அவளுக்கு வெட்கப்படுவதா இல்லை துயர படுவதா என்று புரியாமல் கண்களை மூடியவளுக்கு அப்போது தான் எழிலன் நிலை உரைக்க சட்டென இமை திறந்தாள். உன்னை நான் முதல பார்க்கல எலி . இப்ப தா பார்த்தேன்.

எழில் , ” ஆஹான் “

விழி ,” ரியல் ஆஹ் டா நம்பு ” என்றவளுக்கு அவனின் பார்வையே அவன் நம்ப மாட்டான் என்ற விடையளித்தது.

“ஐயோ இவன் வேற நான் இருக்க நிலை தெரியாம .”, என்று மனதில் நொந்தவள் சற்று தள்ளி சென்றாள். எழிலன் சற்று நேரம் இமைகள் மூடி காற்றில் கைகளை விரித்து நின்றிருந்தான். அவன் நிலையை பார்த்த மதியன் ” டேய் என்ன பண்ற?” என்றான் புரியாமல் , அதற்கு எழிலனோ ” உனக்கு அமையுது . எனக்கு அமையல ” என்றான் . 

“என்னது டா”

எழிலன்,“இன்னும் யாராச்சு இருந்து ஓடிவந்தா நான் ஆறுதல் சொல்ல தான்” 

அவன் கூறிய தோரணையில் மதியனுக்கு சிரிப்பு வந்துவிட கொடுப்புக்குள் சிரித்தவன் மீண்டும் தங்களிடம் வந்த விழியை பார்த்தான்.

அங்கு மதியன் , எழிலன் தவிர இன்னும் ஒருசிலர் இருந்தனர் ஆண் பெண் இரு பாலரும் தான். இப்பொது தானே கவனத்தில் கொள்கிறாள் இவர்களை, அங்கிருந்த அந்த சிலர் இவர்களுடன் விமானத்தில் பயணித்தவர்கள் என இவர்களுடன் கொஞ்சம் கொஞ்சமாக வந்து இணைந்திருந்தனர்.

ஆனால் விழியும் மொழியும் வருவதற்காய் காத்திருந்த கண்களுக்கு விழியின் வரவு குளிர்வை தான் கொடுத்தது. உடன் தோழியாய் பழகிவிட்ட அப்பெண்களின் வரவை தேடியது அவ்விருவரின் கண்கள். விழி வந்து சேர்ந்தது விட மற்றவள் எங்கே என தேடின அவ்விருவரின்.

மீண்டும் இவர்களிடம் வந்தவள், “மொழியை தேடணும் இப்ப” , என்க,

எழிலன் ,”தேடலாம் டா ஐஸ். நீ ஓகே வா?”,

விழி, ” எனக்கு ஒன்னும் இல்ல ஐயம் ஓகே ” என்றவள் விழிகளில் பரிதவிப்பு அவளை மட்டும் காணவில்லையே அவள் தானே தோழியாய் தங்கையாய் தனக்கு ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்பவள். தானக்காய் யோசிக்கும் ஜீவன்களில் ஒன்றாயிற்றே.

தன் இடர்களில் உரிமையாய் பங்குக்கொள்ளும் அவளின் இருப்பு இப்போதும் எப்போதும் தேவையல்லவோ?. தன் உயிராய் நேசித்த நட்பு எங்கே என்று மனம் ஒரு புறம் அடித்துக்கொண்டது. தெரியவே தெரியாத இடத்தில் அவளை எங்கென தேடுவது. 

எழிலனிடம் கேட்டவளுக்கு அவன் மொழியை பற்றி தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லையோ. தான் தானே இவனிடம் நட்பு கொண்டது மொழி இவனிடம் பேசவே இல்லையே. எதற்காக இவன் அவளை தேட வேண்டும். அவளின் இன்மையை ஏன் அவன் தீவிரமாக என் எடுத்துக்கொள்ள வேண்டும். நாமே நம் தோழியை தேட முடிவு செய்தாள். இருந்தும் அவனிடம் கேட்டு பார்ப்பதில் என்னவென தோன்றியது.

தான் கணித்த வரையில் அவன் நல்ல மாதிரி தான். உதவுவான் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. இருந்தும் மலை போல் அவனை நம்ப அவள் மனம் இடம் கொடுக்க மறுக்க, அவன் ‘முடியாது’ என்றாலும் தானே தேடும் பணியில் இறங்க நினைத்தாள். அவன் முடியாது என்று சொன்னாலும் அது அவளை பாதிக்க போவதில்லை. எப்படி பார்த்தாலும் தான் மட்டுமே அவன் நண்பி தன்னுடைய தோழியை காக்கும் எந்த ஒரு நிர்பந்தமும் அவனுக்கு இல்லையே. 

விழி, “ப்ளீஸ் எழில். எனக்கு அவளை கண்டுபிடிக்கனும். ஹெல்ப் மீ. இல்லனாலும் பிரச்சனை இல்லை நான் போய் தேடிக்கிறேன். தேங்க்ஸ்”, என்றவள் அவ்விடம் விட்டு அகல முயல,

“ஏய் லூசு. நான் வரமாட்டேன் தேட மாட்டேன் னு சொன்னேனா. அப்டியே தனியா தேட போற”, என்று எகிறியவனை மிரண்டு போய் பார்த்தாள்.

“என்ன எலி திட்டுற?”, என்றாள் பாவமாய் 

“போடி பைத்தியம். உன்கூட இருந்தா எங்களுக்கும் பிரண்டு தானே. எங்க கூட பேசலனாலும் அவ எங்க பிரண்டு தான். என்னமோ நான் போறேன் நான் போய் தேடறேனா? போ? ஏன் நின்னுகிட்டு போ. காட்டெருமை, சிங்கம், புலி, எல்லாம் இருக்காம் போ.பாவம் ரொம்ப பசியா இருக்கும் போன உடனே அழகா அலேக்கா உன்னை சாப்பிட்டு முழுங்கி ஏப்பம் விட்டுடும் போ. போ டா அம்மு போ”, என்க

அதிர்ச்சியில் ‘பே’ வென வாயை பிளந்து கொண்டு நின்றாள். அதனை கண்டவன் மீண்டும் தொடர்ந்தான்.

“அது இல்லனாலும் அங்க தான் பூச்சாண்டி இருக்கானாம் போ?. அப்டியே அவனை கல்யாணம் கட்டிக்கிட்டு புள்ள குட்டினு குஜாலா இரு டி மா. கல்யாணத்துக்காச்சு கூப்புடு வந்து கொட்டிகிட்டு போறோம்”, என்றவனை கண்களில் முட்டிக்கொண்டு இருந்த கண்ணீரோடு நின்றிருந்தவளை பார்க்க பாவமாகவும் இருந்தது எழிலனுக்கு,

“அத்தனை பேச்சு பேசிட்டு எப்படி மூஞ்சிய பாவமா வெச்சிட்டு ஏமாத்துது பாரு ஐஸ் கரடி” என்று வாயிற்குள் திட்டிகொண்டான்.

இப்படி ‘பேபே’ வென நின்றவளை பார்க்க பாவமாக தான் இருந்தது நிறைமதியனுக்கும். எழிலன் பூச்சாண்டியை சொன்னதில் சிரிப்பை அடக்க முடியவில்லை. பெரும் பாடு பட்டு கொடுபுக்குள் மறைத்துக்கொண்டே வேறு புறம் திரும்பிவிட்டான்.

எழிலன், “அய்யே. மூஞ்சிய அப்டி வெக்காத பார்க்க சகிக்கல. வா போவோம். எனக்குன்னு வந்து சேருதுங்க பாரு நல்லா” என்று அவளை பொய்யாய் வசை பாடிய படி நடக்க நிறைமதியனும் சேர்ந்து கொண்டான் இவர்களுடன் தேடலில். 

அங்கிருந்தவர்களிடம் காத்திருக்க சொல்லிவிட்டு. தாங்கள் திரும்ப இத்தனை நேரம் கடந்துவிட்டாலோ உதவிக்கு தாங்கள் கத்தி அழைத்தாலோ உதவிக்கரம் நீட்ட கேட்கொண்டு கிளம்பி விட்டனர் மூவரும். 

அது கடற்கரை பகுதி தான் என்றாலும் முன்பின் தெரியாத இடத்தில் என்ன இருக்கும். வேறு யாரும் மனிதர்கள் இருப்பார்களா? இவர்கள் இங்கிருந்த இத்தனை நேரம் ஒரு மனிதர் கூட கண்ணில் படவில்லை. அதனால் அந்த நேரமும் ஏதும் அவசரமும் பற்றி சொல்லி இருந்தனர் அங்கு கூட இருந்தவர்களிடம். அதுவும் இல்லாமல் இவர்களை போல் இன்னும் யாரேனும் இருந்தால் இங்கு யாரேனும் நின்றால் தான் அவர்களுடன் புதியவர்களும் இணைந்து கொள்வார்கள். 

இவர்களுக்கு ஆபத்து என்று சொல்லும் அளவுக்கு வராது என்றாலும் யாருக்கும் உடல் நலம் குன்ற வாய்ப்புகள் அதிகம். பையில், சட்டை பையில் கைபேசி இருந்தும் பலனில்லை. இவர்களுக்கு குடிக்க தண்ணீரோ, உணவோ எங்கு கிடைக்கும் என தெரியவில்லை. அதற்கான வசதிகலும் அங்கு இல்லை. தண்ணீர் குழாயோ, கடைகளோ எதுவுமே இல்லை. அவர்களின் உடல் பலம் சிறிது சிரித்தாய் குறைந்து கொண்டு தான் இருந்தது.

விழி போகும் வழியில் புலம்பி கொண்டே வர, 

எழிலன்,“இவ வேற ரேடியோ வ ஆன் பண்ணிட்டாளே” இவன் ஒரு பக்கம் புலம்ப,

இவர்கள் புலம்பல்களில் காதடைத்தது என்னவோ நிறைமதியனுக்கு தான்.

சற்று தூரம் நடந்துகொண்டிருக்கும் போதே விசும்பி கொண்டே வந்தாள் விழி. 

எழிலன், “அம்மா தாயீ ஏன் தாயி அழுகுற. நம்ம மொழியை தேடி தானே போய்ட்டு இருக்கோம் அப்றம் என்னவாம் உனக்கு”.

விழி, “இன்னும் அவ கிடைக்கல ல” என்றாள் சோகமாய். அதற்குமேல் அப்படி விளையாட்டாய் பேசமனமில்லால்,

எழில், “தேடிட்டு தான மா இருக்கோம்”, என்றான் மென்மையாய். 

“ம்ம்”, என்றவள் குரலில் சுரத்தையே இல்லை. 

அவள் முன் வந்து நின்ற மதியன் அவள் கண்களை பார்த்து “இன்னும் ஏன் அழுறீங்க தேடிட்டு தான இருக்கோம். ட்ரை பன்னிட்டு இருக்கப்ப ஏன் இவ்ளோ அழுகை. இந்த அளவுக்கு அழுத்துகிட்டு, அதுக்கு சமாதானம் சொல்லிட்டு இருக்க அளவுக்கு நமக்கு யாருக்கும் எனர்ஜி இல்லை. இங்க சாப்பாடும் இல்லை தண்ணியும் இல்லை. உங்க கூட இருக்கவங்கள தேடிட்டு அப்றம் தான் நம்ம சாப்பாடு பத்தி யோசிக்கணும். அதுவரை இருக்க எனர்ஜி அ சேவ் பண்ணி தான் தேடணும்”.

இதுவரை அவளிடம் பேசியதில்லை. இப்போது தான் வார்த்தைகள் கோர்த்து பேசும் அவனையே பார்திருந்தாள். அவனின் எண்ணங்களை உள்வாங்கி கொண்டாள். 

நிறை, “ நீங்க ஒரு டாக்டர் புரியும் னு நெனைக்கிறேன்”, என்றவன் திரும்பி மீண்டும் இவர்களுடன் நடக்கலானான்.

சட்டென சத்தமில்லாமல் நின்றிருந்த அவள் கண்ணீரையும் புலம்பலையும் கண்ட எழிலன். 

“ஓஹோ இவரு சொன்னா தான் மேடம் கு பல்பு எரியுமா”, என்று விழியிடம் கிசுகிசுப்பாய் கேட்டதும் , அதற்கு விழி முறைக்க,

 “ என்ன லுக்கு. அவன் சொன்னதும் வாட்டர் டேப் அ க்ளோஸ் பண்ணிட்டே. நான் தான் இது தெரியாம இவ்ளோ நேரம் இது தெரியாம உனக்கு கம்போர்ட் குடுக்கிறேன் கம்பளி கொடுக்கிறேன் னு அவ்ளோ பேசுனேன். ஒரு வார்த்தைக்காச்சு என்ன கொஞ்சம் மதிச்சிருக்கலாம்”, என்றுவிட்டு முன்னே சென்றுவிட்டான். முன்னே சென்ற எழிலனுக்கு சிரிப்புதான் வந்தது அவளை நினைத்து, நீ நடத்து டி ஐஸ் வண்டி என்று மூணுமுணுத்து கொண்டான் தனக்குள்.நிறைக்கும் சற்று நிம்மதியாய் இருந்தது அவள் அழுகை நின்றது. 

சற்று நேரத்தில் எழிலனின் கேள்வியில் கடுப்புற்று நின்றிருந்தான் நிறைமதியன். அவனை வசை மாரியில் நனைத்திருந்தான். அவன் அருகில் நின்றிருந்த விழியோ பயத்தில் “நல்லவேளை தான் இதை கேட்கவில்லை” என்று மனதில் நினைத்து கடவுளுக்கு நன்றி கூறி கொண்டிருந்தாள்.

“இது எல்லாருக்குமே வரது தானே டா. இதெல்லாம் ஏன் வர எதுக்கு வர னு திட்டவா முடியும். ஏன் உனக்கு இப்டி ஆகவே ஆகாதா என்னை திட்டுற”, குருட்டு தைரியத்தில் பேசிகொண்டிருந்த எழிலனை பார்த்து “ பரவால்ல இவனுக்கும் தைரியம் லா இருக்கு போலயே பெரிய ஆள் தான் எதிர்த்துலாம் பேசுறானே”, என்று நண்பனை மனதில் மெச்சி கொண்டவளுக்கு தெரியாதே எழிலன் உள்ளுக்குள் நடுங்கி கொண்டிருப்பது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    9 Comments

    1. Dei caruuu unaku building strong basement weak ya da😂😂 oru Vela moli kadal la vilunthu kidapaalo🙄🙄🫢😂 super ka

      1. Author

        🤣🤣🤣🤣avan basement romba weaku dav 🤣🤣🤣niraiya pathu epdi nadunguran paaru 😂. Thank u da❤️

      2. உள்ளுக்குள்ள அவ்வளவு நடுக்கத்தை வைத்துக்கொண்டு வெளியில் இப்படி கேலி கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காங்க. மொழி எங்க போனா? அவளுக்கு என்ன ஆச்சு??

        1. Author

          அவளை தான் சிஸ் தேடனும் 🥲

    2. இருந்தாலும் இந்த எலிக்கு அவன் மேல இவ்வளவு poramailaam irukka கூடாது 😂😂pakkalam eppadi மொழிய கண்டு pidikkuraangannu ❤️❤️❤️super next epikki waiting da

    3. எழி விழி இடையில் இருக்கும் நட்பு அழகு…🥰🥰🥰🥰 Next ud waiting Dr…