Loading

தேனொழுக பேசித் தமிழின்

இலக்கண இலக்கியத்தினால்

பார்கடல் அமுதென பேசி

நம்மைக் கொஞ்சுவோரே

நம்மில் பாசம் கொள்வோரோ

தவறி விழுந்திடாதீர் மானிடரே …

முகத்திற்கு நேராகவே

உண்மை உரைத்து

கோபத்தினைக் காட்டினும் – நமக்கு

நன்மையை மட்டுமே தரும்

உண்மை ஜீவன்கள் இங்கு உண்டு

கோபம் கொள்வதால்

நல்லவர் கெட்டவர் ஆவப்போவதில்லை

புரிந்து கொள்ளாவிடினும்

பரவாயில்லை

தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் …

– என்றும் அன்புடன்

சில்வியா மனோகரன்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்