Loading

வெள்ளி மழையில்
கால் தடுக்கும் ஆடையை
அள்ளி சொருகி
கணுக்கால் தெரிய நின்றேன்

அவனை சந்திக்கும் நாள் அல்லவா
அவனை ஈர்க்க அழகியாக இருக்க தேவையில்லை
அவன்மேல் தீரா காதல் போதுமே

திருடனாய் அவன்
தயார் நிலையில் என் முன்னே

அவனது வாசம்
என்னை பித்தம் கொள்ள
மொத்தமாக கொள்ளயிட
துடிக்கும் உணர்விற்கு
முற்று புள்ளி இடமுடியாமல்
தவிப்புடன் நின்றேன்

கள்ளனவன் கள்ள சிரிப்பு
என்னை கட்டி இழுக்க
கட்டுப்பாடு இன்றி
நான் நிற்க
முற்றுகையிட துடித்தான்
என் கலாப காதலன்

ஆயிரம் கல் தொலையில்
அவன் இருந்தாலும்
அவன் பிரேத்யேக வாசனை
கண்டு கொள்ளும் என்னை
தள்ளி வைத்து சீண்டுவதில்
அவனுக்கு அலாதி பிரியம்

அப்பப்பா அவனை நெருங்கியதும்
அப்படி ஒரு உஷ்ண மூச்சு
கண்கள் மூடி
அவனை இதழால் தீண்டினேன்

பிறவி பயனை அடைந்தேன்
அவனுள் ஆழ்ந்து போக நானும்
என்னுள் புதைய அவனும்
எங்கள் காதல் நாடகத்தை
இறுதியில் முடித்தவள் நானே.

பிரிவு என்னை ஆட்கொள்ள
மீண்டும் அவனை ஆட்சி செய்ய
அடுத்து ஞாயிறு எப்போயென
நாட்குறிப்பில் நான் தேட
ஏழுநாள் கெடுக் கொடுத்து
காதலவனை தள்ளி வைத்தது காலம்.

பிரியம் கொண்டவளிடம்
இப்படி பிடிவாதம் செய்கிறாயே
என்று காலியான பிரியாணி பாத்திரத்தை கண்டு கண்ணீர் விட்டபடி அவனிடம் இருந்து பிரியாவிடை பெற்றேன் நான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. சில்வியா மனோகரன்

    அட பாவிகளா 😳😳😲😲🤯🤯
    எதோ காதல் கவிதையைத் தான் எழுதுறாங்க . என்னமா உருகி உருகி எழுதுறாங்க னு யோசிச்சா கடைசி வரி ல காலியான பிரியாணி அ 🙄🤔🧐 …

    🙆🙆🙆🙆 …
    ஆனா வார்த்தைகள் வேற
    லெவல் . 👏👏👏

  2. deiyamma

    ஹா ஹா.. அட அட.. பிரியாணி ரசிகையின் காதல் கவிதை.. அருமை..

    இரண்டு பொருள் படும் படி வார்த்தைகளை கோர்த்து காதலுடன் விளையாடி இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள். வித்தியாசமான கவிதை. நல்ல கற்பனை..

  3. ஹேய் வித்தியாசமான கவிதை சகி…நான் காதல்கவிதையோ என நினைத்து ஆழந்துபோகையில் சிரிப்பை வரவழைத்துவிட்டீர் பிரியாணி என்னும் ஒற்றை வார்த்தையில் …மிகமிக நன்று .

    வாழ்க வளமுடன்…

  4. மழைங்கற வார்த்தையை பார்த்து மண்வாசனையோனு நினைச்சேன்..சரி செம்ம காதல் பீல் போலனு நினைச்சேன்..கடைசில பார்த்தா பிரியாணி…வேற லெவல் சிந்தனை..நைஸ் சிஸ்