Loading

 

சென்னை!

இந்தியாவின் நான்காவது மெட்ரோபோலிடன் சிட்டி…

வானில் மிதக்கும் வானூர்திகள்… தரையில் பறக்கும் கார்,பைக்குகள்…
தடதடத்து செல்லும் ரெயில்கள்…
மின்னல் வேகத்தில் செல்லும் மெட்ரோக்கள் என எப்போதும் ஓடி கொண்டே இருக்கும் பரபரப்பான நகரம்.

மனிதர்களின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும் அந்த நகரத்தில் அந்த சாலையில் மட்டும் ஆளரவமே இல்லை.

ஆர்.கே ரோடு…

கிழக்கு கடற்கரை சாலையின் கிளை சாலை அது.

ஈ.சி.ஆர் என்றாலே முதலில்  நினைவிற்கு வருவது வி‌.ஜி.பி, அடுத்து முட்டுக்காடு போட்டிங் அவுஸ்… அந்த சாலையின் இறுதியில் மகாபலிபுரம்‌ என பரபரப்பில் இருக்கும் மனதை சமன் செய்ய பெரும்பாலும் மக்கள் இந்த வீதியையே தேர்ந்தெடுப்பர்.

ஐடி, கன்ஸ்ட்ரக்ஷன், மால்கள் என ஓ‌.எம்.ஆர் சாலை படு பிசியாக ஒரு பக்கம் இருந்தால் கடற்கரை, பீச் அவுஸ் என இந்த பக்கம் ஈ.சி.ஆர் சாலை ஆசுவாசமாக இருக்கும்.

அப்படி அமைதியாக இருந்த அந்த ஆர்.கே சாலையில் ஒரே ஒரு வீடு தான் இருந்தது. அதுவும் கடல் போல் விஸ்தாரம் எடுத்து பிரம்மாண்டமாய் நின்று கொண்டு இருந்தது.

பளிங்கால் செதுக்கிய மாளிகை போல இருந்த வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே போனால் அங்கே அறுபதுகளின் இறுதியில் ஒருவர் அயற்சியுடன் அமர்ந்து இருந்தார்.

அவர் ரகுராம் கிருஷ்ணன்…

இந்த சாலைக்கு ஆர்.கே சாலை என்று பெயர் வருவதற்கு காரணமே அவருடைய கொள்ளு தாத்தா ராகவ கிருஷ்ணனால் தான். அவருடைய பெயர் தான் இந்த சாலைக்கு வைக்கப்பட்டு இருந்தது.

ரகுராமுடைய குடும்பம் நான்கு தலைமுறையாக செல்வ செழிப்பாகாக வாழ்ந்த குடும்பம்…ஆனால் கடைசி தலைமுறையாக பிறந்த இவருடைய மகன் இருந்த எல்லா சொத்தையும் சூதாட்டத்தில் அழித்துவிட்டு தன்னையும் இந்த உலகில் இருந்து அழித்து இறந்துவிட்டான்.

இப்போது ரகுராம் கிருஷ்ணருக்கு துணையாக மகன் விட்டுவிட்டு போன கடனும், இந்த வீடும் மட்டுமே இறுதியாக மிஞ்சி இருந்தது.

என்ன தான் அந்த வீட்டிற்கு உரிமையாளராக அவர் இருந்தாலும் இன்றோ, தனக்கும் அந்த வீட்டிற்கும் சம்மந்தமே இல்லாதது போல தோட்டத்தில் போடப்பட்டு இருந்த பெஞ்சில் அமர்ந்து இருந்தார்‌.

ஆம் அது தான் உண்மை!

அவருக்கும் அந்த வீட்டிற்கும் அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு இனி எந்த சம்மந்தமும் இல்லை. எந்த தொடர்பும் இல்லை‌.

அவருடைய வீட்டை இரண்டு மணி நேரம் மட்டும் வாடகை விட்டு இருந்ததன் விளைவாய்‌ அவர் அமர்ந்து இருந்த டேபிளின் மீது இப்போது ஐந்து லட்சம் இருந்தது.

இதே போல வரும் ஒரு வாரமும் தன் வீட்டை இரண்டு மணி நேரத்தை வாடகைக்கு தர உடன்பட்டு அவர் கையெழுத்திட்டு இருந்ததால் அவருக்கு சுளையாக முப்பத்தைந்து லட்சம் கிடைக்கப் போகின்றது.

இன்னும் ஒரு ஒன்றரை கோடி இதே போல கிடைத்துவிட்டால் மகன் வாங்கிவிட்டு சென்ற கடனை மொத்தமாக அடைத்துவிட்டு நிம்மதியாக அவரின் உயிர்பறவை விண்ணை நோக்கி சென்றுவிடும்.

இந்த இரண்டு கோடி கடனை அடைக்க அவரும் எவ்வளவோ முயற்சித்துப் பார்த்துவிட்டார். ஆனால் வாழ்க்கையின் இறுதி கரையை அடைந்து கொண்டு இருப்பவரை நம்பி யார் பணம் கொடுப்பார்கள்? அவர் செய்த எல்லா முயற்சியும் வீணாகிவிட்டது.

இறுதியில் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் இந்த வீட்டை வாடகைக்கு விடுவது.

என்ன தான் கை நிறைய பணம் கிடைத்தாலும் வீட்டை ‘எதற்காக வாடகை விட்டோம்?’‌ என்ற காரணத்தை நினைக்க நினைக்க அவர் இதயத்தில் இருந்து இரத்தம் கசிந்தது.

அவர் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், அவருடைய மனைவி இந்த வீட்டை கோவில் போல பாதுகாத்து பூஜித்தவர்…  ஆனால் அப்படிப்பட்ட அந்த வீட்டிலா இதை நடக்க அனுமதித்தோம் என்பது அவரை நரக வேதனை கொள்ள வைத்தது.

அதுவும் வீட்டின் மேல் தளத்தில் இருந்து,  துல்லியமாக விழுந்த ஆபாச பேச்சு சப்தங்கள் அவர் காதை கை கொண்டு மூட செய்தது‌.

உதடுகள் ‘அய்யோ அய்யோ’ என இடைவிடாமல் தன் நிலையை நினைத்து புலம்ப, ‘என்னை மன்னிச்சுடு மீனாட்சி… எனக்கு வேற வழி தெரியலை மா’ என்று அரற்றியவரின் மனம் கண்ணீரோடு அந்த பணக்கட்டுகளை பார்த்தது.

‘பணம் இந்த பணத்திற்காக மனிதன்‌ எவ்வளவு கீழ்த்தரமான இடத்திற்கும் சென்றுவிடுவான்’ என்பதற்கு தானே உதாரணம் ஆகிவிட்டோமே என உள்ளம் கசந்தவர், தான் வாடகை விட்ட அந்த அறையின் ஜன்னல் கதவுகளை கீழே இருந்து அண்ணாந்து பார்த்தார்.

வெள்ளை வெளிச்சம் வீசும் அந்த அறையில் கொஞ்சம் கொஞ்சமாக நீல விளக்குகள் எரிய துவங்க அதைப் பார்த்த அவரின் கண்கள் கண்ணீருடன் தாழ்ந்து கொண்டது.

செய்ய கூடாத தப்பை செய்தது போல உணர்ந்தவர் மீண்டும் என்று மீண்டும் தன் இறந்த மனைவியின் ஆத்மாவிடம் பாவ மன்னிப்பு கேட்க துவங்கிவிட்டார்.

ரகுராம் வாடகை விட்டு இருந்த அந்த அறை இருவர் மட்டும் தங்குவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது‌.

ஆனால் அந்த அறையிலோ இப்போது பத்து பேர் இடத்தை அடைத்து கொண்டு நின்று இருந்தனர்.

‘இடத்தை க்ளீன்‌ பண்ணுங்க’ என்று ஒரு குரல் உத்தரவு  போட அடுத்த அரை மணி நேரத்தில் அந்த அறையில் இருந்த அனைத்துப் பொருட்களும் காலியாகிவிட்டது.

அந்த அறையின் உள்ளே இப்போது  மெத்தை இல்லாத ஒரே ஒரு கட்டில், அதற்கு மேலே கண்ணைப் பறிக்கும் ஒரு ஓவியம் மட்டுமே இருந்தது.

கட்டிலின் மீது போட நீரால் நிரப்பி பிரத்யேகமாக செய்யப்பட்ட ஒரு மெத்தையை போட்டவர்கள் அதன் மீது அலங்காரத்திற்காக பல வண்ண பூவை தூவினார்கள்.

அங்கு இருந்த கேமராக்களின்  வெளிச்சம் சுற்றி இருந்த எதையும் கருத்தில் கொள்ளாமல் அந்த கட்டிலின் மீது மட்டுமே நிலைத்து இருந்தது‌.

ஆம் அந்த புகைப்பட கருவியில் இருந்து பிரியும் ஒளிக்கட்சைகள் அந்த கட்டிலில் இனி நடக்கப் போவதை படம் பிடிப்பதற்காகவே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

அந்த இடத்தையே பல கோணங்களில் தன் கண்களால் அளவிட்ட அந்த டைரக்டர் “பர்ஃபெக்ட்!” என திருப்தியடைந்த அடுத்த நொடி, “கால் ஹெர்…” என்று அங்கிருந்த ஒருவனிடம் சொல்லிவிட்டு தனக்கு போடப்பட்ட நாற்காலியில் சென்று அமர்ந்தார்.

கேமராவின் லென்சுகளை சரி செய்தவாறே தன்னுடைய பொசிஷனில் சென்று நின்று கொண்டான் கேமராமேன்.

ஆஜானுபாகுவான ஒருவன் கட்டிலில் சென்று அமர்ந்துவிட்டு நிமிர, அந்த அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே நடந்து வந்தாள் அவள்.

தியா!

அவள் விழிகள் இரண்டும் பார்ப்பவனை சாய்த்து போடும் மரண சுழல்கள்!

புன்னகையை சிறிதும் காட்டாத உலர்ந்த ரோஜாவின் இதழ்கள் அவள் உதடுகள்.

அவளைப் போலவே பெரிய கேள்வி குறியாக வளைந்து இருக்கும் செதுக்கிய மூக்கு.

பல வர்ண வானவில்லை ஒன்றாய் குழைத்து உருவாக்கிய ஓவியத்தின் நிறத்தை கொண்டது அவள் தேகம்.

மொத்தத்தில் அழகால் அனைவரின் இதயத்தையும் பற்றி கொள்ள வைக்கும் காட்டுத் தீ.

அவளைக் கண்டு சுற்றி இருந்தவர்கள் அனைவரும் வழிய துவங்க,‌‌ அவளது விழிகளோ யாரையும் சட்டை செய்யவில்லை‌.

அலட்சியமாக விரலை சொடுக்கியவள், அங்கிருந்து போகும்படி உதட்டால் சொல்லாமல் தன் இடது கையை அசைக்கவும், சுற்றி இருந்தவர்கள் அனைவரிடமும்  பெருமூச்சு ஒன்று பெரியதாக வெளிப்பட்டது.

அந்த டைரக்டர்,கேமராமேன் மற்றும் கட்டிலில் அமர்ந்து இருந்த அந்த மூன்று ஆடவர்களையும் பொறாமையாக பார்த்தவர்கள், “இவங்களுக்கு இருக்கிற கொடுப்பினை நமக்கு இல்லை” என்று முணுமுணுத்தபடியே அந்த அறையை விட்டு வெளியேறி‌ கதவை இறுக மூடிவிட்டு சென்றுவிட்டனர். 

இப்போது அந்த அறைக்குள்ளே இருந்தவர்கள் நான்கு பேர் மட்டுமே.  கேமரா மேன், டைரக்டர், கட்டிலில் அமர்ந்து இருந்தவன் மற்றும் தியா.

அந்த அறையை ஒரு முறை உணர்வற்று பார்த்தவள் அறையில் நீல நிற வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாய் கூடவும் கண்களை மூடிக் கொண்டாள். 

ஆழமாய் ஒரு நொடி மூச்செடுத்து கண்ணை திறக்கவும் கேமரா மேன் ரெடியா எனக் கேட்கவும் சரியாக இருந்தது.

ஆமாம் என்று தலையசத்து சொன்னாள்.  ஆனால் அவள் இதயமோ, இதன் பின்பு  நடக்க போகும் எதற்கும் தயாராகவில்லை‌ என்பது தான் உண்மை.

என்ன தான் பல இரவுகளாக யோசித்து இந்த முடிவை எடுத்துவிட்டாலும் அதை செயல்படுத்த நினைக்கும் போது உள்ளம் பதறியது என்னவோ நிஜம்.

அவள் கால்கள் எதிர்காலத்தை நினைத்து பயந்து ஒரு அடி தயங்கி பின்னோக்கி போனது.

ஆனால் இனி தனக்கு எதிர்காலமே இல்லை என்பது அதன் பின்பே நினைவிற்கு வர விரக்தி சிரிப்போடு தன் உடலின் மீது போர்த்தி இருந்த போர்வையை விலக்கிவிட்டு கல்லாக நின்றாள்.

முழு பௌர்ணமி நிலத்தை மறைத்து  இருந்த மேகப் போர்வை விலகிவிட, இப்போது பிறை வடிவத்தில் இருந்தது அந்த உடையாத வெண்ணிலவு.

ஆடை குறைப்பு அவளின் கால்களை பின்ன வைத்தாலும் கைகளை இறுக்கிக் கொண்டு தன் தடுமாற்றத்தை வெளிக் காட்டாமல் நிமிர்வாகவே நின்றாள்‌.

அதன் பின்பு அந்த அறை எங்கும் க்ளிக் க்ளிக் என்ற புகைப்பட கருவியின் ஓசை மட்டுமே.

கேமராவின் கண்களால் அவளின் அழகு வடியும் உடலின் நெளிவு சுழிவுகளை மட்டுமே படம் பிடிக்க முடிந்தது‌‌.

அவளின் வெளிறிய கண்களுக்கு பின்னே இருந்த உணர்வுகளை, துல்லியமாக படம் பிடிக்க முடியாமல் அதுவோ தோற்றுப் போனது.

அவளின் அழகை பல்வேறு கோணங்களில் தன் புகைப்பட கருவியில் சுருட்டி கொண்ட கேமராமேன், எல்லாவற்றையும் சென்று டைரக்டரிடம் காண்பிக்க அதை வரிசையாக பார்த்தார் அவர். அதன் பின்பு சில புகைப்படங்களை தேர்ந்து எடுத்து, போஸ்டருக்கு கொடுக்க பணித்தவர் திரும்பி தியாவைப் பார்த்தார்‌‌.

“இன்னைக்கு நியூட் பிக்சர் மட்டும் போதும்… நாளைக்கு போர்ன் மூவி ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணிடலாம்” என டைரக்டர் சொல்ல அவளிடமிருந்து ஆமோதிப்பான தலையாட்டலும் வரவில்லை, அதேப் போல அவள் அதை நிராகரிக்கவும் இல்லை.

மௌனமாய் அவரை ஒரு பார்வை பார்த்தாள்.

எப்படி அவளைப் பற்றி யாருக்கும் புரியாதோ அதேப் போல அவளின் மௌனத்திற்குள் இருக்கும் ஆழங்களை யாராலும் புரிந்து கொள்ள முடியாது‌. அவளின் இந்த மௌனத்திற்கு பின்னால் இருக்கும் அர்த்தங்கள் அவள் மட்டுமே அறிந்தவை.

“நாளைக்கு பதினொரு மணிக்கு இங்கு இருப்பேன்” என்று தகவலாக சொன்னவள் சிதறி கிடந்த தன் ஆடையை நிறுத்தி நிதானமாக எடுத்துக் கொண்டு உள்ளறைக்கு சென்று மாற்ற போனாள்.

அவளின் இந்த வித்தியாசமான நடவடிக்கை மற்றும் செய்கையையே புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தனர் ஆடவர் மூவரும்.

ஆபாச படங்களில் நடிக்க வரும் பெண்கள் பெரும்பாலும் இரண்டு பிரிவில் இருப்பார்கள்.

கட்டாயத்தின் பேரில் வரும் பெண்கள் கண்களில் நீர் திரையிட நிற்பது ஒரு வகை என்றால் இதில் விருப்பப்பட்டே நடிக்க புன்னகை முகமாக வரும் பெண்கள் இன்னொரு ரகம்.

ஆனால் இந்த தியாவோ முகத்தில் சந்தோஷத்தையும் காட்டவில்லை… அழுகையையும் காட்டவில்லை‌…
எந்த வகைமைக்குள் சிக்காமல் தனித்து நின்ற அவளின் குணம் யாருக்குமே புரியவில்லை‌.

ஆம் அவள் அப்படி தான்…

பார்ப்பவர்களுக்கு அத்தனை எளிதில் புரியாத கோட்டோவியம் அவள்! தீயின் இறக்கைகளை கொண்டு அருவியில் நீந்தும் முரண்பாட்டு முரண் அவள்.

அவளின் குணம் தெரிந்து பதறி விலகிப் போகும் இந்த உலகத்தில், அவள் தீயென தெரிந்தும் அவளை அணைக்க வருவான் ஒருவன்…

காத்திரு தீயே உன்னை பற்றி எரிய வைக்கப் போகும் காற்றிற்காக!!!

நீ தீயென தெரியும் பெண்ணே...!!!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்