Loading

மறுநாள் விடியும் போது தன்னவனின் மார்பில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள் நித்ய யுவனி.

சஜீவ் முதலில் கண் விழித்தவன் நித்ய யுவனியின் முகத்தையே சற்று நேரம் ரசித்துக் கொண்டிருந்து விட்டு அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

நித்ய யுவனி உறக்கத்திலே புன்னகைக்க சஜீவ், “லவ் யூ யுவி…” என்க,

“லவ் யூ டூ சஜு..” எனக் கண் விழித்து புன்னகைத்தபடி கூறினாள் நித்ய யுவனி.

சஜீவ், “ஹேய்… நீ அப்போ தூங்கி இருக்கலயா… சும்மா தான் கண்ண மூடிட்டு இருந்தியா…” என்க,

நித்ய யுவனி, “ஆமா.. நான் அப்போவே எழுந்துட்டேன்… நீ என்ன தான் செய்றாய்னு கண்ண மூடி பார்த்துட்டு இருந்தேன்…” என்றாள்.

“அடிக் கள்ளி…” என அவள் நெற்றியில் முட்டினான் சஜீவ்.

பின் தன் மொபைலை எடுத்துப் பார்க்க பிரபுவிடமிருந்து நிறைய மிஸ்ட் கால்கள் வந்திருந்தன.

சஜீவ் முகம் யோசனையில் சுருங்க, “என்னாச்சு சஜு.. என்ன யோசிக்கிற… ஏதாவது பிரச்சனையா..” என நித்ய யுவனி கேட்க,

“இல்ல யுவி… மொபைல் சைலன்ட்ல இருந்திருக்கு போல… அப்பா கிட்ட இருந்து நிறைய மிஸ்ட் கால் வந்திருக்கு… ஏதாவது பிரச்சினையான்னு தெரியல.. இல்லன்னா அப்பா இத்தனை தடவ கால் பண்ண மாட்டாரு…” என்றான் சஜீவ்.

நித்ய யுவனி, “சரி அப்போ மாமாவுக்கு கால் பண்ணி என்ன விஷயம்னு கேளு… எதுக்கு யோசிச்சிட்டு இருக்க…” என்கவும் பிரபுவிற்கு அழைத்தான் சஜீவ்.

பிரபு அழைப்பை ஏற்று பேசப் பேச சஜீவ்வின் முகம் கோவத்தில் சிவந்தது.

_______________________________________________

“என்ன இவன்… கால் பண்ணினா ஆன்சர் பண்ண மாட்டேங்குறான்… குடுத்த வேலைய ஒழுங்கா பண்ணிட்டானா இல்லையான்னு தெரியலையே….” என சுசித்ரா புலம்பிக் கொண்டிருக்க,

“சுச்சி…” என அழைத்துக் கொண்டு அவளின் அறைக்குள் நுழைந்தார் ஈஷ்வரி.

அவசரமாக முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்ட சுசித்ரா, “வாங்க அத்தை… நேத்து ஏன் ரூம்லயே இருந்தீங்க… என்னாச்சு..” என்க,

ஈஷ்வரி, “அது… கொஞ்சம் தலைவலியா இருந்தது… அதான் கொஞ்சம் நேரத்தோட தூங்கிட்டேன்மா…” என்கவும் சரி எனத் தலையசைத்தாள் சுசித்ரா.

“ஆமா… நீ ஏன் மொபைலும் கையுமா சுத்துற… என்னாச்சு…” என ஈஷ்வரி எதுவும் தெரியாதது போல் கேட்க அதிர்ந்த சுசித்ரா,

“அ..அது.. அத்த… நான்… ஹா.. ஃப்ரெண்டு.. ஃப்ரெண்டொருத்தி கால் பண்ணுறதா சொன்னா.. அதான் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்… நீங்க போங்க அத்த.. நான் வரேன்…” என்றாள் சமாளிப்பாக.

ஈஷ்வரி அறையிலிருந்து வெளியேறவும் மீண்டும் அந்த எண்ணுக்கு சுசித்ரா அழைக்க இப்போது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.

“ச்சே…” என மொபைலைக் கட்டிலில் தூக்கி வீசியவள் எங்கோ செல்லத் தயாராகினாள்.

வெளியே செல்லத் தயாராகி வந்த சுசித்ரா வாசல் கதவைத் திறக்கவும் வெளியே நின்றவர்களைக் கண்டு அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றாள்.

ஏனென்றால் வாசலில் போலிஸ் காவலர்கள் பலர் நிற்க அவர்களுக்கும் முன் சுசித்ராவை ஏளனமாகப் பார்த்தபடி நின்றிருந்தான் சஜீவ்.

சஜீவ், “ஹாய் மை டியர் மாமா பொண்ணே… எங்க போக பார்க்குறீங்க..” எனக் கேலியாக கேட்க,

“அ.. அது… நான்… அப்பாவ பார்த்துட்டு வர போறேன்…” என போலிஸைக் கண்டு வாய் தந்தியடிக்கக் கூறினாள் சுசித்ரா.

சஜீவ், “அவ்வளவு அவசரமா போறியா என்ன… கொஞ்சம் உன் மாமியார் வீட்டுக்கு போய்ட்டு போலாமே…” என்க,

சுசித்ரா, “இ..இல்ல.. எனக்கு ரொம்ப லேட் ஆகிடுச்சு… நான் வரேன்..” என அவசரமாக அனைவரையும் கடந்து செல்லப் பார்க்க பெண் போலீஸ் ஒருவர் சுசித்ராவை செல்ல விடாமல் அவளின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டார்.

சுசித்ரா அவரிடமிருந்து தன் கரத்தை விடுவிக்கப் போராட அவளை நெருங்கிய சஜீவ், “நீ என்னை கஷ்டப்படுத்தின… பொறுத்துக்கிட்டேன்.. என் யுவிய கஷ்டப்படுத்தின.. பொறுத்துக்கிட்டேன்.. ஆனா எப்போ நீ என் யுவியையும் என் குழந்தையையும் அழிக்க முடிவு பண்ணியோ இதுக்கு மேல உன்ன சும்மா விட்டா நான் எல்லாம் மனுஷனே இல்ல…” என்றான் கோவமாக.

தன் திட்டத்தை சஜீவ் தெரிந்து கொண்டுள்ளதை அறிந்த சுசித்ரா அதிர்ந்தவள் பின் சமாளிக்கும் பொருட்டு,

“ச..சர்வா… நான்.. நீ ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்க போல… நான் எதுக்கு அப்படி பண்ணனும்… எனக்கு எதுவும் தெரியாது.. வேணும்னா அத்த கிட்ட கேளு…” என சொல்லும் போதே அங்கு ஈஷ்வரியும் பிரபுவும் வந்தனர்.

சுசித்ரா, “அத்த… இந்த சர்வா என்னென்னவோ சொல்றான் பாருங்க… நான் உங்க கூட தானே இருந்தேன்… நான் நித்யாவ கொல்ல பார்க்குறதா சொல்றான்..” என சோகமாகக் கூற,

ஈஷ்வரி, “நீ இரு சுச்சி.. நான் பேசுறேன்.. எனக்கு தெரியாதா என் மருமகள பத்தி..” என்கவும் சுசித்ரா சஜீவ்வைப் பார்த்து ஏளனமாகப் புன்னகைத்தாள்.

சற்று நேரத்திலே அவள் முகம் போன போக்கைப் பார்த்து சஜீவ் ஏளனமாகச் சிரித்தான்.

ஏனெனில் சுசித்ரா நித்ய யுவனியைக் கொல்லக் கட்டளையிட்டதை ஈஷ்வரி தன் மொபைலில் ரெக்கார்ட் செய்திருந்தார்.

அதுவும் அவர் வீடியோவாக சுச்சி பேசுவதை ரெக்ககார்ட் செய்திருந்ததை போலீஸுக்கு போட்டுக் காட்டினார்.

அதிர்ச்சியில் இருந்த சுசித்ராவின் கன்னத்தில் ஓங்கி அறைந்த ஈஷ்வரி, “என் அண்ணன் பொண்ணுங்குறதால தான் உன் மேல நான் அவ்வளவு பாசமாவும் நம்பிக்கையாவும் இருந்தேன்… என் பசங்கள விட உன் மேல பாசமா இருந்தேன்… சர்வா உன்ன பத்தி சொன்னப்போ கூட நான் நம்பல… நீ பண்றதெல்லாமே என் பையன் மேல இருந்த காதலாலன்னு நெனச்சிட்டு இருந்தேன்… ஆஆன நீ என்னையவே என் பையனுக்கும் என் குடும்பத்துக்கும் எதிரா மாத்தினாய்… இப்போ சொல்றேன் கேட்டுக்கோ… நித்யா தான் என் வீட்டு மருமகள்… அதை யாராலையும் மாத்த முடியாது… இனிமே எனக்கும் என் அண்ணனுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல… என் பாசத்த நீங்க ரெண்டு பேருமே உங்களுக்கு தகுந்த மாதிரி மாத்திக்கிட்டீங்க… அப்படிப்பட்ட உறவே எனக்கு தேவையில்ல… மேடம்… இவள ஜென்மத்துக்கும் வெளியே வர முடியாதபடி பண்ணுங்க… இவ பண்ணின எல்லாத்துக்கும் என் கிட்ட ஆதாரம் இருக்கு…” என்றார் கோவமாக.

சுசித்ரா ஈஷ்வரியை முறைக்க சஜீவ், “யுவிய ஆக்ஸிடன்ட் பண்ண நீ ஒருத்தன ஏற்பாடு பண்ணியே… அவன ஆல்ரெடி போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க… பணத்துக்காக பொய் சொல்லி ஏமாத்தின டாக்டரையும் அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க.. அவரோட லைசன்ஸையும் கேன்சல் பண்ண கோர்ட்ல கேஸ் போட்டிருக்கோம்… போ… இனிமே உன்னால சொத்த எண்ண முடியாது.. கம்பி தான் எண்ணனும்…” என நக்கலாகக் கூறவும் சுசித்ரா,

“ஏய்…” எனக் கத்த அவளை கையில் விலங்கு மாட்டி போலீஸ் இழுத்துச் சென்றனர்.

பின் சஜீவ் ஈஷ்வரியை ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து சென்றான்.

சஜீவ்வின் செயல் ஈஷ்வரியை வெகுவாகப் பாதித்தது.

_______________________________________________

வசந்தி, “இங்க பாரு யுவனி… நீ இப்போ ரெண்டு உயிரா இருக்க… சும்மா தொட்டதுக்கெல்லாம் மாப்பிள்ளை கூட சண்டை போட்டுட்டு பொறந்த வீட்டுக்கு வரதெல்லாம் வெச்சிக்காதே… எல்லாரையும் மதிச்சு நடந்துக்கோ… மாப்பிள்ளை பேச்சை கேளு.. டைமுக்கு சாப்பிடு..” என அறிவுரைகளை வாரி வழங்க,

“ஐயோ போதும்மா… எதுக்கு தேவையில்லாம உன் எனர்ஜிய வேஸ்ட் பண்ற… எப்படியும் நீ சொல்ற எதையும் கேக்க போறதில்ல… அதுவும் இல்லாம நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல… எங்க எப்படி நடந்துக்கனும்னு எனக்கு நல்லாவே தெரியும்… என் சஜுக்கும் என்னை பத்தி நல்லா தெரியும்… நான் என்ன பண்ணினாலும் அவன் எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவான்..” என்றாள் நித்ய யுவனி.

வசந்தி பதிலுக்கு ஏதோ கூற வர அதற்குள் அங்கு வந்த சஜீவ், “யுவி கிளம்பலாமா…” எனக் கேட்க அத்துடன் தாய் மகள் வாக்குவாதம் முடிவுக்கு வந்தது.

பின் பெற்றோர் வழி அனுப்ப முழு மனதுடன் தன்னவனுடன் தன் புகுந்த வீட்டுக்கு கிளம்பினாள் நித்ய யுவனி.

காரில் இருவரும் பயணிக்கும் போது நித்ய யுவனி, “ஏன் சஜு சடன்னா வீட்டுக்கு போலாம்னு சொன்ன… எங்க வீட்டுல இன்னும் டூ டேய்ஸ் இருந்து இருக்கலாம்ல…” என்க,

சஜீவ், “இதுக்கு மேல உன்ன பிரிஞ்சி இருக்க முடியாது யுவி… எனக்கு ஆபீஸ்ல கொஞ்சம் வர்க் இருக்கு… அதனால உன் வீட்டுல வந்து இருக்கவும் முடியாது… அதனால தான் எங்க வீட்டுக்கே போலாம்னு சொன்னேன்… ஜீவியும் வந்திருக்கா…” என்றான் சஜீவ்.

நித்ய யுவனி பதிலுக்கு ஒரு தலையசைப்பை மட்டும் வழங்க அதன் பின் அப் பயணம் அமைதியாகக் கழிந்தது.

இருவரும் வீட்டை அடைந்ததும் வாசலில் வைத்து ஜீவிகா இருவருக்கும் ஆரத்தி எடுக்கப் பார்க்க அதற்குள் அவளிடமிருந்து ஆரத்தி தட்டை வாங்கை ஈஷ்வரி தானே தன் மகனுக்கும் மருமகளுக்கும் ஆரத்தி எடுத்தார்.

ஈஷ்வரியின் செயலில் நித்ய யுவனி அதிர்ந்தவள் சஜீவ்விடம், “சஜு… உங்க அம்மாவுக்கு யாராவது வசியம் வெச்சிட்டாங்களோ… இவங்களுக்கு தான் என்னைய கண்டாலே ஆகாதே… இப்போ இவங்களே நமக்கு ஆரத்தி எடுக்குறாங்க… சரின்னா இந் நேரம் உன் மாமன் பொண்ணு வந்து ஒரு ஆட்டத்தை போட்டிருக்கனுமே…” முணுமுணுத்தாள்.

“ஷ்ஷ்ஷ்… அமைதியா இரு யுவி… அம்மாவே நமக்கு ஆரத்தி எடுக்குறாங்க… நல்ல விஷயம் தானே…” என நித்ய யுவனியின் வாயை அடைத்தான் சஜீவ்.

நித்ய யுவனி உதட்டை சுழித்து விட்டு அமைதியாக ஈஷ்வரி ஆரத்தி எடுத்து முடித்ததுமே இருவரும் உள் நுழைந்தனர்.

ஜீவிகா, “அண்ணி… நீங்க வந்தது எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு… எங்க நீங்க திரும்ப அண்ணன் கூட கோவத்துல வீட்டுக்கு வர மாட்டிங்களோன்னு நெனச்சேன்…” என்க,

“அது எப்படி ஜீவி நான் வராம இருப்பேன்.. இது தானே என் வீடு… நான் தானே இந்த வீட்டு மருமகள்… இல்லையா மாமியாரே…” என ஜீவிகாவிடம் ஆரம்பித்து ஈஷ்வரியிடம் முடித்தாள் நித்ய யுவனி.

நித்ய யுவனியிடம் ஈஷ்வரி வரவும் தன்னை ஏதோ கூறப் போகிறார் என நித்ய யுவனி எதிர்ப்பார்க்க அவரோ நித்ய யுவனியின் கைகளைப் பிடித்துக் கொண்டு,

“என்ன மன்னிச்சிடு நித்யாம்மா… சுசித்ரா கூட சேர்ந்து நான் பெரிய பாவம் பண்ணிட்டேன்… அவ மேல உள்ள பாசத்துல அவ பண்ற எல்லாத்துக்கும் துணையா இருந்தேன்… நீ எங்க வாரிச சுமக்குறது கூட தெரியாம உன்ன கஷ்டப்படுத்திட்டேன்மா…” என அழுதார்.

அவரிடமிருந்து தன் கரங்களை விடுவித்துக் கொண்ட நித்ய யுவனி, “அப்போ நான் உங்க வீட்டு வாரிச சுமக்கிறதுனால தான் நீங்க என்னை உங்க மருமகளா ஏத்துக்கிட்டு இருக்கீங்க… ஒருவேளை எனக்கு ஏதாவது பிரச்சினை இருந்து என்னால ஒரு குழந்தைக்கு தாயாக முடியலன்னா நீங்க என்னை ஏத்துட்டு இருக்க மாட்டீங்க… அப்படி தானே…” என்க,

ஈஷ்வரி, “ஐயோ.. அப்படி இல்லமா… நீ சர்வா கூட சேர்ந்து வாழ மாட்ட… அவன் வெறுக்குறாய்னு சுச்சி சொன்னத நம்பி தான்மா நான் அப்படி எல்லாம் பண்ணேன்… நீ சர்வா கூட சந்தோஷமா வாழுறது தெரிஞ்சி இருந்தா நிச்சயமா நான் உன்ன வீட்ட விட்டு துரத்த ட்ரை பண்ணி இருக்க மாட்டேன்மா… தயவு செஞ்சு என்னைய மன்னிச்சிருமா…” என்றார் கண்ணீருடன்.

நித்ய யுவனி, “என்னை மன்னிச்சிருங்க அத்த… நீங்க என்ன காரணம் சொன்னாலும் என்னால நீங்க செஞ்ச எதையும் ஏத்துக்க முடியாது… நீங்க பண்ணின தப்பால தான் நானும் சர்வேஷும் இத்தனை வருஷம் பிரிஞ்சி இருந்தோம்… அப்படி என்ன அந்த சுசித்ரா மேல பாசம்… சொந்த பையனையே நம்பாத அளவு…” என்க,

“இல்ல நித்யா… நான்…” என ஈஷ்வரி ஏதோ கூற வரவும் அவரை நிறுத்திய நித்ய யுவனி,

“வேணாம் அத்த… விடுங்க… என்னால அவ்வளவு சீக்கிரம் எதையும் மறக்க முடியல… எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க…” என்று விட்டு தன் அறைக்குச் சென்றாள்.

ஈஷ்வரி சஜீவ்விடம் பேச முயல அவனும் அவரைக் கண்டு கொள்ளாமல் நித்ய யுவனியைப் பின் தொடர்ந்து சென்றான்.

ஜீவிகா, “பார்த்தீங்களாம்மா நீங்க எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கீங்கன்னு… நீங்க பண்ணினதுக்கு உங்க கிட்ட ஆயிரம் காரணம் இருக்கலாம்… ஆனா அதனால அண்ணனும் அண்ணியும் தான் வலிய அனுபவிச்சிருக்காங்க… கடைசியில உங்களுக்கு என்ன கெடச்சது… அண்ணா கூட உங்களோட பேச பிடிக்காம போய்ட்டான்..” என்று விட்டு சென்றாள்.

பிள்ளைகள் இருவருமே சென்றதும், “என்னங்க… என் பசங்களே என்னை வெறுத்துட்டாங்கங்க.. என் கூட பேசவே அவங்களுக்கு இஷ்டம் இல்ல.. நித்யா என்னை மன்னிக்கவே மாட்டாளாங்க..” என அழுகையுடன் பிரபுவிடம் கேட்டார்.

அவரைப் பக்கவாட்டில் அணைத்துக் கொண்ட பிரபு, “விடு ஈஷ்வரி… சின்ன பசங்க… வாழ வேண்டிய வயசுலயே ரொம்ப கஷ்டத்த அனுபவிச்சிட்டாங்க… அந்த கோவம் தான்… நம்ம மருமகள் தங்கமான பொண்ணு… அவளால யாரையும் வெறுக்க முடியாது… தனக்கு கெடுதல் பண்ணினவங்களுக்கு கூட நல்லது தான் நெனப்பா… சீக்கிரமே உன்ன மன்னிச்சி ஏத்துக்குவா… அதுக்கப்புறம் பாரு.. இந்த வீட்டுல மாமியாரையும் மருமகளையும் யாராலையும் பிரிக்க முடியாது…” எனக் கேலி போல் கூறி மனைவியை சமாதானப்படுத்தினார்.

❤️❤️❤️❤️❤️

சாரி மக்களே..‌. ரிலேட்டிவ் வீட்டுக்கு வந்திருக்கேன்… அதான் ஒழுங்கா யூடி தர முடியல… சின்ன யூடி தான்… சீக்கிரமா அடுத்த யூடிய தர ட்ரை பண்றேன்… நன்றி..

– Nuha Maryam – 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Archana

      😍😍😍 ரைம்மிங் எல்லாம் சஜூ தயவால டைம்மிங்க்கு வருதே. ஈஷ்வரி ஆன்டி இன்னும் கொஞ்ச நாள் அவங்க முன்ன நிக்கிதீங்க ஒன்னா ரெண்டா ஐஞ்சு வருஷ பிரிவு 😬😬😬.