இத்தனை நாள் தன் மனதில் புதைத்து வைத்திருந்த மொத்தப் பாரத்தையும் சஜீவ் தன்னவளிடம் இறக்கி வைத்து விட்டு நித்ய யுவனியின் மடியில் முகம் புதைத்து அழ,
அவனை சற்று நேரம் அவனை அழ விட்ட நித்ய யுவனி சஜீவ்வின் தலையை நிமிர்த்தி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
சஜீவ் அதிர்ந்து விளிக்கும் போதே மறு கன்னத்தில் மீண்டும் ஒரு அறை.
கன்னத்தில் கை வைத்த சஜீவ், “ஒரு பேச்சுக்கு அடிக்க சொன்னா என்னடி இப்படி பட்டுன்னு அடிச்சிட்ட…” என்க,
மீண்டும் மீண்டும் சஜீவ்வின் கன்னங்களில் மாறி மாறி அறைந்தாள் நித்ய யுவனி.
இரண்டு கன்னங்களிலும் கை வைத்தவாறு சஜீவ் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நித்ய யுவனியைப் பார்க்க,
கண்களில் கண்ணீர் வடிய அவனை முறைத்தாள் நித்ய யுவனி.
நித்ய யுவனியின் கண்களைத் துடைத்து விட்ட சஜீவ், “யுவி…” என்க,
அவன் கழுத்தைச் சுற்றி கைகளைப் போட்டு அணைத்துக் கொண்டு அழுதாள் நித்ய யுவனி.
சஜீவ் அவள் முதுகை ஆறுதலாக நீவி விட அவனை விட்டு விலகிய நித்ய யுவனி,
“உனக்கு இதெல்லாம் புரிஞ்சிக்கவே இவ்வளவு நாள் போச்சாடா… லூசு.. லூசு… நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா… நாம இவ்வளவு லவ் பண்ணியும் இவன் கொஞ்சம் கூட நம்ம மனச புரிஞ்சிக்கலயேன்னு ரொம்ப கஷ்டமா இருந்தது… இப்போ ஈஸியா வந்து சொல்றேல்ல உன்ன தான் ஃபர்ஸ்ட்ல இருந்தே லவ் பண்றேன்னு… இதை முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல… இவர் பெரிய தியாகப் பேர்வழி… ஒவ்வொருத்தருக்காக காதல தியாகம் பண்றாராம்… இப்போ மட்டும் எதுக்கு வந்த… ஏதாவது தியாகம்னு சொல்லிட்டு போய்டு…” எனக் கோவமாகக் கூறி விட்டு எழுந்து கட்டிலில் சென்று அமர்ந்தாள்.
அவளின் அருகில் வந்தமர்ந்த சஜீவ், “அதான் நீயே சொல்லிட்டியே யுவி உன் புருஷன் லூசுன்னு…” என்க,
“அதுக்காக… கொஞ்சம் கூடவா சுய புத்தி கிடையாது… எவன் எது சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா…” என ஆற்றாமையில் கேட்டாள் நித்ய யுவனி.
அவள் கேள்விக்கு பதிலளிக்காது சற்று நேரம் அமைதி காத்த சஜீவ்,
“தப்பு தான் யுவி… ரொம்ப பெரிய தப்பு… இது என் குடும்பம்… எல்லாரும் நம்ம மேல உண்மையான அன்போடும் அக்கறையோடும் இருப்பாங்கன்னு நம்பிட்டு இருந்தேன்… ஆனா அது பொய்னு எங்க அம்மா ப்ரூவ் பண்ணிட்டாங்க… என் பாசத்தை அவங்க தனக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கிட்டாங்க… பட் உன் காதல ஒரு தடவ கூட நான் சந்தேகப்பட்டதில்ல யுவி… அந்த ரிப்போர்ட் கூட சுசித்ராவோட ஏற்பாடுன்னு தான் ஆரம்பத்துல நெனச்சேன்… ஆனா எங்க ஃபேமிலி டாக்டர் இவ்வளவு பெரிய பொய்ய சொல்லுவாருன்னு எதிர்ப்பார்க்கல யுவி… நீ வீருக்கு சொன்னதெல்லாம் எங்க என் விஷயத்துல உனக்கு நடந்துடுமோங்குற பயத்துல தான் உன்ன விட்டு தள்ளி இருக்க முடிவு பண்ணேன்…” என்க,
“பேசாம போய்டு சர்வேஷ்… கொலை காண்டுல இருக்கேன்… ஏதாவது சொல்லிட போறேன்…” என்றாள் நித்ய யுவனி.
சஜீவ், ”இன்னும் என்ன டி…. அதான் நல்லா நாழு அறை விட்டியே… ரெண்டு காதும் பஞ்சர் ஆகிடுச்சு… இப்பவாவது உன் புருஷன் மேல கொஞ்சம் கருணை காட்டுமா…” என்கவும்,
நித்ய யுவனி, “முடியாது போடா… என்னை எவ்வளவு ஹர்ட் பண்ணி இருப்ப… நீ ஈஸியா வந்து சாரி கேட்ப… நாங்க உடனே இவர மன்னிச்சி விட்டுரனும்… நான் இன்னும் உன் மேல கோவமா தான் இருக்கேன்…” என முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
சஜீவ் கட்டிலில் இருந்து எழுந்து நித்ய யுவனியின் முன் இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டபடி, “பொண்டாட்டி… சாரி டி… என் யுவில்ல… உன் சஜுவ மன்னிச்சிடுடா… இனிமே இப்படி பண்ண மாட்டேன்… பண்றது என்ன நெனக்க கூட மாட்டேன்… சாரி செல்லம்… ப்ளீஸ் டா…” என நித்ய யுவனியை சமாதானப்படுத்த கெஞ்ச,
நித்ய யுவனியோ சஜீவ்வை முறைத்தபடி எழுந்து நின்றவள், “எழுந்திரு…” என்றாள் அழுத்தமாக.
சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு சஜீவ் எழுந்து கொள்ள அவனை முறைத்தபடியே நெருங்கினாள் நித்ய யுவனி.
சஜீவ் அவசரமாக கைகளால் தன் கன்னங்களை மூடிக் கொள்ள அவன் கையை விலக்கினாள் நித்ய யுவனி.
மீண்டும் நித்ய யுவனி கோவத்தில் அறையப் போகிறாள் எனப் பயந்து சஜீவ் கண்களை இறுக்கி மூடிக் கொள்ள அவனது வலது கன்னத்தில் திடீரென மெதுவாக ஒத்தடம் கொடுத்தது போல் உணர்ந்தான்.
அதிர்ச்சியில் சஜீவ் கண்களைத் திறக்க அவன் மறு கன்னத்திலும் தன் இதழ் பதித்தாள் நித்ய யுவனி.
சஜீவ் இன்னும் அதிர்ச்சி குறையாமல் நித்ய யுவனியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க அவன் முகத்தை தன் கைகளில் ஏந்திய நித்ய யுவனி, “ரொம்ப வலிச்சதா… சாரி…” என்றாள் கண்களை சுருக்கியபடி.
அவசரமாக மறுப்பாகத் தலையசைத்த சஜீவ், “நீ இப்படி கிஸ் பண்ணிட்டு இருப்பன்னா இன்னும் எத்தனை அடி வேணாலும் வாங்க ரெடியா இருக்கேன்…” என்றான் விஷமப் புன்னகையுடன்.
“அடிங்….” எனக் கீழுதட்டைப் பற்களால் கடித்தபடி அடிக்கப் போவது போல் கையை ஓங்கிய நித்ய யுவனி சஜீவ் இன்னும் அதே புன்னகையுடன் இருப்பதைக் கண்டதும் தான் அறைந்த கன்னம் இரண்டுக்கும் மாறி மாறி முத்தத்தை வாரி வழங்கினாள்.
பின் இத்தனை வருட பிரிவையும் போக்க நித்ய யுவனி தன்னவனை இறுக்கி அணைத்துக் கொள்ள சற்று நேரம் பதிலுக்கு அவளை அணைத்துக் கொண்ட சஜீவ் நித்ய யுவனியின் நிலை நினைவு வந்ததும் அவளை தன் கரங்களில் ஏந்திச் சென்று கட்டிலில் கிடத்தினான்.
சஜீவ்வும் அவளின் அருகே படுத்துக் கொள்ள தன்னவனின் மார்பில் தலை வைத்து அணைத்துக் கொண்டாள் நித்ய யுவனி.
அவளின் லேசாக மேடிட்ட வயிற்றில் சஜீவ் தன் கரங்களை நடுக்கத்துடன் பதிக்க இருவருக்குமே உடல் சிலிர்த்தது.
உடலுக்குள் ஏதோ புதிய இரத்தத்தைப் பாய்ச்சுவது போல் இருந்தது.
இருவரின் கண்களும் அவ் உணர்வில் கலங்க நித்ய யுவனியின் வயிற்றில் கை வைத்து மெதுவாகத் தடவியபடி, “ஏன் என் கிட்ட சொல்லல…” என்றான் சஜீவ்.
சஜீவ்வின் கரத்தின் மீது தன் கரத்தை வைத்த நித்ய யுவனி, “நான் சொல்லி இருந்தா நீ உடனே என்னைத் தேடி வந்திருப்ப..” என்க,
சஜீவ், “நான் வருவேன்னு தெரிஞ்சும் ஏன் யுவி சொல்லல… அவ்வளவு வெறுப்பு இருந்ததா என் மேல…” எனக் கேட்டான் கவலையாக.
“நான் எப்படிடா உன்ன வெறுப்பேன்… எல்லோருக்கிட்டையும் உன்ன வெறுக்குறேன் வெறுக்குறேன்னு வாய் வார்த்தைக்கு தான் சொல்லுவேன்.. ஆனா ஒவ்வொரு நிமிஷமும் உன்ன தான் நெனச்சிட்டு இருப்பேன்… என் மூளை நீ என்ன ஏமாத்திட்டதா சொன்னாலும் என் மனசால அதை ஏத்துக்க முடியல.. என் மனச யாருக்கும் வெளிக்காட்டாம இருக்க தான் போலியா ஒரு இறுக்கமான முகமூடியோட சுத்திட்டு இருந்தேன்… நீ என் பக்கத்துல வரும் போது நான் ரொம்ப பலவீனம் ஆகிடுறேன்… அதை மறைக்க தான் உன்ன கோவத்துல திட்டுவேன்… உன்ன ஹர்ட் பண்றேன்னு தெரியும்… பட் என்னையும் மீறி வார்த்தைய விட்டுடுவேன்…” என்று நிறுத்திய நித்ய யுவனி சிறிய அமைதிக்குப் பின்,
“பட் நான் அப்படி சொல்லி இருந்தா நீ வந்திருப்ப தான்… ஆனா நீயா புரிஞ்சிக்கிட்டு வரனும்னு நான் எதிர்ப்பார்த்தேன்… ஆல்ரெடி அந்த சுசித்ராவால நீ ரொம்ப கொழம்பி போய் இருக்க… அதை இன்னும் அதிகப்படுத்த வேணாம்னு நெனச்சேன்…. அந்த ரிப்போர்ட்ட எப்பவாவது நீ பார்த்திடுவன்னு தான் அங்கயே விட்டுட்டு வந்தேன்… இப்போ நீயே எல்லாத்தையும் புரிஞ்சிக்கிட்டு வந்து சொன்னியே… அது தான் எனக்கு தேவைப்பட்டுச்சு… பட் நீ அதுக்காக நாழு மாசம் எடுத்துட்ட…” என்றாள்.
சஜீவ், “சாரி யுவி… என்னால நீ ரொம்ப கஷ்டப்பட்டுட்ட… பட் இனி அப்படி எதுவும் நடக்க விட மாட்டேன்… லவ் யூ சோ மச்…” எனக் கண்கள் கலங்கக் கூறினான்.
நித்ய யுவனி, “அதான் நீ புரிஞ்சிக்கிட்டேல்ல… எனக்கு அது போதும்… சோ இனிமே நோ அழுகாச்சி…” எனப் புன்னகையுடன் கூறி விட்டு சஜீவ்வின் கண்ணீரைத் துடைத்து விட்டாள்.
சஜீவ், “சரி யுவி.. இப்பவாவது ஒழுங்கா என்ன நடந்ததுன்னு சொல்லு… சுசித்ரா காட்டின ரிப்போர்ட் நிஜம்… பட் எனக்கு தெரிஞ்சி நான் எந்த ட்ரீட்மெண்ட்டும் எடுத்துக்கல… அப்புறம் எப்படி எனக்கு கியுர் ஆகிச்சு..” எனத் தன் தலையை அரித்துக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்டான்.
சஜீவ் அவ்வாறு கேட்டதும் அவசரமாக எழுந்து அமர்ந்த நித்ய யுவனி,
“நல்ல நேரம் ஞாபகப்படுத்தின… நான் என்ன செத்தா போய்ட்டேன்… எதுக்குடா அவ்வளவு குடிச்சி தள்ளின… ஏன்டா… ஏன்…” எனக் கேட்டுக் கொண்டே சஜீவ்வின் தலையில் தொடர்ந்து குட்டினாள்.
“ஆஹ்… போதும்… விடுடி.. வலிக்கிது… உன்ன மறக்க முடியாம உன்ன பிரிஞ்சி இருக்குற சோகத்துல குடிச்சேன்…” என சஜீவ் கூறவும்,
“ஓஹ்… உங்களுக்கு கவலை வந்தா அதை மறக்க குடிப்பீங்க… அப்போ அதே போல நானும் பண்ணி இருந்தா எப்படி இருக்கும்…” எனக் கேட்டாள் நித்ய யுவனி.
சஜீவ், “அதெப்படி முடியும்… நீ பொண்ணு…” எனப் பட்டெனக் கூறவும் அவனை முறைத்த நித்ய யுவனி,
“ஏன்… பொண்ணுங்களுக்கு எல்லாம் பிரேக்கப் ஆனா ஃபீலிங் இருக்காதா… பசங்களுக்கு மட்டும் தான் ஃபீல் ஆகுமா… இனிமே பாரு… எனக்கு ஏதாவது மனசு கஷ்டமா இருந்தா நானும் குடிக்கிறேன்… அப்போ தானே எனக்கும் எல்லாத்தையும் மறந்துட்டு இருக்க முடியும்…” என்றாள்.
தலைக்கு மேல் கையை உயர்த்தி கும்பிட்ட சஜீவ், “அம்மா தாயே… ஏதோ ஒரு கவலைல தெரியாம குடிச்சி பழகிட்டேன்…. உன்ன பார்த்ததுக்கு அப்புறம் சத்தியமா குடிக்கிறத்த விட்டுட்டேன் டி… அன்னைக்கு நீ பேசினது ரொம்ப ஹர்ட் ஆகிடுச்சு… அதனால தான் ஹரி அவ்வளவு தடுத்தும் குடிச்சேன்… இனிமே அந்த பக்கமே போக மாட்டேன்மா… தயவு செஞ்சி உன் புருஷன மன்னிச்சு விட்டுரு…” எனக் கெஞ்சினான்.
கோவமாக உதட்டை சுழித்த நித்ய யுவனி, “நீ கண்ட கருமத்தையும் குடிச்சி தொலைச்ச… நீ இப்படி பண்ணிட்டு இருக்குறது தெரிஞ்சதுமே எனக்கு டவுட்டா இருந்தது… அதான் உனக்கே தெரியாம உன்ன டெஸ்ட் பண்ணேன்… நான் நெனச்ச மாதிரியே தான் நடந்து இருந்தது… உன் கிட்ட சொன்னா நீ ஃபீல் பண்ணுவன்னு தான் சொல்லாம மறச்சேன்… பட் ஒவ்வொரு நாளும் நைட்டுக்கு உனக்கு பால்ல டேப்ளட்ஸ் கலந்து தருவேன்..” என்றாள்.
“அடப்பாவி… நான் கூட யோசிச்சேன் என்னடா இவளே வந்து நமக்கு டெய்லி ஏதாவது ரீஸன் சொல்லி பால் க்ளாஸ் ஒன்னு தரா… ஒரு வேளை நம்ம மேல கோவம் போயிடுச்சோன்னு… டேஸ்ட் கூட வித்தியாசமா தான் இருந்தது… பொண்டாட்டி கையால விஷம் தந்தாலும் குடிக்க ரெடியா இருந்தேன் நான்… சோ அதை பெரிசா கண்டுக்கல…” என சஜீவ் கூறவும்,
நித்ய யுவனி, “ஆமா… நீ பண்ண வேலைக்கு எல்லாம் சாப்பாட்டுல விஷத்த கலந்து தான் தந்து இருக்கணும்… நானா இருக்க போய் தப்பிச்சிட்ட…” என்கவும் அதிர்ந்தான் சஜீவ்.
சஜீவ், “எல்லாம் ஓக்கே… நீ என் மேல கோவமா தானே இருந்த… அப்புறம் எப்படி என்ன மன்னிச்ச… என் கிஃப்ட கூட எதுவுமே சொல்லாம வாங்கிக்கிட்ட..” என்க,
பெருமூச்சு விட்ட நித்ய யுவனி, “இன்னும் எத்தனை கேள்விடா கேட்ப… முடியல..” என்க,
“ப்ளீஸ் யுவி… வேறெதும் கேக்க மாட்டேன்… நீ சொல்லலன்னா இது எப்பவும் என் மண்டைய அரிச்சிட்டே இருக்கும்… சொல்லு டி ப்ளீஸ்..” எனக் கெஞ்சினான் சஜீவ்.
நித்ய யுவனி, “அப்போவே சொன்னேன் தானே… எனக்கு உன் மேல வெறுப்பு இல்ல… அவ்வளவு காதலிச்சும் நீ என்னைப் புரிஞ்சிக்காம போய்ட்டியேன்னு ஒரு ஆதங்கம் தான்… என்னை அறியாமல் உன்ன ஹர்ட் பண்ணி விடுவேங்குற பயத்துல தான் நீ என் பின்னாடி சுத்தி சுத்தி வர நான் விலகி விலகி போனேன்… என் பர்மிஷன் இல்லாம திடீர்னு தாலிய கட்டவும் முதல்ல எனக்கு தோணின விஷயம் எப்படி அப்பா அம்மா முகத்துல முழிப்பேன்னு தான்… அந்த கோவத்தை தான் உன் கிட்ட காட்டிட்டு இருந்தேன்… ஆல்ரெடி அவங்கள நிறைய ஹர்ட் பண்ணிட்டேன்… இப்போ இது தெரிஞ்சா தாங்க மாட்டாங்கன்னு நினைக்கும் போதெல்லாம் உன் மேல செம்ம கோவம் வரும்… அதான் உன்ன திட்டிட்டே இருப்பேன்… பட் அப்பா அம்மா என்ன புரிஞ்சிக்கிட்டாங்கன்னு ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் உன் வீட்டுல போய் எப்படி வாழ போறேன்னு தான் ஒரே யோசனையா இருந்தது… சும்மாவே உங்க அம்மாவுக்கு என்னை ஆகாது… நீ அவங்களை மீறி என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது தெரிஞ்சா நிச்சயம் என்னை இன்னும் வெறுப்பாங்கன்னு தெரியும்… அதனால தான் அங்க வர முடியாதுன்னு சொன்னேன்… பட் உங்க அம்மாவ பார்த்ததும் கொஞ்சம் சீண்டி பார்க்க தோணிச்சு… கொஞ்சம் கோவமும் இருந்தது… இல்லன்னு பொய் சொல்ல மாட்டேன்… ஜீவியும் மாமாவும் என் கூட பாசமா இருந்தாலும் என் விஷயத்துல அவங்க கூட எனக்காக பேசலயேன்னு வருத்தம்… அதனால தான் என்னால அவங்க கூட ஈஸியா கனக்ட் ஆக முடியல…
எல்லாருமே சொன்னாங்க உனக்கு ஒரு சான்ஸ் கொடுக்க சொல்லி… நான் முடியாதுன்னு வீம்பா இருந்தேன்… அன்னைக்கு நைட் நீ குடிச்சிட்டு உளரினது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது… ஜெனி கிட்ட சொல்லி அழுதேன்… அவளும் எனக்கு நிறைய விஷயம் புரிய வெச்சா… நான் மட்டுமில்ல நீயும் இதுல நிறைய பாதிக்கப்பட்டிருக்கன்னு அப்போ தான் புரிஞ்சது… அப்புறம் உனக்கே தெரியாம உன்ன கவனிச்சிட்டே இருப்பேன்… சைட் அடிச்சேன்னு கூட சொல்லலாம்… நான் எவ்வளவு கோவப்பட்டாலும் நீ என் மேல காட்டின காதலும் அக்கறையும் கொஞ்சம் கூட உனக்கு குறையல… எனக்காக எல்லாரையும் எதிர்க்க கூட ரெடியா இருந்த… எனக்கு ரொம்ப ஹேப்பியா இருந்தது… உன்னோட ஒவ்வொரு செயல்லையும் நான் உன் பக்கம் விழுந்தேன்… அந்த கிஃப்ட் எனக்கு ரொம்ப ப்ரிஷியஸ் தெரியுமா… அந்த ஃபோட்டோ நாம் ஃபர்ஸ்ட் டைம் வெளிய போனப்போ சேர்ந்து எடுத்தது… மறக்க முடியாத மெமரி…
நீ கவிய கொஞ்சும் போதும் அவ கூட விளையாடும் போதெல்லாம் உனக்குன்னு ஒரு குழந்தை வந்தா நீ எப்படி எல்லாம் பார்த்துப்பன்னு கற்பனை பண்ணேன்…. பீச்ல வெச்சி நடந்த எல்லா உண்மையையும் நீ சொன்னதும் சத்தியமா என்னால தாங்கிக்க முடியல… எவ்வளவு பெரிய துரோகம்… யாரோ ஒருத்தரால நாம ரெண்டு பேரும் எவ்வளவு கஷ்டப்பட்டோம்…. அதை எல்லாம் நெனக்கும் போது அப்படி ஒரு வலி… அதனால தான் அன்னைக்கு டல்லாவே இருந்தேன்… உன் கூட தனியா மனசு விட்டு பேசனும்னு நெனச்சேன்… பட் கவிய கூட வெச்சிட்டு முடியாதே… அதான் அப்பாக்கு கால் பண்ணி அவள கூட்டிட்டு போக சொன்னேன்… அதுக்கப்புறம் நீ மழைல நனைஞ்சி ஃபீவர் வந்து ஏதேதோ ஆகி போச்சு… நீ சுயநினைவு இல்லாம நடந்தது எனக்கு கஷ்டமா இருந்தது… என்ன பண்ணனும்னு புரியவே இல்ல… உனக்கு ஃபீவர் குறையும் வரை உன் பக்கத்துலயே இருந்தேன்… விடிஞ்சதும் மாமா கிட்ட சொல்லிட்டு ஹாஸ்பிடல் கிளம்பினேன்… அங்க போயும் உன் கிட்ட எப்படி பேசுறது என்ன பண்றதுன்னு தான் யோசிச்சிட்டு இருந்தேன்… என்ன நடந்தாலும் பரவாயில்லைன்னு உன் கிட்ட சொல்ல முடிவெடுத்தேன்…
ஜீவி, ராஜு, மாமா எல்லாரையும் தேவை இல்லாம ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்… எல்லாத்தையும் மறந்துட்டு இனிமே உன் கூட வாழ போற லைஃப் சந்தோஷமா இருக்கனும்னு நெனச்சேன்… பட் நைட் நீ வீட்டுக்கு வரவே இல்ல… மார்னிங்கும் என்னைக் கண்டுக்காம போய்ட்ட… சரி நீ ஆபீஸ் போய்ட்டு வந்ததுக்கு அப்புறம் பேசிக்கலாம்னு விட்டுட்டேன்… ஆனா நீ தான் என்னை அவாய்ட் பண்ணினியே… உனக்கு ஆஃபீஸ்ல ஏதாவது வர்க் இருக்கும்னு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன்… அன்னைக்கு ரொம்ப டயர்டா இருந்தது… எந்த வேலையுமே செய்ய முடியல… தலைசுத்து, வாமிட்னு முடியல… லேசா டவுட்டா இருந்தது… அப்போ தான் நாள் தள்ளி போய் இருக்குறத கவனிச்சேன்… சரினு உடனே டெஸ்ட் பண்ணி பார்த்தேன்… பாசிடிவ்வா இருந்தது… ஒரு பக்கம் என் சஜுவோட குழந்தைய சுமக்குறோம்னு சந்தோஷம்… இன்னொரு பக்கம் உனக்கு இன்னுமே நடந்தது எதுவுமே தெரியாது… நீ எப்படி இதை ஏத்துப்பேங்குற குழப்பம்… அதனால தான் எப்படியாவது உன் கிட்ட பேசனும்னு வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்… பட் நீ தான் வந்ததும் என்னை வீட்ட விட்டு போக சொல்லிட்டியே… உலகமே ஒரு நிமிஷம் இருண்டது போல இருந்தது… பட் நீ ஒரு தடவ கூட என் கண்ண பார்த்து பேசல… நீ ரீசன் சொல்லும் போதே புரிஞ்சது நீ சொல்றது பொய்னு… இன்னுமா இப்படி இருக்குறான்னு கோவம் வந்தது… பட் உன்ன எதிர்த்து பேச தெம்பு இருக்கல அப்போ… நான் ஏதாவது சொல்லி உன்ன இன்னும் கொழப்ப வேணாம்னு நெனச்சி தான் அமைதியா இருந்தேன்… நீ எனக்காக யோசிச்சு தான் இதெல்லாம் பண்றன்னு என்னால புரிஞ்சிக்க முடிஞ்சது… நீயே எல்லாம் புரிஞ்சிக்கிட்டு என்னைத் தேடி வரனும்னு தான் உடனே கிளம்பி எங்க வீட்டுக்கு வந்தேன்…
யாருக்கிட்டையுமே நான் ப்ரெக்னன்ட்டா இருக்குற விஷயத்த சொல்லல… அடுத்த நாளே ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வந்து பேசினாங்க… நான் தான் அவங்க கிட்ட என்னை பத்தி எந்த டீட்டைல்ஸும் உனக்கு கொடுக்க வேணாம்னு சத்தியம் வாங்கினேன்… உனக்கு வேணும்னா நீயே தேடி வரட்டும்னு சொன்னேன்… பட் அப்போ அவங்களுக்கு கூட நான் ப்ரெக்னன்ட்டா இருக்குறேன்னு தெரியாது… கொஞ்ச நாள் போனதும் நான் அடிக்கடி வாமிட் எடுக்குறதும் டயர்டு தூங்குறதையும் வெச்சி அம்மாவுக்கு சந்தேகம் வந்து கேட்டாங்க… அதுக்கு மேல எதையும் அம்மா கிட்ட மறைக்க தோணல… சோ உண்மைய சொன்னேன்… எதுவுமே சொல்லாம போய்ட்டாங்க… அப்பா வந்ததுக்கு அப்புறம் பெரிய பிரச்சினை பண்ணிட்டாங்க… உனக்கு கால் பண்ணி சொல்ல பார்த்தாங்க… என்னை உடனே கொண்டு போய் உன் வீட்டுல விட்டுட்டு வர சொல்லி அப்பாக்கு வேற திட்டு… நான் முடியாதுன்னு எவ்வளவு மறுத்தும் அவங்க கேக்கவே இல்ல… திரும்ப என்னை உன் வீட்டுக்கு போக சொன்னா நிச்சயம் யாருக்கிட்டையும் சொல்லாம எங்கயாவது கிளம்பி போய்டுவேன்னு ப்ளேக்மெய்ல் பண்ணதும் அமைதியாகிட்டாங்க… அவங்களுக்கு தெரியும் நான் சொன்னா செய்வேன்னு… சோ உன் கிட்ட சொல்ல ட்ரை பண்ணல… பட் ஜெனி கிட்ட சொல்லிட்டாங்க…. அவள் நம்ம ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லி திரும்ப எல்லாரும் எங்க வீட்டுல ஆஜர் ஆகிட்டாங்க… எப்படியோ அது இது சொல்லி அவங்க வாயையும் அடைச்சேன்… இன்னைக்கு கல்யாணத்துல நீ என்னைத் தேடுறத நானும் பார்த்துட்டு தான் இருந்தேன்… உன் பக்கத்துல தான் இருந்தேன்… பட் உனக்கு தான் தெரியல…” என்றாள்.
சஜீவ் பதிலேதும் கூறாமல் தன்னவளை அணைத்துக் கொண்டான்.
❤️❤️❤️❤️❤️
மக்களே!!! உங்க எல்லாருக்கும் முதல்ல பெரிய சாரி சொல்லிக்குறேன்… வெக்ஸின் போட்டதால 5 டேய்ஸா ஃபீவர்… அதான் யூடி தர முடியல.. இனிமே டெய்லி ஒழுங்கா யூடி வரும்… காத்திருக்க வைத்தமைக்கு மன்னிக்கவும் 🙄
– Nuha Maryam –
எவ்வளவு தடங்கலு எவ்வளவூ அழுகை எவ்வளவு வலி இவங்க ஒன்னு சேர்ந்து பேச வைக்கறதுக்குள்ள ரைட்டரும், ரீடரூம் காலி பா🥵🥵🥵, எப்படியோ இவங்க பிரச்சனை முடிஞ்சுது அடுத்து சித் புடிக்கனும்😝 கேடி யாரையோ லவ் பண்ணுது பட் சொல்ல மாட்டேங்குறான்.
😂😂இவங்க பேசி முடிச்சா தானே வில்லிய ஒரு வழி பண்ணலாம்… கூடிய சீக்கிரம் மாட்டிடுவான் சித் 🤪
மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.