Loading

மண்டபத்திலிருந்து அவசரமாக வெளியேறிய சஜீவ் நேரே சென்று நின்ற இடம் கடற்கரை தான்.

கால் போகின்ற போக்கில் கடற்கரை மணலில் நடந்தவனின் மனம் முழுவதையும் நித்ய யுவனியே ஆக்கிரமித்திருந்தாள்.

நித்ய யுவனியுடனான ஒவ்வொரு பொழுதுகளும் அவனுக்கு நினைவு வந்தன.

ஊட்டியில் வைத்து முதன் முதலாக அவளை சந்தித்த போது பாவாடை தாவணியில் இரட்டைப் பிண்ணலிட்டு குழந்தையோடு குழந்தையாய் விளையாடியவளின் பால் முகம் சஜீவ்வின் மனதில் அன்றே ஆழப் பதிந்தது.

அதன் பின் நீர்வீழ்ச்சியின் அருகே இருந்த பாறையில் நித்ய யுவனி கால் வழுக்கி விழப் போன போது அவளைத் தன் கைகளில் தாங்கிப் பிடித்தது…

அன்று நித்ய யுவனி அங்கு வரும் முன்னே சஜீவ் ராஜேஷுடன் வந்து விட்டான்.

நித்ய யுவனி வந்ததிலிருந்து அவளின் ஒவ்வொரு செயல்களையும் ஏனென்றே தெரியாமல் ரசித்துக் கொண்டிருந்தான் சஜீவ்.

அதனால் தான் அவள் விழப் போனது தெரிந்ததும் ஓடிச் சென்று அவளைத் தாங்கினான்.

நித்ய யுவனி ஊட்டியில் இருக்கும் வரை அவளே அறியாது அவள் செல்லுமிடம் எல்லாம் சஜீவ் பின் தொடர்ந்தான்.

அப்போது நித்ய யுவனியின் மீது வெறும் ஈர்ப்பு மட்டுமே இருப்பதாக சஜீவ் நினைத்துக் கொண்டிருந்தான்.

அன்றே தனக்கு அவள் மீதிருந்த உணர்வைப் புரிந்து கொண்டிருந்தால் இருவருக்கும் இடையில் இவ்வளவு பிரச்சினைகளோ பிரிவோ இருந்திருக்காதென காலம் கணிந்தே உணர்ந்தான் சஜீவ்.

சிறு பெண்ணின் மனதைக் கெடுக்க விரும்பாது தான் நித்ய யுவனியை விட்டுப் பிரிய நினைத்தான் சஜீவ்.

ஆனால் நித்ய யுவனி அதற்கு வாய்ப்பளிக்கவே இல்லை.

நித்ய யுவனியின் வெளிப்படையான பேச்சு, குழந்தை மனம், சிறிய சிறிய குறும்புகள் என அனைத்துமே சஜீவ்வை மேலும் மேலும் நித்ய யுவனியின் பக்கம் ஈர்த்தன.

சஜீவ்வின் மனம் நித்ய யுவனியுடன் பழகுவதா அல்லது அவளை விட்டு தள்ளி இருப்பதா என இரு கொள்ளி எறும்பாய் தவிக்க விதி சுசித்ரா மூலம் தன் ஆட்டத்தை ஆரம்பித்தது.

நித்ய யுவனியை விட்டுப் பிரிந்து இருந்த காலத்தில் தான் புரிந்து கொண்டான் நித்ய யுவனி போலவே சுசித்ரா ஆரம்பத்தில் நடந்தது (நடித்தது) தான் சஜீவ் அவளைக் காதலிப்பதாக அவனை எண்ண வைத்தது என.

சஜீவ்வின் மனம் உண்மையிலேயே ஆரம்பத்திலிருந்து நித்ய யுவனியைத் தான் விரும்பியது.

சுசித்ரா ஆரம்பத்தில் குழந்தைத்தனமாக நடித்த போது நித்ய யுவனியின் செயல்களையே சஜீவ்விற்கு நினைவூட்ட அதனால் சுசித்ராவை காதலித்தான்.

இல்லை இல்லை காதலிப்பதாக எண்ணிக் கொண்டான்.

ஆனால் எவ்வளவு நாள் தான் நடிப்பும் நாடகமும் நிலைக்கும்.

அதன் பின் சுசித்ராவின் சுயரூபம் சஜீவ்விற்கு வெளிப்பட பெண்களின் காதல் மீதிருந்த நம்பிக்கையே அவனுக்கு இல்லாமல் போனது.

அதே நேரம் சரியாக நித்ய யுவனியும் காதல் என்று கூறிக் கொண்டு வர எதுவுமே சிந்திக்காமல் தன் வலியை மறக்க அவளைக் காயப்படுத்த நினைத்தான் சஜீவ்.

நாட்கள் செல்ல நித்ய யுவனியின் கள்ளங்கபடமில்லாத மனம் சஜீவ்வை அவள் மீது காதல் கொள்ள வைத்தது.

ஆனால் அதை ஏற்றுக் கொள்ளத்தான் அவனுக்கு மனம் இடமளிக்கவில்லை.

எங்கே நித்ய யுவனியும் தன்னை ஏமாற்றி விடுவாளோ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது.

ஆனால் தான் யூ.எஸ்ஸிலிருந்து திரும்பிய போது நித்ய யுவனியின் கண்களில் தனக்கென தெரிந்த காதலில் தன் காதலை உணர்ந்தான் சஜீவ்.

அதன் பின் எந்தப் பிரச்சினையும் இன்றி இருவரது வாழ்வும் அழகாக செல்ல மீண்டும் சஜீவ் பெற்ற தாயாலே ஏமாற்றப்பட்டான்.

அதை நினைக்க இப்போது கூட தன் மடத்தனத்தை நொந்து கொண்டான்.

ஒவ்வொரு முறையும் தான் ஏமாற்றப்பட அதன் வலியை அனுபவித்தது என்னவோ நித்ய யுவனி தான்.

இந்த ஐந்து வருடத்தில் எவ்வளவு வலிகள், வேதனைகளைக் கடந்து விட்டனர்.

சஜீவ்விற்கு தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

தற்போது கூட குடும்ப மருத்துவர் சொன்னதை உண்மை என நம்பி தன்னவளுக்கு நன்மை செய்வதாக எண்ணி அவளைக் கஷ்டப்படுத்தி விட்டான்.

நித்ய யுவனிக்கு தான் பொருத்தமானவன் இல்லையா என்று தான் சஜீவ்விற்கு தோன்றியது.

_______________________________________________

சுசித்ரா, “என்ன சொல்ற… நிஜமாத்தான் சொல்றியா… நீ பார்த்தியா..” என மொபைலில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள்.

மறுபக்கம், “ஆமா சுச்சி… நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன்… அவ ப்ரெக்னன்ட்டா இருக்கா…” என்க,

“இல்ல… இது எப்படி நடக்கலாம்… அவ தான் சர்வா கூட கோவமா இருந்தாளே…” என்றாள் சுசித்ரா.

மறுபக்கம், “நீ என்ன இருபத்தி நாழு மணி நேரமும் அவங்க ரூம வாட்ச் பண்ணிட்டு இருந்தியா… உள்ள என்ன நடந்து இருக்கும்னு உனக்கு எப்படி தெரியும்…” என்கவும்,

சுசித்ரா, “நான் அவள அந்த குழந்தைய பெத்துக்க விட மாட்டேன்… சர்வாவோட சொத்து மொத்தமும் எனக்கு வேணும்… அதை அடைய எது தடையா இருந்தாலும் நான் அதை அழிச்சே தீருவேன்…” என்றாள் வெறியுடன்.

“ஏய்… பைத்தியமா நீ… ஜெயிலுக்கு போக போறியா… நான் இதை உன் கிட்ட சொன்னதே இனி மேலாவது நீ அந்த சர்வா கிட்ட இருந்து விலகி இருக்கனும்னு தான்… நீ என்னன்னா ஏதேதோ சொல்ற…” என மறுபக்கம் இருந்தவர் கூறவும்,

“என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்… யாரும் எனக்கு அட்வைஸ் பண்ண அவசியமில்ல..” எனக் கோவமாகக் கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தாள் சுசித்ரா.

பின் மீண்டும் யாருக்கோ அழைப்பு விடுத்த சுசித்ரா, “நான் சொல்றத கவனமா கேட்டுக்கோ… நாளைல இருந்து அந்த நித்யா எங்க போறாலோ அவள நீ ஃபாலோ பண்ணு… அவ தனியா மாட்டுற சமயம் அவ மேல வண்டிய ஏத்தி ஆக்ஸிடன்ட் பண்ணிரு… இப்பவே உன் அக்கவுன்ட்டுக்கு அட்வான்ஸ் மனிய ட்ரான்ஸர் பண்றேன்… வேலைய முடிச்சதும் இதை விட அதிகமா தரேன்… நாளைக்கு தான் அந்த நித்யா உயிரோட இருக்குற கடைசி நாளா இருக்கனும்…” என்று கட்டளை இட்டு விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

அவ்வளவு நேரமும் சுசித்ரா பேசுவதை மறைந்திருந்து கேட்ட ஜீவன் சத்தமில்லாமல் அவ் இடத்தை விட்டு அகன்றது.

_______________________________________________

ஆரவ், பிரியா திருமணம் முடிந்து அனைத்து சடங்குகளும் முடிந்து இரவானதும் தான் வீடு திரும்பினாள் நித்ய யுவனி.

ட்ரெசிங் டேபிள் முன் அமர்ந்து களைப்பாக ஒவ்வொரு ஆபரணமாக கழட்டிக் கொண்டிருக்க அவள் அறைக் கதவை திறந்து கொண்டு புயல் வேகத்தில் உள் நுழைந்தான் சஜீவ்.

காலை திருமணத்திற்காக அணிந்திருந்த சட்டை கசங்கி, தலை முடியெல்லாம் கலைந்து, கண்கள் அதிகமாக அழுததில் சிவந்திருக்க, முகமே களையிழந்து காணப்பட்டவனைக் கண்டு அதிர்ந்தாள் நித்ய யுவனி.

நித்ய யுவனியிடம் வந்த சஜீவ் அவள் அருகில் மண்டியிட்டு அவளை இறுக்க அணைத்துக் கொண்டு அழுதான்.

நித்ய யுவனி இன்னும் அதிர்ச்சியில் இருக்க சஜீவ்வின் அணைப்பு கொஞ்சம் கொஞ்சமாக இறுக நித்ய யுவனிக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது.

நித்ய யுவனி, “ச…சஜு… ஐ கான்ட் ப்ரீத்..” எனத் தயங்கியவாறு கூறவும் அவசரமாக அவளை விட்டு விலகினான் சஜீவ்.

ஓரளவு மேடிற்ற வயிற்றுடன் முன்பு இருந்ததை விட கூடுதல் பொழிவுடன் இருந்தவளையே கண் எடுக்காமல் பார்த்தான்.

நித்ய யுவனியை சஜீவ்வின் பார்வை ஏதோ செய்ய பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.

நித்ய யுவனியின் கரங்களை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்ட சஜீவ் அவள் மடியில் முகம் புதைத்து, “சாரி யுவி…. சாரி….” எனக் கண்ணீர் விட்டான்.

நித்ய யுவனியின் இதயம் வேகமாகத் துடிக்க, “உன் கிட்ட மன்னிப்பு கேட்க கூட எனக்கு தகுதி இல்ல யுவி… நான் ரொம்ப மோசமானவன்… உனக்கு காதலை விட கஷ்டத்த தான் தரேன்… நான் ஒரு முட்டாள் யுவி… யார நம்பனும் யார நம்பக் கூடாது எதுவுமே தெரியாம இருந்து இருக்கேன்… என்ன காதலிச்ச பாவத்துக்கு நீ கஷ்டத்த மட்டும் தான் அனுபவிச்ச யுவி… ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ்னு எல்லாரையும் பிரிஞ்சி உன் ஆசை எல்லாத்தையும் உனக்குள்ளே மறச்சி யாருமே இல்லாம தூரமா இருந்த.. எல்லாத்துக்கும் நான் மட்டும் தான் காரணம் யுவி… தப்புக்கு மேல தப்பு பண்ணிட்டேன் யுவி… சாரி டி… உன் காதலுக்கு நான் கொஞ்சம் கூட அருகதையே இல்லாதவன் யுவி… ஆனாலும் எனக்கு நீ வேணும்… உன் காதல் வேணும்… முதல்ல அம்மாவுக்காக பார்த்து தெரிஞ்சே உனக்கு காயத்த தந்தேன்.. அப்புறம் உன் நல்லதுக்காக பண்றேன்னு நெனச்சி உன்ன கஷ்டப்படுத்தினேன்… ஒவ்வொரு தடவையும் யாரோ ஒருத்தருக்காக என் யுவிய பிரிஞ்சி அவள கஷ்டப்படுத்திட்டேன்… ஆனா இனிமே அப்படி இருக்க மாட்டேன் யுவி… சுயநலமா இருப்பேன்… ஆமா.. உன் விஷயத்துலயும் உன் காதல்லயும் நான் சுயநலமா இருப்பேன் யுவி… போதும் யுவி… யார் யாருக்காகவோ எங்க வாழ்கையோட அழகான நாட்கள தொலச்சிட்டோம் யுவி…

யு…யுவி… உனக்கு தெரியுமா… உன்ன முதன் முதலா பார்த்த நாள்ள இருந்தே நான் உன்ன காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்… லவ் எட் ஃபர்ஸ்ட் ஸைட்… ஆனா உன் சஜு தான் முட்டாளே..‌ அதான் புரிஞ்சிக்காம போய்ட்டேன்… உனக்கே தெரியாம உன் பின்னாடி சுத்தினேன் யுவி… நீ சின்ன பொண்ணுன்னு கூட அப்போ எனக்கு தெரியல… உன்ன பார்க்காம அந்த நாளே எனக்கு ஓடாது யுவி… உன் மேல எனக்கு இருந்த உணர்வுக்கு என்ன பேர்னு கூட தெரியல… ஆனா எனக்கு அது பிடிச்சிருந்தது… மாலதி கிட்ட உன் நம்பர ஏதாவது சொல்லி எப்படியாவது வாங்க சொல்லி ராஜேஷ் கூட சண்டை போட்டேன்… ஒரு மெசேஜ் போட்டுட்டு அதுக்கு நீ ரிப்ளை பண்ணும் வர தவிச்சிட்டே இருப்பேன்.. உன் முகத்துல சிரிப்ப வர வைக்கனும்னு தான் என்னை நானே கிண்டல் பண்ணி பேசுவேன்…

ஒரு நாள் உன் மேல எனக்கு லவ்னு தோணுச்சு யுவி… ஆனா சின்ன பொண்ணோட மனச கெடுக்க விரும்பல நான்… அது வெறும் ஈர்ப்பு தான்னு சொல்லி என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன்… அதனால உன்ன விட்டு தூரமா இருக்க முடிவெடுத்து தான் அன்னைக்கு உனக்கு கால் பண்ணேன்.. ஆனா உன் அழுகைய கேட்டதும் என்னால முடியல.. ரொம்ப கஷ்டமா இருந்தது… ஒரு வேளை அப்போ நான் இந்தியால இருந்திருந்தா உன் கண்ணீரை துடைக்க உன்ன தேடி வந்திருப்பேனோ என்னவோ..‌. உன் கையில சின்னதா காயம் ஆகினப்போ கூட எனக்கு வலிச்சது…

ஒவ்வொரு செக்கனும் உன் மேல எனக்கு காதல் அதிகமாகிட்டே போச்சு… ஆனா என்னால அதை ஒத்துக்க முடியல யுவி… அப்போ எல்லாம் என்னோட மனசுல உன்ன விட்டு தள்ளி இருக்கனும் தள்ளி இருக்கனும்னு சொல்லிட்டே இருப்பேன்… சரியா அந்த நேரம் பார்த்து நான் வர்க்ல பிஸி ஆகிட்டேன்… நீயும் ஜனனி சொன்னதுக்காக என் கூட பேசல… அப்போ தான் என் லைஃப்ல சுச்சி வந்தா… அவ என் சொத்துக்காக என்னை காதலிக்க வெச்சி ஏமாத்த ரொம்ப நல்லாவே நடிச்சா… அவளே வந்து ப்ரபோஸ் பண்ணவும் எல்லா பசங்கள போலவும் ஒரு பொண்ணு தன்ன இந்தளவுக்கு காதலிக்கிறான்னு மனசுல ஒரு சந்தோஷம்… இல்ல இல்ல அது கர்வம்… அவ கிட்ட டைம் கேட்டேன்… அதுக்கப்புறம் அவளோட ஒவ்வொரு செயல்லயும் நான் உன்ன தான் பார்த்தேன் யுவி… அதான் நான் சுச்சிய காதலிக்கிறதா நெனச்சேன்… அவ லவ்வ எக்சப்ட் பண்ணேன்… அவளாவே வந்து என்னை ஹக் பண்ணுவா… ஆனா நான் ஒரு தடவை கூட திருப்பி அவள ஹக் பண்ணது கிடையாது… அவ என் கூட நெருக்கமா வர ட்ரை பண்ணும் போது ஏதாவது காரணம் சொல்லி தடுத்துட்டே இருப்பேன்… அவளோட செயல்ல வேணா நான் உன்ன பார்த்திருப்பேன் யுவி… ஆனா உன் அளவுக்கு என்னால அவ கூட க்ளோஸ் ஆக முடியல… என்ன இருந்தாலும் அந்த சுச்சி என் யுவி ஆக முடியுமா…. என் ஃப்ரென்டோட அனிவர்சரி பார்ட்டி அப்போ தான் அந்த சுசித்ராவோட உண்மையான முகம் தெரிய வந்தது… அந்த அசிங்கத்த என் கண்ணால பார்த்ததும் அப்படி ஒரு கோவம்… அடுத்த நாள் அவ வாயாலே எல்லா உண்மையையும் சொன்னதும் என்னால தாங்கிக்க முடியல… ஒரு பொண்ணு கிட்ட ஏமாந்து போனேங்குற கோவம் ஒரு பக்கம்… அவ என்னை நான் எதுக்கும் சரிப்பட்டு வராத சாமியார்னு சொன்னது ஒரு பக்கம் என் ஈகோவ தூண்டிடுச்சு… அன்னைக்கு என் வலிய மறக்க முதல் தடவையா குடிச்சேன்… ஆனா என் மனசுல இருந்த காயம் ஆறல…

அத்தனை நாள் பேசாம இருந்துட்டு திடீர்னு நீ வந்து காதலிக்கிறதா சொல்லவும் சுசித்ரா மேல இருந்த கோவம் உன் பக்கம் திரும்பிச்சு… நீயும் சொத்துக்காகத் தான் என்னைக் காதலிக்கிறதா நெனச்சேன்… உன்ன கஷ்டப்படுத்தி என் மனசுல இருக்குற காயத்த மறக்க நெனச்சேன்… அதனால தான் உன்னை ஏமாத்த காதலிக்க ஆரம்பிச்சேன்… ஆனா என்னால உன்ன காயப்படுத்த முடியல யுவி… நீ சஜு சஜுன்னு கூப்பிட்ற ஒவ்வொரு தடவையும் எனக்குள்ள ஒரு மாற்றம்… அதை ஏத்துக்க முடியாம தான் கொஞ்ச நாளெக்கி உன் கூட பேசாம இருப்பேன்… திரும்ப நீ என்னை ஏமாத்த தான் காதலிக்கிறதா எனக்கு நானே சொல்லிக்கிட்டு உன் கூட பேசுவேன்… நான் வெக்கேஷன் வரதா சொன்னவும் நீ அன்னைக்கு தான் உன் எய்டீந்த் பர்த்டே வரதா சொன்னியே.. இந்த வயசுலயே ஏமாத்த காதலிக்கிறதா நெனச்சி உன் மேல இன்னும் கோவம் தான் வந்தது… ஆனா எனக்கே தெரியாம உன் மேல எனக்கு இருந்த காதல் உன்ன இதுக்கு மேல ஏமாத்த வேணாம்னு சொன்னது… பார்க்ல மீட் பண்ணுறப்போ உன் கிட்ட எல்லா உண்மையும் சொல்லி எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்னு தான் வந்தேன்… ஆனா நான் அன்னைக்கு உன் கண்ணுல எனக்கான காதலைப் பார்த்தேன் யுவி… அது பொய் இல்லன்னு என் மனசு அடிச்சி சொன்னது… அந்த கண்ணுல கண்ணீர பார்க்க விரும்பல நான்.. அதனால தான் உன்னை ஏமாத்த தான் காதலிக்க ஆரம்பிச்சேங்குற விஷயத்தை மறச்சி சுச்சிய காதலிச்சத மட்டும் உன் கிட்ட சொன்னேன்… ஆனா நீ எந்த பதிலுமே சொல்லாம அங்கிருந்து போனதும் உன்ன நான் மொத்தமா இழந்துட்டதா நெனச்சேன்… ஆனா என் யுவி என்னைப் புரிஞ்சிக்கிட்டா… நீ சொன்னியே.. ஒரு பொண்ணோட முதல் காதலாவும் ஒரு பையனோட கடைசி காதலாவும் இருக்கிறது அதிஷ்டம்னு… உண்மை தான் யுவி… ஆனா என்னோட முதல் காதலும் நீ தான்… என்னோட கடைசி காதலும் நீ தான்..

ரிட்டன் நான் யூ.எஸ். கிளம்புறப்போ நீ என்னை கட்டிப்பிடிச்சி அழுதியே.. அப்போவே எதுக்காகவும் உன்ன இழக்க கூடாதுன்னு முடிவு பண்ணேன்… வீட்டுக்கு போனதும் முதல் வேலையா நம்ம காதல பத்தி வீட்டுல சொன்னேன்… எல்லாருக்கும் சம்மதம்… ரொம்ப சந்தோஷப்பட்டாங்க… அம்மா கூட… ஆனா அது கூட நடிப்பா தான் இருந்திருக்கு… யூ.எஸ்ல எல்லாத்தையும் இழந்துட்டு திரும்ப என் சொத்துக்காக இந்தியா வந்தா சுச்சி… நாங்க ரெண்டு பேரும் ஆல்ரெடி காதலிச்சதாவும் ஒரு சின்ன மிஸ் அன்டர்ஸ்டேன்டிங்ல பிரிஞ்சதாவும் அந்த கெப்ல எங்களுக்கு இடைல நீ வந்ததாவும் அவங்கள நம்ப வெச்சா… எங்க அம்மாவுக்கு அவங்க அண்ணன்னா ரொம்ப பிடிக்கும்… அவருக்காக என்ன வேணாலும் பண்ணுவாங்க.. அதான் சுச்சிய தன்னோட மருமகளாக்க முடிவு பண்ணாங்க… ஆனா தன் சொந்தப் பையனோட மனச அவங்க புரிஞ்சிக்கல… ஹார்ட் அட்டேக்னு நாடகத்த போட்டு என்னை நம்ப வெச்சி உன் கிட்ட இருந்து என்னைப் பிரிச்சாங்க… அப்போ கூட அம்மா கிட்ட கெஞ்சினேன் மாமா கூட நான் பேசுறேன்னு… என்னால நீ இல்லாம வாழ முடியாதுன்னு கூட சொன்னேன்.. அவங்க கேக்கவே இல்ல..ஆனா எல்லாமே அவங்களோட ப்ளேன்படி தான் நடந்தது… ட்ரீட்மெண்ட் எடுத்துக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சி என்னை சம்மதிக்க வெச்சாங்க… அவங்களே உன் கூட பேசி உன் மனச மாத்துறதா சொன்னாங்க… அப்போ என்னாலையும் உன் கூட பேசவோ உன் முகத்த பார்க்கவோ தைரியம் இருக்கல.. அதனால அம்மாவே எல்லாம் பார்த்துக்கட்டும்னு விட்டுட்டேன்… ஆனா சத்தியமா அவங்க உன் கிட்ட என்ன பேசினாங்கன்னு எனக்கு தெரியாது யுவி… உன் கால ஆன்சர் பண்ண எனக்கு பயமா இருந்தது.. அதான் பண்ணல… சரி கடைசியா ஒரு தடவ உன் குரல கேக்கனும்னு தான் ஆன்சர் பண்ணேன்… ஆனா எடுத்ததும் நீ அழவும் என்னால தாங்கிக்க முடியல… எங்க நான் உண்மைய உன் கிட்ட சொல்லிடுவேங்குற பயத்துல தான் அம்மா உன் கிட்ட என்ன பேசினாங்கன்னு தெரியாமலே அதெல்லாம் உண்மைனு சொன்னேன்… நீ உன்ன ஏமாத்த தான் காதலிக்கிறது போல நடிச்சியான்னு கேட்டப்போ உன் கேள்விய சரியா புரிஞ்சிக்காம ஆமா சொன்னேன்… நீயும் அதைக் கேட்டுட்டு கால கட் பண்ணிட்ட… சுசித்ரா தந்த காயத்த மறக்க தான் உன்ன ஏமாத்த காதலிக்கிறது போல நடிக்க ஆரம்பிச்சேன் யுவி..‌ ஆனா நான் உன்ன உண்மையா தான் காதலிச்சேன் யுவி…

உன்ன மறக்கனும்னு குடிக்க ஆரம்பிச்சேன்… மார்னிங் டு ஈவ்னிங் வர்க்ல என்ன பிஸியா வெச்சிக்கிட்டேன்… வீட்டுக்கு வந்ததும் குடிப்பேன்… ஆனா உன்ன மறக்க நெனக்கிற போதெல்லாம் இன்னும் இன்னும் நான் உன்ன நெனச்சேன் யுவி… பிரேம், ஆரவ் யாரு கூடவுமே பேசல… தனியா இருந்தேன்… அப்போ தான் ஜீவி கால் பண்ணி அம்மா மாமா கூடவும் சுச்சி கூடவும் சேர்ந்து போட்ட நாடகத்த பத்தி சொன்னா… வாழ்க்கையே வெறுத்திடுச்சி யுவி… பெத்த அம்மாவே எனக்கு துரோகம் பண்ணி இருக்காங்கன்னு என்னால நம்ப முடியல… இதை பத்தி உன் கிட்ட சொல்லனும்னு உனக்கு கால் பண்ணேன்… பட் கால் ரீச் ஆகல… பிரேமுக்கு கால் பண்ணி நடந்ததெல்லாம் சொன்னேன்.. ஆரவ்வும் அங்க தான் இருந்தான்.. ரெண்டு பேரும் என் மேல ரொம்ப கோவப்பட்டாங்க… நீ அன்னைக்கு சூசைட் அட்டம்ட் பண்ணத பத்தி சொன்னதும் நான் ஏன் இன்னும் உயிரோட இருக்கேன்னு தோணுச்சி… உன் கூட பேசணும்னு கெஞ்சினேன்… அவங்க சமமதிக்கவே இல்ல… உன்ன இனி டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு சொன்னாங்க… அவங்க சொல்றதும் சரினு தோணுச்சு… அம்மாவோட மூஞ்சில முழிக்கவே இஷ்டமில்ல… அதான் யூ.எஸ்லயே இருந்தேன்… எனக்கு நடந்தது போல ஜீவிக்கும் நடக்க கூடாதுன்னு தான் அவ கிட்ட பேசி அங்க இருந்தே எல்லா ஏற்பாட்டையும் பண்ணி வீருக்கும் ஜீவிக்கும் கல்யாணம் பண்ணி வெச்சேன்… அதுக்கப்புறம் கூட உன்னோட பேச நிறைய தடவ முயற்சி பண்ணேன் யுவி… பட் முடியல.. உனக்கு என்னைப் பத்தி பேசவே இஷ்டமில்லன்னு பிரேம் சொன்னான்…

அப்பா ரொம்ப ஃபீல் பண்ணாரு நான் இந்தியா வராம யூ.எஸ்ல இருக்குறத நெனச்சி… அவருக்காக தான் ரிட்டன் வந்தேன்… வந்து வன் மந்த்ல பிரேம். ஜனனி மேரேஜ்… நீ வர மாட்டன்னு தான் நெனச்சேன்… ஆனா நீ வந்தது எனக்கு அதிர்ச்சியா இருந்தது யுவி… பட் நீ ரொம்ப மாறி இருந்த… என்னால தான் இதெல்லாம்னு புரிஞ்சது… அஞ்சி வருஷத்துக்கு முன்னாடி உன் முகத்துல எப்பவும் இருக்குற சிரிப்பு அன்னைக்கு உன் முகத்துல இருக்கல… அதை திரும்ப வர வைக்கனும்னு முடிவு பண்ணேன்… ஆனா என்ன பண்றதுன்னு தெரியல… உன்ன சித்தார்த் கூட சேர்த்து பார்க்கும் போதெல்லாம் காரணமே இல்லாம சித்தார்த் மேல ஒரு வெறுப்பு… ஹரி வேற உன்ன அவன் கூட சேர்த்து வெச்சி பேசினப்போ சித்தார்த் என் யுவிய என் கிட்ட இருந்து பிரிக்க பார்க்குறான்னு சம்மந்தமே இல்லாம அவன் மேல கோவப்பட்டேன்… மெஹெந்தி ஃபங்ஷன் நேரம் நீ பாடின பாட்ட கேட்டதும் நீ எதையுமே மறக்கலன்னு தெரிஞ்சிக்கிட்டேன்… நம்ம ரெண்டு பேருக்குமே ரொம்ப பிடிச்ச பாட்டு…‌யூ.எஸ்ல தனியா இருந்தப்போ உன் ஞாபகமா அந்த பாட்ட தான் ரிப்பீட் மூட்ல கேட்டுட்டு இருப்பேன்… நீ அங்கிருந்து அழுதுட்டு போனதும் எப்படியாவது உன்ன சமாதானப்படுத்தனும்னு தான் உன் பின்னாடி வந்தேன்… ஆனா அன்னைக்கு நீ பேசினப்போ தான் புரிஞ்சது எந்தளவுக்கு நான் உன்ன காயப்படுத்தி இருக்கேன்னு…

உன் கிட்ட எப்படியாவது நடந்தெல்லாம் சொல்லனும்னு தான் உன்ன தேடி தேடி வந்தேன் யுவி… ஆனா நீ எனக்கு அதுக்கு சந்தர்ப்பம் தரவே இல்ல… எப்படியாவது என் காதல உனக்கு புரிய வைக்கனும்னு தான் ஹாஸ்பிடல்ல வெச்சி உன்ன கிஸ் பண்ணேன்… ஆனா நீ திரும்ப என்ன விட்டு தூரமா போய்ட்ட… நாய் மாதிரி அலஞ்சேன் உன்ன எல்லா இடத்துலயும் தேடி… அப்போ தான் யூ.எஸ்ல இருந்து என் ஃப்ரெண்ட் தீபக் கால் பண்ணான்‌ உன்ன பார்த்ததா சொல்லி.. நைட்டோட நைட்டா அப்பா கிட்ட மட்டும் சொல்லிட்டு உன்ன பார்க்க கிளம்பினேன்.. உன் சம்மதம் இல்லாம உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு எல்லாம் நான் நெனக்கவே இல்ல… நீ கோயிலுக்கு போனப்போ உன் கூட பேச தான் உன்ன ஃபாலோ பண்ணி வந்தேன்… எப்படியாவது உன்ன என் கூட சேர்த்து வைன்னு கடவுள் கிட்ட வேண்டினப்போ தான் அம்மன் கழுத்துல இருந்த தாலி கண்ணுல பட்டுச்சு… இதை விட்டா உன்ன என் கூட வெச்சிக்க வேற வழி இல்லன்னு தான் உன் சம்மதமே இல்லாம உன் கழுத்துல தாலி கட்டினேன் யுவி…

ஆனா சித்தார்துக்கு ஆல்ரெடி ஜனனி சொல்லி எல்லா விஷயமும் தெரியும்… அதனால அவன் எனக்கு சப்போர்ட் பண்ணான்… எங்க அவன் எனக்கு சப்போர்ட் பண்றது தெரிஞ்சா நீ லோன்லியா ஃபீல் பண்ணுவேன்னு தான் என் கூட சண்டை போடுறது மாதிரி நடிச்சான்… உன்னோட மெடிக்கல் கேம்ப் முடிஞ்ச அன்னைக்கு எப்படியாவது உன் கிட்ட எல்லாம் சொல்லிடனும்னு வந்தேன்… ஆனா நீ அன்னைக்கும் என்னை அவாய்ட் பண்ண… நான் உன் பின்னாலயே சுத்தி சுத்தி வர நீ என்ன கொஞ்சம் கூட மதிக்காம போனதும் எனக்கு அவ்வளவு கோவம் வந்திடுச்சு.. என் கைல காயமானதும் நீ துடிச்சியே… உன்ன ஹர்ட் பண்றத நெனச்சி என் மேலயே கோவம்… சித்தார்த் கிட்ட சொல்லி அழுதேன்…

உன் வீட்டுல வந்து பேசவும் அத்த நான் சொல்றத உடனே புரிஞ்சிக்கிட்டாங்க… ஆனா மாமாவுக்கு என் மேல ரொம்ப கோவம்…‌ உன்ன என் கூட அனுப்ப சம்மதிக்கவே இல்ல… அத்த தான் அது இதுன்னு பேசி அவர் மனச மாத்தினாங்க.. பட் அவங்க சொன்னாலும் நீ கேட்க மாட்டன்னு மாமா சொன்னாரு… அப்புறம் அவரே அதுக்கு வழியும் சொன்னாரு… அதுக்காக தான் உன்ன நம்பாம உன் மேல கோவமா இருக்குறது போல நடந்துக்கிட்டாரு… ஆனா அவரால உன் கண்ணீர பார்க்க முடியல.. அதான் உண்மைய சொல்லிட்டாரு… நீ ரொம்ப லக்கி யுவி… நீ என்ன பண்ணாலும் உன்ன புரிஞ்சிக்கிற ஃபேமிலி அன்ட் ஃப்ரெண்ட்ஸ் உனக்கு கெடச்சிருக்காங்க… பட் எனக்கு எங்க அம்மாவே எதிரி ஆகிட்டாங்க… அப்பாக்கு என் மேல பாசம் தான்… ஆனா அவரும் அம்மாவ எதிர்த்து பேசாம இருந்து பழகிட்டாரு… அதனால தான் நாம இன்னைக்கு இந்த நிலமைல இருக்கோம் யுவி…

நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட விஷயம் தெரிஞ்சதும் அப்பாவும் ஜீவியும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க… முதல் முறையா அப்பா அன்னைக்கு தான் அம்மாவ எதிர்த்து பேசினாரு… அதனால அம்மாவுக்கு உன் மேல இன்னும் கோவம்… சுச்சி நிச்சயம் எங்களுக்குள்ள ஏதாவது பிரச்சினை பண்ணத் தான் வீட்டுக்கு வந்திருக்கான்னு தெரியும்.. அதனால தான் உன்னை தனியா கூட்டிட்டு போக ட்ரை பண்ணேன்… நீ மறுத்துட்ட… நீ என் கிட்ட யாரோ போல நடந்துக்குறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது… ஆனா நான் ஏதாவது பேசி அது உன்ன இன்னும் காயப்படுத்துறத விட நீ என் பக்கத்துலயே இருக்குறது எனக்கு போதுமா இருந்தது… உன் பர்த்டே அன்னைக்கு அந்த கிஃப்ட்ட ஆசையா ரெடி பண்ணேன்.. பட் அதை உன் கிட்ட தர தயக்கம்.. எங்க நீ வாங்காம போய்டுவியோன்னு பயம்… நீ அதை எதுவும் சொல்லாம வாங்கிக்கிட்டதும் எனக்கு அவ்வளவு ஹேப்பியா இருந்தது யுவி..‌ எவ்வளவு நாள் கழிச்சி உன் முகத்துல அந்த சிரிப்ப பார்த்தேன்… அதுக்காக என்ன வேணாலும் செய்ய தயாரா இருந்தேன்…

நீ சின்ன வயசுல இருந்தது போலவே துறுதுறுன்னு காவ்யா இருக்கவும் எனக்கு அவள ரொம்ப பிடிச்சு போச்சு… பட் நீ அவள திரும்ப வீட்டுக்கு அனுப்பிட்ட… உன் கிட்ட எல்லா உண்மையும் சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு நிம்மதியா இருந்தது… பட் நீ ஒரு வார்த்தை பதில் பேசல… அன்னைக்கு நைட் என்ன நடந்ததுன்னு சத்தியமா எனக்கு தெரியாது யுவி.. மார்னிங் அப்பா சொல்லி தான் எனக்கு ஃபீவர் வந்த விஷயமே தெரியும்… உன்ன உடனே பார்க்கனும்னு மனசு தவிச்சது.. ஏன்னு தெரியல… உன்ன பார்க்க வரும் போது தான் சுச்சி வந்து என் ரிப்போர்ட்ட காட்டினா..‌ பட் அவ சொன்னது எதையும் நம்பல… நீ சொத்துக்காக தான் என் கூட இருக்குறதா சொன்னா.. ஆனா எனக்கு என் யுவிய பத்தி தெரியும்.. பட் அவ எனக்கு இருக்குற பிரச்சினைய பத்தி சொன்னதும் கொஞ்சம் பயமா இருந்தது.. அவ அவ்வளவு உறுதியா சொன்னா.. அவளுக்கு எப்படி அந்த ரிப்போர்ட் கிடைச்சது எதுவுமே கேட்க தோணல.. அன்னைக்கு ஹாஸ்பிடல்ல வெச்சி வீருக்கு நீ சொன்னதெல்லாம் அப்படியே எனக்கு சொல்றது போல இருந்தது… அதான் எங்க பேமிலி டாக்டர போய் சந்திச்சேன்… அவரு என்னால குழந்தை பெத்துக்க சான்ஸே இல்லன்னு சொல்லிட்டாரு… ட்ரீட்மெண்ட் பண்ணாலும் கியுர் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாரு… ஆல்ரெடி என்னால நீ ரொம்ப கஷ்டப்பட்டுட்ட.. என்னால என் யுவிய யாரும் தப்பா பேச கூடாதுன்னு நெனச்சேன்… அதுக்கு உன்ன விட்டு தள்ளி இருக்கிறது தான் ஒரே வழின்னு லூசுத்தனமா முடிவெடுத்தேன்… வீட்டுக்கு கூட வராம ஆஃபிஸே கதியா இருந்தேன்… எங்க உன் கூட பேசினா உன்ன என் கூடவே வெச்சிக்க நினைப்பேன்னு தான் உன்ன அவாய்ட் பண்ணேன்.. நீ தூங்கினதுக்கு அப்புறம் வீட்டுக்கு வருவேன்… நைட் ஃபுல்லா உன் பகக்தத்உலயே இருந்து உன் முகத்த பார்த்துட்டே இருப்பேன்… காலைல நீ எழுந்திரிக்க முன்னாடி கிளம்பி போய்டுவேன்… நீ என்ன விட்டு போகனும்னு தான் தெரிஞ்சே அப்படி பேசினேன்… நீ முடியாதுன்னு சொல்லுவன்னு நெனச்சேன்… பட் நீ எதுவுமே சொல்லாம கிளம்பி வந்துட்ட… நீ போனதும் எனக்கு உயிரோட இருக்கவே பிடிக்கல யுவி….

நான் உன்ன பைத்தியமா லவ் பண்றேன் டி… என்னால நிச்சயம் நீ இல்லாம இருக்க முடியாது.. யுவி இல்லன்னா இந்த சஜு வெறும் ஜடம் தான்… எனக்கு என் யுவி மட்டும் போதும்… ப்ளீஸ் டி… என்னை மன்னிச்சிரு… எனக்கு தெரியும் உனக்கு என் மேல இன்னும் கோவம் போகலன்னு… வேணும்னா உன் கோவம் தீரும் வர என்னை எவ்வளவு வேணாலும் அடிச்சிக்கோ… பட் இதுக்கு மேல என்ன விட்டு விலகி இருக்காதே யுவி… ஐ நீட் யூ…” என நித்ய யுவனியின் மடியில் முகம் புதைத்து கதறி அழுதான் சஜீவ்.

நித்ய யுவனியின் கண்கள் தானாய் கண்ணீரை வடிக்க சற்று நேரம் சஜீவ்வை அழ விட்டவள் தன் மடியில் முகம் புதைத்து இருந்தவனின் தலையை நிமிர்த்தி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

❤️❤️❤️❤️❤️

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்