Loading

மும்பையின் பிரபல ஏழு நட்சத்திர விடுதியின் பெரிய விழாக்கள் நடக்கும் மண்டபம் பிரபலங்களால் நிறைந்திருந்தது.

எ‌‌ங்கு நோக்கினும் நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் தான் காணப்பட்டனர்.

கூடவே பத்திரிகைகள் மற்றும் நியூஸ் சேனல்களில் இருந்தும் வந்திருந்தவர்கள் கேமராக்களுடன் சுற்றிக் கொண்டிருந்தனர்.

அன்று இந்தியாவின் மிகப் பெரிய விருது வழங்கும் நிகழ்வு நடைபெற இருந்தது.

ஒவ்வொரு வருடமும் இறுதியில் நடைபெறும் இந் நிகழ்வை பிரபலங்கள் முதல் சாதாரண ரசிகர்கள் வரை அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருப்பர்.

அனைத்து பிரபலங்களும் வந்து சேர்ந்ததும் நிகழ்வு இனிதே ஆரம்பமானது.

ஒவ்வொரு பிரிவிலும் விருதுகளை வழங்கிவிட்டு அடுத்து ரசிகர்கள் அவ்வளவு நேரமும் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த நேரம் வந்தது.

“அடுத்து இந்த வருடத்தின் எல்லாப் பிரிவிலும் சிறந்த நடிகர் என்ற விருதினைக் கொடுத்து கௌரவிக்க தயாரிப்பாளர் மாறன் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்.” என நிகழ்ச்சித் தொகுப்பாளினி அழைக்கவும் தயாரிப்பாளர் மாறன் விருதுடன் மேடைக்கு வந்தார்.

“இந்த வருடத்தின் சிறந்த நடிகர் விருதைப் பெற்றுக்கொள்ளப் போவது… எனி கெசஸ்?” எனக் கேட்ட தொகுப்பாளினியின் கேள்விக்குப் பதிலாக அரங்கம் மொத்தமும் ஒரே பெயரைக் கூறி ஆரவாரம் செய்தனர்.

“RV… RV… RV… RV… RV…” எனச் சுற்றியும் ஒலித்த குரல்களைக் கேட்டுப் புன்னகைத்த நிகழ்ச்சித் தொகுப்பாளினி, “யெஸ்… தி பெஸ்ட் ஆக்டர் அவார்ட் கோஸ் டு ரன்வீர். லெட்ஸ் வெல்கம் RV டு தி ஸ்டேஜ்.” என அழைக்கவும் பெறும் கரகோஷத்துக்கு மத்தியில் மேடை ஏறினான் RV என ரசிகர்களால் அழைக்கப்படும் ரன்வீர்.

விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு படங்களே நடித்திருந்தாலும் அனைத்தும் ஹிட் கொடுத்து பாரபட்சம் இன்றி இளைஞர்கள் யுவதிகளின் மனதைக் கொள்ளை கொண்டிருந்த ரன்வீர் எப்போதும் முகத்தில் வீற்றிருக்கும் புன்னகையுடன் மேடை ஏறி விருதைப் பெற்றுக்கொண்டான்.

மீண்டும் ‘RV… RV…’ என்ற சத்தம் தான் சுற்றியும் ஒலித்தது.

“RV… தொடர்ந்து ஹிட் படங்களாவே கொடுக்குறீங்க. நீங்க நடிச்சாலே அந்தப் படம் ஹிட் தான்னு ரசிகர்கள் நம்புறாங்க. அதைப் பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க? ஆல் கேட்டகரியில பெஸ்ட் ஆக்டர் அவார்ட் வாங்கி இருக்கீங்க. இந்த அவார்ட் உங்களுக்கு எவ்வளவு ஸ்பெஷல்? எங்களுக்காக… உங்க ஃபேன்ஸுக்காக ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?” எனக் கேட்ட தொகுப்பாளினியைப் பார்த்து ஒரு மயக்கும் வசீகரப் புன்னகையை வீசிய ரன்வீர் தன் ரசிகர்கள் பக்கம் திரும்பி,

“நீங்க எல்லாரும் புகழும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்ல. இப்ப தான் நான் ஒரு கத்துக்குட்டி. நான் கத்துக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு. நான் நடிக்கிறதால ஒரு படம் ஹிட் ஆகுறதா சொல்ல முடியாது. ஏன்னா எனக்கு தர சீன நடிக்கிறது மட்டும் தான் என் வேலை. ஆனா ஒரு படத்தோட வெற்றி அந்தப் படத்தோட கதைல தான் இருக்கு. சோ நான் நடிக்கிற படம் ஹிட் ஆக காரணம் அவ்வளவு நல்ல கதையைக் கொடுக்குற டைரக்டரையே சேரும். அப்புறம் இந்த அவார்ட்லாம் எனக்கு ஒன்னுமே இல்ல. என்னோட மிகப் பெரிய அவார்ட் என்னோட ரசிகர்களும் அவங்க எனக்கு தர அன்பும் ஆதரவும் தான். அது தான் எனக்கு ஸ்பெஷல். தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்.” என்று முடித்துக் கொண்டான்.

“ஜஸ்ட் வன் மோர் கொஷன் RV. உங்க கல்யாணம் எப்போன்னு தெரிஞ்சிக்க எல்லாரும் ஆர்வமா இருக்காங்க. சோ ஏதாவது ஹிண்ட் கொடுக்கலாமே. என்ன சொல்றீங்க கய்ஸ்?” எனத் தொகுப்பாளினி கேட்கவும் அதனை ஆமோதித்து அரங்கம் அதிர்ந்தது.

அக் கேள்விக்கும் ஒரு வசீகரப் புன்னகையை வழங்கிய ரன்வீர், “எல்லாம் நடக்க வேண்டிய நேரத்துல கண்டிப்பா நடக்கும். அதுவும் இல்லாம ஒரு சின்ன சஸ்பன்ஸ் இருந்தா தானே லைஃப் சுவாரசியமா இருக்கும்.” என்று விட்டு மேடையை விட்டு கீழிறங்கினான்.


“டேய் மச்சான்… உனக்கு எங்கயோ பெரிய மச்சம் இருக்குடா. RV ஹீரோன்னு சொன்னா கதையைக் கூட கேக்காம படத்த ஓக்கே பண்ணுறாளுங்க. நாங்க உனக்கே சீனியர். பல வருஷமா இந்த ஃபீல்ட்ல இருக்கோம். ஆனா எங்களுக்கு தான் எதுவும் அமைய மாட்டேங்குது. குடுத்து வெச்சவன்டா நீ. அது என்னடா உன் பேரைக் கேட்டா மட்டும் அவளுங்க அப்படி உருகிடுதுங்க? ஆனா நீ தான் சரியான சாமியார் ஆச்சே. எவளுக்கும் மசிய மாட்டேங்குற.” என்றான் ரன்வீரின் நண்பனும் நடிகருமான தேஜ்.

“எனக்கு யாரையும் பிடிக்காதுன்னு நான் சொல்லவே இல்லையே மச்சான். எனக்கும் ஒரு ட்ரீம் கேர்ள் இருக்கா.” எனக் கையில் வைத்திருந்த மதுக் குவளையை வாயில் சரித்தவாறு கண்களில் கனவு மின்னக் கூறினான் ரன்வீர்.

அன்றைய வெற்றியைக் கொண்டாடும் விதமாக இருவரும் ஒரு உயர்தர பாருக்கு வந்திருந்தனர்.

ரன்வீர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் குடித்துக் கொண்டிருந்த மதுவைக் கீழே துப்பிய தேஜ், “என்னடா சொல்ற? யாருடா அது?” எனக் கேட்கவும் ரன்வீரிடம் ஒரு கள்ளப் புன்னகை.

“மச்சான் அந்த சனான்னு மட்டும் சொல்லிடாதே. பிஞ்சு நெஞ்சு தாங்காது.” எனத் தேஜ் பதட்டமாகக் கேட்கவும் இம் முறையும் ரன்வீரிடம் அதே கள்ளப் புன்னகை.

ரன்வீரின் முகத்திலிருந்த புன்னகையை வைத்தே அவன் மனதில் ஓடுவதைப் புரிந்து கொண்ட தேஜ் அதிர்ச்சியும் ஏமாற்றமுமாக நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு பின்னால் சாய்ந்தான்.

“டேய் விழுந்துறாதேடா.” எனக் கத்தியவாறு தேஜைப் பிடிக்க வந்த ரன்வீரின் கரத்தைத் தட்டி விட்ட தேஜ், “இதுக்கு மேல நான் விழ என்ன இருக்கு? அதான் நீ மொத்தமா அந்த சனாப் பொண்ணு அழகுல விழுந்துட்டியே. சனா கூட உன்ன பத்தி அந்த ரூமர்ஸ் வரும் போதே யோசிச்சேன் நான். நம்ம இண்டஸ்ட்ரிலயே பல பேருக்கு அவ மேல கண்ணு. அவ தான் அழகா இருக்கேன்னு திமிருல ஒருத்தன் கிட்டயும் சிக்காம இருக்கான். இவன் என்னன்னா அந்தப் பொண்ணு கூட இத்தனை படம் சேர்ந்து பண்ணி ஹிட் குடுத்து இருந்தும் இவ்வளவு நல்ல சான்ஸ மிஸ் பண்ணுறானே. ஒருவேளை நம்ம ஃப்ரெண்டுக்கு தான் ஏதாவது குறை இருக்கோன்னு எல்லாம் யோசிச்சேன்.” என்றான் சோகமாக.

“அடிங்… யாருக்குடா குறை இருக்கு? ஒரு பையன் நல்லவனா இருந்துட கூடாதே. உடனே அவனுக்கு இஷ்டத்துக்கு பெயர் வைப்பீங்க. நீ நினைக்குற போல எதுவும் இல்லடா. எனக்கு வரப் போற மனைவி எப்படி இருக்கணும்னு எனக்கு ஒரு கனவு இருக்கு. நல்லா படிச்ச, நாகரீகம் தெரிஞ்ச, ரொம்ப மாடர்னா இல்லன்னாலும் இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி பட்டிக்காடா இல்லாம கொஞ்சம் மாடர்னா, நல்ல குணமான பொண்ணா இருக்கணும். இது எல்லாமே சனா கிட்ட இருக்கு. என்ன தான் நாங்க நெறய படம் ஒன்னா பண்ணி இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் பர்சனலா அவ்வளவா பேசிக்கிட்டது கிடையாது. இன்னுமே சனா கூட மனசு விட்டுப் பேச எனக்கு சரியான நேரம் அமையல. இந்த வீக்கென்ட் டேட்டிங் கூப்பிட்டு இருக்கேன். பார்க்கலாம். எனக்கானவள் எப்படியும் என் கிட்ட வந்து தானே ஆகணும்.” என்றான் பல கனவுகளுடன்.

அதே நேரம் அதே பாரில் தோழிகள் புடைசூழ அமர்ந்திருந்தாள் மீரா.

“ஹேய் போதும் டி. இதுக்கு மேல குடிக்காதே. உன்னப் பார்த்தா ஃபர்ஸ்ட் டைம் போலவே இல்ல டி. சரியான மொடாக்குடிகாரியா இருப்ப போல.” என ஒருத்தி வாய் வலிக்கக் கெஞ்சுவதைக் கூட காதில் வாங்காது முழு மது போத்தலை இரண்டாவது முறையாக மீரா தொண்டைக்குள் இறக்கிக் கொண்டிருந்தாள்.

“விடு டி என்னை. இன்னைக்கு பெட்ல கண்டிப்பா நான் தான் ஜெய்ப்பேன். அந்த சௌமி இந்த மீரா கிட்டயே சேலேன்ஜ் பண்ணிட்டா. விட்டுடுவேனா? எடு டி அடுத்த பாட்டில.” என மீரா போதையில் உளற, அவள் சௌமி என்று குறிப்பிட்ட அவளின் தோழி சௌமியாவும் மீராவைப் போலவே அவளின் மறு பக்கம் முழுப் போதையில் அமர்ந்திருந்தாள்.

“நான் தான் ஜெய்க்கப் போறேன் மீரா…” என்றவாறு சௌமியாவும் நிறுத்தாது குடிக்க, தலையில் அடித்துக் கொண்ட மற்ற தோழிகள், “இதுங்க என்னவோ பண்ணட்டும். இவளுங்க ரெண்டு பேராலயும் எங்க பார்ட்டி மூடே ஸ்பாய்ல் ஆகுது. நாம போய் என்ஜாய் பண்ணலாம். வாங்க டி.” என்றவாறு அங்கிருந்து கிளம்பினர்.

முழுப் போதையில் தோழிகள் இருவரும் மாறி மாறி சரக்கடித்துக் கொண்டிருந்தனர்.

முதல் தடவை என்பதால் அவர்களால் போதையைக் கூடக் கட்டுப்படுத்த முடியவில்லை.

வீட்டினரிடம் பொய்யான காரணம் கூறி விட்டு தோழிகள் படை முதல் முறை மும்பையை சுற்றிப் பார்க்க வந்திருந்தனர்‌‌.

முதல் முறை யார் துணையும் இன்றி தனியே வந்திருந்தவர்களுக்கு இந்த சுதந்திரம் உற்சாகம் அளிக்க, இஷ்டத்துக்கு கூத்தடித்தனர்.

அவர்களில் சிலர் படித்து முடித்து உள்ளூரிலேயே வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிலருக்கு படிப்பு எட்டாக்கனியாக இருக்க, படிப்பைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு வீட்டில் இருந்தனர்.

இதில் மீராவும் அடக்கம். ஏனோ அவளுக்கும் படிப்புக்கும் ஏழாம் பொருத்தம்.

வெறும் பத்தாவது வரையில் தான் படித்து உள்ளாள். அது வரை தாண்டவே அவள் பட்ட கஷ்டம் அவளுக்குத் தான் தெரியும்.

வருட இறுதி விடுமுறைக்குத் தான் இப்போது அனைவரும் மும்பை கிளம்பி வந்திருந்தனர்.

அவர்கள் அனைவரிலும் மீரா தான் மிகவும் சாதுவானவள்.

இந்தப் பயணத்திற்கு அவளை சம்மதிக்க வைக்கவே தோழிகள் பெரும்பாடு பட்டனர்.

சிறு வயதில் இருந்தே பெற்றோருக்கு கட்டுப்பட்டு வளர்ந்தவளால் அவர்களிடம் பொய் கூறி ஏமாற்றி விட்டு தோழிகளுடன் செல்லத் தயக்கமாக இருந்தது.

ஆனால் அவளது தோழிகளோ ஏதேதோ காரணம் கூறி மீராவை சம்மதிக்க வைத்து அழைத்து வந்திருந்தனர்.

 

பெற்றோரின் கட்டுப்பாட்டிலேயே வளர்ந்த பெண்களுக்கு ஒரு நாளேனும் வெளி உலகை ரசித்து அனுபவித்து சுதந்திரப் பறவையாக சுற்றித் திரியும் ஆசை வருவது இயல்பு தானே.

 

ஆனால் அக் கட்டுப்பாட்டை உடைத்துக் கொண்டு வெளியே வந்த பின் தான் அது எவ்வளவு பெரிய தவறு என்று இவ் உலகம் அவர்களுக்கு உணர்த்தி விடும்.

 

மீராவின் இம் முடிவு அவளை எங்கு கொண்டு நிறுத்தும் என அப்போது பெண்ணவள் அறிந்திருக்கவில்லை.

இரண்டு நாட்களாக போதும் போதும் என்ற அளவுக்கு மும்பையைச் சுற்றிப் பார்த்த தோழிகள் படை மறுநாள் வீடு கிளம்பத் திட்டமிட்டு இருக்க, சௌமியாவுக்கோ ஒரு முறை மதுவைத் தொட்டுப் பார்க்க, வெளிநாட்டு மதுவை தொட்டுப் பார்க்க ஆவல் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் அனைவருமே மறுக்க, சௌமியா ஏதேதோ கூறி அவர்களின் ஆசையைத் தூண்டி விட்டு சம்மதிக்க வைத்திருந்தாள்.

இளங்கன்று பயம் அறியாது அல்லவா?

ஆனால் மீராவோ உறுதியாக மறுத்து விட, எப்போதும் அமைதியே உருவாக இருக்கும் மீராவை சௌமியா நன்றாகவே சீண்டி விட, வீம்புக்கு என்று குடிக்க ஆரம்பித்தவளால் ஒரு கட்டத்தில் தன்னை சமாளிக்க இயலவில்லை.

“மீரா… முடியல டி. ஃபுல் ஆகிடுச்சு‌. இ…இதுக்கு மேல என்னால முடியாது. நீ…நீ… ஜெய்ச்சிட்ட.” என உளறியவாறே போதை தலைக்கேறி மட்டையாகி விட்டாள் சௌமியா.

“ஹே… நான் தான் வின்னு. நான் தான் வின்னு. இந்த மீராவா கொக்கா? அச்சோ… ரெஸ்ட் ரூம் வருதே. நீ..‌ நீ தூங்கு. நான் வரேன்.” என உளறிய மீரா தட்டுத் தடுமாறி எழுந்து கழிப்பறை நோக்கிச் சென்றாள்.

அவளில் நடையில் கூட நிதானம் இருக்கவில்லை.

முழுப் போதையில் இருந்தவளுக்கு பார்வை கூட மங்கலாகி இருக்க, கழிப்பறை நோக்கி சென்று கொண்டிருந்தவள் தூரத்தில் மங்கலாகத் தெரிந்த உருவத்தை நன்றாக கண்களை அகல விரித்து உற்று நோக்கினாள்.

தான் கண்ட காட்சியில் உற்சாகம் அடைந்த மீரா, “ஹை… என் ஹீரோ.” என்றவாறு தட்டுத் தடுமாறி வேகமாக ஒரு திசையில் நடக்கத் தொடங்கினாள்.

அதுவோ வீ.ஐ.பி.களுக்கான பகுதியாக இருந்தது.

அங்கு அவர்களுக்கு அறை வசதிகள் கூட தேவைக்கேற்ப ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க, தன் ஆதர்ச நாயகனைக் காணும் ஆவலில் மீரா எதனையும் கவனிக்காது சென்றாள்.

அதே சமயம் கூட்டத்துடன் நடமாடிக் கொண்டிருந்த தேஜை விட்டு விட்டு முழுப் போதையுடன் தான் முன்பதிவு செய்திருந்த அறையை நோக்கி சென்று கொண்டிருந்தான் ரன்வீர்.

ஒருவாறு தன் அறையைத் தேடிக் கண்டு பிடித்து கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த ரன்வீர் தள்ளாட்டத்துடன் கதவை மூடித் தாழிட முயல, “RV…” என அழைத்தவாறு அவ் அறைக்குள் திடீரென நுழைந்த மீரா போதையில் சமநிலை தவறி ரன்வீரின் மீதே சாய்ந்தாள்.

“ஹேய் ஹேய்…” எனப் பதறிக் கொண்டு ரன்வீர் மீரா விழாமல் பிடிக்க முயல, போதையில் இருந்தவனால் மீராவைத் தாங்க முடியாது அவளுடன் சேர்ந்து கீழே விழுந்து உருண்டான்.

ரன்வீர் தரையோடு படுத்திருக்க, அவனின் கரங்களோ தன் மீது விழுந்து கிடந்த மீராவின் இடையைச் சுற்றி வளைத்து இருந்தன.

“ஹையோ… RV… நி…நிஜமா நீங்…களா?” எனத் தான் இருக்கும் நிலையைக் கூட உணராது ரன்வீரின் முகத்தை ஆசையாக வருடிப் பார்த்தாள் மீரா.

மறு நொடியே சட்டெனச் சுழன்று மீராவைத் தனக்குக் கீழே கொண்டு வந்த ரன்வீர், “ஹூ ஆர் யூ கேர்ள்?” எனக் கேட்டான் உளறலாக.

“உங்க பெரிய ஃபேன்.” எனப் புன்னகையுடன் கூறிய மீராவின் ஒரு கரம் ரன்வீரின் மார்பில் பதிந்திருக்க, மறு கரமோ ரன்வீரின் முகத்தை மெதுவாக வருடியது.

போதையின் பிடியில் இருந்தவனுக்கு மீராவின் விரல்களின் தொடுகை சுகமாக இருக்க, கண்களை மூடி அதனை ஆழ்ந்து அனுபவித்தான்.

ரன்வீரின் முகத்தை வருடிக் கொண்டிருந்த மீராவின் கரம் மெதுவாக அவனின் சிகைக்குள் நுழைந்து பின்னந்தலையை அழுத்தமாகப் பற்றிக் கொள்ள, போதையில் இருந்தவனின் உணர்வுகள் பீறிட்டுக் கிளம்பின.

மெதுவாக இமைகளைப் பிரித்து மீராவின் முகத்தை நோக்கியவனுக்கு அவளின் செவ்வதரங்களும் அதன் ஓரத்தில் குட்டியாக இருந்த மச்சமும் கருத்தைக் கவர, நொடியும் தாமதிக்காது அவற்றைத் தன் முரட்டு அதரங்களால் சிறை செய்தான்.

ஒரு நொடி அதிர்ந்த மீரா மறு நொடியே ரன்வீரின் இதழ்கள் செய்த மாயத்தில் தன்னை மறந்து அம் முத்தத்தில் மூழ்கிப் போனாள்.

மெதுவாக ஆரம்பித்த இதழ்களின் சங்கமம் போதையின் உச்சத்தில் இருவரின் உணர்வுகளையும் தட்டி எழுப்ப, கொஞ்சம் கொஞ்சமாக வன்மையாக மாறி மெய்களும் சங்கமித்த பின் தான் முற்றுப் பெற்றன.

மறுநாள் காலை எழுந்த ரன்வீருக்கு முன் இரவு அதிகமாகக் குடித்ததால் இமைகளைப் பிரிக்கவே முடியவில்லை.

தலை வேறு விண் விண் என்று வலித்துக் கொண்டிருந்தது.

கஷ்டப்பட்டு இமைகளைப் பிரித்தவனுக்கு முதலில் தான் எங்கு இருக்கிறோம் என்று புரியவில்லை.

சுற்றியும் பார்த்து விட்டு குனிந்து தன்னைப் பார்த்தவன் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றான். 

அவன் இரவு அணிந்திருந்த உடைகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்க, வெறும் போர்வையை சுற்றிக் கொண்டு படுத்திருந்தான்.

அதன் பின்னர் தான் இரவு நடந்தவை கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வந்தன.

இரவு தேஜுடன் சேர்ந்து குடித்தது தொடக்கம் பின் தனியாக வந்து அறைக்குள் நுழைந்தது, திடீரென ஒரு பெண் அவனைத் தொடர்ந்து அறைக்குள் நுழைந்து அவன் மீதே விழுந்தது, அதன் பின் நடந்தவை என்று நடந்த அனைத்தும் நினைவுக்கு வந்தன.

ஆனால் அவனின் போதாத நேரம் எவ்வளவு யோசித்தும் பெண்ணவளின் முகம் தான் நினைவுக்கு வரவில்லை.

“ஓஹ் கோட்… என்ன காரியம் பண்ணி வெச்சிருக்க RV? குடிச்சா கொஞ்சம் கூட நிதானம் இருக்காதா?” என்றவாறு தலையைப் பற்றிக் கொண்ட ரன்வீர் மீராவின் முகத்தை நினைவு கூற முயல, அவன் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தன.

‘ஷிட்… வெளிய தெரிஞ்சா எவ்வளவு அசிங்கமா இருக்கும்? என் கெரியரே காலி ஆயிடும். ஒருவேளை நைட் என் கூட இருந்த பொண்ணு நானும் அவளும் ஒன்னா இருந்தத ஃபோட்டோ எடுத்து வெச்சி என்னை ப்ளாக் மெயில் பண்ணுவாளோ? அதுக்காகத் தான் வந்தாளோ? மீடியாவுக்கு எல்லாம் அதை அனுப்பி ரூமர்ஸ கிளப்பி வெச்சிடுவாளோ?’ என ஏதேதோ கற்பனை செய்து பார்த்தவனுக்கு தன் மீதே கோபமாக வந்தது.

“வரது வரட்டும் பார்த்துக்கலாம். எப்படி அதை நிறுத்தணும்னு எனக்கு தெரியும். இந்த RV யவே ப்ளாக் மெயில் பண்ணிடுவாளா? பார்த்துக்குறேன். முதல்ல இங்க இருந்து கிளம்பணும். தேஜுக்கு தெரிஞ்சா ஒரே அசிங்கமா போயிடும்.” என்ற ரன்வீர் தன் உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.

ஷவரைத் திறந்து விட்டு அதன் கீழே நின்றவன், “ஸ்ஸ்ஸ் ஆ…” என்றவாறு சட்டென நீரை விட்டு விலகி நின்றான்.

அவசரமாகத் திரும்பி கண்ணாடியில் தன் முதுகைப் பார்த்தவனுக்கு கோபத்தில் முகம் சிவந்தது.

முதுகெல்லாம் ஆழமான நகக்கீறல்கள் இருந்தன.

அவற்றை கண்ணாடியில் முறைத்துக் கொண்டே, “சச் அ மங்கி.” என்றான் ரன்வீர் கோபமாக.

அதே நேரம் புகையிரதத்தில் தோழிகளுடன் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்த மீராவும் யாரின் கவனத்தையும் கவராத வண்ணம் தன் தோள்பட்டையைத் தடவிக் கொண்டு, “வம்பயர்…” என முணுமுணுத்தாள்.

முன் இரவு ரன்வீர் செய்த சாகசத்தில் மீராவின் தோள்பட்டையில் ஆழமாக பற்தடத்தைப் பதித்து வைத்திருந்தான்.

ரன்வீர் குளித்து உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்த நேரம் அவனின் கைப்பேசி ஒலி எழுப்பியது.

குழப்பத்துடன் யார் என எடுத்துப் பார்க்க, சனா தான் அழைத்திருந்தாள்.

திரையில் சனாவின் பெயரைக் கண்டதும் ரன்வீரின் கண்கள் பளிச்சிட, அவசரமாக அழைப்பை ஏற்று காதில் வைத்தவன், “சொல்லுங்க சனா…” என ஆர்வமாகப் பேசத் தொடங்கினான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
31
+1
6
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments