Loading

இதனை எதிர்ப்பார்க்காத ரன்வீரும் நிலை இழந்து தன் மீது சாய்ந்தவளின் இடையோடு அணைத்தபடி கீழே சாய்ந்து உருண்டான். 

 

மீரா தரையோடு படுத்திருக்க, தன் மொத்தப் பாரத்தையும் மீரா மீது கொடுத்தவாறு அவள் மீது கிடந்தான் ரன்வீர்.

 

மீராவிற்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது.

 

ரன்வீரோ பல நாட்கள் கழித்து அவ்வளவு நெருக்கமாக மீராவின் முகத்தைக் கண்டதும் வைத்த கண் வாங்காமல் அவளைப் பார்த்தபடி இருந்தான்.

 

ஆனால் மீராவால் தான் வெகு நேரம் அவ்வாறு இருக்க முடியவில்லை.

 

“மூச்சு முட்டுதுங்க. தள்ளிப் போங்க.” என்றாள் மீரா கஷ்டப்பட்டு.

 

“ஓ… இப்போ மட்டும் நான் வெய்ட்டா இருக்கேனா? அப்போ நைட்டுக்கு மட்டும்…” என ஆரம்பித்தவன் ஏதேதோ அந்தரங்கமான பேச்சு பேச, மீராவோ அதிர்ச்சியில் மூச்சு விட மறந்து போனாள்.

 

ரன்வீரிடம் இருந்து முதல் தடவையாக இப்படி உரிமையாக ஒரு பேச்சு.

 

அதுவும் கண்களில் குறும்புடன் அவன் கூறிய விதம் அவன் மீது காதல் கொண்ட இதயத்தைக் கவராமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

 

மீரா அதிர்ச்சியில் இருக்கும் போதே சட்டென அவளைத் தனக்கு மேல் கொண்டு வந்த ரன்வீரின் கரம் மீராவின் இடையில் அழுத்தத்தைக் கொடுத்தது.

 

பெண்ணவளோ கூச்சத்தில் நெளிய, ரன்வீரின் பார்வை அவளின் இதழ்களில் படிந்தது.

 

எப்போதும் போல அந்த சிறு மச்சம் அவனை ஈர்க்க, நொடியும் யோசிக்காது மீராவின் செவ்வதரங்களைத் தன் இதழ்கள் கொண்டு கொய்து ரசித்து முத்தமிட்டான்.

 

இருவரின் சூடான மூச்சுக்காற்றும் தம் துணைகளின் முகத்தில் மோத, உணர்ச்சிகள் பீறிட்டுக் கிளம்பின.

 

ரன்வீர் ஆரம்பித்து வைத்த இதழ் யுத்தத்தில் மீராவும் சரி சமமாகப் போரிட்டாள்.

 

அவளுக்கு அவன் மீது என்ன கோபமோ? உணர்ச்சி வசத்தில் அவனின் இதழ்களைக் கடித்து காயம் செய்து விட்டாள்.

 

“ஆஹ்…” என்ற அலறலுடன் சட்டென மீராவின் இதழ்களை விடுவித்த ரன்வீர் தன் உதட்டில் இருந்து வடிந்த இரத்தத்தைத் தொட்டுக் காட்டி, “என்ன டி இப்படி கடிச்சு வெச்சிருக்க?” எனக் கேட்டான் பொய்க் கோபத்தோடு.

 

மீரா திரு திரு என விழிக்க, அதனை அவளே அறியாமல் ரசித்தான் ரன்வீர்.

 

வேகமாக மீரா ரன்வீரை விட்டு எழ முயற்சிக்க, அவளின் கரத்தைப் பிடித்து இழுத்து மீண்டும் தன் மீது விழ வைத்த ரன்வீர் நொடியில் அவளைத் தனக்குக் கீழ் கொண்டு வந்து, “அது எப்படி அவ்வளவு சீக்கிரம் எஸ்கேப் ஆகலாம்? பதிலுக்குப் பதில் தண்டனை கொடுக்க வேண்டாமா?” என மோகம் இழையோட கரகரப்பான குரலில் கேட்டவனை அச்சத்தோடு நோக்கினாள் மீரா.

 

உடனே மீராவின் இதழ்களைத் தன் இதழ்களால் அடைத்தவன் சொல் பேச்சு மாறாது அவளின் இதழ்களுக்கு தண்டனை வழங்க, மீராவோ பதிலுக்கு அவன் சிகையைப் பிடித்து நெறித்தாள்.

 

அதில் ரன்வீரின் மனக்கண்ணில் இதே போல் அம் முகம் அறியாப் பெண்ணுடன் இழைந்தது காட்சிகளாக ஓட, தீச்சுட்டார் போல் சட்டென மீராவை விட்டு விலகி எழுந்து நின்றான்.

 

ரன்வீரின் நடவடிக்கையில் மீரா அதிர்ந்து விழிக்க, “சா… சாரி… நீ…நீ போய் ரெடி ஆகு.” என்றவன் தன் வண்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

 

நொடிக்கு நொடி மாறும் கணவனின் குணத்தில் இதயத்தில் தீராக் காயத்தை உணர்ந்தாள் பாவை.

 

இங்கோ மனம் போன போக்கில் வண்டியை செலுத்திய ரன்வீருக்கு தன் மீதே வெறுப்பாக இருந்தது.

 

அவன் எவ்வளவு தான் முயன்றும் அன்றொரு நாள் பாரில் போதை மயக்கத்தில் நடந்ததை அவனால் மறக்க முடியவில்லை.

 

அதனை யாரிடமும் வெளிப்படுத்தும் அளவுக்கு மனமும் வரவில்லை.

 

ஆனால் மீராவுடன் இருக்கும் போதெல்லாம் காரணமே இன்றி அந் நினைவுகள் கிளம்புவதன் காரணம் தான் அவனுக்குப் புரியவில்லை.

 

இன்னொரு பெண்ணின் நினைவுடன் மனைவியை ஸ்பரிசிக்கவும் முடியவில்லை அவனால்.

 

எங்கு அதனாலேயே மீண்டும் மீராவைக் காயப்படுத்தி விடுவோமோ என்ற பயத்தில் தான் அவளை விட்டு விலகி இப்படி ஓடி வந்திருந்தான்.

 

அப் பெண் யார் என்று தெரிந்தாலாவது அப் பெண் தன்னுடன் இரவைக் கழித்து விட்டு இன்று வரை அமைதி காப்பதன் காரணத்தை அறிந்தால் சற்றாவது மனதுக்குத் திருப்தியாக இருக்கும் என எண்ணினான்.

 

வெகுநேரம் ரோட்டில் சுற்றி விட்டு ரன்வீர் வீடு வந்த நேரம் மீரா இருவருக்கும் தேவையான உடைகளை எடுத்து வைத்துத் தயாராகி அவனுக்காக ஹாலில் காத்திருந்தாள்.

 

ரன்வீர் வந்ததும் எழுந்து நின்ற மீரா, “எதுக்காக ட்ரெஸ் எடுத்து வைக்க சொன்னீங்க? எங்க போகப் போறோம்?” எனத் தயக்கமாகக் கேட்டாள்.

 

ஆனால் ரன்வீரோ மீராவின் கேள்விக்குப் பதிலளிக்காது உச்சி முதல் பாதம் வரை அவளை அணு அணுவாக ரசித்தான்.

 

ஆகாய நீலத்தில் சில்க் சேலை அணிந்து அதற்கேற்ற மெல்லிய நகைகளுடன் ஒப்பனைகள் ஏதுமின்றி தேவதை போல் இருந்தாள்.

 

ஆம்… அவன் கண்களுக்கு மீரா வானில் இருந்து தனக்காகவே இறங்கி வந்த தேவதை போலத் தான் தெரிந்தாள்.

 

சிறு வயதில் இருந்தே சினிமாத்துறையில் வளர்ந்தவனுக்கு அவனைச் சுற்றி இருந்த அனைவருமே வெள்ளைத் தோல் போர்த்திய நவநாகரீக யுவதிகளாகவே இருக்கவும் அது தான் அழகு என அவனுக்குள்ளேயே ஒரு விம்பத்தை உருவாக்கி வைத்திருந்தான்.

 

ஆனால் மீராவுடன் பழகிய பின்பு தான் அவனது தந்தை கூறியது போல் அவனது எண்ணம் எவ்வளவு தவறானது என்றும் உண்மையான அழகு எதில் இருக்கிறது என்பதையும் தெளிவாக உணர்ந்தான் ரன்வீர்.

 

அவனின் கண்களுக்கு இப்போது மீராவின் நிறமோ, படிப்போ, பழக்க வழக்கங்களோ தெரியவில்லை.

 

மாறாக அவளின் ஆழ் மனதும் அதன் அழகும் மட்டுமே தெரிந்தது.

 

நவநாகரீக ஆடை அணிவது தான் இன்றைய நாகரீகம் என நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு அவனது பட்டிக்காட்டு மனைவி சேலையையும் நாகரீகமாக அணியலாம் என்று நெற்றிப் பொட்டில் அடித்தது போல் காட்டி இருந்தாள்.

 

கொஞ்சம் கொஞ்சமாக ரன்வீரின் மனதில் மீரா அவனது மனைவி என்று ஆழமாகப் பதிந்து போனது. 

 

மனைவியின் அழகில் ரன்வீர் மதிமயங்கி நின்றிருக்க, “என்னங்க…” என்ற மீராவின் குரலில் சட்டென தன்னிலை அடைந்தவன், “ஆங்… என்ன கேட்ட?” எனக் கேட்டான் குழப்பமாக.

 

“எங்க போறோம்னு கேட்டேன்.” என்றாள் மீரா மீண்டும்.

 

“ஓ… போனதுக்கு அப்புறம் தெரிஞ்சிக்குவ. வா கிளம்பலாம்.” என்றவன் மீராவை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

 

நீண்ட நேரப் பயணத்துக்குப் பின் ரன்வீரின் வண்டி ஒரு அழகான கடற்கரையோரம் நின்றது.

 

களைப்பில் உறங்கி விட்டிருந்த மீரா ரன்வீரின் அழைப்பில் மெதுவாக இமைகளைப் பிரித்து சுற்றும் நோக்க, அவளது விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.

 

முதலில் வண்டியை விட்டு இறங்கிய ரன்வீர் மறுபக்கம் வந்து மீராவுக்காகக் கதவைத் திறந்து விட, அவசரமாக இறங்கிக் கொண்டவள் சுற்றியும் ஆசையாக ரசித்துப் பார்த்தாள்.

 

கடலலைகளின் ஓசை செவிகளை நிறைக்க, பௌர்ணமி நிலவின் வெளிச்சம் கடலில் பட்டு எங்கும் தெறிக்க, அவ்வளவு ரம்மியமாக இருந்தது அக் காட்சி.

 

போதாக்குறைக்கு ஒரு ஓரமாக அமைக்கப்பட்டிருந்த மூங்கில் வீடுகள்.

 

“இங்க தான் நாம தங்க போறோமா?” என ரன்வீரின் முகம் பார்த்து ஆசையாகக் கேட்டாள் மீரா.

 

தன்னவளின் முகத்தில் நொடிக்கு நொடி வந்து போன பாவனைகளை கண் எடுக்காமல் ரசித்தவன் மீராவின் முன் தன் கரத்தை நீட்டி, “போலாமா?” எனக் கேட்டான்.

 

தயக்கத்துடனேயே தன்னவனின் கரம் பற்றிய பெண்ணவளுக்கு இந் நொடிகள் அனைத்தும் சொர்க்கமாக இருந்தன.

 

இப்படியே இந்த நொடிகள் உறைந்து விடாதா என வேண்டினாள்.

 

முழுவதுமே மூங்கிலால் கட்டப்பட்டிருந்த அவ் வீட்டினுள் தொலைக்காட்சி, குளிரூட்டி என அத்தனையும் இருந்தன.

 

குளியலறையில் கூட அனைத்தும் மூங்கிலால் செய்யப்பட்டவை தான்.

 

அங்கு வந்ததுமே இருவரின் கைப்பேசிகளையும் அணைத்து வைத்து விட்டான் ரன்வீர்.

 

“பிடிச்சிருக்கா?” எனக் கேட்ட ரன்வீர் மீராவின் முகத்தில் வந்து போன உணர்வுகள் ஒவ்வொன்றையும் தன் மனக்கண்ணில் படம் பிடித்து சேமித்து வைத்தான்.

 

“ரொம்பவே…” எனப் புன்னகையுடன் கூறிய மீராவின் கரத்தைப் பற்றிய ரன்வீர், “வா… இன்னொரு இடத்துக்கு போகலாம்.” என்கவும் இம்முறை தயக்கம் இன்றி ஆவலாக அவனுடன் சேர்ந்து நடந்தாள் மீரா.

 

குடிசைக்கு மறு புறத்தில் கரையோரமாக மணமணக்கும் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு கேன்டில் லைட் டின்னர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

 

கிராமத்தில் வளர்ந்த அவளுக்கு இதெல்லாம் புதிது.

 

மீராவின் கரம் பற்றி அவ்விடம் அழைத்துச் சென்ற ரன்வீர் அவளுக்காக கதிரையை வெளியே இழுக்க, அதில் மீரா அமரவும் அவளுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டான் ரன்வீர்.

 

வெய்ட்டர் ஒருவர் வந்து இருவருக்குமான உணவைப் பரிமாற, அனைத்தையும் விழி விரித்து ஆச்சரியமாக நோக்கினாள் மீரா.

 

“சாப்பிடு…” என்ற ரன்வீரின் மயக்கும் குரலுக்குக் கட்டுப்பட்டு புன்னகையுடனேயே சாப்பிட்டாள்.

 

“நல்லா இருக்கா? பிடிச்சிருக்கா?” என ஆவலாகக் கேட்ட ரன்வீரிடம், “ரொம்ப நல்லாருக்கு. ரொம்ப பிடிச்சிருக்கு. எல்லாமே…” என்றாள் கண்களில் காதலை மொத்தமாகத் தேக்கி வைத்து.

 

முதல் முறை இவ்வளவு வெளிப்படையாக மனதில் பத்திரமாகப் பூட்டி வைத்திருந்த காதலை அதற்குரியவனிடத்தில் வெளிப்படுத்துகிறாள் மீரா.

 

தன்னவளின் கண்களில் தெரிந்த காதலில் திக்குமுக்காடிப் போனான் ரன்வீர்.

 

ஒரு வித மோன நிலையில் கட்டுண்டவர்களாக அமைதியாக இரவுணவை முடித்து விட்டு கரங்கள் கோர்த்துக் கொண்டு கடலலைகளில் காலை நனைத்தபடி இருவரும் நடந்தனர்.

 

கணவனின் இத் தீடீர் மாற்றம் மீராவுக்கு குழப்பமாகவும் வியப்பாகவும் இருந்தாலும் இந்த நொடிகளை ஆழமாக விரும்பினாள்.

 

பெரும் மௌனம் இருவரிடத்திலும்.

 

ரன்வீருக்கோ எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் மௌனம் காக்க, மீராவோ இந்த நொடிகள் இப்படியே நீள வேண்டும் என்ற வேண்டுதலுடன் மௌனமாக நடந்தாள்.

 

ஆனால் மீராவின் வேண்டுதல் கடவுளின் செவியை அடைந்ததா எனக் கேட்டால் கேள்விக்குறி தான்.

 

திடீரென வேகமாக வந்த ஒரு கடலலைக்கு மீரா நிலை தடுமாறி கடலில் சாய, வேகமாக அவளைத் தன்னை நோக்கி ரன்வீர் இழுத்த இழுப்பில் அவன் மார்பில் வந்து மோதினாள் பெண்ணவள்.

 

அவசரமாக ரன்வீரை விட்டு விலகி தயக்கத்துடன் நிலம் நோக்கியவளின் முகத்தைக் கரங்களில் ஏந்தியவன் அவளின் நெற்றியில் ஆரம்பித்து கண்கள், கன்னங்கள், நாசி என மெதுவாக இதழ் ஒற்றினான்.

 

மீராவின் விழிகள் தன்னால் மூடிக்கொள்ள, அவளின் உதட்டில் இருந்த மச்சத்திலும் ஒரு குட்டி முத்தத்தைப் பதித்து விட்டு அவற்றை மொத்தமாக சிறை பிடித்தான்.

 

திடீரென மீராவுக்கு அந்தரத்தில் மிதக்கும் உணர்வு தோன்றவும் மெதுவாக இமைகளைப் பிரித்துப் பார்க்க, ரன்வீர் தான் அவளின் இதழ்களுக்கு விடுதலை கொடுக்க விரும்பாது அவளை மொத்தமாகக் களவாடிவிடும் நோக்கில் தன்னவளைக் கரங்களில் ஏந்திக்கொண்டு மூங்கில் குடிசையை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

 

உள்ளே நுழைந்து கதவைத் தாழிட்டவன் பெண்ணவளை மஞ்சத்தில் கிடத்தி அவளில் மொத்தமாகப் படர்ந்தான்.

 

மீராவின் இதழ்களைக் கொய்து கொண்டே இருவரின் ஆடைகளுக்கும் சுதந்திரம் கொடுத்தான்.

 

முதல் முறை இதயம் முழுவதும் கோடி ஆசையுடன் பிடித்தே தன்னவளில் தொலைந்து போனான் ரன்வீர்.

 

அவனின் கரங்கள் உரிமையாக மீராவின் உடலில் அத்துமீறின.

 

எந்த மறுப்போ வெறுப்போ காட்டாது தன்னை மொத்தமாக உள்வாங்கிக் கொண்ட மனையாள் மீது ரன்வீருக்குக் காதல் பெருகியது.

 

ஆம்… காதல் தான்.

 

மீராவின் ஒவ்வொரு அசைவையும் காதலிக்கிறான்.

 

அவளின் சிணுங்கல் கூட அவனுக்கு மெல்லிசையாகத் தான் தோன்றியது.

 

எப்போதும் ரன்வீர் தான் மீராவின் உடலில் தன் ஆட்சியை நிலைப்படுத்துவான்.

 

ஆனால் இன்றோ தன்னவளின் ஆசை தீர அவளைத் தன்னை ஆட்சி செய்ய அனுமதித்தான்.

 

மீராவுக்கு எப்போதுமே ரன்வீரின் முறுக்கேறிய புஜங்களிலும் அவனின் படிக்கட்டுத் தேகத்திலும் கொள்ளை ஆசை.

 

இன்று ஆசை தீர அவற்றை ஸ்பரிசித்து இதழ்களால் அர்ச்சனை செய்தாள்.

 

கூடலின் வேகத்தில் திடீரென ரன்வீரின் கரம் பட்டு அருகில் இருந்த தொலைக்காட்சி ரிமோட் அழுந்தி தொலைக்காட்சி உயிர்ப்பிக்கப்பட்டது.

 

அதில் கூறப்பட்ட செய்தியைக் கேட்டு இருவரும் அப்படியே உறைந்து விட்டனர்.

 

ரன்வீர் மெதுவாகத் தலையைத் திருப்பி தொலைக்காட்சித் திரையை நோக்க, மீராவும் சற்றுத் தலையை மட்டும் நகர்த்தி தொலைக்காட்சித் திரையை வெறித்தாள்.

 

சினிமா பற்றிய கிசுகிசுகளுக்கு என்றே உருவாக்கப்பட்ட சேனல் அது.

 

அதன் பின்னால் அரசியல் முகங்களின் தலையீடு இருந்ததால் அச் சேனலை இன்று வரை யாராலும் முடக்க முடியவில்லை.

 

அதில் முன் தினம் இரவு கொண்டாட்டத்தில் ரன்வீரையும் சனாவையும் சேர்த்து வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஓடிக் கொண்டிருந்தன.

 

சனாவும் ரன்வீரும் முத்தமிட்டுக்கொள்வது போல் சிலவை மார்பிங் செய்யப்பட்டு இருந்தன.

 

சிலவை வேண்டும் என்றே அக் கோணத்தில் எடுத்து இருந்தனர்.

 

அனைத்திலும் உச்சகட்டமாக ரன்வீர் சனாவுடன் சேர்ந்து அவளது ஃப்ளாட்டுக்குள் நுழைவது, ரன்வீரின் மடியில் சனா தலை வைத்துப் படுத்திருப்பது, அவனின் மார்பில் சாய்ந்து கொண்டு அழுவது, காலையில் ரன்வீர் தனியாக அங்கிருந்து வெளியேறுவது என ஒவ்வொரு புகைப்படங்களும் அவ்வளவு தெளிவாக இருந்தன.

 

இடைப்பட்ட நேரத்தில் இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும் என மிக மோசமான முறையில் சித்தரித்து கதை கட்டிக் கொண்டிருந்தனர்.

 

ரன்வீருக்கு அதிர்ச்சியில் பேச நா எழவில்லை.

 

எவ்வளவு பெரிய கற்பனை.

 

அதுவும் நடந்தது ஒன்று, புகைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது வேறு விதம்.

 

மெதுவாகத் திரும்பி மனைவியின் முகம் நோக்க, அவளின் முகத்தில் எந்த உணர்வையும் கண்டு பிடிக்க முடியவில்லை.

 

ஆனால் திரையை வெறித்துக் கொண்டிருந்தவளின் விழிகள் விடாது கண்ணீரை சொரிந்தன.

 

“மீரா… இதெல்லாம் சத்தியமா…” என ஏதோ கூற வந்தவனை இடைமறித்தவள், “ராத்திரி அந்தப் பொண்ணு கூட தான் இருந்தீங்களா?” எனக் கேட்டாள் அழுத்தமாக.

 

“ஆமா மீரா. ஆனா நீ நினைக்கிற மாதிரி இல்ல.” என்ற ரன்வீர் தன் பக்க நியாயத்தைப் புரிய வைக்க முயன்றான்.

 

“அப்போ உங்க கன்னத்துல இருந்த அந்த லிப்ஸ்டிக் மார்க்?” என மீண்டும் இடையிட்டாள்.

 

ரன்வீர் பெருமூச்சுடன் ஆமோதிப்பாகத் தலையசைக்க, நொடியும் யோசிக்காது தன் மீது கிடந்தவனை முழு பலம் கொண்டு தள்ளி விட்டாள்.

 

உடனே கட்டிலை விட்டு இறங்கி வேக வேகமாகத் தன் உடைகளை அணிந்து கொண்டு வெளியேறினாள் மீரா.

 

ரன்வீரும் உடனே தன் உடைகளை அணிந்து கொண்டு மீராவைப் பின் தொடர்ந்து ஓடினான்.

 

அவளோ வெற்றுப் பாதத்துடன் பாதையை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

 

அவசரமாக வண்டியை இயக்கி அவள் அருகில் நிறுத்திய ரன்வீர், “மீரா எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம். முதல்ல வண்டில ஏறு. ராத்திரி நேரம் தனியா எங்க போற?” என்றவனின் பேச்சைக் காதில் வாங்காது தன் பாட்டில் நடந்தாள் மீரா.

 

அவளுடன் சேர்ந்தவாறு வண்டியை ஓட்டிய ரன்வீர் வேகமாக ஹார்னை அடித்து, “மீரா ஸ்டாப்… எதுவா இருந்தாலும் வீட்டுக்குப் போய் பார்த்துக்கலாம். வண்டில ஏறு. இப்போ மட்டும் நீ நிற்கலன்னா சத்தியமா சொல்றேன் வண்டிய எங்கயாவது கொண்டு போய் இடிச்சிட்டு மொத்தமா போய் சேர்ந்துடுவேன்.” என்றான் ஆக்ரோஷமாக.

 

அதில் மீராவின் நடை சட்டெனத் தடைப்பட்டது.

 

அவன் சொன்னால் நிச்சயம் செய்யக் கூடிய ஆள் தான் என இத்தனை மாதப் பழக்கத்தில் நன்றாகப் புரிந்து வைத்திருந்தாள் மீரா.

 

மீரா சிலையாக நிற்கவும் அவள் அருகில் வண்டியை நிறுத்திய ரன்வீர் அவளுக்காகக் கதவைத் திறந்து விட, அமைதியாக ஏறிக் கொண்டாள் பெண்ணவள்.

 

அவளாலும் வேறு என்ன தான் செய்ய முடியும்.

 

என்ன தான் வீம்பு பிடித்துக்கொண்டு தனியாகக் கிளம்பினாலும் திக்குத் தெரியாத இடத்தில் அவள் எங்கு செல்வாள்?

 

மீரா வண்டியில் ஏறியதும் வண்டியைக் கிளப்பிய ரன்வீர், “மீரா…” என ஏதோ கூற வர, அவன் முன் கரம் நீட்டித் தடுத்த மீரா, “தயவு செஞ்சி எதுவும் பேசாதீங்க. மீறி ஒரு வார்த்தை பேசுனீங்கன்னா வண்டிய விட்டு கீழ குதிச்சிடுவேன். எங்களாலயும் சொன்னத செய்ய முடியும்.” என அழுத்தமாகக் கூறவும் அதன் பின்னும் வாயைத் திறப்பானா ரன்வீர்?

 

இருவருக்கும் இடையில் மௌனமே ஆட்சி செய்ய, வண்டி சென்னையை நோக்கி சீறிப் பாய்ந்தது.

 

ஜன்னலுக்கு வெளியே வெறித்துக் கொண்டு வந்த மீராவின் விழிகள் விடாது கண்ணீரை சொரிந்தன.

 

தன்னவளின் விழிகள் சிந்திய கண்ணீரில் ரன்வீரின் இதயம் பற்றி எரிந்தது.

 

அவன் கையில் மட்டும் அப் புகைப்படக்காரன் கிடைத்தால் துவம்சம் செய்து விடும் அளவுக்கு கோபம் இருந்தது.

 

எப்போதும் வண்டியில் ஏறி சற்று நேரத்திலேயே உறங்கி விடும் மீரா இன்று பல மணி நேரப் பயணத்திலும் ஒரு சொட்டு கண் மூடவில்லை.

 

விடிந்தும் விடியாததுமாக இருந்த நேரத்தில் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

 

முதல் ஆளாக வண்டியை விட்டு இறங்கி வீட்டினுள் ஓடிச் சென்ற மீரா அறைக்குள் நுழைந்து தான் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் விட்டெறிந்தாள்.

 

அணிந்திருந்த சேலையை இழுத்து உதறியவள் ஷவருக்கு அடியில் நின்று வாய் விட்டுக் கதறி அழுதாள்.

 

மீராவைத் தொடர்ந்து வேகமாக உள்ளே வந்த ரன்வீர் குளியலறைக்கதவை பலம் கொண்ட மட்டும் தட்டினான்.

 

“மீரா… ப்ளீஸ் அன்டர்ஸ்டேன்ட். நீ பார்த்த எதுவுமே நிஜம் கிடையாது.” என்றான் ரன்வீர் கெஞ்சலாக.

 

“அப்போ நேத்து ராத்திரி முழுக்க நீங்க அந்தப் பொண்ணு கூட தங்கலயா? இல்ல உங்க கன்னத்துல இருந்த அந்த லிப்ஸ்டிக் கறை தான் பொய்யா? அந்த ஃபோட்டோஸ் எல்லாம் பொய்யா?” எனக் கேட்டாள் மீரா உள்ளேயிருந்து ஆக்ரோஷமாக.

 

முதல் தடவை மீராவை இவ்வளவு ஆக்ரோஷமாகப் பார்க்கிறான் ரன்வீர்.

 

சாது மிரண்டால் காடு கொள்ளாது என சும்மாவா சொன்னார்கள்?

 

எப்போதும் எதையும் அமைதியாகக் கடந்து விடும் மனைவி இன்று தனக்குப் பேசக் கூட வாய்ப்பளிக்காததை எண்ணி ரன்வீருக்கு ஆயாசமாக இருந்தது.

 

ஒரு பெண் எல்லாவற்றையும் பொறுத்துப் போவாள். 

 

ஆனால் தன் கணவனை இன்னொரு பெண்ணுடன் பங்கு போடுவதை மட்டும் அவளால் தாங்க முடியாது. 

 

அது தான் இப்போது மீராவின் நிலையும்.

 

“என்னை நம்பு மீரா… ப்ளீஸ்..” எனக் கெஞ்சிய ரன்வீரின் கண்கள் கூட கலங்கி விட்டன.

 

எங்கு தன்னவளை இழந்து விடுவோமோ என்று அச்சமாக இருந்தது.

 

ரன்வீர் கூறியதைக் கேட்டு உடல் முழுவதும் ஈரத்துடன் தலையில் இருந்து தண்ணீர் சொட்ட சொட்ட வெறி கொண்டவள் போல வேகமாய் குளியலறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த மீரா அவளின் ஆக்ரோஷத்தில் அதிர்ந்து நின்றிருந்த ரன்வீரின் சட்டைக் காரைப் பற்றி, “எப்படி நம்ப சொல்றீங்க? சொல்லுங்க. எப்படி நம்ப சொல்றீங்க? எப்படி எனக்கு உங்க மேல நம்பிக்கை வரும்? எனக்கு நம்பிக்கை தர மாதிரி இதுவரைக்கும் நீங்க என்ன பண்ணி இருக்கீங்க? சொல்லுங்க… சொல்லுங்க. ஏன் அமைதியா நிற்கிறீங்க? எனக்கு உங்க மேல நம்பிக்கை வர மாதிரி ஒரு துரும்ப கூட அசைச்சி இருக்கீங்களா நீங்க?” என வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.

 

மீராவின் கேள்வியில் இருந்த நியாயத்தில் ரன்வீருக்கு வார்த்தைகளுக்கே பஞ்சமாகிப் போயிற்று.

 

“சொல்ல முடியாதுல்ல. முடியாது. எப்படி சொல்லுவீங்க? அப்படி ஏதாவது பண்ணி இருந்தா தானே.” என்றாள் மீரா நக்கலாக.

 

அவளது வார்த்தைகளில் இருந்த வலியை ரன்வீர் உணராமல் இல்லை.

 

மீரா முன்னால் குற்றவாளியாகத் தலை குனிந்து நின்றான் அவன்.

 

பட்டென ரன்வீரின் காலரை விடுவித்து விட்டு அவனை வேகமாகத் தள்ளி விட்ட மீரா, “போங்க… தயவு செஞ்சி என் கண் முன்னாடி நிற்காம இங்க இருந்து போயிடுங்க.” என்றாள் கோபமாக.

 

“நான் சொல்ல வரத ஒரு தடவை காது கொடுத்து கேளு மீரா…” என ரன்வீர் கெஞ்சவும், “ஆஹ்……..” என செவிகளைக் கரங்களால் மூடிக்கொண்டு அவ் அறையே அதிரக் கத்திய மீரா, “ஐயோ… ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க? எனக்கு உங்கள பார்க்கவே பிடிக்கல. உங்க முன்னாடி நிற்குற ஒவ்வொரு செக்கனும் அப்படியே நெருப்பு மேல நிற்கிற மாதிரி இருக்கு.” என்றாள் கண்ணீருடன்.

 

“மீரா…” என்றவாறு ரன்வீர் அவளை நெருங்க முயல, “உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாது இல்ல.” எனக் கேட்ட மீரா சுற்றியும் பார்த்து விட்டு அங்கு டீப்பாயில் பழம் வெட்ட வைத்திருந்த கத்தியை வேகமாக எடுத்து தன் கழுத்தில் வைத்துக் கொண்டாள்.

 

“மீரா…” என ரன்வீர் உச்சஸ்தானியில் அதிர்ந்து கத்த, “இன்னும் ஒரு நிமிஷம் நீங்க இங்க நின்னீங்கன்னா சத்தியமா கழுத்த அறுத்துக்கிட்டு செத்து போவேன்.” என ஆவேசமாகக் கூறிய மீரா கத்தி விளிம்பைத் தன் கழுத்தில் வைத்து அழுத்த முயன்றாள்.

 

“ஓக்கே ஓக்கே…” என்றவாறு அவசரமாக இரண்டடி பின்னே நகர்ந்த ரன்வீர், “போயிடுறேன். நான் போயிடுறேன். நீ அதைக் கீழ போடு.” என்றான் கெஞ்சலாக.

 

மீராவோ அவனை வெறித்தவாறு கத்தியை இன்னும் அருகில் கொண்டு வந்தாள்.

 

அவசரமாக அறைக்கு வெளியே சென்று நின்று கொண்ட ரன்வீர், “ஓக்கே… நான் போயிடுறேன். அதைக் கீழே போடு. நான் போயிடுறேன்.” என்றான் பதட்டமாக.

 

கத்தியைக் கழுத்தில் வைத்துக் கொண்டே கதவின் அருகே வந்த மீரா ரன்வீரின் முகத்தை வெறித்தவாறு கதவை சாத்த முயன்றாள்.

 

அவசரமாக இடையில் கரத்தை வைத்துத் தடுத்த ரன்வீர், “நான் இப்போ போறேன் மீரா. இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவ கட்டாம நான் திரும்ப வர மாட்டேன்.” என்றான் அழுத்தமாக.

 

அவனுக்குப் பதிலளிக்காது மீரா பட்டெனக் கதவை சாத்தித் தாழிட்டாள்.

 

மீரா கதவை மூடவும் நெஞ்சில் கை வைத்துக் கொண்டு அதில் சாய்ந்து நின்று நீண்ட மூச்சுக்களை இழுத்து விட்டான் ரன்வீர்.

 

ஒரு நொடி உயிர் பயத்தையே காட்டி விட்டாளே.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
17
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment