Loading

 

காதல் 5

“Toxic parenting – one of the most serious problems among Indian parents… ஒரு குழந்தைய பெத்ததால அதோட தலையெழுத்தை நிர்ணயிக்குற எல்லா உரிமையும் தங்களுக்கு மட்டும் தான் இருக்குனு நினைச்சுக்கிறாங்க பேரண்ட்ஸ்… ஒரு குழந்தைக்கு நல்லது எது கெட்டது எதுனு சுட்டிக்காட்டுற கடமை, அதை நல்வழிப்படுத்துற பொறுப்பு இதெல்லாம் தாண்டி அவங்க சுயமா முடிவெடுத்துடக்கூடாதுங்கிற பிடிவாதம் தான் முன்னாடி நிக்குது நிறைய பேரண்ட்சுக்கு… அவங்களோட சந்தேகம், கோவம், பிடிவாதம் இது எல்லாமே குழந்தைங்களுக்கும் அவங்களுக்கும் இடையில பெரிய இடைவெளிய தான் உண்டாக்கும்… சோ இது பெத்தவங்க முழிச்சிக்க வேண்டிய நேரம்… என் பிள்ளைக்கு நான்னா பயம்னு பெருமையா சொல்லிக்கிற பேரண்ட்சா நீங்க இருந்திங்கனா please change your attitude towards your children”

 

     -ஜெர்ரி

 

நியூமரோ 28 இட்டாலியன் ரெஸ்ட்ராண்ட், சன்ரைஸ் ரோடு, ரவுண்ட் ராக்…

 

அலெஸாண்ட்ரோவுடன் அமர்ந்து ரெட் ஒயினை அருந்திக்கொண்டிருந்தான் டாம். மதியம் ஆரம்பித்த இறுக்கம் இன்னும் குறையவில்லை அவனிடம்.

 

ரெஸ்ட்ராண்டிற்கு வந்ததிலிருந்து அவனிடம் நிலைத்திருந்த அமைதி அலெஸாண்ட்ரோவிற்குள் எண்ணற்ற கேள்விகளை எழுப்பியது. ஆனால் பதிலளிக்கும் மனநிலையில் அவனது நண்பன் இல்லையே!

 

டாமின் எண்ணம் முழுவதும் ஆர்யாவை ரவி எதுவும் செய்துவிடுவானோ என்பதில் தான் குவிந்திருந்தது. அவன் எப்படிப்பட்டவனென தெரிந்தும் மீண்டும் அவனது வீட்டுக்கே போன ஆர்யாவின் மீதும் அவனுக்கு வருத்தம் தான்.

 

“டாம்…”

 

அலெஸாண்ட்ரோ அவனது அமைதியை உடைத்தான்.

 

நண்பனை நிமிர்ந்து பார்த்தவன் “ஜெர்ரி என் மூளைய குழப்புறா டூட்” என்றான் எரிச்சலோடு.

 

“ஜெர்ரி?” யாரென புரியாமல் கேட்டான் அலெஸாண்ட்ரோ.

 

கடைசி மிடறு ஒயினை வாயில் சரித்தவனோ “ஆர்யா” என்றான் சலித்துப்போன குரலில்.

 

அலெஸாண்ட்ரோவுக்கு நண்பனின் பேச்சு ஆச்சரியத்தைக் கொடுத்தது. டாம் அந்தப் பெண்ணை சந்தித்து இரண்டு நாட்கள் ஆகியிருக்குமா? இந்த இரு நாட்களில் அவர்கள் சேர்ந்து இருந்தது மிஞ்சி மிஞ்சி போனால் சில மணி நேரங்கள் மட்டுமே.

 

அதற்குள் அந்தப் பெண்ணுக்கு ‘ஜெர்ரி’ என்று செல்லப்பெயர் வைத்து அவளது நடவடிக்கைகளை எண்ணி எரிச்சலடையும் அளவுக்கு டாம் முன்னேறிவிட்டான் என்பதே அலெஸாண்ட்ரோவின் ஆச்சரியத்துக்குக் காரணம்.

 

“ஐ காண்ட் அண்டர்ஸ்டாண்ட் யுவர் கன்பியூசன் டாம்… அந்தப் பொண்ணுக்கு ஏன் இவ்ளோ இம்பார்டென்ஸ்?”

 

டாமின் புருவங்கள் சுருங்கின.

 

“பிகாஸ்….” யோசனையோடு இழுத்தவன் கண்ணாடி கோப்பையை ‘க்ளிங்’ என்ற சத்தத்தோடு மேஜை மீது வைத்தான்.

 

“பிகாஸ்?”

 

“பிகாஸ் ஐ அம் அட்ராக்டட் டுவார்ட்ஸ் ஹெர்… ஷீ இஸ் லைக் அ டைமண்ட்…. ஆனா அவ தகுதிக்குக் கொஞ்சம் கூட பொருத்தமில்லாத முட்டாள் கூட அவளோட வாழ்க்கைய பிணைச்சுக்கப்போறா… அதுவும் அவ அப்பா ஏற்பாடு செஞ்ச லைஃப்ங்கிறதால… ஹவ் ரிடிகுலஸ் இஸ் திஸ்? ஐ காண்ட் அண்டர்ஸ்டாண்ட் தி இந்தியன் கேர்ள்ஸ் மைண்ட்செட்”

 

மீண்டும் எரிச்சலோடு முடித்தான் டாம்.

 

அவன் தோளில் தட்டி சிரிக்க ஆரம்பித்தான் அலெஸாண்ட்ரோ.

 

“சிரிக்காத… அவளுக்கு எதுவும் ஆகிடுமோனு மனசுக்குள்ள ஒரு பயம் வந்துட்டுப் போகுது”

 

கோபத்தை அடக்கிக்கொண்டு அடுத்த குவளை ரெட் ஒயினைக் குடிக்க ஆயத்தமானான் அவன்.

 

“ஒரு இந்தியன் பொண்ணு உன் மூளைய இந்தளவுக்குச் சூடாக்கிருக்கா… அதை நினைச்சு சிரிச்சேன் டாம்… நம்மளை மீறி நடக்குற எதுக்கும் நம்ம பொறுப்பாக முடியாது… அதை புரிஞ்சிக்க”

 

அதுவும் சரி தானே! ஆர்யாவின் பாதுகாப்பைப் பற்றி அவளுக்கே இல்லாத அக்கறை தனக்கு எதற்கு? எப்படியோ போகட்டுமென அவளைப் பற்றிய நினைவுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு ரெட் ஒயினை அருந்த எத்தனித்தவனை என்னைக் கொஞ்சம் கவனியேன் என்பது போல அழைத்தது அவனது மொபைல்.

 

ஏதோ புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது.

 

அதை துண்டிக்கப்போனவனின் விரல் அழைப்பது ஆர்யாவாக இருந்தால் என்ற சிந்தனையில் அப்படியே நின்றது.

 

“யார் கால் பண்ணுறாங்க?”

 

அலெஸாண்ட்ரோ கேட்கவும் அழைப்பை ஏற்றவன் அவனைப் பேசவிடாமல் கேட்ட ஆர்யாவின் அழுகுரலில் ஸ்தம்பித்துப் போனான்.

 

“ஜெர்ரி…”

 

பதற்றமாக அழைத்தான்.

 

“டாம்…. ப்ளீஸ்… இங்க வீட்டுல… எனக்குப் பயமா இருக்கு டாம்”

 

ஆர்யா பயத்தில் அழுதுகொண்டே பேசினாள். பின்னணியில் ஏதோ டம்டம்மென்ற சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. என்ன நடக்கிறதென அவன் யூகிக்கும் முன்னரே அழைப்பு தானாக துண்டிக்கப்பட்டது.

 

ஆர்யாவுக்கு என்னவானதோ என பதறிக்கொண்டு எழுந்தவன் அலெஸாண்ட்ரோவைத் தன்னோடு வரும்படி அழைத்தான்.

 

“எங்க?”

 

“ஜெர்ரி தான் கால் பண்ணுனா… அவ ஏதோ ஆபத்துல இருக்கா… பயமா இருக்குனு அழுறா டூட்”

 

சற்றும் தாமதிக்காமல் அலெஸாண்ட்ரோவோடு கிளம்பினான் டாம்.

 

சீறி பாய்ந்த அவனது கார் அட்லாண்டிஸ் ஹௌசிங் பவுண்டேசனில் நின்றதும் வேகமாக இறங்கியவன் ஆர்யாவின் மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டபடி முன்னேறினான்.

 

எந்த வீடு என தெரியாமல் எங்கே போய் தேடுவது அவளை?

 

மேனேஜ்மெண்ட் ஆபிசில் அங்கு தங்கியிருக்கும் இந்தியர்களைப் பற்றி விசாரித்தார்கள். கெஸ்டாக தங்கியிருக்கும் இந்தியப்பெண்ணுக்கு ஆபத்து என டாம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ரவியின் வீட்டுக்கு அருகே உள்ள வயதான மெக்சிகோ பெண்மணி ஒருவர் அங்கே வந்தார்.

 

“என் நெய்பர் வீட்டுல பார்ட்டி நடக்குது… அங்க ஒரு பொண்ணோட அழுகுரல் கேக்குது… கொஞ்சம் என்னனு வந்து பாருங்க ப்ளீஸ்”

 

அது ஆர்யாவாக இருக்குமோ என அங்கிருந்த அதிகாரியோடு சேர்ந்து மெக்சிகோ பெண்மணியைத் தொடர்ந்தான் டாம்.

 

அவர்கள் போய் நின்ற வீட்டில் சத்தமாக பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. ஒரே புகைமயம்.

 

இருமிக்கொண்டே உள்ளே நுழைந்தவர்கள் அங்கே போதையேறிக் கிடந்த இளைஞர்கள் இளம்பெண்களைக் கடந்து அழுகுரல் கேட்ட திசையிலிருந்த அறைக்குச் சென்றனர்.

 

அங்கே கண்ட காட்சியில் டாமின் கை நரம்புகள் புடைத்தெழுந்தன. பெருங்கோபத்துடன் அறைக்குள் பிரவேசித்தவன் போதையில் ஆர்யாவை முத்தமிட முயன்று கொண்டிருந்த ரவியைப் பிடித்து இழுத்து தரையில் தள்ளினான்.

 

அவன் நிலை தடுமாறி விழுந்தும் டாமின் கோபம் அடங்கவில்லை. விழுந்தவனின் வயிற்றில் ஷூ கால்களால் சரமாரியாக உதைத்தான். அவன் போதையில் ஆர்யாவிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதை கண்கூடாக பார்த்த பிறகும் அகிம்சையைக் கையாளப் பிடிக்கவில்லை டாமிற்கு.

 

வருங்கால மனைவியே என்றாலும் சம்மதமின்றி அவளைப் பாலியல் ரீதியாக அணுகுவது எந்த நாட்டிலும் குற்றமே!

 

“ஆ…ம்ம்மா… வேண்டா…ம்ம்ம்”

 

ரவியின் அலறலில் சில இளைஞர்கள் அங்கே வர முயல அவர்களை அலெஸாண்ட்ரோ கவனித்துகொண்டான்.

 

ரவியை நையப் புடைத்த டாம் மேனேஜ்மெண்ட் அதிகாரி 911 அவசர உதவிக்கு அழைத்திருப்பதாகக் கூறியதும் அவனை விடுவித்தான்.

 

“யூ ஸ்கவுண்ட்ரல், இனிமே ஆர்யா மேல உன் பார்வை பட்டுச்சுனா கூட ஐ வில் கில் யூ”

 

வலியில் துடித்தவனை எச்சரித்துவிட்டு அறையின் மூலையில் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்த ஆர்யாவிடம் சென்றான்.

 

இன்னும் அவளது நடுக்கம் தீரவில்லை. டாம் அருகில் வந்ததும் அழுகையோடு அவனை அணைத்துக்கொண்டவளின் கண்ணீர் ரவியைக் கொல்லுமளவுக்கு டாமை உந்தியது.

 

அவனது கரங்கள் ஆதரவாக அவளை அணைத்துக்கொண்டன.

 

“ஒன்னுமில்ல ஜெர்ரி… பயப்படாத”

 

“என்னை… இங்…க இருந்து… கூட்டிட்டுப் போ டாம்”

 

கேவல் வந்தது அவளிடமிருந்து.

 

“ஷ்யூர் ஜெர்ரி… இனிமே நீ என் கூட தான் இருக்கப் போற”

 

உறுதியாய் சொன்னவனின் உதடுகள் அவளது சிகையில் பதிந்தன.

 

அலெஸாண்ட்ரோ சமையலறை ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து வந்த தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்டினான்.

 

அதை வாங்கும் தெம்பு கூட ஆர்யாவுக்கு இல்லை. பாட்டிலை கை நழுவவிட்டவளுக்கு இன்னும் நடுக்கம் தீரவில்லை.

 

டாம் பாட்டிலை திறந்து அவளுக்குப் புகட்டியதும் தண்ணீரைக் குடித்தாள்.

 

அதற்குள் அவசர உதவி எண்ணுக்கு அழைத்து விவரம் சொன்னதால் காவல்துறையினர் வந்துவிட்டார்கள்.

 

வந்தவர்கள் நடந்ததை ஆர்யாவிடம் விசாரிக்க அவளும் நடுங்கிய குரலைக் கட்டுப்படுத்திக்கொண்டு கோர்வையாக என்ன நடந்ததென சொல்ல ஆரம்பித்தாள்.

 

வழக்கம் போல அலுவலகத்திலிருந்து வந்த ரவி தன்னுடன் பணியாற்றுபவர்களுக்கு வீட்டில் சிறிய பார்ட்டி கொடுக்கவிருப்பதாக கூறியுள்ளான். பின்னர் தோழர்கள் வருவார்கள் என பார்ட்டிக்குத் தேவையானதை வாங்குவதாகச் சொல்லி மதுபானங்கள் சில மாத்திரைகளை வாங்கியுள்ளான்.

 

முதலில் சாதாரணமாக ஆரம்பித்த பார்ட்டி மதுவின் ஆதிக்கத்தால் திசை மாறியுள்ளது. அதிலும் ரவி போதை தலைக்கேறி ஆர்யாவிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதும் நிலமை படுமோசமாகிவிட்டதை உணர்ந்தவள் உடனே டாமின் எண்ணுக்கு அழைத்து விவரம் தெரிவித்திருக்கிறாள்.

 

பக்கத்து வீட்டு மெக்சிகோ பெண் மட்டும் வாக்கிங் போவதற்காக வெளியே வரவில்லை என்றால் தன் நிலை மோசமாகியிருக்குமென கண்ணீருடன் அவள் கூறவும் டாமிற்கு ரவியைக் கொல்லும் அளவுக்கு வெறி வந்துவிட்டது.

 

காவல்துறையினர் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை மாத்திரை வடிவில் உட்கொண்டதாகவும், பாலியல் ரீதியில் ஒரு பெண்ணை துன்புறுத்த நினைத்ததற்காகவும் ரவியையும் அவனுடன் இருந்தவர்களையும் கைது செய்ததும் கொஞ்சம் வெறி அடங்கியது.

 

அடுத்து என்ன என புரியாமல் திகைத்தவளைத் தன்னுடன் வருமாறு அழைத்தான் டாம்.

 

“ஐ ஹோப் யூ வோண்ட் ரெஃப்யூஸ் திஸ் டைம்”

 

தான் அழைத்த குரலுக்குப் பதறிப்போய் ஓடி வந்தவனிடம் எப்படி மறுப்பு கூறுவாள் அவள்? சம்மதமாகத் தலையசைத்தாள்.

 

“பேக் யுவர் திங்ஸ்… நம்ம இப்பவே கிளம்புறோம்”

 

டாம் சொன்னதும் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டவள் பெரும் நிம்மதியோடு அவனுடன் கிளம்பினாள்.

 

காரில் ஏறும்போது அலெஸாண்ட்ரோ அவர்களோடு வரவில்லை. ரெஸ்ட்ராண்டில் வேலை இருக்கிறதென கேப் புக் செய்துவிட்டான் அவன்.

 

டாமும் ஆர்யாவும் மட்டும் காரிலேறிக்கொண்டனர். கார் டாமின் வீடு இருந்த மார்க்கத்துக்கு போவதற்கு பதில் வேறு திசையில் செல்வதைக் கூட உணராதவளாக அதிர்ச்சியின் பிடியில் இருந்தாள் ஆர்யா.

 

கார் ஓல்ட் வெஸ்ட் ஆஸ்டினுக்குச் சென்று கொண்டிருந்தது. டாம் கார் ஓட்டுவதும் ஓரக்கண்ணால் ஆர்யாவைக் கவனிப்பதுமாக இருந்தான்.

 

ஓல்ட் வெஸ்ட் ஆஸ்டினின் 1800 ஏ லேனை அடைந்ததும் தான் வேறிடத்துக்கு வந்ததே ஆர்யாவின் மூளையில் உறைத்தது.

 

“இது… இதுவா உன்னோட வீடு?”

 

கண்கள் மருள அவள் கேட்டதும் ஆமென்றவன் காரை கராஜில் நிறுத்திவிட்டு அவள் இறங்குவதற்காக கதவைத் திறந்துவிட்டான்,

 

ஆர்யாவின் மருட்சி குறையவில்லை என்றதும் டாம் அன்று இருந்த வீடு அலெஸாண்ட்ரோவுடையது என்ற உண்மையைக் கூறினான்.

 

“அன்னைக்கு இருந்த அவசரத்துல உன்னை அங்க தங்க வச்சிட்டேன் ஜெர்ரி… இது தான் என்னோட ஹோம்”

 

மரங்கள் சூழ்ந்த ஃப்ரன்ட் மற்றும் பேக் யார்டுக்கு மத்தியில் வெண்முத்து போல நின்றது அவனுடைய வீடு.

 

சற்று தயங்கியபடி அவனைத் தொடர்ந்தாள் ஆர்யா.

 

“இப்ப நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு ஜெர்ரி…. நான் டின்னர் ப்ரிப்பேர் பண்ணுறேன்… நாளைக்கு மானிங் எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்” என்றான் டாம்.

 

எவ்வளவு அனுசரணையானவன் இவன்! கடல் கடந்து வந்தவளுக்கு இவனோடு வந்த பிணைப்புக்கு என்ன பெயர்? டாமுக்கும் இவளுக்கும் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பழக்கம் கூட இல்லை. இருப்பினும் தக்க சமயத்தில் காப்பாற்றி இப்போது தங்குவதற்கு இடமும் அளித்திருக்கிறான்.

 

கண்களில் நன்றியோடு “யூனிவர்சிட்டி போனதும் நான் வேற வீடு பாத்துப்பேன் டாம்… அது வரைக்கும் தங்குறதுக்கு என்ன ரென்டோ அதை குடுத்துடுறேன்” என அவள் சொன்னது தான் தாமதம் டாமின் முகம் மாறியது.

 

இறுகிய முகத்தோடு “பணம் தானே? இங்க இருந்து போறப்ப வாங்கிக்கிறேன்… அவசர அவசரமா இன்னொரு வீட்டைத் தேடணும்னு அவசியமில்ல…. நான் ஒன்னும் உன்னோட ஃபியான்ஸ் மாதிரி உன் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்க மாட்டேன்” என்று சொல்லவும் ஆர்யாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

 

“அதுக்காக இல்ல டாம்…”

 

“போதும்… அந்தப் பக்கம் இருக்குற கெஸ்ட் பெட்ரூமை நீ யூஸ் பண்ணிக்க… வீட்டுக்கு மட்டும் ரெண்ட் குடுப்பியா? இல்ல சாப்பிடுற சாப்பாட்டுக்கும் பணம் குடுப்பியா? க்ளியரா சொல்லிட்டா எனக்கு வசதியா இருக்கும்”

 

“டாம்”

 

கண்களை இறுக மூடி தனது கோபத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தான் அவன்.

 

“எல்லாத்துக்கும் பணம் மதிப்பீடு ஆகாது ஜெர்ரி… போய் ரெஸ்ட் எடு… டின்னர் ரெடியானதும் கூப்பிடுறேன்” என்றவன் சமையலறைப்பக்கம் போய்விட்டான்.

 

டாமின் இந்த சுணக்கம் ஆர்யாவை வினோதமான வகையில் பாதித்தது. அவன் சிரிக்கும் போது பச்சை நிற விழிகள் மரகதம் போல மின்னும். அதில் தெறிக்கும் கவர்ச்சிக்கு அவள் அடிமை என்றே சொல்லலாம். ஆண்களின் சிரிப்புக்குக் கூட வசீகரம் உண்டு என்பதை அவனைக் கண்ட பிறகே அறிந்துகொண்டாள் ஆர்யா.

 

அப்படி ரசித்த பிற்பாடு அவனது சிரிப்பற்ற சிடுசிடு வதனம் பெண்ணவளை வதைக்க தானே செய்யும். பெருமூச்சோடு டாம் கை காட்டிய அறைக்குள் சென்றவள் ஆசுவாசமுற்றாள்.

 

சமையலறையில் தனக்கும் அவளுக்கும் இரவுணவு சமைக்க ஏப்ரன் சகிதம் ஆயத்தமாகிக்கொண்டிருந்த டாமின் நிலையோ கொதிநிலை என்று கூறலாம்.

 

அவ்வளவு கோபம்! தான் செய்யும் அனைத்தையும் நன்றிக்கடன் என்ற கண்ணாடியை அணிந்துகொண்டு பேசும் ஆர்யாவின் செயல் அவனுக்குள் கிளறிய கோபத்தைத் தணிக்கும் வடிகாலாக சமையலைத் தேர்ந்தெடுத்தவன் இருவருக்கும் சேர்த்து எளிமையாகச் சமைக்க ஆரம்பித்தான்

 

ஸ்க்ராம்பிள்ட் எக் மற்றும் சாண்ட்விச் தான் இரவுணவு. டயட் கோக் இருக்கிறது. அதை வைத்து சமாளித்துக்கொள்ளலாமென தீர்மானித்திருந்தான்.

 

கத்தி தக்காளியை கூறு போட்ட விதத்தில் தனது கோபத்தின் தீவிரம் புரிய சற்று அமைதியானான்.

 

“வெயிட் டாம்… அவ ஏதோ சொன்னானு நீ ஏன் இவ்ளோ கோவப்படுற? பேயிங் கெஸ்டா தங்குறதுக்கு பணம் குடுக்குறேன்னு சொன்னது ஒன்னும் அவ்ளோ பெரிய தப்பு இல்லையே… சும்மா சும்மா அவ கிட்ட சிடுமூஞ்சி போல நடந்துக்காத… ஆல்ரெடி இன்னைக்கு நடந்த சம்பவத்தால ரொம்ப ஷாக் ஆகிருப்பா… உன் பங்குக்கு நீ வேற அவளை ஹர்ட் பண்ணாத”

 

மனசாட்சி நியாயவானாக மாறி வகுப்பு எடுத்ததில் கோபம் மட்டுப்பட்டது டாமிற்கு.

 

ஏன் ஆர்யாவின் ஒவ்வொரு வார்த்தையும் செயலும் தன்னைப் பாதிக்கிறதென கேட்டுக்கொண்டவனாக மீண்டும் காய்கறி நறுக்குவதில் மும்முரமானான் டாம்.

 

******

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
19
+1
58
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment