என் உயிர் – 16 🧬
இருபது ஆயிரம் சதுரடியில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து ஆங்காங்கே அமைதியாக அமர்ந்திருந்தனர். அதில் தீரன் மற்றும் சஞ்சய்யும் உட்பட்டு இருந்தனர்.
ஆதவ்வின் கண்களில் கண்ணீர் இல்லை. வெறியும், கோபமும், ஆங்காரமும் , அகங்காரமும் தான் அதிகம் மேலோங்கி இருந்தது. அமைதியாக, கண்கள் சிவந்து குளிர் பெட்டியில் படுத்துக் கொண்டிருக்கும் தனது தகப்பனை வெறித்து கொண்டிருந்தான். அவனைக் காணும் அனைவருக்கும் அவன் தகப்பனை இழந்த துக்கத்தில் கண்ணீர் மல்கி கரைகின்றான் என்று நினைத்தார்கள்.
ஆனால் , அவனோ தான் தோற்று விட்டோம் என்கின்ற வெறி தான் உடல் முழுவதும் பாய்ந்தது. அதனின் வெளிப்பாடாக கண்களில் சிவப்பேறி இருந்தது.
எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல் என்ற பழமொழிக்கு சான்றாக ஆதவ் அன்னையின் அருகே அமர்ந்து இரங்கல் தெரிவித்துக் கொண்டிருந்தனர் தீரன் மற்றும் சஞ்சய்.
கோபம் கொப்பளித்து அவர்களின் அருகே செல்லும் முன், சிபிஐ துறையின் முக்கிய மற்றும் தலைமை இடத்தவர் ஆதவ்விடம் நெருங்கி கைகளை பிடித்துக் கொண்டார். அவரை விட்டு விலக முடியாமல் அவரிடம் கண்களை மட்டும் திசை திருப்பி மனதையும் காதையும் அவர்களின் புறம் வைத்தான்.
இருந்தும் சிபிஜ துறையின் டைரக்டர் “ஹலோ சார், நான் மாதவன் , டைரக்டர் ஆஃப் சிபிஐ சென்னை ” எனக் கூறியவுடன் திரும்பி அவரைப் பார்த்தான் .
“புரியுது சார், எதுக்கு சென்னைல இருந்து டெல்லி வரைக்கும் வரணும்னு. நான் இரண்டு விதத்துல வந்திருக்கேன் சார். என் பையன் சைன்டிஸ்ட் ஆகனும்னு ஆசை. சோ, அவன் செழியன் சாரோட காலேஜ்ல தான் படித்தான். ஹி இஸ் அ பிக்கஸட் ஃபேன் ஆஃப் ஹிம் (அவரின் மிக பெரிய ஃபேன் ) . ஆனா, அவன் இப்போ இல்லை. அவன் தற்கொலை பண்ணி செத்துட்டான்”
ஆதவ் புரியாமல் பார்க்க, அதனைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்தார் “அப்புறம் இங்கிருந்து நான் தான் இந்த கேஸை பாக்கனும்னு சிபாரிசு பண்ணி வர வச்சிருக்காங்க “
” என்ன கேஸ் ? ” புரியாமல் கேட்ட ஆதவ்வின் முகப்பாவனைகளை எவ்வளவு ஆராய்ந்தும் அவரால் கண்டு கொள்ள முடியவில்லை.
” மிஸ்டர் செழியனோட டெத்ல எதுவோ மிஸ்டிரி (மர்மம்) இருக்குனு நினைச்சு மிஸ்டர் தீரன் அண்ட் மிஸ்டர் சஞ்சய் கேஸ் கொடுத்திருக்காங்க . “
” சார் அவரை கொன்னதே அவங்க தான் சார் ” செழியனின் பி ஏ கொந்தளித்து கூற,
“நான் மர்மம் னு தான் சொன்னேன். கொலனு சொல்லுறீங்க “பி ஏ விடம் ஆரம்பித்து ஆதவ்விடம் சந்தேக கண்களுடன் முடித்தார்.
கைகளைக் கட்டிக் கொண்டு கண் இடுங்கில் “நானும் கொலைனு சொல்லலையே சார். நானே கேஸ் கொடுக்கல . அதே மாதிரி கொலையா இருக்கும்னு அப்பாவோட பி ஏ தான் சொன்னாரு “
சிரித்த மாதவன் “ரைட்… ஆனா , அப்பாவோட பி ஏ வை பத்தி உங்களுக்கு தெரியாதா? “
” நான் உண்மையை சொன்னா சிரிப்பீங்க …. ஒரு நிமிஷம் வாங்க ” எனக் கூறி தனது அன்னையின் முன் நிப்பாட்டி “அம்மா , அப்பாவோட பர்சனல் ரூம், பர்சனல் லேப்டாப், போன், பர்ஸ் , இதோ இந்த பி.ஏ இவங்க யார் கூடவும் பேச நமக்கு அப்பா அனுமதி கொடுத்திருக்காங்களா? “
“இல்லை சார் ” என தலையை இடவலமாக ஆட்டியவர் “சார், அவருக்கு எங்களை விட இந்த ஆராய்ச்சி தான் உசுரு. இதோ இந்த பி.ஏ மூலமா கூட எதுவும் வெளியில போகக் கூடாதுனு இவருக்கு இங்கேயே குடும்பத்தோட தங்குறதுக்கு ஏற்பாடு பண்ணி கொடுத்திருக்காரு. இவ்வளவு ஏன் சார் இவரோட நம்பர் கூட எங்க யார்கிட்டையும் இல்லை. அதோட , இவரோட பொண்டாட்டி பிள்ளையை கூட நான் பார்த்தது இல்லை சார் “
மாதவனுடன் சஞ்சய் மற்றும் தீரனுக்கு புருவத்தில் முடிச்சு. திரும்பவும் எதுவோ சுவற்றில் முட்டி நின்றது போல் இருந்தது. இதற்கு மேல் இங்கு இருந்தால் சரி வராது என நினைத்து மூவரும் கிளம்ப எத்தனிக்க, மாதவனின் கைகளை பிடித்த ஆதவ் “என்ன சார் அதுக்குள்ள கிளம்பிட்டீங்க ? “
மாதவன் சிறிது நேரம் யோசிப்பதற்குள் பத்திரிக்கையாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் உள்ளே நுழைந்து ஆதவ்வை ஆக்கிரமித்தனர். அதில் பல்லை கடித்த ஆதவ் சஞ்சய்யை முடிந்த மட்டும் முறைத்தான். ஏனென்றால் , அவர்களை கண் அசைத்து வரவழைத்தது அவனே.
வெளியில் வந்து காரில் அமர்ந்தவுடன் தீரன் “ஸ்மார்ட் ….. அவன் நம்ம நினைக்கிறத விட இரண்டு மடங்கு அதிகமாக யோசிக்கிறான். ஸ்மார்ட் மூவ் ” என மெச்சினார். இருவருக்கும் அதுவே தான் தோன்றியது.
❤️❤️❤️❤️
வழக்கம் போல் அடுத்த இரு நாட்கள் விடுமுறை என்கின்ற எண்ணத்தில் அனைத்து குழந்தைகளும் அப்பார்ட்மெண்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களோடு அயானாவும் விளையாடி கொண்டிருந்தாள்.
சஞ்சய்யும் செல்வியும் நடை பயிற்சி மேற்கொள்ள , மூவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள் கவி. அவளின் அலைபேசிக்கு இத்தோடு நாற்பது மிஸ்டு கால் வந்திருந்தது.
ஆனால், அதனை கவனித்தும் கவனியாதும் போல் இருந்தாள். அமரலாம் என்று வந்த செல்வி அவ்வழைப்பை எடுக்க , திரையில் பளிச்சென்று தென்பட்டான் மகிலன். சஞ்சய்யின் மீது கோபம் இருப்பதால் இருவரும் பேசிக் கொள்ள மாட்டார்கள். ஆனால், செல்வியும் கவியும் பேசும் பொழுது தடங்கல் சொல்ல மாட்டான்.
அதே போல் அருகில் அமர்ந்து கொண்டவன் அவர்களின் உரையாடலை நன்றாகவே காதில் வாங்கி கொண்டு அவனின் அலைபேசியில் இமெயில்களை பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஹாய் டா மகிலா ! எப்படி இருக்க? அங்க
எல்லாம் ஓகேவா? ” செல்வி படபடவுடன் கூற,
“ஏன்மா ஏன்? எல்லாம் நல்லா இருக்கு! வாரம் வாரம் இதை மட்டும் மறக்காம கேட்டுற ?”
“நீயும் தான் வாரம் வாரம் அழைப்பு விடுக்குற ? ஆனா , எடுக்க மாட்டேங்குறாங்க ? என்ன பண்ணுறது ? “
“என்னைக்காவது மன்னிக்காமல போயிடும் “
“டேய் டோமரு …. அவ எதுக்கு கோபமா இருக்கானு கூட உனக்கு தெரில டா ! இந்திரா அம்மா என்னத்த தான் வளத்தாங்களோ ? “
“ஹே வாயை மூடிட்டு போனை வைக்கிறீயா கொஞ்சம் ! “என இப்பொழுது வாயைத் திறந்தாள் கவி .
உடனே மகி “கவி பிடிக்காதத திணிக்காத ! எனக்கு பிடிக்காத விஷயம் அது ! “
“எது பிடிக்காது மகி உனக்கு ? இவ்ளோ நாள் உனக்காக தான் அப்பாக்கிட்ட கூட மறச்சேன். ஆனால், நீ பண்ணுறதலாம் பாக்கும் போது நான் தப்பு பண்ணுறேனோனு தோணுது” என மறைமுகமாக தகப்பனிடம் கூற போவதைக் கூறினாள்.
“கவி கொஞ்சம் டைம் கொடு “
“இன்னும் எவ்ளோ நாள் வேணும் உனக்கு ? “
” கவி விடுடி… அதான் மகி டைம் கேட்கிறான்ல கொடுப்போம் ” என கவியிடம் கூறி, மகிலனிடம் திரும்பி ” ஒரு வாரம் உனக்கு டைம் அடுத்த வெள்ளி நீ சொல்லுற இல்ல திரு அப்பாக்கிட்ட நாங்க சொல்லுறோம்” என கூறி சில பல பேச்சுகளை பேசி விட்டு போனை வைத்தனர்.
இவர்களின் உரையாடல்களை காதில் வாங்கியவனுக்கு எரிச்சல் தான் மேலோங்கியது. முடிந்தவுடன் எழுந்து கொஞ்சம் தள்ளி சென்றவன் ” வழக்கம்போல் இவங்க ஒன்னுமில்லாத உப்பு சப்பு இல்லாத விஷயத்தை அரை மணி நேரமா பேசுறாங்க. என்னைக்கு தான் இதுங்க திருந்த போகுதோ ” என சஞ்சய்யுடன் அலைபேசி மூலம் கேட்டுக் கொண்டிருந்த நிலவன் கூறினான்.
“ஆமாம் , இதுதான் வேலை இவங்க இரண்டு பேருக்கும். என்னமோ உலக ரகசியம் மாதிரி ஒரு மாசமா பேசிக்கிட்டு இருக்காங்க ” சஞ்சய்யும் எரிச்சலுடன் கூறினான்.
“இவன் லவ் பண்ணுறான் அதுக்கு இவ்ளோ பில்டப் “
“ஆமா….. ஓவரா பண்ணுறாங்க. நானும் செல்வியும் லவ் பண்ணி தான் கல்யாணம் செஞ்சோம். நடத்தி வச்சதே திரு அப்பா தான். ஒருத்தன் லவ்வ சொல்லாமலே பிள்ளையே பெத்துட்டான். அதுக்கும் அமைதியா தான் இருக்காரு “
“டேய் என்ன லொள்ளா? சந்துல சிந்து பாடுற? ” நிலவன் பொங்க,
“டேய் நிதர்சனத்தை சொல்லுறேன் டா……. நல்லா யோசிச்சு பாரு…. இப்படிலாம் நடந்ததுக்கே ஓகே தான் சொல்லிருக்காரு “
“ஓகேலாம் சொல்லல “நிலவன் கடுப்புடன் கூற,
“அதே மாதிரி நோனு சொல்லையே …… இவன் லவ் பண்ணி அந்த பொண்ணுகிட்ட சொல்லி அந்த பொண்ணோட சம்மதத்தோட தான் கல்யாணம் பண்ணிருக்கான். அதோடு இப்ப அந்த பொண்ணோட சம்மதத்தோட குழந்தையும் பிறக்க போகுது . இதுல என்ன இருக்கு? “
“டேய் ….. இப்ப நீ அவனை பத்தி பேசுறீயா ? இல்லை என்னை சொல்லுறீயா ? “
“இதுல என்ன மச்சான் சந்தேகம் ….. இரண்டும் தான் ” என இன்னும் சில பல பேச்சுகள் பேசி இருவரும் மாறி மாறி காலை வாரிக் கொண்டு அளவளாவி கொண்டிருந்தனர்.
அதே நேரத்தில் செல்வி , “ஏன் டி…. இப்போ நம்ம பேசுனதை அண்ணாவும் கேட்டுக்கிட்டு தான் இருந்தாரு “
“தெரியும் ” எங்கோ வெறித்துக் கொண்டு கவி கூறி,
” அப்புறம் ஏன் ஒன்னும் சொல்ல மாட்டேங்குற சஞ்சய்யை ? “
செல்வியின் சந்தேகத்தை புரிந்த கவி அவளைத் திரும்பி கண்டு ” இந்த மாதிரி பாத்தா தான் தெரியுது அவர் உயிரோட தான் இருக்கானு “
“தீர அப்பாக்கிட்டையோ சஞ்சய்க்கிட்டையோ கேட்டால் சொல்ல போறாங்க “
“அப்போ அவர் இங்க என்னை தேடி வந்துருவாரு ? என் கோபமும் போயிடும் அப்புறம் அவரைப் பாத்தேனா ! “
“அது தான உனக்கும் வேணும் “
“இல்லை வேணாம்…. அயானா மாசமா இருக்கும் பொழுது கூட கிட்ட இல்லாதது ஒன்னும் தெரில . ஆனா, பிறந்து பேசும் பொழுது அப்பானு சொல்லும் பொழுது இல்லையேங்குற கோபம் தான் அதிகமா இருக்கு “
“நீ தான வர வேணாம்னு சொல்லுற ? “
கவி திரும்பி அவளைப் பார்க்க, “எனக்கே புரியலை டி….. என்ன பண்ணுறேனு ? “
❤️❤️❤️❤️❤️
“மிஸ்டர் ஆதவ் …. உங்க சிட்சுவேஷன் புரியுது. பட் எங்களுக்கும் சிட்சுவேஷன் இருக்கு. எனக்கு இன்னும் டூ வீக்ஸ்குள்ள இந்த ரிசர்ச் முடிச்சே ஆகனும். இல்லைனா அந்த ரகுவேந்தர் டீமுக்கு இந்த தடவையும் போயிடும். இனிமே நம்மள நாய் கூட மதிக்காம போயிடும். டு யூ அண்டர்ஸாண்ட் ”
கீர்த்தி ☘️