அத்தியாயம் இருபத்து நான்கு
ஆனந்த் இல்லம் :
” என்ன ஆனந்த் இப்போ எல்லாம் சரி ஆகிடுச்சா ” என்று யோசனையாய் இருந்தவனை பார்த்து கேட்டாள் அமிழ்தினி.
” இல்லை பாப்பா … ” என்றவனால் வேறு எதுவும் பேச முடியவில்லை. எங்கே எவ்வளவு திட்டத்தை போட்டாலும் வலையை வெட்டும் நண்டை போல , அனைத்து தடைகளையும் வெட்டி முன்னேறுபவனை என்ன செய்து தோற்கடிப்பது என பல வாரு யோசித்து விட்டான் , ஆனாலும் ஒரு ஐடியாவும் வந்த பாடு இல்லை. இருக்கையை விட்டு எழுந்தவள் ஆனந்தின் மடியில் அமர்ந்து கொண்டு
” சரி விடு பா…உன் சைடு கண்டிப்பா நியாயம் இருக்குல்ல நீ தான் வின் பண்ணுவ ” என்று அவனை கட்டிக் கொண்டாள். ஏமாறுவது தெரியாமல் இருந்த அமிழோ தன்னவனை சரி செய்வதிலே மும்மரமாக இருந்தாள்.
ஆனந்திற்கு குற்ற உணர்வு வந்தாலும் அதற்கு அமிழை காரணம் காட்டி ஏதாவது தொடர்ந்து தப்புக்களை செய்து கொண்டு தான் இருந்தான் ஆனவன்.
_____
இன்று வேலை சற்று அதிகமாகவே இருக்க, கணக்குகளை முடித்து வைக்க நேரம் ஆகி விட்டது மகிக்கு. நேரம் ஆவதை உணர்ந்து ஏற்கனவே ராதா விடம் அழைத்து விட்டு வருவதற்கு லேட்டாகும் என்று கூறிவிட்டாள். வேகமாக பஸ் ஸ்டாப்பிற்கு வந்து நின்றாள். அவள் போதாத நேரம் போல இரண்டு பெண்கள் மட்டுமே இருந்தனர். மூன்றாவது ஆளாக மகி வந்து காத்திருந்தாள். நிறைய பசங்களே இருக்கே எப்படியாவது தனக்கு முதலில் பேருந்து வந்துவிட வேண்டும் என தனக்கு பிடித்த அனைத்து கடவுளையும் வேண்டிக் கொண்டாள். அவள் நினைத்ததை நிறைவேறி விட்டாலும் அதை தவிர மற்றவர்கள் பேருந்து வந்துவிட அவர்கள் ஏறிச் சென்றனர். இரண்டு மூன்று தடியர்கள் தான் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பார்த்தால் மனித பிறவி போல் இல்லாத அளவு சுருண்டு சுருண்ட தாடிகளோடு குண்டு குண்டாக இருந்தனர். யாராக இருந்தாலும் தனியாக நின்றால் பயம் வரத்தானே செய்யும் மகி மட்டும் விதிவிலக்கா என்ன? அவளுக்கும் உள்ளுக்குள் பயம் எழ தான் செய்தது, இருந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் தன் போனை பார்ப்பது போல அதையையும் பேருந்து வருகிறதா என்றும் விழிகளை சுழல விட்டாள். அங்கிருந்த தடியர்கள் தங்களுக்குள் குசு குசுவென பேசிகொள்ள அதை கவனித்தும் கவனிக்காதவள் போல் இருந்தாள். அதில் ஒரு தடியன் மட்டும் மகியை நோக்கி வர இவளுக்கோ வேர்க்க ஆரம்பித்தது. கைகளை இறுக மூடி அவனை பார்க்காதது போல் இருந்தாள்.
” பாப்பா … பாப்பா என்ன இங்க நிக்கிற, எங்க கூட வா நாங்க உன் வீட்ல விடுறோம் ” என்று கரடி குரலில் பேச, அவனை பார்த்து தீயாய் முறைத்தவள் கொஞ்சம் தள்ளி நின்றாள்.
அந்த தடி மாட்டு பயலோ விடாமல் அருகில் வந்து
” எங்கல பார்த்து பயப்படாத பாப்பா… நாங்க வீட்ல விடுறோம் ” என்று கூறி மிக அருகில் வர, அவனை தள்ளி விட்டவள்
” சீ…இதே வேலையாவே இருப்பிங்கலா டா… த்து , இரு போலீஸ்க்கு போன் பண்றேன் ” என்றவள் தன் அழைப்பேசியை எடுக்க அதுவோ டவர் இல்லாமல் சதி செய்தது. அதை காட்டிக்கொள்ளாமல் தான் இருக்கும் இடத்தை கூறி வரச் சொல்வது போல் செய்ய, அங்கிருந்த தடிபயல்கள் மூவரும் பண்ணியை போல் சிரித்தனர்.
மகி புரியாது பார்க்க
“என்ன பாப்பா.. இங்க தான் போன்ல டவரே கிடைக்காதே ” என்று ஏளனத்துடன் கூறி சிரிக்க, மகிக்கு லேசாக பயம் வர ஆரம்பித்தது.
” நா யாருனு தெரியாம வம்பு பண்றிங்க…பின்னாடி ரொம்ப வருத்தபடுவிங்க ” என்று மிரட்டும் தோனியில் கூறினாலும் தடியன்கள் பயப்படுவது போல் தெரியவில்லை.
” பின்னாடி வருத்தம்லாம் படமாட்டோம் பாப்பா…நல்ல அழகா தான் இருக்கு ” என்று அவளை ரசித்து பார்க்க, அவர்களை விட்டு நடக்க ஆரம்பித்தாள். அவர்களும் விடாது துரத்த , மகி ஓட ஆரம்பித்திருந்தாள். கடவுளை மட்டும் மனதினுள் முழுவதுமாக நினைத்து ஓடியவளை குறுக்கு சந்தில் ஓடி வந்து வழி மறைத்தான் ஒரு தடியன். அவனை தள்ளி விட்டு ஓட பார்க்க, அவ்வளவு பெரிய உருவம் கொண்டவனுக்கு அது தூசியாகவே இருந்தது.
” எறும்பு கடிச்ச மாறி இருந்துச்சு பாப்பா…ஹா…ஹா…ஹா ” என்று அரக்கனை போல் சிரிக்க, பின்னால் அடிகளை எடுத்து வைத்தவள் தன் கை பையினுள் கையை விட்டு அதில் இருந்து லேப்பிற்காக வைத்திருக்கும் சின்ன கத்தியை எடுத்து அவளை தொட வந்தவன் கையிலே பல கோடு போட்டவள் ஓட ஆரம்பித்தாள்.
ஓடி வரும்போது பை தொல்லையாய் இருக்க அதை கீழே போட்டு ஓட ஆரம்பித்தாள்.
‘ ஐயோ கடவுளே… என்ன எப்படியாச்சு காப்பாத்துங்க ‘ என்று மனதுக்குள் வேண்டியவள் கண்களில் இருந்து நீர் வடிய ஆரம்பித்திருந்தது.
_____
எந்த திட்டத்தை நடத்த கூடாது என நினைத்திருந்தானோ கடைசியில் அதையே கையில் எடுக்க வேண்டியதாய் இருந்தது .
‘ சாரி பாப்பா … எனக்கு இதை விட்டா வேற வழி தெரியல. நீ என்ன விட்டுப் போயிரவே கூடாது பாப்பா ” என்றவன் நினைத்ததை முடிக்க யாருக்கும் தெரியாத , பலரால் தேடபடும் அந்த நபரை சந்திக்க சென்றான்.
” எல்லா நல்ல படியா முடியனும் ” என்று திமிராக கால் மேல் காலை போட்டு அமர்ந்திருந்தான் ஆனந்த். அவனிடம் இருந்து தான் பணம் வர போவதால் வேறு வழி இல்லாமல் எதிரில் இருந்தவனும் ஆனந்தின் டீலுக்கு சம்மதித்தான்.
” நாளைக்கு நீங்க கேட்டது கிடைக்கும் , ஆனால் நா சொன்ன காசுக்கு ஒரு ரூபாய் குறைஞ்சாலும் , நீங்க கேட்டது கிடைக்காது ” என்று அவனும் மிரட்டும் தோனியில் சற்று திமிராகவே கூறினான்.அவனை முறைத்து பார்த்த ஆனந்த், அவனிடம் தேவை இருப்பதால் வேறு வழியில்லாமல் வாயை அடைக்க வேண்டியதாய் இருந்தது.
‘ இருடா நான் கேட்டது மட்டும் கிடைக்கட்டும், அப்பறம் இருக்கு ‘ என்று மனதுக்குள் குருரமாக சிரித்து அந்த அறையை விட்டு வெளியேறினான்.
____
” அம்மா கிட்ட சொல்லிட்டியா டா… ” என்று காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சந்துரு ஒரு சிப்ஸ் பேக்கட்டை வாயில் போட்டு நொறுக்கி கொண்டு இருந்தான்.
” அதெல்லாம் சொல்லியாச்சு… சொல்லியாச்சு இன்னைக்கு உனக்கு பிடிச்சத சமைச்சு வச்சுருப்பாங்க வந்து கொட்டிக்கோ ” என்று தன் நண்பனை பார்த்து கூறியவன் ரோட்டை பார்த்து ஓட்ட ஆரம்பித்தான்.
” அடேய் உன்ன….சித் அங்க ஓடி வர்றது மகி மாறி இல்லை ” என்று கொஞ்சம் தூரத்தில் முன்னால் ஓடி வரும் உருவத்தை பார்த்து கேட்க, சித்தின் பார்வையும் அங்கு சென்றது. அவளே தான் இன்னும் ஓடிக் கொண்டு தான் இருந்தாள்.
” ஆமா டா… ” என்றவன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்த, எங்கே அங்கு நடப்பதை எல்லாம் கவனிக்காதவள் பின்னாடி வருகிறார்களா என்று திரும்பி திரும்பி பார்த்தவாறு ஓடினாள்.
” ஏய் மகி …மகி ” என்று சந்துரு சன்னல் வழியே சந்துரு கொக்கை போல் தலையை வெளியே நீட்டி கத்த, குரலை கேட்டவளுக்கு வயிற்றில் பாலை வார்த்தது போல் இருந்தது. ஓட்டத்தை திருப்பி காரை நோக்கி வந்தவள் வேகமாக முன்னாடி அமர்ந்து கொண்டாள்.
ஓட்டத்தின் காரணம் அறியாமல் சித்தார்த்தும் சந்துருவும் புரியாமல் அவளை பார்த்தனர். உடம்பு முழுக்க வழிந்து இறங்கியிருந்த வேர்வையை தன் துப்பட்டாவை வைத்து துடைத்தவள் உடல் இன்னும் கொஞ்சம் நடுங்க தான் செய்தது.
” என்ன மகி என்னாச்சு… இந்த நேரத்தில நீ வீட்ல இல்லாம இங்க… அதுவும் ஓடிட்டு இருக்க ” என்று பதறி கேட்க, அவளோ பதில் கூறாது பார்வையை வெளியில் விட்டிருந்தாள்.
‘ சே நமக்கு மரியாதை அவ்வளவு தான். இனி அவன் புருசனே கேட்டுப்பான்…அவன் கேட்டுட்டாலும் ‘ என்று அவனே கேள்வியையும் பதிலையும் மாறி மாறி மனதுக்குள் கூறி தன் அரைக்கும் வேலையை ஆரம்பித்திருந்தான்.
இப்போதும் பேச வாயை சித் திறக்க பார்க்க, அவனுக்கோ வார்த்தைகள் வரவில்லை. ஏசியை மட்டும் மகிக்கு வேர்க்காத வாறு கூட்டி வைத்தவன் அவளையே பார்க்க, அவளோ அவனை சிறிதும் பார்க்கவில்லை. அவளுக்கு நிதானத்திற்கு வரவே நேரம் பிடித்தது. அரைமணி நேரம் அதே பதற்றத்துடன் இருந்தவள் இப்போது தான் கொஞ்சம் சரியாக முயற்சித்தாள். சுய நினைவிற்கு வந்ததும் தான் தன்னவன் அருகில் அமர்ந்திருப்பதை உணர்ந்தாள். இத்தனை நேரம் அந்த தடியன்களிடம் அவ்வளவு திமிராக பேசியவலாள், தன்னவனை நிமிர்ந்து பார்க்க துணிவில்லை. அப்படியே படபடப்பை குறைத்துக் கொண்டு இருக்கையில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டாள். சித்தும் ஒருமுறையாவது பார்த்து விட மாட்டாளா என ஏக்கத்துடன் அவளை பார்க்க, அவளோ தன் காஃபி நிற விழிகளை மூடிக் கொண்டாள்.
பின் இருக்கையில் இருந்த சந்துருவோ
‘ ஓஓஓஓ கதை அப்படி போகுதா ‘ என மனதில் கூறி சிரித்து கொண்டான்.
காரின் வேகத்தை குறைத்திருந்தான் மகியின் மணவாளன். எதற்காக இதெல்லாம் செய்கிறான் என்று புரியவில்லை, ஆனாலும் அவளை வெறுப்பதை காட்டிலும் அமைதியாக இருப்பதே அவனுக்கு மன நிம்மதி கிடைப்பதாய் உணர்ந்தவன் பேசாவிட்டாலும் அமைதியாக இருக்க ஆரம்பித்தான்.
” மச்சான் நீங்க கார்ல வாங்க… நா நடந்து வந்திறேன். வேமா போடா சொண்ணப் பயலே …வேமா போ , பசிக்குது” என பின்னிருந்து சந்துரு கத்த, அவனை பார்த்து தலையில் அடித்துக் கொண்டான் சித்.
” அடேய் அமைதியா வா…மகிமா தூங்குரா ” என்றவன் வாயில் விரலை வைத்து காட்டினான்.
” மச்சான் மகி இந்த நேரத்தில அப்படி எங்க போய்ட்டு டா வரா…அதுவும் ஓடி வேற ” என்று விளையாட்டை ஓரம் கட்டி சீரியஸாக கேட்க, அவனோ எப்படி பதில் கூறுவான்
” அது…அது… மகிமா வேலைக்கு போறா ” என்றான் உள்ளே போன குரலில், அதில் ஆத்திரம் வந்த சந்துருவோ தன் நண்பனிடம் பேசி பயன் இல்லை எல்லாம் இந்த மகியிடம் தான் பேச வேண்டும் என்று சித்தை முறைத்தவன் மகியை பார்க்க , உறங்கி கொண்டிருந்தவளின் மூடிய இரு விழிகளிலும் கண்ணீர் வடிந்து கொண்டு இருந்தது.
” மகி என்னாச்சு …மகி …மகி ” என்று அவளை அழைக்க , அவளுக்கு இருக்கும் அலுப்பில் காதில் விழவில்லை. அப்போது தான் தன் மகிமாவின் கண்ணீரை பார்த்தவன் காரை நிறுத்து அவளை பார்க்க, அவளுக்கோ கண்ணீர் நிற்காது வடிந்தது.
“சித் அவள எழுப்பு …என்னாச்சு எதுக்கு அழுறா ” என்று ஒன்றும் புரியாமல் இருந்தான் சந்துரு. சித்தோ பேச வார்த்தை இன்றி இருக்க, அவனை பார்த்து தலையில் அடித்து கொண்டவன் , மகியின் தோளை தொட்டு உலுக்க ஆரம்பித்தான்.
” மகி …மகி ” என்று சந்துரு உரக்க கத்தியதும் தான் தூக்கத்திலிருந்து பதறி எழுந்தாள்.
” என்ன…என்ன ” என்று குழப்பத்தோடு சந்துருவை பார்க்க, அவனோ அவளை தான் அதே உணர்ச்சியோடு பார்த்திருந்தான்.
” என்னாச்சு மகி எதுக்கு அழகுற ” என்று அவள் கண்ணீரை துடைக்க, அப்போது தான் அவளுக்கு அழுததே தெரிந்தது.
இங்கு ஒருவனுக்கோ வயிறு கருக ஆரம்பிக்க நண்பன் என்று பாராமல் அவனை கொள்ளும் வெறியோடு பார்த்தான். மகியோ பதில் கூறாது இருக்க
” என்னாச்சு மகி…மொத எதுக்காக வேலைக்குலாம் போற..இப்போ எதுக்கு அழுற ” என்று கோபத்தை அடக்கி பனிவாய் கேட்க, அவளுக்கோ சட்டென்று பொய் வரவில்லை .
” அது…அது…கண்ல தூசி விழுந்திருச்சு ” என்று அவள் கூற, இரு ஆண்மகன்களும் தங்களை முட்டாள் என்று முடிவு செய்து விட்டாளா என்று வித்தியாசமாக அவளை பார்த்தனர்.
” என்ன மகி …என் நெத்தில கேனனு எழுதிருக்கா , தூங்கும் போது மூடி இருக்குற கண்ணுக்குள்ள தூசி போயி கண்ணீர் வந்துச்சாம் ” என்று அவன் நக்கலாக கேட்டான்.
அதில் மகி வேறு எதுவும் பேச முடியாமல் தினற
” சந்துரு விடு…மகிமா நீ தூங்கு ” என்றவன் காரை கிளப்பினான். தன்னவன் தன் பெயரை தான் கூறுகிறானா என்று அவனை பார்க்க, அவளை போலவே சித்தும் மகியை தான் பார்த்தான். இருவரின் பார்வையும் ஒரு முறை தீண்டி மீண்டது. சித் பேசியதும் சந்துரு அமைதியாகி விட்டான். கார் கொஞ்சம் நேரத்தில் சித் வீட்டை நெருங்கியது, காரை பார்க் செய்தவன் உள்ளே செல்ல, காரை விட்டு இறங்கிய மகியை உள்ளே செல்ல விடாமல் , கையை பிடித்து வாசலிலே நிறுத்தி வைத்திருந்தான் சந்துரு.
” என்னாச்சு மகி உனக்கு….அன்னைக்கு ஏதோ நா என் காதலால சித்தை மாத்துவேனு பேசிட்டு , இப்போ இப்படி நடந்துக்கிற… நா ஒரு மாசத்தில நீ என்ன என்னவோ செஞ்சு அவன சரி பண்ணுவனு பார்த்த , நீ வேலைக்கு போற…என்ன தான் நடக்குது. மொத எதுக்கு நீ ஓடி வந்த…எதுக்கு அழுத … ” என்று வரிசையாய் கேள்வி கேட்க, இவ்வளவு நேரம் தன்னவன் முன் அழுக நினைக்காதவள் கண்ணீர் வடிந்தது.
” மகி என்னாச்சு மா … ” என்று கோபத்தை ஒதுக்கி ஒரு நண்பனாய் கேட்க, நடந்ததை எப்படி கூறுவது என கண்ணீரை வடித்தாள்.
” அங்…க ப..ஸ் ஸ்டாப்ல மூனு…பேரு கை…யை பிடிச்சு …..” என்று வார்த்தைகள் வராமல் கூற, சந்துருவின் முகம் இருகி போனது.
” வா…வந்து யாருனு காட்டு …வா. யாரு என்ன பண்றானு பாக்குறேன்…வா ” என்றவன் அவளை பார்க்க அவளோ எதுவும் பேசாது அமைதி ஆனாள். தீடிரென மகி அமைதியாவதை பார்த்து அவள் பார்வை சென்ற திசையை பார்க்க, நெருப்பு கக்கும் பார்வையோடு கை முட்டிகளை மட்டு அனலாய் கொதித்து நின்றிருந்தான் அவளின் கண்ணா. உள்ளே சென்றவன் இன்னும் இருவரும் உள்ளே வராது இருப்பதை பார்த்து வெளியே வந்து பார்த்தவன் மகி கூறிய கேட்டதும் அவ்வளவு தான் ,
விரு விருவென தன் மகிமாவை பார்த்து நடந்து வந்தவன் அவளை இழுத்து முன் கார் கதவினை திறந்து உள்ளே தள்ளி காரை கிளப்பி இருந்தான் .
பிரியாமல் தொடரும் 😍💋….
உங்களின் புல்லட் வெடி 🎉
Girls enga thaniya nindalum ipdi oru kumbal vanthuruthu ithey velaya tha irupingalaada ithuku la oru niyayam kidaikaatha Namma naatula ,paruda Namma sidh kulayum oru surya singam tha paaka mudiyuthu 😜Mahi ya kuti tu poye yaru antha pasanga nu solla solli fight panna poran pola exciting overload ……..😍 Ava mela love vara arambichuruvhu sir kuu.. Waiting for next epi ❣️❣️
நன்றி சகி 🥰🥰😁❤️
Nalla action block maatta poguthu pola 🎬🎬😍😍
🤣😂😂😂
Antha thadi maada next story la polathutannnnnn nu sollu😤😤👿
Nanri saga 🥰🥰
டேய் ரவுடி பசங்களா…எங்க தலைவன் வாரான்டா…எவ்வளவு தைரியம் இருந்தா மகி கிட்ட தப்பா நடக்க பாத்திருப்பீங்க…இப்போ வந்து சித் தாரா அடிய வாங்கிக்கோங்கடா….
இந்த ஆனந்த் என்ன பிளான் பண்றான்…அவனுக்கு யாரு கெல்ப் பண்றது யாரு?
இன்னைக்கு ரவுடிங்க எல்லாம் மகிய தொரத்தகனதுக்கும் காரணம் ஆனந்த் தானா….
மிக்க நன்றி சகி 🥰🥰🥰😁❤️❤️❤️
Girls ku engayum pathukappu ila .. nama thn nammala safe ah pathukkanum… Sidh Vera kvm ah poran.. enna agha pothunnu teriyalaye ..
நன்றி சகி 🥰🥰😁❤️