Loading

அவனின் நெஞ்சின் வெப்பத்தை தன் மன வலிக்கு மருந்தாக ஏற்றுக்கொண்டு அவனின் நெஞ்சுக்குள்ளே புதைந்து போனாள் நுவலி. சில நேரங்களில் நம் காயத்தின் வலியை நமக்கு பிடித்தவர் ஏற்படுத்தினாலும் நம்மாள் ஏற்க மட்டுமே முடிகிறது திருப்பி வலியை தர முடிவதில்லை.

     “அன்பு கொண்ட மனதிற்கு அழ மட்டுமே தெரியும் . திருப்பி அழ வைப்பது இல்லை”… 

          சிறிது நேரத்தில் தன்னை சமாதானம் செய்து கொண்டு அவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க. அவனும் அவளைத் தான் பார்த்துக்கொண்டு இருந்தான். தீடீரென அவளுக்கு ஏதோ சரியில்லாதது போல தோன்ற அவனை மறுபடியும் பார்த்தாள் ‘அவனோ சிரித்துக்கொண்டு இருந்தான் உதட்டை மடித்து,

        எதுக்கு இப்படி சிரிக்கிற “அவனின் முதுகை கிள்ள” , அப்பொழுதுதான் ஒரு விசயத்தை உணர்ந்தாள் .இவ்வளவு நேரம் அவனின் ஆடையில்லாத வெற்று மார்பில் தலைசாய்த்து கொண்டு இருந்ததை. பெண்மைக்கே உரிய வெட்கம் அவளை ஆள , அவளின் முகம் செங்கொழுந்தாக மாறியது. முக சிவப்பை மறைக்க அவனின் மார்பினிலே தன்னுடைய முகத்தை மறைத்துக் கொள்ள , அவனோ சிறிது நேரம் அவளின் முகச்சிகப்பை ரசித்தவன் அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு, “என்னடி புதுசா வெட்கம் எல்லாம் உன்னுடைய முகத்துல வருது?”

இதெல்லாம் உனக்கு இல்லை தானே..?

            தன்னுடைய தலையை தூக்கி அவனை முறைத்து பார்க்க. அவனோ , அவளை குறு குறு வென பார்த்துக்கொண்டே இருந்தான். அவனின் பார்வை வீச்சை தாங்காத பாவையவள் மறுபடியும் அவனின் மார்பினிலே தஞ்சம் புகுந்தாள்.  

      அவனை விட்டு விலகாமல் , எதற்காக அப்படி என்னை பார்த்துக்கொண்டு இருக்க …? வார்த்தைகள் இடைவெளிவிட்டு மெதுவாக வெளியே வந்தது .

     நானா….! எப்படி பார்த்தேன்.? அவளிடமே கேள்வியை திருப்பி கேட்க.

       ஒருகையால் அவனின் நெஞ்சினில்

மெதுவாக கிள்ள , ” பூவினும் மென்மையாக அவனை கிள்ளியது தான் அவனை மேலும் புன்னகை செய்ய வைத்தது”. அவளை இன்னும் இறுக்கமாக தன்னுடைய அணைப்பிற்குள் கொண்டு வந்தவன் அவளின் உச்சந்தலையில் தன்னுடைய இதழ் பதித்துவிட்டு “ஐ லவ் யு டி பொண்டாட்டி “

             அவனின் இந்த வார்த்தைகள் அவளை மேலும் சிவக்க வைக்க . அவனை விட்டு விலகாது அவனின் நெஞ்சினிலே ஒன்றிப் போனாள்..

       கதவு தட்டும் சத்தத்தில் இருவரும் விலகி அமர்ந்தனர். நுவலி , எழுந்த சென்று கதவை திறக்க,

   உதிரன், யாருடா இந்த நேரத்துல? அவளே இப்பதான் மலை இறங்கி இருக்கா.? அவளை சமாதானம் படுத்துவதற்குள்ள எனக்கு நாக்கு தள்ளிவிட்டு, வாயில் இருந்து நுரை மட்டும் தான் வரவில்லை.

     கதவின் வெளியே வசுமதி தான் நின்றுக்கொண்டு கதவை தட்டிக்கொண்டு இருந்தார். 

         என்னாச்சு மா .? எதுக்கு இப்படி கதவை தட்டிக்கொண்டு இருக்க?’ 

         “ஓ” நம்ம மாமியார் தானா..! அந்த கரடி.

         அடியேய்..! மணி என்ன ஆகுது இன்னும் சாப்பிட வராம இருக்கீங்க ?. நானும் நீங்க இருவரும் சாப்பிட வருவீங்கனு எதிர்பார்த்து … எதிர்பார்த்து இவ்வளவு நேரம் காத்திருந்தேன். வயலுக்கு போயிருந்த உங்க அப்பா கூட மறுபடியும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு இப்ப வெளியே போயி இருக்காரு. உங்க இருவருக்கும் பசி எடுக்கவில்லையா.?

          “அம்மா” கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தானே சாப்பிட்டோம் . அதற்குள்ள மறுபடியும் வந்து சாப்பிட சொல்றீங்க?’

       மணி என்ன ஆச்சுனு பாருடி. நம்ம வீட்டு கடிகாரத்தில் இரண்டு மணி .

          என்னது…! இரண்டு மணியா?

    ஷாக்கை குறைத்துவிட்டு , நீயும் தம்பியும் வந்து சாப்பிடுங்க எனக்கு பக்கத்துல ஒரு வேலை இருக்கு .நான் அங்க போறேன்.வசுமதி கூறிவிட்டு சென்றுவிட, அப்பொழுதுதான் நுவலிக்கு ஒரு விசயம் புரிந்தது. இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியாமல் இருந்து இருக்கிறோம் என நினைத்துக்கொண்டே சமையல் கட்டுக்கு சென்று ஒரு தட்டில் சாப்பாடு எடுத்து போட்டுக்கொண்டு அதற்கு தேவையான குழம்பு ஊற்றிக்கொண்டு தன்னுடைய அறைக்கு வந்தவள் கட்டிலில் அவனுக்கு அருகில் உட்கார்ந்துக் கொண்டு “அம்மா என்னமா ஆட்டுக்கறி குழம்பு செய்து இருக்காங்க , வாசனையே ஆள தூக்குது . உதி நீயும் சாப்பாடு போட்டு சாப்பிடு ‘ அவனை பாராமலே தட்டில் உள்ள சாப்பாட்டின் மீது கவனம் செலுத்திக் கொண்டே பேசிக்கொண்டு இருந்தாள்.. 

           அவனோ அமைதியாக நுவலியின் பேச்சினையும் , தட்டில் அவளின் கவனத்தை மட்டும் வைத்துக்கொண்டு இருக்கும் அவளை பார்க்க … பார்க்க திகட்டாத தேனாய் இருந்தாள் அவனுக்கு மட்டும். குழந்தை சாப்பிடுவது போலவே சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள். சிறிது சாப்பாட்டை சாப்பிட்டு முடித்த அவளுக்கு அப்பொழுது தான் ஒன்று தோன்றியது’ அவன் இன்னும் சாப்பிட போகவில்லை என்று ‘ அவனை திரும்பி பார்க்க . அவனோ இவளைத் தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

      எ… து….எதுக்கு என்னையே பார்த்துக்கொண்டு இருக்க டா .? உனக்கு பசிக்கவில்லையா.? வார்த்தைகள் திக்கி கொண்டு வெளியே வர.

           ஆமாம் பசிக்கிறது. ஆனா என்ன பண்றது எனக்கு சாப்பாடு போட்டு தர தான் இந்த வீட்டில் ஒருத்தரும் இல்லையே..! என்னுடைய மனைவிக்கு சாப்பாடு தான் முக்கியம்னு சாப்பிட போய்ட்டா என்னை அப்படியே அம்போனு விட்டுட்டு. என்னுடைய அத்தை இருந்திருந்தால் எனக்கு இந்த நிலமை வந்து இருக்குமா ?. வராத சோகத்தை முகத்தில் வர வைத்துக்கொண்டு கூற.

           தட்டை கட்டிலில் “தொம்” என்று வைத்துவிட்டு ,அவனைப் பார்த்து கடுப்புடன் “ஏன் நீயே சாப்பாடு எடுத்து போட்டுக்க மாட்டியா.?” ஏன்டா ..? ஏன்.? சாப்பிடும் போது கூட என்னை கடுப்பேத்துற? எதுக்கு டா.? எங்க அம்மா இருந்தால் தான் உனக்கு சாப்பாடு கிடைக்குமா.?ஏன் நான் இல்லை உனக்கு பொண்டாட்டியா.? என்கிட்ட கேட்டா உனக்கு சாப்பாடு கிடைக்காதா? துரைக்கு எங்க அம்மா கையால் தான் சாப்பாடு வேண்டுமா.? ஒரு சாப்பாட்டை கூட நிம்மதியா சாப்பிட முடியல இந்த வீட்டில் .இவனை கட்டிக்கிட்டதற்கு இன்னும் என்னென்ன எல்லாம் காத்துக்கொண்டு இருக்கோ .?? புலம்பிய படியே சமையல் கட்டுக்கு சென்று ஒரு தட்டில் சாப்பாடு போட்டு குழம்பு ஊற்றி எடுத்துக்கொண்டு வந்து, ‘ இந்தா சாப்பாடு பிடி , மறுபடியும் எங்க அம்மாவை நம்ம ரெண்டு பேருக்கு இடையில் இழுத்த அவ்வளவுதான் ‘. விரல் நீட்டி எச்சரித்து விட்டு தன்னுடைய தட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். தன்னுடைய மனதிற்குள்ளேயே அவனை திட்டிக் கொண்டு இருந்தால் ‘ ஏன் எங்ககிட்ட கேட்டா நான் எல்லாம் சாப்பாடு போட்டு தர மாட்டேனா.? எங்க அம்மா வந்து சாப்பாடு போட்டு தந்தால் தான் துரைக்கு தொண்டைக்குள் இறங்குமோ?.’ இப்படி புலம்பிக் கொண்டே இருந்தவளுக்கு ஒரு கட்டத்திற்கு மேலே சாப்பாடு தொண்டையில் இறங்க மறுத்தது. இவளின் நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு சிரிப்புதான் வந்தது. அவளின் இடையில் கைவைத்து இழுத்து தனக்கு அருகில் உட்கார வைத்தான்.

           அவனிடம் இருந்து திமிறிக் கொண்டே அவனை முறைத்து பார்க்க. அவனோ அவளின் நெற்றியில் தன்னுடைய நெற்றியை முட்டி விட்டு , சாப்பாட்டு தட்டை எடுத்து அவளுக்கு சாப்பாட்டை ஊட்ட ஆரம்பித்தான். அவனை “பே வென்று “தன்னுடைய முட்டை கண்ணை உருட்டி….உருட்டி பார்த்துக்கொண்டு இருந்தாள்.  

        உதி, அவளின் கண்ணத்தை மெதுவாக கிள்ளிவிட்டு ‘ சாப்பாட்டை எவ்வளவு நேரம் தான் முறைத்து பார்த்துக்கொண்டு இருப்ப.? வாயைத் திறந்து சாப்பிடு டி’. 

          அமைதியாக வாயைத் திறந்து சாப்பிட ஆரம்பித்தாள். இதயத்தில் ஓர் வலி காரணம் இன்றி ஏற்பட்டு அவளின் கண்களை கலங்கச் செய்தது.  

         அவளின் கலங்கிய கண்களைப் பார்த்தவன் ‘ என்னமா காரமா இருக்கா?’

அவள் இல்லை என்று தலையாட்ட. அப்பறம் என்ன ஆச்சு? எதுக்கு கண்கள் கலங்கி இருக்கு ?. ஒருவேளை நீ போட்டு வந்த சாப்பாட்டை நீயே சாப்பிட்டு விட்டதால் மறுபடியும் உன்னை போய் சாப்பாடு போட்டு வரும்படி கூற போறேனு நினைத்து கண்கள் கலங்குதா.? நான் அப்படி எல்லாம் சொல்லமாட்டேன் நானே போய் சாப்பாடு போட்டுக் கொள்கிறேன் சரியா. அவளின் அருகில் தன்னுடைய தலையைச் சாய்த்துக் கேட்க .

             நுவலி, முறைத்து விட்டு ‘ எப்ப பாரு காமெடி தான் உனக்கு ‘ இன்னொரு சாப்பாட்டு தட்டை எடுத்து அவனுக்கு சாப்பாடு ஊட்ட ஆரம்பித்தாள் .அவனும் சிரித்துக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தான். 

         காலம் தடையின்றி செம்மையாக தன் பணியினைச் செய்துக்கொண்டு இருக்க . உதிரனுக்கும் நுவலிக்கும் திருமணம் ஆகி இன்றோடு ஐந்து நாட்கள் ஆகியது. அவனின் உடம்பில் கத்திக்குத்து ஏற்பட்ட இடத்தில் புண் ஆறி பழையபடி மீண்டு இருந்தது. காலையிலே ரத்னமும் வசுமதியும் வெளியே சென்று விட்டனர் .வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என்று போகும் போது கூறிவிட்டு சென்றனர்.  

       உதிரன் எழுந்து தன்னுடைய காலை கடன்களை முடித்துக்கொண்டு தோட்டத்தில் உடற்பயிற்சி செய்துக்கொண்டு இருந்தான். பனியன் மற்றும் சாக்ஸ் மட்டும் போட்டுக்கொண்டு உடற்பயிற்சி செய்துக்கொண்டு இருக்க, அந்த பக்கம் தெருவில் போவோர் வருவோர் எல்லோரும் அவனை காட்சிப் பொருளாக மாற்றி… மாற்றி பார்த்துக்கொண்டே அங்கே நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தனர். 

          அப்பொழுது தான் தூங்கி எழுந்து வெளியே வந்தவள் , இவனின் உடல் அமைப்பைக் கண்டு ‘ இவளும் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்’. அவன் தன்னுடைய உடலை வளைத்து உடற்பயிற்சி செய்யும் போதெல்லாம் அவனின் கையில் உள்ள தசைகள் சேர்ந்து படிக்கட்டுகள் போல முறுக்கி கொண்டு ஒன்றாக வந்து நின்றனர். அவன் தன்னுடைய உடலை பின்புறமாக வளைத்து பயிற்சி செய்ய, தெருவில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த பெண்களில் ஒருத்தி கைத்தட்டி கூச்சல் போட .

          அந்த சத்தத்தில் தன்னிலைக்கு வந்தவள் திரும்பிப் பார்க்க ‘ இவனை காட்சிப் பொருளாக பார்த்துக்கொண்டு இருக்கும் அவர்களைப் பார்த்து எரிச்சலாய் வந்தது’. வேகமாய் வீட்டிற்கு உள்ளே சென்று ஒரு பெரிய டவளை கொண்டு வந்து அவனின் மீது போர்த்தி விட்டு திரும்பி அங்கு இருந்தவர்களை பார்த்து ‘ இங்க என்ன வேடிக்கையா காட்றாங்க ? போய் உங்க வேலையை பாருங்க ‘ அவள் கத்திக்கொண்டே போக .

  உதி, அவளை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் வந்து இறக்கிவிட்டு ‘ எதுக்கு டி அவங்ககிட்ட இப்படி கத்துற ? விட்டால் ஓடிபோய் எல்லோருடைய கண்ணையும் பிடிங்கி கொண்டு வந்துவிடுவ போல ?.

         நீ எதுக்கு டா என்னைத் தூக்கிக் கொண்டு வந்த .? அவங்களுக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா என்னுடைய புருசனை இப்படி வெறிக்க பார்த்துக்கொண்டு இருப்பாங்க.? அவங்களை ஒருவழி பண்ணாம விடமாட்டேன்.

         உனக்கு பொறாமை அதிகம் டி . இவ்வளவு பொறாமை எல்லாம் இருக்க கூடாது.

       நீ எனக்கு மட்டும்தான் சொந்தம் புரிந்ததா?. உன்னை யாருக்கும் எதுக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்.

    அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன். நான் உனக்கு மட்டும் தான் டி சொந்தம் .அவளின் நெற்றியில் புன்னகையுடன் ஒரு முத்தம் வைக்க, அவளோ இறுக்கமாக அவனை அணைத்து இருந்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments