Loading

குளிர் ஊசி – 7 ❄️

அதிகாலை சூரியன் புதிதாக ஸ்காட்லாட்டிற்கு வந்திருப்பவர்களுக்கு நேரம் கடந்து விட்டது என்று உணர்த்தும் பொருட்டு தனது மஞ்சள்  கலரிங் குழலை பரப்பியது. அதில் அனைவருக்கும் விடிந்தது இருவருரை தவிர.

காலையில் உடல் முக்கியம் என்று ஒரு கூட்டம் வாக்கிங், ஜாக்கிங் என்று போக, ஒரு கூட்டம் உள்ளம் முக்கியம் என்று தியானம் என்று போக, ஒரு கூட்டம் தனது துணை தான் முக்கியம் என்று கிடைக்கும் சந்தில் தன் காதலர்களுடன் பேசி மகிழ்ந்துக் கொண்டிருந்தனர். குழந்தைகளின் மனம் அறிந்து அவர்களுடன் செலவிடம் பெற்றோர்களும் இருந்தனர். வேலைக்கு செல்பவர்களும் ஓடிக் கொண்டிருந்தனர்.

இவ்வாறு அழகான பொழுதினில் ஒரு சேர இரு வீட்டிலும் அலறல் சத்தம். அடித்து பிடித்து சரண் ஒரு காலில் மாட்டிய பேண்ட்டுடன் ஜனனியின் அறை வாசலில் நிற்க, அதே நேரத்தில் மித்ரனும் மிடுக்காக உடுத்திய உடையுடன் சார்லியின் அறையில் நின்று தலையில் அடித்துக் கொண்டான்.

சார்லி தனது இரவு டையுடன் கட்டிலின் மேல் ஏறி நின்று காலால் உதைத்துக் கொண்டிருந்தான் ஒருவனை . அவர்களின் சண்டையைக் கண்டுத் தான் தலையில் அடித்துக் கொண்டு ஒன்றும் கூறாமல் நகன்று விட்டான்.

ஆனால், சார்லியின் காலடியில் இருப்பவனோ “டேய், கர்ணன் நண்பனுக்காக உயிரையே கொடுத்தார் அவன் கூடப் பிறந்தவங்களை கூட விட்டுட்டு. ஆனா, நீ…… ” என்று கத்த , தனது அறைக்கு சென்றவன் திரும்பி வந்து “கர்ணனுக்கு வாழ்க்கை கொடுத்தது துரியோதனன். ஆனா, நீ…..”

“என்ன நீ….. நான் உனக்கு இந்த வீடை கொடுத்திருக்கேன். அதுவும் வாடகை வாங்காமல் ” என்று கூறி, அடித்துக் கொண்டிருந்த சார்லியின் காலை தன் நாவால் சுவைக்க முற்பட , சுத்தம் பார்க்கும் சார்லி அருவருப்பு பட்டுக் கொண்டு கட்டிலில் இருந்து கீழே இறங்கினான்.

அதோடு , கோபத்துடன் குளியலறைக்குள் நுழைத்துக் கொண்டான். மல்லாந்து படுத்துக் கொண்டு ஒரு காலைத் தூக்கி மறு காலின் மேல் காலை வைத்து தலைக்கு கையை முட்டு கொடுத்துக் கொண்டு அறையின் வாயிலில் நிற்கும் மித்ரனைக் கண்டு கண்ணடித்தான் மித்ரனின் பால்ய நண்பனும், அத்தை மகனுமான பாலநந்தன்.

இருவரின் துறையும் வெவ்வேறாக இருந்தாலும் ஒரே ஊரில் தான் இருப்போம் என்று உறுதிமொழி எடுக்காத குறையாக இருவரும் ஸ்காட்லாண்டில் தஞ்சம் புகுந்து விட்டனர்.

பாலா இக்காலத்தின் ஃபேண்டஸி வேலையான ஐடி துறையை தேர்ந்தெடுத்து அதில் நல்ல உயர்ந்த பதவியில் இங்கு குடியேறி விட்டான்.

அதே போல் மித்ரன் பொறியியல் துறை தேர்ந்தெடுத்தாலும் அதில் வித்யாசமான கடல் சார்ந்த துறையை தேர்ந்தெடுத்து ஒரு பெரிய அரசாங்க ப்ரொஜெக்ட்டின் மேனேஜராக உள்ளான்.

கிட்டத்தட்ட ஸ்காட்லாந்த் அரசாங்கத்தின் உத்யோகத்தில் உள்ளான். சார்லிக்கும் கடல் மேல் விருப்பம் உள்ளது. அதனால் சற்று வேறுபட்டு ஓசோனோகிராபி என்ற படிப்பை தேர்வு செய்து உள்ளான் .

இங்கிலாந்தில் உள்ள யூனிவர்சிட்டி ஆஃப் லிவர்பூல் என்ற கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அங்கு படிப்பதற்கு செல்ல சொன்னார்கள் மித்ரன்  மற்றும் பாலா.

ஆனால், சார்லி சிறு வயதிலிருந்தே இவர்கள் இருவரின் யாரேனும் ஒருவரரோடு இருந்தே பழகி விட்டதால் அங்கு செல்ல  பயம் கொள்ளவில்லை. ஆனால், பிடிக்கவில்லை. நல்ல வாய்ப்பை விட மனசு இல்லாமல் பாலா மற்றும் மித்ரன் சார்லிக்கு தெரியாமலேயே கையெழுத்து வாங்கி அவனுக்கு அட்மிஷன்  போட்டுவிட்டனர்.

அதனாலேயே சார்லிக்கு இருவரின் மீதும் கோபம். பாலா துடுக்காவும் நகைச்சுவை உணர்வுடனே இருப்பதால் சார்லியின் ஒசிடி பழக்கத்தை என்றும் உபயோகித்து சீண்டுவான். இன்றும் அதனை கையாண்டு அவனை பேச வைக்க முயற்சி செய்தான். ஆனால், அதில் தோல்வியும் பெறவில்லை வெற்றியும் பெறவில்லை. ஏனென்றால், சார்லியும் உள்ளே இருந்து சிரித்துக் கொண்டு தான் இருந்தான்.

🏠 சரணின் வீடு

சார்லி அலறும் சமயம் ஜனனி அலறிக் கொண்டிருந்தாள். அதில் பதறி சரண் எழுந்து அரைகுறையாக வந்தவன் கண்டது மாயா ஜனனியின் தலையில் குட்டுவதை தான்.

என்ன தான் காதலித்து திருமணம் செய்தாலும், தனக்கு உறவாக முதலில் வந்தது ஜனனி தான். ஆம், சரண் ஆசிரமத்தில் வளர்ந்தவன். அதுவே முதல் எதிர்ப்பாக இருந்தது மாயாவின் வீட்டில்.

அதனால் கோபம் கொண்டு சரண் மாயாவை இழுத்து தள்ளி நிறுத்தி விட்டு, ஒரு புருவத்தை மட்டும் தூக்கி மாயாவை உற்று நோக்கினான்.

அதிலேயே அவனின் கோபம் புரிந்து “அவளை கெடுக்கிறதே நீ தான். என்னமோ பண்ணித் தொலைங்க ” என்று கூறி விட்டு ஒன்றும் கூறாமல் ஜனனியை மட்டும் பார்த்து இல்லை இல்லை முறைத்துக் கொண்டே சென்றாள்.

சரணின் கோபம் மனதின் ஒரு ஓரத்தில் சந்தோஷம் கொண்டாலும் , ஒரு ஓரம் பயம் வருத்தம் வேதனை என்று பல வித உணர்ச்சிகள் தோன்றியது. ஏனென்றால், அவளுக்கும் தெரியுமே அவனின் கோபம் பற்றி . அதனால் சத்தமில்லாமல் எழுந்து குளியலறைக்குள் செல்ல முயன்றாள்.

ஆனால், முடியவில்லை. ஏனென்றால் , சரணின் பார்வை நெருஞ்சி முள்ளாக அவளின் முதுகைக் குத்தியது. அதனால், வேறு வழியில்லாமல் திரும்பி வந்து அவனின் முன் நின்று தனது மொபைலை காண்பித்தாள்.

அதில் புரியாமல் முழிக்க,  “மணியைப் பாரு ” என்று கூறியவுடன், சரண் சிரித்துக் கொண்டு, “அட உனக்கு 24 ஹவர்ஸ் குழப்பும் இல்லையா. ஹா ஹா…….” என்று கூறி சிரித்தான்.

அவனைக் கேவலமாக பார்த்ததும் இல்லாமல் அறையின் வாயிலில் நிற்கும் மாயைவையும் ” இவனை எப்படி லவ் பண்ணி கல்யாணம் செய்தாய்”  என்பது போல் பார்த்து விட்டு, “டேய் பனமரம் ….. நிறுத்து ….. என் மொபைல்ல மணி 11.30 ன்னு காமிக்குது. இதுல என்ன 24 ஹவர்ஸ் கண்டுபிடிச்ச ? ” என்று கூறி விட்டு, குளியலறைக்குள் நுழைய, “அப்போ எதுக்கு தான் கத்துன ? ” என்று தலையை பரபரவென தேய்த்துக் கொண்டேக் கேட்டான்.

அதில் மாயாவும் , ஜனனியும் ஒருசேர அதிர்ந்து “அட லூசுப் பயலே இன்னுமா உனக்கு புரியல. இங்கிலாந்து நேரம் இந்தியா நேரத்தை விட 4:30 மணி நேரம் பின்னாடி இருக்கும். அவள் போன் செட்டிங் மாத்தாமல் அப்படியே வச்சதால் லேட் ஆகிடுச்சு என்று கத்துறா ” என்று மாயா விளக்கவுரைக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

கணவனாயிற்றே வேறு வழியில்லை என்பதால் அவனுக்கு பொறுமையாக எடுத்துரைக்கும் நேரத்திற்குள் ஜனனி குளித்து தனது வேலைக்காக தயாராகி வெளியே வந்தாள்.

இந்நாட்டு கலாசாரப்படி வெளிரிய பழுப்பு நிறம் என்று கூறும் பெய்ஜ் கலரில் சாட்டின் வகைச் சார்ந்த துணியில் டிசர்ட் போன்று அணிந்து, வெளியில் மிட்நைட் ப்ளு கலரில் கேர்ட்டும், அதற்கு இணையான ஆங்கில் லென்த் பேண்ட் அதே கலரில் அணிந்திருந்தாள். அதோடு கையில் ஃபாஸ்ட்ரக்கில் வெள்ளை நிற வாட்ச் அணிந்திருந்தாள்.

தனது தோள்வரை நீண்ட கூந்தலை போனி டெய்ல் என்றழைக்கப்படும் குதிரை வாலை போட்டுக் கொண்டாள். பின்பு, காதில் ஒரே ஒரு கல் மட்டும் இருக்கும் தோடை அணிந்திருந்தாள். முகத்தில் நோ மேக்கப் லுக்கில் தன்னை அழகுப்படுத்தி  கொண்டாள்.

அவளைப் பார்க்க பார்க்க திகட்டுவது போல் இருந்தது. ஆனால், அந்த திகட்டல் கூட தித்திப்பும் கலந்து அவனை ஆர்பரித்தது. வெளியில் நின்று சரணுடன் உரையாடி கொண்டிருந்ததை ப்ளு ஹேசல் கண் அத்தருணத்தையும் அவளையும் களவாடி கொண்டிருந்தது.

இது எதுவும் தெரியாமல் சரண் மற்றும் மாயாவுடன் தனது பணி நோக்கி சென்று விட்டாள். அவள் சென்றவுடன் மித்ரனின் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே வந்தான் அனந்தன் . கதவு திறக்கும் சத்தம் கேட்டு வெளியில் வந்த பாலா , அனந்தனை கண்டு அதிர்ந்து வேக வேகமாக அருகில் இருக்கும் அறையை காது வைத்துக் கேட்க, ” டோன் பேனிக். அவன் இல்லாததை உறுதி செஞ்சுட்டு தான் இவன் வருவான் ” தலையை துவட்டி கொண்டே வந்தான் சார்லி .

அதில் நக்கலாக சிரித்த அனந்தன் ஒன்றும் கூறாமல் மித்ரனின் அறைக்கு எதிரில் இருக்கும் தனது அறைக்கு சென்று விட்டான். சார்லி ஏக்க பெருமூச்சு விட்டு, அந்த ஃபிரேமை பார்த்தான்.

அதில் அசோகர் அமர்ந்து இருக்க, அருகில் ராஜேஸ்வரி அவரது மனைவி நிற்க இரு பக்கவாட்டிலும் அவரது இரட்டை புதல்வர்களான அனந்த மயூரன் மற்றும் மித்ர மயூரன். கீழே உள்ள குழந்தை சார்லியே .

அதில் ப்ளு ஹேசல் கண்ணில் ஒருவனும்,  ப்ரவுன் ஹேசல் கண்ணில் ஒருவனும் இருப்பதைக் கண்டு கண் கலங்கினான் சார்லி. பாலா கை வைத்தவுடன் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவன் அனந்தன் அறையின் வெளியில் வருவதற்குள் வேக வேகமாக வெளியில் சென்று விட்டான்.

இதை  அனைத்தும் தெரிந்தும் அனந்தன் கண்ணீர் மட்டுமே விட முடிந்தது. இருந்தும் கோபத்துடன் கை முஷ்டியை இறுக்கி “நாகாகாகாகா…….” என்று கத்தி சுவற்றில் குத்தினான்.

“அம்மா……… “

கீர்த்தி ☘️

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்