Loading

குளிர் ஊசி – 5 ❄️

“ஆளு என்ன கலரா இருந்தாலும் கண்ணு மட்டும் என்ன கவர்ந்திழுக்கனும்”

“அவ்ளோ தானா “என்று கூறி சலிப்புடன்  சார்லி திரும்ப,

“ஹலோ என்ன அவ்ளோ தானா? கண்ணு பத்தி என்ன தெரியும் உனக்கு? ” பொங்கினாள் ஜனனி.

“என்ன பெருசா இருக்க போகுது ? ” லாராவும் சந்தேகத்துடன் வினவ,

“கண்ணுல பல ரகம் இருக்கு . உங்களுக்குலாம் தெரிஞ்சது கண்ணுல வித்தியாசம் வெறும் கருவிழி மட்டும் தான் “

“வேற என்ன மேம் இருக்கு? ” மித்ரனும் பேச்சின் சுவராஸ்சியத்தில் கேட்டான்.

” முதல ஒருத்தங்க பாக்கும் போது அந்த கண்ணு தான் ஆயிரம் வார்த்தைகள் பேசும். காதலிக்கிறவங்களுக்கு மட்டுமில்லை. இது எல்லாருக்குமே பொருந்தும். இந்த மாதிரி பேசுறது கருவிழி மட்டும் காரணம் இல்லை. அதைத் தவிர நிறைய விஷயங்கள் இருக்கு.

முதல கண்ணு நம்ம முகத்துக்கு கரெக்ட்டான இடத்துல இருக்கணும். அது இன்ச் எடுத்து சொல்ல கூடாது. அவங்க அவங்க ஃபேஸ்க்கு ஏத்த மாதிரி மாறும்.

இரண்டு கண்ணுக்கும் இடையில உள்ள அந்த கேப். சில பேருக்கு அது கரெக்ட்டா இருக்கும் . சிலருக்கு நெருக்கமா இருக்கும். சிலருக்கு தூரமா இருக்கும்.

அடுத்து , புருவத்துக்கும் கண்ணுக்கும் இடையில உள்ள இடைவெளி . அதுவும் முன்ன சொன்ன மாதிரி தான்.

அப்புறம் புருவ முடிவும் ஆரம்பமும் கண்ணுடைய முடிவும் ஆரம்பமும் ஒரே லைன்ல இருக்கும்

அப்புறம் கண்ணுடைய முடி . அதாவது ஐ லேஸஸ் (eye Lashes) . அதுவும் முக்கியம்.

அப்புறம் கண்ணுடைய ஷேப் . மீன் போல இருக்கு, மான் போல இருக்குனு சொல்லுவாங்க இல்லையா அது மாதிரி.

அப்புறம் , மூக்கு பக்கம் இருக்கிற கண்ணோடைய முடிவு வித்தியாசம் இருக்கும். அதுவும் முக்கியம். இதுலாம் மேட்ச் பண்ணி போட்டால் பிராபளிட்டி நிறையா வரும்.

“எவ்ளோ மா வரும் அது? “லாரா ஆச்சர்யம் தாங்காமல் கேட்டாள்.

“சாரி …. எனக்கு மேத்ஸ் தெரியாது” திரும்பி சிரித்துக் கொண்டே கூறினாள் ஜனனி.

“இதலாம் வச்சு என்ன பண்ணுறது ?” குழப்பத்துடன் கேட்டான் சார்லி.

“இப்ப சொன்னது எல்லாம் நீ நினைக்கிற மாதிரி சாதாரண விஷயம் தான். ஆனா, இவ அதுக்காக ரெடி பண்ணுனது தான் ஓவரா இருக்கும் “மாயா சலித்துக் கொண்டே கூறினாள்.

” என்ன ரெடி பண்ணிருக்க ? “

“அது சூட்கேஸில் இருக்கு . வீட்டுக்கு போயிட்டு காமிக்கிறேன் “என்று ஜனனி சொன்ன நொடி வண்டி சடாரென்று ஒரு ஓரத்தில் நின்றது.

அரை நொடியாயிற்று அனைவரும் சகஜ நிலைக்கு வர . மித்ரனின் செயலில் ஜனனி அவனின் தோளைத் தட்டிக் கொடுத்து ” குட் பாய்”  என்று கூறி , கீழிறங்கி தனது ஐ-பாட்டை (Ipad )  கொண்டு வந்தாள்.

அதைத் திறந்து காண்பிக்கையில் இருப்பத்தி ஐந்திற்கும் மேற்பட்ட கண்களை ஓவியமாக வரைந்து இருந்தாள். பின்பு, கொஞ்சம் தள்ளி அதை ஒவ்வொரு வகையான முகத்திற்கு ஒப்பிட்டு பார்த்திருந்தாள். இதை அனைத்தையும் ஆச்சர்யமாக பார்த்தவன் ஒரு ஓவியத்தில் மட்டும் நிலை குத்தி நின்றவன் சட்டென்று அதை ஜனனி அறியும் முன்பு அழித்து விட்டான்.

ஆனால், அதை மித்ரன் கண்டு கொண்டான். திரும்பி மித்ரனை சார்லி பார்க்க, மித்ரன் தெரியாதவாறு காண்பித்து கொண்டவன் வலப்புறம் திரும்பி சிரித்துக் கொண்டான்.

சார்லியும் கண்டு கொள்ளாதவாறு அனைத்தையும் கண்டுவிட்டு அவளிடம் கொடுத்தான்.

” இதலாம் ஓகே….. ஆனா, முன்னாடி சொன்ன கண்டிஷன் என்ன? ” சார்லி ஆர்வமுடன் கேட்டான்.

“வேலை பாக்கிறவனா இருந்தா தான் காலையில போயிட்டு நைட்டு எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்துடுவான். தொழில்னா முன்னேத்தனும் வளக்கனும் சொல்லி வீட்டுக்கே வர மாட்டான்.

வேலைப் பாக்கிறவன் தான் கையில காசு கம்மியா இருக்கு . லவ் பண்ணவோ , சும்மா டைம் பாஸுக்கு பேசவோ நேரமும் இருக்காது, காசும் இருக்காது.

வேலைப் பாக்கிறவன் தான் நமக்கு உதவி பண்ணுவான் வீட்டு வேலைக்கு. முதலாளியா இருந்தா நான் அப்படி இப்படினு பேசுவான்.

அப்பறம் அவனுக்கு தான் வீக்எண்ட் லீவ்லாம் இருக்கும். அப்போ தான் வெளிய கூட்டிட்டு போவான். சர்ப்ரைஸ்லாம் கொடுப்பான். அதனால் , எனக்கு இப்படி தான் வேணும் “

“அப்போ கண்ணு? “

“கண்ணு ரொம்ப முக்கியம். எனக்கு இப்படி தான் வேணும்னு இல்லை. ஆனால், அவன் முகத்துக்கு ஏத்த கண்ணு இருக்கணும் “

“உங்க கிரஷுக்கு இருக்கா? “மித்ரன் சார்லியை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டு கேட்டுவிட்டு, உதட்டை மடித்து சிரித்தான்.

“அவன் கண்ணுலாம் அழகா தான் இருந்துச்சு. ஆனால்,  அவன் கருவிழியை தான் பார்க்க முடியல. என் கெஸ்  கரெக்ட்னா அவனுக்கு  வித்தயாசமான கலர் தான் இருக்கனும் “

சரணிற்கு நிம்மதி பரவியது. அதை வெளிப்படையாகவே காண்பித்தான். அதனை கண்டு மாயா சிரித்தாலும் உள்ளுக்குள் ஒரு ஏமாற்றம் இருந்தது .

சார்லி அதனை நினைத்து சிந்தித்து கொண்டே வந்தவன்….. வேறு சிந்தனைக்கு சென்று முகத்தை கடுமையாக மாற்றிக் கொண்டான்.

மித்ரனும் எண்ணமும் அலைபாய்ந்து அவனின் முஷ்டியை இறுக்கி…. அந்த இறுக்கத்தை ஸ்டீயரிங்கில் காண்பித்தான் .

“நீ யாரா வேணாலும் இரு…. எனக்கு என்ன…. அவனை என்னால சேர்த்துக்க முடியாது. இவன் ஒரு துரதிர்ஷடம். இவனால் என் வாழ்க்கையே போச்சு. இவனும் , இவன் குடும்பனால தான் இப்படி நான் நிக்கிறேன். இவனைப் பார்த்தாலே அருவருப்பா இருக்கு . போய் தொலைடா மொத …. “

அச்சுபிசகாமல் ரீங்காரமிட்டது அவனின் செவிகளில். திருக்குறளை போல் இவ்வார்த்தைகளை மனப்பாடம் செய்து கொண்டான் மித்ரன். தனது ஆற்றாமையையும், சோர்வு ஏற்படும் சமயம் எல்லாம் இவ்வார்த்தைகளயே நினைத்துக் கொள்வான்.

அதன் மூலம் தனக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவதாக நினைத்துக் கொள்வான். ஆனால், இன்று மாறாக கோபம் தாறுமாறாக வர , தன்னை சமன்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான். அது முயன்றும் தோல்வியைத் தழுவ , பக்கவாட்டில் இருந்த சார்லி இதனைக் கவனித்து தனது வலதுகரத்தை அவனது இடக்கரத்தில் வைத்து கண்கள் மூடித் திறந்தான்.

அதன் பின்பு, மித்ரனின் கோபம்  கொஞ்சமே கொஞ்சம் மட்டுபட்டது. அதனோடு இருவருக்கும் பின்னால் நடக்கும் உரையாடல்கள் மனதினில் பதிந்தது.

“எனக்கு தெரிஞ்சு அவனுக்கு ப்ளு ஹேசல் தான் இருக்கும் “

ஜனனி முன் சீட்டில் மோதிவிட்டாள்.

கீர்த்தி☘️

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்