Loading

அத்தியாயம் 20

அபி குன்னூருக்கு சுற்றுலா செல்வதாக அறிவித்ததும், சாதனாவின் முகம் பயத்தில் வெளுத்திருந்தது சில நிமிடங்களே…. பிறகு, ”நான் அங்கே போனால்தானே கண்டவர்களையும், பார்க்க நேரிடும்…. நான்தான் போக போவதில்லையே… பிறகு ஏன் பயப்பட வேண்டும்…? என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டவள், தேர்ந்தெடுத்திருக்காங்க பாரு ஊர..? குன்னூராம் பெரிய குன்னூரு…ஏன் குளு குளுன்னு வேணும்ன்னா, குலுமணாலி கூப்பிட்டு போக வேண்டியதுதான இல்லன்னா.. ஏற்காடு கூட்டிட்டு போக வேண்டியதுதான… அதென்ன குன்னூரு மட்டும்……ஸ்பெஷலா…? எல்லாம் இந்த வளர்ந்து கெட்டவங்களோட வேலையாத்தான் இருக்கும்…” அபியை திட்டி கொண்டிருந்தாள்…

மதுவோ… “சாது… நம்ம டூர் போகப்போறோம்…” மகிழ்ச்சியுடன் அவளை இறுக அணைத்து கொள்ள….சாதனாவும் அவளை அணைத்துகொண்டாள்… சாதனா மனதில், “ நாம டூர் வரலைங்கிறத இப்ப சொல்ல கூடாது… சொன்னா மதுவும் போக மாட்டேன்னு சொல்லிருவா…. இதை டூர் போற அன்னைக்குத்தன் சொல்லவேண்டும்” நினைத்துக்கொண்டாள். 

மீட்டிங் முடிந்து அனைவரும் கிளம்ப.. சாதனாவும் கிளம்பினாள்.  அபி மங்கைக்கு கால் செய்து, சுற்றுலா செல்வதை பற்றி கூற மங்கை பயந்தார்… “வேண்டாம் தம்பி… இப்பதான் அவ  அங்க நடந்ததெல்லாம் மறந்து,  மனசு கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வருது… மறுபடியும் அந்த ஊருக்கு சாதனா வந்தா, அவ மனசு கஷ்டப்படும் வேண்டாமே..” என தயக்கத்தோடு கூறினார்….

” இல்லை ஆண்ட்டி இது, நான் நல்லா யோசிச்சு எடுத்த முடிவு… சாதனா இன்னும் அந்த விசயங்கள மறக்கலை ஆண்ட்டி…. நினைக்காம இருக்கா… அவ்வளவுதான்….. ஆனா, அவ அந்த விசயங்கள எப்ப நினச்சாலும், முன்ன ஏற்பட்ட அதே வலிதான் இப்பவும் இருக்கும்… இது அவளுடைய எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது இல்லத்த…..  நாளடைவில் இது ஒரு மன அழுத்தத்துல கொண்டுபோய் விட வாய்ப்பிருக்கு….” என்று அபி கூறினான்.. மங்கை என்ன சொல்றிங்க தம்பி…? பதட்டத்துடன் கேட்க… 

“ பயப்படாதிங்க அத்தை… அந்த அளவிற்கு நான் வர விட மாட்டேன்…” என்று அழுத்தமாக கூறியவன்…. “ சாதனா பழைய விசயங்கள  நினச்சாலும், அதைப்பத்தி நினைத்து வருந்தகூடாதுன்னா.. சாதனா கண்டிப்பா அங்க வந்துதான் ஆகணும்… என்னால, இங்க சாதனாவிற்கு மகிழ்ச்சியான அனுபவங்களை கொடுக்க முடியும்… அவளுக்கு குன்னூர் என்றாலே, இந்த சுற்றுலா பத்தி நினப்புதான் வரணும்…  வர வைப்பேன்… அதுக்காகத்தான் நான் இந்த ஊரை செலக்ட் பண்ணினேன்…. சொல்ல போனா இந்த சுற்றுலா ஏற்பாடே சாதனாவிற்காகத்தான்….” எனவும் மங்கை அபி, சாதனாவின் மேல் வைத்திருக்கும் அன்பை நினத்து சந்தோசமடைதார்…

அந்த சந்தோசத்துடனே சாதனா குன்னூர் போவதற்கு சம்மதம் தெரிவித்தார்….. ”ஆனா ஆண்ட்டி அம்மணி இந்த டூருக்கு வரமாட்டேன்னு சொல்லுவா.. நீங்கதான் அவளோட மனச மாத்தி எப்படியாவது வர வைக்கணும்..” என்று வேண்டுகோள் வைத்தான்… மங்கையும் அவளை அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார்…அபி  அவருக்கு நன்றி கூறிவிட்டு சந்தோசத்துடன் செல்லை அணைத்தான்.

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த சாதனாவை, பால் பாயாசத்துடன் வரவேற்றார் மங்கை.. ” என்னம்மா பாயாசம் வாசனை ஆள தூக்குது…. இன்னைக்கு என்ன விசேசம்…? என கேட்க… “ஏன் சாதும்மா எதாவது விஷேசம் என்றால்தான் பாயாசம் செய்யணுமா..? ஆசைக்கு செய்ய கூடாதா..? என கேட்ட அன்னையை சாதனா வியப்புடன் பார்த்தாள்… “என்னம்மா உங்க முகம் இன்னைக்கு டாலடிக்குது… உங்க பேச்சுல ஒரு வித்தியாசம் தெரியுதே..” என்று தன் அன்னையின் முகத்தை ஆராய “இருக்கதா பின்னே… தன்னோட மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய போகுதுன்னா.. எந்த தாய்தான் சந்தோசபடாம இருப்பாங்க…?”  மனதில் சாதனாவிற்கு பதில் கொடுத்துவிட்டு, 

“ என்ன சாதும்மா ஆஃபீஸ் விட்டு வந்தவுடனே… முகம் கூடகழுவாம என்கூட நின்னு அரட்டை அடிச்சுட்டு இருக்க… ” மங்கை கூற, “ வந்தவளை பாயாசம் கொடுத்து பாதைய மறச்சு நின்னுக்கிட்டு….. கடைசில என்னையவே குத்தம் சொல்றிங்களா…? அன்னையிடம் பொய்யாக கோபித்து கொண்டவள்… முகம் கழுவ சென்றாள்… அன்னை கொடுத்த பாயாசத்தை குடித்துகொண்டே வழக்கம் போல, அலுவலகத்தில் நடந்த விசயங்களையும், அபிக்கு பொண்ணு பார்த்த விசயம் முதற்கொண்டு சொல்லி முடித்தவள், அலுவலகத்தில் சுற்றுலா போவதை பற்றியும் கூறினாள்…. ஆனால் சுற்றுலா எங்கே செல்கிறார்கள் என்பதை பற்றி கூறவில்லை… தெரிந்தால், அவர் வருத்தப்படுவார் என்று அதை சொல்லாமல் விட்டவள், ஏதோ யோசித்து கொண்டிருந்தாள்.. 

”அபிக்கு பொண்ணு பார்த்ததாக சாதனா சொன்னதை கேட்ட மங்கை, முதலில் குழம்பினார்… பிறகு அபி.. சாதனாவிடம் தன் மனைவியை எவ்வாறு பார்த்துக்கொள்வேன், என்று தன்னிடம் கூறியதை, மங்கையிடம் சாதனா கூறவும் அவரின் குழப்பம் தீர்ந்தது. சுற்றுலா விசயம்தான், மங்கைக்குத்தான் தெரியுமே… அவர்கள் எங்கே போகபோகிறார்கள் என்று… அதனால் இதை பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம், இன்னும் நாட்கள் இருக்கே.. என்று மங்கையும் அத்துடன் பேச்சை முடித்து கொண்டார்.. 

இரவு, உணவு உண்ணும்போதும் சாதனா யோசனையுடனே இருக்கவும்.. ”சாதும்மா என்னடா… சாயந்திரத்துல இருந்து ஏதோ யோசனையாவே இருக்க…? பரிவாக கேட்க… “இல்லம்மா எங்க எம் டி சாரப்பத்திதான் யோசிச்சுட்டு இருக்கேன்…” சாதானா எங்கோ பார்த்துகொண்டு கூற… மங்கை திகைத்து, சாதனாவை பார்த்தார்… ஆனால் அவள் அன்னையை கவனிக்கவில்லை…. “அவரைப்பத்தி உனக்கு என்ன யோசனைடா..? மங்கை கேட்க சாதனா, “தனக்கு வரப்போற மனைவிய அவர் எவ்வளவு நேசிக்கிறாரு தெரியுமா…? உண்மையாகவே அவருக்கு மனைவியா வரப்போற பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவங்கம்மா…” என்று அபியிடம் கூறியதையே, அன்னையிடமும் கூறிவிட்டு… உணவில் கவனம் செலுத்தினாள்…

அபியின் வீட்டில்… இரவு உணவிற்காக அனைவரும் டைனிங் டேபிளில் காத்திருக்க, வாசுகி, ஒருமுறை அனைவருக்கும் பரிமாறிவிட்டு… தானும் அமர்ந்து உண்ண தொடங்கினார்… அபொழுது அபி, அலுவலகத்தில் அனைவரும் குன்னூருக்கு சுற்றுலா செல்வதை அறிவித்தான்… ”ஏன் அபி அந்த ஊருக்கு போற…? அங்க போனா என் மருமக எப்படி வருவா…? என கேட்டது, வாசுகி இல்லை… தனசேகர்… வாசுகி தன் கணவரிடமும், அத்தையிடமும் சாதானாவிற்கு நடந்ததை கூறியிருந்தார்… அதனாலயே தனசேகர் அந்த கேள்வியை கேட்டார்… ”ஏன்ப்பா அந்த ஊருக்கு என்ன…? அபி தெரியாவதன் போல் கேட்க… ”என்ன அபி அங்கதான சாதனாவுக்கு அவ்வளவு கொடுமை நடந்துச்சு.. பிறகு எப்படி அங்க வருவாளா…? சந்தேகமாக கேட்டார் 

”அப்பா முதல்ல எல்லாரும் ஒண்ண புரிஞ்சுக்கோங்க.. அந்த ஊரு என்ன தப்பு செஞ்சது? அதுல இருக்க மனுசங்கதான் தப்பு செஞ்சிருக்காங்க…சும்மா அந்த ஊரையே குற்றம் சொல்லிக்கிட்டு இருக்காதிங்க… நானும்தான் பார்க்கிறேனே… அங்க சாதனாவ கூட்டிடு போனா என்ன நடக்குதுன்னு…? அவ வருத்தப்படுவான்னு அப்படியே விட்டா…எப்பத்தான் அவ மனசு மாறுவது…?”  என ஆதங்கத்தோடு கேட்டவன்…”சாரிப்பா கொஞ்சம் டென்சனா பேசிட்டேன்”  தந்தையிடம் மன்னிப்பு கேட்டான்… தனசேகர் அவன் தோளில் தட்டி கொடுத்து அமைதி படுத்த… அபி தொடர்ந்து “நீங்க எல்லாரும் அவ மனசு கஷ்டப்பட கூடாதுன்னு நினைச்சு அந்த விசயத்தை தள்ளி போடறிங்க… 

ஆனா, நான் அதுக்குள்ள அவளை கூட்டிபோய் நீ நினைப்பது போல அங்கே எதுவுமில்லைன்னு…அவளோட பயத்தை, கஷ்டத்தை தெளிய வைக்கணும்னு நினைக்கிறேன்.” என தன் செயலுக்கான விளக்கத்தை கூறினான்… “அபி நீ எது செஞ்சாலும் அதுல ஒரு காரணம் இருக்கும் என்று தெரியும்,  அதை தெரிஞ்சுக்கதான் அப்பா கேட்டேன்..மற்றபடி நீ சாதனாவை அழைத்து போறதுல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை…தனசேகர் அவனை சமாதானம் செய்தார்…

வாசுகி ”சரி … சரி இந்த டாபிக் இதோட போதும்.. சாப்பிட்டு எல்லாரும் போய் படுங்க… நாளைக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு.. முதன் முதலா நம்ம மருமக,  நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரப்போறேன்.. என அறிவித்தார்…. “வாவ் அம்மா நிஜம்மாவா…”அபி சந்தேகத்தோடும், சந்தோசத்தோடும் கேட்க.. “ஆமாடா ஆனா எப்படி கூட்டிடு வருவேன்னு கேட்க கூடாது… அதேமாதிரி, அவ வர்றப்ப நீ இங்க இருக்க கூடாது…”  ஒரு பெரிய அனுகுண்டை அபியின் தலையில் தூக்கிபோட்டார்.. அபி அதிர்ச்சியாக பார்க்க தனசேகரும், பாக்கியத்தம்மாளும், அவனின் முகத்தை பார்த்து, வாய்க்குள் சிரித்து கொண்டனர்… அபி அவர்களை பொய்யாக முறைத்துவிட்டு,

“அம்மா இது ரொம்ப அநியாயம், என் பேபி முதன் முதல்ல வர்றப்பொ நான் இல்லாம எப்படி..? நான் ஏன் இருக்க கூடாது? சிணுங்கலாக கேட்டன்… “ டேய் அபிகண்ணா நீ இங்க இருந்தேன்னா நீ யாரு, நான் யாரு, நம்ம ரெண்டுபேரும் யாருன்னு அவளுக்கு தெரிஞ்சிரும்டா..அதனாலதான் சொல்றேன்.. ” என்று சாமாதானம் செய்தார் ஆனாலும் அவன் முகத்தில் சிணுக்கம் இருக்க… சிறிது யோசித்தவர்.. “சரி அப்படின்னா ஒண்ணுசெய், சாதனா வர்றப்ப.. நீ உன் ரூமுக்குள்ள இருந்துக்க… மேல இருந்து அவளை பார்த்துக்க..” என கூற, அவன் முகத்தில் சிணுக்கம் மறைந்து புன்னகை அரும்பியது…. “ம்..ம் இதுதான் என் வாசுவிற்கு அழகு…” அன்னையை கொஞ்சியவன் “ குட்நைட் டார்லிங்” பாட்டியை வம்பிழுத்துவிட்டு, தந்தையிடமும் இரவு வணக்கம் கூறிவிட்டு சென்றான்.

மறுநாள் அனைவருக்கும் அழகாகவே விடிந்தது….. வழக்கம்போல் அலுவலகம் வந்த சாதனா… கம்ப்யூட்டரை ஆன் செய்து,  மெயில் ஐடியை திறந்தவள் அதில் சுற்றுலா பற்றிய அறிக்கை வந்திருந்தது…., அதில் அனைவரும் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும்.. கட்டளையிடப்பட்டிருந்தது… அதிலும் கண்டிப்பாக என்ற இடத்தில் அடிகோடிட்டிருப்பதை பார்த்தவள்..  சிறிது கோபத்தோடு அபியின் அறைக்கு சென்றாள்….

 கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றவள் அங்கு அபி, ஒரு ஃபைலில் முகத்தை மூடியிருந்தான்… இல்லை.. இல்லை மூழ்கியிருந்தான்… ”எக்ஸ்கியூஸ்மி சார்” அவனை அழைத்தாள் “ ஓ வாங்க சாதனா…” அவளை வரவேற்றவன் “சொல்லுங்க என்ன விசயம்..? என கேட்டான்.. “ நான் டூர்  போறத பற்றி பேசணும்…” என சொல்ல… “இதப்பத்தி காலையிலேயே எல்லாருக்கும் மெயில் பண்ண சொன்னேனே.. உங்களுக்கு இன்னும் வரலையா…? என கேட்க “ இல்லை… எனக்கும் வந்திருக்கு..” என ”ஓ… இத பத்தி வேற ஏதாவது சந்தேகம் இருக்கா…? சரி சொல்லுங்க இதுல உங்களுக்கு என்ன சந்தேகம்..? என ஏதும் அறியாதவன் போல் கேட்க… “டூருக்கு வருவதும், வ்ராததும் அவங்க அவங்க விருப்பம்தான? 

“ஆமா” 

”பின்ன எதுக்கு எல்லாரும் கண்டிப்பா வரணும்னு சொல்லிருக்கிங்க…” கோபத்தோடு கேட்டாள்.. “ஓ அதுவா..” அசுவாரசியாமாக கேட்டவன் “ இங்க பாருங்க சாதனா.. பொதுவா ஒரு கல்யாண பத்திரிக்கை  கொடுக்க வரவங்க, பத்திரிக்கையை கொடுத்துட்டு என்ன சொல்வாங்க…? கண்டிப்பா நீங்க எல்லாரும் குடும்பத்தோட வரணும்..னு சொல்வாங்க… இவங்களும் சரி கண்டிப்ப வர்றோம்னு சொல்லுவாங்க.. ஆனா எல்லாரும் அப்படியா போறாங்க? இல்லதான சில சமயம் யாருமே போகமாட்டாங்க… அதுமாதிரிதான் இதுவும், ஒரு பொதுவான வார்த்தை..

அதுக்கு ஏன் இவ்வளவு கோபப்பட்றிங்க..? என்றான்…சாதனா முகத்தை உம்மென்று வைத்துகொண்டு, ” நான் டூருக்கு வரலை…” எங்கோ பார்த்துகொண்டு கூற… “நீங்க சொல்றது எனக்கு கேட்கலை, என் முகத்தை பார்த்து சொல்றிங்களா..?  வழக்கம்போல் அழுத்தத்துடன் கூற.. சாதனா அவனின் முகம் பார்த்து… ” நான் டூருக்கு வரலை…” என்றாள் மீண்டும்.. “ சரி உங்க விருப்பம்”  என்று பேச்சை அதோடு முடித்துக்கொள்ள… சாதனாவிற்கு சப்பென்று ஆனது…” அப்படின்னா நான் வரலைன்னா இவங்களுக்கு ஒண்ணும்மே இல்லையா…?” ஆதங்கத்தோடு நினைத்தாள்..

அபி, சாதனாவையும் அவள் முகத்தில் வந்துபோகும் பாவனையையும் பார்த்தவனின் இதழில் நமட்டு சிரிப்பு இருந்தது… “வேற எதாவது சொல்லணுமா சாதனா?” என கேட்க அப்பொழுதுதான், தான் இவ்வளவு நேரமும், அபியின் அறையில் இருப்பதையே உணர்ந்தாள்…. அவசரமாக “வேற ஒண்ணும் இல்ல சார்..” என்று செல்ல போனவளை..” ஒரு நிமிஷம்…” அவளை நிறுத்தியவன் “இந்த டூருக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு… அதுக்குள்ள உங்க மனசு மாறலாம்.. சோ, இப்பவே எந்த முடிவும் எடுக்க வேண்டாம்…” என்று அவளை அனுப்பி வைத்தான். அலுவலகம் முடியும் நேரம்,  அபி முன்னயே கிளம்பிவிட்டான்…. சாதனாவும் கிளம்பும் நேரம் அவளை பார்க்க யாரோ ஒரு பெண்மணி வந்திருப்பதாக பியூன் வந்து சொல்லவும்…

சாதனா குழப்பத்துடன்..” என்னைய யாரு தேடி வரப்போறா…? அம்மான்னா எனக்கு போன் பண்ணிருப்பாங்களே… யாராக இருக்கும் என் யோசித்து கொண்டே… வந்தவள்… அங்கு அமர்ந்திருந்த வாசுகியை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.. “ஆண்ட்டி….” வியப்புடன் அவரை அழைத்தாள், அவரும் சாதனாவை பார்த்துவிட்டு புன்னகையுடன் எழுந்து நின்றார். “ஆண்ட்டி நீங்க என்னை தேடி ஆஃபீஸ் வருவிங்கன்னு எதிர்பார்க்கலை…” என்று சந்தோசத்துடன் கூறியவள்…”உட்காருங்க ஆண்ட்டி… குடிக்க எதாவது வாங்கிட்டு வரவா…? என கேட்க.. 

”அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் சாதும்மா…” என மறுத்தார்.. ”இந்தப்பக்கம் ஒரு வேலையா வந்தேன்…இந்த ஆஃபீஸ பார்த்தவுடனே,  அன்னைக்கு நீ இங்கதான் வேலை பார்க்கிறேன்னு சொன்ன இல்லையா….. அதான் அப்படியே உன்னை பார்த்துட்டு.. முடிந்தால் நம்ம வீட்டுக்கும் கூட்டிட்டு போகலாம்னு நினைத்தேன்…”  (வாசுகி அம்மா ஆஸ்கார் அவார்டை விட, பெரிய அவார்டு இருந்தா உங்களுக்குத்தான் கொடுக்கணும்….. என்ன நடிப்புடா சாமி…)

 சாதனா ”ஆண்டி நான் சொன்னதை ஞாபகம் வைத்து என்ன பார்க்க வந்ததுக்கு ரொம்ப நன்றி.. ஆனா வீட்டுக்கெல்லாம் வேண்டாம் ஆண்ட்டி..” தயங்கி மறுத்தாள்… அவ ம்றுத்தால், சரின்னு சொல்லி விட்டுவிட கூடியவரா வாசுகி…. முகத்தை சோகமாக வைத்துகொண்டு ”ஓ… பரவாயில்லம்மா… எனக்கு கல்யாண நாள்.. உன்னை நம்ம வீட்டுக்கு கூட்டு போய் என் கணவரிடமும், அத்தையிடமும் அறிமுகப்படுத்திலாம்னு நினச்சேன்… என் பையனும் வேலை வேலைன்னு சொல்லி… எங்க கல்யாண நாள கூட மறந்திட்டு வெளி ஊருக்கு போயிட்டான்… 

 

என்னமோ தெரியலடா எனக்கு உன் ஞாபகம் திடீர்ன்னு வந்துச்சு.. உன் கூட கொஞ்ச நேரம் இருக்கணும்னு தோணுச்சு,  வெளியிடத்துல எவ்வளவு நேரம் இருக்க முடியும்…அதான் உன்ன நம்ம வீட்டுக்கு கூட்டு போகலாம் என்று ஆசைப்பட்டேன்… பரவால்லடா… இன்னொரு நாள் பார்த்துக்கலாம்… உனக்கு வீட்டுக்கு போக நேரமாகிவிட்டதுதானே வா கிளம்பலாம்…” என எழுந்தார்…சாதனாவிற்கு சங்கடமாகிவிட்டது…” சே கல்யாண நாள் அதுவுமா ஆண்ட்டி மனச கஷ்டப்படுத்தி விட்டோமே…” என வருந்தியவள் “பெத்தவங்க கல்யாண நாள கூட மறக்கிற பையன் எப்படிதான் தொழில் நடத்தறானோ…? என்று அவரின் மகனையும் திட்டினாள்..

பிறகு கிளம்பபோன வாசுகியை.. தடுத்து “ஆண்ட்டி ஒரு நிமிஷம்… நான் உங்க வீட்டுக்கு வர்றேன்… ஆனா எங்க அம்மாக்கிட்ட பர்மிசன் கேட்கணும்..” என்று தன் சம்மதத்தை தெரிவித்தாள்… வாசுகி சந்தோசத்துடன்.. “அதுகென்னடா நானே கேட்கிறேன்.. நீ நம்பர் கொடு..”  என்று ஏற்கனவே பதிந்து வைத்திருந்த மங்கையின் நம்பரை.. தெரியாதர்வர் போல் மீண்டும் பதிந்து கொண்டார்… மங்கைக்கு அழைத்து முதலில் சாதனா பேச, விசயத்தை கேட்டவர் “சரி பத்திரமா பார்த்து போய்ட்டு வந்துடுடா” உடனே ஒப்புகொண்டார்… சாதனா அன்னையின் சம்மதத்தை திகைப்புடன் கேட்டிருந்தவள்.. வாசுகி பேசுவதாக சொல்லவும்.. அவரிடம் போனை கொடுத்தாள்..

 மங்கை “அண்ணி உங்க கிட்ட சொல்ல தேவையில்ல, இருந்தாலும், மனசு கேட்க மாட்டிங்குது, அவ இதுவரைக்கும் இந்த மாதிரி எங்கேயும் போனதில்ல… நீங்கதான் அவள பத்திரமா பார்த்துகணும்…” என்று வேண்டுகோள் விடுத்தார்…

”நீங்க கவலையே படாதிங்க… சாதனா எங்க வீட்டு பொண்ணு.. அவளை நாங்க பத்திரமா பார்த்துக்குவோம்” என்று உறுதி அளித்துவிட்டு போனை அணைத்தவர்…சாதனாவிடம் திரும்பி, கிளம்பலாமா?என கேட்டார். ஒரு நிமிஷம் ஆண்ட்டி நான் என்னோட ஹேண்ட் பேக்கை எடுத்துட்டு வர்றேன்…” சொல்லிவிட்டு சென்றவள் அவளுடைய உடைமகளை எடுத்து கொண்டு வந்தாள்…

இங்கே அபியோ மிகவும் பரபரப்பாக இருந்தான்.. முதன் முதலில் அவனுடைய சனா அவன் வீட்டுக்கு வரப்போகிறாளே.. அவன் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தவன்தான் இன்னு கீழெ இறங்கி வரவில்லை… அவனின் தந்தையும், பாட்டியும் எத்தனையோ முறை அழைத்தும்.. அவன் சொன்ன பதில் “பொறுங்கப்பா அம்மாவோட கார் வருதான்னு பார்க்கிறேன்” என்பதுதான்.. நொடிக்கு ஒருமுறை சாலையை பார்த்து கொண்டிருந்தான்…  

அவனின் எதிர்பார்ப்பை பொய் ஆக்காமல்.. வாசுகியின் கார் உள்ளே வந்தது. அதிலிருந்து இறங்கிய வாசுகி சாதனாவை அழைக்கவும் தயக்கத்துடன் காரிலிருந்து இறங்கினாள்.. இறங்கையவளின் கண்ணில்  முதலில் பட்டது அந்த வீட்டின் தோட்டம்தான்… பசிய புல்வெளிகளுக்கு நடுவில் அமைத்திருந்த வெள்ளை நிற சேர்களும் அவளின் கருத்தை கவர்ந்தன…ஏனோ இங்கே வரும்போது இருந்த தயக்கம் சிறிது விலகுபோல், தோன்றியது…சாதனாவிற்கு.. “உள்ள வாடா என்று அவளை வாசுகி அழைக்க..தனசேகரும், பாட்டியும் அவளை, வாசலுக்கு வந்து வரவேற்றனர்…. “வாம்மா சாதனா” என்று தன சேகரும், “ஒரு வழியா என் பேத்திய நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டியா..?” என்று ஆர்வத்துடன் சாதனாவை பார்த்தவர்… “எம்புட்டு அழகா இருக்கா என் பேத்தி..” சாதனாவின் முகத்தை வழித்து திருஷ்டி கழித்தார்…

சாதனா சங்கடத்துடன் புன்னகைத்தாள்.. பின்பு அவரின் பாதம் பணிந்து. ”என்னை ஆசிர்வதிங்க பாட்டி..” என்றாள்.. “நீ நூறு வருஷம் என் பேரனோட சந்தோசமா வாழணும் டா..” என்றவரை அனைவரும் திடுக்கிட்டு பார்க்க… மேலே இருந்து இதை எல்லாம் பார்த்துகொண்டிருந்த அபி ”அச்சோ டார்லிங் சொதப்பிருச்சே” என நொந்து கொண்டான்.. நொடியில் சுதாரித்து கொண்ட வாசுகி “அது ஒண்ணுமில்ல்டா உன்னைய பேத்தின்னு சொல்றாங்கள்ள… அப்படின்னா நீ கல்யாணம் பண்னிக்க போற மாப்பிள்ள, அத்தைக்கு பேரந்தான அத தான் அப்படி சொல்லிருக்காங்க..” அழகாக சமாளித்தார்..

சாதனாவிற்கு, திருமணம் என்றதும் முகம் ஒரு நொடி இறுகி பின்பு இயல்பானது… இதை அனைவரும் கவனித்தாலும், பார்க்காதது போலவே இருந்துவிட்டனர்… ”ஆண்ட்டி நீங்களும் சாரும் சேர்ந்து நில்லுங்க..” என கூற தன சேகர் அது என்ன என் மனைவி ஆண்ட்டி, எங்கம்ம்மா பாட்டி, அப்பறம் நான் மட்டும் சாரா..? என்று மனதாங்கலோடு கேட்க “அச்சோ சாரி அங்கிள், இனிமேல் சாருன்னு கூப்பிட மாட்டேன்.. ஒ கே வா”  குருவியாய் தலை சரித்து வினவ அவளின் பாவனையில் சொக்கி போனான் அபி.. பிறகு சாதனா மீண்டும் இருவரையும் சேர்ந்து நிக்க சொல்ல  ”எதுக்குமா..? இருவரும் கேட்க “இன்னைக்கு உங்களுக்கு கல்யாண நாள்தானே அதான் உங்க ரெண்டுபேர்க்கிட்டயும் ஆசீர்வாதம் வாங்கலாம்னு..”

 

வாசுகி “அச்சோ எங்க கல்யாண நாள் இன்னைக்குன்னு நினைத்தாயா.. அது அடுத்தவாரம்டா.. எப்பவும் ஒருவாரத்துக்கு முன்னமே… இந்த நாளை எப்படி கொண்டாடலாம் என்று திட்ட போட்ற என் பையன் இன்னும் அதை பத்தி பேசாம இருக்கானேனு வருத்தமா இருந்துச்சு…அதான் கொஞ்சநேரம் உன்கூடஇருந்தா அந்த வருத்தம் குறையுமேன்னு தோணிச்சு..  அது மட்டுமில்லாம…அன்னைக்கு கோவில்ல  நீ என்ன காப்பாற்றியதை பத்தி சொன்னதுல இருந்து.. உன்ன பார்க்கனும்னு என் அத்தைக்கு ரொம்ப ஆசை…அதான் உன்ன நம்ம வீட்டுக்கு கூட்டி வந்தேன்” என்று

 

வாசுகி கூறிய விளக்கத்தை கேட்ட சாதனா “ஙே” என்று விழித்திருந்தாள்.. “அச்சோ ஆண்ட்டி நான் இன்னைக்குதான் உங்க கல்யாண நாள்ன்னு நினச்சிட்டேன்..” தன் நெற்றியில் லேசாக தட்டி கொண்டு அசடு வழிந்து சிரித்தாள்…  பின்பு அவரை தேற்றும் விதமாக “ நீங்க ஒண்ணும் கவலைப்படாதிங்க ஆண்ட்டி…  உங்க பையன் இல்லன்னா என்ன..? இந்த வருஷம் உங்க கல்யாண நாளை சூப்ப்ரா கொண்டாடலாம்..” என்று உற்சாகமாக கூறியவள் கைகடிகரத்தில் மணி பார்த்துவிட்டு… “ஆண்ட்டி எனக்கு நேரமாச்சு நான் கிளம்பட்டுமா..? என கேட்க “நீ வந்ததுல இருந்து எதுவுமே சாப்பிடல… முதன் முதலா நம்ம வீட்டுக்கு வந்திருக்க.. அதெப்படி சாப்பிடாம அனுப்புவேன்..” உரிமையா சொன்னவர்..  ”உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுடா பத்து நிமிஷத்துல செஞ்சு தாறேன்? பாசத்துடன் கேட்டார்.. 

 

“இல்லை ஆண்ட்டி பரவாயில்ல” என்று மறுத்தவளை… வற்புறுத்தி சம்மதிக்க வைத்தவர்.. மீண்டும் அவளுக்கு பிடித்ததை கேட்க… அவள் தயங்கி கொண்டே “நான் சொன்னா சிரிக்க கூடாது”  என்றுவிட்டு… ”எனக்கு நூடுல்ஸ்னா ரொம்ப பிடிக்கும்… ஆனா, அது அதிகமா சாப்பிட கூடாதுன்னு அம்மா செஞ்சு தரமாட்டாங்க..” என வருத்ததுடன் கூற.. வாசுகி “ அபி சொல்றமாதிரி நீ பேபிதாண்டா…” என மனதில் கூறியவர்.. ”ஆமடா அது ரொம்ப சாப்பிட்டா உடம்புக்கு கெடுதல்… அதான் அம்மா சொல்லிருக்காங்க.. இந்த ஆண்ட்டியும் அதேதான் சொல்வேன்..

 

முதல் தடவை என்கிட்ட ஆசையா, கேட்கிறதால செஞ்சுத்ர்றேன்… ஆனா அடிக்கடி சாப்பிடக்கூடாது என்ன ” என்று உரிமையாக அதட்டிவிட்டு அவள் கேட்டதை தயார் செய்ய போனார்…வாசுகி.. இவை அனைத்தையும் அபி மாடியிலிருந்தும், தனசேகரும், அவரின் அன்னையும் புன்னகையுடன் பார்த்துகொண்டிருந்தனர்… சிறிது நேரம் ஹாலில் அமர்ந்திருந்த சாதனா பாட்டியிடம்…”பாட்டி நானும் கிட்ச்னுக்குள் போகலாமா?” என அனுமதி கேட்க…”இதெல்லாம் ஏண்டா கேட்டுட்டு இருக்க இது உன் வீடு தாராளமா போ…அப்படியே எனக்கு குடிக்க தண்ணீர் எடுத்துட்டு வாடா ” என்று அனுப்பிவைத்தார்.. உள்ளே சென்றவள் அங்கு வாசுகி காய் நறுக்கி கொண்டிருக்க “நான் எதாவது உதவி செய்யவா ஆண்ட்டி?” என கேட்க “இல்லடா அவ்வளவுதான் முடிஞ்சிருச்சு… அங்கிளுக்கு காஃபீ போட்டு வச்சிருக்கேன் அதை மட்டும் அங்கிள்கிட்ட கொடுத்திட்றயா..? என கேட்க “சரி ஆண்ட்டி” என்றவள் ஒரு ட்ரேயை எடுத்து அதில் பாட்டிக்கும் தண்ணீரும், தனசேகருக்கு காஃபியும் கொண்டு சென்றாள்.

வாசுகி அவள் கேட்ட நூடுல்ஸை செய்துகொண்டு வந்தவர்…அவளுக்கு சாப்பிட கொடுக்க…அதை வாங்கியவள்..” நீங்க யாரும் சாப்பிடலயா? என கேட்க ”இல்லடா அங்கிள் இப்பதான் காபி குடிச்சாங்க பாட்டி.. இந்த நேரத்துல் எதுவும் சாப்பிட மாட்டாங்க…இன்னும் கொஞ்ச நேரத்துல என் பையன் வந்திருவான் அவன்கூட சாப்பிட்டுகிறேன்…” என கூறினார்.. “உங்க பையன் வந்தவுடனே நீங்க எவ்வளவு வேணா சாப்பிடுங்க 

 

இப்ப எனக்காக ஒரே ஒரு வாய் வாங்கிக்கிங்க உங்கள பார்க்க வச்சு சாப்பிட்டா எனக்குதான் வயிறு வலிக்கும்…” என உரிமையோடு கேலி பேசியவள் வாசுகிக்கு, தன் கிண்ணத்திலிருந்த நூடுல்ஸை, ஸ்பூனில் எடுத்து ஊட்டிவிட்டாள்… அதில் மனம் நெகிழ்ந்த வாசுகி மறுக்காமல் அவள் கொடுத்ததை.. வாங்கி கொண்டார்.. ” பாட்டி இது நூடுல்ஸ்ங்கிறதால உங்களுக்கு தரலை.. இல்லன்னா உங்களுக்கு கொடுத்திருப்பேன்…” என ” ஏன் நாங்க எல்லாம் இத சாப்பிட மாட்டோமா..? இது வைரம் பாய்ந்த உடம்பு, எதையும் தாங்கும் இதயம்.. உனகு இது பத்தாதுங்கிறதால எனக்கு தராம சாப்பிட்ற.? என்று சாதனாவை வம்பிழுத்து.. அவரும் ஒருவாய் வாங்கி கொண்டார்… இதை எல்லாம் அபி மேலே ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருந்தான்.. சாப்பிட்டு முடித்த சாதனா கிளம்புவதாக சொல்லவும்.. இவர்களும், தாமதமானதை உணர்ந்து.. சம்மதித்தனர்..

அவள் செல்வதற்கு, கார் கொண்டுவரும்படி ட்ரைவரிடம்தனசேகர் சொல்ல..” இல்ல அங்கிள் நான் பஸ்ல்ல போய்க்கிறேன்… எனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்ல என மறுக்க ”சும்மா இருடா உன்ன கூட்டிடுவந்தது நான் தான அதேமாதிரி பத்திரமா கொண்டுபோய் விட்றதும் என்னோட பொறுப்பு.. நானே உன் கூட வந்திருப்பேன் ஆனா கொஞ்ச நேரத்துல என் பையன் வந்திருவான்… 

 

அதான் தப்பா எடுத்துக்காதடா..”  என “அச்சோ என்ன ஆண்ட்டி.. அதெல்லாம் ஒண்ணும் இல்ல ஆண்ட்டி நீங்க இருங்க.. கார்லதான போறேன்.. அதுவும் உங்க வீட்டு டிரைவர் அண்ணாகூடதான போறேன்.. நீங்க கவலைப்படாதிங்க” என்று அவரை சமாதானம் செய்துவிட்டு காரில் ஏறினாள்.. ஏதோ உள்ளுணர்வு உந்த அண்ணாந்து பார்த்தவள் அங்கு எதுவும் இல்லாததால் ”சே நமக்குத்தன் அப்படி தோணியிருக்கு போல” என்று அனைவரிடமும் சொல்லி கொண்டு கிளம்பினாள்… அந்த கார் தெரு முனையிலிருந்து மறையும் வரை பார்த்து கொண்டிருந்த அபி.. அது மறையவும், வேகமாக கீழே இறங்கி வந்து… “வாசு…. ஐயம் சோ ஹேப்பி..” என கூவிக்கொண்டே அவரை தூக்கி தட்டாமாலை சுற்றினான்…

காரில் வந்துகொண்டிருந்த சாதனாவிற்கு, மனது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.. தன் இன்னொரு சொந்தவீட்டுக்கு சென்றது போல் இருந்தது… கார் வீடு வந்ததும் அதில் இருந்து இறங்கியவள்.. வாசலில் மங்கை காத்து கொண்டிருக்கவும்… “மங்கை….” என கூவி அவரை அணைத்து கொண்டாள்.. நான் இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன்..” என்றவள் அங்கு காத்திருந்த டிரைவரிடம் “அண்ணா ரொம்ப நன்றி” நான் ஆண்ட்டிகிட்ட போன் பண்ணி சொல்லிட்றேன்.. நீங்க கிளம்புங்க” என்றவள்..”உள்ளே இருந்து தண்ணி கொண்டுவந்து கொடுத்தாள்.. அவரும் அதை புன்னகையுடன் வாங்கி குடித்துவிட்டு சென்றார்.        

 

தன் போனை எடுத்து வாசுகிக்கு அழைத்து தான் பத்திரமாக வீடு வந்துவிட்டதாக சொல்லிவிட்டு போனை அணைத்தாள்…  மங்கையிடம் திரும்பி.. அங்கு வாசுகியின் வீட்டில் நடந்ததை ஒன்றுவிடாமல் கூறினாள்.. 

அன்றிலிருந்து சாதனா அபியின் வீட்டிற்கு அடிக்கடி செல்லலானாள், மங்கையும் ஓரிருமுறை சென்று வந்தார்…வாசுகியை வசும்மா என்றும், தனசேகரை தனாப்பா என்றும்.. பாக்கியத்தம்மாளை… அபி அழைப்பதுபோல் டார்லிங் என்றும் உரிமையாக அழைத்தாள்.. சாதனாவிற்கு அந்த வீடு இன்னொரு சொந்த வீடாக மாறி போனது. வாசுகி சொன்னது போலவே சாதனாவை எந்த தயக்கமும் இல்லாமல் அந்த வீட்டிற்கு வரவழைத்து விட்டார்….

அத்தியாயம் 21

சாதனா ஒவ்வொரு முறையும் அபியின் வீட்டிற்கு வரும்பொழுதும்… அங்கு தோட்டத்தில் போடப்பட்டிருக்கும் ஊஞ்சலில் சிறிது நேரம் விளையாடிவிட்டே வீட்டிற்குள் நுழைவாள்… அதுவும் வாசுகி நேரமாவதை உணர்ந்து… அவளை அதட்டிய பின்பே  அதிலிருந்து  எழ மனமில்லாமல்  முகத்தை சிணுங்கலாக வைத்துகொண்டே எழுவாள்… அதை பார்த்து கொண்டிருக்கும் அபி… “பேபி இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கடா… நீ நம்ம வீட்டுக்கு வந்ததும்… நான் உனக்கு நம்ம ரூம்லயும் ஊஞ்சல் கட்டிவிடறேன்…” என்று மனதில் அவளுக்கு சமாதானம் செய்வான்.

இப்படியாக சாதனாவின் நாட்கள் அழகாகவும், அபியின் நாட்கள் ஏக்கமாகவும் சென்றது… சுற்றுலா செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக மங்கை சாதனாவிடம்…” சாதும்மா என்னடா.. இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு நீ டூர் போக.. ஆனா நீ எதுவுமே எடுத்து வைக்காம இருக்க..? அப்பறம் கடைசி நேரத்துல.. எதாவது விட்டு போயிரும்டா..  இப்ப இருந்து ரெடி பண்ணினாதான் கடைசி நேரத்துல எதாவது மறந்தாலும் எடுத்துக்கலாம்…நீ என்ன எடுத்து வைக்கணும்னு சொல்லு நான் எடுத்து வைக்கிறேன்…” என கூறினார்..

சாதனா, “நான் டூருக்கு போகலம்மா” என தயக்கத்துடன் கூற.. 

“ ஏண்டா..” 

”நான் அங்க போய்ட்டா நீங்க இங்க தனியா இருப்பிங்களே..”

” ரெண்டே நாள் அங்க இருக்க போற அதுக்குள்ளயும் என்னைய காக்கா, குருவியா தூக்கிட்டு போக போகுது.. இல்ல நான் என்ன சின்ன பிள்ளையா தொலைந்து போவதற்கு..? என்று கேலி பேசியவர்… அவளின் முகத்தை கூர்மையாக பார்த்து கொண்டே.. ”இல்ல நீ டூருக்கு போகாததற்கு காரணம் இது இல்லை…இதுதான் காரணம் என்றால்… அன்னைக்கே நீ டூருக்கு போகலைன்னு சொல்லியிருப்ப  இப்படி கடைசி நேரத்துல சொல்ல மாட்ட…” என்று கூற

இதற்கு மேலும் அன்னையிடம் மறைக்க முடியாதவளாக… டூருக்கு குன்னூர் செல்வதாக சொல்லவும்… மங்கையிடம் எந்த மாற்றமும் இல்லை…அவர் மிகவும் சாதரணமாக..” அதனால என்னடா? என கேட்க… சாதனா திகைப்புடன்… “அம்மா அங்க என்ன நடந்ததுன்னு தெரிஞ்சும் நீங்க இப்படி பேசறிங்க….? என்று ஆதங்கமாக கேட்டவள்… ”எனக்கு பயமா இருக்கும்மா நான் அங்க போகலை… பிளீஸ்மா…” அன்னையிடம் கெஞ்சினாள்…”இன்னும் எத்தனை நாள் இப்படி பயந்து மறைந்து வாழப்போறோம் சாதும்மா..?”

அன்று நான் உன்னை கூட்டிட்டு வந்ததுக்கு காரணம்… நீ அப்ப உலகம் தெரியாம இருந்த…உங்கப்பா இறந்த சமயம்..உன்னை அந்த கயவன்கிட்ட இருந்து காப்பாத்துறதுதான் எனக்கு முக்கியமாக தோன்றியது…ஆனா, இப்ப அப்படி இல்லையே உனக்கு உலகம் தெரியும்… பிரச்சினை வந்தா அத எப்படி சமாளிப்பது என்றும் தெரியும்..அப்பறம் ஏண்டா தயக்கம்… இப்படி பயந்து கொண்டும், தயங்கி கொண்டும் இருந்தா வாழ்க்கையில் சில மகிழ்ச்சியான தருணங்களை தவறவிட்டு விடுவோம் சாதும்மா…அன்னைக்கு உன்ன அங்க இருந்து கூட்டிட்டு வந்த அம்மா நான் சொல்றேன்… நீ தைரியமா போயிட்டு வாடா..  இந்த டூர் உனக்கு ஒரு நல்ல மாற்றத்தை தரலாம்…. அந்த பிரகாஷ் நீ ரெண்டு நாள்ள அங்க வருவன்னு…. உன்னைய எதிர் பார்த்துட்டா இருக்க போறான்.. அவன் இந்நேரம் எந்த வெளிநாட்டுல இருக்கானோ..? அதனால நீ தைரியமா போய்ட்டு வாடா…  உனக்கு எந்த கஷ்டமும் வராம அந்த கடவுள் பார்த்துப்பார்…”  என்று அவளுக்கு தைரியம் அளித்தார்…

சாதனா மனம் தெளிந்து, “சரிம்மா நான் டூருக்கு போறேன்..” என கூறினாள்.. “ரொம்ப சந்தோசம் சாதும்மா… அம்மா மேல எதுவும் கோபம் இல்லையேடா..?” மங்கை தயக்கத்தோடு கேட்க…”என் மங்கை மேல எனக்கு எப்படி கோபம் வரும்.. குழம்பி யிருந்த என் மனச சூப்பரா தெளிய வச்சுட்டிங்களே..” சந்தோசத்தோடு அவரை கட்டிகொண்டாள்….”  “சரி சரி… பேசிட்டே இருக்காம டூருக்கு தேவையானதை எடுத்துவை…” மங்கை கூறிக்கொண்டிருக்கும் பொழுதே வாசுகி உள்ளே வந்தார்…..

அவரை பார்த்த சந்தோசத்தில் சாதனா..”வசும்மா” என்றழைத்து அவரை அணைத்துக்கொண்டாள்… வாசுகியும் புன்னகையுடன் அவளை அணைத்துக் கொண்டார்… “என்ன நான்  உள்ள வர்றப்ப ஏதோ டூருன்னு என் காதுல விழுந்தது… யார் டூர் போக போறா?” என கேட்க… மங்கை, சாதனா அலுவலகத்தில் இரண்டு நாட்கள் சுற்றுலா செல்வதாக கூற… வாசுகி… “ நாங்களும் இந்த ரெண்டு நாள் திருப்பதி போலாம்னு இருக்கோம்…அப்படியே உங்ககிட்ட சொல்லிட்டு உங்களையும் அழைச்சிட்டு போகலாம்ன்னு நினைச்சேன்…” என கூறினார்.. “அதுக்கு என்ன அண்ணி பரவாயில்ல… சாதனா டூர் முடிஞ்சு வந்தவுடனே நம்ம வேற எங்கையாவது போகலாம்..” என்று சமாதானம் செய்தார்..

வாசுகி மங்கையிடம் “அப்ப  சாதனா கூட நீங்க டூர் போகலையா? என கேட்க..”இல்லை அண்ணி இது அவங்க அலுவலகத்துல வேலை செய்றவங்க மட்டும்தான் போறாங்க… அதனால நான் போகலை..” என்றார். ”அப்ப ரொம்ப நல்லதா போச்சு.. சாதனா அவங்க கூட டூர் போகட்டும்… நீங்க எங்க கூட திருப்பதிக்கு வாங்க..” என்றார். ”சூப்பர் வசும்மா… நானே ரெண்டு நாள் அம்மா எப்படி தனியா இருப்பாங்கன்னு யோசிச்சிட்டு இருந்தேன்…நீங்க சூப்பரா ஒரு ஐடியா சொன்னிங்க… அம்மா.. நீங்களும் வசும்மா கூட  கோவிலுக்கு போய்ட்டு வாங்கம்மா..” என்று கூற மங்கையும் சம்மதித்தார்….

”சரி அண்ணி நீங்க நாளைக்கு சாயந்திரம் ரெடியா இருங்க.. நான் வந்து உங்களை கூட்டிட்டு போறேன்..” என்றவர்.. சாதனாவிடம்..” நீங்க எப்படா கிளம்பறிங்க..? என்று விசாரிக்க “நாங்களும் நாளைக்கு சாயந்திரம்தான் கிளம்பறோம் வசும்மா..” என்றாள்.. 

“நாளைக்கு சாயந்திரம் நீ எப்படி போவ…?” 

“எல்லாரும் ஆஃபீஸ்ல இருந்து கிளம்பற மாதிரி சொல்லிருக்காங்கம்மா.. அதனால நாளைக்கு சாயந்திரம் எப்பவும் போல ப்ஸ்ல போய்ருவேன் “

“அதெல்லாம் நீ பஸ்ல ஒன்றும் போகவேண்டாம்.. அம்மாவ கூப்பிட வர்றப்ப.. உன்னையும், உங்க ஆஃபீஸ்ல விட்டுட்டே கிளம்பறோம்…” என்று சாதனா மறுத்து பேச இடம் கொடுக்காதவாறு சொல்லிவிட்டு சென்றார்.. “சரியான பிடிவாதம் வசும்மா நீங்க..” அவரை செல்லமாக வைதவாறே.. டூர் செல்வதற்கு தேவையானதை எடுத்து வைக்க சென்றாள் சாதனா. வெளியே வந்த வாசுகி அங்கு காரில் டிரைவர்

 

சீட்டில் உட்கார்ந்திருந்த அபியிடம்.. ” டேய் ராசா உனக்கு மட்டும் எப்படிடா இப்படி எல்லாம் தோணுது… உன் பேபிய டூருக்கும் சம்மதிக்க வச்சுட்ட… அதே சமயத்துல அண்ணியையும் தனியா விடல… உன் கிரிமினல் மைண்ட நினச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குடா..” என்று அவனை பெருமையாக பேசி அவனின் காலை வாரிவிட்டார்.. தன் அன்னை பாராட்டுவதை சாந்தோசத்துடன் கேட்டு கொண்டிருந்தவன் அவர் சொன்ன கடைசி வார்த்தையில் காண்டாகி அவரை முறைத்தான்… “நான் உங்க பிள்ளைம்மா…”  என்று அந்த “உங்க” ளில் அழுத்தம் கொடுக்க இப்பொழுது வாசுகி அவனை முறைத்தார்… அவரின் முறைப்பை பார்த்து அபி வாய்விட்டு சிரிக்க… வாசுகியும் அதில் இணைந்து கொண்டார்… 

மறு நாள் மாலை.. சொன்னது போலவே வாசுகி மங்கையையும், சாதனாவையும் அழைத்துகொண்டு சென்றார்…முதலில் சாதனாவின் அலுவலகத்திற்கு வந்தார்கள்.. அங்கு அனைவரும், அவர்களின் குடும்பத்தில் ஒருவரை அழைத்து வந்திருக்க.. மதுவும் கூட அவளின் தங்கையை அழைத்து வந்திருந்தாள்… சாதனா குழப்பத்துடன்.. “என்ன மது..?” என்று விவரம் கேட்க.. மது அவளை ஆச்சரியமாக பார்த்தவாறே “ என்னடி இந்த டூருக்கு உங்க குடும்பத்துல இருந்து ஒருத்தரை மட்டும் கூட்டிட்டு வரலாம்.. மெயில் பண்ணிருந்தாங்களே நீ பார்க்கலையா” என சந்தேகமாக கேட்க…”இல்லப்பா நிறையா வேலை இருந்ததனால் நா என்னைக்கு எத்தனை மணிக்குன்னுதான் பார்த்தேனே தவிர இதெல்லாம் பார்க்கலையே..” என்று பரிதாபமாக கூறினாள்..

“சரி விடு அதான் ஆண்ட்டிய கூட்டிட்டு வந்துட்டேல்ல பின்ன என்ன..? என கேட்க…” இல்ல மது, அம்மா வசும்மா கூட, திருப்பதி போறாங்க…” எனவும்.. மதுவிற்கு ஏற்கனவே வாசுகியை தெரியும் என்பதால்… “சரி விடு, ஆண்ட்டி வசு ஆண்ட்டி கூடதான போறாங்க.. அப்பறம் என்ன.. அதான் நான் இருக்கேன்ல” என்று சமாதானம் செய்தாள்..   அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அபி வந்தான்.. அங்கிருந்த பிரபுவிடம் “எல்லாம் தயாரா..? என்று கேட்டவன்.. அங்கு வாசுகியும், மங்கையும் இருப்பதை பார்த்தான்..

வாசுகியிடம் வந்தவன் “ ஹலோ ஆண்ட்டி” என்றவன் அருகிலிருந்த மங்கையிடமும் வணக்கம் கூறினான்.. வாசுகி ”என்னப்பா டூரெல்லாம் நல்லா பிளான் பண்ணிருக்கிங்க போல..? உன்ன்ன நம்பித்தான் எங்க பெண்ணை அனுப்பறோம் அவளை பத்திரமா பார்த்துக்க…” கட்டளையிட்டவரை.. மது வியப்புடன் பார்த்தாள்..” அதைவிட ஆச்சரியம் அபியும் அதற்கு பணிவாக இது என்னோட கடமை ஆண்ட்டி என்றதுதான்… “என்னடா நடக்குது இங்க..? மனதில் கேட்டு கொண்டாள்.. பின்பு வாசுகியும் மங்கையும் விடை பெற்று செல்லவும், அனைவரும் அவரவர் குடும்பத்தினருடன் வந்திருக்க… தான் மட்டும் தனிமையாய் இருப்பதுபோல் இருந்தது சாதனாவிற்கு.. 

டூர் செல்லும் சொகுசு பேருந்து வரவும் அதில் அனைவரும் ஏறிக்கொண்டனர்.. இருவர் மட்டும் அமரும்படியாக இருக்கை இருந்ததால்… மது என்னடி ரெண்டுபேர் உட்கார்ற மாதிரிதான் இருக்கு.. இப்ப எப்படி நம்ம மூணு  பேரும் ஒன்றாக  உட்கார்றது.?”. என வருந்த பரவாயில்ல மது..நீ பவி கூடவே உட்கார்த்துக்க நான் இங்க உட்கார்ந்துக்குவேன்..”  என்று மதுவை அனுப்பி வைத்தாள்.. “சே இந்த அம்மா பேச்ச கேட்டு வந்திருக்கவே கூடாது… நம்மளும் வசும்மா கூட போயிருக்கலாம்.. நல்ல ஜாலியா இருந்திருக்கும்” என்று நினைத்து கொண்டிருக்கும் போதே அவளருகில் ஆள் உட்காருவது தெரிய பதறி எழ போனாள்.. “ஹே நாந்தான்” என்ற அபியின் குரலில் ஆசுவாசமடைந்து.. அமர்ந்தாள்..

”எல்லாரும் அவங்க குடும்பத்தோட வந்திருக்கதால சீட்டு இல்ல… அதான் நான் இங்க வந்தேன்.. உங்களை கூப்பிட்டு பார்த்தேன் நீங்க கவனிக்கலை அதான் உட்கார்ந்த்துட்டேன்.. உங்களுக்கு எதாவது சங்கடமா இருக்கா..? இருந்தா சொல்லுங்க.. நான் எழுந்துக்கிறேன்…” என்றவன் மனதில் “ஆமான்னு மட்டும் சொல்லிறாத பேபி..? என்றான்.. “உங்களுக்கு ஒன்றும் இல்லை என்றால் எனக்கு நீங்க இங்க உட்காருவதில் எனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை..” என, அபி ”அப்பாடி” என்று அவளறியாமல் ஒரு பெருமூச்சை வெளியிட்டான்.. 

சாதனா அமைதியாக வரவும்…அந்த அமைதி பொறுக்க முடியாமல் “ நீங்க இதுக்கு முன்னாடி குன்னூர் போயிருக்கிங்களா…? என்று தெரியாதவன் போல் கேட்க…சாதனா முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு…”ம்.. ஒருதடவை வந்திருக்கிறேன்..” என்றாள் … “ இங்க எங்கெல்லாம் சுத்தி பார்த்திருக்கிங்க…? என கேட்க.. ” அவள் ”எனக்கு மறந்திருச்சு…” என “ பரவாயில்ல.. இங்க சுத்தி பார்க்க நிறைய இடங்கள் இருக்கு” என்று குன்னூரைப் பற்றியும் அதன் அழகை பற்றியும், சுவாரசியமாக கூறிக்கொண்டு வந்தான்… முதலில் அசுவாரசியமாக அவன் பேசுவதை கேட்டவள்..

அவன் ஒவ்வொரு இடத்தை பற்றி, தெளிவாகவும், அழகாகவும் கூறவும் அவனின் பேச்சில் ஆழ்ந்து போனாள்.. இடையிடயே அவளும் சில கேள்விகள் ஆர்வமாக கேட்டாள்… அவளுக்கு முதலில் இருந்த தனிமை உணர்வு சுத்தமாக போய்விட்டிருந்தது… சாதனா அதை நினைத்து வியந்தாள்.. இப்படியாக அவர்களின் குன்னூர் பயணம் தொடர்ந்தது.. பேருந்து சிறிது தூரம் சென்றதும்… பிரபு எழுந்து நின்று…” ஹாய் ஃப்ரெண்ட்ஸ் நாம என்ன மடத்துக்கா போறோம் எல்லாரும் இவ்வளவு அமைதியா வர்றிங்க.. போர் அடிக்குதுப்பா” என்றவனிடம்

”அதுக்கு நாங்க என்ன்ப்பா செய்ய..” என்று கோரஸ்ஸாக கேட்டனர் ”உங்க எல்லாருக்கும் எதாவது ஒரு திறமை இருக்கும் இல்லையா… பாட்டு பாட்றது… இல்ல டான்ஸ், ஜோக் சொல்றது இப்படி எதாவது… அதுல இருந்து கொஞ்சம் எடுத்து விடுங்க.. என்றான்.. அவர்கள் அனைவரும் அபி இருப்பதை நினைத்து தயங்க… அவர்களின் தயக்கத்தை புரிந்துகொண்ட அபி….

 

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ, அது ஏதோ
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விடமாட்டேன்
அது வரை உன்னை தொடமாட்டேன்….

என்று மிக அழகாக பாடி… விளையாட்டை துவங்கி வைத்தான்… சாதனா அவனின் குரலின் இனிமையில் அவளையும் அறியாமல் மயங்கினாள்…

 அவன் பாடலை கேட்ட அனைவரும்…” சூப்பர்…” ஒன்ஸ்மோர்…” என கேட்டு ஆரவாரம் செய்தனர்… அவனும் புன்னகையுடன் ”போதும் ஃப்ரெண்ட்ஸ்.. இனிமே நீங்க ஸ்டார்ட் பண்னுங்க” என்றான்.. அவர்களும் தங்களின் தயக்கங்களை ஒதுக்கி, ஒவ்வொருவரும்..பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, மிமிக்ரி செய்வது… என்று அந்த பயணத்தை மகிழ்ச்சி ஆக்கிகொண்டிருந்தனர்…. சாதனாவும் அதை சந்தோசமாக ரசித்து கொண்டு வந்தாள்…   மதுவும், பிரபுவும் கூட தங்களின் திறமையை காட்டினார்கள்.. 

அனைவரும் எதாவது ஒன்று செய்ய சாதனா மட்டும் ஒன்றும் செய்யாமல் இருக்க.. அபி “நீங்க என்ன செய்ய போறிங்க..? பாட்டா..? டான்ஸா..? என்று சத்தமாக கேட்க இப்பொழுது அனைவரும் சாதனாவை பார்த்தனர்… சாதனா அபியை முறைத்து பார்க்க அவன் ஒற்றை கண் சிமிட்டி குறும்பு புன்னகை செய்தான்..அவன் கண் சிமிட்டலில் ஒரு நொடி திகைத்தவள்… தன்னை சுதாரித்து கொண்டு… இதற்குமேல் மறுத்தால் நன்றாக இருக்காது… என்று நினைத்து

 

கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே

அந்த மீராவைப் போல் ஏங்கினேன்
தினம் வாடாமல் நான் வாடினேன்

கானத்தில், குழல் நாதத்தில்,
ஒரு கந்தர்வ லோகத்தில் எனைக் கொண்டு சேர்ப்பான்!
மோனத்தில், அந்தி நேரத்தில்,
அவன் முந்நூறு முத்தங்கள் ஒன்றாகக் கேட்பான்!

கார் கூந்தல் தனை நீவுவான்
அதில் கல்யாண சுகம் தேடுவான்
அந்தக் கணத்தில், என் உதட்டில், தன் உதட்டால், முத்தெடுப்பான்.
வானம் எந்தன் காலில் வந்து கோலம் போடாதோ….

மோகத்தில், விழி ஓரத்தில்,
கண்ணன் பார்த்தாலும் என் நெஞ்சில் பசி ஆறிப் போகும்
காமத்தில், நடு ஜாமத்தில்,
இமை மூடாத என் கண்ணில் நதி ஓடிப் பாயும்

மை கூட கரைகின்றதே
இன்று பன்னீரும் சுடுகின்றதே
அந்தி இருட்டில் என் விழிக்குள் நின்றிருப்பான் – கண்மணிக்குள்
இங்கும் அங்கும் எங்கும் காதல் கண்ணன் கோலங்கள்!   

அவள் கண்மூடி பாட பேருந்தில் அமைதி நிலவியது… அவள் பாடல் முடிந்ததும் கண் திறக்க.. கை தட்டல் சத்தம் அந்த பேருந்தையும் தாண்டி கேட்டது… அபி இமைக்க மறந்து அவளையே பார்த்து கொண்டிருந்தான்….. மது அவளருகில் வந்து சாதனாவை இறுக அணைத்து கொண்டாள்.. ”நீ இவ்வளவு சூப்பரா பாடுவேன்னு இத்தனை நாள் எனக்கு தெரியாம போயிருச்சே… இல்லன்னா தினமும் ரெண்டு வரியாவது பாடுன்னு உன்ன தொல்லை பண்ணிருப்பேனே”  என்றவள்  அவளின் கண்ணத்தில் முத்தமிட, அதை பார்த்து கொண்டிருந்த அபிக்கு காதில் புகை வந்தது…  இரவு உணவு உண்பதற்காக பேருந்தை ஒரு மோட்டலில் நிறுத்த அனைவரும் இறங்கினார்கள்..

அபி சாதனா இறங்குவதற்காக காத்திருந்தான்… அவள் இறங்கியதும்… அவளுடனே நடந்தான்… அது அவளுக்கு சங்கடத்தை அளிக்காமல் ஒரு பாதுகாப்பு உணர்வையே கொடுத்தது… சாதனாவிற்கு ரெஸ்ட்ரூம் போக வேண்டுபோல் இருக்க… யாரிடம் கேட்பது என்று தயங்கி கொண்டு இருந்தாள்.. அவள் மதுவை பார்க்க.. மது அவள் தங்கை பவித்ராவை தன் மடியில் தூங்க வைத்திருந்தாள்… அவளை தொந்திரவு செய்ய மனம் வராமல்.. சுற்றிலும் பார்வையை சுழல விட.. அந்த மோட்டல் தவிர சுற்றி உள்ள இடங்கள் இருட்டாக இருக்கவே… அவளுக்கு கண்கள் கலங்கும்போல் இருந்தது… 

அபி, அவள் காதருகில் குனிந்து மெதுவாக ”சாதனா ரெஸ்ட்ரூம் அந்த பக்கம் இருக்கு  போறிங்களா…? என கேட்க…அவள் வேகமாக தலையாட்டிவிட்டு.. அவன் காண்பித்த இடத்தை நோக்கி சென்றவள் திகைத்தாள்… ஏனென்றால்.. அங்கு நான்கைந்து ஆண்கள் சிகரெட் பிடித்தபடி… நின்று கொண்டிருக்க… அங்கு போகாமல் திரும்பியவளை.. அபி அவள் அருகில் வந்து ”நான் இங்கதான் இருக்கேன் போயிட்டு வாங்க..?” என்று அங்கு இருந்தவர்களை முறைக்க… இப்பொழுது அவர்கள் சிறிது தள்ளி நின்றார்கள்… சாதனா உள்ளே சென்றுவிட்டு முகம் கழுவி வந்தவள்… அபிக்கு நன்றி கூறினாள்…

அபி சாதனாவை சாப்பிட அழைக்க மறுக்காமல் சென்றாள்… மது, அவள் தங்கை, அபி, பிரபு…அனைவரும் ஒரு டேபிளில் அமர்ந்தார்கள்… அனைவரும் உணவருந்தி முடித்த பிறகும் சாதனா தன் உணவில் பாதி மட்டுமே உண்டிருந்தாள்.. மதுவும்..அவள் தங்கைக்கு தூக்கம் வருவதாக சொல்லி.. “சீக்கிரம் சாப்பிட்டு வா சாதனா” என்றவாறு.. பேருந்தில் ஏறினாள்.. 

 அவள் அருகில் அபி மட்டுமே அமர்ந்திருக்க… “ என்னால சாப்பிட முடியலை நிறையா வச்சுட்டாங்க போல.. இதை கட்டி தர சொல்றிங்களா.. நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்டுகிறேன்…? என்று பரிதாபமாக கேட்டவளிடம்… 

“ நேரம் கழிச்சு சாப்பிட்டா.. இது ஆறி போயிடும் ஏற்கனவே சாப்பாடு ருசி கம்மியாதான் இருக்கு…  இதுல ஆறிப்போய் சாப்பிட்டா.. நல்லா இருக்காது…” என்றவனிடம், ”சாப்பாடு வேஸ்ட்டா போய்ருமே..” என்று கவலை பட்டாள் “எதுக்கு வேஸ்டா போக போகுது..? என்றவன்.. அவள் இலையை தன் பக்கம் நகர்த்தி வேகமாக உண்ண தொடங்கினான்…அதை அவள் அதிர்ச்சியாக பார்த்து கொண்டிருக்கும் பொழுதே…” தப்பா எடுத்துக்காதிங்க எனக்கு சாப்பாடு வேஸ்ட் பண்றது பிடிக்காது என்றவன்…” அந்த உணவை ரசித்து உண்டான்… 

 

அபி திடீரென்று முகத்தை சீரயஸ்ஸாக வைத்து கொண்டு..” எனக்கு ஒரு ச்ந்தேகம்” என்றவன் அவளின் கேள்விப்பார்வையில்.. “இல்ல.. கை கழுவிட்டுதான சாப்பிட்டிங்க..?” என்றவனை இப்போது கொலை வெறியுடன் முறைத்துப்பார்த்தாள்… “சும்மா விளையாட்டுக்கு…” என்றவன் சாப்பிட்டு முடித்து, கை கழுவிகொண்டு அவளையும் அழைத்து சென்றான்… உண்ட மயக்கத்தில் அனைவரும் உறங்கிகொண்டிருந்தனர்… இரவு நேரத்தில் மலை பாதையில் வண்டி செல்ல… ஜன்னலோரம் அமர்ந்திருந்த சாதனாவிற்கு.. அந்த இருட்டு பயத்தை கொடுக்க..அபியின் புறம் திரும்பி அமர்ந்தாள்… காதில் ஹெட்போனை மாட்டி, கண்மூடி பாட்டு கேட்டு கொண்டிருந்தவன், சாதனாவிடம் அசைவு தெரியவும் கண் விழித்தான்..

”என்ன..” என்றவனிடம் “வெளிய இருட்டு கொஞ்சம் பயமா தெரியுது”  என்றவளிடம் “அப்படின்னா இந்த பக்கம் வர்றிங்களா..? என்று கேட்டான்.. “ ம்; கூம் எனக்கு ஜன்னல் சீட்டுதான் வேணும்.. நான் உங்க பக்கம் திரும்பி  உட்கார்ந்துகிறேன்’’ என்றாள்.. சிறிது யோசித்த அபி தனது பேக்கிலிருந்து டேப்பை (Tab) எடுத்தான்… அவளிடம் கொடுத்து இதுல கேம்ஸ் நிறைய இருக்கு.. விளயாட்றதுன்னா.. விளையாடுங்க… இல்ல பாட்டு கேட்கறதுன்னா கேளுங்க.. அப்படியும் இல்லன்னா.. எதாவது ப்ரோகிராம் பார்ப்பதுன்னாலு பார்த்துக்குங்க…” என்று அவளிடம் கொடுத்தான்..

தயங்கி கொண்டே அதை வாங்கியவள் ஆர்வமாக அதை  ஆன் செய்து.. சின்சேன் பொம்மை படம் பார்க்க.. அபி சிரித்து கொண்டான்… சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தவள் அப்படியே உறங்கி விட… அவ்வப்போது அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்து கொண்டிருந்தவன்… அவள் தூங்கவும்.. அவளிடம் இருந்த டேப்பை எடுத்து வைத்து விட்டு.. அவள் உறங்குவதற்கு ஏதுவாக.. இருக்கையை சாய்த்துவிட்டு… அவனிடம் இருந்த சால்வையை எடுத்து போர்த்தி விட்டவன் மென்மையாக அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.”  அவள் நன்றாக உறங்கியதை அறிந்த பின்பே தன் அன்னைக்கும், மங்கைக்கும் அழைத்து பேசினான்.. அவர்களிடம் பேசி முடித்தவன்.. தன்னுடைய இருக்கையை சாய்த்துவிட்டு… உறங்கினான்.. 

 

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனின் மார்பில் எதுவோ அழுத்துவதை உணர்ந்தவன், திடுக்கிட்டு கண்விழிக்க.. இன்பமாக அதிர்ந்தான்.. சாதனாதான் தூக்க கலக்கத்தில்.. லேசாக நகர்ந்து அவனின் மார்பில் தஞ்சம் அடைந்திருந்தாள்.. அபியும்… புன்னகையுடன் அவளுக்கு வசதியாக சாய்ந்து.. ஒரு தாய் பறவை தன் சேய் பறவையை பாதுகாப்பது போல், அவளை அணைத்து கொண்டு உறங்கினான்… அந்த அணைப்பில்  காமம் இல்லை… காதலும், தாய்மையுமே இருந்தது  

ஒருவழியாக பேருந்து அதிகாலையில் குன்னூர் வந்து சேர்ந்தது… முதலில் விழித்த அபி.. தன் மார்பில் துயில் கொண்டிருந்த சாதனாவை ஒரு நொடி ரசித்து பார்த்தவன்.. பின்பு அவளின் தூக்கம் கலையாதவாறு… தன் மார்பிலிருந்து அவளை இருக்கையில் படுக்க வைத்தான்.. பின்பு அவளை மெதுவாக எழுப்ப.. ”இன்னும் கொஞ்ச நேரம்மா” என்று சிணுங்கியவளை… மது வந்து அவளை தட்டி எழுப்ப..அதில் திடுக்கிட்டு விழித்தவள்.. சில வினாடிகள் கழித்தே தான் எங்கிருக்கிறோம் என்பதை உணர்ந்தாள்… அபி மதுவிடம் சிறிது கோபமாக.. “அவங்கதான் எழுந்திருக்கிறாங்களே அப்பறம் ஏன் தட்டி எழுப்புறிங்க…? நல்ல தூக்கத்துல இருக்கிறவங்கல இப்படி தட்டி எழுப்பினா அவங்க மனசு கொஞ்சநேரம் படபடப்பா இருக்கும் புரியுதா..”இனிமேல ஆழ்ந்து தூங்கிறவங்கள இப்படி தட்டி எழுப்பாதிங்க…” என்றவன் சாதனாவிற்கு சிறிது தண்ணீர் கொடுத்து குடிக்க சொன்னான்..

 

அவள் குடித்தபிறகே பேருந்தில் இருந்த அவளை இறங்க விட்டான்.. இதை அனைத்தையும் திறந்தவாய் மூடாமல் பார்த்து கொண்டிருந்தாள் மது… சாதனா தன் மீது போர்த்தியிருந்த சால்வையை அப்பொழுதுதான் கவனித்தாள்.. அபியை கேள்வியாக பார்க்க.. ”நைட் குளிர்ல நடுங்கிக்கிட்டு இருந்திங்க அதான் என்னோட சால்வையை எடுத்து போர்த்திவிட்டேன்”  என்றான்.. ஏனோ சாதனாவிற்கு அபியின் ஒவ்வொரு செயலும்.. தன் தந்தையை ஞாபகபடுத்துவது மட்டுமல்லாமல்… வேறு ஒருவரின் செயலும் அவளின் நினவிற்கு கொண்டு வந்தது…

அதை பற்றி யோசித்துக்கொண்டே பேருந்தில் இருந்து இறங்கினாள். அந்த அதிகாலையில், இருள் பிரியாத வேளையில்,.. குன்னூரின் குளிரும், பூக்களின் வாசமும்., உடலுக்குள் ஊடுருவி.. சிலிர்ப்பை ஏற்படுத்த, சாதனா அதை மிகவும் ரசித்தாள்.. கைகள் இரண்டையும் பரபரவென தேய்த்து தன் கன்னத்தில் வைத்து கொண்டாள்.. பிரபு அனைவரையும் பார்த்து “ இது நம்ம பாஸுக்கு சொந்தமான காட்டேஜ்.. ஒரு ரூமல ரெண்டு குடும்பமா தங்கிக்கிங்க.. எல்லாரும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு.. எட்டு மணிக்கு தயாராகி டைனிங் டேபிள்க்கு வந்துருங்க…. 

காலை சாப்பாட சாப்பிட்டு நம்ம குன்னூர சுத்தி பார்க்க போறாம்..” என்று அறிவித்தான்… அபி பிரபுவிடம் கண்ஜாடை செய்ய..அதை புரிந்து கொண்டவன்… சாதனாவிடம் திரும்பி…” சாதனா நீங்களும் மதுவும் இந்த அறையை எடுத்துக்குங்க..” என்று ஒரு அறையை காண்பித்தான்.. அந்த அறை, அபியின் ரூமிற்கு அருகில் இருப்பதால், அபியின் கண்ஜாடையை புரிந்து கொண்டு… பிரபு அவ்வாறு சொன்னான்…. சாதனா தன் அன்னைக்கும், வாசுகிக்கும் அழைத்து..தாங்கள் நல்ல படியாக வந்து சேர்ந்ததை.. சொல்லிவிட்டு உறங்க சென்றாள்.. அனைவரும் பிரபு சொன்னது போல் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு. எட்டு மணிக்கு டைனிங்டேபிள் வந்து சாப்பிட்டுவிட்டு சரியாக ஒன்பது மணிக்கு கிளம்பியவர்கள், 

முதலில் சென்ற இடம் குன்னூர் கன்னிமாரியம்மன் கோயில், அங்கு அம்மனை வணங்கிவிட்டு.. அடுத்ததாக அவர்கள் சென்ற இடம் டால்பின் நோஸ், அடுத்து வரலாற்று சிறப்புமிக்க துரூக் கோட்டை, அந்த கோட்டையை பற்றி சாதனா அபியிடம் கேட்க, அவனும், ”இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தலமாக குன்னூரில் விளங்குகிறது. இங்கிருந்து சுற்றுப்புறங்களில் உள்ள இடங்கள் தெளிவாக காணக்கிடைப்பதால் இது திப்பு சுல்தானின் புறங்காவல் கோட்டையாக விளங்கியது. இதன் அமைப்பு எதிரிகளை விரட்டி அடிக்க வாகாக இருந்தது. இப்போது எஞ்சியுள்ளது ஒரு சிதிலமடைந்த சுவர் மட்டுமே. 

இருப்பினும் வானிலிருந்து பார்க்கையில் கோட்டையின் அமைப்பு நன்றாகக் காணக் கிடைக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்தில் இருக்கும் இங்கிருந்து சமவெளிகளை நன்றாகக் கண்டு ரசிக்கலாம். நிறைய பறவைகள் வருவதால் பறவைகளைக் கண்டு ரசிக்க ஏற்ற இடம். எஸ்டேட் வழியாக மலைப்பாதையில் வரும்போது இயற்கை அழகைக் கண்டு ரசிக்கலாம்”. என்று, அபி சாதனாவிடம் சொல்லி கொண்டிருந்தான்.. பின்பு அனைவரும் மதிய உணவை முடித்துவிட்டு.. அருகில் உள்ள குவன்சே தேயிலை தோட்டத்திற்கு சென்றனர்…

மாலை அந்தி சாயும் வேளையில், சூரியன் பொன்னென மின்ன பசுமையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் இருந்த அந்த தேயிலை தோட்டத்தை பார்த்த சாதனா.. இமைக்க்க மறந்து ரசித்திருந்தாள்..  அதன் அழகில், சிறு குழந்தையாக மாறி போனாள்.. அவள் சுற்றும் முற்றும் பார்க்க.. அனைவரும் கொஞ்சம் தள்ளி நின்று அந்த இடத்தை பார்த்து கொண்டிருக்க.. தன்னருகில் அபியை தவிர யாரும் இல்லை என்பதை உணர்ந்தவள்.. அபியிடம் திரும்பி..அங்கு தேயிலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்களை காண்பித்து.. “நானும் இது போல செய்யவா..?” ஆசையாக கேட்க அதுவரை அவளின் மகிழ்ச்சியை பார்த்து தானும் மகிழ்ந்தவன் அவளின் கேள்வியில்…”இது தான் உன் உண்மையான குணம் பேபி” என்று நினைத்து கொண்டவன்…

அங்கு தேயிலை பறித்து கொண்டிருந்த ஒரு பெண்ணை அழைத்து அவளிடம் அபி, ஏதோ கூற, அந்த பெண் லேசாக புன்னகை புரிந்து..சாதனாவை அழைத்து சென்றாள்… சதனா அபியை பார்க்க.. அவன் போ என்பது கண்மூடி தலை அசைத்தான்… அவள் சந்தோசத்துடன் அந்த பெண்ணுடன் சென்றாள்.. சாதனாவின் முதுகில் ஒரு கூடையை கட்டிவிட்டாள் அந்த பெண்.. பீன்பு அவளிடம்..தேயிலை எவ்வாறு பறிப்பது.. என்று செய்து காட்ட சாதனா அதை ஆர்வமுடன் பார்த்து.. அதேபோல் செய்ய, அந்த பெண் பறித்து போட்ட இலைகள் எல்லாம் அழகாக கூடையில் விழ.. சாதனா பறித்த இலைகள் முக்கால்வாசி கீழேயும்.. மீதி.. இலைகள் கூடையிலும் இருந்தது.. அதை பார்த்த அந்த பெண்.. “இதுக்கு மேல எங்க முதலாளி நஷ்டம் அடைய வேண்டாம்.. தங்கச்சி.. பாவம் அவர்.. விட்றுங்க” என்று அவருக்கு பரிந்து பேசுவது போல்.. சாதனா கீழே சிந்த்திய இலகளை காட்டி  புன்னகையுடன் கிண்டல் செய்ய..

சாதனா அப்பொழுதுதான் கீழே சிந்திய இலைகளை கவனித்தாள்..தனது செய்கையில் அசடு வழிந்து, வாய்விட்டு கின்கினியாய் சிரித்தாள்.. அவளின் சிரிப்பு சத்தம் கேட்டு மதுவும் திரும்பி பார்க்க சாதனா இருந்த கோலத்தை பார்த்து அவளும் சிரிக்க… மதுவின் சிரிப்பை பார்த்த சாதனாவிற்கு மேலும் சிரிப்பு வந்தது.. இவை அனைத்தையும், மிகவும் ரசித்தவாறே அழகாக தனது கேமராவில் படம் பிடித்து கொண்டிருந்தார் நம்ம ஹீரோ….

தோட்டம் சரிவாக இருந்ததால் இறங்கி வர சாதனா சிறிது தடுமாற.. அபி வேகமாக வந்து அவளின் கையை பிடித்து.. சமமான பாதைக்கு அழைத்து வந்தான்…  பின்பு நேரமாவதை உணர்ந்து அபி அனைவரையும்..பேருந்தில் ஏற சொல்ல… சாதனாவும் ஏறினாள். சாதனா ஏறும்பொழுது எதேட்சையாக அவள் காலை பார்த்தவன் அதில் சிறிது ரத்தம் வரவும்..”ஹே சனா கொஞ்சம் பொறு உன் கால்ல இருந்து ரத்தம் வருது என்றவன்.. குனிந்து அவளின் காலை தொட போக சாதனா கூச்சத்தில் விலகினாள்..அதை உணர்ந்தவன் நிமிர்ந்த்து பார்த்து ஒரு பார்வை பார்க்க..

ஒன்றும் பேசாமல் அவள் காலை அபியிடம் காண்பித்தாள்..அவன் அவளின் சுடிதார் பேண்ட்டை லேசாக தூக்கி விட்டு பார்க்க.. அவள் கணுக்காலில்.. ஒட்டி கொண்டு அவளின் ரத்ததை குடித்து கொண்டு இருந்தது… பெரிய அட்டை ஒன்று…அதை பார்த்த அபி திடுக்கிட்டு சாதனவை பார்க்க அவள் .. “என்ன ஆச்சு” என்று தன் காலை பார்க்க.. அதில் அட்டையை பார்த்தவள்.. “ ஐயோ அம்மா பாம்பு… பாம்பு.. என அலற..பேருந்தில் இருந்த அனைவரும் எங்க பாம்பு.. என அலறி அடித்துகொண்டு கீழே வர,, அவளின் பாம்பு என்ற அலறலில் சிரிப்பு வந்தது அபிக்கு.. “ஷ் கத்தாத சனா நீ கத்துனதுல எல்லாரும் கீழ இறங்கி வந்துட்டாங்க..” என்றவன் இது பாம்பு இல்லடா..இது அட்ட” என்று விளக்கமளிக்க..

”அச்சோ அது ஏதோ ஒண்ணு எனக்கு அத பார்க்க ஒருமாதிரி இருக்க எடுத்துவிடுங்களேன்..” என கெஞ்ச அப்பொழுதுதான் சாதனாவின் காலில் இருக்கும் அட்டையை பார்த்தனர்..உடனே தங்களுக்கும் இதுபோல் எங்காவது ஒட்டி இருக்கிறதா..? என்று அனைவரும் தங்களை ஆராய்ந்து கொண்டனர்.. அபி சாதனாவின் காலை பார்த்து கொண்டே..” உங்க கிட்ட யார்கிட்டயாவது தீப்பெட்டி, அல்லது லைட்டர் எதாவது இருக்கா..? என்று கேட்டு வாங்கி.. சாதனாவிடம் ”கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்க பேபி..” என்றவன்

லைட்டரை எடுத்து..நெருப்பை அட்டையிடம் காண்பித்தான்.. அந்த அட்டைக்கு சாதனாவின் ரத்தம் மிகவும் பிடித்திருக்கும் போல அவளை விட்டு விலகுவேனா என்றது… அபி இன்னும் கொஞ்சம் பக்கத்தில் கொண்டுபோக… “ஆ.. சுடுது..” என்று அலறினாள்… “அவ்வளவுதான்… இதோ முடிஞ்சிருச்சு..”அபி அவளை சமாதானம் செய்ய..சூடு பொறுக்க முடியாமல் சாதனா குனிந்த்திருந்த அபியின் முடியை பிடித்துகொண்டாள்.. அட்டையின வயிறு நிரம்பியதாலா.. இல்லை அபி வைத்த சூட்டினாலா அட்டை சாதனாவை விட்டது… ”அவ்வளவுதாண்டா இதோ அட்டை போயிருச்சு.”.என்றவன் பிரபுவிடம் முதலுதவி பெட்டியயை எடுத்து வரசொல்லி.. அவள் காலுக்கு மருந்திட்டான்..

இதை அனைத்தையும் ஒரு குழந்தைக்கு செய்வதுபோல் செய்தவனை.. சாதனா கவனித்தாளோ இல்லையோ.. மது கவனித்தாள்… அபியின் நடவடிக்கையில் சாதனாவிடம்.. அபிக்கு அக்கறையும் மீறி ஏதோ இருப்பதாக தோன்றியது.. மதுவிற்கு..  அபியின் செயல் அனைத்தையும் சாதனா இயல்பாக ஏற்றுக்கொண்டது.. அவளுக்கு வியப்பாக இருந்தது… அவள் உணர்ந்த விசயம் மனதுக்கு மகிழ்ச்சியையே அளிக்க….சாதனா காலை லேசாக விந்தியவாறே நடக்க மது அவளுக்கு பேருந்தில் ஏற உதவி செய்தாள்.. காட்டேஜ் வந்து இறங்கியவர்கள்… சுற்றி பார்த்த அசதியில் அனைவரும் வேகமாக உண்டுவிட்டு தூங்க சென்றனர்..

மதுவிற்கும் தூக்கம் வர.. சாதனாவையும் அழைத்து கொண்டு போனாள்… அசதியில் ம்துவும் அவள் தங்கையும், படுத்த உடனே தூங்கிவிட்டார்கள்…சாதனாவிற்கு அசதியாக இருந்தாலும், ஏனோ தூக்கம் வரவில்லை.. இன்று நடந்த நிகழ்வுகளை… நினைத்தவாறே.. படுத்திருந்தாள்..தேயிலை தோட்டத்தில் நடந்ததை நினைத்தால் இப்பொழுதும் சிரிப்பு வந்தது அவளுக்கு….அவள் மனதில் ”இந்த ஊருக்கு வர நான் எப்படி பயந்தேன்… ஆனா, இப்ப அதைப்பத்தி நினைப்பே இல்லாமல்… எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது..? தனக்குள்ளே  வியந்தவாறு கேள்வி எழ… அதற்கான விடையாக அபி புன்னகையுடன்.. அவளின் மனதில் தோன்றினான்….

அத்தியாயம் 22

சாதனா தன்னிடம் நடந்த மாற்றங்களை பற்றி ஆராய்ந்து.. இது எப்படி நடந்தது என யோசித்து கொண்டிருந்தவளின் கேள்விக்கு விடையாக அபி தோன்றவும்.. விதிர்த்து படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தாள்… ” சே.. எனக்கு ஏன் இப்படி தோணுது..? என்று  சலிப்புடன் நினைத்தவள்.. உறக்கம் வராமல் புரண்டு படுத்தாள்…ஆனால் அவளின் மனசாட்சி…அந்த உண்மையை…ஏற்றுக்கொண்டது… மீண்டும் அவள் காலையில் நடந்ததை நினைத்து பார்க்க… அப்பொழுதுதான் அவனின் ”சனா” என்ற அழைப்பும் ”பேபி என்ற அழைப்பும்  நினைவிற்கு வந்தது…

 

அந்த குரல் எங்கோ கேட்டது போல் இருந்தது.… எங்கே என்று சரியாக நினைவு வரவில்லை… அதே யோசனையில் இருந்தவள்… அபி தன்னை அழைத்த விதத்தை மறந்து போனாள்.. யோசித்து கொண்டிருந்தவளுக்கு தலைவலி வர.. சூடாக எதாவது குடிக்க வேண்டும்போல் இருந்தது… அறையிலிருந்து வெளியே வந்தவள்.. ஹாலில் இருந்த இருட்டும், அமைதியும் லேசாக பயத்தை கொடுக்க.. சுற்றும் முற்றும் பார்த்தாள்…  அங்கு சோஃபாவில் யாரோ அமர்ந்திருப்பதாக தோன்ற… பயத்தில் கத்த போனவள்.. நன்றாக உற்று பார்க்க… யாரோ லேப்டாப்பில் ஏதோ செய்து கொண்டிருந்தார்கள்..

சிறிது தைரியத்தை வளர்த்து கொண்டு அவர் அருகில் சென்றவளுக்கு பயம் தெளிந்தது.. ஏனென்றால் அங்கு அபி, தனது லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான்.. வேலையின் மும்முரத்தில் அபி சாதனா வந்ததை கவனிக்க வில்லை.. அவன் தனது லேப்டாப்பில் மூழ்கி இருக்க.. சாதனா அவனை எப்படி அழைப்பது என்று குழம்பி லேசாக தொண்டையை கனைக்க… அந்த இருட்டில் திடீரென்று ஒரு உருவம் தன் முன் தோன்றி கனைக்கவும்.. திடுக்கிட்ட அபி நிமிர்ந்து பார்த்தான்… அங்கு சாதனா நின்றிருக்கவும்.. ஆசுவாசமானவன்..”என்ன சாதனா நீ இப்படியா மனுசனை பயமுறுத்துவ… உன்ன பார்த்து நான் ஏதோ மோகினிதான் நம்ம முன்னாடி வந்திருச்சோன்னு பயந்துட்டேன் தெரியுமா..?”  என்று அவளை கேலி பேசினான்..

அவன் தன்னை ”மோஹினி” என்று அழைத்ததில் கோபம் அடைந்தவள்.. ”சொல்லுவிங்க… சொல்லுவிங்க..ஏதோ சார் மட்டும் தனியா ஏதோ வேலை பார்த்துட்டு இருக்காரே… நம்ம ஏதாவது உதவி பண்ணலாம்னு வந்தா என்னையவே கேலி பேசறிங்களே..” என தாங்கலாக கூற, அபி ”ஓ எனக்கு உதவி செய்ய வந்திங்களா.. மேடம்…” என்றவன்.. லேப்டாப்பில வேலை பார்த்தது தலைவலிக்குது சூடா எனக்கு ஒரு காஃபி போட்டு எடுத்துட்டு வாங்க பார்ப்போம்… என, சாதனா.. திருதிருவென முழித்தாள்…  

அவள் முழிப்பதை பார்த்த அபி…”என்ன மேடம் உப்புக்கும் சக்கரைக்கும் வித்தியாசம் தெரியாதா…? மீண்டும் கேலி பேச… அதில் ரோசம் வர பெற்று…”அதெல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்…” வேகமாக சொன்னவள்.. “ஆனா இருட்டுன்னாதான் கொஞ்சம் பயம்…” என்று மெதுவாக சொல்ல அபி சிரித்தான்… அவன் சிரிப்பதை பார்த்து முறைத்தவளை…” சரி.. சரி முறைக்காத வா நான் கூட்டிட்டு போறேன்…” என்று அவளை கிட்சனுக்கு அழைத்து சென்றான்…

அங்கு சென்ற சாதனா ஃப்ரிட்ஜில் பால் ஏதும் இருக்கிறதா என தேடி பார்க்க அதில் எதும் இல்லை என்றதும், சோர்வுடன்… ”பால் எதுவும் இல்லையே எப்படி காஃபி போட்றது..?” என்று கவலையுடன் கேட்டாள்… “இங்க பால் அவ்வளவா கிடைக்காது.. பால் பவுடர் தான் இருக்கும்… அதுல காஃபீ போடு” என்றவன்.. “நான் இங்க வந்தா.. இதைத்தான் யூஸ் பண்ணுவேன்” என்றபடி பால் பவுடரை அவள் கையில் கொடுத்தான்…

”பால் பவுடரா… இதுல நான் காஃபி போட்டது இல்லையே… இதுல எத்தன ஸ்பூன்.. பவுடர் போடணும்..?” என்று சந்தேகம் கேட்டவளை… “ம்.. இன்னைக்கு நம்ம காஃபி குடிச்ச மாதிரிதான்..நீ தள்ளு நானே போட்றேன்…” என்றவனை வியப்புடன் பார்த்தாள்… “என்ன நீங்க போடபோறிங்களா…?” என்று வியப்பு மாறாமலே கேட்டவளிடம்.. “ஏன் நான் காஃபி போட மாட்டேனா..? நான் சூப்பரா காஃபி போடுவேன் தெரியுமா…? நான் வெளிநாட்டுல படிச்சப்போ கத்துக்கிட்டது…” என்று பெருமை பேசிக்கொண்டே காஃபி கலந்தவன, சாதனாவின் கையில் ஒன்றை கொடுத்து விட்டு.. தானும் ஒன்றை எடுத்துக்கொண்டான்..

மீண்டும் சோஃபாவில் வந்து அமர்ந்தவர்கள்…அபி.. காபி குடித்து கொண்டே வேலையை பார்க்க, சாதனாவிற்கு அந்த பவுடர் காஃபி குளிருக்கு இதமாக இருக்க… அதை ரசித்து குடித்தாள்.. “சும்மா சொல்ல கூடாது சார் காஃபி சூப்பர்…” ஒரு வேளை இந்த தொழில் இல்லைன்னா.. இன்னொரு தொழில் கைவசம் வச்சு இருக்கிங்க… நீங்க மட்டு ஒரு டீ கடை போட்டிங்க… வியாபாரம் சும்மா பிச்சுக்கிட்டு போகும்..”  என்று அவனை கேலி பேசியவள் அந்த காஃபியை கடைசி சொட்டு விடாமல் குடித்தாள்… “சொல்லுவிங்க மேடம் சொல்லுவிங்க.. பாவமே சின்ன பொண்ணு காஃபி போட தெரியாம தடுமாறுகிறாளே..ன்னு காஃபி போட்டு கொடுத்தா என்னையவே கிண்டல் பண்றயா..? என்று பொய்யாக கோபம் கொண்டான்.. 

சாதனாவிற்கு அப்பொழுதுதான் ஒன்று உறைத்தது.. அவன் தன்னை ஒருமையில் அழைத்தது.. ஏனோ அவளுக்கு அவன் மேல் கோபம் வரவில்லை.. “எப்படியும் என்ன விட ரெண்டு மூணு வயசு பெரியவங்களாதான் இருப்பாங்க.. சோ கூப்பிட்டா கூப்பிடட்டும்..” என்று பெரியமனது பண்ணி..அவன் ஒருமையில் அழைத்ததை கண்டுகொள்ளாமல் விட்டாள்..   வேலையை முடித்த அபி ”சரி என் வேலை முடிச்சிருச்சு தூங்க போகலாமா..? என கேட்க…அவளும் எழுந்தாள்.. ஏனோ புது இடம் என்பதாலோ என்னவோ சாதனாவிற்கு உறக்கம் வரவில்லை…  அவள் தயங்கி கொண்டே மெதுவாக செல்ல..

 

அவள் அறைக்குள் நுழையும் முன் அவளை அழைத்த அபி, தன் டேபை அவளிடம் கொடுத்தான்.. முகம் மலர அதை வாங்கியவளிடம்.. ”அரை மணி நேரம்தான் அதுக்கு மேல பார்க்க கூடாது…” என்ற கண்டிஷனோடு, அவளுக்கு இரவு வணக்கம் சொல்லி… சாதனா அறைக்குள் நுழையும் வரை பார்த்திருந்தவன்.. பிறகு தன் அறைக்குள் சென்றான்.. அறையில் படுத்திருந்த அபிக்கு, சாதனாவின் மாற்றங்கள்… மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது… அந்த மகிழ்ச்சியுடனே நிம்மதியாக உறங்கி போனான்… இங்கே சாதனாவோ… அபியின் டேபில் சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தவள்… அவன் சொன்ன அரை மணி நேரத்திற்கு முன்னே..உறக்கம் வர.. தூங்கி போனாள்…

 

மறுநாள் அனைவரும் சிம்ஸ் பூங்காவிற்கு சென்றனர்… ”குன்னூரின் பிரதான இடங்களில் ஒன்று. ஜே.டி.சிம் என்பவரின் பெயரால் நிறுவப்பட்ட இந்தப் பூங்கா ஒரு தோட்டக்கலை மையமாகும். ஜே.டி.சிம் மதராஸ் கிளப்பின் காரியதரிசியாக 1874ல் பணிபுரிந்தவர். இந்தப் பூங்கா அரிய வகைச் செடிகொடிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு , காண்பவர்க்கு ஆச்சரியத்தை தருகிறது . பன்னிரண்டு ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்கா ஆயிரத்துக்கும் அதிகமான தாவரங்களின் இருப்பிடமாக உள்ளது. ஜப்பானிய முறைப்படி உருவமைக்கப் பட்டுள்ள இந்தப் பூங்காவில் கமேலியா , மக்னோலியா , பைன் போன்ற அரிய மரங்களும் பாதுகாக்கப் பட்டுள்ளன. 

குன்னூரின் குளிர்ச்சியான காலநிலையில் செழித்து வளரும் இந்த மரங்கள் ஆண்டுமுழுவதும் ரசிக்கத் தக்க அழகுடன் காணப்படுகின்றன. சிம்ஸ் பூங்காவின் சிறப்பான விசயம்.. ஆண்டுதோறும் இங்கு நடத்தப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் கண்காட்சி தான். சிம்ஸ் பூங்கா கடல் மட்டத்திலிருந்து 1780 மீட்டர் உயரத்தில் மேல் குன்னூரில் அமைந்துள்ளது.” என்று அபி இதன் அமைப்பையும், வரலாற்றையும்  சாதனாவிற்கு அழகாக விளக்கினான்…

சாதனா அவன் கூறுவதை ஆர்வமாக கேட்டவள்… அந்த ஆர்வத்துடனே ஒவ்வொன்றையும் ரசித்து பார்த்தாள்… அங்கிருந்த பூக்களின் வாசமும், நிறமும் அவள் மனதை மயக்கின… அவள் சந்தோசத்துடன்… அபியின் புறம் திரும்பி.. “அச்சோ இந்த பூக்களை எல்லாம் பாருங்களேன்..  எவ்வளோ அழகா இருக்கு…” என்று கண்கள் மலர, முகம் விகசிக்க கூறியவளின் அழகில்.. மயங்கிய அபி “ உன்னை விட அழகு இல்ல பேபி..” என்று தன்னை அறியாமல் கூற… பூக்களின் அழகில் மயங்கி இருந்தவள் அவனின் பேச்சை கவனிக்காமல்.. “என்ன சொன்னிங்க..? என கேட்க..    

”டேய் அபி வாயை விட்டுடியேடா எப்படியாவது சமாளி..” என்றுவிட்டு ”இல்ல பூக்கள் ரொம்ப அழகுன்னு சொன்னேல்ல.. அதுக்கு ஆமான்னு சொன்னேன்..: என்று ஒருவழியாக சமாளித்தான். அங்கு இருந்த ப்ச்சை நிற ரோஜா சாதனாவின் மனதை கவர.. அதை லேசாக வருடியவள்.. அபியிடம் “ நான் பச்சை நிறத்துல இருக்கிற ரோஜாவை இப்பதான் பார்க்கிறேன்… என்னை இந்த ரோஜாவோட ஒரு போட்டோ எடுக்கிறிங்களா..? அம்மாவுக்கும், வசும்மாவிற்கும் காட்டணும்..: என ஆவலாக கேட்க.. அபி தன் கேமராவில் அவளை அழகாக படம் பிடித்தான்..

பின்பு அனைவரும் அங்குள்ள லேக்கில் அனைவரும் படகு சவாரி..செய்தனர்.. நான்கு பேராக அமர.. அபி, சாதனா, மது, அவளின் தங்கை ஒருபடகில் அமர்ந்தனர்..முதலில்  மதுவும், அவளின் தங்கையும் படகை செலுத்துபவரின் உதவியுடன்.. அதில் ஏறினர்.. அடுத்து சாதனா ஏறுவதற்காக அவர் கையை நீட்ட.. அவள் தயங்கி அபியை பார்த்தாள்…  அதைபுரிந்து கொண்ட  அபி, முதலில் தான்  படகில் ஏறி, சாதனாவிற்காக கை கொடுத்தான்…இயல்பாக அவனின் கரத்தை பற்றி கொண்டு படகில் இறங்கினாள்..  சாதனா படகு செலுத்துபவரிடம் திரும்பி, ”தப்பா எடுத்துக்கதிங்க அண்ணா.. எனக்கு கொஞ்சம் பயம் நீங்க கையை விட்ருவீங்களோன்னு…. ஆனா அவங்ககிட்ட எனக்கு பயம் இல்லை.. அதான் அவங்க கைய புடிச்சுக்கிடேன்” என்று விளக்கம் அளிக்க அவர் “பரவாயில்ல தங்கச்சி…ஒவ்வொரு பொண்ணும் உன்ன மாதிரி, கணவன் மேல நம்பிக்கை வச்சா எவ்வளவு நல்லா இருக்கும்.. எனக்கும் தான் வந்து வாய்ச்சிருக்காளே.. இதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேணும்மா…” என்றவன் அபியிடம் திரும்பி..  “சார் நீங்க ரொம்ப லக்கி சார்.. தங்கச்சி உங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காங்க… அந்த நம்பிக்கையை எப்பவும் காப்பத்துங்க சார்…” என்ற வேண்டுகோளுடன்  படகை செலுத்தினார்..  அபி “நிச்சயமா” என மனதில் கூறி கொண்டான்..  

அவரிடம் மறுத்து கூறப்போன சாதனாவை, தடுத்த மது.. “ என்ன அவர்கிட்ட போய் அந்தமாதிரி எதுவும் இல்லன்னு சொல்ல போறியா..? இன்னும் ஒரு அரை மணி நேரம் கழிந்தால், அவர் யாரோ, நம்மா யாரோ.. எதுக்கு அவர்கிட்ட போய் விளக்கிட்டு..”  என்று அவளை சமாதானம் செய்தாள்.. சாதனாவும் அமைதியாக இருந்து விட்டாள்..  இதை யெல்லாம் அபி.. இதழில் உறைந்த புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தான்… படகு பயணம் மிகவும் இனிமையாக இருந்தது, சாதனா இந்த பயணத்தை ரசித்தாள் என்றால் அபி.. எப்பவும் போல அவளை ரசித்தான்..

 

படகு பயணம் முடிந்து,  அனைவரும் பூங்காவின் மர நிழலில் ஆங்காங்கே அமர்ந்திருக்க.. சாதனாவிற்கு மீண்டும் அந்த பச்சை நிற ரோஜாவை பார்க்க வேண்டும்போல் இருந்தது.. அவள் அபியிடம் சொல்லி கொண்டு போக “இரு நானும் வ்ர்றேன்..” என்று எழ போனவனிடம் “ நான் என்ன சின்ன குழந்தையா..? எங்க போனாலும் என் கூடவே வ்ர்றதுக்கு…? நான் போய்ட்டு ஒரு பத்து நிமிஷத்துல வந்துருவேன்..  அந்த க்ரீன் ரோஸ் ரொம்ப அழகா இருக்கு அத மட்டும்தான் பார்த்துட்டு வருவேன் வேற எங்கயும் போகமாட்டேன்” என்று உறுதி அளித்துவிட்டு.. சென்றாள்…

சாதனா அந்த ரோஜாவை ஆர்வமுடன் பார்வையிட்டு கொண்டிருக்க.. அவளுக்கு முதன் முதலில் உணர்ந்த அருவருக்க தக்க உணர்வை மீண்டும் உணர்ந்தவள் சுற்றும் முற்றும் பார்க்க.. சந்தேகம் கொளும்படி ஏதும் இல்லாததால்.. மீண்டும் அங்கிருந்த பூக்களை பார்வையிட்டவள் நேரமாவதை உணர்ந்து  செல்லும் நேரம் அவளின் வெகு அருகில்..” சாதனா டார்லிங் நீ இன்னும் உயிரோடு இருக்கியா..? அன்னைக்கு ஏதோ மிருகத்துக்கிட்ட கடி வாங்கி செத்துருப்பேன்ல நினச்சேன்.. அப்ப நிஜமாவே நீ யார் கூடயாவது ஓடி போய்ட்டியா..? ஏன்னா உங்க அம்மா உன்ன பார்க்கவே இல்லன்னு சொன்னாளே…? ஆனாலும் கடவுள் இருக்கார் இல்லையா..  அன்னைக்கு என்னை விட்டு ஓடி போனவளை திரும்பவும் என் கண் முன்னாடி காட்டி யிருக்கார்.. அதுவும் முன்னை விட பலமடங்கு அழகோட” என்று  அவள் உடல் கூசும்படி வக்கிரமாக பார்த்தவன்… அவளின் கையை புடிக்க போனான்.. பிரகாஷ் என்னும் மிருகம்..

தனக்கு வெகு அருகில் அவனின் குரலை கேட்டதுமே  சாதனாவின் மூளை மறத்து போனது போல் இருக்க… ”கடவுளே காப்பாத்து, அபி பயமா இருக்கு சீக்கிரம் வாங்க” என்று வேண்டி கொண்டிருந்தவளின் கால்கள் நகர்ந்தால் கீழே விழுந்ததுவிடுவோம்.. என்று பலம் இல்லாமல் நகர மறுத்தது… பிரகாஷ் சாதனாவின் கையை தொட போகும் நொடி.. “ சாதனா” என்னும் அபியின் குரல்..கேட்க.. அவளுக்கு தான் எப்படி உணர்கிறோம்.. என்று சொல்ல தெரியாமல்.. அவள் கால்களுக்கு பல மடங்கு வேகம் வந்தது போல்… “மனூ…” என்று கதறி கொண்டு, அபியின் மார்பில் தஞ்சம் அடைந்திருந்தாள்..

 

அபி,  அவளின் மனு என்ற அழைப்பில் ஒரு நொடி திகைத்து பின் சந்தோசத்தில் தானும் அவளை இறுக அணைத்து கொண்டான்.. முதலில் சந்தோசத்தில் அவளின் நடுக்கத்தை கவனிக்காமல் இருந்தவன்…அவளின் நடுக்கம் அதிகமாகவும்… “ பேபி என்னாச்சு டா…? எதுக்கு நடுங்குற…?” பதட்டமாக கேட்க.. அவளோ அவனின் மார்பிலேயே புதைந்து விடுபவள் போல இன்னும் தன் முகத்தை அழுத்தமாக புதைத்து கொண்டு… ”எனக்கு பயமா இருக்கு மனு…” நாம இங்க இருந்து போய்ரலாம்.. அவன் வந்துட்டான..” என்று நடுங்கி கொண்டே கூற முதலில் யார் என்று புரியாமல் விழித்தவன்.. அவளின் நடுக்கமும், பயமும் நடந்ததை அவனுக்கு உணர்த்த,  சுற்றும் முற்றும் கூர் பார்வையுடன் ஆராய… அங்கு சந்தேக படும்படி யாரும் இல்லாததால், இப்பொழுது சாதனாவை பார்ப்பதுதான் அனைத்திலும் முக்கியமாக பட..

பிரபுவிற்கு கால் செய்து அவனை வரவழைத்தவன் சாதனாவை தான் அழைத்து கொண்டு செல்வதாக கூறினான்… ”பிரபு இங்க எல்லாரும் சுத்தி பார்த்துட்டு வாங்க..” யாராவது எங்களை பத்தி கேட்டா நீயே எதாவது சொல்லி சமாளிச்சிடு..” என்றவனிடம் “பாஸ் வேற எதாவது செய்யணுமா..? என கேட்க.. “ம்ம்; ஆமா செய்யணும்..” ஆனா அதுக்கு முன்னாடி என் சனா பயத்தை தெளியவச்சுட்டு வ்ர்றேன்.. என்றவன் அவளை அழைத்து கொண்டு சென்றான்… அவர்கள் பேசி முடிக்கும் வரையிலும் கூட சாதனா அபியை விட்டு விலக வில்லை.. அபியும் அவளை விலக்க வில்லை.. அவள் தலையை தன் மார்போடு அணைத்து கொண்டே பேசி முடித்தான்..

சாதனாவிற்கு கால்கள் துவள்வது போல் இருக்க.. அபி சுற்று புறம் உணர்ந்து, அவளை தூக்க முடியாமல்..அவள் பாரம் முழுவதும் தான் தாங்கி கொண்டு கிட்டத்தட்ட தூக்கி சென்றான்.. இவை அனைத்தையும்.. ஒரு வேட்டை நாயின் வெறியோடு ஒரு மரத்தின் பின்னே மறைந்து பார்த்து கொண்டிருந்தான் பிரகாஷ்..” முதல் தடவை  எங்கிட்ட இருந்து தப்பிச்சுட்ட.. இந்த தடவை உன்ன விட மாட்டேண்டீ,,,? என்று வஞ்சத்துடன் கூறி கொண்டான்…

 

கால் டாக்ஸி புடித்து காட்டேஜ் வந்தவர்கள், சாதனாவின் கால்கள் இன்னு நடுங்கி கொண்டிருக்க, இப்பொழுது  எந்த தயக்கமும் இல்லாம.. சாதனாவை கைகளில் ஏந்தி கொண்டான்.. அவளை ஹாலில் உள்ள.. கனைப்பு அருகே அமர வைத்தவன்… அவளின் பாதங்களையும் கைகளையும் நன்றாக தேய்த்துவிட்டான்… அவளின் அதிர்ச்சி போக, சூடாக குடிப்பதற்கு எதாவது எடுத்து வர உள்ளே செல்ல போனவனை தடுத்தவள்… “ என்ன விட்டு எங்கயும் போகாதிங்க மனு… ம்றுபடியும் அவன் வந்திருவான்” என அச்சத்துடன் கூறினாள்..

”என் பேபிய விட்டு நான் எங்கயும் போக மாட்டேன்…சூடா எதாவது குடிச்சா கொஞ்சம் நல்லா இருக்கும்டா அதான் உனக்கு குடிக்க எதாவது எடுத்துட்டு வர்றேன்” என்று அவளை சமாதானம் செய்ய.. “ம்..கூம் எனக்கு எதுவும் வேண்டாம்..நீங்க இங்க்யே இருங்க” என ஒரு நொடி யோசித்த அபி..”சரி நீயும் என் கூட வா.” அவளை அழைத்து கொண்டு சென்றவன் அவளுக்கு சூடாக ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்தான்.. அதை குடித்தவளுக்கு சிறிது தெம்பு வர.. அதில் சுய உணர்வு வர பெற்றவள்… அபியை விட்டு விலகி அமர்ந்தாள்..

” ம் மேடம் தெளிவாய்ட்டிங்க போல” என்று அவளின் விலகலை சுட்டி காட்டியவன்.. பின்பு அவளிடம் “ சொல்லு சாதனா அங்க யாரைப்பார்த்து பயந்த, எதுக்கு பயந்த..? எதுக்கு இந்த ஊருக்கு வர்றதுக்கு தயங்கின..” என்று கேட்க அவள் அமைதியாக இருக்கவும்…  ”நான் கேட்டுட்டே இருக்கேன் நீ பதில் பேசாம இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்” சிறிது கோபமாக கேட்க..  “ நான் எதுக்கு உங்க கிட்ட சொல்லணும் நீங்கதான் உங்க அத்தை பொண்ண கல்யாணம் பண்ணிட்டு போய்டுவிங்கள்ள அப்பறம் உங்க கிட்ட சொல்லி என்ன ஆக போகுது… எனக்குத்தான் யாரும் இல்லையே.. என்ன மறுபடியும் அவன் பார்த்துட்டான்… அவன் என்ன கூட்டிடு போயிடுவான்.. என்ன அடிப்பான், ட்ரெஸ்ஸ எல்லாம் எரிப்பான் ஆனா நீங்க இத பத்தி எதுவுமே கவலை படாம உங்க அத்த மகளை கல்யாணம் பண்ணிட்டு போய்ருவிங்க ” என்று சம்பந்தம் இல்லாமல் பேசினாள்

அவள் பேசுவதை கேட்டு திடுக்கிட்ட அபி.. ”அன்னைக்கு நான் விளயாட்டுக்கு சொன்னது உன் மனசுல ஆழ பதிஞ்சிருக்கா..? அப்படின்னா நான் உன் மனசுல வந்து ரொம்ப நாளாயிருச்சு பேபி.. நீதான் அதை உணரலை… ” அவள் விசும்பலுடன் பேசிக்கொண்டிருக்க… “பேபி”  என்று மென்மையாக அழைத்தான்.. கண்ணீருடன் அவனை பார்ர்க்க.. அவன் அவள் கண்களையே பார்த்து.. இருகரம் நீட்டி வா என கண்களால் அழைக்க… தாயை தேடும் சேயாக அவன் கைகளுக்குள் நுழந்தவளை…மென்மையாக அணைத்துகொண்டான்.. 

”அன்னைக்கு நான் சொன்னது உண்மையில்லை பேபி… “என்றவன் அவள் திகைப்புடன் நிமிர்ந்து பார்க்கவும்… “சத்தியமா பேபி.. என்னைக்கு உன்ன முதன் முதலில் அந்த காம்ப்ளெக்ஸில் பார்த்தேனோ.. அப்பவே நீ என் மனச பாதிச்ச்சுருக்க…நீ அந்த குழந்தைக்கு முத்தம் கொடுத்தத.. நான் தப்பா நினைத்து உன்னை திட்டிட்டு வந்த பிறகு நான் நானாவே இல்லை.. அம்மாக்கிட்ட நடந்ததை சொன்னப்போ என்ன செம்மையா திட்டிட்டாங்க..  முன்ன பின்ன தெரியாத பொண்ணு அவளை பத்தி எதுவுமே தெரியாதப்ப நீ எப்படி அப்படி பேசலாம்ணு..” என்மேல கோப பட்டாங்க.. அப்பதான் நான் செஞ்ச தப்பு புரிஞ்சது.. உன்ன மறு முறை பார்த்தா உங்கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு நினச்சேன்… ஆனா உன்ன பார்த்த பிறகு உன் மனசதான் கேட்கனும்னு தோணுச்சு.. ஆனா மேடம் அப்ப எம்மேல ரொம்ப கோவமா இருந்திங்க… எப்படி உங்க கோபத்த தணிக்கிறதுன்னு யோசிச்சா.. மேடம் என்கிட்ட மட்டும் இல்ல.. எல்லார்க்கிட்டையும் அப்படிதான்னு தெரிஞ்சது…

 

எப்படி உன்னை நெருங்குவதுன்னு யோசிச்சிட்டு இருந்தப்பதான்  அன்னைக்கு நான்  ஆஃபீஸ்க்கு வரலைன்னு கோபப் பட்ட.. காய்ச்சலே வந்தாலும் லீவு போடாதவ.. லேசான தலை வலிக்காக லீவு கேட்ட அதுவும் முக்கியமான வேலை இருக்கிறப்போ….  அப்பதான் உன் மனசுல ஏதோ ஒரு இடத்துல நான் இருக்கேன்னு தோணுச்சு…  அதை உறுதி செஞ்சுக்கத்தான் அத்தை பொண்ணு, கல்யாணம்னு கதை கட்டிவிட்டேன்… அதை கேட்டு நீ அதிர்ச்சி அடஞ்ச… உன் கண்ணுல தெரிஞ்ச ஏமாற்றம் எனக்கான பதிலை கூறிவிட்டது… அந்த சந்தோசத்துல இருந்த எனக்கு அடுத்து நீ கேட்ட கேள்வி பெரிய அதிர்ச்சிய கொடுத்தது..

 

அப்பதான் எனக்கு ஒரு உண்மை புரிஞ்சது உன் மனசுல ஏதோ ஒரு பெரிய கஷ்டம் இருக்குன்னு…  அதை பத்தி எப்படிடா உங்கிட்ட கேட்கிறதுன்னு தவிச்சுட்டு இருந்தேன்..  ஆனா கடவுள் அதுக்கு ஒரு வழிய இன்னைக்கு கொடுத்திருக்கார்… சொல்லு பேபி.. உனக்கு என்ன கஷ்டம்.. இன்னைக்கு யாரை பார்த்து பயந்த..?” என்று தன் மனதில் உள்ள காதலை அவளிடம் சொன்னவன்… அவனுக்கு  சாதனாவை பற்றி அனைத்தும் தெரியும் என்பதை மறைத்தான்.. 

 

சாதனா அவனின் நீண்ட விளக்கத்திலும் அவனின் காதலிலும் சுகமாய் நனைந்து கொண்டிருந்தவள் அவனின் இறுதி கேள்வியில் சுயநினைவடைந்து.. ”இத எப்படி மறந்தேன்… எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சுன்னு எப்படி மனுக்கிட்ட சொல்லுவேன்..“ என்று முகத்தை மூடி கொண்டு அழுதவள் மனதை தேற்றிக்கொண்டு,  அபியிடம் “உங்க அன்புக்கும், காதலுக்கும் நான் தகுதியானவ இல்ல… எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சு மனூ..”  என்று கதறியவள் .. பிரகாஷை பற்றியும் தனக்கு நடந்த திருமணத்தை பற்றியும்… அதனால் தன் தந்தை இறந்ததை பற்றியும் அழுகையினூடே கூறினாள்… அபிக்கு ஏற்கனவே தெரிந்த விசயம் என்றாலும் அவளின் வாய்மொழியில் கேட்கையில்.. மனம் ஊமையாக அழுதது..

 சாதனாவை ஆறுதலாக அணைத்து கொண்டான்… அவளும் அவனின் மார்பில் சாய்ந்து.. இத்தனை நாள் பட்ட துன்பத்திற்கெல்லாம் இன்றே அழுது தீர்ப்பவள்  போல் அழுது கொண்டே இருந்தாள்… எதற்கும் ஒரு முடிவு உண்டல்லவா… அதேபோல் சாதனாவின் கண்ணீரும் அபியின்  அணைப்பிலும், வருடலிலும் மெதுவாக நின்று… அவளிடம் லேசான விசிப்பு மட்டும் இருக்க..  அபி அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தான். 

சாதனா அபியிடம் “ அந்த பிரகாஷ் ரொம்ப கெட்டவன் மனு..  அவன் இங்க இருப்பான்னு தெரிஞ்சுதான் நான் இங்க வர மறுத்தேன்… நான் பயந்த மாதிரியே ஆயிருச்சு… நான் வேற அவன் முன்னாடி உங்க மேல சாஞ்சிட்டேன்  அவன் உங்களை எதாவது செஞ்சிருவானோன்னு பயமா இருக்கு மனு.. நம்ம இங்க இருந்து போய்ரலாம் மனு.. எனக்குன்னா நான் தாங்கிக்குவேன்.. ஆனா உங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா என்னால தாங்க முடியாது மனு… நம்ம்ள அவன் கண்டுபிடிக்கிறதுக்குள்ள நம்ம போயிரலாம் மனு” என்று அவனிடம் கெஞ்சினாள்..

 

அபி சாதனாவின் கண்ணை தீர்க்கமாக பார்த்து கொண்டே.. “ நீ என்ன நம்புறியா சனா பேபி” என்று அழுத்தமாக கேட்க…”என்ன உளற்ரிங்க உங்களை நம்பாமலா என்னுடைய கடந்தகாலத்த உன்க்கிட்ட சொன்னேன்.. அதே நம்பிக்கயோட இப்ப என்கூட ஒரு இடத்துக்கு வரணும் வருவியா…? என கேட்க சாதனா அபியை விட்டு எழுந்து நின்று நான் ரெடி.. போகலாமா?” என கேட்க அபி அவளின் நம்பிக்கையில் சந்தோசம் அடந்து, அவளின் கையை இறுக பிடித்து கொண்டு வெளியே வந்தவன்.. சாதனாவிடம்.. “ இப்ப புடிக்கிற உன் கையை எந்த கஷ்டம் வந்தாலும் விடமாட்டேன் பேபி.. உன்னை அணுகிற எந்த துன்பமும் என்ன தண்டிதான் உன்கிட்ட வரும்… ம் கூம் அப்படி வர்ற துன்பத்தை கூட நான் அனுமதிக்க மாட்டேன்..” என்று அவளின் புறங்கையில் முத்தமிட்டு சொன்னவனிடம், 

கண்ணில் கரை காணாத காதலுடன் பார்த்த சாதனாவை… இந்த நாளுக்காக நான் எத்தனை நாள் ஏங்கி இருக்கேன் தெரியுமா பேபி…” என்று அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.. அவனின் முத்தத்தில் சாதனாவின் முகம் செந்தூரமாக சிவந்தது அதை மறைக்க அவனின் தோளிலேயே  தன் முகத்தை மறைத்து கொண்டாள்… 

 அபி சாதனாவை அழைத்துகொண்டு  கார் ஓட்டுநரிடம் முகவரியை சொல்லி  அங்கே செல்லுமாறு கூறியவன்,  சாதனாவிடம் திரும்பி  அவளின் கவனம் தன்னிடம் இருக்குமாறு பார்த்து கொண்டான்..  அவன் சொன்ன இடம் வரவும் முதலில் இறங்கிய அபி.. சாதனாவை இறங்க சொல்ல.. கார் நின்ற இடத்தை பார்த்தவளுக்கு நெஞ்சு திக்கென்று அடித்து கொண்டது…

 

ஏனென்றால் அவர்கள் சென்ற இடம் பிரகாஷின் வீடு.. சாதனா அபியிடம் “இங்… க.. எதுக்கு வந்திருக்கோம்.. ? திக்கி திணறி கேட்க… “வா பேபி சொல்றேன்..”  அவளின் கையை பிடித்து கொண்டு உள்ளே சென்றான்.. அங்க தடுத்த வாட்ச்மேன் அவனை தடுத்தான்.. அபி அவனை ஒரு பார்வை பார்க்க. தானாக வழியை விட்டான்.. உள்ளே நுழைந்தவன்…  அங்கிருந்த சோஃபாவில் சாவகாசமாக அமர்ந்தவன் சாதனாவையும் உட்கார சொல்ல அவள் தயக்கத்துடன் அமர அபி அவளை தன் கை வளைவிற்குள் வைத்து கொண்டான் ஏனோ சாதனாவிற்கு இப்போது ஒரு பாதுகாப்பு உணர்வு வந்தது….அங்கு வேலை செய்து கொண்டிருந்தவரை அழைத்து ”உங்க முதலாளி பிரகாஷ்கிட்ட அபிமன்யூன்னு ஒருத்தர் அவனை பார்க்க வந்திருக்கேன்னு சொல்லுங்க ” என்று சிங்கத்தின் கர்ஜனையுடன் கம்பீரமாக சொல்ல…

 

அவன் குரலுக்கு கட்டுபட்டவர் போல அவனை அழைத்து வர சென்றார்..  பிரகாஷ் அவன் அறையில்  இறையை தவறவிட்ட ஓநாயை போல் கோபத்துடன்  சாதனாவை எப்படி தன் வழிக்கு கொண்டு வருவது என்று யோசித்தபடி.. அங்கும் இங்கும் நடை பழகி கொண்டிருந்தவனை “ ஐயா என்ற வேலக்கரரின் அழைப்பு அவனை தடை செய்ய, ”என்ன” என்று கோபமாக திரும்பியவன் உங்களை பார்க்க யாரோ அப்பு வந்திருக்காங்க.. அபியின் பெயர் அவருக்கு சரியாக உச்சரிக்க வராததால்.. அவ்வாறு சொல்ல “யாரு அப்புவா அது யாரது என்றபடி..” தன் அறையில் உள்ள சி சி டிவி கேமராவை பார்த்தவன்..

 

அங்கு இருந்த அபியை பார்த்தவன் ” இவன் காலையில் பூங்காவில் பார்த்தவனாச்சே இவன் எங்க இங்க வந்தான்..? என்று யோசித்தபடி நன்றாக பார்க்க… அப்பொழுதுதான் சாதனாவும் அவன் அருகில் இருப்பதை பார்த்தான்… “ஓ அப்பு சாருக்கு நம்மளை பத்தி தெரிஞ்சிருக்கு போல அதான் பயந்து போய் சாதனாவை  விட இங்க கூட்டிட்டு வந்திருக்கான்.. சே இது தெரியாம காலையில இருந்து எவ்வளவு டென்சன்..” என்று அபியை பத்தி தவறாக எடைபோட்டவன் சந்தோசத்துடன்..கீழே வந்தான்..

”வாங்க அப்பு சார்..என்ன என்னை பத்தி தெரிஞ்சு சாதனாவ இங்க விட வந்தியா..? நக்கலாக கேட்டவன் பின்பு..”சரி சரி அவளை விட்டுட்டு போ..அவளை இங்க கூட்டிட்டு வந்ததுக்கு.. இந்தா இந்த பணத்தை செலவுக்கு வச்சுக்க..” என்று அபியின் மடியில் பணத்தை போட்டவன் சாதனாவை தொட கையை நீட்ட… அடுத்த நொடி ”அம்மா என்ற அலறலுடன் வலது கையை பிடித்து கொண்டு நான்கு அடி தள்ளி போய் விழுந்தான்.. ஆனாலும் அபி உட்கார்ந்த இடத்தைவிட்டு நகரவில்லை… இவ்வளவு நேரம மிகுந்த பயத்துடன் இருந்த சாதனா… இப்பொழுது தைரியமாக நிமிர்ந்து அமர்ந்தாள்.. அவளுக்கு இருந்த பயமெல்லாம் அபியின் ஒரு அடியில எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது.. 

 

கீழே விழுந்த பிரகாஷ எழ முடியாமல் தடுமாறி எழுந்தவன் “ என் இடத்துல வந்து என்னைவே அடிக்கிறியா..? என்று கோபத்துடன் அபியை அடிக்க வர அதை எளிதாக தடுத்த  அபி,  இப்போது பிரகாஷின் இடது கையை முறித்திருந்தான்..  பிரகாஷ் வலியால் துடிக்க.. “ இது சும்ம சாம்பிள்தான் மிஸ்டர் பிரகாஷ் இனிமேல்தான் உனக்கு இந்த அபிமன்யூ யாருன்னு காட்டறேன்..  இந்த கைகள் தான என் சனா பேபிய தொட்டது.. அதுக்குத்தான்  இப்ப கைய உடச்சேன்..” என்றவன்  ”ஏண்டா இவளை பார்த்தோம், இவ மேல ஆசைப்பட்டோம் என்று ஒவ்வொரு நாளும் உன்ன துடிக்கவைக்கலை..  வைப்பேண்டா ” என்று சாதனாவ காட்டி சொன்னவன்  ”என் பேபி பூ மாதிரிடா அவள அழவச்சுட்டேல்ல நீ.. உன்னோட  நாளை எண்ணிக்க.””  என்று எப்பொழுதும் எதிரிகளை வீழ்த்தும் போது இருக்கும் புன்னகையுடன் சொன்னவன்…

 

சாதனாவிடம் திரும்பி ”போகலாமா பேபி..?” என்று மென்மையாக கேட்டு அவளின் தோளில் கைபோட்டு அழைத்து சென்றான்.. சாதனா அவனையே வைத்தக்கண் வாங்காமல் அவனின் கையணைப்பில் இருந்து அவனையே பர்ர்த்து கொண்டிருந்தாள்.. அவளிடம் ஒட்டியிருந்த கொஞ்சநஞ்ச பயமும் அவளை விட்டு ஓடியது..  இவ்வளவு நாள் ஏதோ அடைத்து கொண்டு மூச்சு விடமுடியாதவள் போல் தவித்து கொண்டிருந்தவளுக்கு, சுதந்திரமாக சுவாசிப்பதுபோல் மனது அவ்வளவு நிம்மதியாக இருந்தது சாதனாவிற்கு.. அபி சாதனா உட்காருவதற்கு காரின் கதவை திறந்துவிட தன்னை ஒரு மகாராணியாக உணர்ந்தாள்… அபி அமர்ந்தவுடன்.. அவன் கை வளைவிற்குள் தன் கையை நுழைத்து.. அவன் தோளில் சுகமாக சாய்ந்து கொண்டாள்…    

அத்தியாயன் 23

அபி பிரகாஷின் வீட்டை விட்டு வெளியேறியதும் ஏதோ பெரும் புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது.. அங்கு வேலை செய்பவர்களுக்கு… அவர்கள் அனைவரும் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்க… “டேய் தடி மாடுங்களா…. உங்க முதலாளிய ஒருத்தன்… அவன் வீட்டுக்கே வந்து அடிச்சுட்டு போறான் எல்லாரும் மரம் மாதிரி வேடிக்கை பார்த்துட்டு இருக்கிங்க….”  என்று அனைவரிடமும் காய்ந்தவன் “கை ரொம்ப வலிக்குது  கையை ஊன்றி எழ முடியலை வந்து தூக்குங்கடா..” வலியில் முணங்கினான்.. 

“இதுக்குத்தான் நாங்க யாரும் அந்த சார்கூட சண்டை போடலை… இல்லன்னா உங்க நிலமைதான் எங்களுக்கும்..” என்று மனதில் நினைத்து கொண்டவர்கள் அவனின் கையை பிடித்து தூக்க “ஐயோ.. அம்மா…டேய் கை ரொம்ப வலிக்குத்துங்கடா.. மெதுவா தூக்குங்க..”என… வேலைக்காரர்கள் பிரகாஷை தூக்கிகொண்டு அவனின் அறையில் படுக்க வைத்தனர்… அவனை வீட்டிற்கு வந்து பார்த்த மருத்துவர்… ரெண்டு கையோட எலும்பும் நல்லா முறிஞ்சிருக்கு.. இது எப்படியும் குணமாக நான்கு மாதங்களாவது ஆகும்..  அப்படியே சரி ஆனாலும், நீங்க கனமானதை எதும் இனிமேல் தூக்க கூடாது.. அப்படி தூக்கினிங்கன்னா உங்களோட கைகளுக்கு நாங்க பொறுப்பல்ல” என்று ஒரு குண்டை தூக்கி அவனின் தலையில் போட்டுவிட்டு சென்றார்..“

 

டாக்டர் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ச்சியானவன்.. அந்த கோபத்தை “சாதனாவின் மேல் திருப்பி.. இதுக்கெல்லாம் காரணம் நீதாண்டி.. ஆள வச்சு என்னை அடிச்சுட்டேல்ல… உன்னை தொட்டா அவனுக்கு கோபம் வருதா…? அவன் கண்ணு முன்னாடியே உன்னை என்ன் செய்றேன்னு பாருடி..” என்று கோபத்தில் கொக்கரித்தான்… வயதான இரண்டு பேரையும், ஒரு சின்ன பெண்ணையும் வஞ்சம் செய்து ஏமாற்றியவன் அபியயையும் அதேபோல் சாதரணமாக எடை போட்டு விட்டான்.. பாவம் அவனுக்கு அபியை பற்றி சரியாக தெரியாமல் போனதுதான் அந்தோ பரிதாபம்…. 

 

இங்கே காரில் வந்து கொண்டிருந்த சாதனா..  ஒன்று பேசாமல் அபியின்ன் கை வளைவிலேயே சாய்ந்தபடி வந்தாள்.. அவளின் அமைதி அபியை உறுத்த “பேபி ஏன் அமைதியா இருக்க..? நான் இப்படி செஞ்சது உனக்கு புடிக்கலையா..? என தயக்கத்தோடு கேட்டான்.. அவனின் கையை மேலும் இறுக்கியபடி… “நான் அப்படி சொன்னேனா..? நான் இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன். அந்த சந்தோசத்தை உங்க தோள்ள சாஞ்சு அனுபவிக்கிறேன்… மத்ததெல்லாம் அங்க காட்டேஜ்ல போய் பேசலாம் இப்ப நீங்களும் அமைதியா வாங்க” அவனிடம் உரிமையாக கட்டளையிட்டாள்.. அபியும் அவளுக்கு தன் மீது கோபம் இல்லை என்பதில் மகிழ்ந்து… “தங்கள் உத்தரவு மகாராணி “ என்றுவிட்டு அமைதியாக வந்தான்.. காட்டேஜ் வந்து இறங்கியவர்கள்.. உள்ளே சென்றனர்… சாதனா அபியிடம்.. “ மனு எனக்கு ஒரு காஃபி போட்டு தாங்க…நேத்து போட்டமாதிரி சூப்பரா…” உரிமையோடு கேடக அபி அவளின் உரிமையான பேச்சில் சந்தோசமாக கிச்சன் சென்றான்.. காஃபி போடுவதற்கு… “(ம்ம்ம் இப்ப வசும்மா மட்டும் பார்க்கணும்.. மவனே உன்ன கிண்டல் பண்ணியே ஒரு வழி ஆக்கியிருப்பாங்க)  

 காஃபி போட்டு வந்தவன் சாதனாவிடம் கொடுக்க, அதை வாங்கி பருகியபடி, அபியிடம் “இப்ப  எனக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா… மனு.. என் நெஞ்சை அழுத்தி கொண்டிருந்த பாரமெல்லாம்…எங்கோ காணாமல் போவது போல இருக்கு.. இப்பதான் புதுசா பிறந்த மாதிரி, ஈஸியா மூச்சு விட்ற மாதிரி இருக்கு..”  என்று தன் உள்ளத்து உணர்வுகளை அவனிடம் கூறியவள்… கண்களை மூடி காற்றை ஆழ்ந்து சுவாசித்தவள்..

 “அந்த பிரகாஷிடம் எனக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கு பிறகு,  எனக்கு பொதுவா ஆண்கள் மேல இருந்த நம்பிக்கை போயிருச்சு.. வேலைக்கு போக ஆரம்பிச்சதும்  நடந்த சில விசயங்கள் அந்த எண்ணத்தை மேலும் வலுவடைய செஞ்சது… உங்க முன்னாடியே அன்னைக்கு ஐந்து பேரும் நடந்ததை பார்த்திங்கள்ள…“ என்று பேசிக்கொண்டே போனவள் திடீரென்று “ஆமா அன்னைக்கு எப்படி சரியான நேரத்திற்கு வந்திங்க..?  என்று குழப்பத்துடன், சந்தேகம் கேட்டாள்.. “அதெப்படி பேபி நான் வராம இருப்பேன்.. என் பேபிமேல எவனாவது கைய வைக்க விட்றுவேணா..?” என்றவன் தினமும் அவள் வருவதை அலுவலக ஜன்னல் வழியாக பார்ப்பதை கூறியவன்.. 

 

“அன்னைக்கு அப்படி பார்த்துட்டு இருந்தப்பதான் உன் முகத்துல பயத்தை பார்த்தேன்.. பார்த்த உடனே அந்த பயத்தை எப்படியாவது போக்கிடனும்னு தான் எதை பத்தியும் யோசிக்காம நீ உள்ள வர்ற வரைக்கும் பொறுமை இல்லாம வாசலுக்கு ஓடி வந்தேன்.. நான பதட்டமா ஓடி வந்ததை ஆஃபீஸ்ல எல்லாரும் பார்த்தாங்க ஆனா அம்மணிதான் அதை கவனிக்கலை.. பிரபு என்கிட்ட கேட்டபிறகுதான்.. நான் என்னை அறியாமலயே ஓடி வந்துருக்கேன்னு தெரிஞ்சது.. அப்பறமும் உன்கிட்ட கேட்டப்ப நீ சொல்ல மாட்ட்டேன்னு சொல்லிட்ட.. சரி நம்ம வழியிலேயே போய் தெரிஞ்சுக்குவோம்னு நினச்சு, நீ செக்ல தப்பா அமௌண்ட எழுதிட்டேன்னு பொய் சொல்லி உங்கிட்ட இருந்து உண்மைய வரவழைத்தேன்..“ என்றவனை “பிராடு” என்று செல்லமாக அவனை திட்டியவள்… பெருமையாகவும் காதலாகவும் அவனை பார்த்தாள்.. நான் இந்த டூருக்கு வரலைன்னா என்ன ஆகிருக்கும்.. மனு.. எவ்வளவு சந்தோசத்தை மிஸ் பண்ணியிருப்பேன்…” என்றவள் 

 

”கடைசி வரைக்கும் இந்த பிரகாஷுக்கு பயந்தே வாழ்ந்திருப்பேன்..     இது எல்லாத்தையும் விட நீங்க எனக்கு கிடச்சு இருக்கிங்க.. வீட்டுக்கு போனவுடனே அம்மாவ இறுக்கி கட்டி புடிச்சு ஒரு முத்தம் கொடுக்கணும்..”  என்றவளை ஏன் என்ற கேள்வியுடன் பார்க்க.. ”இங்க வர தயங்கினப்ப அம்மாதான் எனக்கு தைரியம் சொல்லி அனுப்பினாங்க…” என்றவள்.. (சாதும்மா அதுக்கு முழு காரண்மே இவர்தான் தெரிஞ்சா என்ன பண்ணுவிங்க..?) ”அந்த பிரகாஷ் என்னை பூங்கால்ல பார்த்தப்ப.. என் மனசும் மூளையும் மறத்து போன மாதிரி ஆயிருச்சு… என்னால நகரவே முடியலை… முதல் தடவை அவன்கிட்ட மாட்டுனப்ப.. என் அப்பாவதான் கூப்பிட்டேன்.. 

   

ஆனா இன்னைக்கு ஏனோ உங்க நினப்பு தான் வந்தது..  எப்படியாவது வந்துருங்க மனு…ன்னு மனசுக்குள்ள வேண்டிக்கிட்டே இருந்தேன்.. அவன் என் கைய தொடபோன நொடில  என் பேரை சொல்லி நீங்க கூப்பிட்டவுடனே என் மனம் அடைந்த நிம்மதியும்,  சந்தோசத்தையும் வார்த்தையால விவரிக்க முடியாது மனு… உங்க குரலை கேட்டவுடனே.. எனக்கு சுற்றுபுரம் எதுவும் தோணலை உங்க கைக்குள்ள வரணும்னு தோணுச்சு…  ஏனோ உங்க கைக்குள்ள இருந்தா மட்டும்தான் பாதுகாப்புனு தோணுச்சு.. அதான் எதை பத்தியும் யோசிக்காம உங்க கிட்ட வந்துட்டேன்..” என்று தன் மனதினை அபியிடம் கூறினாள்.. சாதனா கூறியதை கேட்ட அபிக்கு அந்த வானத்தையே வசப்படுத்திய உணர்வு… ஒரு பெண் ஒரு ஆணிடம் வந்து, உன்னிடம் மட்டும்தான் எனக்கு பாதுகாப்பு உண்ர்வு தோன்றுகிறது என்று கூறினால்.. அவள் அவனை எவ்வளவு நம்ப வேண்டும்.. அந்த நம்பிக்கையை சாதனா அபியின் மீது வைத்தாள்… அவனுக்கும் தான் வேற என்ன வேண்டும்…. 

 

”மேடம் ரொம்ப பேசிட்டிங்க மதியம் சாப்பாடு சாப்பிடவேண்டாமா…? உங்களுக்கு பசிக்கலையா..? அவளின் மனதை மாற்றும் பொருட்டு கேலியாக கேட்டவனுக்கு உண்மையிலேயே பசி எடுத்தது… சாதனாவிடம் “எங்கயாவது வெளிய போய் சாப்பிட்டு வரலாமா..? என கேட்க.. “ஏன் நாங்க சமைச்சா சார் சாப்பிடமாட்டிங்களோ..? என சிறிது கோபத்துடன் கேட்டவளை ஆச்சரியாமாக பார்த்து “பேபி நீ சமைக்கபோறியா..? என கேட்டவன்…”நான் சமைச்சதில்லை.. அம்மாவுக்கு உதவிதான் பண்ணிருக்கேன்.. இப்பதான் முதல் முதலா உங்களுக்காக சமைக்கப்போறேன்.. “ என்று ஆர்வமாக கூறியவளிடம் “அப்ப நாந்தான் உனக்கு எலியா..? சிறிது பயத்துடன் கேட்டான்.. “யா அஃப்கோர்ஸ்” என்று பதிலுக்கு அவளும் கேலி பேசினாள்..

 

இப்படியாக கேலியும் கிண்டலுமாக சமயல் செய்தனர்.. அபி அவளுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று.. வெங்காயத்தை கண்கள் கலங்க உறித்து கொடுத்தான்…வெங்காயம் உறித்த கையோடு கண்களை தேய்த்தவனுக்கு கண்கள் எறிய… “சாதனா பதட்டத்தோடு அச்சோ ரொம்ப எரியுதா மனு…? அவனின் கண்களை தொட.. “அச்சோ ரொம்ப எரியுதே… என்ன பண்ணின பேபி மொத விட இப்ப ரொம்ப எரியுது..” என்று கண்களை தேய்த்தான்.. அப்பொழுதுதான் சாதனாவிற்கு மிளகாயை வெட்டியது நினைவிற்கு வந்தது.. பதட்டத்தோடு கையை உதறியவள் “சாரி மனு…பதட்டத்துல மிளகாய வெட்டுன கையோட உங்க கண்ணை தொட்டுட்டேன்.. ரொம்ப எரியுதா..?” அழுகுரலில் கேட்டவளிடம் கோபம் கொள்ளாமல்..

“ ஹே பேபி ஒண்ணும் இல்லடா.. லைட்டா எரியுது அவ்வளவுதான்… ஃப்ரீசர்ல ஐஸ் கியூப் இருக்கும் பாரு அதை எடுத்துட்டு வா..” என்றவன் ”கையை கழுவிட்டு…” என்று சேர்த்து சொன்னான்.. அவள் எடுத்து வரவும் அதை வாங்க கை நீட்டியவனிடம் மறுத்தவள் அவனை சோஃபாவில் அமர வைத்து அவனின் கண்களில் மெதுவாக ஒற்றி எடுத்தாள்.. அபிக்கு லேசாக எரிச்சல் மட்டு பட்டது. ஆனாலும் முழுதாக தீராமல் மூடியிருந்தவன் கண்களில்.. சில்லென்று காற்று பட. அவனுக்கு இதமாக இருந்தது… “பேபி இதேமாதிரியே செய் பேபி ரொம்ப நல்லா இருக்கு..” என்று கண்களை திறக்காமலே கூறினான்.. 

 

 மீண்டும், மீண்டும் அதேபோல் காற்று வர அபிக்கு கண்களில் எரிச்சல் நன்றாகவே குறைந்தது…அதில் கண்களை திறந்தவன் தன் முகத்துக்கு வெகு அருகாமையில் சாதனாவின் முகம் தெரியவும் திகைத்தான்.. அதுவும் அவள் முத்தமிடுவது போல் இதழை குவித்திருந்தது.. அபிக்கு வேறு உணர்வுகளை தோற்றுவித்தது.. இமக்காமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.. சாதனா அவனின் பார்வையில் என்ன கண்டாளோ.. முகம் செந்தூரமாக சிவக்க அவனிடமிருந்து விலக போனவளை.. தடுத்தவன்.. அவளின் கண்களை பார்த்து ”ப்ளீஸ் பேபி” என்றான்.. அவள் நாணத்துடன் தலை குனிய..  அதையே சம்மதமாக எடுத்துக்கொண்டு, 

 

அவளின் முகம் பற்றி.. இதழ் நோக்கி குனிந்தவன்,  அவளின் முகம் பார்க்க.. சாதனா இதழ் துடிக்க கண்களை மூடியிருந்தாள்.. அபி புன்னகையுடன் அவளின் இதழில் முதல் முத்தத்தை பதித்தவனுக்கு அவளின் இதழை விடும் என்னமே இல்லாதவனாக.. மேலும் மேலும் மூழ்க.. சாதனாவிற்கு அவனின் முத்தம் உயிர்வரை சிலிர்த்தது… அவளுக்கு மூச்சு முட்டாமல் இருக்க..ஒரு நொடி விட்டவன் மீண்டும் அவளின் இதழை முற்றுகையிட்டான்.. சாதனாவிற்கு கால்கள் தொய்வது போல் இருக்க.. அவன் சட்டை காலரை இறுக பற்றி கொண்டாள்… தங்கள் உலகத்தில் மூழ்கி இருந்தவர்களை… என்னையும் கொஞ்சம் கவனி என்பது போல் குக்கர் விசில் கொடுக்க.. சட்டென விலகினர் இருவரும்…

 

அபி சாதனாவை வறுத்திவிட்டோமோ.. என்று சங்கடத்துடன் சாதனாவின் முகம் பார்க்க… அவள் அபியை பார்க்க கூச்சப்பட்டு கிச்சனுக்குள் ஓடியவள் அடுப்பை நிறுத்திவிட்டு..அங்கேயே நின்றாள்… அபி அவளிடம் வந்தவன்… மென்மையாக “சனா பேபி உனக்கு என் மீது கோபம் ஏதும் இல்லையே..? தயக்கத்துடன் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தாள்.. ”அவளின் செந்தூர நிற முகம் பார்த்தவன்,  அவளின் மனதை புரிந்து கொண்டான்.. “ஐ லவ் யூ சோ மச் பேபி” என்றவன் அவளை மென்மையாக அணைத்து கொண்டு.. ”கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம ரெண்டு பேரும் தனியா இருப்பது ரொம்ப ஆபத்து பேபி” என்றவனுக்கு பதில் ஏதும் கூறாமல் அவள் மௌனமாக இருந்தாள்… அவளை விட்டு விலகி ”சாப்பாடு ஆயிருச்சா பேபி ரொம்ப பசிக்குது..” என்றான் அவளை இயல்பாக்கும் பொருட்டு..

 

அவன் பசி என்றவுடன் அனைத்தையும் மறந்தவள்… ”இதோ ஆயிருச்சு மனு.. ஒரு ரெண்டு நிமிஷம் பொறுத்துக்குங்க..” என்றவள்.. வேகமாக அனைத்தையும் எடுத்து டேபிளில் வைத்தவள்.. அபியை அழைக்க.. அவன் போனில் எதையோ தேடிக்கொண்டிருந்தான்.. “என்ன மனு பசிக்குதுன்னு சொல்லிட்டு.. போனை பார்த்துட்டு இருக்கிங்க…? அதை மொத இங்க குடுங்க..”  என்று அவனை அதட்ட.. “பொறு பேபி இங்க  பக்கத்துல எதாவது நல்ல ஆஸ்பத்திரி இருக்கான்னு பார்க்கிறேன்..” என்றவனிடம் “ஏன் மனு என்னாச்சு.. உடம்பு ஏது சரியில்லையா…” என்றபடி அவனின் நெற்றியை தொட்டு பார்த்தாள்..

 

 “அதெல்லாம் ஒண்ணும் இல்லடா இன்னைக்கு நீ முதன்முதலில் சமையல் பண்ணிருக்க… சோதனை எலியா நான் கிடச்சிருக்கேன்.. அதான் முன்னெச்சரிக்கையா ஆஸ்பத்திரிய தெரிஞ்சு வச்சுக்கலாம்ன்னு போன் பார்த்துட்டு இருக்கேன்..” என்றவனை வெட்டவா.. குத்தவா என்ற ரீதியில் அபியை பார்த்து கொண்டிருந்தாள்… இல்லை இல்லை முறைத்து கொண்டிருந்தாள்  “என் சாப்பாட்ட குறை சொல்றிங்களா..? உங்களை…” கோபத்துடன் அவனை நெருங்கியவள்.. பக்கத்தில் இருந்த தலையனையை எடுத்து,  அவனை அடிக்க போக “பேபி நோ வன்முறை.. மீ பாவம்..” என்றுவிட்டு சோபாவை சுற்றி ஓடினான்..

 

 “மனு ஒழுங்கா நில்லுங்க.. இல்லை சேதாரம் உங்களுக்குத்தான்..” என்றபடி அவனை துரத்தினாள்.. சில நிமிடம் ஓடிய அபி, அவளிடம் வேண்டுமென்றே மாட்டி கொண்டான்.. சாதனா அவனை தலையணையில் அடிக்க, தன்னவளின் அடியை சுகமாக புன்னகையுடன் வாங்கி கொண்டவன் ஒரு கட்டத்தில்  “போதும் பேபி கை வலிக்க போகுது வா சாப்பிடலாம்..” என்றபடி அவளை உணவு மேஜைக்கு அழைத்து சென்றான்.. 

   தட்டில் உண்வை எடுத்து ஒரு வாய் உண்டவன் முகம் அஷ்டகோணலாகியது.. அவனின் முகத்தை ஆர்வமாக பார்த்து கொண்டிருந்த சாதனாவிற்கு ஏமாற்றமாக இருந்தது.. “சாப்பாடு நல்லா இல்லையா..?” பாவமாக கேட்டாள்.. “பொறு பேபி முதல்ல சாப்பிட்டது அவசரமா சாப்பிட்டேனா அதனால ருசி தெரியலை…” என்றவன்  எங்க அந்த சாம்பாரை கையில கொஞ்சம் ஊத்து பேபி.” என்றவன் அவள் ஊற்றவும் அதை குடித்துவிட்டு .”ம் ஏதோ சுமாரா இருக்கு இன்னும் கொஞ்சம் சாம்பார் குடு பேபி “ என்று மீண்டும் ஆர்வமாக கேட்டான்..அவனின் ஆர்வத்திலேயே அவனின் பசியும், சாப்பாட்டின் ருசியும் தெரிந்து விட்டது சாதனாவிற்கு… 

 

அவனின் தலையில் லேசாக குட்டியவள் “சாப்பாடு நல்லா இருக்குன்னு ஒருவார்த்தை சொன்னாதான் என்னவாம்..” என்று முணங்கியபடி தனக்கும் ஒரு தட்டு எடுத்தவளை தடுத்தவன்… அவளுக்கு உணவை ஊட்ட.. மறுக்காமல் வாங்கி கொண்டவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.. அதை பார்த்தவன் பதட்டத்துடன் “என்னாச்சு பேபி சாப்பாடு ரொம்ப காரமா இருக்கா..?” என்றவன் அவளின் கண்ணீரை துடைத்து விட “எங்கப்பா கையால சாப்பிட்ட மாதிரி இருக்கு மனு..” என்றவள் அவன் அருகே வந்து அவனின் தோள் சாய்ந்து.. அவன் ஊட்டிய உணவை வாங்கி கொண்டாள்.. உண்டு முடித்தவர்கள் சிறிது நேரம் தோட்டத்தில் பேசிகொண்டே நடந்தார்கள்..

அபி அங்கிருந்த பெஞ்ச்சில் அமர்ந்து கொள்ள சாதனா… அங்கு தோட்டத்தில் இருந்த பூக்களில், தேன் எடுக்க வந்த பட்டாம்பூச்சியை பிடிக்க துரத்தி கொண்டிருந்தாள். அது அவளின் கையில் சிக்காமல் கண்ணாமூச்சி ஆட.. இவளும் விடாமல் அதை துரத்தினாள்.. இதை எல்லாம் அபி ரசித்து கொண்டிருந்தான்.. சாதனாவின் குறும்புத்தனமும்,  கலகலப்பும் அவளிடம் மீண்டும் வந்தது… 

 

சுற்றிபார்க்க சென்றவர்கள்  அனைவரும் வந்துவிட.. மது சாதனாவிடம் வந்து “என்னாச்சு சாதனா ஏன் பாதியிலேயே வந்துட்ட.. ? என்று கேட்க அபி சாதனாவிடம் ”உள்ள போய் பேசுங்க” என்றபடி பிரபுவை நோக்கி சென்றான்.. அப்பொழுதுதான் மது, சாதனாவின் முகத்தை நன்றாக பார்த்தாள்.. பார்த்தவள் திகைத்தாள்… “சாதனா நீ இன்னைக்கு செம்ம அழகா இருக்கடி… என்னடி விசயம் அபி சார் உங்கிட்ட காதல சொல்லிட்டாரா..?“ என்று ஆர்வமாக கேட்டவளை வியப்புடன் பார்த்தவள் ”உனக்கு எப்படி தெரியும்..?” என கேட்க… ”ஆமா இது சிதம்பர ரகசியம் பாரு…” என்று சாதரண்மாக கூறியவள்… “எப்ப பஸ்ல அவர் உன் பக்கம் உட்கார்ந்தாரோ, அப்பவே எனக்கு சந்தேகம் வந்திருச்சு…ஒவ்வொரு விசயத்திலயும் அவர் உன்மேல காட்டின, அன்பும், உன் கால்ல அட்டை கடிச்சப்ப காட்டின, அக்கறையும் என் சந்தேகத்தை உறுதி ஆக்கிருச்சு…” என்றவள்.. “சொல்லுடி என்ன ஆச்சு ஆண்களை கண்டாலே ஒதுங்கி போன நீ எப்படி அபி சாரோட காதலை ஏத்துக்கிட்ட..” என மீண்டும் ஆர்வம் தாங்காமல் கேட்டவளிடம்.. 

 

சாதனா “மது நான் ஏன் ஆண்களை கண்டால் ஒதுங்கி போனேன்னு தெரியுமா..? என்று கேட்டவளிடம்.. “தனக்கு நடந்த விசயங்களை கூறியவள்.. இன்று பூங்காவில் நடந்ததையும்… அதற்கு அபி பதிலடி கொடுத்ததையும் கூறினாள்.. மது சாதனாவின் கடந்த காலத்தை கேட்டவள் உள்ளுக்குள் துடித்து போனாள்… சாதனாவை இறுக அணைத்து கொண்டு..” நீ ஆண்களை கண்டால் ஒதுங்கி போனப்ப நான் உனக்கு எதாவது காதல் தோல்வி,  இல்ல வேறயாராவது பாதிக்க பட்டவங்களை பார்த்துதான் நீ அப்படி இருக்கேன்னு நினச்சேன்.. ஆனா நீ நேரடியாவே பாதிக்க பட்டிருப்பேன்னு கொஞ்சம் கூட நினக்கலடி.. ஒவ்வொரு நாளும் நீ எவ்வளவு வேதனைய அனுபவிச்சிருக்க…?” என்று வேதனையுடன் கண்ணீர் சிந்தினாள்.. அந்த உண்மை தோழி…. பின்பு அபியை பற்றி ”அபி சார் ரொம்ப கிரேட் இல்லடி…” என “நிச்சயமா” என்று பெருமையுடன் ஒத்துக்கொண்டாள் சாதனா   

 

ஒரு வழியாக மதுவை சமாதானம் செய்த சாதனா..அவளின் மனதை மாற்றும் பொருட்டு.. “இன்னைக்கு எங்க எல்லாம் சுத்தி பார்த்திங்க..? என கேட்க.. பேச்சு அப்படியே மாறிவிட்டது… இங்கே அபி பிரபுவிடம் வந்தவன்… சில விசயங்களை கூறி இது யாருக்கும் தெரிய கூடாது முக்கியமா சாதனாவிற்கு தெரிய கூடாது என்றவன் உள்ளே சென்றான்.. அதிகாலையில் ஊருக்கு திரும்புவதால் அனைவரையும் சீக்கிரமாக அபி உறங்க சொல்ல… அதை மறுத்தவர்கள்.. “இதுமாதிரி ஒரு அழகான் டூர் இன்னும் எப்போ கிடைக்குமோ… தெரியாது.. அதனால இன்னைக்கு எல்லாரும் வெளிய கேம்ப் பையர் வச்சு கொஞ்ச நேரம் பேசலாம் இல்லன்னா விளயாடலாம்.. “ என்று ஒருசேர கூற அபி சாதனாவை பார்த்தன் அவள் சம்மதமாக தலையாட்டவும்.. அபியும் ஒத்துக்கொண்டான்..   

 

வெளியே அழகான கேம்ப் பையரை உருவாக்கியவர்கள் அனைவரும் குளிருக்கு இதமாக ஸ்வெட்டரோ, இல்லை சால்வையோ அணிந்திருந்தவ்ர்கள்.. அந்த நெருப்பை சுற்றி உட்கார்ந்திந்தார்கள்… சாதனா மேடம்தான்  அரகுறை மனசோட கிளம்பி வந்தவங்களாச்சே… சோ அம்மணி எதுவும் கொண்டு வரவில்லை.. குளிரில் நடுங்கியவளை மது “என்னத வேனா போட்டுக்கிறியா.. நீ ஸ்வெட்டர் எடுத்துட்டு வரலைன்னு எனக்கு தெரியாதுப்பா.. இல்லன்னா உனக்கும் சேர்த்து கொண்டு வந்திருப்பேன்”  என்றவளிடம்… “பரவாயில்லடி இருக்கட்டும் இதுவும் கூட நல்லாதான் இருக்கு..”என்று சிறிது நடுங்கி கொண்டு கூறியவளின் தோளில் கனமான சால்வையை போர்த்திவிட்டது ஒரு வலிய கரம்.. 

 

அந்த கரத்திற்கு சொந்தகாரனை சந்தோசத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.. அவன் யாருக்கும் தெரியாமல் கண்ணடித்து குறும்புடன் சிரிக்க சாதனாவிற்குத்தான்.. வெக்கம் பிடுங்கிதின்றது.. மது இவை அனைத்தையும் சந்தோசத்துடன் பார்த்திருந்தாள்… விளையாட்டு ஆரம்பமாக.. அந்தாக்ஷரி போல் பாட்டு பாடி ஆட்டம் போட்டு அனைவரும் கால்லூரி காலத்திற்குள் சென்றுவிட்டார்கள்.. அந்த இடமே ஒரே கலகலப்பாக இருந்தது… ஆடியரகளையும் பாடியவர்களையும் அனைவரும் கைதட்டி உற்சாக படுத்தினார்கள்…இறுதியாக.. கடைசி டச்  சிகரம் வைத்ததுபோல் என்பாரகளே.. அதுபோல் சாதனாவை அனைவரும் பாட சொல்ல…

 

சாதனா அபியை பார்க்க… எப்பொழுதும் முகத்தில் இருக்கும் குறும்புடன் அவளை பார்த்து கண்சிமிட்ட… அவளறியாமலே

கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன்
கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன் கண்ணபெருமானே
கண்களுக்கு நன்றி சொன்னேன் கன்னி இள மானே
கங்கைக்கரை காற்றைக் கேளு கண்ணபெருமானே
காதல் செய்த காலம் எல்லாம் காதில் கூறும் தானே
கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன் கண்ணபெருமானே
 

சொல்லடி நீ ப்ரிய சினேகிதி நீ
இள மனம் எனும் மலர்வனம் துளிர் விட
தினம் தினம் அவன் இங்கு வருவானா
இனியும் ஒரு அறிமுகமா ? இருவருமே புதுமுகமா ?
அவன் இங்கு வருவானா ? தோழி அடைக்கலம் தருவானா ?
ஈச்சம்பூவை ஈரக்காற்று கூச்சம் தீர கூடிடும் இரவினில்
அவன் இங்கு வருவானா ?
கண்ணா மழை வண்ணா  கண்ணா மழை வண்ணா
என செம்மாங்குயில் போல் கூவுகின்றேன் 

 கண்ணில் உன்னை
 கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன் கண்ணபெருமானே
கண்களுக்கு நன்றி சொன்னேன் கன்னி இள மானே
கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன் கண்ணபெருமானே 

தொட்டகுறை முன்பு விட்டகுறை
இன்று தொடங்கிட தொடங்கிட
தொடர்ந்திட தொடர்ந்திட புது சுகம் அரும்பாதோ
புயல் அடித்தால் நிலவணையும்
மழை அடித்தால் மலை கரையும்
உனக்கிது தெரியாதா ? கண்ணா உறவுகள் திரும்பாதா ?
மண்ணில் காதல் மாய்ந்ததென்று பார்த்ததில்லை
பூமியில் அதற்கொரு கல்லறை கிடையாது
உன்னை இங்கு என்னை உன்னை இங்கு என்னை
என்றும் ஒன்றாய் சேர்த்த காதல் வாழ்க

பிறவி உனக்காக எடுத்த கிளி
மனதை உனக்காக கொடுத்த கிளி
இனியும் தனியாக தவித்த படி
இருக்க விடலாமோ தலைவன்மடி…. 

என்று உருகி பாட.. அனைவரும் “ஹே…….. கை தட்டி ஆரவாரம் செய்தார்கள்… கேட்டு கொண்டிருந்த அபிக்கு பாடிய அவள் இதழ்களுக்கு தன் இதழ்களால் பரிசுதரவேண்டும் போல் பேராவல் எழ சுற்றுபுரம் உணர்ந்து… தன்னை மிகவும் கட்டுப்படுத்தி கொண்டான்… பாடி முடித்தவுடன் சாதனா அபியை பார்க்க… அவனின் பார்வயில் பாவை அவளின் முகம் செங்கொழுந்தாக மாறி இருந்தது… அனைவரும் உறங்க செல்ல, மதுவுடன் சென்ற சாதனாவை கண்களால் போகாதே என்று ஜாடை செய்ய அதை புரிந்து கொண்டவள்… மதுவை முன்னே விட்டு அவள் பின்னே மெதுவாக சென்றவள் மது அறைக்கு செல்லவும் வேகமாக.. அபியிடம் வந்தவள்.. ”என்ன மனு… எதுக்கு என்ன வரசொன்னிங்க..? கேட்கும்முன்னே அபியின் இறுக்கமான அணைப்பில் இருந்தாள்..

சாதனா திகைத்து அவனை பார்க்கும்போதே,  சில நொடிகளில் அவளை விலக்கியவன் “இதுக்குத்தான் வர சொன்னேன்.. பேபி நாம் ஊருக்கு போனவுடனே நம்ம வீட்டுல சொல்லி கலயாணம் செஞ்சுக்கலாம்…” என்று வளை உள்ளே அழைத்து சென்றவன்.. அவளின் நெற்றியில் முத்தமிட்டு ”குட்நைட் பேபி போய் தூங்கு” என்று அவளை அனுப்பி வைத்தான்… அதிகாலையில் அனைவரும் குன்னூரிலிருந்து கிளம்பினர்… இந்த சுற்றுலா அபிக்கும், சாதனாவிற்கும் மறக்க முடியாத இனிமையான நிகழ்வுகளை நடத்தி கொடுத்தது…

 

குன்னூர் என்றாலே பயந்து கொண்டிருந்த சாதனாவை, வலுக்கட்டாயமாக வரச் செய்து..அவளின் அந்த பயத்தை போக்கியது மட்டுமல்லாமல்… சாதனாவின் இயல்பையும் மீட்டெடுத்தான் அபி.. வரும்பொழுது தனிமை உணர்வில் தவித்தவளை தன் அன்பாலும், காதலாலும் அவளை திக்குமுக்காட செய்த தன் மன்னவனின் தோளில் சுகமாக தூங்கி கொண்டு வந்தாள்… அந்த மகாராணி…..

அத்தியாயம் 24

சுற்றுலா முடிந்து அனைவரும்… ஊர் திரும்பினர்… அனைவரும் அலுவலகத்தில் இருந்தே சென்றதால், அபி அனைவரையும் அலுவலகத்திலேயே இறக்கிவிட சொல்லிவிட.. அங்கேயே இறங்கி கொண்டனர்… அங்கிருந்தே அனைவரும் அவரவர் வீட்டிற்கு செல்ல, மதுவும் தனது டூ வீலரை எடுத்து வந்ததால்.. சாதனாவை வீட்டில் விடுவதாக அழைத்தாள்.. சாதனா பதில் சொல்வதற்கு முன் அபி முந்திகொண்டு..

“நானே சாதனாவ வீட்ல விட்டர்றேன்..”என்றான்.. 

மது சாதனாவை பார்த்து குறும்பாக கண்சிமிட்டிவிட்டு அவளிடம் விடை பெற்றாள்.. அபி சாதனாவை தன் காரில் அழைத்து சென்றான்.. அவர்களுக்கு முதன் முதலில் சாதனா அவனுடைய காரில் ஏறுவதற்காக அவன் அவளுடன் வழக்கடித்தது நியாபகம் வர  இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பின்பு வாய்விட்டு சிரித்தனர்…. “அம்மணிய கார்ல கூட்டிட்டு போறதுக்கு எவ்வளவு கெஞ்ச வேண்டி இருக்கு..” என்று கேலிபேச..சாதனா புன்னகையுடன் 

“அப்ப என் மனுவை பத்தி சரியா தெரியாதே..”  என்றவளிடம் 

“இப்ப தெரிஞ்சிருச்சா..?” என கேட்க  

”இப்பவும் தெரியாது… ஆனா நம்பிக்கை இருக்கு” என்றவளை.. ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தவன்..அவளின் கையை லேசாக ஒருமுறை அழுத்திவிட்டு காரை செலுத்தினான்..

சாதனாவின் வீடு வரவும் அவளை இறக்கிவிட்டவன் கூடவே தானும் இறங்கி..அவளுடன் நடந்தான்.. கேள்வியாக பார்த்தவளிடம் “உங்க அம்மா, என்னை நம்பி உன்னை அனுப்பினாங்க.. அவங்களுக்கு ஒரு நன்றி சொல்லிட்டு, போயிட்றேன்.” என்று. மங்கையிடம் சொல்லிவிட்டே சென்றான்..சாதனாவின் மலர்ந்த முகமே அவருக்கு விசயத்தை சொல்லியது… மங்கை சாதனாவிடம் 

“சாதும்மா தம்பிக்கு குடிக்க எதாவது கொண்டுவாடா..” என்று அவளை உள்ளே அனுப்பிவிட்டு.. அபியிடம்  “ தம்பி அங்க ஒண்ணும் கவலை பட்றமாதிரி எதும் நடக்கலையே..” என்று விசாரிக்க.. ”அதெல்லாம் ஒண்ணும் இல்லை அத்தை… சொல்ல போனா சாதனா ரொம்ப சந்தோசமாதான் இருந்தா…: என்றவன் அவளின் மன மாற்றத்தையும், தான் எடுத்த வீடியோவையும் போட்டோவையும் மங்கைக்கு காட்டிவிட்டு, குன்னூரில் நடந்த நிகழ்வுகளை சுருக்கமாக கூறியவன், அவரின் மனது கஷ்டப்படும் என்று பிரகாஷை பற்றின விசயத்தை மறைத்துவிட்டான்..  

அவர்கள் பேசிக்கொண்டிருக்க சாதனா அபிக்கு காபி கொண்டுவந்து கொடுக்க.. அதை வாங்கி குடித்தவன்…சாதனாவிடம் “மிஸ் சாதனா நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா.. என்னோட காருக்குள்ள இருக்கிற பேக்ல ஒரு கிஃப்ட் இருக்கும் அதை கொஞ்சம் எடுத்துட்டு வரமுடியுமா…? என போலி பணிவுடன் கேட்க… “கொஞ்சம் எப்படி சார் எடுத்துட்டு வரமுடியும்… நான் முழுசாவே எடுத்துட்டு வாறேன்…” என்று சிரிப்புடன் அவனை கேலி பேசியவள் அவன் சொன்னதை எடுக்க.. காருக்கு சென்றாள்.. சாதனா பேசிவிட்டு சென்றதை சந்தோச திகைப்புடன் பார்த்து கொண்டிருந்த மங்கையை அழைத்தவன்..

”என்ன அத்தை இந்த சாம்பிள் போதுமா..?” என்று சிரிப்புடன் கேட்ட அபியை, கையடுத்து கும்பிட்டவரை அவசரமாக தடுத்தவன் ”அச்சோ என்ன அத்தை நீங்க… சாதனாவோட மாற்றத்தை பார்த்து சந்தோசப்படுவிங்கன்னு நினச்சா இப்படி அழறிங்களே..? மனத்தாங்கலுடன் கேட்டவன் அவரின் கண்ணீரை உரிமையாக துடைத்துவிட்டவன்…. அவரிடம் “உங்க கண்ணுலையும் சரி, சாதனாவோட கண்ணுலையும் சரி சந்தோசத்துல கூட இனிமேல் கண்ணீர் வரக்கூடாது.. எனக்கு வசும்மா எப்படியோ அதே மாதிரிதான் நீங்களும்..” என்றுவிட்டு..  அப்பறம் ஒரு முக்கியமான விசயம் அத்தை” என்றவனை 

“ என்ன தம்பி?”

“இதுவரைக்கும் சாதனா உங்ககிட்ட எந்த விசயத்தை மறைத்திருக்க மாட்டான்னு நினைக்கிறேன்.. அதே மாதிரி என் மேல உண்டான காதலையும் உங்க கிட்ட கண்டிப்பா சொல்லுவா…” என்று ஒரு நொடி பேச்சை நிறுத்தியவனை. மலர்ந்த முகத்துடன் “அப்படி சொன்னவுடனே சந்தோசமா சம்மதம் சொல்றேன் தம்பி” என்ற மங்கையை “அச்சோ காரியமே கெட்டுச்சு… அப்படி மட்டும் எதுவும் சொல்லிறாதிங்கத்தை..” என்று பதட்டத்துடன் தடுத்தவனை குழப்பத்துடன் பார்த்தவர்..” ஏன் தம்பி” என கேட்க..

 அபி “சாதனாவுக்கு அடுத்தவாரம் பிறந்தநாள் வருதுல்ல அப்ப அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்னு திட்டம் போட்டிருக்கேன்..சோ நீங்க என்ன பண்றிங்க சாதனா என்னை பற்றி எதாவது சொல்ல வந்தா..அதை கேட்காதமாதிரி.. போயிருங்க…மற்றதை நான் பார்த்துக்கறேன்..” என்றான்.. அவர்கள் பேசிக்கொண்டிருக்கு போதே சாதனா வந்துவிட, அவள் எதுவும்  கொண்டு வராமல் வெறும் கையோடு வந்து இருக்க.. “ என்ன சாதனா நான் சொன்னதை எடுத்துட்டு வராம சும்மா வந்திருக்க,,? என காரணம் தெரிந்து கொண்டே கேட்டான்…

பின்ன அவனுக்கு மங்கையிடம் கொஞ்சம் தனியாக பேசவேண்டியிருந்தது.. அதனால்தான் அந்த கிஃப்ட் பார்சல் இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்தை மாற்றி கூறினான்… ”நீங்க சொன்ன பேக்ல எதுவும் இல்லை..” என கூற.. “என்ன இல்லையா அங்கதான வச்சேன்..” என தனக்குள்ளே யோசிப்பது போல் நடித்தவன்..” ”அச்சோ  அதை கார் பின்னாடி வச்சிட்டு உங்கிட்ட மறந்து பேக்ல இருக்குன்னு சொல்லிட்டேன்…  நானே போய் எடுத்துட்டு வ்ர்றேன்” என்ற் எடுத்து வந்தவன், மங்கைக்கு ஒரு அழகிய சால்வையை பரிசாக அளித்தான்…” பின்பு இருவரிடமும் விடை பெற்றவன் சாதனாவை கண்களால் வெளியே வருமாறு அழைத்து விட்டு சென்றான்…..

அவளும் மங்கையிடம் “அவரை அனுப்பிட்டு வர்றேன்மா.. “ என்று அபியின் பின் சென்றாள்… சாதனா அபியிடம் “என்ன சார் உங்க அத்தைக்கு சால்வை எல்லாம் கொடுத்து ஐஸ் வக்கிறிங்க போல..? என்ற் கேலி பேச.. “இல்லை பேபி அவங்க உன்னோட அம்மாங்கிறதுக்காக இதை தரலை.. ஆண்ட்டி மேல எனக்கு ரொம்பவே மரியாதை இருக்கு… தன் கணவன் இறந்த அந்த நேரத்தலையும், உன்ன பத்தி யோசித்து,, அந்த பிரகாஷ்கிட்ட இருந்து உன்ன காப்பாத்தி.. வேற ஊருக்கு கூட்டிட்டு வந்து உன்னை படிக்க வச்சு, இந்த நிலைமைக்கு ஆளாக்கி இருக்காங்கன்னா அவங்க மனதளவில் எவ்வளவு தைரியமா இருக்கணும்… அவங்களோட இந்த மன உறுதிக்குத்தான்.. அந்த பரிசு… வேற விலை உயர்ந்த பரிச ஆண்ட்டிக்கு கொடுத்தா அதை கண்டிப்பா வாங்க மாட்டாங்க.. அதான்.”  என்றவனை பெருமை பொங்க காதலோடு பார்த்தாள்..

”என்ன மேடம் இப்படி பார்த்திங்கன்னா  அப்பறம் நான் பொது இடம்னு கூட பார்க்க மாட்டேன்.. “ என்றவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு நொடியில் அவள் கண்ணத்தில் இதழ் பதித்து விலகினான்… அவனி செயலில் ஒரு நொடி திகைத்து நின்றவள் தன்னை சுதாரித்து கொண்டு உள்ளே பார்க்க… மங்கை அங்கே இல்லாதது கண்டு… நிம்மதி பெருமூச்சு விட்டவள்.. அபியை முறைத்து பார்த்து.. அவன் முதுகில் நன்றாக மொத்தினாள்.. எப்பொழுதும் போல் அவளின் அடியை புன்னகையுடன் வாங்கி கொண்டவனை “ஃப்ராடு” செல்லமாக திட்டிவிட்டு.. சரி அம்மா தேடுவாங்க நான் உள்ளே போறேன்.. என்றவளை ஒரு ”நிமிஷம் பேபி” என்று நிறுத்தியவன்.. 

 ஆண்ட்டிக்கிட்ட பிரகஷை பார்த்ததை பத்தி எதுவும் சொல்ல வேண்டாம்…” என்றவனிடம் ”ஏன் “ பார்வையில் கேட்க.. “அவங்க இப்பதான் கொஞ்சம் சந்தோசமா இருக்காங்க… அத எதுக்கு கெடுக்கணும்..” என்று சொன்னவனிடம் கண்ணை மூடிக்கொண்டு தலையாட்டினாள்… அவன் குழப்பத்தோடு “ஏன் பேபி கண்ணை மூடிட்டு பேசற..?” என்றவனிடம்.. “ஆமா நீங்க பேசற விசயங்கள் எல்லாத்துக்குமே  என் கண்ணு உங்களை காதலா பார்க்குது.. அத பார்த்துட்டு மறுபடியும் நீங்க முத்தம் கொடுத்துட்டிங்கன்னா.. அதான் எதுக்கு வம்புன்னு கண்ணை மூடிட்டு பேசறேன்…” என்றவளை கண்களில் குறும்பு மின்ன பார்த்தவன்..

” நீ சரியான பேபியேதான்..” என்றவன் மீண்டும் அவள் கண்ணத்தில் இதழ் பதித்து விலக.. படக்கென்று கண்ணை திறந்தவளிடம்… “ ஒ கே பேபி பாய்..” அவள் ஏதும் திட்டும் முன் ஓடி போய்விட்டான்.. அவன் செல்வதை பார்த்து கொண்டிருந்தவள் “ஃப்ராடு“ என்று எப்பொழுதும் போல் திட்டியவளின் இதழ் ஒன்று சொல்ல… கண்கள் வேறு சொன்னது.. முகத்தில் உறைந்த புன்னகையுடன் உள்ளே வந்த மகளை மங்கை மனதில் சந்தோசித்து.. வெளியே கவனியாதவர் போல் இருந்து கொண்டார்…  சாதனா மங்கையிடம் திருப்பதி சென்று வந்ததை பற்றி விசாரித்தவள் வாசுகியை பற்றியும் விசாரித்து கொண்டாள்……

சாதனாவை இறக்கிவிட்டு வீட்டிற்கு வந்த அபியை வாசுகி ஆர்வம்  தாங்காமல் வாசலிலேயே காத்திருந்து அவனை வரவேற்று… “டேய் அபி கண்ணா குன்னூர் பிளான் என்ன ஆச்சுடா..? உன் பேபி மனசு மாறிட்டாளா…? நான் போன் போட்டாலும் எடுக்க மாட்டிங்கற.. நீயும் எனக்கு போன் போடலை.. சாதனாவோட போனும் எடுக்கலை… அங்க என்னதாண்டா நடந்துச்சு..?” என்று வரிசையாக கேள்வி கேட்டவரை புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தவன்… “ஏம்மா இப்பதான் நா்  ஊர்ல இருந்தே வர்றேன்.. என்னைய பார்த்து கிட்டத்தட்ட மூணு நாள் ஆகப்போகுது.. எப்படி இருக்கேன்னு ஒரு வார்த்தை கூட கேட்காம.. நீங்க ஏதேதோ கேட்டுட்டு  இருக்கிங்க… இவ்வளவுதான உங்க பாசம்..” என்று அவரை கேலி பேச அதில் கடுப்பான வாசுகி அவனை முறைத்துப் பார்த்தார்,, இவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பாட்டியும் தனசேகரும்… ”ஆரம்பிச்சுட்டாங்கடா இவங்க சண்டையை..” என்று விட்டு “ஏன் வாசு அபியே இப்பதான ஊர்ல இருந்து வந்திருக்கான்.. அவனை முதல்ல வீட்டுக்குள்ள விடும்மா.. அவன் ரெஃப்ரெஷ் ஆகி வந்தவுடனே  அங்க என்ன நடந்துச்சுன்னு சொல்லிருவான்… அவனுக்கு எங்களை விட நீதான க்ளோஸ்.. சோ கண்டிப்பா உங்கிட்டதான் முதல்ல சொல்லுவான்..” என்று வாசுகியை சமாதானம் செய்தார் அவர் கணவர்………. 

”அவர் சொன்னதுனால உன்னை விட்றேன் உனக்கு அரை மணி நேரம்தான் டைம்.. ஒழுங்கா ரெஃப்ரெஷ் ஆகிட்டு வந்து என்ன நடந்ததுன்னு என்கிட்ட சொல்லணும்” என்று அவனை மிரட்டி உள்ளே விட்டவர் அவனுக்கு பிடித்த மாலை சிற்றுண்டியை செய்ய கிச்சன்னுக்குள் சென்றார்  சொன்னது போலவே அரமணி நேரத்தில்  ரெடியாகி வந்த அபிக்கு டிபனை கொடுத்தவர்.. அவன் உண்ணும் வரை அமைதியாக இருந்தார்..

அபி நிதானமாக சாப்பிட்டு அவரின் பொறுமையை சோதித்தவன்..கை கழுவிவிட்டு.. அன்னையின் அருகில் வந்து அமர்ந்தவன் “இப்ப கேளுங்கம்மா உங்களுக்கு என்ன தெரியணும்..? அங்க என்ன நடந்ததுன்னுதான. என்று விட்டு குன்னூரில் நடந்த நிகழ்வுகளை அனைவரிடமும் கூறியவன் பிரகாஷ் பற்றியும் அவன் சாதனாவிடம் நடந்து கொண்டதையும், அதற்கு தான் அவன் கையை உடைத்ததையும் கூறினான்…. “ம்மா சாதனா ரொம்ப பயந்து இருந்திருக்காம்மா.. அந்த பயத்த வெளிக்காட்டிக்காம இருக்கத்தான் தனக்குள்ளயே ஒரு வட்டம் போட்டு வாழ்ந்திருக்கா…இப்ப அந்த வட்டத்தை விட்டு வெளிய வந்திருக்கா.. மறுபடியும் அதுக்குள்ள அவ போககூடாதுன்னா பிரகாஷ் பத்தின பயத்தை அவளுக்கு முழுதா போக்கணும்.. என்று தீவிரத்தோடு பேசிய மகனை பெருமை பொங்க பார்த்தார்கள் அவனை பெற்றவர்கள்…

சாதனாவின் மன மாற்றத்தை கேட்டவர்களுக்கு மிகுந்த சந்தோசமே… தன் மகன் சொன்னதை செய்து காட்டியதில் அவர்களுக்கு பெருமையே… வாசுகி அபியை பெருமையுடன் பார்த்து அவனின் நெற்றியில் முத்தமிட்டார்…”உன்ன நினச்சா எங்களுக்கு ரொம்ப சந்தோசமாவும், பெருமையாகவும் இருக்கு அபி… என்று கூறியவர்.. “ உன் பேபிதான் உன் காதலை ஏத்துக்கிட்டாள்ள பின்ன என்ன.. நாந்தான் உன் அம்மான்னு உண்மைய  சொல்லிட்டு வர்ற முகூர்த்ததிலேயே கல்யாணத்தை நடத்திரலாம் என்றவரிடம்… அபி, மங்கையிடம் சொன்னதையே வாசுகியிடமும் கூறினான்… அதை கேட்டவர்கள்,,, எல்லாம் முடிஞ்சு சுபம்னு போட்ற நேரத்துல, மறுபடியும் உன்னோட விளையாட்ட ஆரம்பிச்சுட்டியா ” என்றவர்களை.. என்னம்மா செய்றது… இன்னும் இந்த பிரகாஷ் பையன் இருக்கானே அவன நான் எதாவது செய்யணும்னு மக்கள் ரொம்ப ஆர்வமா இருக்காங்க…” சோ அவன ஒரு வழி பண்ணனும் அதுவரைக்கும் என் பேபிய நான் லவ் பண்ணிக்கிறேன்…” என்றுவிட்டு..சென்றான்,,

வாசுகி கணவரிடம் திரும்பி “இவன் என்னதாங்க மனசுல நினச்சிருக்கான்னு தெரியலையே…பாவம் அந்த பிரகாஷ் பையன்”  என்று புலம்பி விட்டு சென்றார்..  தன் அறைக்கு வந்த அபி சாதனாவிற்கு போன் செய்தான்… அவள் எடுத்தவுடன்..” பேபி என்ன செஞ்சிட்டு இருக்கிங்க.. சாப்பிட்டியா?” என கொஞ்சலோடு, அக்கறையாக கேட்க அந்தப்பக்கம் சாதனாவோ  “ம்..ம்.. சாப்பிட்டேன்.. அம்மாக்கிட்ட எப்படி நம்ம விசயத்த சொல்றதுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.. ரெண்டு தடவை சொல்ல முயறசி செஞ்சேன் அம்மா நீ இப்பதான் ஊர்ல இருந்து வந்திருக்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு நாம அப்பறமா பேசிக்கலாம்னு சொல்லிட்டு உள்ள போய்ட்டாங்க ” என்றவளிடம் 

“ஏன் பேபி இப்ப உடனே இதை அத்தைக்கிட்ட சொல்லனுமா..ஒரு வாரம் கழித்து சொல்லலாம்ல? என்று கேட்க..” ஏன் மனு.. எதுக்கு ஒருவாரம் கழிச்சு பேச சொல்றிங்க…? என கேட்க..”எனக்கு சில விசயங்கள் முடிக்க வேண்டியிருக்கு.. அதை முடிச்சிட்டேன்னா..எந்த டென்சனும் இல்லாம நம்ம ரெண்டுபேரும் சேர்ந்தே அத்தைக்கிட்ட சொல்லலாம்னு நினச்சேன்..” என்று பிரகாஷை மனதில் நினைத்து கொண்டு கூறினான்..  “ரெண்டு பேரும் சேர்ந்து சொல்றது சந்தோசமான விசயம் தான் அது என்ன ஒருவாரம் கழிச்சு…” என்றவள் சந்தேகமாக “மனு… எதாவது எங்கிட்ட இருந்து மறைக்கிறிங்களா…?” என கேட்க…

”சே..சே உங்கிட்ட போய் எதாவது மறைப்பேனா பேபி..நம்ம புது ஒப்பந்தம் போட்டோம் இல்லடா அதோட ஆரம்ப கட்ட வேலைகள் எல்லாம் பார்க்கணும்… நான் நாளைக்கு ஒருநாள் மட்டும்தான் ஆஃபிஸ் வருவேன்… அதுக்கப்பறம் கொஞ்சம் வெளிவேலைகள் இருக்கு பேபி அதை முடிச்சுட்டேன்னா.. அப்பற ஐயா ஃப்ரீ ஆயிருவேன்..அதனால நீங்க என்ன பண்றிங்க  இந்த ஒருவாரம் சமத்தா, மாமவ பத்தி நினச்சுக்கிட்டே ஆஃபிஸ் போய்ட்டு வருவிங்களாம்…அதுக்குள்ள நான் என் வேலையெல்லாம் முடிச்சிட்டு.. நம்ம ரெண்டுபேரும் சேர்ந்தே நம விசயத்தை பத்தி அத்தைக்கிட்ட சொல்லலாம்… “என்றான்..

அவன் அலுவலகத்திற்கு வரமாட்டேன் என்பதிலேயே திகைத்து இருந்தவள் ”என்ன மனு சொல்றிங்க…ஆஃபீஸ்க்கு ஏன் வரமாட்டிங்க.. இந்த வெளி வேலையெல்லாம் நீங்கதான் பார்க்கணுமா..? ஏன் இந்த பிரபு என்ன பண்றாரு.. அவரை அனுப்ப வேண்டியதுதான.. அதெல்லாம் முடியாது.. நீங்க ஒழுங்கா ஆஃபிஸ்க்கு வர்றிங்க… அவ்வளவுதான்..” என்று கோபமாக பேசியவளிடம்..”பேபி ப்ளீஸ் புரிஞ்சுக்கோடா இது நான் என் கையால முடிக்க வேண்டிய விசயம்.. இல்லைன்னா நான் இவ்வளவு தூரம் சொல்வேனா..என் செல்ல பேபில்ல இந்த ஒருதடவை மட்டும் பர்மிசன் கொடுடா அப்பறம் நான் உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன்… அப்படியே போனாலும் உன்னையும் என்கூட கூட்டிடே போவேன்….. ஒ கே வா..” என்று யாரிடமும் கெஞ்சியோ, பணிந்தோ பழக்கமில்லாதவன்.. இன்று தன்னவளிடம்.. கெஞ்சி. கொஞ்சி சமாதானம் செய்தான்…. ஒருவழியாக அரை மனதாக சம்மதித்தவளை..போனிலேயே ஒரு முத்தம் பதித்து..இரவு வணக்கம் கூறிவிட்டு, அவளை உறங்க சொன்னான்..

இரவு தன் குடும்பத்தினரிடம்  தான் குன்னூர் போவதாக அறிவித்தவன் தன் அன்னையிடம் “அம்மா ஒரு நாளஞ்சு நாள் நீங்க தான் சாதனாவை பார்த்துக்கணும்..என்றவன் அத்தை பார்த்துக்குவாங்கதான்,, ஆனா அவளை சந்தோசமா வச்சுக்கிறது உங்களால மட்டும்தான் முடியும்.. சோ நேரம் கிடைக்கும்போதெல்லாம் சாதானாக்கிட்ட பேசுங்க.. நம்ம வீட்டுக்கு கூட்டிடு வாங்க..“ என்றவனை பார்த்து  “ஏன் அபி அந்த பிரகாஷ இப்பவே தண்டிக்கனும்னு என்ன அவசியம்.. சாதனாதான் நம்மக்கிட்ட வந்துட்டாள்ள.. அவனால் சாதனாவை என்ன செய்ய முடியும்..? என தனசேகர் கேட்க..

”இல்லப்பா அவன் ஒரு அடிபட்ட நரி…இப்ப அவன் அமைதிய இருக்கிறது நமக்கு பயந்துட்டு இல்ல.. எப்படி நம்மளை அடிக்கிறதுன்னு யோசிச்சிட்டு இருப்பான்… இப்ப அவனுடைய மொத்த கோபமும் சாதனாமேலதான் இருக்கும்… அதனால அவன் சாதனாவை எதாவது செய்றதுக்குள்ள நான் முந்திக்க்கப்போறேன்…”  என்று தன் அறைக்கு சென்றுவிட்டான்….

இங்கே பிரகாஷ் என்னும் நரி அபி சொன்னது போலவே, சாதனாவை எப்படி கதறவைப்பது என்று யோசித்து கொண்டிருந்தான்… அவனின் அடிபட்ட கையில் சாதனாவும் அவனும் கல்யாணத்தின் போது சேர்ந்து எடுத்த போட்டோ இருக்க அதை, பார்க்க பார்க்க அவனுக்கு வெறி ஏறியது ”ஏண்டி உன்ன அடையறதுக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்.. நான் பட்ட கஷ்டமெல்லாம் வீணாபோக விட்ருவேணா..அந்த அபி என்னடி பெரிய இவனா..? யார் வந்தாலும் உன்ன எங்கிட்ட இருந்து யாரும் காப்பாத்த முடியாதுடி… 

இவனுக்கு கை அடிபட்டிருக்கு அதனால என்னால ஒண்ணும் செய்யமுடியாதுன்னு நினச்சிட்டியா…?” என்று அகங்காரத்தோடு பேசியவன் அவன் கையில் இருந்த போட்டோவை சாதனாவிற்கு அனுப்புவதற்காக..செல்போனை எடுத்த நொடியில் அவனின் போன் அலறியது.. புது எண்ணாக இருக்கவும் குழப்பத்துடன்… போனை காதில்வைத்து அவன் ஹல்லோ என்பதற்குள்..” ”என்ன தம்பி போட்டவை கையிலவச்சுட்டு என்ன ப்ண்றிங்க…? என் பேபிக்கு இத அனுப்ப போறிங்களா…” என்று படு நக்கலாக எதிர்முனையில் இருந்தவன் பேச.. என்று படு நக்கலாக ஒரு குரல் கேட்க முதலில் முதலில் புரியாமல் இருந்த பிரகாஷிற்கு அவனின் பேபி என்ற வார்த்தையில் பேசுவது யார் என்று புரிந்து விட்டது……. புரிந்ததும் கோபம் தலைக்கேற “அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆச பட்றியே உனக்கே அசிங்கமா இல்ல…? என்று கொந்தளித்தவன் அவளோட கையை தொட்டதுக்கு என் கைய உடச்சட்டேல்ல இதுக்கு தண்டனை உனக்கு தர மாட்டேண்டா… என் டார்லிங் அதான் உன் பேபிக்கு தரப்போறேன்..” என்றவன் ”கொஞ்சம்  பொறு இன்னும் அஞ்சு நிமிசத்துல அந்த ஓடிபோனவ உனக்கு போன் பேசுவா…எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு கதறப்போறா…” என்று எகத்தாளத்துடன் பேசினான்…

மற்முனையில் சிறிது அமைதி நிலவ “என்ன அபி பயந்துட்டியா..? ஏண்டா இவன்கிட்ட வச்சுக்கிட்டோம்னு இப்ப தோணுதா,,? என்று கேலி பேசியவனிடம் “ அச்சோ சாரி பிரரகாஷ் என்ன மன்னிச்சிடு ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டேன்… என்ன மன்னிச்சிடு என்று பயந்து பேசியவன் மறு நொடி கலகலவென சிரித்தான்… “தம்பி பிரகாஷ் உனக்கு இன்னும் அனுபவம் பத்தலைடா…நீ சொன்னதுல நான் கொஞ்சம் பயந்துட்டேன்… அதனால போன இப்ப வைக்கிறேன்…. ஏன்னா நான் வச்சாதான உனக்கு அடுத்த கால் வரும்… சோ நான் இப்ப போனை வைக்கிறேன்.. ” என்று மறுமுனை கட்டாகிட

அவன் போனை வைத்த மறு விநாடி மீண்டும் பிரகாஷிற்கு போன் வர அதில் தன் ஹோட்டல் மேனேஜர் நம்பரை பார்த்ததும் அவசரமாகஆன் செய்து காதில் வத்தவன்…  மறு முனையில் அவர் கூறிய செய்தி கேட்டவுடன் அதிர்ச்சியாகிவிட்டான்…” சார் நம்ம ஹோட்டலை சீல் வச்சுட்டாங்க சார்… நம்ம பழைய ஸ்டாக் வச்சு சமைக்கிறத யாரோ  புகார் கொடுத்துருக்காங்க  சார்.. நான் அப்ப இருந்து உன்களுக்கு முயற்சி செஞ்சிட்டு இருக்கேன்.. பிஸி.. பிஸின்னே வநதது” என பதட்டதோடு கூறினார்.. ”இது அடிக்கடி நடக்கைற ரெய்டுதான… எப்பவும் இது மாதிரி ரெய்டு வர்றவங்களுக்கு நம்ம என்ன கவனிப்போமோ அதே மாதிரி கவனிக்க வேண்டியது தான… இப்படியா ஹோட்டல் மூட்ற அளவுக்கு விட்றது..” என கோபத்தோடு கூற… அவர் தயக்கத்துடன்…”சார் இவங்க எப்பவும் வ்ர்றவங்க இல்லை சார்…  அவங்களைவிட  மேலதிகாரி சார்… அது மட்டும் இல்லாம இன்னைக்கு நம்ம சமைச்ச சாப்பாட்ட அவங்களும் சாப்பிட்டங்க சார்…  அதுல ஒருத்தருக்கு ஃபுட் பாய்சன் ஆகிருச்சு சார்…   ” என கூற பிரகாஷ் தலயில் கைவைத்து அமர்ந்து கொண்டான்..

மறு முனையில் சார் ..சார் …என அழைக்க போனை காதில் கொடுத்தவன் சொல்லுங்க..” அவர் தயக்கத்துடன் “சார் நம்ம ஹோட்டல் உங்க ரூம்ல யாரோ போதை பொருள் வச்சுருக்காங்க சார்..என “வாட்..” என கத்தினான் சார் நீங்க இங்க வந்திங்கன்னா நல்லா இருக்கும்    கொஞ்சம் சீக்கிரம் வாங்க சார்…என்ற் போனை வைத்துவிட்டார்.. அவன் அவசரமாக கிளம்பி வெளியே வர மீண்டும் அவனுக்கு போன் வந்தது.. அவசரத்தில் நம்பரை பார்க்காமல் சொல்லுங்க..  மேனேஜர் நான் அங்கதான் வந்துட்டு இருக்கேன்… என கூற… ”அச்சோ  அவசரத்துல தம்பிக்கு நம்பர் கூட தெரியலையே.. என்று மீண்டும் வந்த நக்கல் குரலில் “டேய் நீ மட்டும் என் கண்ணு முன்னால வந்த உன்ன கொண்ணுருவேண்டா..” என்று கத்தியவனை…கோபபடாதிங்க…  தம்பி போங்க போய் சீல வச்ச கடைய எப்படி திறக்குறதுன்னு பாருங்க…” என்று போனை வைத்துவிடான் 

பிரகாஷ் அங்கு செல்வதற்குள் அனைத்தும் கை மீறி போய்விட்டது.. மேனேஜர் செய்வதறியாமல் கையை பிசைந்துகொண்டு நின்றிருந்தார்… இவனை பார்த்ததும் அவசரமாக அருகில் வந்து “ சார் மூணு ரெய்டு நடந்திருச்சு சார்  உங்க ரூம்ல யாரோ போதை பொருள் வச்சிருக்காங்க… அதுமட்டும் இல்லாம ரெண்டு மூணு ரூம்ல இருந்து … என்று பேச்சை நிறுத்தியவரை… “ என்ன ரூம்ல இருந்து என்ன.. என்னமோ சொல்லவந்திங்க… என்னன்னு சொல்லுங்க..? என  அது வந்து… அரைகுறை ஆடையோட ஆணும் பெண்ணுமா போலிஸ் கண்ணுல பட்ற மாதி ஓடிருக்காங்க சார்..

நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்கு …  ம்.. என்று அவரின் பேச்சைகைகாட்டி நிறுத்துமாரு சொன்னவனின் மனம் உலைகளமாக கொதித்து கொண்டிருந்தது… “என்னோட ஹோட்டலை விபச்சார விடுதியா மாத்திட்டானா…?”என்று தனக்குள்ளே யோசித்து கொண்டிருந்தவனின் அருகில் வந்த அதிகாரி அவனை விசாரணக்காக அழைத்து சென்றனர்…அவன் ஜீப்பில் ஏறப்போகும் சமயம்…  ஹலோ பாரதி என்ற குரல் கேட்க  குரல் வந்த திசையை பார்த்தவர்கள் அங்கு அபி கண்ணில் கூலர்ஸ் அணிந்து கொண்டு கம்பீரமாக வந்து கொண்டிருந்தான்… “ டேய் அபி நீ எங்க இங்க..? என்று உரிமையாக அழைத்து பேசினான் பாரதி என்ற விஷ்வபாரதி….  IPS…. 

“இங்க குன்னூர்ல ஒரு எஸ்டேட் விலைக்கு வருதுன்னு சொன்னாங்க…அதான் அதை பார்த்துட்டு புடிச்சிருந்தா முடிச்சிட்டு போகலாம்னு வந்தேன்.. “  ஆமா நீ எப்படி இருக்க..? அம்மா நல்லா இருக்காங்களா..? உனக்கு கல்யாணம் ஆகிருச்சா..?  இது என்ன கேஸ்..? என்று வரிசையாக கேள்வி கேட்டவனை முறைத்த பாரதி.. ஏண்டா இத்தனை கேள்வி ஒரே நேரத்துல கேட்டா நான் எப்படி பதில் சொல்லுவேன்..  ” என்றவன் நான் நல்லா இருக்கேன்… அம்மாவும் நல்லா இருக்காங்க..அப்பறம் கல்யாணம் இன்னும் ஆகலை… அப்பறம் இதோ இருக்கானே இவன் மேல மொத்தம் மூணு கேஸ் இருக்கு மனுசன் சாப்பிட்ற சாப்பாட்டுல கை வச்சிருக்கான். இடியட் ” என்று பிரகாஷை திட்டியவன்.. 

”சரி அதை விடு இப்ப நான் டியூட்டில இருக்கேன்.. நீ எங்க தங்கி இருக்கேன்னு சொல்லு நான் வந்து பார்க்கிறேன்..“ என்றவன் அபி சொன்ன முகவரையை குறித்து கொண்டு பிரகாஷை அழத்து சென்றான்.. அபி தன் கூலர்ஸை கழட்டி பிரகாஷை, எதிரிகளை வீழ்த்தும் அழுத்தமான புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தான்.. 

இங்கே சாதனாவோ, அபி இல்லாமல் அலுவலகம் செல்வதற்கே பிடிக்கவில்லை… வேலையின் முக்கியத்துவம் காரணமாக அலுவகம் சென்றாள்.. அங்கு சென்றவளை.. வேலை தனக்குள் அவளை மூழ்கடித்து கொண்டது..  மாலை வேலை முடிந்து கிளம்பியவளை.. அழைத்து போக வாசுகி வந்திருந்தார்…  அவரை பார்த்தவுடன் ”வசும்மா,,” என அழைத்து  அவரை கட்டிகொண்டாள்.. “ஆமா நேர்ல பார்த்தா மட்டும்தான் வசும்மான்னு சொல்லி கட்டி பிடிக்கிறது..” ஊர்ல இருந்து வந்ததுக்கு பின் ஒரு போன் பண்ணிருப்பியா,,”  

என்று விளையாட்டாக கேட்க.. “என்ன வசும்மா இப்படி சொல்லிட்டிங்க..? நீங்க இன்னைக்கு வரலைன்னா நானே அங்க வந்திருப்பேன்.. வேணுமின்னா அம்மாக்கிட்ட கேட்டு பாருங்க..” என்று அப்பாவியாய் முகத்தை வைத்து கொண்டு பேசியவளை பார்த்தவர்.. அவள் முகத்தின் மலர்ச்சியும், அவளின் குறும்பு பேச்சும் ரசிக்கவே வைத்தது.. அவளை திருஷ்டி கழித்து “ரொம்ப அழகா இருக்கடா” என்றுவிட்டு சாதனாவை தன் வீட்டிற்கு அழைத்து சென்றார்.. 

 அங்கு சிறிது நேரம் அவர்களுடன் செலவழித்துவிட்டு வீடு திரும்பினாள்.. இப்படியாக நான்கு நாட்கள் ஓடிட.. குன்னூரில் விசாரணை கைதியாக இருந்த பிரகாஷின் மேல் அவன் கை அடிபட்ட்தன் காரணமாக அவன் ஹோட்டலுக்கே செல்லவில்லை என்றும், அதை பயன்படுத்தி அங்கு வேலை செய்பவர்கள் தான் இந்த செயலை செய்திருக்க வேண்டும், என்று பிரகாஷ் தரப்பில் கூறப்பட. அவனை விடுதலை செய்தார்கள்.. ஆனாலும் ஹோட்டலை திறக்க அனுமதிக்கவில்லை..வெளியே வந்த பிரகாஷ் முதல் வேலையாக. அபியை அழைத்தவன்..“ என்னடா நீ உள்ள அனுப்பின ரெண்டு நாள்ள வெளிய வந்துட்டேன் பார்த்தியா..? எங்கிட்ட இருக்கிற பணம் உன்ன, என்னைய எதுவும் செய்ய விடாதுடா” என நக்கலடித்தவனை… 

”அச்சோ பாவம் குழந்த்தை… இப்படி பேசுதே.. கையும் ஒடச்சு பார்த்தாச்சு, ஜெயிலுக்கும் உன்ன அனுப்பியாச்சு இருந்தும் நீ திருந்த மாட்டிங்கிறயே… சோ இதுக்கு மேல உன்னைய என்ன பண்ணலாம்…” என்று யோசிப்பது போல பாவனை செய்தவன்… “சரி உனக்கு முன்னால ஒரு வண்டி வேகமா வருது பாரு அது உன்மேல மோதுறதுக்குள்ள கொஞ்சம் நகர்ந்துக்க.. இல்லன்னா என்கையால் உன்ன அடிக்க முடியாம அந்த வண்டில அடிபட்டு செத்துபோயிருவ..” என நக்கலுடன் கூற, அப்பொழுதுதான் தன்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த வாகனத்தை பார்த்தான்..

 அது தன்னை மோதப்போகும் நொடியில் சுதாரித்து விலகியவனின் இதயம்…  நடக்க இருந்த விபத்தை நினத்து.. வேகமாக துடித்தது.. மறுமுனையில் “என்ன தம்பி பயந்துட்டியா..? உன்ன அவ்வளவு சீக்கிரம் சாக விட்ருவேணா..ம்..?”””” நீ இன்னும் அனுபவிக்க வேண்டியது எவ்வளோ இருக்கு..?”  என்றவனின் பேச்சின் தோரணையில் முதல் முறையாக பயம வந்தது.. பிரகாஷிற்கு.. இருந்தும்.. “என்னடா என்ன பயமுறுத்தி பார்க்கிறியா..? இதுக்கெல்லாம் வேற ஆளை பாரு..நான் பிரகாஷ்டா எதுக்கும் பயப்படமாடேன்” என்று வீர வசனம் பேசியவனை.. “அப்படியா.. அப்ப சரி நான் போனை வைக்கிறேன்..” என்று மறுமுனையில கட்டாகிவிட.. பிர்காஷ் தவித்து போனான்… ”ஐயோ இவன் எதுவும் சொல்லாம போனை வச்சாலே பெருசா எதோ பண்ணுவானே..”  என்று பயத்தோடு வீட்டிற்கு சென்றான்….

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த சாதனாவை, மங்கை சந்தோசமாக வரவேற்றார்.. “ என்னம்மா இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கிங்க..? என கேட்க.. “இருக்காதா பின்ன நம்ம வசு அண்ணி இருக்காங்கள்ள, அவங்க பையனுக்கு உன்ன பொண்ணு கேட்கிறாங்க..  இது எவ்வளவு சந்தோசமான விசயம்…” என கூற சாதனா தலையில் இடி விழுந்தது போல் அதிர்ச்சியாக நின்றாள்.. அவளின் தோற்றத்தை பார்த்த மங்கைக்கு.. சாதனாவை பார்க்கவே பரிதாபமாக இருந்தது பேசாமல் உண்மைய சொல்லிவிடலாமா என்று கூட நினைத்துவிட்டார்.. அபியின் வார்த்தைகளே அவரை உண்மையை சொல்லவிடாமல் தடுத்தது…

தன் அதிர்ச்சியிலிருந்து மீண்ட சாதனா.. “பேசாம மனுவை பத்தி சொல்லிவிடலாம் என நினைத்தவள் அவன் சொன்ன “நாம ரெண்டுபேரும் சேர்ந்தே சொல்லுவோம் ” என்று கூறியது நினைவில் வர இன்னும் ஒரு ரெண்டு நாள்தா எப்படியாவது சமாளிச்சிருவோம்… அதுக்குள்ளயும் மனு வந்துருவாங்க… அப்பறம்ம் அவங்க பார்த்துப்பாங்க “ என்று மனதில் நினைத்தவள் “அம்மா எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க நான் யோசிச்சு சொல்றேன்”  என்று நழுவ பார்த்தவளை..

”இதுல யோசிக்க என்னடா இருக்கு.. வசு அண்ணிய உனக்கு ரொம்ப புடிக்கும்.. அவங்க குடும்பத்தை பத்தியும் நமக்கு நல்லா தெரியும்..அது மட்டுமில்லாம அவங்க பையனுக்கும் உன்னை ரொம்ப புடிச்சிருக்காம்.. அதான் எங்கிட்ட கேட்டு, உனக்கு சம்மதமான்னு கேட்க சொன்னாங்க.. நாந்தான் என் பொண்ணு என் பேச்சை மீற மாட்டா.. அதனால நீங்க நாளைக்கே கூட வாங்கன்னு சொன்னேன்..” என்ற அன்னையை திகைப்புடன் பார்த்தவள் ”நாளைக்கேவா” என பதட்டத்தோடு கேட்க.. “ப்ச்.. இல்லடா அவங்க பையன் எங்கேயோ ஊருக்கு போயிருக்காராம் வர ஒரு ரெண்டு மூணு நாள் ஆகும்னு சொன்னாங்க.. அந்த பையன் வந்தவுடனே நம்ம வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிருக்காங்க.. போட்டோ கூட கொடுத்துருக்காங்க பாரேன் ” என்று ஒரு கவரை கொடுக்க அதை கையில் வாங்காமல் “இருக்கட்டும்மா” என்றபடி 

ஒன்றும் சொல்லாமல் தன் அறைக்குள் சென்றவள் முதல் வேலையாக அபிக்கு அழைக்க… அது நாட் ரீச்சபிள் என்ன்றே சொல்லியது.. “சே ஃப்ராடு அப்படி எந்த ஊருக்குதான் போயிருப்பாங்க போனே போக மாட்டிங்குது..” என்று எரிச்சலோடு முணுமுணுத்தவள்.. தன் செல்லை கட்டிலில் வீசிவிட்டு குளியலறைக்கு சென்றாள்…

வீட்டிற்கு வந்த பிரகாஷ் தன் அறைக்கு வந்தவன்.. கைவலியும், மனதில் ஏற்பட்ட பயத்திலும் சோர்வாக உணர்ந்தவன்.. அப்படியே தூங்கி விட்டான்… அவன் தூங்கிய சிறிது நேரத்தில்.. மூச்சு முட்டுவதுபோல் தோன்ற.. படக்கென்று கண்விழித்து கொண்டான்.. ஏசி டெம்பரேச்சர் குறைவாக இருக்க.. அதை கொஞ்சம் அதிக படுத்திவிட்டு மீண்டும் படுத்தவனி நாசி ஒரு கெட்ட நாற்றத்தை உணர.. அதை தாங்க முடியாமல் ஏசியை அணைத்து விட்டு வெளியே வருவதற்காக கதவை திறந்தான்…ம்கூம் அவனால் கதவை திறக்க முடியவில்லை..

அந்த நாற்றம் மேலும் அதிகமாக, அவனால் மூச்சு விட முடியாமல் மூச்சடைத்தது.. தன் இரண்டு கைகளையும் கைவலியும் மீறி.. வேகமாக தட்டி.. “டேய் யாராவது இருக்கிங்களா..? எனக்கு உள்ள மூச்சு முட்டுது… வெளிய யாரோ தாழ்ப்பாள் போட்ருக்காங்க… கதவை திறங்கடா..” என இருமிக்கொண்டே கத்தினான்.. வெளியே ஆள் இருப்பதற்கான அறிகுறியே இல்லாமல் போக.. ”இன்னைக்கு நம்ம அவ்வளோதான்” என்று நினைத்தபடி மயங்கினான்..அவன் மயங்கிய மறு நிமிடம் கதவு திறந்தது..

மயங்கியவனை தூக்கி கொண்டு சென்றது ஒரு உருவம்.. லேசாக மயக்கம் தெளிந்து. கண்விழித்த் பிரகாஷ் தான் எங்கிருக்கிறோம் என்பது புரிய சில நொடிகள் தேவ்வைப்பட்டது.. புரிந்தபின், இங்கு எப்படி நாம வந்தோம்..? என யோசித்துகொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான்… ஆம் அவனை தூக்கி வந்தவர்கள், அவன் சாதனாவை எங்கு அடைத்து வைத்திருந்தானோ.. அதே காட்டு பங்களாவிற்குதான் இவனையும் தூக்கி வந்திருந்தார்கள்… தனக்கு எதிரில் அபி இருப்பதை பார்த்து திடுக்கிட்டான்..  அவனுக்கு பேசமுடியாமக் தொண்டை வறண்டதால், குடிக்க தண்ணீர் வேண்டும் என்று சைகையால் கேட்க… ”ம்ம் நீ செஞ்ச வேலைக்கு உனக்கு தண்ணி கூட கொடுக்க கூடாது என்ன செய்ய என்ன ஹீரோவா போட்டுடாங்களே…அவன் கொஞ்சம் நல்லவனா இருக்கணுமாமே.. அதான் தண்ணீ தர்றேன்.” என்று அபி அவனுக்கு தண்ணீர் கொடுத்தான். அதை குடித்தவனுக்கு லேசாக தெம்பு வரபெற்றவன்… தம்ளரை வைப்பத்ற்காக திரும்பிய அபியை அங்கிருந்த ஃப்ளவர்வாஷால்.. தாக்க முனைந்தான்..

அவனின் தாக்குதலை லாவகமாக தடுத்த அபி.. “ம்ம் கூம் திருந்த மாட்டேல்ல.. என்று கூறிக்கொண்டே அவன் விலாவில் ஓங்கி குத்தினான்..   வெறும் பீட்சாவும், பர்கரும், உண்டு வளர்த்த உடம்பு.. ஏற்கனவே இருந்த கைவலியும் சேர்ந்து கொள்ள, சித்தம் கலங்கி தரையில் சுருண்டான்.. கீழே விழுந்தவனை தூக்கி நிறுத்தியவன் “நீ பல பெண்களோட வாழ்க்கைய நாசம் பண்ணிருக்க.. அதுக்கு தண்டனையா உன்னோட..ஆண்மையை எடுத்தரலாம்னு நினைக்கிறேன்.. நீ என்ன நினைக்கிற..? என்று அவனிடமே கேட்க..

பயத்தில் முகம் வெளுத்தவன் ” வேண்டாம்.. என்னைய விட்று.. இனிமேல உங்க பக்கமே வரமாட்டேன்..” என நடுக்கத்துடன் கூறியவனை.. “ஓ உன்னோட வீரமெல்லாம்.. சின்ன பொண்ணுக்கிட்டயும், வயசானவங்களிடம் மட்டும் தானா..? என்று எகத்தாளமாக கேட்டவன்.. ”பயப்படாத உன் ஆண்மைய ஒண்ணும் செய்யமாட்டேன்..ஏன்னா நான் அப்படி செஞ்சா நீ அந்த கோபத்தை பெண்களிடம் வேறுமாதிரி காட்ட தொடங்கிருவ…. சோ,, ” என்று அபி சிரிப்புடன் கூறியதும், நிம்மதி பெருமூச்சு விட்டவனிடம்… ”சரி இந்த பேப்பர்ஸ்ல கையெழுத்து போடு” என்றபடி சில பேப்பர்களை அவனிடம் தூக்கி போட்டவன்… “அதுல உனக்கும் சாதனாவிற்கும் நடந்த கல்யாணத்தை ரத்து செய்வதற்கான் டிவோர்ஸ் பேப்பர் இருக்கு… ம் கையெழுத்துப்போடு..” என அதட்ட மறுக்காமல் கையெழுத்ட்திட்டான்..

அவன் மனதில் “உலகத்திலேயே இந்த சாதனாதான் பெண்ணா…? இவளைவிட அழகானவங்க எவ்வளவுபேர் இருக்காங்க..? அவங்களை பார்த்துக்காலாம்..” என்று மனதில் கோட்டை கட்டியபடி கையெழுத்திட்டு அபியிடம் கொடுத்தான்… ”இந்தா இதுல உன் சொத்து, எல்லாம் அனாதை ஆசிரமத்திற்கு எழுதிருக்கேன் இதுலயும் கையெழுத்து போடு..” என்று இன்னொரு பத்திரத்தை நீட்டினான்.. “ம் கூம் இதுல நான் கையெழுத்து போடமாட்டேன்…” என்று மறுத்தவனை பார்த்த அபி.. திரும்பி கண்ணை காட்ட.. அப்பொழுதுதான் அவனின் பின்னால் இரண்டுபேர் இருப்பதையே பார்த்தான்… காட்டெருமை போல் உடம்பை வளர்த்து வைத்திருந்தவர்களின் தோற்றம் அவன் மனதில் கிலியை ஏற்படுத்த… அவர்கள் தன்னருகில் நெருங்கவும் வேகமாக அபியிடம் அந்த பத்திரத்தை வாங்கி கையெழுத்து போட்டு அபியிடமே கொடுத்துவிட்டான்… “இதுகெல்லாம் உனக்கு இருக்குடா…” என்று மனதில் நினைத்துகொண்டான்..

”ஓ கே இந்த வேலை முடிஞ்சிருச்சு இனி என் பேபிய கொடுமை படுத்தினியே அதுக்கான பதிலை மட்டும் இப்ப வாங்கிக்கோ…” என்று அழுத்ததுடன் கூறியபடி அவனை நெருங்கிய அபியின் போன் சத்தமிட… அதை எடுத்து பார்த்தவன் .. மை லைஃப் என்றிருக்க..முகத்தில் புன்னகையும், மென்மையும் ஒருசேர கொண்டுவந்து.. “சொல்லுடா பேபி.. “ என்று மென்மையாக கேட்டவனிடம்..” என்ன சொல்லுடா பேபி நீங்க ஊருக்கு போய்  எத்தனை நாள் ஆச்சு இதுவரைக்கும் ஒரு போன் பண்ணிருக்கிங்களா..? நான் போட்டாலும் நாட் ரீச்சபிள்னே வருது.. இங்க என்ன நடந்துட்டு இருக்குன்னு தெரியுமா..? வசும்மா அவங்க பையனுக்கு என்ன பொண்ணு கேட்ருக்காங்க.. அதுக்கு அம்மாவும் சம்மதிச்சிட்டாங்க.. இப்ப நான் என்ன பண்றது..? அம்மாக்கிட்ட நம்மளைபத்தி சொல்ல்லாம்னா.. நீங்க வந்தபிறகுதான் சொல்லனும்னு சொல்லிட்டிங்க..”

”எனக்கு ரொம்ப பயமா இருக்கு மனு..வசும்மாவோட பையன் எங்கயோ வெளி ஊருக்கு போயிருக்காராம்.. அவர் வந்தவுடனே நிச்சயம் வச்சுக்கலாம்னு சொல்லிட்டு இருக்காங்க… நீங்க சீக்கிரம் வாங்க மனு.. எனக்கு பயமா இருக்கு” என்றவளின் குரலில் பதட்டம் இருக்க… “பேபி ரிலாக்ஸ்டா… யார் வந்து உன்ன பார்த்தாலும்.. ம் கூம்…  அப்படி பார்க்கவும் விட மாட்டேன்… என் மேல நம்பிக்கை இருக்குதான..? என கேட்க “ம்” என்றவளிடம் அதே நம்பிக்கையோட இருப்பிங்களாம்.. இப்ப ஒரு டீலிங் முடிய போகுது.. அது முடிஞ்சவுடனே அடுத்த ஃப்ளைட் புடிச்சு மாமா பறந்து வந்துருவேன்… நீ எதை பத்தியும் நினைக்காம இந்த மாமவபத்தி மட்டும் நினச்சிட்டு இருடா… நான் எல்லாத்தையும் பார்த்துக்குவேன்… ஓ கே வா..?என்று அவளை சமாதானம் செய்து போனை அணைத்தவன் மனதில் “தன் அன்னையிடம் என் பேபிய பார்த்துக்க சொன்னா அழவா வைக்கிறிங்க..? உங்களை வந்து கவனிச்சுக்கிறேன்” என்று செல்லமாக வைதவன்..

மீண்டும் பிரகாஷிடம் வந்து ”என் பேபி ரொம்ப அவசர்ப்பட்றா என்ன பார்க்கணும்னு.. சோ..” என்றபடி பிரகாஷ் என்ன என்று உணரும் முன்பே.. அவனின் வாயில் ஓங்கி ஒரு குத்துவிட.. அவனின் முன் பற்கள் இரண்டு உடைந்து.. உதடு இரண்டாக கிழிந்து.. தொங்கியது… வலியால் துடித்தவனை… நிமிர்த்தியவன்.. “இந்த வாய்தான அன்னைக்கு என் பேபிய சித்ரவதை செஞ்சது.. என்று மீண்டும் ஒரு குத்துவிட்டவன்.. “இந்த கைதான அன்னைக்கு என் பேபி ட்ரெஸ்ஸ எரிச்சது…” என்று அவன் கைகளை குரூரத்துடன் பார்த்தவன்… பின்னால் இருந்தவர்களை பார்க்க.. அதில் ஒருவன் அபியின் கையில் ஒரு பாட்டிலை கொடுத்தான்..

ஏற்கனவே வலியில் பிரகாஷிற்கு பாதி உயிர் போய்விட்டது.. அவன் கையில் இருந்த பாட்டிலை பார்த்தவனுக்கு மீதி உயிர் துடித்துகொண்டிருந்தது… “ம் என்று அபி அவர்களிடம் கண்ணை காட்ட..அவர்கள் இருவரும் ஆளுக்கொன்றாக பிரகாஷின் கையை பிடித்து கொண்டார்கள்… “என் பேபி ட்ரெஸ் எரிஞ்ச மாதிரியே உன் கையும் எரியட்டும்,, “ என்றபடி.. அபி கையில் வைத்திருந்த திராவகத்தை பிரகாஷின் கையில் ஊற்றினான்…” ஐயோ என்ன கொண்று… என்னால வலி தாங்க முடியலை..” என்று கதறி துடித்தவனை இரக்கமே இல்லாமல் பார்த்து கொண்டிருந்த அபி.. “கடைசியா ஒரே ஒரு பரிசு இது என் பேபிக்காக இல்ல..உன்னால பாதிக்கப்பட்ட பெண்களோட சகோதரனா இருந்து இத நான் செய்யறேன்.. இப்ப நான் கொடுத்த தண்டனைக்கெல்லாம் வைத்திய்ம் பார்த்து உன்னால திரும்ப வரமுடியும்…ஆனா இப்ப நான் கொடுக்க போறது… இனிமேல் எந்த பெண்ணோட வாழ்க்கையிலும் நீ விளையாட முடியாது.” என்றவன் கையில் ஒரு இரும்பு கம்பி இருக்க.. பிரகாஷின் நடுமுதுகில் ஓங்கி ஒரு போடு போட்டான்.. 

”இனிமேல் வாழ்கையில் இடுப்புக்கு கீழ உனக்கு உண்ர்ச்சியே இருக்காதுடா.. காலம் பூராவும் ஒருத்தரோட துணையின்றி உன்னால வாழ முடியாதுடா.. பொண்ணுங்கன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா போச்சா..? என்று ருத்ரமூர்த்தியாக மாறி பேசிக்கொண்டிருந்தவன்… தனக்கு பின்னால் நின்றிருந்தவர்களிடம் திரும்பி.. “இவனை அரசு மருத்துவமைனைல சேர்த்துருங்க..யாராவது விசாரிச்சா..? எப்படி பதில் சொல்லணும்னு தெரியும் தான..?” என கேட்க அவர்கள் பணிவாக  தெரியும் என்றார்கள்… தன் உயிரானவளுக்கு நியாயம் செய்துவிட்ட சந்தோசத்தில், அபி அந்த இடத்தை விட்டு அகன்றான்.. 

      இங்கே அபியிடம் பேசிய சாதனாவிற்கு மனது அமைதியடந்தது.. ”இனிமேல் எல்லாத்தியும் மனு பார்த்துப்பாங்க..”என்று மனதில் நினைத்தபடி..இயல்பாகவே இருந்தாள்.. மங்கை சாதனாவிடம் “சாதும்மா மாப்பிள்ளை நாளைக்கு சாயந்திரம் வர்றாங்களாம்.. அப்பவே பொண்ணு பார்த்துட்டு நிச்சய தேதியும் முடிவு பண்ணிரலாமான்னு கேட்டாங்க..? நானும் சரின்னு சொல்லிட்டேன்..” என்று மகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டு சென்றார்.. சாதனாவிற்கு வாசுகியின் மேல் சிறிது கோபம் கூட வந்தது.. “என்ன ஆச்சு வசும்மாவிற்கு இதபத்தி எங்கிட்ட ஒருவார்த்தை கூட பேசமாட்டிங்கிறாங்க… எல்லாத்தையும் அம்மாக்கிட்டயே பேசுறாங்க..” என்று மனதில் பொறுமியபடி.. அலுவலகம் சென்றாள்..

அன்று இரவு நன்றாக்க உறங்கி கொண்டிருந்த சாதனாவை “பேபி” என்ற் அழைப்புடன் மென்மையாக எழுப்ப.. “போங்க மனு எப்ப பார்த்தாலும் பேபி.. பேபின்னு சொல்லுவிங்க கண் முழிச்சு பார்த்தா காணாம போய்ருவிங்க..” என்று புலம்பியபடி திரும்பி படுத்தவளை இம்முறை பேபி என்ற அழைப்போடு நெற்றியில் உதட்டின் ஈரத்தையும் உணரந்தவள்… திடுக்கிட்டு கண்விழிக்க.. அங்கு அவளின் படுக்கையில், அவளின் அருகில் அமர்ந்திருந்தான் அபி.. அவள் ஆச்சரியத்தில் விழிவிரித்து “மனூ…”என்று அழைத்து அவனை இறுக அணைத்து கொண்டவள்.. அவனை ஒருவாரம் பார்க்காத ஏக்கத்தை அந்த ஒற்றை அணைப்பில் வெளிப்படுத்தியவளை தானும் அணைத்து கொண்டான் சாதனாவின் நாயகன்..

அவள் முதுகு குலுங்குவதில் சாதனா அழுவதை உணர்ந்தவன் வேகமாக அவளை தன்னிடம் இருந்து பிரித்து.. “என்னாச்சு பேபி ஏன் அழறிங்க..? இனிமேல் என் பேபி எதுக்கும் அழகூடாது.. முக்கியமா இன்னைக்கு அழவே கூடாது..” என்றவனை…”ஏன் இன்னிக்குமட்டும் ஸ்பெஷல் என்று தேம்பி கொண்டு கேட்டவளை.. குளியலறைக்கு அழைத்து சென்றவன்… அவளுக்கு முகம் கழுவிவிட்டு.. அங்கிருந்த துண்டை எடுத்து துடைத்து விட்டான்.. 

அவனின் செயலை ரசித்து கொண்டிருந்தவள் முன், அழகிய பூங்கொத்தை நீட்டி….  

உலகப் பூக்களின் வாசம்
உனக்குச் சிறை பிடிப்பேன்!
உலர்ந்த மேகத்தைக் கொண்டு
நிலவின் கறை துடைப்பேன்!
ஏன் என்றால்… உன் பிறந்தநாள்!
ஏன் என்றால்… உன் பிறந்தநாள்!

கிளை ஒன்றில் மேடை அமைத்து
ஒலிவாங்கி கையில் கொடுத்து
பறவைகளைப் பாடச் செய்வேன்!

இலை எல்லாம் கைகள் தட்ட
அதில் வெல்லும் பறவை ஒன்றை
உன் காதில் கூவச் செய்வேன்!

உன் அறையில் கூடு கட்டிட கட்டளையிடுவேன்
அதிகாலை உன்னை எழுப்பிட உத்தரவிடுவேன்
ஏன் என்றால்… உன் பிறந்தநாள்!
ஏன் என்றால்… உன் பிறந்தநாள்!

மலையுச்சி எட்டி, பனிக்கட்டி வெட்டி
உன் குளியல் தொட்டியில் கொட்டி
சூரியனை வடிகட்டி
பனியெல்லாம் உருக்கிடுவேன்
உன்னை அதில் குளிக்கத்தான்
இதம் பார்த்து இறக்கிடுவேன்

கண்ணில்லா பெண் மீன்கள் பிடித்து
உன்னோடு நான் நீந்த விடுவேன்
நீ குளித்து முடித்துத் துவட்டத்தான்
என் காதல் மடித்துத் தந்திடுவேன்!
ஏன் என்றால்… உன் பிறந்தநாள்!
நெஞ்சத்தை வெதுப்பகமாக்கி
அணிச்சல் செய்திடுவேன்
மெழுகுப் பூக்களின் மேலே – என்
காதல் ஏற்றிடுவேன்
நீ ஊதினால் அணையாதடி
நீ வெட்டவே முடியாதடி

உன் கண்களை நீ மூடடி
என்ன வேண்டுமோ அதைக் கேளடி
கடவுள் கூட்டம் அணிவகுத்து
வரங்கள் தந்திடுமே
இந்நாளே முடியக் கூடாதென்று
உலகம் நின்றிடுமே!
ஏன் என்றால்… உன் பிறந்தநாள்!
ஏன் என்றால்… உன் பிறந்தநாள்!

என் தேவதையோட பிறந்தநாள்..” என்றபடி பூங்கொத்தை கையில் கொடுக்க…  சாதனா மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள்.. ஒரு நொடி தன் தந்தையின் நினைவில் கலங்கியவள். தான் சந்தோசமாக இருந்தால் தன் தந்தையின் ஆன்மாவும் சந்தோசப்படும் என்று உணர்ந்து.. மகிழ்சியுடன், அபியின்  கைய்ல் இருந்த பூங்கொத்தை வாங்கி கொண்டவள் அபியின் நெற்றியில் சந்தோச கண்ணிரோடு முத்தமிட்டாள்.. அதை கண்மூடி ஏற்றுக்கொண்டவன்…அவள் விரலில் அழகான வேலைபாடு நிறைந்த,  A S., என்று அவர்களின் முதல் எழுத்துகொண்ட  பிளாட்டினம் மோதிரம் ஒன்றை அணிவித்தான்.. மோதிரத்தின் வேலைபாட்டை வியந்து பார்த்து கொண்டிருந்தவள் “மனு எங்கப்பா இறந்தத்துக்கு பிறகு நான் பிறந்த நாளே கொண்டாட்றத விட்டுட்டேன்… அம்மாகூட என்கிட்ட கேட்டாங்க ஆனா நான்தான்  மறுத்துட்டேன்.. எனக்கே என்னோட பிறந்த நாள் மறந்துருச்சு…

ஆனா, நீங்க ஞாபகம் வச்சுட்டு அதுவும் ஊர்ல இருந்து வந்தவுடனே என்னைய பார்க்க வந்ததுமில்லாம… எனக்கு இப்படி ஒரு சந்தோசமான தருணத்தை தருவிங்கன்னு எதிர்பார்க்கலை மனு.. ஒவ்வொரு விசயத்துலையும் உங்களுடைய காதலும், நீங்க காட்ற அன்பும். என்னை பிரம்மிக்க வைக்குது மனு..”  என்று அவன் காதல் தந்த பிரம்மிப்பில் பேசி கொண்டிருந்தவளை அருகே வருமாறு அழைத்தவன் அங்கிருந்த சிறிய டேபிளை எடுத்து வந்து… அதன் மேல் தான் வாங்கிவைத்திருந்த கேக்கை வைத்தவன் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு, பிறந்த நாள் பாடல பாட “சாதனா அந்த கேக்கை வெட்டியவள் அபிக்கு ஊட்ட.. அவன் வாங்காமல் அதை அவளுக்கு ஊட்டிவிட்டு..அதே கேக்கை தானும் எடுத்துகொண்டான்.. அவனின் செயலில் சாதனாவின் முகம் வெட்கத்தை தத்தெடுத்து கொண்டது.. ”ஓ கே பேபி நீ தூங்கு நாளைக்கு உன் பிறந்த நாளை கிராண்டா கொண்டாடிடலாம்..” என்றவன் கிளம்ப போக…

அவ்வளவு நேரம் அவன் அருகாமையில் அனைத்தும் மறந்திருந்தவள்.. அவன் கிளம்புவதாக சொல்லவும்தான்… காலையில் பெண் பார்க்கும் நிகழ்வு நடக்க இருப்பதே அவளின் நினவிற்கு வந்தது.. அபியிடம் சிறிது கவலையுடன் அதை பற்றி கூறியவளை.. “நீ கவலை படாத பேபி.. உங்க வசும்மா பையன பார்க்கிறதுக்கு முன்னாடி நான் இங்க வந்துருவேன்.. சரியா.. நானும் எங்க அம்மா அப்பாவோட தான் வருவேன்.. உனக்கு எந்த சங்கடமும் வராம.. மங்கை அத்தை, உன் செல்ல வசும்மா இவங்க சம்மத்தோட நாளைக்கு நமக்கு சின்னதா ஒரு நிச்சயம் நடக்கும்.. என்ன ஓ கே வா..? என கேட்க அவள் சந்தோசமாக தலையாட்டினாள்..

“இப்ப நான் கிளம்பலாமா..? என கேட்க.. மனு நான் தூங்கிற வரைக்கும்.. என பக்கத்திலேயே இருங்க…”  என கெஞ்சிவயவளை.. “ஏன் பேபி கெஞ்சுற நீ இருடான்னு சொன்னா இருக்க போறேன். ” என்றவன்.. கட்டிலில் சாய்ந்து அமர்ந்து.. அவளை தன் மார்பில் சாய்த்துகொண்டவன்… அவளின் தலை கோதியபடி இருந்தவனை.. நிமிர்ந்து பார்த்தவள் “எங்க அப்பாகூட இப்படிதான் செய்வாங்க மனு..” என்றுவிட்டு மீண்டும் அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டாள்.. சிறிது நேரம் அமைதியாக கழிய.. ”மனு எனக்கு தூக்கம் வரமாட்டிங்குது.. எதாவது ஒரு பாட்டு பாடுங்க மனு..” என கேட்க. 

கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்..
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி…! 

என்று பாடியபடி குனிந்து அவளை பார்த்தவன்.. சாதனா உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.. லேசான புன்னகையுடன் அவளை தலயணையில் படுக்க வைத்தவன் அவள் நெற்றியில் முத்த்மிட்டு விலக முயன்றவனுக்கு விலக முடியவில்லை…  சாதனா  அபியின் சட்டை காலரை பிடித்து கொண்டே உறங்கி யிருந்தாள்.. “அம்மு” என்று அவளை கொஞ்சியவன் அவளின் உறக்கம் கலையாதவாறு.. அவளிடமிருந்து தன் சட்டையை விடுவித்து கொண்டான்.. மீண்டும் அவளுக்கு முத்தமிட்டுவிட்டு, அவளின் அறையில் இருந்து வெளியேறினான்..

  காலையில் எப்பவும் போல் விழித்த சாதனாவிற்கு அருகில் ஒரு கிஃப்ட் பார்சல் இருக்க.. இது யாரு வச்சிருப்பா என்று யோசித்தவளுக்கு  சில நிமிடங்கள் கழித்த பிறகே நேற்று இரவு நடந்தது நினைவிற்கு வந்தது..அவளின் முகம் மலர்ச்சியை தத்தெடுக்க ஆவலாக அதை பிரித்து பார்த்தவள் வியப்பில் ஆழ்ந்தாள்.. வெங்காய கலரில்.. சில்வர் பார்டர் போட்ட அந்த உயர்தர காட்டன் சேலை அவளின் மனதை மிகவும் கவர்ந்தது.. ஆசையுடன் அதை வருடி கொடுத்தவள்.. அந்த பார்சலில் லெட்டர் இருக்க.. அதை எடுத்து படித்தாள் “இதை கட்டிட்டு ரெடியா இரு பேபி..உன்ன கட்த்திட்டு போக நான் வந்துட்டு இருக்கேன்.. இப்படிக்கு உன் மனூஎன்று இருக்க.. “ஃப்ராடு” என்று எப்பவும் போல் அவனை செல்லமாக வைது கொண்டு குளியலறை சென்றாள்…

குளித்து முடித்தவள்.. அவன் கொடுத்த சேலையை அணிந்து கொண்டு கண்ணாடி முன் நின்றவள்..சேலையை ஒரு முறை வருடிவிட்டு.. தன்னை முன்னும் பின்னும் ஒரு முறை பார்த்தவள்.. “ரசனைக்கார்ரர் மனு நீங்க..” என்றபடி கிளம்பி தயாரானவள்.. மங்கையை பார்ர்க்க கிச்சனுக்கு வர… சாதனாவை பார்த்த மங்கை அவளின் அழகில் “என் மகள் சாதனாவா இது..” என்று ஆச்சரியத்தில் தன் கண்களை கசக்கிவிட்டு நன்றாக பாத்தார்..அவரின் செயலில் ”என்னம்மா நீங்க கிண்டல் பண்றிங்க “ என்று சிணுங்கி கொண்டே அவரின் தோளில் சலுகையாக சாய்ந்து கொண்டாள்… மங்கை அவளுக்கு திருஷ்டி கழித்தவர்..” நல்ல வேளை வாசு அண்ணி குடும்பத்தோட வ்ர்றப்ப நீ எதுவும் மறுத்து பேசுவியோன்னு பயந்துட்டே இருந்தேன்… அது மாதிரி எதுவும் இல்லாம நீயே ரெடி ஆகி வந்துட்ட…” என்றவர் (நான் என் மனு அவங்க குடும்பத்தோட வர்றாங்கன்னு ரெடியாகி இருக்கேன்மா.)“ ஆமா இந்த சேலை எப்ப எடுத்தது…? ரொம்ப அழகா இருக்கு..” என கேட்க அது.. வந்து… அது..

என திணறுவதிலேயே இதை யார் எடுத்திருப்பார்கள் என்று புரிந்து விட்டது மங்கைக்கு…”சரி.. சரி விடு.அவங்க இன்னும் பத்து நிமிசத்துல வந்துருவாங்க.. இந்த பூவ வச்சுக்க..” என்றவாறே அவரே அவளின் தலையில் பூவை வைத்துவிட்டார்.. “க்காலையில் இருந்து மனு இன்னும் போன் பண்ணலையே..? வசும்மா வர்றதுகுள்ள மனு வந்துரணும் கடவுளே..” என்று வேண்டிகொண்டு அவனை அழைக்க..முதல் ரிங்கிலேயே எடுத்தவன்..”ஆன் தி வே பேபி.. இன்னும் அஞ்சு நிமிசத்துல நாங்க அங்க இருப்போம்..” என்றபடி போனை கட் செய்தான்..

மங்கை அனைத்தும் தயாராக வைத்துவிட்டு சாதனாவை அழைத்தவர்… “ நீ உள்ள போ சாதனா மாப்பிள்ளை வீடு வந்ததும் நான் கூப்பிட்றேன்..” என்று அவளை உள்ளே அழைத்து சென்றார்.. சாதனாவிற்கு மனது படபடவென்று அடித்து கொண்டது.. ”கடவுளே யார் மனசும் சங்கடப்படாம எல்லாம் நல்லபடியா நடக்கணும்” என்று வேண்டிக்கொண்டு படபடக்கும் இதயத்தோடு அபியின் வரவிற்காக காத்திருந்தாள்…     

அத்தியாயம் 25

சாதனா தன் அறையில் படபடக்கும் இதயத்தோடு காத்திருக்க… அந்த இதயத்தில் அமர்ந்திருந்தவனோ சவகாசமாக ஒரு பாடலை ஹம் செய்துகொண்டே காரை ஒட்டி சென்றான்..வாசுகி “ஏண்டா நாங்க எல்லாம், சாதனா உண்மை தெரிஞ்சதும் என்ன சொல்வாளோ..ன்னு டென்சனோட வந்தா, நீ என்னடான்னா சாதரணமா பாட்டு பாடிக்கிட்டே வர்ற..? என்று கோபத்தோடு கேட்க.. “ஏம்மா ஒரு மனுசன் பாட்டு பாட்றது தப்பா..என்ன? உங்களுக்கு இருக்கிற டென்சனைவிட எனக்குத்தான் அதிகமா இருக்கு… அதனாலதான் பாட்டு பாடி… என்னோட டென்சனை குறைக்க ட்ரை பண்றேன்..” என்றவனை

”ஓ பில்டிங்க் ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக்கா…? என்று அவனை கேலி பேசியவர்.. “இதெல்லாம் முதன் முதல்ல கோவில்ல எனக்கு மெஸ்ஸேஜ் அனுப்பினியே அப்ப தோணிருக்கணும்.. சாதனா எங்கிட்ட எதாவது கேட்டா..நாங்க எல்லாரும் உன்னையத்தான் கை காட்டுவோம்..” என்று கூற..

தன் அன்னையை முறைத்தவன் “எட்டப்பி..”  என்று திட்டிவிட்டு.. காரை செலுத்தியவன் சாதனாவின் வீட்டில் நிறுத்தினான்.. அறையில் இருந்த சாதனா அபிக்கு நூறு முறையாவது அழைத்திருப்பாள்… அனைத்தும் நாட் ரீச்சபிள் என்று வரவே…அவள் இதயம் மேலும் வேகமாக துடித்தது.. “மனு சீக்கிரம் வந்துருங்க மனூ” என்று அவனை மனதில் அழைத்தபடி இருக்க.. “சாதும்மா வாசு அண்ணி அவங்க பையனோட வந்துட்டாங்க.. வாம்மா..” என அழைக்க.. அதே நேரம் “பேபி நான் வந்துட்டேன் பேபி.. சீக்கிரம் வெளிய வா…. நாங்க உனக்காக வெயிட்டிங்..” என்று குறுஞ்செய்தி வர.. வேகமாக வெளியே வந்தவளின் கண்களுக்கு..

அபியை தவிர வேறு யாரும் அவள் கண்களுக்கு தெரிய வில்லை.. வேகமாக அவனை நெருங்கியவள்.. “மனு வந்துட்டிங்களா…” என்று சந்தோச நிம்மதியுடன் கேட்டவள்.. அவனின் கையை பிடித்து.. மங்கையிடம் வந்தவள்..”அம்மா என்ன மன்னிச்சிருங்கம்மா.. நான் மனுவைதான் விரும்பறேன்..அவங்க பக்கத்துல இருந்தா எனக்கு ரொம்ப பாதுகாப்பா இருக்கிறமாதிரி இருக்கும்மா…” தயவு செய்து மறுப்பு ஏதும் சொல்லிராதிங்கம்மா என்று கூறியவள்.. வாசுகியிடம் திரும்பி…”என்னை மன்னிச்சிருங்க வசும்மா…எனக்கு உங்களையும் தனாப்பா, பாட்டி எல்லாத்தையும் ரொம்ப ரொம்ப புடிக்கும்..நான் மனுவை பார்க்கிறதுக்கு முன்னாடி நீங்க கேட்டிருந்திங்கன்னா..? ஒருவேளை அதைபத்தி யோசிச்சி இருப்பேனோ என்னவோ… ஆனா இப்ப என்னால உங்க மகனை கல்யாணம் பண்ணிக்க முடியாது.. வசும்மா… 

இந்த காரணத்தினால, எம்மேல கோவப்பட்றாதிங்க வசும்மா நீங்க கோவப்பட்டாலோ, சங்கடப்பட்டாளோ எனக்கு ரொம்ப அழுகையாவரும்  ” என்று அழுதபடி கூறியவளை, வேகமாக அணைத்து கொண்ட வாசுகி.. அபியிடம் ” டேய் போதுண்டா இதுக்கு மேலையும் பிள்ளைய அழவைக்காத.. ஒழுங்கா நீயே எல்லாத்தையும் சொல்றியா..? இல்ல நான் ஒண்ணுக்கு ரெண்டா போட்டு கொடுக்கவா..?. என்று அவனை மிரட்ட.. சாதனா அவரை புரியாத பார்வை பார்த்தாள்.. அவள் பார்வையின் அர்த்ததை புரிந்து கொண்டவர்கள் அபியை பார்க்க.. அவன் சாதனாவிடம்..”பேபி நேத்து நான் என்ன சொன்னேன் என் அம்மா அப்பாவோட வந்து உன்னை பொண்ணு கேட்கிறேன்னு சொன்னேன் இல்லையா,,? அவள் பதில் பேசாமல் கண்களில் வழிந்த நீரோடு அவனையே பார்க்க..  

”இவங்கதான் என் அம்மா வாசுகி, அப்பா தன சேகர்.. பாட்டி பாக்கியம்..இவங்க” என்று மங்கையை காட்டியவன் “இவங்களை பத்தி உனக்கு தெரியும் இருந்தாலும் சொல்றேன்… இவங்க என்னோட அத்தை… அதாவது என் பேபியோட அம்மா..” என்று நிறுத்தியவன்.. இப்ப உனக்கு உங்க வசும்மாவோட பையனை கட்டிக்க சம்மதமா..? என்று கேட்டவனை,  திகைத்து பார்த்தவள்.. தன்னை சுதாரித்து கொண்டு, பார்வையில் அழுத்தத்துடன் நீங்க என்ன சொல்றிங்க..? எதுக்காக இந்த நடிப்பு..? எல்லாம்  கொஞ்சம் விளக்கமா சொல்றிங்களா..? என்று முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு கேட்க.. “பேபி ப்ளீஸ் கொஞ்சம் கோப படாம நான் சொல்றதை கேளுடா..” என்றவனிடம்

தன் கண்களை துடைத்துக்கொண்டு.. “சொல்லுங்க என்ன சொல்ல போறிங்க..?” என கேட்க.. “பேபி நீ எங்க எல்லார் கூடவும் இயல்பா பழகணும்னுதான் நாங்க எல்லாரும் உன்கிட்ட இருந்து உண்மையை மறச்சிட்டோம்..” என்றவனை அனைவரும் கோபமாக பார்க்க..”சரி.. சரி இதுக்கெல்லாம் நாந்தான் காரணம் போதுமா,,? அதுக்காக ஒரு சின்ன பையனை எல்லாரும் இப்படி முறச்சா என்ன செய்வேன் மீ பாவம் தான..” என்று தன்னை தானே பரிதாப்ப்பட்டு கொண்டவன்…பின்பு சீரியஸாக..”பேபி இது எல்லாம் உன்னோட நல்லதுக்குத்தாண்டா… அங்க நம்ம வீட்டுக்கு நீ வ்ர்றப்ப உனக்கு எந்த சங்கடமும், வரக்கூடாதுன்னுதான்.. சொல்லலை.. அங்க குன்னூர்ல உன் மனமாற்றத்தை தெரிஞ்ச உடனே சொல்ல்லாம்னுதான் நினச்சேன்..”

“இந்த வாரத்துல உன் பிறந்த நாள் வருதே..அப்பா ஒரு சந்தோச சர்பிரைஸா இருக்கட்டும் என்று யார்க்கிட்டையும் உண்மைய சொல்ல வேண்டாம்னு நாந்தான் சொன்னேன்.. சாரி பேபி”  என்று நீண்ட விளக்கம் கொடுத்தவனை…கூர்மையாக பார்த்தவள்..”சோ எல்லாரும் சேர்ந்து என்னைய ஏமாத்தி முட்டாளாக்கியிருக்கிங்க.. அப்படித்தானே.? என்று கோபமாக கேட்டவளை திகைத்து பார்த்தவனை பார்த்த மங்கை.. “என்ன சாதனா பெரிய வார்த்தை எல்லாம் பேசற..? தம்பிதான் உன் நல்லதுக்குத்தான் எல்லாம் செஞ்சேன்னு சொல்றாருல்ல..… அதை புரிஞ்சுக்காம ஏன் இப்படி பேசற” என அதட்ட

” நீங்க சும்மா இருங்கம்மா இதுகெல்லாம் நீங்களும் தான உடந்தை..உங்களுக்கு, உங்க மகளை விட மாப்பிள்ளை முக்கியமா போயிட்டாருல்ல..?இந்த ஒரு வாரமா என் மனசு பட்டபாடு எனக்குத்தான் தெரியும்..உங்க முகத்தை பார்க்கவும் முடியாம உங்ககிட்ட உண்மைய சொல்லவும் முடியாம எப்படி தவிச்சேன் தெரியுமா..? இப்பவே இப்படி பொய் சொல்றாங்களே கலயாணத்துக்கு பிறகு எவ்வளவு பொய் சொல்வாங்க..அதனால.” என்று பேச்சை ஒரு நொடி நிறுத்தியவளை..

அபி மூச்சு விடவும் மறந்து பார்த்து கொண்டிருக்க..”எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்..  நீங்க சரியான ஃப்ராடு.. ஒவ்வொரு தடவையும் எப்ப உண்மைய பேசுவிங்க, எப்ப பொய் பேசுவிங்கன்னு தெரியாம.. நான் தினம்.  தினம்  குழம்பிக்கிடே இருக்கணும் இது எனக்கு தேவையா..” சொல்லுங்க.. அதனால இதோட எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்..” என்றுவிட்டு அவன் பேசுவதற்கு கூட இடமளிக்காமல்.. அவள் அறைக்கு சென்று விட்டாள்…

 அவள் சென்றதையே பார்த்து கொண்டிருந்த அபி..சோர்ந்து போய் சோஃபாவில் அமர்ந்துவிட..அதுவரை அமைதியாக சாதனா பேசுவதை கேட்டுகொண்டிருந்த அபியின் குடும்பம்.. அபியிடம் வந்து..”இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன் கேட்டியா,,? இப்ப பாரு மொத்தமா வேண்டாம்னு சொல்லிட்டா.. இப்ப எப்படி அவளை சமாதானம் செய்ய போற அபி..?” அவன் பதில் கூறும் முன் மங்கை பதட்டமாக அவர்களிடம் ”அண்ணி தப்பா எடுத்துக்காதிங்க அண்ணி அவ ஏதோ கோவத்துல அப்படி பேசிட்டா.. நான் அவளை சாமாதானம் செய்து கூட்டிட்டு வர்றேன்”  என்று கிளம்பியவரை தடுத்த அபி… “இல்லத்தை வேண்டாம், சாதனாவோட கோபத்துக்கு நாந்தான் காரணம்.. அதனால நானே அவளை சமாதானம் செஞ்சு கூட்டிட்டு வர்றேன்..” என்று அவளின் அறைக்கு சென்றான்.. 

 

அங்கு கட்டிலில் முது காட்டி அமர்ந்திருந்தவள்… அவனின் வரவை உணர்ந்து.. இன்னும் நன்றாக திரும்பி அமர்ந்து கொண்டாள்.. அவன் பெருமூச்சுடன்..”பேபி பிளீஸ் பேபி..இந்த ஒருதடவ என்னை மன்னிச்சிடேன்..இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்..நான் உன்னோட மனுதான.. ப்ளீஸ் பேபி..” என்று கெஞ்யசிவனிடம் “உங்களை மன்னிக்க தயரா இல்லை.. நீங்க போகலாம்” என்றவளின் முதுகு குலுங்கியது..  சரி சரி நான் போறேன் ஆனா தயவுசெஞ்சு அழாத பேபி.. இன்னைக்கு உனக்கு பிறந்த நாள் உன்ன சந்தோசமா வச்சுருக்னும்னு நினச்ச நானே உன்னோட அழுகைக்கு காரணமாயிட்டேன்..என்ன மன்னிச்சிரு பேபி..” என்றவன் அப்பொழுதும் அவள் உடல் குலுங்குவதை கண்டவன்.. 

வேதனையுடன், அவளின் கண்ணீரை துடைப்பதற்காக…அவள் அருகில் சென்று முகத்தை நிமிர்த்தியவன்.. அவளின் முகத்தை பார்த்து திகைத்து நின்றுவிட்டான்.. அதுவரை சிரிப்பை தன் வாய்க்குள்ளேயே அடக்கி இருந்த சாதனா.. அவனின் திகைத்த முகத்தை பார்த்தவுடன் வாய்விட்டு சிரித்தாள்.. அவளின் சிரிப்பை பார்த்தவன் “ஙே..” என்று விழித்து கொண்டு இருதான்.. “என்ன உங்களுக்கு மட்டும் தான் சர்பிரைஸ் கொடுக்க தெரியுமா..? “ என்றவள் ”என்ன சார் நாங்க குடுத்த சர்பிரைஸ் எப்படி இருக்கு..? ம்ம் “ என்று விழி உயர்த்தி கேட்டவளிடம், விரும்பியே தொலைந்து, அவளையே பார்த்து கொண்டிருந்தவன்…அவளின் நாங்க.. பன்மையான் உச்சரிப்பில்.. “அப்ப உனக்கு முதல்லயே உண்மையெல்லாம் தெரியும்..அப்படித்தான..” என்றவன்  ” ஆமா நீங்கன்னா வேற யாரு உங்கூட கூட்டு சேர்ந்திருக்கா.. என்னோட கணிப்பு சரின்னா..   உன்னைய இப்படி பேச சொன்னது உன்னோட வசும்மாதான..?.. தன் அன்னையை பற்றி அறிந்தவனாக கேட்க..

” ஏன் உங்களுக்கு உங்க அத்தை  நேத்து உதவி செஞ்சமாதிரி.. எனக்கு எங்க அத்தை உதவி செய்ய மாட்டாங்களா…? என்று நக்கல் அடித்தவளை முறைத்தவன்.. “என்ன சொல்ற பேபி நேத்து அத்தை எனக்கு என்ன உதவி செஞ்சாங்க..”  என்று புரியாமல் கேட்டவனிடம்.. “ம்ம் நேத்து என் ரூமிற்கு வர்றதுக்கு அவங்கதான அனுமதி தந்தாங்க..” என்றவளிடம்.. “சே.. சே இல்ல பேபி.. எவ்வளவுதான் என் மேல நம்பிக்கை இருந்தாலும்..அது எப்படி அத்தை அந்த நேரத்துல உன் ரூமிற்கு வர சம்மதிப்பாங்க…” என்றவனிடம்… “அப்பறம் எப்படி வந்திங்க..” என்று குழப்பமாக கேட்டவளிடம்.. 

“ஆமா இது பெரிய ரிப்பன் பில்டிங் பாரு இதுல ஏறி வர்றது எவ்வளவு கஷ்டம்” என்று கிண்டல் செய்தவனை முறைத்தவள்..”சரி சரி முறைக்காத.. எனக்கு, உன்னோட பிறந்தநாளுக்கு நேரடியா வாழ்த்து சொல்லணும்னு தோணுச்சு.. அந்த நேரம் உனோட முகத்துல வர்ற சந்தோசத்தை பார்த்து ரசிக்கனும்னு தோணுச்சு.. அதான் யாருக்கும் தெரியாம.. பைப்ப புடிச்சு மேல ஏறி வந்தேன்.” என்றவனை காதல் பொங்க பார்த்தவள் “ஃப்ராடு..” என்று காதலோடு திட்ட அதுவரை அவளை பார்க்காமல் சுவற்றை பார்த்து பேசிக்கொண்டிருந்தவன் அவளை பார்க்க.. தன் முக பாவனையை மாற்றி கொண்டாள்.. சரி சரி பேச்ச மாத்தாத  ”ஆமா நான் தான் வசும்மாவோட பையன்னு உனக்கு எப்ப தெரிஞ்சது..? எப்படி தெரிஞ்சது…” என்றவனிடம் அவன் கையில் ஒன்றை திணிக்க,  அதை பார்த்தவன்..” என்னோட பர்ஸ் உங்கிட்ட எப்படி…” என்று யோசித்தவன்.. “ஓ நேத்து வந்தப்ப தவறி விழுந்திருச்சா..” என்றவன் அதை பிரித்து பார்க்க அதில் ஒருபக்கம் சாதனாவை குன்னுரில், அந்த பூங்காவில் பச்சை நிற ரோஜாவின் அருகில் எடுத்த போட்டோவும்,  மறு பக்கத்தில் அவன் குடும்பத்துடன் இருந்த போட்டோவும்  இருந்தது… 

“சோ அம்மணி இதை பார்த்துட்டுதான் அவ்வளவு ரியாக்‌ஷன் பண்ணுனிங்களா..? சரி இதுல வாசுகி எப்படி வந்தாங்க..? என்று தன் அன்னையை நினைத்து கோபத்துடன் கேட்டவனை…”ஓய் ஒழுங்கா எங்க அத்தையை மரியாதையா பேசுங்க.. இல்லன்னா நான் எதுவும் சொல்லமாட்டேன்..”  என்று முறுக்கியவளிடம் ”சரி சரி உங்க அத்தைய நான் ஒண்ணுமே சொல்லலை போதுமா..? சரி என்ன நடந்ததுன்னு சொல்லு.?.”என்றவனிடம் நேற்று நடந்ததை கூற தொடங்கினாள்.. “நேத்து நீங்க என்ன தூங்க வச்சுட்டு போய்ட்டிங்கல்ல.. எனக்கு ரொம்ப சீக்கிரமாவே முழிப்பு வந்துருச்சு.. சரி முகம் கழுவிட்டு வரலாம்னு எழுந்தா நீங்க  கட்டில்ல இன்னொரு கிஃப்ட் வச்சுருந்திங்க.. 

ஆர்வத்தோடு அத எடுக்கிறப்பத்தான் உங்களோட பர்ஸ்  அதுல இருந்து விழுந்துச்சு..எடுத்து பார்த்ததும்.. எனக்கு ரொம்ப அதிர்ச்சிதான்..கோபமும் கூடத்தான் உடனே உங்களுக்கு போன் பண்ணி நாலு வார்த்தையாவது நறுக்குன்னு கேட்கணும்னு அந்த நிமிசம் தோணுச்சு.. ஆனா நீங்க எது செஞ்சாலும் அது என்னோட நன்மையை மனசுல வச்சுதான் செய்விங்கன்னு என்னோட உள்மனசு சொல்லுச்சு.. அதான் உங்க விளக்கத்துக்காக பொறுமையா காத்திருந்தேன்.. “ என்றவள்.. ”உங்க கூட சேர்ந்து வசும்மாவும் என்ன ஏமாத்துனாங்கல்ல.. அதான் ஒரு சின்ன ஷாக் தரலாம்னு.. போன் போட்டேன்.. அவங்க எடுத்தவுடனே “வசும்மா எனக்கு உங்க பையனை கட்டிக்க மனப்பூர்வமா சம்மதிக்கிறேன்..ன்னு சொன்னேன்

அந்தப்பக்கம் வசும்மா கொஞ்சம் அதிர்ச்சி ஆகிட்டாங்க போல..நான் ”என்னாச்சு வசும்மா.. நான் சம்மதம் சொன்னதுல உங்களுக்கு சந்தோசம் தான் பின்ன ஏன் எதுவும் சொல்லாம அமைதியா இருக்கிங்கன்னு கேட்டேன்”  அவங்க உடனே ”இது உங்க எம் டிக்கு தெரியுமான்னு”  கேட்டாங்க… ”இது எதுக்கு வசும்மா எங்க எம்.டிக்கு தெரியணும்… எனக்கு உங்க பையனை புடிச்சிருக்கு… இன்னும் நான் அவங்களை பார்க்காததனால நான் உங்க கிட்ட சம்மதம் சொல்றேன் அவ்வளவுதான்..நான் உங்களுக்காக… இல்ல இல்ல உங்க பையன் மிஸ்டர் அபிமன்யூவிற்காக வெயிட் பண்றேன்னு சொல்லிட்டு போனை வைக்க போனேன்..

வசும்மா ஹே கேடி உனக்கு, என் பையந்தான் உங்க எம் டி அபிமன்யூன்னு தெரிஞ்சிருச்சுல்ல..ன்னு கேட்டாங்க..நான் அச்சரியத்தோட உங்களுக்கு எப்படி வசும்மா தெருஞ்சதுன்னு கேட்டேன்..அதுக்கு அவங்க..நீ கடைசியா சொன்னியே உங்க பையன் மிஸ்டர் அபிமன்யூவிற்காகன்னு அதுலதான் கண்டுபுடிச்சேன்.. என் பையனோட பேர் அபிமன்யூனு நான் உங்கிட்ட சொல்லவே இல்லையே அத வச்சுதான் கண்டுபிடிச்ச்சேன்” னு சொன்னாங்க.. ஆனாலும் வசும்மா ரொம்ப ஷார்ப்..” என்று வாசுகியை பற்றி சிலாகித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.. “அப்பறம் என்ன வசும்மா நீங்க எதுக்காக இப்படி செஞ்சிங்கன்னு சொல்ல வந்தாங்க.. நான் தான் அதை மறுத்து, நீங்களே சொல்லணும்னு,  வசும்மாக்கிட்ட சொல்லிட்டேன்.. ”ஆனாலும் இந்த ஒருவாரமா என்னை தவிக்க வச்சாங்கல்ல அதுக்கு எதாவது செய்யணும்னு” கேட்டேன்.. 

”என் பையனை அழ வைக்கிறதுக்கு எங்கிட்டேயே ஐடியா கேட்கிறாயா..?”னு. மிரட்டினாலும்… வசும்மாதான் இப்படி.. இப்படி செய்ன்னு இன்ஸ்ட்ரக்ஸன் கொடுத்தாங்க..” அப்பாவியாய் முகத்தை வைத்துகொண்டு,  விளக்கமளிக்கிறேன் பேர்வழி என்று வாசுகியை மாட்டிவிட்டாள்… அவரின் அன்பு மருமகள்.. இவற்றையெல்லாம் கேட்ட அபி.. தன் வாய்மேல் கை வைத்து… ”அடப்பாவிங்களா… என்னா நடிப்பு.. என்னா ஒரு அழுகை.. ம்ம்ம் என்னைய ஃப்ராடுன்னு சொல்லிட்டு, கடைசில.. என்னையவிட நீங்க ஃப்ராடு பண்ணிருக்கிங்க..உன்னை என்ன செய்யறேன்னு பாரு..” என்று கோபமாக பேசி அவளின் காதை திருக, அருகில் வந்தவனை கட்டிலில் தள்ளிவிட்டு.. 

“வசும்மா… என்ன அடிக்க வர்றாங்க.. காப்பாத்துங்க..” என்று கத்தி கொண்டே வாசுகியின் பின்னால் மறைந்து கொண்டாள்.. அவளை துறத்தி வந்த அபியை தடுத்து நிறுத்தியவர்..” ஏண்டா என் மருமகளை வம்புக்கு இழுக்கற..? அவளை சமாதானம் செஞ்சு கூட்டிட்டு வாடான்னா.. அவளை துரத்திட்டு வர்ற..? என்று அதட்டிய அன்னையை அபி முறைக்க.. சாதனா “அப்படி சொல்லுங்க வசும்மா.. என் காதை இப்படி திருகுறாங்க வசும்மா..“ என்று அவள் செய்முறை விளக்கமளித்து.. “இங்க பாருங்க.. என் காது எப்படி செவந்து போச்சுன்னு..” என்று உதட்டை பிதுக்கி பரிதாபமாக முகத்தை வைத்து கொண்டவளை உள்ளுக்குள் ரசித்தாலும்.. வெளியே கொலை வெறியோடு முறைத்தவனை.. “அவளை எதுக்குடா முறைக்கிற.. உன்னைய போனா போகுதுன்னு மன்னிச்சு விட்டிருக்காள்ள அதை சொல்லணும்…” என்று அவனை அதட்டிய அன்னையிடம்

 “யூ டூ ப்ரூட்டஸ் மா.. உங்களுக்கு கொஞ்சம் கூட பையன் மேல பாசமே இல்லை.. உங்க மருமக வந்தவுடனே அவகூட சேந்துட்டிங்கல்ல.. கார்ல வர்றப்ப என்ன நடிப்பு… கல்யாணத்துக்கு முன்னாடியே உங்க கூட்டணி என்னை இப்படி கலங்கடிச்சிருச்சே.. இது நல்லது இல்லையே…ம்ம் என்ன பண்ணலாம்… எப்பிடி இவங்களை பிரிக்கலாம்… சரி இதுக்கும் ஒரு பிளான் போட்ருவோம்” என்று தாடையை தடவி யோசித்தவனை.. மதுவும், வாசுகியும் இருபுறமும் வந்து அவனின் காதை திருகினார்கள்.. “படவா இனிமேல் பிளான் கிளான்னு எதாவது சொன்னன்னு வை உன் காது உனக்கு இல்லை மகனே என்று போலியாக அதட்டினார்கள்.. 

அவன் மங்கையிடம் திரும்பி “அத்தை ஒரு சின்ன பையனை போட்டு இப்படி கொடுமை படுத்தறாங்க நீங்க என்னன்னு கேட்க மாட்டிங்களா..” என்று பரிதாபமாக கேட்டவனிடம்… “ என்ன மாப்பிள்ளை..” என்ற் அவரும் தன் பங்கிற்கு அவனை கிண்டலடிக்க.. “ஆ ஹா ஒண்ணு கூடிட்டாங்களே…ம்ம் இனிமேல் நம்ம பேச்சு எடுபடாது.. யூஸ் மீ.., யூஸ் மீ” என்றவாறு அவன் கையை கட்டிகொண்டு, தலை குணிந்து பணிவாக சொல்லி நிற்க..  அவனின் பாவனையை பார்த்தவர்கள் வாய்விட்டு சிரிக்க.. அந்த இடமே கலகலப்பால் நிரம்பி வழிந்தது…  அனைவரும் சாதனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி, பரிசளித்தனர்… பின்பு அனைவரும் உணவருந்த சென்றார்கள்.. அனைவருக்கும் பரிமாற போன மங்கையையும், சாதனாவையும் தடுத்த வாசுகி, “நம்மளே பரிமாறிக்கலாம் அண்ணி, நீங்களும் வாங்க..”என்று அவர்களையும் உண்ண வைத்தார்..

உண்டு முடித்து அனைவரும் கோவிலுக்கு சென்றார்கள்… அபியின் காரில் சாதனாவும், அபியும் வர, தனசேகரின் காரில், மற்ற அனைவரும் சென்றார்கள்.. காரில் செல்லும்போது சாதனா அபியின் கைவளைவில் தன் கையை கோர்த்து கொண்டு,  அவனின் தோளில் சாய்ந்து கொள்ள, அபியும் அவள் உச்சியில் ஒரு முத்தமிட்டு காரை செலுத்தியவன். “பேபி என் மேல உனக்கு கோபமில்லையே”  சிறிது வருத்த்துடன் கேட்க மறுப்பாக தலயட்டியவள், . “ மனு இந்த பிறந்தநாள் என்னால மறக்கவே முடியாது..அம்மா ரொம்ப சந்தோசமா இருந்தாங்கள்ள.. அப்பா இருந்தப்போ எப்படி கலகலன்னு இருந்தாங்களோ..அதே மாதிரி இன்னைக்கு இருந்தாங்க…மனு.. அப்பா இத மேல இருந்து பார்த்துட்டு இருப்பாங்கல்ல.. ரொம்ப சந்தோசப் படுவாங்கல்ல.. இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான் மனு..” என்று கூறியவளிடம்

“பேபி நோ ஃபீலிங்க்ஸ்.. இன்னும் நீ ஃபீல் ப்ண்ணினேன்னா..நம்ம கதையை படிச்சுட்டு இருக்கிறவங்க.. அட போங்கடா இந்த சாதனா எப்ப பார்த்தாலும் ஒரே அழுகாச்சியா இருக்குன்னு சொல்லிட்டு வேற கதைக்கு போயிருவாங்க..அதனால அழாத பேபி.” என்று கேலி பேசியவனை புரியாமல் பார்த்தவள் ”நம்ம கதைய படிச்சிட்டு இருக்காங்களா..?” என்ன சொல்றிங்க.. என்று கேட்டவளிடம் “அச்சோ உளறிட்டேனா..” என்று முணுமுணுத்தவன்..அது ஒண்ணும் இல்ல பேபி கோவில்ல கதாகாலட்சேபம் சொல்றாங்களாம்.. நம்ம அதுக்குள்ள போயாகணும் அதை சொல்லிட்டு இருந்தேன்.. வேற ஒண்ணும் இல்ல பேபி..” என்று அப்பவியாய் சொன்னவனை..  “ஃப்ராடு..” என்றுவிட்டு அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்..

அவளின் மனம் வேறு திசையில் திரும்பியதை அறிந்தவன் நிம்மதியுடன், காரை செலுத்தினான்..கோவிலுக்கு சென்றவர்கள் சாதனாவின் பேரில் அர்ச்சனை செய்துவிட்டு.. அங்கிருந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கிவிட்டு.. சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தார்கள்.. அபி சாதனாவின் நிச்சயதார்த்த விழாவை  எப்பொழுது வைப்பது என்று பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்க.. அபி “நாளை மறுநாள் உங்களுக்கு கல்யாண நாள் வருதுல்லம்மா..அதோட சேர்ந்து எங்க நிச்சயதார்த்தையும் வச்சுருங்கம்மா.” என்று முந்திகொண்டு சொல்ல, அனைவரும் அவனை பார்த்து சிரிக்க அசடு வழித்தான்..அவன்.. பெண்களின் வெக்கம் அழகு என்றால், ஆண்களின் வெட்கம் பேரழகு என்று எப்பொழுதோ படித்தது அவளின் நினைவிற்கு வர.. சாதனா அவனை வெகுவாக ரசித்தாள்..

அவளின் பார்வையை உணர்ந்தவன் “என்ன” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க.. ”ம்; கூம்” என்று தலை அசைத்து குணிந்து கொண்டாள்..அவர்கள் அனைவரும் தனசேகர்-வாசுகி கல்யாண நாளன்றே அபி- சாதனாவின் நிச்சய விழாவையும் சேர்த்தே வைப்பதென்று முடிவு செய்யப்பட்டது.. திருமணம் இன்னும் ஒருவாரத்தில் நல்ல முகூர்த்த நாள் வருவதாக ஐயர் சொல்ல அந்த நாளே முடிவு செய்யப்பட்டது… அனைவரும் கோவிலை விட்டு வெளியே வந்து, உயர்தர ஹோட்டலில் மதிய உணவை முடித்தார்கள்.. வாசுகி மங்கையிடம்.. இருவரின் திருமண விசயம் பற்றி பேசுவதற்காக.. மங்கையை தங்கள் வீட்டிற்கு அழைத்தார்..அபி வாசுகியிடமும், மங்கையிடமும்.. “நீங்க பேச்சிட்டு இருங்க, நான் சாதனாவை கொஞ்சம் வெளியே கூட்டிட்டு போறேன்..” என்று சொல்லிவிட்டு, அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தவன்…

சாதனாவை அழைத்துகொண்டு வெளியே சென்றான். “எங்க போறோம்?” என்று ஆவலாக கேட்டவளிடம் ”சஸ்பென்ஸ்..” என்றுவிட அவளும் ஃப்ராடு என்றுவிட்டு அமைதியாகிவிட்டாள்…சிட்டியை தாண்டி சுமார் ஒருமணிநேர பயணம் முடிவில அவன் அழைத்து சென்ற இடம் வரவும்…அபி சாதனாவை இறங்க சொன்னான்..  இறங்கியவளை உள்ளே அழைத்து செல்ல.. “அபி அண்ணா..” என்ற சிறு குழந்தைகளின் அழைப்பு வந்த திசையில் திரும்பி பார்த்தாள்.. சுமார் இருநூறு குழந்தகளுக்கு மேல்.. கையில் ஒரு ரோஜாவை வைத்துக்கொண்டு இவர்களிடம் ஓடி வந்தார்கள்.. சாதனா அபியை பார்க்க.. அவன் புன்னகையுடன் “ இவங்க எல்லாம் உனக்கு வாழ்த்து சொல்லணும்னு ஆசைப்பட்டாங்க.. அதான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன் பிடிச்சிருக்கா? என கேட்க.. “அச்சோ எனக்கு எவ்வளவு சர்பிரைஸ்தான் வச்சுருப்பிங்க..? என்று சந்தோசத்தில் கூறியவளை,”“பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணி” என்று.. அவளுக்கு அனைவரும் வாழ்த்து சொல்லி அந்த ரோஜாவும் அவர்களாக தயாரித்த வாழ்த்து அட்டையும் கொடுத்தனர்.. ஆம் அவன் சாதனாவை அழைத்து வந்தது.. முன்பொருமுறை அலுவலகத்திற்கு வந்திருந்த, எந்த வாழ்த்து அட்டையை பார்த்து சந்தோசப்படாளோ.. அதே ஆதரவற்றோர் இல்லத்திற்குத்தான் அவளை அழைத்து வந்திருந்தான்..

அவள் அனைவருக்கும் நன்றி கூறி, அவர்கள் தந்த ரோஜாவையும் வாழ்த்து அட்டையையும் கை கொள்ளாமல் சந்தோசத்துடன் வாங்கி கொண்டாள்.. பின்பு அனைவருக்கும் அவளின் கையாலையே இனிப்பு கொடுக்க வைத்தவன்.. சிறிது நேரத்தில் அவர்களுடனே ஐக்கியமாகிவிட்டான்.., அவர்களுடன் சேர்ந்து, டென்னிஸ் விளையாடுவது, கபடி  விளயாடுவது சிறுவர்கள் அனைவரும் ஒரு டீமாக இருக்க, இவன் அவர்களுக்கு இனையாக விளையாடினான்… ஆட்டத்தின் போது சட்டை அழுக்காகிவிடும் என்று தன் சட்டையை கழட்டி சாதனவிடம் கொடுத்தவன்.. மீண்டும் விளையாட்டில் ஐக்கியமாகிவிட்டவனை, பெருமையோடும், கர்வத்தோடும் பார்த்து கொண்டிருந்தாள்..

அவளின் மனதில் ” இன்னும் உங்களுக்குள்ள, எத்தனை குணங்கள்தான் ஒளிஞ்சிருக்கு மனு.. கோபத்தில் சிவனாக.., அரவணைப்பதில் தாயாக.. குறும்பு செய்வதில் கண்ணனாக..,” என்று எண்ணியபடி, அவன் கழட்டி கொடுத்த சட்டையில் அவனின் வாசத்தை நுகர்ந்தவளுக்கு.  இதே வாசத்தை எப்பொழுதோ உணர்ந்தது அவளின் நினைவிற்கு வர,, எங்கே என்று யோசித்து கொண்டிருந்தவளை.. சிறுவர்களுடன் சிறுவனாக விளையாடி கொண்டிருந்தவன் அவளை திரும்பி பார்த்து கண்சிமிட்ட.. அவளின் முகம் செக்கர்வானமாய் சிவந்தது.. அவளின் யோசனையை மாற்றிவிட்ட்து.. நேரம் போவது தெரியாமல் அவர்களுடன் விளையாடி கொண்டிருந்தவனை.. அழைக்க தோன்றாமல்,  எழுந்து ஆசிரமத்தை சுற்றி பார்க்க சென்றாள்.. கூடவே ஆசிரமத்தை நிர்வாகிக்கும் பெண்மணியும் அவளுடன் வர, இருவரும் பேசிகொண்டே நடந்தார்கள்..அந்த பெண்மணி.. அபியை பற்றி புகழ்ந்து பேசிவாறே வந்தார்.. “இந்த வாண்டுகளுக்கு அபின்னா அவ்வளவு இஷ்டம்..அவர் இங்க வந்தாலே கொஞ்ச நேரம் கூட அவர உட்கார விடமாட்டாங்க.. ஒரே விளையாட்டுதான்.. அவரும்  தன்னோட உயரத்தை மறந்து இவங்களுக்கு சரிசமமா விளையாடுவாரு… நீங்கதான் பார்த்திங்கல்ல..இங்க எத்தனையோ பேர் வர்றாங்க டொனேசன் தந்துட்டு போறாங்க.

.ஆனா. யாரும் அந்த குழந்தைங்ககிட்ட கொஞ்ச நேரம் கூட பேசமாட்டாங்க.. அவங்க பார்வையில பரிதாபம் இருக்குமே தவிர.. பாசம் இருக்காது..ஆனா அபி தம்பி வந்தாலே முதல்ல இவங்ளை பார்த்துட்டு.. இவங்க கூட கொஞ்ச நேரம் விளயாடி விட்டுத்தான் என்ன பார்க்கவே வருவாரு.. குழந்தைகளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்வார்..” என்று அவனை பற்றி பேசியபடியே வர சாதனா தன்னவனை.. நினைத்து பெருமை கொண்டவள்..எப்பவும்போல் “ஃப்ராடு..” என்று செல்லமாக வைது கொண்டாள்.. 

சாதனாவின் போன் அடிக்க.. அபிதான் அழைத்திருந்தான்.. “பேபி நேரமாச்சு.. உங்க வசும்மா போன் போட்டாங்க போகலாமா..? என கேட்க அவள் “இதோ கிளம்பிட்டேன் என்றவாறே,, அவன் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்..அபியின் சட்டையை அவனிடம் கொடுத்தவள்.. அந்த குழந்தை களிடமும் இனிமேல் அடிக்கடி வருவதாக கூறி விடை பெற்றாள்.. காரை ஓட்டி கொண்டிருந்த அபி சாதனாவிடம் “என்னடா அமைதியா வர்ற..?” என்று கேட்க.. “ஒண்ணுமில்ல மனு மனசு ரொம்ப நிறைவா இருக்கு அதை அப்படியே அனுபவிச்ச்ட்டு வர்றேன்.. அவ்வளவுதான்.. இந்த குழந்தைங்களை பாருங்களேன் தங்களுக்கு யாருமே இல்லன்னு வருத்தபடாம..  வாழ்க்கைய எவ்வளவு பாசிட்டிவா எடுத்துட்டு சந்தோசமா வாழறாங்க… நிச்சயமா இவங்க கிட்ட நம்ம கத்துக்கணும் மனு..” என்றவள்  “இனிமேல் நாம அடிக்கடி இங்க வரணும் என்ன“ என்று கூற “தங்கள் உத்தரவு ராணி” என்றுவிட்டு காரை செலுத்தினான்.. 

நிச்சயதார்த்தமும், திருமணமும்  சிம்பிளாக செய்துவிட்டு ரிசெப்ஷனை விமரிசையாக செய்ய முடிவு செய்திருந்தனர்.. இரண்டு நாட்கள் அபிக்கும் சாதனாவிற்கும்… நத்தையாகவும், பெரியவர்களுக்கு பரபரப்பாகவும் கடந்துவிட்டு  இதோ இன்று தனசேகர் – வாசுகி தம்பதியரின் கல்யாண நாள் மட்டுமல்லாமல்.. அபி சாதனாவின்  நிச்சயமும் இதே நாளில் நடக்க இருப்பதால், அவர்களின்  சந்தோசம் இரட்டிப்பாக இருந்தது..  முதலில் காலையில் தனசேகர் தம்பதியரின் திரும்ண நாளை குடும்ப உறுப்பினர்கள மட்டும் கொண்டாடினார்கள்.. 

காலையில் கிளம்பி கோவிலுக்கு சென்று வாசுகி தம்பதியரின் பேரில் அர்ச்சனை செய்துவிட்டு.. வீடு திரும்பியவர்களை.. அபியும் சாதனாவும் அவர்களை கேக் வெட்ட சொல்லி அழைக்க, தம்பதிகள் இருவரும்  ஒன்றாக சேர்ந்து, அந்த கேக்கை வெட்டி அவர்களுக்கு ஊட்டினார்கள்.. சாதனா சிறிது கேக்கை எடுத்து அபியின் கன்னத்தில் அப்ப, பதிலுக்கு அவனும் சிறிது எடுத்து அவளின் கன்னத்தில் தேய்க்க வர.. அவனுக்கு பிடி கொடுக்காமல் ஒடியவளை.. பிடித்து அவளின் மூக்கு நுனியில் அப்பிவிட்டான்..   அவர்களின் விளையாட்டை பெரியவர்கள் ரசித்திருந்தனர்..  பின்பும் முகம் கழுவி வந்தவர்கள். அவர்களுக்கு வாழ்த்து கூறி பரிசளித்துவிட்டு. அவர்களிடம் அசீர்வாதம் வாங்க ”திருப்பதி போனால் திருப்பம் வரும்னு சொல்வாங்க.. உங்க வாழ்க்கையிலயும் அந்த திருப்பம் வந்திருச்சு.. நீங்க ரெண்டுபேரும் எப்பவும் இதே போல இணைபிரியாம ஒருத்தருக்கொருத்தர் புரிந்து, விட்டுகொடுத்து சந்தோசமா வாழணும்” என்று ஆசிர்வதித்தவர்கள்.. அவர்கள் இருவரையும் அணைத்து கொண்டார்கள்.. சாதனா வாசுகியின் கன்னத்தில் முத்தம் பதித்து..”ரொம்ப அழகா இருக்கிங்க வசும்மா..” என்று பாராட்ட..

பதிலுக்கு அபியும்.” ஏன் எங்க அப்பாவும் தான் அழகு பாரு இந்த வயசிலயும் எவ்வளவு கம்பீரமா இருக்காங்க..” என தந்தைக்கு பரிந்து பேச..  ”இருந்தாலும் எங்க வசும்மா அளவுக்கெல்லாம் தனாப்பா கொஞ்சம் கம்மிதான்..” என்று கேலி பேச “ஒய் எங்கப்பா கம்பீரத்துக்கு உங்க வசும்மாதான் குறச்சல்..” என்று இருவரும் மாறி மாறி கேலி பேச.. “டேய் தங்கங்களா போதுண்டா.. கல்யாண நாள் அதுவுமா.. குதூகலமா இருக்கிற குடும்பத்துல கும்மி அடிச்சுட்டு போய்றாதிங்க.” என்று அழா குறையாக இருவரும் கேட்க, அபியும், சாதனாவும் வாய்விட்டு சிரிக்க அந்த இடமே கலகலப்பாக மாறியது..

பின்பு அனைவரும் மாலை அபி- சாதனாவின் நிச்சயதார்த்த விழாவிற்கு தயாராகினர். மிக நெருங்கிய சொந்தங்கள் மற்றும் அலுவலகத்தில் மதுவையும், பிரபுவையும் மட்டுமே அழைத்திருந்ததால்,  அபி வீட்டு தோட்டத்திலேயே  விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள்… சாதனாவிற்கு சகோதரனாக பிரபுவையே அபி அமர சொல்ல, சாதனாவும், மங்கையும் புன்னகையுடன் அதை மனமார ஒத்து கொண்டனர்….. சாதனாவின் சார்பாக பிரபுவே அண்ணன் முறையில் அனைத்தையும் மிகவும் சந்தோசமாகவே செய்தான்.. சாதனா அபி  வாங்கி கொடுத்த ஆகாய வண்ணம் மற்றும் சில்வர் கலந்த டிசைனர் சேலையில் அபியின் கண்களுக்கு தேவதையாக தெரிந்தவளை, இமை மூடாமல் பார்க்க.. சாதனா அவனின் பார்வையின் வீச்சை தாங்க முடியாமல் நாணத்தில் தலை கவிழ்ந்தாள்..  ”என்னதான் இது நீ வாங்கி கொடுத்த ட்ரெஸ்ஸா இருந்தாலும் இப்படியா அபி வாயில ஈ போறது கூட தெரியாம பார்ப்ப..?” என்று வாசுகி அவனை கிண்டல் பண்ண..

” அரசியல்ல இதெல்லாம்  சகஜமப்பா.. “ என்று சமாளித்தவன் அவளின் ஆடை நிறத்திலேயே கோட் சூட் அணிந்து, ஆண்மையின் இலக்கணமாக கம்பீரமாக இருந்தவன்… தன் அன்னையிடம் “ நீங்க எனக்கு அம்மாவே இல்லை… வில்லி சரியான வில்லி.. போங்க போய் வந்தவங்களை கவனிக்காம.. என்னையவே கவனிச்சுட்டு இருக்கிங்க..” என்று தன்னை கிண்டல் செய்த அன்னையிடம் காண்டாகி பேசினான்..பின்னர் ஐய்யர் வந்து திருமண தேதி குறித்து, அபி சாதனாவின் விரலில் மோதிரத்தை மாட்டும் வரை வாசுகி அவ்வப்பொழுது வந்து அபியை வம்பிழுத்துவிட்டு சென்றார்.. வெளியில் கோபமாக பார்த்தாலும் அபி அன்னையின் குறும்பை ரசிக்கவே செய்தான்.. சாதனாவின் விரலில் அபி வைர மோதிரத்தை மாட்டி விட.. சாதனா இதழ்களில் புன்னகையும் கண்களில் கண்ணீருமாய் அதை ஏற்றுக்கொண்டாள்.. அபி அவளின் கண்ணிரை துடைத்து விட்டு அவளை தோளோடு அணைத்து கொண்டான்..

”இதுக்குத்தான் நான் எங்க அம்மாக்கிட்ட அப்பவே சொன்னேன்.. சாதனா மோதிரம் போட்டா அழுவா..அதுக்கு பதிலா ரெண்டு பெரிய டெய்ரி மில்க் சாக்லேட் கொடுத்தா சிரிப்பான்னு சொன்னேன். கேட்டாங்களா எங்கம்மா.. ” என்றவன் சொன்னது போலவே இரண்டு பெரிய டெய்ரி மில்க் சாக்லேட்டை எடுத்து நீட்ட.. நிஜமாகவே அவளின் முகத்தில் இப்பொழுது புன்னகை அரும்பியது.. இதை எல்லாம்  பூரிப்புடன் பார்த்துகொண்டிருந்த மங்கை… மானசீகமாக தன் கணவரிடம்.. “நீங்க நினச்ச மாதிரியே நம்ம அம்மு ராணி மாதிரி சந்தோசமா வாழ போறாங்க..அவங்களை சந்தோசமா ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று கண்மூடி வேண்டிகொண்டார்..

பின்பு சாதனா அபிக்கு மோதிரத்தை மாட்டிவிட.. சூழ இருந்தவர்கள்..சந்தோச ஆர்ப்பரிப்புடன் கைதட்டி அவர்களை வாழ்த்திட அபி சாதனா வாசுகி தனசேகரிடமும், மங்கை மற்றும், பாட்டியிடமும் ஆசீர்வாதம வாங்கி கொண்டனர்..  பிரபு இருவருக்கு மோதிரத்தை பரிசாக அளித்தவன்.. “நீங்க எனக்கு இப்படி ஒரு கவுரவத்தை தருவிங்கன்னு நான் நினைக்கல பாஸ்..“ என்றவன் சாதனாவிடம் திரும்பி.. “ அவசரத்துல என்னால ஒண்ணும் வாங்க முடியலை.. ஆனா உங்க கல்யாணத்துல ஒரு அண்ணனா இருந்து என்ன செய்யணுமோ அதை கண்டிப்பா செய்வேன்..” என்றவனிடம் “யாருமில்லாம இருந்த எங்களுக்கு புதுசா ஒரு அண்ணன் கிடச்சிருக்கார்.. எனக்கு இந்த சந்தோசமே போதும்.. அண்ணா” எனக்காக நீங்க சிரமப்பட வேண்டாம்”  என்றவளிடம் “ எனக்கும் கூட பிறந்தவங்க யாரும் இல்ல அதனால் நீ எதுவும் சொல்ல கூடாது இது இந்த அண்ணனோட கட்டளை.” என்று செல்லமாக மிரட்டிவிட்டு சென்றான்.

அடுத்து வந்த, மது சாதனாவின் கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொல்ல.. “ஓய் யாரது.. என்னோட இடத்தை சொந்தம் கொண்டாடுவது?” என்று அதட்டிய படி வர.. சாதனா அவனின் பேச்சில் அந்திவானமாய் சிவக்க,, மதுவோ “அச்சோ இது உங்க இடமா இது எனக்கு தெரியம போச்சே..” என்றவள்.. ”சரி இது உங்க ப்ராப்பர்ட்டின்னா.. நீங்களே வச்சுக்குங்க.. நான் வேணா இங்க கொடுக்கறேன்” என்றவள் சாதனாவின் மறு கன்னத்திலும் முத்தம் கொடுக்க.. “அடிங்க..” என்று அபி அவளை துரத்த… பெரியவர்கள் அதை பார்த்து ரசித்திருக்க,  அபி சாதனாவின் நிச்சயதார்த்த விழா இனிதே முடிவடைந்தது..  

இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடக்க இருப்பதால்.. பெரியவர்கள் அனைவரும் பத்திரிக்கை அடிப்பதிலும், ட்ரெஸ் எடுப்பதிலும் பரபரப்பாக இருக்க.. சிறியவர்கள் இருவரும் அதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் தங்கள் உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருந்தனர்..முதல் பத்திரிக்கை குலதெய்வ கோவிலுக்கு வைக்க வேண்டும் என்று பாட்டி சொல்ல.. அனைவரும் அங்கு செல்வதாக முடிவு செய்யப்பட்டது..  பெருங்காமநல்லூர் இதுதான் அவர்களின் குல தெய்வ கோவில் இருக்குமிடம்.. திருமங்கலத்திலிருந்து  சுமார் ஒருமணி நேரம் பயணம் செய்து அந்த கோவிலை அடைந்தனர்.. காரிலிருந்து இறங்கிய சாதனாவிற்கு அந்த  கிராமமும், கோவிலை சுற்றி உள்ள  வயல்வெளியும் மிகவும் பிடித்துவிட்டது..  

சாமியின் பாதத்தில் பத்திரிக்கை வைத்து ஆசீரவாதம் வாங்கியவர்கள்.. கடவுளை மனமுருக வேண்டி கொண்டனர்..  சிறிது நேரத்திலெயே பாக்கியம் பாட்டிக்கு தெரிந்தவர்கள் வரவும்.. அங்கேயே அமர்ந்து பேசிகொண்டிருந்தார்கள்.. பொறுத்து பார்த்த சாதனா.. அபியிடம் அந்த இடத்தை சுற்றி காட்ட சொல்லி நச்சரித்து.. கொண்டிருந்தாள்.. அபியும் பெரியவர்களிடம் சொல்லிகொண்டு அவளை அழைத்து சென்றான்.. பச்சை பட்டாடை உடுத்தியது போல் வயல்வெளிகள் கண்னுக்கும் மனதிற்கும் குளிர்ச்சி அளிக்க.. சாதனா, அபியின் கையை பிடித்து கொண்டே நடந்தாள்.. அவன் அணிந்திருந்த சன்கிளாஸை கழட்டி தான் அதை மாட்டி கொண்டு அவனுடன் நடந்தாள்..

அங்கிருந்த பெட்டி கடை ஒன்றில் தேன் மிட்ட்டாய் வாங்கி தர சொல்ல, அவள் கேட்டு அவன் மறுப்பானா என்ன..அவள் கேட்ட்தை வாங்கி கொடுத்தவன்.. அவள் இதழில் ஜீரா (சக்கரை பாகு)ஒழுகுவதை கூட பொருட்படுத்தாமல்  உண்ணும் அழகை ரசித்திருந்தான்.. அவளையே பார்த்து கொண்டிருந்தவனிடம்.. ”உங்களுக்கும் வேண்டுமா? என்று சைகையால் கேட்க. சுற்றும் முற்றும் பார்த்தவன் அங்கு யாரும் இல்லாததை உணர்ந்து.. அவளின் இதழில் வழிந்த ஜீராவை வழித்து தன் வாயில் வைத்து கொண்டவன்.. “எனக்கு இது போதும் பேபி நீ சாப்பிடு” என்று விட்டு அவளுடன் நடந்தான்.. அபியின் செயலால் நாணம் கொண்டு பெண்ணவள் தலை குனிய..அவள் முகத்தை நிமிர்த்தியவன் வாய்விட்டு சிரிக்க.. அவள் சிணுங்கி கொண்டே  கோவிலுக்கு ஓடினாள்.. 

கோவிலுக்குள் சென்றவளை ஒரு பெரிய கூட்டமே வரவேற்றது.. “இதுதான் மருமக பொண்ணா தொடச்சு வச்ச குத்துவிளக்காட்டம் மாதிரில்ல இருக்குது..  பாக்கியம் உன் பேராண்டி குடுத்து வச்சவந்தேன்..” என்று ஒரு பாட்டி சாதனாவை திருஷ்டி களிக்க.. சாதனா புன்னகையுடன் “இல்ல பாட்டி அவர் கிடைக்கறதுக்கு நாந்தான் குடுத்து வச்சிருக்கணும்”  என்று அபியை பார்த்து கொண்டே கூற.. அந்த மாய கண்ணனோ அவளை பார்த்து குறும்பாக கண் சிமிட்டினான்.. “அடியாத்தி.. ஏ பாக்கியம் பேத்தி எப்பிடி பேசுதுன்னு பாரு.. உண்மையிலேயே  இவக ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பிறந்த மாதிரி சோடி பொறுத்தம் அம்புட்டு அம்சமா இருக்கு.. ஊருக்கு போனவுடனே ரெண்டுபேத்துக்கும் சுத்தி போடு..” என்றவாறே அனைவரும் கலைந்து சென்றனர்.. மீண்டும் ஒருமுறை கடவுளை வணங்கி விட்டு வெளியே வந்தார்கள்.. இரவு உணவை ஒரு ஹோட்டலில் முடித்தவிட்டு.. மங்கையையும் சாதனாவையும் அவர்களின் வீட்டில் இறக்கி விட்டார்கள்..

காரிலிருந்து  இறங்கிய அபி.. சாதனாவின் காதில் “இன்னும் ஏழே நாள்.. அப்பறம்.. ஐயா உன்னை இப்படி எல்லாம் விட்டுட்டு போகமாட்டேன் அப்படியே தூக்கிட்டு போயிருவேன்” என்று அவளை பார்க்க..   அவனின் பேச்சில் தன் சிவந்த முகத்தை மறைத்து கொண்டு  “ஃப்ராடு” என்றுவிட்டு  அனைவரிடமும் சொல்லி கொண்டு.. உள்ளே ஓடிவிட்டாள்.. அண்ணி நாளைக்கு ட்ரெஸ் எடுக்க காஞ்சிபுரம் போகணும்.. ரெடியா இருங்க நாங்க வந்து கூட்டிட்டு போறோம்.. என்று சொல்லிவிட்டு சென்றார் வாசுகி, சொன்னது போலவே அபியுடன் வந்துவிட்டார்.. மற்றவர்கள் அவர் கணவரும் அத்தையும் நேரடியாக அங்கே வருவதாக சொல்லியவர்.. அவர்களை அழைத்து கொண்டு சென்றார்… சாதனாவை முன்னிருக்கையில் அமர சொன்ன வாசுகி.. மங்கையுடன் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டார்..

பட்டுக்கு  பேர் போன காஞ்சிபுரத்தில் பிரபலமான கடை ஒன்றில்  தன் காரை நிறுத்திய அபி அங்கு அவர்களுக்கு முன்பாக ஏற்கனவே வந்திருந்த பாட்டியிடமும் தந்தையிடமும் சென்றவன்.. பின் அனைவரையும் உள்ளே அழைத்து கொண்டு சென்றான் அங்கு கடை முதலாலியே  வந்து அவர்களை வரவேற்று மரியாதை செய்ய.. புன்னகையுடன் ஏற்று கொண்டவரகளை.. பட்டு சேலை பிரிவு  இருக்கும் இடத்திற்கு அவரே அவர்களை அழைத்து சென்றார்… அவர்களிடம் வந்த அபி ”நீங்க பார்த்துட்டு இருங்க எனக்கு முக்கியமான வேலை இருக்கு அதை முடிச்சுட்டு  வந்தர்றேன்” என்றவனை சாதனா ஏமாற்றத்துடன் பார்க்க..

கண்களால் அவளுக்கு சமாதானம் சொல்லிவிட்டு சென்றான்… “அவன் எப்பவும் இப்படித்தாண்டா வேலை வேலைன்னு இருப்பான்.. ஆனா கரெக்டான நேரத்துக்கு வந்திருவான் நீ அதுவரைக்கும் உனக்கு புடிச்ச ட்ரெஸ்ஸ எடுத்து வைடா.. இந்த மாதிரி நிகழ்ச்சியெல்லாம் வாழ்க்கையில ஒரு முறைதான் வரும்.. அதனால முகத்தை உம்முனு வச்சுக்காம சந்தோசமா தேர்ந்தெடுடா..” என்று முகத்தை உம்மென்று வைத்து கொண்டு அமர்ந்திருந்த சாதனாவை சமாதானம் செய்தார்.. சாதனாவும் சமாதானம் ஆகி ஆடைகளை தேர்ந்தெடுக்க  ஆரம்பித்தாள்.. அனைத்து  எடுத்து  முடித்தபின்னும் முகூர்த்த  புடவை எடுப்பதற்காக அபிக்காக காத்திருக்க , அவன்  இன்னும் வந்த பாடில்லை…   வாசுகி அவனின்  செல்லிற்கு அழைக்க அது அவர்களின் அருகிலேயே ஒலி எழுப்ப,  திரும்பி பார்த்தவர்கள்.. அபி அங்கு வந்து கொண்டிருந்தான்.. ”சாரிமா, சாரி பேபி, ஒரு முக்கியமான வேலை அதான் சரி ட்ரெஸ் எல்லாம் எடுத்தாச்சா..” என்று அனைவரிடமும் மன்னிப்பு கேட்டவாறே.. அனைவரையும் பார்க்க. 

மங்கை ”முகூர்த்த புடவை மட்டும் எடுக்கணும் தம்பி.. அது சாதனா நீங்க வந்ததும் எடுத்தக்கலாம்னு சொன்னதுனால உங்களுக்காக காத்திருந்தோம்..” என கூற.. ”அச்சோ  எனக்குஒரு முக்கியமான வேலை பாதியிலேயே விட்டுட்டு வந்துட்டேன்  அத்தை நாங்க இன்னொரு நாள் வந்து அதை தேர்ந்தெடுத்துகிறோம்.. ” என்று அவன் பேசி முடிப்பதற்குள் போன் வர அதை எடுத்து பேசியவாறே அனைவரையும் அழைத்து கொண்டு சென்றான்.. ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்தியவன்.. அனைவரையும் இறங்க சொல்லி விட்டு  அங்கு ஏற்கனவே புக் செய்திருந்த ஃபேமிலி ரூமிற்கு அழைத்து சென்றான்..

அனைவரையும் அமர சொன்னவன் சாதனா கோபத்தில் வேறு பக்கம் அமர போக அவளின் கையை பிடித்து தன் அருகில் அமர்த்தி கொண்டான்..அவரவருக்கு பிடித்ததை ஆர்டர் செய்தவன்.. சாதனாவிற்கு நூடில்ஸ்  மற்றும் ஃபிஷ் ஃப்ரை ஆர்டர் செய்தான்…  வேண்டாம் என்று தடுத்தவளை, கண்களலே அமைதியாக  இருக்க சொன்னவன்..அவன் ஆர்டர் செய்த உணவு வகைகள் வர  அனைவரும் உண்ண சாதனா நூடுல்ஸை மட்டும் உண்டுவிட்டு மீனை தொடாமல் இருக்க “ ஏன் பேபி மீன் புடிக்காதா.. ”“ என்று அக்கறையாக கேட்க பதிலுக்கு முறைத்தவளை .. ”ஏன் பேபி இவ்வளவு கோபம்..முதல்ல சாப்பிடு” என்றவனிடம்,  ”எனக்கு மீன்ல முள் எடுத்து சாப்பிட தெரியாது..”  என்றவளிடம்.. ”இதுல முள் இருக்குன்னு யார் சொன்னா.. ? முதல்ல அதை பார்த்துட்டு அப்பறம் சொல்லு”  என்றவனை  குழப்பமாக பார்த்தவள் மீனை பார்க்க.. அது முள் தனியாக, மீன் தனியாக இருப்பதை பார்த்தவள்.. அபியை பார்க்க அவன் கண்களை மூடி சாப்பிடு மாறு சொல்ல.. அவள் அதை சந்தோசத்துடன் உண்ண ஆரம்பித்தாள்..

 இதை பார்த்த, மங்கைக்கு ஆச்சரியம் கலந்த சந்தோசம்.. இதை எல்லாம் கண்டும் காணாமல் இருந்து கொணடனர் பெரியவர்கள்.. சாதனா சாப்பிடும் வேகத்திலேயே அவளின் மனதை அறிந்தவன்..இன்னொரு பிளேட் ஆர்டர் செய்து மீன் தனியாக முள் தனியாக பிரித்து அவளுக்கு எடுத்து கொடுத்தான்.. “இங்க பாரு பேபி உனக்கு புடிச்சத எப்பவும் எதுக்காகவும் விட்டு கொடுக்க கூடாது  புரியுதா உங்க அப்பா இடத்தை என்னால் நிரப்ப  முடியாது.. ஆனா மாமாவை விட உன்ன என் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்குவேன்..  நம்பிக்கை எனக்கு இருக்கு.. இனிமேல் உனக்கு புடிச்சது எதுவா இருந்தாலும் என்கிட்ட கேளு.. என்ன சரியா..” என்றவனிடம்.. அவள் சம்மதமாக தலை ஆட்டினாள்.. “சரி ஏன் முகூர்த்த புடவை எடுக்க வரலை?”   என சாதனா  கேட்க..  ”அது எடுத்தக்கலாம் பேபி”  என்றவன்.. அவள் மேலே ஏதும் கேட்கும்முன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.. ”ஃப்ராடு என்னமோ பண்றிங்க அது என்னனுதான் தெரியலை..”  என்று மனதில் நினைத்தவாறே காரில் ஏறினாள்.. 

அடுத்த நாளே அபி சாதனாவிற்கு போன் செய்து தான் முகூர்த்த புடவை எடுத்துவிட்டதாக கூறினான்.  ஆனால் அபி அந்த புடைவையை மட்டும் சாதனாவின் கண்ணில் காட்டவில்லை காரணம் கேட்டவளிடம் ”நம்ம கல்யாணத்திற்கு முதல் நாள் நானே கொண்டுவந்து கொடுப்பேன்.” என்றவனை “ஃப்ராடு” என “தங்க் யூ” என்று புன்னகையோடு ஏற்று கொண்டான்… மறுநாள் பத்திரிகை வைப்பதற்காக பெரியவர்கள் வெளியூருக்கு சென்றிருக்க, அபி மங்கையிடம் அனுமதி கேட்டுவிட்டு, சாதனாவை அழைத்து கொண்டு தனது நண்பர்களுக்கும், தொழிற்துறையில் பழக்கமானவர்களுக்கும், அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும், பத்திரிக்கை கொடுத்துவிட்டு வந்தார்கள்.. மறுநாள் ஆசிரமத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கி, ஆசிரம நிர்வாகியிடம் பத்திரிகை கொடுத்துவிட்டு வந்தார்கள்.. இப்படியாக ஒவ்வொரு நாளும் அனைவருக்கும் நிற்க நேரமின்றி போக.. 

இதோ அபியும் சாதனாவும் மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தாரும்  ஆவலோடு எதிர்பார்த்த அந்த பொன்னான தருணம் விடிந்தால் என்கிற நிலையில் இருக்க.. ஊரிலேயே பிரம்மாண்டமான திருமண மண்டபத்தை பிடித்திருந்த தன சேகர், தங்கள் சொந்தமும், மங்கை வீட்டின் சொந்தமும் தங்குவதற்கு அருகிலேயே ஹோட்டலில் அறை பதிவு செய்திருந்தார்..வந்தவர்கள் அனைவரும் அங்கேயே தங்கி கொள்ள,  மிக நெருங்கிய சொந்தங்கள் சிலரே மண்டபத்தில் இருந்தனர்.. மணமகள் அறையில், சாதனா வாசுகி, மங்கை, மது, பாட்டி அனைவரும் பேசி கொண்டிருக்க..இருக்க.., சாரி சாதனாவை வம்பிழுத்து கொண்டிருந்தார்கள்.. நிச்சயமா அதுல மங்கை இல்லை.. அவர் இவர்களின் புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தார்..

அவர்களின் கிண்டலில் சிக்கி கொண்டு தவித்திருந்த சாதனவை, காப்பது போல் அறயின் கதவு தட்டப்பட்டது.. அவர்களிடம் தப்பிப்பதற்காக வேகமாக கதவை திறந்த சாதனா, அங்கு அபி நின்றிருப்பதை பார்த்து திகைத்தாள்..”என்ன பேபி என்னை இதுக்கு முன்னால பார்த்ததே இல்லையா.. வச்ச கண்ணு வாங்காம பார்க்கிற..” என்றவாறே அவளை உள்ளே தள்ளி கொண்டு செல்ல, அங்கு அனைவரும் இருப்பதை பார்த்து அசடு வழிந்தான்..வாசுகி அவனை குறுகுறுப்பாக பார்க்க.. ”அச்சோ தாய்குலமே நான் சாதனாக்கிட்ட இதை கொடுத்துட்டு போகலாம்னுதான் வந்தேன்..” என்று பயத்தோடு கூறியவன், சாதனாவின் கையில் அதை கொடுத்தான்.. அதை ஆவலாக வாங்கி பிரித்தவள்.. வியப்பில் விழிவிரித்தாள் என்றால்.. அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்தில் இருந்தனர் 

மெரூன் வண்ணத்தில் ஆங்காங்கே வைரக்கல் பதித்ததுபோல்.. கற்கள் பதித்திருக்க.. புடவையின் முந்தியில், அன்று சாதனா அந்த தேயிலை தோட்டத்தில் வாய்விட்டு சிரிந்த்திருந்ததை அப்படியே தத்ரூபமாக நெய்திருந்தார்கள்.. ஆனால் அது அபியை பார்த்து சிரிப்பதை போல நெய்திருந்தார்கள்.. சேலையின் பார்டர் தங்க நூழிலையாலே இழைத்திருக்க.. (இந்த சேலை என்னோட கற்பனை ஃப்ரெண்ட்ஸ் இது மாதிரி இருக்கான்னு தெரியாது சோ இதை நம்பும்படியா இல்லைன்னு சொல்லிறாதிங்க ப்ளீஸ்) அதை பார்த்திருந்த வாசுகி “டேய் அபி உனக்குள்ள இவ்வளவு பெரிய ரசிகன் இருக்கானா..? அன்னைக்கு ட்ரெஸ் எடுக்க போறப்ப ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லிட்டு போனியே இதுக்குத்தானா.?  செம்மையா இருக்குடா”. என்று அவனின் ரசனையை மனதார பாராட்ட.. அனைவரும்.. அதை ஒத்து கொண்டார்கள்.. 

சாதனா அமைதியாக இருப்பதை பார்த்தவன் “ஏன் பேபி உனக்கு சேலை பிடிக்கலையா? பிடிக்கலைன்னா சொல்லுடா நாம வேற வாங்கிக்கலாம்..” என்று அக்கறையோடு கூற, சாதனா சுற்றுபுரம் மறந்து தாவி அவனை அணைத்து கொண்டாள்.. அவளின் இந்த திடீர் செயலில் எதிர்பார்க்கதவர்கள்.. திகைத்திருக்க, அபி அவளின் மனதினை உணர்ந்தவன் போல் அவளின் முதுகை லேசாக வருடிகொடுத்தான்.. சாதனா அழுகையுடன் ஃப்ராடு என “தங்க் யூ” என்றான் புன்னகையுடன்.. “ஏன் பேபி சாக்லேட் வேணும்னா என்கிட்ட கேட்க வேண்டியதுதான எதுக்கு இந்த அழுகை..”” என்று கிண்டல் செய்தவன்… அவளுக்கு பெரிய டெய்ரிமில்க் சாக்லேட்டை கொடுத்தான்.. அதை வாங்கியவளின் முகத்தில் புன்னகை அரும்பியது. அதை பார்த்தவன் ”இப்ப சாக்லேட் கொடுத்து உன்னை சிரிக்க வைக்கிறேன்.. கல்யாணத்துக்கு பிறகு தேன் மிட்டாய் கொடுத்து உன்ன சிரிக்க வைப்பேன்..” என்று ரகசியம் பேசி அவளை சிவக்க வைத்தான்  

அபி மதுவிற்கும் சாக்லேட்டை தந்தவன் அவள் “நன்றி சார்” என்று கூறி வாங்கி கொள்ள,  ”ஆமா உனக்கு ஃப்ரெண்ட்ஸ் எத்தனபேர் இருக்கங்க..?” என்று  மதுவிடம் கேட்க, அவள் புரியாமல் காலேஜ் படிச்சதுல மூணுபேர், ஆஃபீஸ்ல சாதனா மட்டும்தான்.. ஏன் கேட்கறிங்க சார்..?” என்றவளிடம் ”சொல்றேன்… அந்த மூணுபேத்துல யாருக்காவது கல்யாணம் ஆகிருச்சா..? என கேட்க ரெண்டுபேருக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கு” என்றவள் சாதனாவை பார்க்க.. அவள் புன்னகையுடன்.. ”ஃப்ராடு  சொல்ல வர்றதை தெளிவா சொல்றாங்களா..பாவம் மது” என்று அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை புரிந்தவளாக அமைதியாக இருந்தாள்..

”அவங்க கணவரை எப்படி கூப்பிடுவ..” என கேட்க “அண்.. என்று ஆரம்பித்தவள்.. அவன் கேட்தின் அர்த்தம் புரிய..”ஷப்பா முடியலை என்னைய அண்ணான்னு கூப்பிடுன்னு சொல்றதுக்கு எவ்வளவு சுத்தி வளைக்கிறைங்க அண்ணா..” என்றவள் சாதனாவிடம் திரும்பி.. ”ரொம்ப கஷ்டம்டி” என்று அவனை கிண்டல் செய்ய..”அடிங்க” என்று அவளை துரத்துவது போல பாவனை செய்தான்.. பின்பு தன் அன்னைக்கும் அத்தைக்கும், பாட்டிக்கும் ஒரே வண்ணத்தில் புடவை எடுத்திருந்தவன்,  மதுவிற்கும் அதே நிறத்திலேயே எடுத்து , வாயால் அண்ணன் என்று சொல்லாமல் செய்கையாலே நிரூபித்தவனை பெருமை பொங்க பார்த்திருந்தாள் நம் நாயகி..

மறு நாள் அனைவருக்கும் அழகாக விடிந்தது… சாதனாவின் வாழ்விலும்தான்.. மணமேடையில் ஐயர் கூறிய மந்திரங்களை கூறி கொண்டிருந்தவன்.. ஒவ்வொரு நிமிடத்திற்கும் சாதனா வரும் திசையை எட்டி பார்க்க.. பொறுமை இழந்த ஐயர் “தம்பி மந்திரத்தை இங்க பார்த்து சொல்லுங்கோ..” என் கூற வாசுகி “டேய் மானத்தை வாங்காதடா” கொஞ்சம் நேரா உட்காறு” என்ற் அதட்ட.. அவனுக்கோ அன்னையின் பேச்சு காதில் விழவே இல்லை.. பார்வை வேறு எங்கோ இருக்க வாசுகியும்  அந்த பக்கம் பார்க்க.. அங்கு அபி வாங்கி தந்த சேலையிலும், அணிந்திருந்த வைர நகைகளின் மினுமினுப்பிலும்.. அதை எல்லாம் மிஞ்சும் வகையில்.. அவள் முகத்தில் பூத்திருந்த வெக்கத்திலும், அவர்களின் கண்களுக்கு தேவதையாக தெரிந்தாள்..

மங்கையோ இருவரின் ஜோடி பொருத்தத்தை கண்டு பூரித்திருந்தார்….மதுவின் துணையோடு மேடை ஏறிய சாதனா அபியின் அருகில் அமர.. அவள் அமர்ந்த நொடி அபி சாதனாவின் கையை ஒருமுறை அழுத்தி “ரொம்ப அழகா இருக்க பேபி” என்று விட்டு அவளின் கையை விட்டான்.. ஏற்கனவே செந்தூரமா சிவந்திருந்த சாதனாவின் முகம்.. அபியின் பேச்சால்.. செங்கொழுந்தாய் மாறியது.. அதை மறைக்க பெரும்பாடு பட்டவள்.. நாணத்தில் தலை கவிழ.. ஐயர் கெட்டிமேளம், கெட்டிமேளம் என கூற..மங்கல நாணை கையில் எடுத்த அபி குணிந்திருந்த சாதனாவை நிமிர சொல்லி அவளின் கண்களை பார்த்து சம்மதம் கேட்க..அவளும் தன் பார்வையாலயே சம்மதம் சொல்ல.. பெற்றோர்களின் ஆசியுடனும், பஞ்ச பூதங்களின் சாட்சியாகவும், அண்ணன் முறையில் பிரபு அனைத்து சடங்குகளையும் செய்ய, சாதனாவின் கழுத்தில் தாலி கட்டி அவளை தன்னவளாக மாற்றி கொண்டான்..

      அடுத்த பதிவுடன் முடியும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
12
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    6 Comments

    1. Super…. Abi character sema😍😍😍😍…. Sana so cute 😍😍🥰🥰🥰….