எனதழகா – 8❤️
அன்று ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை பொழுது, சூரியன் தன் மஞ்சள் நிற ஆடையை பரப்பியவுடன் சேவல் கொக்கரித்து விடிந்ததை சுட்டிக்காட்டியது.
அனைத்து நாளும் இவ்விடியல் பொழுது, சேவலின் ராகம், பேப்பர் போடுபவன், பால்காரரின் சத்தம், அதிகாலை சுப்ரபாதம், அம்மாவின் திட்டு, சமையல் கட்டின் குக்கர் சத்தம் இவை அனைத்தும் மனதுக்கு அய்யோ நாள் தொடங்கி விட்டதே என்று இருக்கும் .
பள்ளிக்கு செல்லும் சிறார்களுக்கு, கல்லூரிக்கு ஒடும் மாணவ மாணவிகளுக்கு ,வேலைக்கு செல்லும் ஆண்களுக்கு, அவர்களை நேரத்திற்கு அனுப்பி விடுவதற்கு இருவேளை சாப்பாடு செய்யும் ஹவுஸ் வைப் எனப்படும் வீட்டு
பெண்மணிகளுக்கும், சமையலும் செய்து வேலைக்கும் செல்லும் ஒர்க்கிங் உமனுக்கும் எரிச்சலாக இருக்கும் இவ்வோசைகள்.
அதே ஓசைகள் பல மடங்கு எரிச்சலைக் கொடுப்பது போல் தோன்றும் ஞாயிற்றுகிழமை அன்று. ஆனால், எந்திரித்து ஒடத் தேவையில்லை என்பதே அலாதி இனிமையைத் தரும்.
அதே போல் அச்சத்தம் தன் காதில் விழாதது போல் உறங்கிக் கொண்டிருந்தான் ஆகாஷ்.
ஆகாஷிற்கு அன்னை மட்டுமே. தந்தை சிறுவயதிலேயே தவறி விட்டார். அம்மா ஒரு வழக்கறிஞர்.
வாரம் முழுவதும் ஒடி விட்டு ஒரு நாள் தன் மகனுக்கு தன் கையால் சமைத்துக் கொடுக்க நினைக்கும் ஒரு சராசரி தாய்..
தனது அறையில் குளிர் தேசத்தில் இருப்பது போல் குளிரூட்டப்பட்டு சுகமாக தனது படுக்கையில் (ஃ ப்ளோர் பெட்டில்) துயில் கொண்டிருந்தான்.
மெதுவாக அவன் அபார்ட்மென்டின் மெயின் கதவு திறந்தது.உள்ளே நுழைந்ததும் வீடு ஒரு மயான நிலையில் இருந்தது. திடீரென்று குக்கரின் விசில்
சத்தம்.
மெதுவாக சமையலறையில் எட்டிப் பார்த்தப் பொழுது ஈஸ்வரி அம்மா சமைத்துக் கொண்டிருந்தார். அவர் கண்ணில் படாமல் பூஜையறைக்கு பக்கத்து அறையின் கதவை திறந்து பூனை போல் உள்ளே நுழைந்தவுடன் அழகாக துயில் கொண்டிருப்பவனைப் பார்த்து விட்டு அவன் மேலேயே விழுந்தனர்.
“அம்மா” என்று அலறிவிட்டான் ஆகாஷ்.
அலறியடித்துக் கொண்டு வந்தார் ஈஸ்வரி (ஆகாஷின் அம்மா).
“டேய், நீங்களா? நான் கூட ஒரு நிமிஷம் பயந்துட்டேன் ” என்று கூறினார் பாண்டவர் குழுவின் சேட்டையில்.
ஆகாஷ் படுக்கையிலும் , அவன் மேல் அர்ஜுன், அதற்கு மேல் அசோக் படுத்திருக்க, ஆதிரா இதைப் பார்த்து ஆசை வந்து அசோக்கின் மேல் அமர்ந்ததுமில்லாமல் ரியாவையும் அழைத்தாள்.
ஆகாஷ் பொறுக்க மாட்டாமல் கதறினான்.அப்பொழுதும் வாய் அடங்காமல் தன் அம்மாவைப் பார்த்து
அம்மா… நீ சுமந்த பிள்ளை…சிறகொடிந்த கிள்ளை…
மண்ணில் என்ன தோன்றக்கூடும் மழை இல்லாத போது…
மனிதனோ மிருகமோ
தாயில்லாமல் ஏது…
என்று பாட, அதற்கு ஈஸ்வரி
தென்னைய பெத்தா இளநீரு
பிள்ளைய பெத்தா கண்ணீரு
பெத்தவ மனமே பித்தம்மா
பிள்ளை மனமே கல்லம்மா
என்று எதிர்ப்பாட்டு பாடினார்.
“யாருக்கிட்ட நான் உன் அம்மா டா” என்று கூறினார்.அதிர்ந்த ஆகாஷ் மறுபடியும்
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும்
வென்ற பின்னே
வாங்கடா வாங்க
என்று பாடிய ஆகாஷை அனைவரும் ஒரு சேர அமுக்கினர். கணம் தாங்காமல் அனைவரையும் கீழே தள்ளி விட்டு அவ்வறையின் ஓரத்தில் அழகுக்காக வைத்திருக்கும் பாண்டா பொம்மையை தூக்கிக் கொண்டு
யாரு இவன்? யாரு இவன்?
கல்லத் தூக்கிப் போறானே!
புள்ள போல தோளு மேல
உன்னத் தூக்கிப் போறானே!
கண்ணு ரெண்டு போதல!
கையு காலு ஓடல!
கங்கையத்தான் தேடிகிட்டு
தன்னத் தானே சுமந்துகிட்டு
லிங்கம் நடந்து போகுதே!
என்று அவனை அவனே பெருமையாகப் பாட, அதற்கு ஆதிரா
எல்லையில்லாத ஆதியே..!எல்லாமுணர்ந்த சோதியே..!
மலைமகள் உன் பாதியே..!
அலைமகள் உன் கைதியே….!!
என்று பாட, அதற்கு அடுத்ததாக அர்ஜூன்,
அருள்வல்லான் எம் அற்புதன்..!அரும்பொருள் எம் அர்ச்சிதன்..!
உமை விரும்பும் உத்தமன்..!
உருவிலா எம் ருத்திரன்….!!
அதன் பின் அசோக்,
ஒளிர்விடும் எம் தேசனே..!
குளிர்மலை தன் வாசனே..!
எழில்மிகு எம் நேசனே..!
அழித்தொழிக்கும் ஈசனே…!!
அடுத்ததாக ரியா கையில் பேப்பரைக் கிழித்து வைத்துக் கொண்டு,
நில்லாமல் ஆடும் பந்தமே..!
கல்லாகி நிற்கும் உந்தமே..!
கல்லா எங்கட்கு சொந்தமே..!
எல்லா உயிர்க்கும் அந்தமே….!!
என்று பாடி பேப்பரை பூவாக நினைத்து ஆகாஷின் மேல் தூவினாள். அதன் பின் பிரபாஸ், சிவனை அருவியில் வைத்த பின் ஆடுவது போல் ஈஸ்வரி அன்னையைப் பார்த்து ஆதிரா ” அம்மா, உன் சிவன் (ஆகாஷ்) எப்பவுமே உச்சி குளிர்ந்துக்கிட்டே இருப்பான். நீ எங்களுக்கு சோறு ரெடி பண்ணு” என்று கூறி அனைவரும் ஆட ஆரம்பித்து விட்டனர்.
இவர்களின் சேட்டைகளைக் கண்டு சிரித்துக் கொண்டே சமையலறைக்கு சென்று விட்டார்.
சமைத்துக்கொண்டே வேண்டிக்கொண்டார் எப்பொழுதும் இதே ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று.
இவர்கள் அனைவரும் இன்று வருவார்கள் என்று தெரிந்தே அனைவருக்கும் சேர்த்து சமைத்துக் கொண்டிருந்தார்.
ஆகாஷின் அறையில் மகிழ்ச்சி மட்டுமே நிரம்பி இருந்தது. அர்ஜுனின் மனநிலைக் கூட மாறி இருந்தது. சின்ன வயதில் விளையாடியது போல் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இவர்களின் சம்பாஷனைகளை கேட்டு சிரித்துக் கொண்டே அவர் வேலையை பார்த்தார்.
தனது கணவனின் புகைப்படத்தைப் பார்த்து மனதிலேயே பேசிக் கொண்டார் “எனக்காக இவ்வளவு ஜீவன்களை அனுப்பியதற்கு நன்றி ” என்று கூறிக் கொண்டார்.
அறையிலிருந்த ஆகாஷ் அதை கவனித்து விட்டு கலங்க போனவனை இழுத்து குளியலறைக்கு அனுப்பி விட்டு ஈஸ்வரி அம்மாவிடம் வந்தாள் ஆதிரா.
அவள் வந்ததற்கான நோக்கம் புரிந்ததால் தானும் தன் சோகத்தை மறைத்துக் கொண்டு அவளிடம் சகஜமாக பேசினார். ஆதிராவைப் பார்த்து பார்த்து ரியாவும் ஆதிராவைப் போல் பேச பழகி விட்டாள்.
ஆகாஷ் குளித்து முடித்த பின் அனைவரும் சமையலறையில் ஆஜராகினர். தட்டில் தாளம் போட்டு சிறு குழந்தைகள் போல் கத்தி ஆர்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்தனர்.
ஈஸ்வரி அம்மா பொறுமையாக வருகிறேன் என்று பல தடவை கூறியும் கத்திக் கொண்டே இருந்ததால் “அட இருங்களேன்டா, கொண்டு வர வேணாமா ? ஜீவன போக்கிடுவாங்க ? “என்று புலம்பினாலும் மனதுக்குள் ஆனந்தமே.
தன் வீடு எப்பொழுதும் அமைதியாக இருக்கும் இவர்கள் வரும் நாளைத் தவிர. அதனாலேயே அதிகம் இவர்கள் வரும் நாளை எதிர்பார்ப்பார் ஈஸ்வரி அம்மா.
ஹாட் பாக்ஸைத் திறந்து இட்லியை
அனைவருக்கும் வைத்தவுடன் அதற்கான குழம்பை திறந்தவுடன் அதிர்ச்சி ஆகி விட்டான் ஆகாஷ்.
நெஞ்சில் கை வைத்துக் கொண்டு “மம்மி, சாம்பார்…..வெஜிடபிள் சாம்பார்… சாம்…. சாம்பார் … ஒய் மம்மி ஒய்… டுடே சண்டே… ஃபூட் வெஜ் … நோ ஃபிஸ், ரோ ஃபிரான், நோ கிராப் ….வாட் சாம்பார்…. ” என்று கேட்க
“ஹான், முள்ளங்கி சாம்பார் டா என் பொடெட்டோ ” என்று அர்ஜின் கூறிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.
“என்னது சோத்துல சாம்பாரா ?😳என்று ரியா அதிர்ச்சியாக கேட்க
இன்னோர் உயிரை கொன்று
புசிப்பது மிருகமடா
இன்னோர் உயிரை கொன்று
ரசிப்பவன் அரக்கனடா
யாருக்கும் தீங்கின்றி
வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து
உயர்ந்தவன் புனிதன்
நேற்று வரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா
என்னு பாடிக் கொண்டே ஆதிரா சாப்பிட்டாள். இதைக் கேட்டவுடன் ஈஸ்வரி அம்மாவிற்கு சிரித்து சிரித்து புரையேறி விட்டது. அவர் சிரிப்பதைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தாள் ஆகாஷ்.
அசோக் மற்றும் ஆதிரா இல்லத்தில் வளர்ந்ததால் ஆபூர்வமாக
கிடைக்கும் அசைவத்தின் மீது நாட்டம் இல்லை என்று கூறுவதை விட அவர்களுக்கு வெறுப்பு வந்து விட்டது. அதனாலேயே இருவரும் சாப்பிட மாட்டார்கள்.
அவர்களை சிறு வயதிலேயே ஈஸ்வரி , சத்யபாமா, மகாலெட்சுமி மூவரும் எவ்வளவு வற்புறுத்தியும் உண்ணவில்லை. காலங்கள் கடக்க ,சொல்வதையும் விட்டு விட்டனர்.
ஈஸ்வரி அம்மா தனது மகனின் தலையை வருடிக் கொண்டே, “நீ கேட்டது அனைத்தும் மதியத்துக்கு” என்று கூறினார்.
சந்தோஷமாக உண்டு விட்டு மறுபடியும் தனது இசைக கச்சேரியை தொடங்கி விட்டனர்.
இசைக் கச்சேரி முடிந்து மதிய உணவு உண்ண வரலாம்.
கீர்த்தி☘️