Loading

எனதழகா-7 ❤️

“என்னப்பா ஆகாஷ் , நான் பேசிக்கிட்டே இருக்கேன். நீ உன் வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்க?” என்றார் வசுதேவர்.

ஆகாஷ் ஒன்றும் கூறாமல் பாவமாக கேசவரைப் பார்த்தான்.

“அப்பா, அவன் நீங்க ஸ்கூல பார்த்த ஆகாஷ் இல்ல. இப்போ அவன் டாக்டர். அவனைப் பார்க்க எல்லாரும் வரிசையில் காத்துக் கொண்டு இருக்காங்க. நீங்க அவனையும் உட்கார வைச்சதும் இல்லாம அவன் வேலையை ஏன் பார்க்குறனு கேட்கிறீங்க?” என்று ஆதங்கமாக கூறி முடித்தார்.

“மாமா, தாத்தா உதவி இல்லாமல் இங்கு யாரும் முன்னேற முடியாது. சிபாரிசு இருந்ததால் தான் இந்த உத்யோகம். தாத்தாவிற்கு கூட நேரம் ஒதுக்க முடியாதோ?” என்று திமிராக கூறினாள் ஆரூஷி.

“அவர் அவர் திறமையினால் மட்டுமே முன்னேறி இருக்கிறார்கள் உன்னை உட்பட “கூறிக் கொண்டே உள்ளே நுழைத்தான் தனக்கே உரித்தான கம்பீர தோரணையுடன் அர்ஜுன்.

“ஹாஹா” என்று கூறிக் கொண்டே வந்தாள் ஆதிரா. பின்னே அசோக்கும் உள்ளே வந்தான்.

“ஹே இடியட். மேனர்ஸ் இல்ல?” என்று சீறினாள் ஆருஷி.

“இவங்க குடும்பத்துக்கே இந்த டயலாக் சொந்தம் போல. எல்லாரும் இதையே சொல்லுறாங்க?” என்று அசோக்கிடம் முணுமுணுத்துக் கொண்டே வந்தாள்.

அப்பொழுதும் அமைதியாக இல்லாமல் ஆகாஷிடம் “எதுக்கு இந்த மாநாடு ? இவங்க குடும்ப கூட்டத்தில் நீ ஏன் உட்கார்ந்து இருக்க? ” என்று யோசனையாக கேட்டாள்.

“க்ளுக்” என்று ஒரு சத்தம். ஆதிராவும், ஆகாஷும் திரும்பி பார்த்தனர். ரியா  சிரிப்பதைப் பார்த்து ஆகாஷ் முறைத்தான்.

அதே கடுப்புடன் “இவளுக்கும் தான் இந்த குடும்பத்தில் சம்பந்தம் இல்லை. இவளை நீ ஏன் கேட்கவில்லை?”

” அவள் தாத்தா கம்பெனியில் வேலை பார்ப்பவள்” என்று அசால்ட்டாக கூறினாள் ஆதிரா.

ஆகாஷ்,”அப்போ அசோக்?” .” அவன் பார்ட்னர் டா பாண்டா” என்று அவன்  தோளில் அடித்துக் கொண்டே கூறினாள்.

தன்னை  நக்கல் செய்ததது போல் அவளையும் செய்தே ஆக வேண்டும் என்ற குறிக்கோளோடு அப்போ நீ? என்றான் நக்கலாக.

“அய்யோ, இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்கியே!ஹய்யோ, ஹய்யோ. நான் இவங்க கூட வந்தேன் டா” என்று ஆதிரா கூற ஆகாஷ் முழித்தான்.

“இரண்டு பேரும் பேசி முடித்து விட்டீர்களா? நான் அடுத்து பேசலாமா? ” என்று தாத்தா பொறுமையாகக் அதே சமயம் கண்டிப்புடன் கேட்டார்.

” இல்ல தாத்தா, இன்னும் பேசி முடிக்கல. பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்டது இல்லையா ? அதான். பராவயில்லை அப்புறமா பேசிக்கிறேன். நோ ப்ராபளம்.”
என்பவளை வெட்டவா குத்தவா என்கிற ரீதியில் பார்த்தான் அர்ஜுன்.

ஆகாஷ், அசோக் மற்றும் ரியா அதிர்ந்தாலும் எப்பொழுதும் இப்படியே பேசுவதால் கடினப்பட்டு சிரிப்பை  அடக்கினர்.

ஆகாஷிற்கு கண்களில் தண்ணீரே வந்து விட்டது. ஆருஷி, ” யூஸ்லெஸ் இடியட்” என்று முணுமுணுத்தாள்.

வெங்கடேசன் அமைதியாக எவ்வித உணர்வும் முகத்தில் காட்டாமல் இருந்தார்.

கேசவ் தான் மெதுவாக சிரித்துக் கொண்டே ” ஆதிரா ஏன்டா ?” என்று கேட்டார்.

வசதேவர் கண்கள் சிவக்க பார்த்தவர் பின் ஆதிராவின் குழந்தை தனம் பற்றி தெரிந்ததால் அவரும் சிரித்து விட்டார்.

வசுதேவர் “டாக்டரம்மா வந்தால் என் பிபி மாத்திரை ஒன்று குறைஞ்சுரும்.”

ஆதிரா அதற்கு அழகாக தன் வெண்பற்கள் தெரிய சிரித்தாள்.” சிக்ஸர் போட்டா மா,ச்சை “என்று ஆகாஷ் ரியாவிடம் முணுமுணுத்தான்.

தன் காலரைத் தூக்கிக் காண்பித்துக் கொண்டாள். “இந்த கொசு தொல்லை தாங்கலை. நசுக்கி தூக்கி போடணும்.”என்று ஆகாஷ் கொசுவை விரட்டுவது போல் விரட்டி காண்பித்தான்.

“டேய் ஆகாஷ்!போதும்டா எப்பா! உங்களை சேர்க்கிறதும் பெரும்பாடு, பேசுறதும் பெரும்பாடு. சீக்கிரம் முடிச்சுட்டு வேலைக்கு போகனும்டா. நீ நரம்பியல் நிபுணர் ஆனதுக்கு மன நல மருத்துவருக்கு படிச்சு இருக்கலாம். உன் பேச்சுக்கே எல்லாரும் குணம் ஆகியிருப்பாங்க.” கேசவர் அவனை பாராட்டினார்.

“அய்யோ அப்பா, இப்படி எல்லாம் நான் இருக்கும் போது பாராட்டாதீங்க.” என்று ஆகாஷ் வெட்கப்பட்டுக் கொண்டேக் கூறினான்.

கேசவ்,”சரி விடு பாரட்டலை ” .ஆகாஷ் ” அய்யோ அப்பா😥நான் அப்படி சொல்ல வரல. நான் இல்லாதப்போ முக்கியமா இவங்களாம் இருக்கிறப்போ பாராட்டுங்க. அப்போ தான் என் அருமை தெரியும்😁”.

“ச்சீ, பேச்சை குறை” என்னு எரிச்சலுடன் கூறினாள் ஆதிரா.

“உன்னால் மட்டும் தான் சிக்ஸர் போட முடியுமா, என்னாலையும் முடியும். நீ போட்ட பந்து பெளண்டிரிக்கு வெளியே தான் போச்சு. நான் போட்ட பந்து பம்பர் பரிசே அடிச்சுறுச்சு, பார்த்தியா என் டொமேட்டோ ” என்று கூறி கூலர்ஸை மாட்டினான் ஆகாஷ்.

“சரி, லிசன் என்னுடைய நண்பர் ஒருவர் ஊட்டியில் உள்ளார் அவரை அறிமுகப்படுத்துவதை விட இதை சொல்வது சரி. உங்களுக்கு தெரிந்த  ஐடி துறையில் கடந்த மூன்று வருடமாக நம்பர் ஒன் இடம் பெற்றிருக்கும்…….”வசுதேவர் கூறு முடிப்பதற்குள்

அர்ஜுன் மற்றும் அசோக் “RA2 டெக்னாலஜீஸ்” என்று ஒரு சேரக் கூறினர்.

வசுதேவர்,”ஆமா, நம்ம காலேஜ் ஸ்டூடன்ஸ்காக ஒரு ஆஃபர் கேட்டிருக்கிறேன்.அவங்க
இன்டர்ன்ஷிப்கு  ஆள் எடுக்க போகிறார்கள்.”

அர்ஜூன், “அதுக்கு நம்ம காலேஜ் வர போகிறார்களா?”

கேசவர் , “இல்லப்பா, நாமே நம்
காலேஜ்க்குள் ஒரு  தேர்வு மாறி வைத்து குறிப்பிட்ட ஆட்களை அனுப்பி விடுவோம். “

அசோக்” அதை அவர்கள் எப்படி ஒத்துக் கொள்வார்கள்?

ஆதிரா ,”டேய், உனக்கு எப்படி அறிவு இருக்கோ அதைப் போல் அவர்களுக்கும் இருக்கும். அவர்கள் எதிர்பார்ப்பு வேறு ஏதாவது இருக்கும். இல்லை தாத்தா?”

“ஆமாடா ” என்று வசுதேவர் சிரித்துக் கொண்டே கூறினார்.

“எப்பூடி” என்றுக் கூறி தன் முன் நெற்றியில் விழும் முடிக்கற்றுகளை ஒதுக்கினாள்.

“ரொம்ப பெருமைப்படாதா! இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்” என்று ஆகாஷ் .

அப்பொழுது தான் கவனித்தாள் அனைவரும் அவளை ஒரு மாதிரியாக பார்ப்பதை. ஆருஷி, “யூஸ்லெஸ் இடியட்” என்று கூறினாள்.

“இவளுக்கு வேற வேலை இல்லை” என்று முணுமுணுத்துக் கொண்டே திரும்பி விட்டாள்.

“ஓக்கே, கம் டூ த பாயிண்ட் .அவர்களுக்கு நம் கன்ஸ்ட்ரக்ஷஸன்ஸ் மூலம் ஒரு பெரிய காம்பளக்ஷ்ஸ் கட்ட வேண்டும்.”

இதற்கு எங்களை எதற்கு கூப்பிட்டீர்கள்  என்று கேட்பது போல் புருவ முடிச்சுகளோடு தாத்தாவைப் பார்த்தான்.

“நீங்கள் இருவர் தான்  செல்ல வேண்டும் “என்று வசுதேவர் கூறியவுடன் அர்ஜுன்” நீங்க  உங்க நண்பருடன் டை-அப் வைக்கணும் என்று உங்களுக்கு ஆசை. அதற்கு இது முதல்படி. இதில் கன்ஸ்டிரக்ஷன்ஸ்க்கு ஆர்டர் வந்திருக்கிறது. கல்லூரியில் இருந்து ஸ்டூண்ட்ஸை அனுப்பி விட போகிறீர்கள். இதற்கு நாங்கள் ஏன் போக வேண்டும். ” என்று பொறிந்து விட்டான் தன் கம்பெனியில் உள்ள வேலை கெட்டு விடும் என்று.

” அர்ஜூன், உங்களுடைய வேலை நீங்கள் உருவாக்கிய கம்பெனியில் மட்டும் இல்லை. உங்கள் துறைக்கு சம்மந்தமே இல்லாத வேலையை சொல்லவில்லை. புரிகிறதா” என்று காட்டமாக முடித்தார் வசுதேவர்.

அமைதியாக இருப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை அர்ஜூனுக்கு.

“நீங்கள் கல்லூரியில் தகுந்த மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் ஊட்டிக்கு கூட்டிச் செல்ல வேண்டும்.   மாணவர்களுக்கு அங்கு அவர்கள் வைக்கும் தேர்வுக்கும்  பயிற்சி கொடுக்க வேண்டும். அவர்கள் தேர்வு முடிந்து தேர்வானவர்களைத் தவிர மீதம் உள்ளவர்களுடன் திரும்ப வர வேண்டும். தேர்ந்தவர்களுக்காக ஒரு மீட்டிங் நடைபெறும். நான் அப்பொழுது வருகிறேன். அதில் கலந்து கொண்டு திரும்பி விடலாம்” என்று பொறுமையாக கேசவர் கூறினார்.

அர்ஜுன் எதிர்த்து பேச வருவதற்குள் அசோக் அவரின் உடல்நிலை அறிந்து”எந்த தேதி என்று கூறுங்கள் அதன் படி எங்கள் வேலைகளை ஒதுக்கிக் கொள்கிறோம் பா” என்று  கூறினான்.

கேசவர் , ” நன்றிப்பா உங்களுக்கு ஏற்ப பார்த்துக் கொள்ளுங்கள். தேதி உங்கள் இஷ்டமே நீங்கள் முடிவு பண்ணிக் கூறுங்கள். நான் சொல்லி விடுகிறேன்”

இதற்கு மேல் கூற முடியாத கையறுந்த நிலையில் இருப்பதால் அர்ஜுனும் ஒன்றும் கூறவில்லை.

அதனால் அடுத்த கட்டமாக அர்ஜூன், “யாரிடம் பேசுறீங்க?”.என்று கேட்டான்.

மெச்சுதலாக பார்த்தவர் “மிஸ்டர் துருவ்” என்றார் கேசவர்.

“சரி. அவரின் பி.ஏ நம்பரை வாங்கிக் கொடுங்கள். நாங்கள் பேசிக் கொள்கிறோம். ” என்றான் அர்ஜுன்.

“சரி” என்றவர் ரியாவிடம் திரும்பி அவர்கள் காம்ப்ளக்ஸ்கான  தகவல்களை கேட்டு அறிந்து அதற்கான வேலையைத் தொடங்குங்கள் என் அடுத்து அடுத்து வேலைகளை கூறினார் கேசவர்.

சரி என்று தலையாட்டி விட்டு  அதற்கான வேலைக்கு தனது கணிணியை ஆராயத் தொடங்கி விட்டாள்.

அசோக் மற்றும் அர்ஜூன் தனது வேலையைப் பற்றி திட்டமிட தொடங்கி விட்டனர்.

ஆகாஷ் மற்றும் ஆதிரா தனியாக தனது மொபைலில் கேம் விளையாடிக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தனர் அவர்கள் உலகில்.

பேனாவை அவர்கள் மேல் எறிந்ததில் நிஜ உலகிற்கு வந்தவர்கள் ஒரு சேர “எவன்டா அது?” என்றுக் கேட்டனர்.

வசுதேவரின் முகம் சிவந்து  சினம் கொண்ட காளையாக முறைத்தார். அனைவரையும் வெளியேறக் கூறினார் அவர்கள் இருவரைத் தவிர.

அவ்விருவரும் தனது நண்பர்களை பாவமாக பார்க்க மூவரும் ஒன்று போல் கூலர்ஸ்ஸை  மாட்டிக் கொண்டு நக்கலாக பார்த்துக் கொண்டே சென்றனர்.

வசுதேவர், “நீங்கள் என்ன சிறு குழந்தைகளா ?” என்று ஆரம்பித்தார்.

அவர்கள் கேட்கட்டும் . நாம் நாளை இவர்கள் ஐவர் குழுவின் கூட்டணியில் சந்திப்போம்.

கீர்த்தி☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்