எனதழகா – 5 ❤️
“இவ்வளவு தூரம் பார்த்து பார்த்து அடி எடுத்து வைத்தும் கண்டுபிடித்தானா எப்படி? அவனுங்களுக்கு இப்படி ஒரு கிளைண்ட் கம்பெனிக்கு வருவதற்கு முன்னாடியே அவர்களை நம் பக்கம் திருப்பியது எப்படி தெரியும்?”
“அப்பா, ஏதோ சும்மா ஒரு யூகத்தில் கண்டுபிடித்து விட்டார்கள். நாம் அடுத்த கட்டத்திற்கு போவோம். அவனுங்களுக்கு நாம் யாருனு இப்ப வரைக்கும் தெரியாது. விடுங்க அப்பா”.
“போடா முட்டாள், நாம சீண்டுனதே இருக்கிறதில் சின்னவனிடம் அவனே கண்டுபிடித்து விட்டான். மற்றவர்கள் எப்படி என்று தெரியவில்லையே. அதோடு, வாங்கினதை கண்டுபிடித்தவனுக்கு நம்மளையும் கண்டுபிடிக்க அவ்வளவு கடினம் இல்லை. நீ சொன்னப்படி நாம் கன்ஸ்ட்ரக்ஷனில் கை வைத்தால் சுலபமாக கண்டுபிடித்து விடுவான். ஜாக்கிரதையாக கையாள வேண்டும் ருத்ரா”.
” அவர்களை முழுதாக நீங்கள் புரிந்துவைத்துக் கொண்டிருப்பதால் தான் நான் உங்கள் பேச்சைக் கேட்கிறேன். அதற்காக முட்டாள் என்றெல்லாம் கூறாதீர்கள்”
“இல்லப்பா, ஒர் அவசரத்தில்…”. நிமிர்ந்து ருத்ரன் அவரை பார்த்த பார்வையில் “மன்னித்து விடு” என்று கூறி அவ்விடத்தை விட்டு அகன்று விட்டார்.
அர்ஜுனா நீ அவ்வீட்டின் வேலி என்றும், உன்னை சாய்த்தால் மற்ற ஆடுகளை எளிதாக வீழ்த்தலாம் என்று அவருக்கு புரியவில்லை என்று மனதிற்குள்ளேயே கூறிக் கொண்டான்.
இவனுக்கு அறிவு ஜாஸ்தி என்று அசால்ட்டாக விட்டது தவறு. இவன் மாட்டி கொள்வதோடு நாமும் சேர்ந்து மாட்டியிருப்போம். இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று இவரும் மனதிற்குள்ளேயேக் கூறிக் கொண்டார்.
வெளியில் “நான் அவர்களை நன்கு புரிந்து வைத்துள்ளேன்.அனுபவமும் எனக்கு அதிகம்.உங்களுக்கு நல்லது செய்வதற்கே போராடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்த டிரம் கார்ட்டை விட்டு விட்டோமே” என்று வருந்தினார்.
“விடுங்கப்பா, நாம் போனதை யோசிக்காமல் அடுத்த விஷயத்தை கவனிப்போம். அதுவும் இம்முறை எந்த தவறும் நடக்காமல் நாம் நினைத்ததை நடத்திக் காண்பிப்போம்” என்று வெறியோடு கண்கள் சிவக்க கூறினான் ருத்ரன்.
இந்த வெறியைத் தான் நான் எதிர்பார்த்தேன் ருத்ரா என்று கூறி அவனைக் கட்டியணைத்துச் சென்று விட்டார்.
AA சொலியுஷன்ஸ்🏙️
அர்ஜீனின் பி.ஏ சாரா உள்ளே நுழைந்து அர்ஜுனுக்கு ஒரு மெயிலை அனுப்பியதாகக் கூறினாள்.
மறுபடியும் தனது பேச்சுத் தடைப்படுவதாகக் நினைத்து எப்போதடா சொல்லி முடிப்போம் என்று ஆதிராவின் மனதில் பயம் நெஞ்சைக் கவ்வியது.
அவள் இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அசோக் “பார்த்து ஹார்ட் வெளியே வந்திடப் போகுது. இல்ல உனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திடப் போகுது. உன் ஹார்ட் படப்படப்பது இங்க வரைக்கும் கேட்குது” என்று ஆதிராவை கலாய்த்தான்.
“ச்சீப் போடா” என்று நகத்தைக் கடித்து துப்பிக் கொண்டிருந்தாள்.
“ஆதிரா, மேனர்ஸ் இல்லயா? இப்படித் தான் இன் டீசண்டா பிகேவ் செய்வீயா?” என்று அர்ஜுன் அவள் மேல் ஏற்கனவே உள்ள கோபத்தில் நகம் கடிப்பதைப் பார்த்து பற்களைக கடித்துக் கொண்டே கத்தி விட்டான்.
சாரா முன் பேசியதைக் கண்டு முகம் வாடி விட்டது அவளுக்கு.
அவள் வாடுவதைக் காண முடியாமல் அசோக் அவள் தலையைக் கலைத்து விளையாடினான்.
அதில் மேலும் வெறியாகி விட்டாள் ஆதிரா. ஆனால் அசோக்கை அடித்தால் மறுபடியும் அர்ஜுன் திட்டி விடுவான் என்று அசோக்கை முறைத்தாள்.
” எனக்கு தலையில் கை வைத்தால் பிடிக்காதுனு தெரிந்தும் ஏன் டா வம்பு இழுக்கிறாய்? ” என்று அசோக்கிடம் கோபமாக அதே நேரம் அமைதியாக ஹஸ்கி குரலில் கேட்டாள்
அவளைப் போலவே ஹஸ்கிக் குரலில் “அதனால் தான் செய்தேன்” என்று நக்கலாகக் கூறினான்.
கடுப்பாகிய ஆதிரா எப்பொழுது சாரா வெளியில் போவாள் என்று காத்துக் கொண்டிருந்தாள்.
ஒரு சில நொடிகளில் அசோக் “அய்யோ” என்று அலறினான். அனைவரும் திரும்பிப் பார்த்தனர் .
“என்ன சார் ஆகிற்று?” என்று சாரா
கேட்டதற்கு ” ஒன்றுமில்லை” என்று கூறிக் கொண்டே ஆதிராவை முறைத்தான்.
அவன் வம்பு இழுத்து தான் சும்மா இருப்பதா என்று பொறுக்காமல் அசோக்கின் தொடையில் தன் கூரிய நகங்களால் கிள்ளி விட்டாள்.
அசோக் முறைத்தற்கு வில்லி போல் தன் முன் நெற்றியில் விழுந்த முடிக்கற்றுகளை ஊதினாள்.
இருவரையும் வினோதமாக பார்த்து விட்டு அர்ஜுனிடம் திரும்பி “சார், சீக்கரமா பதில்
அனுப்பிடச் சொல்லி வசு சார் நேரடியாகக் கேட்டு உள்ளார்”.
நிமிர்ந்து அவளைப் பார்த்தான் அர்ஜுன் .என் வேலைக்கு உலை வைத்து விட வேண்டாமென்று கெஞ்சுவது போல் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டாள்.
“வேற என்ன சொல்ல சொன்னாங்க உங்கள் முதலாளி ஐயா? “
” இல்ல சார்…. ” என்று பதற்றத்துடன் சொல்ல “கெட் அவுட் ” என்று கத்தி விட்டான்.
அதில் சாரா பயந்து வெளியேற, ஆதிராவின் முகம் வெளிரி விட்டது.
நாம தானா அடுத்து?என்ன செய்ய போறானோ? என்று முணுமுணுத்தாள்.
அர்ஜுன் திரும்பி ஆதிராவைப் பார்த்தான்
சொல் என்பது போல்.
அர்ஜூனின் கோபம் கண்டு ஆதிரா அசோக்கை திரும்பிப் பார்த்தாள்.அவனும் சொல் என்பது போல் பார்த்தான்.
எச்சிலை முழுங்கியப்படி “அது தான் ரோஹித்தை சந்தித்தேன் .அவன் என்னைத் தேடித் தான் வந்தானாம்”
அவன் தேடி வந்தான் என்று கூறியவுடன் இவர்கள் இருவருக்கும் ரோஹித்தை சந்தித்த நாள் ஞாபகத்திற்கு வந்தது.
ஜூன் 3,2010 அன்று பாண்டவர்கள் குழுக்கள் தனது ஒன்பதாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்தனர் புது பள்ளியான
ஏ.ஆர்.எம் பள்ளியில்.
தமிழ்நாட்டில் முதலிடமான இப்பள்ளியில் படிப்புக்கு முக்கியத்துவம் தருவதை விட ஒவ்வொரு மாணவர்களின் திறமைக்கு முக்கியத்துவம் தருவர்.
திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே இங்கு இடம் கிடைக்கும். சிபாரிசின் மூலம் வந்தாலும் ஆர்வம் இருக்கும் மாணவர்களுக்கே இங்கு இடம் கிடைக்கும்.
ஸ்காலர்ஷிப் (உதவித்தொகை) மூலம் அசோக் மற்றும் ஆதிராவுக்கு இடம் கிடைத்தது.
அசோக் அருமையாக பாடுபவன். ஆதிரா நன்கு படிப்பவள். ஐவரும் எப்பொழுதும் சேர்ந்து இருப்பதால் கேசவர் சிபாரிசு செய்து மற்ற பிள்ளைகளையும் சேர்க்க நினைத்தார் ஆருஷி உட்பட.
ஆகாஷ் படிப்பாளி, ரியா நடனக் கலைஞர், அர்ஜுன் இசையமைப்பாளர், ஆருஷி
தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவள்.
நேர்காணலில் ஆருஷியைத் தவிர அனைவரும் தேர்ந்தனர். இதனாலேயே ஆருஷிக்கு வன்மம் கூடியது.
அவளுக்கு அவளுடைய அறிவை நினைத்து இறுமாப்பு அதிகம். தான் அவமானப்பட்டது போல் உணர்ந்தாள். அதனால் வேலூரில் படிக்கச் சென்று விட்டாள்.
பள்ளி முதல் நாள் தனது ஆசிரமத்திலிருந்து அசோக் மற்றும் ஆதிரா பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தனர்.
சிறு வயதிலிருந்தே ஆதிரா அடாவடியான பெண். துறுதுறுவென இருப்பவள். அதற்கு நேர்மாறே ரியா.
அவள் வகுப்பின் பக்கத்து வகுப்பு 10 – ம் வகுப்பு .அங்கு ஒரு பையனை கேலி செய்வதைப் பார்த்தவள் எப்பொழுதும் போல் அங்கு சென்று கேள்வி கேட்டாள்.
கால் லிட்டர் மிராண்டா பாட்டில் மாதிரி இருந்துட்டு நீ என்னை கேள்வி கேட்கிறாயா ? என்று அடிக்க கை ஓங்கியவனை தடுத்தான் அசோக்.
“டேய் தள்ளுடா அசோக், பாஸ் உங்களை ஏன் கேலி செய்ரீங்கனு கேட்கவில்லை, எதற்காக கேலி செய்ரீங்கனு கேட்டேன்?” என்றாள் ஆதிரா.
அதில் உள்ள ஒருவன் தலையைச் சொறிந்துக் கொண்டு ” இரண்டும் ஒன்னு தான பாப்பா?”
“கொஞ்சம் குனிங்க” .ஏன் என்று கேட்டுக் கொண்டே குனிந்தான். பின்னால் இருந்து அசோக் அவளை இழுத்தான்.
குனிந்தவனை நன்றாக கொட்டி
“பெட்டர்மாக்ஸ் தலையா யாரை பாப்பானு சொல்லுற? காமெடி பீஸ் .நீ சைட் ஸ்டான்டு தான. கம்முனு நில்லு” என்று எகிறினாள்.
அசோக் “அமைதியா இரேன்டி” என்று அவளை இழுத்தான்.
“ச்சை, இவன் ஒரு பயந்தாகோலி” என்று எரிச்சல் பட்டுக் கொண்டே அக்குழுவிடம்
திரும்பி “சொல்லுங்க பாஸ்” என்றாள்.
“அய்யய்யோ தாயி, இவன் ஸ்கூலுக்கு
புதுசுமா . அதான் பேரு ஏரியாலாம் கேட்டேன். வேற ஒன்னும் இல்லை. நீயும் புதுசா?” என்றால் கூட்டத்தில் ஒருவன்.
“ஆமாம் பாஸ், பிரண்ட்ஸ்” என்று கூறி கை நீட்டினாள்.அக்கூட்டம் அமைதியாக நிற்க புதியவன் கை நீட்டினான்.
அவனை ஏற இறங்க பார்த்தாள். ஒகே டா அமுல் பேபி. உன் பேர் என்ன?
“என் பெயர் ஆரியன்” .
“ஹே, சூப்பர் டா அமுல் பேபி. நான் ஆதிரா. இவன் அசோக். ஆரியா ஆதிரா அய்யா மேட்சிங் மேட்சிங்” என்று கூறி குதித்தாள்
ஆரியன் அவளின் குழந்தைதனத்தைக் கண்டு சிரித்தான் , ரசித்தான் அவளை.
கீர்த்தி☘️