Loading

எனதழகா – 21, 22 ❤️

ரியா அழுது அழுது தேம்ப ஆரம்பித்து விட்டாள். ஒரு கட்டத்திற்கு மேல் ரியாவிற்கு எங்கு வலிப்பு வந்து விடுமோ என்று பயந்தனர் தாஸும் , தாமரையும்.

ஆகாஷும் கூட ஒரு கட்டத்திற்கு மேல் பயந்து விட்டான். ஆனால் , அர்ஜுன் மட்டும் அவன் நிலை மாறாமல் நின்று கொண்டிருந்தான்.  ஆகாஷ் அவனின் தோள்களை தொட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வந்தான்.

அர்ஜுன் ஒரு நொடி சுதாரித்து விட்டு ரியாவை நோக்கி நகரும் பொழுது நர்ஸ் ஒருவர் உள்ளே நுழைந்து “பேஷண்ட்டுக்கு ஸ்கேன் எடுக்க சொல்லிருக்காங்க ” என்று கூறி ரியாவை வீல் சேரில் வைத்து அழைத்து சென்றனர்.
அவள் சென்றவுடன் அர்ஜூன் அங்கு ஒரத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து அவளை தேடி மருத்துவமனைக்கு வந்த நொடி நினைவலைகளாக தோன்றியது.

மருத்தவமனைக்கு வேக வேகமாக வந்தனர் அர்ஜுனும், ஈஸ்வரியும். முன்பே யாரோ பின் தொடர்வதாக தோன்றியதால் அர்ஜூன் வெகு சாமர்த்தியமாகவே செயல்பட்டான். அதனால், பின்னால் தொடர்ந்த ருத்ரன்  அவர்களை வர விட்டான்.

ஆனால், கண்ணாடி வழியே அர்ஜுன் ஹூடிஸ் அணிந்தவனை கண்டு கொண்டான். அவனுக்கு  தேவன் கண்ஸ்டிரக்ஷனிலும், ஈஸ்வரி ஆபிஸிலும் , ஹோட்டலில் பார்த்ததும் அப்பொழுது தான் பொறி தட்டியது. அதனாலேயே, சாமர்த்தியமாக டிராபிக்கில் தப்பித்து ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றனர்.

அறையில் நுழைந்தவுடன் அழுத முகத்துடன் இருக்கும் ரியாவை கண்டு பதறி அவள் அருகில் செல்லும் பொழுது ஈஸ்வரி தடுத்தார். நிமிர்ந்து ஈஸ்வரியை பார்க்க, அவர் கண் ஜாடை உணர்ந்து திரும்பி பார்த்த பொழுது அங்கே தாமரை அர்ஜுனை பயத்துடன் பார்ப்பதையும், தாஸ் கோபத்துடன் பார்ப்பதை உணர்ந்து நீண்ட மூச்சு விட்டப்பின் ரியாவின் கைகளை பிடித்து தன் கைக்குள் வைத்து அவளை ஒரு நிலைக்கு கொண்டு வந்த பின் ஆகாஷைப் பார்த்தான்.

ஆகாஷ் ” அவளையே கேள் “என்று கூறி ரியாவின் அருகில் அமர்ந்து கொண்டான்.
ரியா பொறுமையாக அவனை நிமிர்ந்து பார்த்தாள். தேம்பும் தன் தோழியை பார்க்க முடியாமல் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினான்.

அப்பொழுதும் ரியா அமைதியாகவே இருந்தாள். அவளே கூறட்டும் என்று பொறுமை காத்தனர் அர்ஜுனும், ஈஸ்வரியும்.” இங்கு யாருக்கும் நேரமில்லை!” என்று தாஸ் கடுமையாக கூற , தன் ஒரே மகளை தன் கணவன் திட்டுவது பொறுக்கவும் முடியவில்லை , இருந்தும் ஒன்றும் கூற முடியாத நிலையில் இருந்தார்.

இதற்கு மேல் பொறுக்க முடியாது என்பது போல் தாஸ் எழுந்து ரியா அருகில் வ,ர ரியா அழுது கொண்டே கூறினாள்.

“நான் சொன்னேன்ல அர்ஜுன், ரிவ்யூஸ் எடுக்க வார வாரம் போவேன். நீ கூட யாருக்கும் தெரியுமானு கேட்ட? “ரியா கூற, அர்ஜூன் மேலே சொல் என்பது போல் பார்க்க,

“எனக்கு இரண்டு சந்தேகம் இருக்கு அர்ஜுன் “

அர்ஜுன் புருவ முடிச்சுக்களோடு பார்க்க, “நான் இந்த வீக் ரொம்ப பிஸி. அதனால், நான் டிரெயினியா வந்த ஒரு பையனத் தான் டைம் டேபிள் போட சொன்னேன்.”

“சரி, டீடெயிஸ் சொல்லு. அவனை விசாரிப்போம்” என்று அவன் கூறி எழ முயன்ற பொழுது ” இன்னொரு சந்தேகத்தை சொல்லட்டடும். அப்புறம் முடிவு பண்ணுவோம் ” என்று தாஸ் கோபமாக கூறினார்.

பின்மே உணர்ந்து ரியாவை கேட்க” அஜ்ஜு, அங்க ஆபிஸிஸ் உனக்கு போன் பண்ணி வெளியே வெயிட் பண்ணேன். அப்போ , ஒருத்தன் ஹீடிஸ் போட்டு கிட்டு நின்னுட்டு இருந்தான். அவன் …. “ரியா கூறி முடிப்பதற்குள் அர்ஜுன்  கேட்க.

ரியா அதிர்ந்து “ஆமாம் பார்த்தேன். நீ ஏன் கேட்கிறாய்?” என்று கேட்க ” காலையில் இருந்து இப்போ வரைக்கும் அவன் என்னை ஃபாலோ செய்யுறான். அதான், இங்கு வரும் போது தப்பிச்சு வந்துருக்கோம் ” என்று விளக்கத்தை கொடுத்தான்.

“டேய் மச்சான், ரியா அண்ணா நகர் சைட்டுக்கு போகும் பொழுது ஒருத்தனை பார்த்திருக்கா. அவனை பிடிச்சிருக்கு” ஆகாஷ் கூறி முடிப்பதற்குள் ரியா அலறி விட்டாள்.

“அர்ஜு ப்ளீஸ், ப்ளீஸ் ” என்று ரியா கதற, கைகளை இன்னும் இறுக்கி  “ஒருத்தி பண்ணுறதையே யோசிக்க முடியல. இதுல நீ வேறயா? ஏன் அப்பா அம்மாலாம்  பார்க்க மாட்டாங்களா? இல்ல நாங்களாம் செத்து போய்டோமா? நான் காதலிக்கிறதே இங்க அவ்வளவு பிரச்சனை ரியா ! அடுத்தடுத்து ஆரம்பிக்கிறீங்க?  “என்று கண்கள் சிவக்க கூறினான்.

ஆகாஷ் தான் அர்ஜீனை பிடித்து இழுத்தான். அப்போதும் ஈஸ்வரி, தாஸ், தாமரை அமைதியாக தான் இருந்தனர். “முட்டாளா நீங்களாம்? அவனால என்ன பிரச்சனை? அவனை எங்க விஷயம் தெரிஞ்சுக்க பழகுனானா? ” என்று அர்ஜுன் கத்த “அப்படித்தான் தோணுது ” என்று ரியா தேம்பி தேம்பி அழுதாள்.

அர்ஜுன்”எப்படி சொல்லுற ? “ரியா “நான் நம்ம ஆபிஸ் வாசலில் பார்த்தேன். சரி என்னை பார்க்கத்தான் வந்திருக்கானோ நினைச்சுட்டு கால் செஞ்சேன். ஆனால், என் கால் பார்த்து கட் செஞ்சான். அப்பவே டவுட் எனக்கு. அதனால் பக்கத்தில் போய் பேச போனேன். அவன் போய்ட்டான்”.

“ரியா ,இதுல உனக்கு என்ன டவுட் ?”என்று ஈஸ்வரி கேட்க, “நான் மயக்கத்துல இருக்கும் பொழுது யாரோ என் கை பிடித்து பேசுனாங்க .அவன் ஹூடிஸ் போட்டிருந்தான். ஆனால், அது அபி இல்லை. “ரியா கூற

அர்ஜுன் “அபியா?”

ஆகாஷ் “ஆமா , அவன் தான் . நீ கெஸ் செஞ்சது கரெக்ட். அபிஷேக் ருத்ரன் தான் “

ரியா” அவன் போன்ல பேசும் பொழுது இந்த ருத்ரா கிட்ட  யாரும் தப்பிக்க முடியாது. யாரும் என்னை நெருங்கவும் முடியாதுனு சொன்னான். ஆதிரா ஒரு தடவை ருத்ரன் பேரை சொன்ன ஞாபகம் அப்போ தான் வந்தது “

” அவனை மீட் செய்றதுக்காக உன் டீடெயில் சொன்னியா? “ஈஸ்வரி கேட்க

ரியா” இல்லை, அவன்கிட்ட பேசமாட்டேன் . ஆனால், அவன் மேலே எனக்கு டவுட் இருக்கு.நான் அவனை லவ்லாம் பண்ணலனு பொய் சொல்ல மாட்டேன். அவனுக்கும் என் மேல இன்ஸ்டிரஸ்ட்டு இருக்கானு கூடத் தெரியாது. ஆஃபியசல் கால் தவிர நாங்க எதுவுமே பேசிக்கிட்டது கிடையாது.”

அர்ஜுன் தலையை பிய்த்துக் கொண்டான். ஈஸ்வரி அவனின் தலையை வருடி விட்டார். “அம்மா, எந்த நம்பிக்கையில் அவனை கேட்பேன். இவள் எல்லாமே கெஸில் சொல்லுறா? அவனுக்கு எதுக்கு என்ன பிடிக்காம போகனும் ? நான் என்ன பண்ணேன் ?”

அதே நேரம் ருத்ரன்  அவன் அப்பாவுடன் சேர்ந்து எவ்வாறு வசுதேவரையும், கேசவரையும் ஜெயிலின் உள்ளேயே கொலை செய்ய திட்டம் தீட்டினர்.

அபி காபி ஷாபினில் அமர்ந்து ரியாவுக்கு எவ்வாறு ப்ரோபோஸ் செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.
யோசித்தவன் ரியாவிற்கு அழைத்து விட்டான்.

ரியாவின் போனில் கால் வந்ததை அனைவரும் அமைதியாக பார்த்தனர். ஆகாஷின் பரிந்துரையின் படி ரியா காலை எடுத்தாள்.

“ஹலோ ரியா!”

ரியாவின் மொபைலுக்கு அழைத்த அபியை ரியாவின் மூலம் மருத்துவமனைக்கு வரவழைத்தனர்.

அவன் தான் அந்த ஹீடி பாய்யாக இருக்குமோ என்று எண்பது சதவீதம் உறுதி செய்யப்பட்டதால் ஈஸ்வரியும், அர்ஜுனும் மறைந்து கொண்டனர்.

மருத்துவமனையில் இருக்கிறேன் என்று ரியா கூறியவுடன் அடித்து பிடித்து ஓடி வந்தான் அபிஷேக்.

உள்ளே நுழைந்தவனை  ஆகாஷ் அதிர்ந்து பார்த்தான் .  ” இவனா ” என்பது போல் ரியாவைப் பார்த்தான். ரியா ஆகாஷை பார்க்காமல் அபியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ரியா? “என்று ஆகாஷ் அழைக்க” நீங்கள் என்ன சார் இங்க? ” என்று ரியா உள்ளே நுழைந்தவனைப் பார்த்து கேட்க, மறைந்திருந்த அர்ஜுன் கை முஷ்டிகளை மடக்கினான்.

” இல்லைம்மா, உங்களை பார்க்க தான் நானும் அபியும் வந்தோம். அப்புறம் ஏதோ வேலைனு கீழே ஏதோ டாக்டரை பார்க்க போயிருக்கான் வந்துருவாம்மா!உனக்கு பரவாயில்லையா ? டிஸ்சார்ஜ் எப்போ ? ” என்று அபிஷேக்கின் பார்ட்னர் கூறினார்.

இவன் வர மாட்டான் என்று நினைக்கும் பொழுது கெத்தாக உள்ளே நுழைந்தான் அபிஷேக் ருத்ரன். கூலர்ஸை கழட்டி கொண்டே உள்ளே உள்ள அனைவரையும் கவனித்து விட்டான்.

வந்தவன் வேகமாக ரியாவின் அருகே வந்து “ரியா ஐ லவ் யூ! இவங்க தான உன் பேரண்ட்ஸ். சார் நான் ரியாவை லவ் பண்ணுறேன். எனக்கு கல்யாணம் பண்ணி கொடுங்க ” என்று அவன் கூறிக் கொண்டே போக அர்ஜுன் படபடவென வந்து அபியின் பின் மண்டையில் அடித்தான்.

இவ்வளவு நேரம் அபி கூறியதில் அதிர்ந்திருந்த ரியா அர்ஜுன் அடிப்பதில் தான் நிதானத்திற்கு வந்தாள். அர்ஜூனுக்கு பதிலடி கொடுப்பதற்கு இவனும் அடித்தான். இருவரும் அடித்து கொள்வது பொறுக்க முடியாமல் “தயவு பண்ணி நிறுத்துறீங்களா ?” என்று கத்தி விட்டாள்.

அவள் கத்தியவுடன் தலை சுற்றி விட்டது. சில நொடிகளில் மயங்கி விட்டாள்.  அனைவரும் பதறி டாக்டரை அழைத்து செக் – அப் செய்து ஒரு வழியாக அரை மணி நேரத்திற்கு பின் முழித்தாள்.

அதுவரை இருவரும் பேசி கொள்ள வேண்டாம் என்று இருவரையும் அமைதியாக இருக்க வைத்தார் ஈஸ்வரி.

அனைவரும் வாசலில் காத்துக் கொண்டிருக்க டாக்டர் வெளியே வந்தவுடன்  “ரியாவின் பேரண்ட்ஸ் நீங்க தானா? ” என்று தாஸை பார்க்க அவர் “ஆமா சார் ” என்று தலையாட்டினார்.

“சார், உங்க பொண்ணோட டெஸ்ட் ரிஸல்ட் வந்திருச்சு. நீங்க என் கேபின் வர முடியுமா? ” என்று கூறியவுடன் தாஸ் எழுந்து நகர்ந்த பொழுது ஆகாஷும் , அர்ஜுனும் சேர்ந்து  எழுந்த பொழுது அபியும் சேர்ந்து வந்தான்.

அவனை அடிக்க போன சமயம் ஆகாஷ் இழுத்து கொண்டு கேபினுக்குள் நுழைய , தாஸ் அபியை பார்த்து கையெடுத்து கும்பிட, வேறு வழி இல்லாமல் அங்கேயே நின்றான்.

டாக்டரின் அறைக்குள் நுழைந்தவுடன் டாக்டர்  விஷயத்தை கூறினார்.  “சார், நான் நேரடியாகவே சொல்கிறேன். உங்க பொண்ணுக்கு டியூமர் இருக்கு. கிரேட் 2 .அப்படினா செகண்ட் ஸ்டேஜ் “.

“சார், என் பொண்ணு ? “தாஸ் பதற, “நீங்க பதறாதீங்க சார். இது மெதுவா தான் வளரும். இது கேன்சர் கட்டியும் கிடையாது.”என்று கூறியவுடன்  தான் அர்ஜுனும், தாஸும் ஆசுவாசப்படுத்தினர்.

ஆனால் , ஆகாஷ் அமைதியாக இருந்தான். அவனை யாரும் கவனிக்கவில்லை. டாக்டர் மறுபடியும் “ஆகாஷ் சார், உங்களுக்கு புரியும். நீங்களே எடுத்து சொல்லுங்க சார் ” என்று கூறி விட்டார்.

வெளியில் வந்தவுடன் தாஸும், அர்ஜுனும் அவனிடம் கேட்க, ஆகாஷ் வேகமாக தாமரையின் அருகில் சென்று அவரை அமர வைத்து அவரின் கையை பிடித்தான்.

” ஆகாஷ், எதுவும் மாற்றி சொல்லி விடாதே ” என்று கண்களாலேயே இறைஞ்சினான்.
தொண்டையை செருமிக்  கொண்டு “அம்மா, ரியாவுக்கு ஆப்ரேஷன் செய்யனும். ஆனால், நீங்க நினைக்கிற மாதிரி பயம் இல்லை. நான் இருக்கேன். “என்று அவருக்கு புரிய வைத்தான்.

அந்த சில நொடிகள் அமைதியாக இருந்த பொழுது ஆதிரா “அம்மா” என்று அழைத்து கொண்டே வந்தாள்.

அங்கு அபி நிற்பதை பார்த்து ஒரு நொடி அதிர்ந்து விட்டு தாமரையை கவனிக்க சென்றாள். ஆனால், ஆதிரா பார்க்கும் பொழுது நக்கலாக சிரித்தான் யாரும் அறியாமல். ஆனால்,அதை ஆகாஷ்  பார்த்து விட்டான்.

ஆதிரா இருக்கும் தைரியத்தில் ,ஆகாஷ் தாஸ் மற்றும்  அர்ஜுனை தனியே அழைத்து சென்று “ரியாவுக்கு பயம்லாம் இல்லை. அடுத்தடுத்த ஸ்டேஜ் தான் பயம் . ரியாவுக்கு வளர விடாமல் ஆப்ரேட் செய்தால் ப்ராபளம் இல்லைப்பா ” என்று ஆகாஷ் கூற தாஸ் யோசனையுடன் சரி என்று கூறினார்.

பின்பு, அவர்கள் திரும்பி வரும் பொழுது  இன்ஸ்பெக்டரும், நான்கைந்து கான்ஸ்டபிளும் நின்றுக் கொண்டிருந்தனர்.

என்ன என்று விசாரித்த பொழுது ஈஸ்வரி “ரியாவுக்கு டிரிட்மெண்ட் போய்க்கிட்டு இருந்தப்போ அபிக்கு கால் வந்தது. வேகமா அவன் பக்கம் போய் கவனித்தேன். அவன் யார் கூடவோ பேசினான்.  போனில் உள்ளவன்  அபியைத் திட்டி கிளம்ப சொன்னான். ஆனால்,அந்த குரல் தெரிஞ்ச குரல் மாறி இருந்தது. அவன் திரும்பும் நேரமும் நகர்ந்து விட்டேன். இருந்தும் என்னை கவனித்து விட்டான் போல. நான் மெசேஜ் செய்து  போலிஸை வர வைப்பதற்குள் ரியாவை பார்த்து விட்டு கிளம்பி விட்டான் போல ” என்று அவர் கூற,

“என்ன ரியாவை பார்த்தானா? “என்று ஆகாஷ் கேட்க, “ரியா ஒகே தானா? ” என்று அர்ஜுனும் கேட்டான்.

ஈஸ்வரி”ஹம்ம்.. அவள் நல்லா இருக்கா . டிஸ்ஜார்ஜ் செய்ய சொல்லிட்டாங்க. ஆதி இப்போ தான் சொன்னால் வசுதேவர் அப்பாவும், கேசவ் அண்ணா பிரச்சனையும், ரியா டிரீட்மெண்டும் முடிஞ்சதுக்கு அப்புறம் என்கேஜ்மெண்ட் வச்சுக்கலாம்னு பேசிட்டாங்கலாம் . ஆதி சொல்ல சொன்னாப்பா “

ஆகாஷ்” ஆதி எங்க மம்மி”

ஈஸ்வரி “டாக்டரை பார்க்க போயிருக்கா . அர்ஜுன் இனி இங்க உள்ள வேலையை இவங்க பார்த்துப்பாங்க . நம்ம வேலையை பார்க்க போவோம் ” என்று அவர் கூறியவுடன் அர்ஜுன் தயங்கினான்.

அவனின் தயக்கம் உணர்ந்து தாஸ் “டேய், நான் எதுவும் நினைக்கலை. ஆகாஷும், ஆதியும் இருக்காங்க. பார்த்துக்குவோம். நீ எதுவும்  என்னை தப்பா நினைச்சுக்காத . நான் இந்த வேலையெல்லாம் முடிச்சுட்டு  உங்களை கான்டெக்ட்  பண்ணுறேன்.” கூற அர்ஜுன் “அய்யோ அப்பா, நான் ஏன் தப்பா நினைக்க போறேன். நீங்க உதவி செய்யலைனா என்னால இந்த அளவுக்கு கூட நடந்து இருந்திருக்காது. அப்புறம்….. அப்பா…”

தாஸ்”ஹம்ம் சொல்லுப்பா”.

அர்ஜுன் “தயவு பண்ணி ரியா ஆப்ரேஷனுக்கு காசுக்கு மட்டும் யோசிச்சுறாதீங்க ! ப்ளீஸ் ….”  .

தாஸ் “இல்லப்பா ….”

அர்ஜுன் கையை நீட்டி நிறுத்த சொல்லி “இதை பத்தி பேச வேணாம் .நான் பார்த்துக்கிறேன். ஆகாஷ் நீ எந்த டாக்டர் இதுல ஸ்பெலிஷ்ட். அவர்கிட்ட அப்பாயிமெண்ட் வாங்குறது பத்தி பேசிடு. ” என்று கூறி அர்ஜுனும், ஈஸ்வரியும் கிளம்பும் நேரம்  தாஸ் அழைத்து  லாயர் லெனின் அழைத்ததை கூறி சந்திக்க சொன்னார்.

அந்நேரம் அபியை அவனின் அப்பா அடி வெளுத்து வாங்கி விட்டார்.  “ஏன்டா இப்படி இருக்க? அவன் நம் குடும்பத்து எதிரி. அவங்க குடும்பத்துல விரும்புறேனு சொல்லுற ?  உனக்கு வேணும்னா தூக்கிட்டு  வந்து ஒரு நாள் வச்சுட்டு  அனுப்பிடு இல்ல கொன்னுடு “

அவர் கூறியவுடன் அவர் காலரைப் பிடித்தான் கண்கள் சிவக்க .விரல்களை நீட்டி எச்சரித்து விட்டு ஒன்றும் கூறாமல் நகர்ந்தான் .

சென்றவனை பார்த்துக் கொண்டே ” இதே மாதிரி உன்னை பத்தி அவங்க தப்பா பேசினால் அவ உனக்காக நிப்பாளா ? ” என்று கேட்க அவன் ஒரு நிமிடம் நின்று ரியாவுடன் பேசியதை நினைத்துப் பார்த்தான்.

ரியாவின் அறைக்குள் நுழைந்தவுடன் கண் விழித்த ரியா இவனைக் கண்டு பயந்தாள். அகவே நெருஞ்சி முள்ளாக அவனின் இதயத்தில் குத்தியது. இருந்தும் ஒன்றும் வெளிக்காட்டாமல் அவள் அருகில் வர “நான் ….. “என்று ரியா ஆரம்பிக்க 

“எனக்கு உன்னை பிடிக்கவில்லை. உன் மேல லவ்லாம் இல்லை. என்னை விட்டுறு . இது தான் சொல்லுவனு தெரியும். ஆனால் , உன் கண்ணுல பார்த்தேன் என் காதலை. நீ வேணாம்னு தான் சொல்லுவ. எப்பவுமே இந்த அபி தான் முடிவு எடுப்பான். சோ , நான் சொல்லுறேன் .நீ எனக்கு வேணாம் . குட் பாய் ” என்று கூறிவிட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட்டான்.

இப்பொழுது அதை நினைத்து பார்த்து விட்டு , திரும்பி அவன் அப்பாவிடம் “நான் சொல்லிட்டேன் அவள் எனக்கு வேணாம்னு. என் காதல் விட என்னோட லட்சியம் தான் முக்கியம்னு ” என்று கூறி விட்டு வெளியில் நின்று நிலவைப் பார்த்துக் கண்கள் கலங்கி நின்றான்.

ரியாவும் அவள் வீட்டின் ஜன்னலில் இருந்து நிலவைப் பார்த்து கண்ணீர் சிந்தினாள் . அவன் கூறிய வார்த்தைகள் காதினில் ஒலித்து கொண்டே இருந்தது.

கீர்த்தி☘️

 

 

                        

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்