Loading

எனதழகா-16❤️

அர்ஜுனின் செயல்களைக் கண்டு பயந்து விட்டனர் அனைவரும். அசோக்கின் அருகில் அமர்ந்திருந்த பார்த்திபன் அசோக்கின் தோளில் கை வைத்து அழுத்தினான். அதில் சுயநினைவு பெற்று திரும்பியவனுக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினான்.

நெற்றியில் கைகளை வைத்து தடவிக் கொண்டிருக்கும் அர்ஜூனைக் கண்டு தானே முன் வந்து “சார், நாங்கள் கலந்தாய்வு அறைக்கு போய் வேலைப் பார்க்கிறோம். அப்புறம் சார்,  மேகா மேம் ஃப்ராஜெக்ட்டை செய்த வரைக்கும்  மீட்டெடுத்துடாங்க. டவுன்லோட்டு  ஆகிக் கொண்டிருக்கிறது. முடிந்தவுடன் மற்ற வேலைகளைப் பார்க்கிறோம் சார்” என்றான் பார்த்திப்பன்.

அவனை மெச்சுதலாக பார்த்த அர்ஜுன் தலையை அழுந்த கோதி விட்டு நீண்டு பெருமூச்சு விட்ட பின் பார்த்திபனிடம் “சரி, ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை அப்டேஷன் கொடுங்க” என்று அர்ஜுன் கூறினான்.

அனைவரும் கிளம்பியப் பின் அசோக் மெதுவாகக் கேட்டான் என்ன நடந்ததென்று.

அர்ஜுன், “காலேஜில் ரைட்டு அதுவும் ஐடி இல்லை, போலீஸ் ரெய்டு . விடுதியில் இரண்டு பேர் மாட்டியுள்ளனர். கேட்டதற்கு அவ்விருவரும் காலேஜில் இதை விற்கிறார்கள் என்று கூறியுள்ளனர். அதற்கு விசாரிப்பதற்காக அப்பாவை கூட்டி சென்று விட்டார்கள் ” என்று பற்களை கடித்துக் கொண்டே கூறினான்.

“சரி, கூல் டென்ஷன் ஆகாத? நான் ஏசி கிட்ட பேசுறேன்” என்று கூறி அசோக் போன் போடுவதற்குள் அர்ஜுன் தடுத்து  “விக்ரம் பத்தியும் விசாரிக்க சொல்லு அன்அஃபிஷியலா . அவன் இது  பின்னாடி இருக்கானானும் விசாரிக்கச் சொல்லு” என்று கூறி தண்ணீர் அருந்திய போது இன்னொரு கால் வருகின்றது வீட்டினில்.

வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஸ்பை வைத்திருக்கிறான்.அவன் அர்ஜுனுக்கு  கால் செய்து வீட்டில் நடந்ததைக் கூறினான். ஏற்கனவே தன் அத்தை மேல் கோபத்தில் இருப்பவன் ஆருஷி மேல் இன்னும் கோபம்  ஏறியது. ” நான் பார்த்துக் கொள்கிறேன் ” என்று கூறி விட்டு போனை வைத்த மறுநொடி ரியா கால் செய்தாள்.

“தாத்தா மயங்கிட்டாங்க, ப்ளீல் பயமா இருக்கு வா ? ” என்று அழுதுக் கொண்டே கூற அடித்து பிடித்து அசோக்கும் அர்ஜுனும் சென்றனர்.

தேவன் கன்ஸ்டிரக்ஷின்  வாசலில் நிறுத்தும் பொழுதே ருத்ரா  ஹூடிஸ் அணிந்து கொண்டு அனைத்தையும் மறைந்திருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

யாரோ தன்னை பார்ப்பது போல் தோன்றி திரும்பிய பொழுது ருத்ரன் வேகமாக மறைந்து விட்டான். ரியா திரும்பவும் அழைக்க  வேகமாக உள்ளே சென்றான்.

நூலிழையில்  தப்பி தனது பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான். இதை ஒருவர் ஆபிஸில் இருந்து பார்த்து விட்டனர்.

வசுதேவரிடம் வந்த அர்ஜுன் “தாத்தா என்னாச்சு ? நாங்க ஏசியிடம் பேசியாச்சு. அவங்க பார்த்துப்பாங்க. நீங்க டென்ஷன் ஆகாதீங்க? அப்பா வந்துருவாங்க? ” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க ரியாவும், வசுதேவரும்  அதிர்ச்சியாகி பார்த்தனர்.

அசோக்கும் அர்ஜுனும் அவர்களை குழப்பமாக பார்க்க வசுதேவர் “கேசவ்க்கு என்னாச்சு? ” என்று கேட்டவுடன் அதிர்ந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“உங்களுக்கு என்னாச்சு? நீங்க ஏன் மயங்குனீங்க?” அசோக் நிதானமாகக் கேட்டான்.

“அண்ணா நகரில் உள்ள சைட்டுக்கு ரைட்டு வந்துருக்காங்க ? அதில் மண் செங்கல் எல்லாம் தரம் இல்லாதது உபயோகப்படுத்துகிறோம்னு சொல்லுறாங்கனு போய் பார்த்தா நாங்க சொன்ன எந்த பொருள்களும் இல்லை. வார வாரம் நான் தான் ரிவ்யூக்கு போவேன்” என்று அழுவது போல் ரியா கூறினாள்.

“ரியா ரிலாக்ஸ் ” என்று கூறி தண்ணீர் கொடுத்து அவளை சமன்படுத்தி பின் “இந்த நாள் தான் போவாய் என்று அங்குள்ளவர்களுக்கு   தெரியுமா? ” என்று அமைதியாக கேட்டான்.

ரியா” இல்லை தெரியாது! நான் வார வாரம் நாள்களை மாற்றிக் கொண்டே இருப்பேன் “

யோசனையுடன் புருவ முடிச்சுக்களோடு  இருந்த அர்ஜுனை வசுதேவர் “அர்ஜூன், அப்பாக்கு என்னாச்சு? ” என்று கேட்க அர்ஜுனுக்கு தலையே வெடிப்பது போல் இருந்தது.

இருந்தும் பொறுமையாக “தாத்தா  டென்ஷன் ஆகாதீங்க. காலேஜ்க்கு ரைட்டு வந்துருக்கு.  காலேஜ் ஸ்டுண்ட்ஸ்  யூஸ் செய்யுறாங்கனு . இரண்டு பேர் பிடிச்சுருக்காங்க. விசாரிச்சதில் காலேஜ் தான் வாங்கி கொடுக்குதுனு சொல்லிருக்காங்க ” என்று கூறி முடிப்பதற்குள்  கதவை திறந்துக் கொண்டு பத்து பேர் உள்ளே நுழைந்தனர்.

வேக வேகமாக வந்து வசுதேவரை தரமில்லா பொருட்களை உபயோகப் படுத்தியதுக்கு  கைது  செய்வதாக சொல்லி அவரை அழைத்தனர். ரியா கதவை திறந்து அத்தனை பேர் வந்ததில் ஒரு ஒரமாக சுருண்டு விட்டாள்.

அசோக்கும், அர்ஜுனும் மன்றாடியும் கேட்காமல் வசுதேவரிடம் திரும்பி “சார், உங்கள் வயசுக்கும், உங்கள் கௌரவத்துக்கும், உங்கள் பேருக்கும் தான் இவ்வளவு பொறுமையாக கேட்கிறேன். வேறு ஆளாக இருந்தால் வேறு மாறி ஆகிவிடும். நீங்களே வாங்க ” என்று கூறினார்.

வசுதேவர் எழுந்து அர்ஜுன் கைப்பிடித்து அசோக்கிடம் திரும்பி ” என் மகன் பத்திரம்” என்று கண் கலங்க கூறியவரை கட்டியணைத்து “அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். நீங்க தைரியமாக இருங்க. இரண்டு பேரும் சீக்கிரமாக வெளியே வந்து விடலாம் ” என்று அசோக் ஆறுதல் கூறினான்.

அவரை அழைத்து சென்றவுடன் ரியாவையும், அர்ஜூனையும் பார்த்து பெருமூச்சு விட்டு கொண்டு உடனே அழைத்தது ஆகாஷை.

ஆகாஷ் காலை எடுத்தவுடன் அசோக் “ஹலோ” என்று சொல்வதைக் கேட்ட ரியா பாய்ந்து சென்று போனை பறித்து “பாண்டா ” என்று கூறி தேம்பி  அழ ஆரம்பித்து விட்டாள்.

ஆகாஷ் அங்கு கத்துவதும் இங்கு அசோக் சமாதானப்படுத்த முற்பட்ட போது ரியாவிற்கு வலிப்பு வந்து விட்டது. பதறிய அசோக் அர்ஜுனை அழைக்க, சுயநினைவு பெற்று அவளுக்கு  இரும்பு கொடுத்து சமநிலைக்கு வந்தவுடன் அழைத்து சென்றனர் ஆகாஷ் வேலை செய்யும்  மருத்துவமனைக்கு.

ஆகாஷ் அனைத்தையும் தொலைபேசி மூலம் கேட்டதால் அவனும் அவர்களுக்காக வாசலில் காத்துக் கொண்டிருந்தான். அவர்கள் வந்தவுடன் மயங்கியிருக்கும் ரியாவின் கையைப் பிடித்து “காளியாத்தா ” என்று கண் கலங்கி கூறி இறுகப் பற்றினான்.

பின்பு, அசோக் ஆகாஷின் கையைப் பிடித்து “உன்னால் பார்க்க முடியுமா?” என்று கேட்டான். ஆகாஷ் திரும்பி நர்ஸை பார்த்து அட்மிட் செய்ய கூறி விட்டு “டாக்டர் வைதேகியை பார்க்க சொல்லுங்க. நான் ஒரு ஐந்து நிமிடத்தில் வருகிறேன்” என்று கூறி விறுவிறுவென  ஒய்வறைக்கு சென்று முகத்தை அழும்பி தன்னை சமன் செய்துக் கொண்டு தன் தோழியைக் காணச் சென்றான்.

அவன் வருவதற்குள் டாக்டர் வைதேகி செக் செய்து “நார்மல் தான். ஏன் இதுக்கு இவ்ளோ டென்ஷன் ? நீங்க டாக்டர் இப்படி இருக்கலாமா?” என்று அவரின் மகன் வயது என்பதால் அறிவுரை வழங்கினார்.

” இல்லை டாக்டர் , இவள் என் தோழி. இவளுக்கு  அடிக்கடி வலிப்பு வரும். கொஞ்சம் நாளைக்கு முன்னாடி  இங்கத்தான் செக் செய்தோம். இந்த மாறி  அடிக்கடி வரதால்   மூளையில் கட்டி உருவாகிடும். ஜாக்கிரதையா இருக்க சொன்னாங்க. “ஆகாஷ் கைகள் நடுங்க கூறினான்.

“ஓஓ…. சாரி! இட்ஸ் ஒகே பாய் ! நான் பார்க்கிறேன். எம்.ஆர்.ஐ கூட பார்ப்போம். ப்ரைன் ஸ்பெஸிஸ்ட்  வசந்துரா கிட்ட கன்சல்ட் பண்ணுவோம். நானும் வரேன். ஒகே. டேக் கேர். போய் மூணு பேரும் சாப்பிடுங்க” என்று கூறி அவனையும் அழைத்துக்கொண்டு வெளியில் வந்தார்.

அர்ஜுனும் அசோக்கும் இவர்கள் அருகில் வர வைதேகி “ரியா இஸ் ஓகே. சில டெஸ்ட் மட்டும் சொல்லிருக்கேன். முதலில் மூன்று பேரும் போய் சாப்பிடுங்க. முக்கியமா ரியா அப்பா அம்மாவுக்கு சொல்லுங்க ” என்று சொல்லி சென்று விட்டார்.

அவர் சொன்னப் பின் தான்  மூளைக்கு எட்டியது தாஸ் அப்பாவிற்கு சொல்லவில்லை என்று . தொலைபேசியில் சொன்னால் பயப்படுவார்கள் என்று அசோக் நேரடியாக சொல்ல கிளம்பி விட்டான்.

அப்பொழுது அர்ஜுனிற்கு கால் வந்தது. அர்ஜூன் எடுத்தவுடன் ” ஹலோ மிஸ்டர். ருத்ரன். வெல்கம் . உங்கள் காலுக்கு தான் வெயிட் செய்தேன்” என்று நக்கலாக கூறினான்.

“ஹாஹா …. தெரியும் என்னை சீக்கிரமாகவே தெரிந்து கொள்வாய் என்று மீட் யூ சூன் மிஸ்டர் அர்ஜுன்”

🤜🏻🤛🏻

கீர்த்தி☘️

                      

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்