Loading

எனதழகா – 15❤️

பிருந்தாவன மாளிகையில் எப்பொழுதும் ஒலிக்கும் மகாலெட்சுமி அம்மாவின் குரல் ஒலிக்கவில்லை. ஆனால், அதை கவனிப்பதற்கு கூட உற்ற உறவினர்கள் இல்லை .அவ்வீட்டில் வேலை செய்பவர்கள் தான் பூஜையறையை பார்த்து விட்டு சென்றனர்.

தோட்டத்தில் வேலைப் பார்ப்பவர் கூட இன்று பூக்கொடுக்கும் சாக்கில் மகாலெட்சுமி அம்மாவைப் பார்த்து விட்டு சென்றார் எதுவும் உடம்பு சரியில்லையோ என்று.

பூஜைறையின் வாசலில் அதிகாலை நான்கு மணியளிவிலேயே அமர்ந்து விட்டார் மகாலெட்சுமி அம்மா. அவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சத்யபாமா அவரது அருகில் அமைதியாக அமர்ந்து விட்டார்.

காலை ஏழு மணிக்கு எழுந்து வந்த மீரா கிட்சனில் பாமா இல்லாததைக் கண்டு வேகமாக அங்கு வேலை செய்யும் பெண்ணிடம் கேட்டார்.

“பெரியம்மாவும், பாமா அம்மாவும் பூஜையறையில் இருக்காங்க அம்மா. காபித் தரவா அம்மா?” என்று பவ்யமாக கேட்டவளை நன்கு முறைத்துக் கொண்டே “நான் வேணும்னு சொன்னா தான் எடுத்துட்டு வருவியா? காலையில் எந்திரிஞ்சதும் காபி குடிப்பேனு தெரியாதா? ” என்று  பாமா மீது உள்ள கோபத்தை இவளிடம்  காண்பித்து விட்டார்.

பின்பு பூஜையறைக்கு சென்று பார்த்தார்.” அய்யோ  ஆரம்பிச்சுட்டாங்க , ஹப்பா  ஹப்பா! அவள் காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா.அவளுக்காக அழுகுறாங்க . இங்க நான் குத்துகல்லாட்டம் இருக்கேன். என் பிரச்சினையை கேட்க ஆளில்லை. எப்போ அவள் பிறந்தாலோ அப்போ இருந்தே ராதே, ராதே தான். இந்த அப்பா, அண்ணன் கூட மாறிட்டாங்க. காதலித்து கல்யாணம் பண்ணிட்டு வந்த அப்பவும் வருத்தம் தான் படுறாங்க.  வெறுக்கவேயில்லை. நான் வீட்டில் அவங்க சொன்னவரை கல்யாணம் பண்ணி இவங்க கூடவே இருக்கேன் என்னை மதிக்கலை. கேசவ் அண்ணாவும் என்னை வெறுக்குது. இந்த வீட்டுக்கு ராதேயும், பாமாவும் எப்போ வந்தாங்களோ அப்போ இருந்து என் மதிப்பு குறைஞ்சுருச்சு. ச்சை” என்று தனக்குள்ளேயே புலம்பி  தள்ளினார்.

காலையில் எழுந்து கீழே வந்த வெங்கடேஷன் தோட்டத்தில் நிற்கும்  மனைவியிடம் வந்தவர் அனைத்தையும் கேட்டார்.”போதும் மீரா, பிபி பிரஷர் தான் ஏறும். உன்னை கல்யாணம் பண்ணதால் தான் எனக்கு அவங்க தொழிலில் ஒரு இடம் கொடுத்தனர். என் வாழ்க்கை முறைக்கு இதுவே பெரிது” என்று அவர் கூறினார்.

அவர் கூற கூற கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது.” இந்தா உங்க கிட்ட  இப்போ அட்வைஸ் கேட்டேனா? நீங்க மிடில் கிளாஸ். உங்களுக்கு இதுவே பெரிசுதான். எனக்கு அப்படியில்லை . நாங்க பரம்பரை பரம்பரையா கோடிஸ்வரங்க. நீ இப்படி நினைக்கிறதால் தான் உன்னை இப்படி ஒரு வேலைக்கு  வைத்திருக்காங்க” அவர் மனதை புண்படுத்தி விட்டு தான் சென்றார் மீரா.

அதே கோபத்துடன் பூஜையறையின் உள்ளே நுழைய போனார் மீரா. அவரைத் தடுத்து நிறுத்திய பாமாவை மேலிருந்து கீழ் வரை பார்த்தவர் , ” என்னை தொட உனக்கு என்ன உரிமை இருக்கு?என் அண்ணாவை கல்யாணம் பண்ணால் வீட்டை ஆளலாம்னு நினைச்சியா. இங்க கணக்கு எழுதுறவரோடு பொண்ணு எனக்கு அண்ணியா?” என்று அவர் அடுத்து பேச வருவதற்குள்  மகாலெட்சுமி மீராவை அறைந்து விட்டார்.

“அத்தை “பாமா பாய்ந்து கொண்டு மகாலெட்சுமி அம்மாவை விலக்கினார். மகாலெட்சுமி அம்மா பாமாவை தள்ளிவிட்டு மீராவிடம் சென்று  “நானோ, உன் அப்பாவோ அமைதியாக இருக்கிறதால் உனக்கு உறுதுணையா இருக்கோம்னு நினைக்காத. நாங்க ஒதுங்கி இருக்கோம் கண்டும் காணாதது மாறி. ஏற்கனவே இரண்டு பிள்ளைகளை தொலைச்சுட்டோம். இருக்கிறவங்கள கூடவே பார்த்துட்டு என் கிருஷ்ணா என்னை அழைச்சுறனும்னு இருக்கோம்.என்னை பேசவைக்காதே . நிம்மதியா இந்த வீட்டில் சாமி கும்பிடக் கூட முடியவில்லை ” என்று படபடவெனக் கூறி சென்று விட்டார்.

இதற்கு மேல் நின்றால் தன் மீது மீரா பாய்ந்து விடுவார் என்று தனது உலகமான அடுப்பறைக்கு சென்று விட்டார் பாமா.

ஹாலுக்கு வந்த மகாலெட்சுமி அம்மாவைத் தடுத்தாள் ஆருஷி. “25 வயது இருக்கும் பெண்ணிற்கு அம்மாவாக இருப்பவரை இப்படி அடிக்கலாமா? “தன் அம்மாவை அடித்த கோபத்தில் எதிர்த்து நின்றாள்.

“25 வயது இருக்கும் பெண்ணிற்கு அம்மாவாக இருப்பவர் பூஜையறைக்கு குளிக்காமல் செல்லக் கூடாது என்று தெரியவில்லை, அண்ணன் மனைவிக்கு மரியாதை கொடுக்கவும் தெரியவில்லையே ?” என்று அதிகாரத்துடன் கேள்வி கேட்டார் வசுதேவர்.

மகாலெட்சுமி அம்மா வசுதேவரின்  அருகில் சென்று அவர் கையைப் பிடித்து சாந்தப்படுத்தி விட்டு ஆருஷியிடம் நெருங்கி வந்து “அவள் முதலில் என் மகள். அதன் பின் தான் உனக்கு அம்மா .தப்பு செய்தால் கண்டிக்கத்தான் செய்வேன். அது எங்கள் இருவருக்கும் உள்ளது. நடுவில் வராதே “அமைதியாக ஆனால் கண்டிப்பாகக் கூறினார்.

ஆருஷி அடுத்து பேச வருவதற்குள் அவளை இழுத்துக் கொண்டு தனது அறைக்கு சென்று விட்டார் மீரா.

உள்ளே நுழைந்தவுடன் கத்தி விட்டாள் ஆருஷி “ஏன் அம்மா இவ்வளவு அமைதியாக இருக்கீங்க? எரிச்சலா வருது. ரொம்ப திமிரா பேசுறாங்க. உங்களை எப்பவுமே காயப்படுத்திக்கிட்டே இருக்காங்க ” என்று அவள் பொங்கிக் கொண்டு கூறிக் கொண்டிருந்தாள்.

இது எதுவும் மீராவின் காதில் விழவில்லை. அத்தனை வேலையாட்கள் முன்பு தன்னை அடித்ததே திரும்ப திரும்ப மனக்கண் முன் தோன்றியது. தான் அவமானப் பட்டதை போல் உணர்ந்தார்.

தன் கணவர் வெங்கடேஷிடம் சென்று “இங்கிருந்து சென்று விடலாம். வேறு ஏதாவது வேலை தேடிக் கொள்ளலாம். ஆருஷியும் படித்திருக்கிறாள்” என்று கூறினார்.

“பொறுமா, நீ நினைக்கிற போல இது ஈஸி இல்லை. நான் வந்திடுவேன். எனக்கு பழக்கம் இருக்கு. நான்  அப்படித்தான் வளந்தவன். உன்னால முடியுமா? அதை விடு நம்ம பொண்ணால முடியுமா?” என்று வெங்கடேஷ் பொறுமையாக கூறினார்.

” அதுக்கு இப்படி அவமானப்பட்டு இருக்கணுமா? ” என்று ஆருஷி ஆதங்கத்துடன் கேட்டாள்.

வெங்கடேஷன்”இல்லைம்மா, அம்மா செஞ்சதும் தப்பு. நீ தப்பு செய்தால் அம்மா உன்னை திட்டுவாங்க. அது போல, அவங்க சத்தம் போட்டாங்க அவ்ளோதான் “

ஆருஷி “அவங்க திட்டவில்லை. அடித்தார்கள்” என்று மறுபடியும் அதே இடத்திற்கு வந்தாள்.

அதே நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டது. ஆருஷி திறந்தபொழுது மகாலெட்சுமி அம்மாவும், வசுதேவர் அய்யாவும் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் இருவரும் நேராக வெங்கடேஷன் முன்பு வந்தனர். வெங்கடேஷன் மரியாதைக்காக எழுந்த நின்றவரின் கையைப் பிடித்த வசுதேவர் “நீங்க பேசினதை நாங்க கேட்டோம்  மாப்பிள்ளை. ரொம்ப நன்றி எங்களைப் புரிந்துக் கொண்டதுக்கு. ஆயிரம் தான் அம்மாவாக இருந்தாலும் அவள் அடித்தது தப்பு தான் . நீங்க மனசுல வச்சுக்காதீங்க மாப்பிள்ளை”
என்று கூறிவிட்டு மகாலெட்சுமி அம்மாவைப் பார்த்தார்.

அவரும் “ஏதோ கோபத்தில் செய்து விட்டேன். மனசுல வச்சுக்காதீங்க ” என்று அமைதியாக கூறினார்.

“ஆருஷி பேசினதை தப்பா எடுத்துக்காதீங்க அத்தை. அவள் அவளுடைய அம்மா மேல் உயிரையே வைத்திருக்கிறாள். அதனால் தான் கோபம் வந்து விட்டது” என்று வெங்கடேஷனும் மன்னிப்பு கோரினார்.

” அய்யோ இல்ல மாப்பிள்ளை. ஆருஷி எங்களுக்கு பேத்தி இல்லையா? நாங்க எப்படி தப்பா நினைப்போம்? “வசுதேவர் பெருந்தன்மையாக கூறினார்.

வெங்கடேஷ்” இல்ல மாமா, அர்ஜுனுக்கு  இவ்விஷயம் தெரிந்தால் ஆருஷியை திட்டி விடுவான். நீங்கள் பெரியவர்கள். ஆனால் அவன் பேசினால் என் மனசு தான் மாமா வலிக்கும். புரிஞ்சுக்கோங்க மாமா ?”

வசுதேவர், “இல்ல மாப்பிள்ளை, அவன் காதுக்கு இந்த விஷயம் போகாது. நீங்க சாப்பிட வாங்க. இரண்டு பேரையும் அழைச்சுட்டு வாங்க மாப்பிள்ளை ” என்று கூறி விறுவிறுவென வெளியேறி விட்டார்.

அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருத்தனர் மீராவும், ஆருஷியும். அவர்கள் சென்ற பின் ஆருஷி, ” இப்போ கூட உங்களைப் பார்த்து பேசவில்லை. அப்பாவிடம் பேசினாலும் அடிச்சதுக்கு மன்னிப்பும் கேட்கவில்லை. இது தான் உங்களுக்கு தர்ற மரியாதையா? ” என்று அடுத்து அடுத்து கேள்வி கணைகளை தொடுத்தாள்.

அமைதியாக இருக்கும் மனைவியை பார்த்து விட்டு ஆருஷியிடம் “பாப்பா, வேலைக்கு நேரமாச்சு கிளம்பு. அம்மாவிடம் நான் பேசிக்கிறேன். நீ கிளம்பு ” என்று கூறி கண் ஜாடை காண்பித்தார். அதன் பின் ஆருஷி ஒன்றும் கூறாமல் சென்று விட்டாள்.

ஆருஷி சென்ற பின் வெங்கடேஷன் மனைவியின் தோளைத் தொட்டார். நிமிர்ந்த பார்த்தவர் கண்களில் கண்ணீர். அதிர்ந்த வெங்கடேஷன் ,”ஏனம்மா?” என்று கேட்டதற்கு  ஒன்றும் கூறாமல் கதவு வரை சென்றவர் திரும்பி தன் கணவரைப் பார்த்து “மன்னித்து விடுங்கள்” என்று கூறி விட்டு சென்று விட்டார். வெங்கடேஷன் அதிர்ந்து அந்நிலையிலேயே இருந்தவரை போன் கால் உயிர்பித்தது. எடுத்து பேசிக் கொண்டே வெளியில் சென்று விட்டார்.

🏙️AA சொலியூஷன்ஸ்

அர்ஜுன் கடுகடுவென வேலை செய்துக் கொண்டிருந்தான். ராகவேந்தரின் ப்ராஜெக்ட் க்ராஸ் (Crash) ஆகி விட்டது. யார் செய்தார்கள் என்று யோசிக்க நேரமில்லாமல் அர்ஜுனும் , அசோக்கும் , அவரது குழுவும் உண்ண நேரமின்றி வேலை செய்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அர்ஜுனுக்கு வீட்டிலிருந்து  கால் வந்தது. போனை அட்டண்ட் செய்தவுடன் மறுபக்கம் கூறிய செய்தியில்  சேரிலிருந்து எழுந்து டேபிளில் உள்ள பொருட்களை கீழே தள்ளி விட்டான் கோபத்துடன்.

யார் போன் செய்தார்கள்?

கீர்த்தி☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்