Loading

எனதழகா-11❤️

காலையில்  8 மணி  அளவிலேயே அர்ஜுன் தனது கம்பெனியில்  தாத்தா கொடுத்த வேலைக்காக டீம் ஒன்றை தேர்வு செய்து மீட்டிங்  ஏற்பாடு செய்து இருந்தான்.

அசோக் அந்த குழுவிற்கு ஐவரை தேர்வு செய்திருந்தான். கல்லூரிக்குள் தேர்வு வைப்பதற்கு, கேள்வி உருவாக்குவதற்கு, ஆன்லைனில் வைப்பதற்கு தயார் செய்வதற்கு, அட்டவணை உருவாக்குவதற்கு, துறை பிரித்து தேர்வு வைப்பதற்கு இப்படி தனி தனி வேலைகளை பிரித்து கொடுத்தான் அக்குழுவிற்கு.

அசோக்கின் மேற்பார்வையில் அனைத்தும் சரியாக நடக்கும் என்ற நம்பிக்கையில் அதைப் பற்றி யோசிக்காமல் இருந்தான்.

அசோக் அனைவருக்கும் வேலையைப்  பகிர்ந்து கொடுத்தப் பின் அர்ஜுனை அழைத்து என்ன யோசிக்கிறாய் என்று கேட்டான்.

“இல்லை, எனக்கு சரியாப் படவில்லை. நாம் ரோஹித் பற்றி விசாரித்தே ஆக வேண்டும்.” என்று யோசனையாகக் கூறிய அர்ஜுனை புருவ முடிச்சுக்களோடு பார்த்தான் அசோக்.

“என் மனதிற்கு ஏதோ தப்பாக இருப்பது போல் தோன்றுகிறது ” என்று புருவத்தை  நீவி விட்டப் படியே கூறினான் அர்ஜுன்.

அசோக்,”சரி, அப்படியென்றால் நாம் துப்புறியும் நிறுவனத்தை அணுகுவோம்”

அர்ஜுன்”ம்ம்ம்… நீ  ஸ்ரீகாந்த் கிட்ட பேசு. ஸ்ரீகாந்த் தெரியும் தானா ? ஃபைண்டர் டிடெக்டிவ் ஏஜென்ஸி “

அசோக், “ஹான் தெரியும். நான் ஒன்னு சொல்லுறேன். யோசித்து முடிவு சொல்லு. டிடெக்டிவ்  மூலமா விசாரிக்கிறது முன்னாடி தாத்தா கிட்ட  ஒரு வார்த்தை சொல்லிவிடு. அவருக்கு தெரிஞ்சது அவ்வேளா தான்.” என்று ஒரு வித தயக்கத்துடன்  கூறினான்.

” இல்லை அசோக்,  நம்ம விசாரிப்போம்னு தெரிஞ்சுத் தான் தாத்தா நமக்கு இந்த இண்டர்ன்ஷிப் வேலையை கொடுத்தாங்கனு தோணுது . நாம் நேரடியாக நிச்சயதார்த்தம் அன்று  அவர்களை சந்திக்க வேண்டும் என்று தாத்தா விரும்புவது போல் இருக்கிறது” என்று அர்ஜுன் தன் யூகத்தை கூறினான்.

“சரிடா, அப்போ நீயே ஸ்ரீகாந்திடம் பேசு. உனக்கு என்ன என்ன தகவல் வேணுமோ அவர்கிட்ட கேளு. தகவல் கிடைத்தவுடன் என்னிடம் சொல் “என்று அசோக் இதில் ஈடுபாடு இல்லாமல் கூறினான்.

“அப்போ நான் சொல்லுறதை நம்பவில்லையா நீ?” என்று குற்றம் சாடுவது போல் தன் நண்பனை  பார்த்தான்.

“இல்லை, நான் தாத்தாவையும் அப்பாவையும் நம்புகிறேன்.அவர்கள் ஒரு முடிவு எடுத்தால் அது நம் நன்மைக்கே. நீ சொல்வது போல் நமக்கு தெரியக் கூடாது என்று நினைத்தால் அதுவும் நம் நன்மைக்காக தான் இருக்கும். ஆனால் , நான் உன் நண்பன். உன் மன திருப்திக்கு விசாரி. விசாரித்து விட்டு என்னிடம் கூறு. எனக்கு இண்டர்ன்ஷிப் வேலை நிறைய உள்ளது. அதோடு நமக்கும் 4 பாராஜெக்ட் போய்கிட்டு இருக்கு. ஊருக்கு வேற ஒரு வாரம் போகனும். நிறைய வேலை இருக்கு.உன் மனம் நார்மல் ஆனவுடன் கூறு நம் வேலையைப் பற்றி  பேச வேண்டும் ” என்று மூச்சு விடாமல் மனதில் தோன்றியதை வெளிப்படையாகக் கூறி விட்டு சென்று விட்டான்.

சென்ற அவனையே தன் அறையின் கண்ணாடி கதவின் மூலம் பார்த்துக் கொண்டிருந்தான்.

எவ்வளவு யோசனை செய்தும் மனதிற்கு சரியென்று தோன்றாததால் ஸ்ரீகாந்திற்கு
அழைத்து விட்டான்.

அவனிடம் ஆதிராவைப் பற்றியும், ரோஹித் பற்றியும் கூறி ரோஹித் மற்றும் ரோஹித்தின் வீட்டினர்கள் பற்றிய தகவல்களைக் கூறுமாறு கேட்டுக் கொண்டான்.

ஸ்ரீகாந்த் அமைதியாக சரி என்று கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தவுடன் எதிரில் இருப்பவரைப் பார்த்தான்.

“நீ எந்த தகவலும் அவனுக்கு கூற கூடாது. நீ விசாரிக்கவும் கூடாது. அவன் வேறு யாரையும் அணுகி அவர்களைப் பற்றி விசாரிக்கக் கூடாது. அதற்கு ஏற்றாற் போல் நடந்துக் கொள் ” என்று சொல்லிவிட்டு அவ்வறையை விட்டு நகர்ந்தான்.

“சரி சார்” என்று கூறி அர்ஜுனை கவனிப்பதற்கு ஆளை நியமித்து விட்டான்.

🏙️AA சொலியுஷன்ஸ்

இப்பொழுது தான் மனம் பாரம் குறைந்தது போல் இருக்க அசோக் கூறியது நியாபகம் வந்தவுடன் அவனைக் காண அவன் அறைக்கு சென்றான்.

“சார், அசோக் சார் கான்ஃபிரன்ஸ் ரூம்மில் இருக்கிறார். உங்களை அவர் அங்கு  வரச் சொன்னார் “அசோக்கின் பி.ஏ பிரகாஷ் முந்திக் கொண்டு கூறினான்.

தன்னைப் பற்றி முழுதாக தெரிந்த அசோக்கை கண்டு இன்றும் ஆச்சிரியம்  கொண்டு புன்னகை புரிந்தான்.

அர்ஜுன் வந்தவுடன் அசோக் தயாரித்த அட்டவணையை காண்பித்து , ” இன்று நாமே சென்று கல்லூரியில்  ஒவ்வொரு துறைகளுக்கும் உள்ள மாணவர்கள் பற்றி வாங்கி வருவோம். அவர்களுக்கு ஏற்ப இரண்டு தேர்வு வைப்போம். அதன் பின் தேர்ந்தவர்களுக்கு  முழு பயிற்சியும்  இரண்டு நாட்கள் தான் கொடுக்க முடியும் ” என்று கூறியவுடன்

அர்ஜுன்”ஏன்” .” அப்பா தான் கூறினார்.ஆதிரா நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு இந்த வேலையையும் முடித்து விட்டு வரலாம்னு சொன்னாங்க” என்று அசோக் தெளிவு படுத்தினான்.

அசோக்கை சந்தேகமாகப் பார்க்க “உன் டிடெக்டிவ் மூளையை வச்சு ரொம்ப ஆராய்ச்சி செய்யாதே .அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அடிக்கடி  பயணம் செய்ய வேண்டாமே ” என்று அசோக் முடிப்பதற்குள்
“அப்படினு அவர் சொன்னாரா?” என்று அர்ஜுன் நக்கலாக கேட்டான் தன்னுடைய சந்தேகம் சரி என்பது போல்.

” இல்லை, நான் தான் சொன்னேன்” என்று
அசோக் சொன்ன பின்பு தான் அர்ஜுன் அமைதியானான்.

அர்ஜுனும் அசோக்கும்  அந்த இரு வழி  சாலையில் பயணித்துக் கொண்டிருந்தனர். பொற்காலமான சில நினைவுகளும் அவர்களின் பயணத்தோடு அவர்கள் மனதில் பயணித்துக்
கொண்டிருந்தது.

செல்லும் வழி எங்கும் நினைவுகள். நெருங்க நெருங்க அர்ஜுனுக்கு நெருப்பில் நிற்பது போல் இருந்தது. கண்களை மூடி தன்னை சமன் செய்ய முயற்சி செய்தான்.

ஆனால், இயற்கை அவனிடம் அமைதி நிலவக் கூடாது என்று நினைத்தது போல,சரியாக சிக்னல் விழுந்தது. கண் திறந்து பார்த்தான். அவனின் இடது புறத்தில் திரும்பினான். அழகாக பொறிக்கப்பட்டிருந்தது .

மதுரா ஆர்ட்ஸ் & சைன்ஸ்  காலேஜ். அதைக் கண்டவுடன் அவன் மனதில் அவள் சிரிப்பு, அவள் பேச்சு,அவளுடனான  பயணம், அவளின் பார்வை, அவளின் தீண்டல்கள் . இப்படி அனைத்தும் அவன் மனதில் ரீங்காரமிட்டது.

ஒரு சில நிமிடங்கள் அவனால் அவனை கட்டுக்குள் வர வைக்க முடியவில்லை. மனம் தணலாக கொதித்தது. தீடீரென்று அவன் தோள் மேல் கைப் பட்டு நிகழ் உலகத்திற்கு வந்தான்.

“அஜ்ஜீ, எவ்ளோ  நேரமா கூப்பிடுறேன் . சிக்னல் விழுந்துருச்சு. பின்னாடி ஹாரன் அடிக்கிறாங்க. கிளம்பு” என்று அசோக் சத்தமிட்டு கூறிய பின்பே அர்ஜூன் வண்டியை கிளப்பி வலது பக்கம் திருப்பி காத்துக் கொண்டிருந்தான் காவலாளி திறப்பதற்காக.

நிமிர்ந்து பார்த்தான்.அவனைப் பார்த்து அழகாக சிரித்து அழைப்பது போல் இருந்தது அப்பலகை

மதுரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி

வெளியே இறங்கி இன்ஜினியரிங் கல்லூரியையும் எதிர்ப்புறம் இருக்கும் கலைக் கல்லூரியையும் பார்த்தான்.

கலைக் கல்லூரி வாசலில்  அவளுக்காக காத்திருக்கும் பொழுது அவள் தூரத்தில் இருந்து வரும் பொழுதே கண்ணும் உதடும் சேர்ந்து சிரிக்கும் அவ்வதனத்தை மனதிற்குள் சேகரிப்பான்.

இவனிடம் நெருங்கி வந்தவுடன் அவள் உதட்டிற்கு வலிக்காதவாறு அர்ஜுனா போ , இங்கு நிக்காதே என்று வாயை அசைக்கும் பொழுது இவன் கண் அடித்து விட்டு எப்பொழுது தான் தைரியம் வந்து என்னுடன் வண்டியில் வரப் போகிறாயோ என்று எப்பொழுதும் கேட்கும் கேள்வியை இவனும் வாய் அசைத்தே கூறி விட்டுச் செல்வான்.

இன்றும் அந்த நினைவு மனதிற்கு இதமாக இருந்தது. காவலாளி வந்து வணக்கம் சொல்லியவுடன் நிதானத்திற்கு வந்து வண்டியை வளாகத்தினுள் நுழைத்தான்.

பிரதான அலுவலகம்(மெயின் ஆபிஸ்)  இருக்கும் கட்டிடம் முன்பு வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தார்கள்.

அப்பொழுது இருக்கும் அவனின் அழகு  இப்பொழுது நன்றாக  உடம்மை மெழுகேற்றி  அதற்கேற்றவாறு ஃபார்மல் உடை அணிந்து இருந்ததால் ,அது அவனுக்கு கண கச்சிதமாக பொருத்தி இருந்தது. அதுவே அவனின் சிஸ் – பேக்கை வெளிக் கொணர்ந்து காட்சி பொருளாக மாறி அனைவரையும் ஈர்த்தது. அவன் வதனத்தில் உள்ள டிரிம் செய்யப்பட்ட தாடியும், வசியம் செய்யும் கண்களும், சிகரெட் பிடிக்காததால் கிடைத்த அவனின் சிவந்த உதடும், கூர்மையான மூக்கும் இனம்புரியா மொழி பேசியது.

அதற்கேற்றவாறு கூலர்ஸ் அணிந்து கொண்டு மூன்றாம் மாடியில் இருக்கும்  அலுவலகத்திற்கு சென்றான்.

தான் வந்ததை பீயூனிடம் தெரிவித்து  விட்டு  காத்திருந்தான் தலைமை ஆசிரியர் அறையின் வெளியில்.

பக்கத்தில் இருக்கும் அறையிலிருந்து இரு மாணவிகள் தேர்வு ஃபீஸ் பற்றிக் பேசிக் கொண்டே வந்தனர்.

அர்ஜுனுக்கு அன்பரசியை சந்தித்த முதல் சந்திப்பு நியாபகம் வர அவனுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது.

இதற்கு மேல் முடியாததால் அசோக்கிடம் நீயே வேலையை பார்த்துக் கொள் என்று கூறிவிட்டு விறுவிறுவெனச் சென்று விட்டான்.

செல்லும் அவனை கவலையுடன் பார்த்தான் அசோக். இன்னும் சில நாள்களில் உன் வாழ்க்கை மாறும் என்று மனதிற்குள்ளேயே கூறிக்கொண்டான்.

கையில் கைப்பேசியை எடுத்து ஒருவருக்கு கால் செய்தான் அசோக்.

“ஹலோ அண்ணா !” அன்பரசி மறுபுறம் கைப்பேசியை எடுத்துப் பேசினாள்.

கீர்த்தி☘️

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்