Loading

எனதழகா – 10 ❤️

“என்னடா சொல்லுற? தாத்தாவுக்கு தெரியுமா? ” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் அசோக்.

“உனக்கு எப்படி தெரியும் தாத்தாவுக்கு தெரியும்னு?  ” என்று ஆதிரா கேட்டாள்.

“பாரு, மாட்டிக்கிட்டோம்னு எப்படி முழிக்கிறானு?” என்று ஆகாஷ் பொங்க

“ச்சீ, போடா” என்று ஆதிரா ஆகாஷைத் திட்டி விட்டு அர்ஜுனிடம் திரும்பி அதே கேள்வியைக் கேட்டாள்.

“அதுலாம் சரி. இவ்ளோ தெரிஞ்சும் ஏன்டா என்னை அடிச்ச? “என்று ஆகாஷ் கேட்க
அர்ஜுன் வாயைத் திறப்பதற்குள் ஆகாஷ் கையை நீட்டி பேசாதே என்று செய்கை செய்து “இருக்கிற கோபத்துக்கு யாரையும்
அடிக்க முடியலை அதான் என்னை அடிச்சேனு சொல்லுவ ” என்று ஆகாஷ்  பாவமாக கூறினான்

அர்ஜுன் ஆம் என்பது போல் கண் அசைத்தான். ஆகாஷ் அடுத்து பேச வருவதற்குள் ரியா ” உன்னத்தான்டா  ஈஸியா அடிச்சுறாங்க”என்று நக்கலாக கூறினாள்.

“பிள்ளை பூச்சிக்குலாம் கொடுக்கு முளைக்கும்னு நான் என்ன கனவா கண்டேன் ” என்று ஆகாஷ் ரியா பேசியதற்கு கலாய்க்க “யூ டாக் போல் அர்ஜுன் , ஐ டாக் போல் யூ” என்று ரியா எதிர்ப்பதில் கொடுத்தாள்.

“டேய் மச்சான் , என்ன ஹாஸ்பிட்டல்ல சேருங்க டா? முடியல என்னால ” என்று அழுகாத குறையாக  ஆகாஷ் ரியா அடுத்து அடுத்து  பேசுவது தாங்காமல்.

“போலாம் , போலாம். ஆதிரா நிச்சயதார்தம் முடிந்த பின்னே நானே உன்னை சேர்த்து விடுறேன் ” என்று கூறிக் கொண்டே வந்தார் ஈஸ்வரி அம்மா.

“வா மம்மி, நீ தான் பாக்கி. நீயும்
கலாய்ச்சுட்டியா. சந்தோஷம்.எனக்கு என்று ஒரு பெண் வரும். அவள் எனக்கு துணையாக நிற்பாள். எவரையும் என்னை  எதுவும் சொல்ல விடாமல் எனக்கு அரணாக இருப்பாள்.” என்று ஆகாஷ் முகப் பிரகாசத்துடன்  செந்தமிழில் கூறினான்.

ஈஸ்வரி அம்மா “மகனே “.
ஆகாஷ் ” சொல்லுங்கள் தாயே “.

ஈஸ்வரி “நீ ஒரு வயசுப் பையன் . நீ கல்யாணம் பற்றி எல்லாம் பேசக் கூடாது. வாயில் போட்டுக் கொள்” என்று அவர்  கூற அதிர்ச்சி ஆகி விட்டான்.

“சரி, விளையாண்டு சிரிச்சதுலாம் போதும். நேரம் ஆகிடுச்சு . சாப்பிட வாங்க” என்று கூறி ஈஸ்வரி அம்மா சென்றி விட்டார்.

“என்னது வயசுப் பையனா ?” ஆகாஷ் நெஞ்சில் கை வைத்து கேட்க

“வயசுப் பையன், வயசுப் பையன்னு சொல்லி உன்னை வயசான பைனாக்க போறாங்க போல ” என்று சிரிக்காமல் ஆதிரா கூற மறுபடியும் அவ்வீட்டில் சிரிப்பலைக்கு பஞ்சம் இல்லை என்பது போல் நிறைந்து இருந்தது.

மதிய உணவை உண்டு விட்டு அடுத்த நாள் வேலைக்காக அவரவர் இல்லம் நோக்கி  விரைவாகவே சென்று விட்டனர் .

⛰️ஊட்டி⛰️

பெண்ணின் எலுமிச்சை நிற வதனத்தில் உதட்டிற்குக் மேல் ஓரத்தில் இருக்கும் மச்சம் அழகு சேர்ப்பது போல் ,நீலகிரி மாவட்டத்திற்கு  அழகு   சேர்க்கிறது உதகை மண்டலம் என்ற ஊட்டி.

இது கடல் மட்டத்திலிருந்து  7347 அடி உயரத்தில் இருப்பதால்  குளுமையாக இருக்கிறது. ஆனால், அந்த குளுமை என்னை எதுவும் செய்யவில்லை என்பது போல்  தொட்டபெட்டா உச்சியில் நின்று சூரியன்  மறைவதை பார்த்துக் கொண்டிருந்தாள் அன்பு என்னும் அன்பரசி.

“இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படி நிற்க போற? கடந்து வா அன்பு ” என்று அவள் தோழி அறிவுரை கூற

“உன்னால் முடியுமா? ” என்று எதிர் கேள்வி கேட்டாள் அன்பு.

” இது தவிர வேறு எதுவும் பண்ண முடியாதுனா ஏத்துகிட்டு தான் ஆகனும் .உன்னை நம்பி எத்தனை பேர் இருக்காங்க ?”

“விடு , காலங்களும், நேரமும் தான் பதில் சொல்லனும் . அவன் மேல் உள்ள கோபம் என்னைக்கும் போகாது. அவன் மேல் வெறுப்பு மட்டும் தான் இருக்கு. அவன் எனக்கு கொடுத்த வலிக்கு பதில் அடி தராமல் விட மாட்டேன். அவனை மன்னிக்கவும் மாட்டேன்.” என்ற ஆவேசத்துடன் அன்பு கூறினாள்.

அதே வேகத்துடன் ” அர்ஜுனானானா” என்று தன் தொண்டை வற்றும் வரை கத்தினாள்.

இதற்கு மேல்  விட்டால் அவள் உடம்புக்கு பிரச்சனை வரும் என்று அவளை  வம்படியாக இழுத்து கொண்டு சென்று விட்டாள் அன்பின் ஆருயிர் தோழி.

🏡பிருந்தாவனம்🏡

ஆதிராவும், ஆகாஷும் உள்ளே நுழையும்  பொழுது,

” இந்த ஐடியல் குடும்பம் எதுக்கு தான் அவங்க  குடும்ப விவகாரத்துக்கு நம்மளை கூப்பிடுறாங்கனு தெரியலை? ” என்று ஆதிரா புலம்பிக் கொண்டே வர

“ஏண்டி, உன்கிட்ட சொன்னாங்களா எதுக்கு கூப்பிட்டாங்கனு ?” என்று ஆகாஷ் நொந்துக் கொண்டே கேட்க

“ஆமா, சொல்லிட்டுத் தான் மறு வேலை பார்பார்கள் என்று கூறி ரியா அவர்களின் அருகில் தனது வெஸ்பாவை   நிறுத்தினாள்.

“வாமா வா, நீ தாத்தாக்கு பி.ஏ வா இல்லை இந்த வீட்டுக்கே பி.ஏ வானு தெரியலை. எந்நேரமும் சுத்திக்கிட்டே இருக்கியே செம்மயா என்ஜாய்  பண்ணுற போல ?” ஆகாஷ் கலாய்க்க

ரியா மெதுவாக  வண்டியை நிறுத்தி விட்டு ஆகாஷின் அருகில் வந்து  “பாண்டா” என்று பாசமாக அழைக்க “என்ன காளியாத்தா” என்று இவனும் அழைத்துக் கொண்டே அருகில் வர கையில் மறைத்து வைத்திருக்கும் பெப்பர் ஸ்ப்ரே வை அவள் முகத்தில் அடித்து விட்டாள்.

அவன் அலறியதில் தோட்டத்தில் வேலை பார்ப்பவர் ஓடி வந்து என்ன என்று கேட்டு அவனுக்கு தண்ணீர் கொடுத்தார்.

அவன் முகம் அலும்பி இயல்பு நிலைக்கு திரும்பவே 10 நிமிடங்களுக்கு மேல் ஆகி விட்டது. அதன் பின் வீட்டிற்குள் நுழைந்தான்.

வந்தவுடன் தாத்தா தாமதமாக வந்ததற்கு  ஒரு பாடம் நடத்த ஆரம்பிக்க , பாவமாக   பாமா அம்மாவை  பார்க்க, சுதாரித்து அவனை சாப்பிட அழைத்து சென்று விட்டார்.

” அய்யோ அம்மா, ரொம்ப  நன்றிம்மா. யூ காப்பாத்திங் மீ இன் ரைட் டைம். மீ நாட்  ஃபர்காட் ” என்று ஆகாஷ் இங்கிலிஷையும் தமிழையும் கொலைச் செய்தான்.

“ஏன்டா, இன்னமுமா நீ மாறலை.சீக்கிரமா வந்தா தான் என்னவாம்” என்று ஆகாஷ் தலையில் வலிக்காதவாறு கொட்டிக் கொண்டேக் கூறினார்.

“அம்மா…..” என்று அவன் அலறியவுடன்  வேகமாக ஓடி வந்தார் பாமா. “ஏன்டா, என்னாச்சு, ஏன் கத்துன?”

ஆகாஷ் ,”அம்மா , நான் ஆதி, காளியாத்தா கூட தான்  வந்தேன். ரியாதான்  என்னமோ முகத்துல அடிச்சா . அதோடு முகம் எல்லாம் எரிச்சல், தண்ணீர் வச்சு முகம் கழுவி  எரிச்சல் குறைஞ்ச அப்புறம் வர்றேன்”.

பாமா” முகம் எரிஞ்சதா ? மிளகாய் எதுவும் பேக்ல வைத்து இருப்பாளோ?” யோசனையாகக் கேட்டார்.

” மிளகாய் இல்லமா, பெப்பர் ஸ்ப்ரே ” என்று கையில் பாலுடன் வந்தான் அசோக்.

பாமா,”பெப்பர் ஸ்ப்ரேயா!டேய் பெப்பர் ஸ்ப்ரே தெரியாது? “

“ஆமா, டெய்லி பஸ் ஸ்டாப்பில் நின்று ஒவ்வொரு பெண்ணிடமும் பேசி பெப்பர் ஸ்ப்ரே அடி வாங்கிட்டு வரேன். தெரியுறதுக்கு ?” என்று ஆகாஷ் நொந்து கொண்டே கூறினார்.

“அங்க என்ன சத்தம்? இன்னும் எவ்ளோ நேரம் துரைக்கு காத்திருக்கனும் ?” என்ற வசுதேவர் குரல் கொடுக்க

“அட என்னய்யா, அது தான் கேட்குதுல , அப்பறம் எதுக்கு என்ன சத்தம் என்ன சத்தம்னு கேட்குறாரு? ” என்று கூறி பாதிச் சாப்பாட்டில் எழுந்தான்.

ஹாலின் ஓரத்தில் ஒரு  சின்ன உணவருந்தும்  மேஜை இருக்கும். அங்கு  உட்கார்ந்து  பேசினால் நன்றாகவே ஹாலில் இருப்பவர்களுக்கு கேட்கும்.

வசுதேவர்க்கு கேட்டும் அமைதியாக இருந்தார். மற்ற அனைவரும் கடினப்பட்டு சிரிப்பை அடக்கினர் மகாலெட்சுமி அம்மா உட்பட.

அர்ஜுன், “பாட்டி”.லட்சுமி அம்மா பக்கத்தில் இருக்கும் தனது பேரனிடம் “இவருக்கு ஆகாஷ் தான் சரி. வயசு வந்தால் வாயைக் குறைக்கனும். இப்படியா எல்லாரையும் பாடுபடுத்துறது. நல்லா வேணும் ?” என்று கூறி சேலை முந்தானையை வாயில் வைத்து சிரிப்பை அடக்கினார்.

அவரைப் பார்த்தே அனைவருக்கும் சிரிப்பு வந்தது.

அனைவரும் ஆஜராகியவுடன் வசுதேவர் “ஆதிரா நிச்சயதார்த்தம் பத்தி எல்லாருக்கும் தெரியும். நான் ரோஹித் வீட்டில் பேசி விட்டேன். அடுத்த வாரம் ஞாயிறு அன்று விசேஷம் முடிவு பண்ணியிருக்கோம்.”

அசோக்” ரோஹித் , சின்ன வயசுல பார்த்தது. இப்போ அவன் சினிமா துறையிலையும் இருக்கான். அவன பத்தி , அவன் குடும்பம், அவன் அப்பா அம்மா இப்படி எல்லாம் விசாரிக்க வேணாமா?”

அர்ஜூன்,”அவள் விரும்புறானு கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறதா?” என்று ஆதங்கத்துடன் கேட்டான்.

“டேய், உன் தோழியை அப்படிலாம் விடமாட்டோம். விசாரிக்கமாலா இவ்வளவு தூரம் முடிவு எடுப்போம்?” என்று லட்சுமி அம்மா தன் கணவரை விட்டுக் கொடுக்காமல் கூறினார்.

“நேத்து தான் விஷயத்தை சொன்னாள். அதற்குள் விசாரித்து விட்டீர்களா?” என்று ஆகாஷ் தனக்கும் மூளை வேலை செய்கிறது என்று நிருப்பிப்பது போல்  கூறினான்.

“டேய் நல்லவனே, அதான் நேத்தே அர்ஜூன் சொன்னான் இல்லையா தாத்தாவுக்கு தெரியும்னு ”  ரியா கூற

ஆகாஷ்”ஹே ஆமா, எப்படி தெரியும்”.

ரியா “ரொம்ப சீக்கிரமா கேட்டுட்ட?”.
லட்சுமி அம்மா, ” ஆதிரா மூன்று மாதத்திற்கு முன்பே தாத்தாவிற்கு போன் செய்து ரோஹித் பற்றி கூறி முடிவு உங்களுடையது என்று கூறிவிட்டாள். தாத்தா யோசித்து சொல்கிறேன் என்று கூறி ரோஹித் பற்றியும் அவரின் குடும்பம் பற்றியும் விசாரித்தார். திருப்தியாக இருந்ததால் தாத்தாவே சென்று பேசி விட்டு வந்தார் .”

“அர்ஜுன் உனக்கு எப்படி தெரியும்?” என்று  ஆகாஷ் கேட்க

அர்ஜுன்” அன்று ஆபிஸிக்கு உள்ளே  வரும் பொழுது அப்பா இவளிடம் கேட்டார் சொல்லிவிட்டாயா என்று ?” ஆதிராவை முறைத்துக் கொண்டே கூறினான்.

” கிராதகன் பார்த்துட்டான், ச்சை” என்று ஆதிரா முணுமுணுத்தாள்.

பின் இவளுக்காக கல்யாணத்துக்கு சீர் சீதனம் செய்வதைப் பற்றி பெரியவர்கள் பேச ஆதிரா கண்னை கசக்குவதை பார்த்து “ஏன்டி அழுகுற , நாங்கள் இது கூட செய்யாமலா இருப்போம். சின்ன பிள்ளை மாதிரி அழுகுற?”என்று ஆகாஷ் கவலையோடு கூற

“போடா என் பொட்டேடோ , நீங்க செய்யலை கொன்னுடுவேன். கண்ணுல தூசி விழுந்துறுச்சுன்னு துடைச்சா ஃபீல் பண்ணுறேனாம். ஒழுங்கா எல்லாம் கரெக்ட்டா செய்யனும்”என்று  அவள் விரல் நீட்டி கூறினாள்.

அதிர்ந்த ஆகாஷ் ,பின்பு சிறு மணி  துளிகளில் அவளின் உரிமை பேச்சு கண் கலங்க வைத்தது.

கீர்த்தி☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்