வணக்கம் மக்களே வாங்க கதைக்குள்ள போகலாம் ………..
அடுத்த நாள் காலை ……….
எல்லாம் எழுந்துட்டாங்க இன்பா நல்லா தூங்கிட்டு இருந்தா ………….
அஞ்சலி : நல்லா தூங்கிறா
இனியன் : ஆமா தூங்கட்டும் விடு
இவங்களாம் உக்காந்து வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்க ………….
இனியன் : எப்போ வரும்
ரகு : இன்னும் ஒரு மணி நேரம் டா
இனியன் : சரி டா
அஞ்சலி : இன்பாவ எழுப்பலாம்
இனியன் : சரி………..இன்பா
இன்பா : ……..
இனியன் : இன்பா …..
இன்பா : ஹான் ……
இனியன் : எழுந்திரு
இன்பா : ம்ம்ம்
இனியன் : போ …….போய் ………பிரெஷ் ஆகிட்டு வா …………
இன்பா : எங்க வந்துருக்கோம்
இனியன் : இன்னும் ஒன் ஹௌர் தான் இருக்காம்
இன்பா : ஓஹ் சரி நான் போய் பிரெஷ் ஆகுறேன்
இன்பா எழுந்து பிரெஷ் ஆகிட்டு வந்தா ……………
அஞ்சலி : ஏதாது குடிக்கிறாயா
இன்பா : இல்லை பா வேணாம் ஊருக்கு போய்ட்டு ஏதாது சாப்டுக்கலாம் …………
அஞ்சலி : சரி பா
இன்பா புக் எடுத்தா ……
இனியன் : கம்முனு வெய் இதை
இன்பா : ஏன்
இனியன் : ஏதாது புக் படுச்சுட்டு நைட் தூக்கத்துல உளறு
இன்பா : சாரி உங்களலாம் தொந்தரவு பணிட்டேன்ல
இனியன் : ஹே நான் அப்படி சொல்லலை நீ ஏதோ ஒரு புக் படுச்சுட்டு அதை நெனைச்சு பீல் பண்ற அதுனால தான் சொல்றேன்
அஞ்சலி : இப்போ விடு மா நம்ப அங்க போய்ட்டு படுச்சுக்கலாம் ……..
இன்பா : சரி மா
கன்னியாகுமரி வந்துட்டாங்க …………நாலு பேரும் அவங்க ட்ரேஸ்லாம் எடுத்துட்டு இறங்குனாங்க ………..
அஞ்சலி : ஹாபா வந்துட்டோம் ஒருவழியா
ரகு : ஆமா இப்போ நாம்ப எங்க தங்குறது குளிக்கிறது
இன்பா : இங்க எனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க அங்க தான் போக போறோம்
இனியன் ; அப்போ சரி வாங்க போலாம்
எல்லாரும் டாக்ஸி பிடுச்சு இன்பா பிரின்ட் வீட்டுக்கு போனாங்க ……….
ரகு : என்ன வீடு பூட்டிருக்கு
இன்பா : அவங்க வெளிநாட்டுல இருக்காங்க இங்க வீடு சும்மா தான் இருக்கு சரி நம்ப யூஸ் பண்ணிக்க நான் கேட்டேன்
அஞ்சலி : சாவி வேணும்ல
இன்பா : சாவி தான இதோ
அவங்க வீட்டு பூந்தொட்டில இருந்து எடுத்தா ………
இனியன் : இது எப்படி இங்க
இன்பா : இங்க டெய்லி வந்து சுத்தம் பண்ண வருவாங்க அவங்க கிட்ட சொல்லி சாவிய இங்க வெக்க சொன்னாங்க
இனியன் : சரி சரி
எல்லாரும் வீட்டுக்குள்ள போனாங்க …………..போய்ட்டு குளிச்சுட்டு வந்தாங்க …………..
இனியன் : அடுத்து என்ன பண்ணலாம்
அஞ்சலி ; மொதல்ல சாப்புடலாம்
இன்பா : கரெக்ட்
வீட்டை பூட்டிட்டு வெளிய வந்தாங்க …………
இனியன் : வாங்க அப்டியே போய் பாக்கலாம் …..
அப்டியே கொஞ்ச தூரம் போனாங்க …………ஒரு கடை இருந்துச்சு………..
இனியன் : ஹே இங்க பாருங்க
இன்பா :வாங்க வாங்க சாப்பிடலாம்
எல்லாரும் அந்த கடைக்குல போனாங்க ……………….
இனியன் : சாப்பிட என்ன அண்ணா இருக்கு
கடைக்காரர் : இட்லி , தோசை , பூரி ,பொங்கல் ,சப்பாத்தி
இன்பா : எனக்கு ரோஸ்ட்
அஞ்சலி : எனக்கு பூரி
ரகு : எனக்கு இட்லி போதும்
இனியன் : எனக்கு இட்லி வடை இருக்கா
கடைக்காரர் : இருக்கு தம்பி
இனியன் ; அதும் ஒன்னு
இன்பா : எனக்கும் வடை
கடைக்காரர் : சரிங்க மா நீங்க போய் உக்காருங்க
எல்லாரும் போய் உக்காந்தாங்க …………..கொஞ்ச நேரத்துல சாப்பாடு வந்துடுச்சு ………….எல்லாரும் உக்காந்து சாப்பிட்டாங்க ……………
இனியன் : வேற ஏதாது வேணுமா
இன்பா : போதும்
அஞ்சலி : போதும்
ரகு : போதும் மச்சான்
இனியன் : சரி டா
சாப்பிட்டதுக்கு காசு குடுத்துட்டு வெளிய வந்தாங்க …………..
இன்பா ; இப்போ நம்ப எப்படி மருத்துவமலை போகிறது
ரகு : பஸ்ல தான்
இன்பா ; அது எனக்கு தெரியாது பாரு
அஞ்சலி : அங்க போயிடு யார்டையாது கேக்கணும்
இன்பா : சரி இப்போ கிளம்பலாம்
இனியன் : நம்ப நேத்து ட்ராவல் பண்ணி உடம்புலம் வலிக்குது நாளைக்கு அங்க போலாமா
இன்பா ; ஏன் பா
இனியன் : ப்ளீஸ் மா
இன்பா : சரி நாளைக்கு காலைல சீக்கிரமா கெளம்பிடலாம்
இனியன் : கண்டிப்பா
எல்லாரும் வீட்டுக்கே வந்துட்டாங்க …………………
இன்பா : சரி நான் பொய் அந்த புக் படிக்குறேன்
அஞ்சலி ; என்ஜாய் பண்ணு
ஆளுக்கு ஒரு ரூம்குள்ள போய்ட்டாங்க ………….நம்ப இன்பா படிக்க ஆரமிச்சுட்டா ………….
🧡🧡🧡🧡🧡🧡
ராஜா பேசுவதை எழில்மதி கேட்டுக்கொண்டு தான் இருந்தால் ………..
எழில்மதி : என்ன இது நம் தந்தை இவ்வாறு பேசுகிறார் இதை முதலில் அகிலிடம் கூற வேண்டும்
வேகமா அகில பார்க்க அவ அறைக்குள்ள போன ……………
எழில் : அகில் ……..அகில்
அகில்:சொல்லு எழில் ஏன் இவ்ளவு பதட்டமாக வருகிறாய்
எழில் : தந்தை உன்னிடம் பொய் கூறி உள்ளார்
அகில் : என்ன கூறுகிறாய் நீ
எழில் : ஆமாம் நான் தந்தை பேசுவதை கேட்டேன் அவர் உன்னை ஏமாற்றுவதற்கு கூறியுள்ளார்
அகில் : அப்படியென்றால் நான் ருத்திரனுடன் சேர இயலாதா
எழில் : முதலில் நாளை இதை அத்தானிடம் கூறு மற்றதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்
அகில் : சரி எழில்
அடுத்த நாள் காலை ………….
அகில்மதி ருத்திரனை காண சென்றால் அவர்கள் எப்போவும் சந்திக்கும் இடத்திற்கு ………….
ருத்திரன் : மதி
அகில் : அத்தான் …😭😭😭😭
ருத்திரன் : என்னவாயிற்று மதி ஏன் ஆழுகின்றாய்
அகில் : நம் இருவரையும் சேர விடமாட்டார்கள்
ருத்திரன் : என்னவாயிற்று மதி ஏன் இவ்வாறு கூறுகிறாய்
அகில் : நேற்று என் தந்தை என்னிடம் நம் விவாகத்துக்கு சம்மதம் சொல்வது போல் கூறிவிட்டு என் அன்னையிடம் உன்னை ………
ருத்திரன் : என்னை ……….
அகில்:உன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்
ருத்திரன் : 🤣🤣🤣🤣
அகில்: நான் எவ்ளவ்வு பயத்தில் உள்ளேன் நீர் சிரிக்கிறாய்
ருத்திரன் : அதுலாம் ஒண்றும் ஆகாது மதி நீ கவலை படாதே நான் பார்த்து கொள்கிறேன்
அகில் : உன்னுடைய வீட்டிலும் நம் விவாகத்துக்கு சம்மதம் கூறமாட்டார்களா
ருத்திரன் : ஏன் இவ்வாறு கேட்கிறாய்
அகில்: கூறுங்கள்
ருத்திரன் : தெரியவில்லையே பார்க்கலாம்
அகில்: என்ன இப்படி கூறிவிட்டர்கள்
ருத்திரன் : கண்டிப்பாக நம் விவாகம் நடக்கும் மதி கவலை படாதே
அகில்: உண்மையாகவா
ருத்திரன் : உண்மையாக
அரண்மனையில் ……….
ராணி : நம் மகளுக்கு ஒரு வரன் பாத்துருக்கேன் என்று கூறினீர்கள் என்னவாயிற்று
ராஜா: அவன் பேருக்கேத்த வீரன் நம்முடைய பக்கத்து நாட்டு அரசன் பலசாலி
ராணி: அப்படியா அவரின் பெயர்
ராஜா : ரணதீரன் ………
ராணி : நல்ல பெயர் ஆம் எப்பொழுது வரவிருக்கிறார் நம் மகளை காண
ராஜா : நாளை வரவிருக்கிறார்
ராணி; ஆனால் நம் மகள்
ராஜா : அவளை சரி செய்வது உன்னுடைய கடமை
ராணி; நானா என்ன சொல்கிறீர்கள்
ராஜா: ஆம் நீர் தான்
ராணி: அவளை பற்றி தங்களுக்கு தெரியாதா
ராஜா : தெரியும் தான் ஆனாலும் வேறு வழி இல்லை நாளை ரணதீரன் வரும்பொழுது நம் மகள் நம்மிடம் பேசுவது போல் பேசினால் பெரும் மனஸ்தாபம் ஆகிவிடும்
ராணி : ஆனால் இவளிடம் எப்படி கூறுவது
ராஜா : அவளிற்கு புரியும் படி கூறு தளிர் ரணதீரன் நம் மகளின் ஓவியத்தை கண்டபொழுதில் இருந்து அகில் தான் வேண்டும் என்று கூறிக்கொண்டு உள்ளான் ஒருவேளை நம் மகள் இதில் ஏதாது தவறு செய்யதால் ரணதீரன் நம் நாட்டிற்கு போர் தொடுப்பான் அவன் அவ்வாறு செய்தால் நம் நாட்டு மக்கள் அனைவரும் செத்து மடிவர் …………
ராணி: நாட்டு மக்களை பற்றி நினைக்கும் நீங்கள் நம் மகளின் வாழ்வை பற்றி நினைக்க மனம் இல்லையா
ராஜா : என்ன தளிர் கூறுகிறாய் நீயும் தானே கூறினாய் ருத்திரத்தேவனை நம் மகளுக்கு விவாகம் செய்து தர மனம் ஒப்பவில்லை என்று ………..இப்பொழுது இவ்வாறு கூறுகிறாய்
ராணி : நான் ருத்திரனை தான் கூறினேன் ஆனால் நம் நாட்டு மக்களாக நம் மகள் வாழ்வை பற்றி தாங்கள் சிந்திக்காமல் இருப்பது தவறு அரசே
ராஜா : போதும் நான் கூறிவிட்டேன் அகிலிடம் கூறிவிடு நாளை அவளை பெண் பார்க்க வருகிறார்கள் என்று
ராணி : கூறுகிறேன் ஆனால் அகில் ஏதாது செய்தால் எனக்கு தெரியாது நான் இப்பொழுதே கூறிவிட்டேன்
🧡🧡🧡🧡🧡🧡🧡🧡
இனியன் : இன்பா வா சாப்பிடலாம்
இன்பா : அதுக்குள்ள மதியம் ஆகிடுச்சா
இனியன் : நீ அதுலயே மூழ்கிட்ட போலயே
இன்பா : ஆமா பா
இனியன் : சரி வா சாப்பிடலாம்
இன்பா : ம்ம்ம்
எழுந்து சாப்பிட போன …….
அஞ்சலி : வா வா சாப்பிடலாம்
இன்பா ; ம்ம்ம் வாங்க
எல்லாரும் சாப்பிடறாங்க ………….
இனியன் : நாளைக்கு என்ன பண்ணப்போறோம்
இன்பா : நாளைக்கு கிளம்புறப்போ நம்ப டிரஸ் கொண்டு போய்டணும் நம்ப டெய்லி அங்க இருந்து இங்க வரமுடியாது அதான்
அஞ்சலி : கரெக்ட் தான்
ரகு : சரி தான் ஆனா நமக்கு அங்க காட்டுக்குள்ள போகுறதுக்கு அந்த காட்டை பத்தி தெரிஞ்சவங்க கூட இருந்தா கொஞ்சம் உதவியா இருக்கும்ல
இன்பா : அது நம்ப அங்க போய் தான் தேடணும்
இனியன் ; ம்ம்ம் பாத்துக்கலாம் விடுங்க
நாளைக்கு அங்க போகப்போறாங்க ……………என்ன நடக்கும் ??பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில் …………….
மீண்டும் வருவாள் ……………