Loading

வணக்கம் மக்களே வாங்க கதைக்குள்ள போலாம் …………😊😊😊😊

அடுத்த நாள் காலை 🛣🛣🛣🛣………

இன்பா எழுந்து கிளம்பிட்டு இருந்தா ………..அவ அம்மா சோகமா இருந்தாங்க ………

அம்மா : கண்டிப்பா போயி ஆகணுமா

இன்பா : அம்மா இதோட பத்து டைம் கேட்டுடீங்க நானும் சொல்லிட்டேன் கண்டிப்பா போய் தான் மா ஆகணும் ப்ளீஸ் மா கிளம்புற டைம் இப்படி பண்ணாதீங்க

அம்மா : சரி மா பத்திரம்

இன்பா : சரி மா கண்டிப்பா

அம்மா: போன் பண்ணுவியா

இன்பா : நான் போகுற இடம் சிக்னல் கிடைக்குமா தெரிலையல கிடைச்சா கண்டிப்பா பேசுறேன் மா

அம்மா : சரி  டி

இன்பா சாப்டுட்டு கெளம்பிட்டா ……….ரயில்வே ஸ்டேஷன்க்கு காலைலயே அவங்க சார் கால் பண்ணி சொல்லிட்டார் அங்க வர சொல்லி …………அவ கிளம்புனா உடனே அவங்க அம்மாக்கு மனசுல ஏதோ மாறி இருந்துச்சு ………………அவங்க புருஷன் போட்டோவை பார்த்து அழுதாங்க ………….ஆமாங்க இன்பா அப்பா இறந்துட்டார் இன்பா பிறந்து ஒரு மாசத்துல …………….இவ குழந்தையா இருக்கிறப்போ ஒரு சாமி சொன்னது அவங்களுக்கு ஞாபகம் வந்துச்சு …………….

24  வருடத்திற்கு  முன்பு ,

இன்பா பிறந்து ஒரு வாரம் தான் ஆகியிருக்கு ………….இன்பாவ எடுத்துட்டு அவங்க அம்மாவும் அப்பாவும் கோவில் போனாங்க …………அங்க சாமி கும்பிட்டுட்டு உக்காந்துருந்தாங்க ……………அப்போ அங்க வந்த ஒரு சாமியார் இந்த குழந்தை (இன்பா) முகத்தையே பார்த்தார்………….

இன்பா அம்மா: என்ன சாமி அப்டி பாக்குறீங்க

சாமி : உன் குழந்தையம்மா

இன்பா அம்மா : ஆமா சாமி

சாமி : சந்தோசம் …….ஆனா

இன்பா அம்மா : என்ன சாமி

சாமி : இவள் பிறந்து 30 நாள் ஆகுறப்போ உன்னோட பூவும் போட்டும் உங்கிட்ட இருக்காது தாயி ………

இன்பா அம்மா : 😰😰😰😰 சாமி

சாமி : ஆமா மா

இன்பா அப்பா : இங்க பாரு யாரு நீ வந்த நீ பாட்டுக்கு பேசிட்டு இருக்க அமைதியா போய்டு ………..நீ வா மா நம்ப போலாம் …………..

அப்பா அம்மாவை கூப்டுட்டு வந்துட்டார்……………அப்போ இன்பா அம்மா இதை பெருசா எடுத்துக்கல ………….ஆனா அந்த சாமியார் சொன்ன போல இன்பாக்கு 30 நாள் வரப்போ அவங்க அப்பா இறந்துட்டார் …………..

இன்பா அம்மா : அந்த சாமியார் சொன்னது நடக்குதே ………அவரை போய் பார்க்கணும் ………..

இன்பா அம்மா அதே கோவிலுக்கு போனாங்க ………….இவங்களுக்காக காத்திருப்பதை போலவே அந்த சாமி அங்க இருந்தார் …………..

இன்பா அம்மா : சாமி ………😭😭😭😭

சாமி : வா தாயி நீ வருவேன்னு எனக்கு தெரியும்

இன்பா அம்மா : நீங்க சொன்னிங்க நாங்க தான் கேக்கல இப்போ என் புருஷன் போய்ட்டார் சாமி

சாமி : இது விதி தாயி ஒன்னுமே பண்ண முடியாது ………..உன் பொண்ணு ஜாதக படி அவளுக்கு அப்பா அம்சம் இல்லை மா

இன்பா அம்மா : என்ன சாமி இப்படி சொல்றிங்க

சாமி : ஆமா தாயி …………உன் பொண்ணுக்கு அவளோட பதின்மை வயசுல (20 டு 25) அவளுக்கு பெரிய கண்டம் இருக்கு

இன்பா அம்மா : என்ன சாமி சொல்றிங்க 😲😲😲😲

சாமி : ஆமா தாயி இந்த வயசுல அவ மருத்துவ மலைக்கு போகக்கூடாது

இன்பா அம்மா : அவ  அங்க ஏன் சாமி போகணும்

சாமி : காலம் வரும்போது தெரியும் தாயி அவ அங்க போகக்கூடாது ஒரு வேல அவ அங்க போனா அதுக்கு அப்றம் உன் பொண்ணு உனக்கு கிடைக்க மாட்டா

இன்ப அம்மா : அவ அங்க போகமாட்டா சாமி நான் பாத்துக்கிறேன் …………நான் வரேன் சாமி

சாமி : விதியை மாத்த முடியாது தாயி

இன்பா ஸ்டேஷன்க்கு வந்துட்டா ……….

இன்பா : அச்சோ டைம் ஆகிடுச்சு ……….

வேகமா போன …………அங்க அவங்க சார் கூட இன்னும் நாலு பேர் இருந்தாங்க ………

இன்பா : குட் மார்னிங் சார்

சார் : வெரி குட் மார்னிங் இன்பா

இன்பா : லேட் பண்ணிட்டான சார்

சார் : இல்லை மா இப்போ தான் வந்தோம் ……….அப்பறம் இவங்க அஞ்சலி

இன்பா : ஹாய்

அஞ்சலி : ஹி

சார் : இது ரகு

இன்பா : ஹாய்

ரகு : ஹாய்

சார் : அப்றம் இது இனியன்

இன்பா : ஹாய்

இனியன் : ஹாய் இன்பா ( 😍 நம்ப கதையோட நாயகன் 😍 )

சார் : இவங்கள ஏன் உன்கூட செலெட் பண்ணேன் தெரியுமா

இன்பா : ஏன் சார்

சார் : இவங்களும் என் ஸ்டுடென்ட்ஸ் தான் மருத்துவ மலைன்னு சொன்னதுமே உடனே கிளம்பி வந்துட்டாங்க

இனியன் : நான் இவங்க கூட வந்தேன் அவ்ளோ தான்

இன்பா : இட்ஸ் ஓகே இனியன் வாங்க

ட்ரெயின் வந்துடுச்சு …………

சார் : சரி ஆல் தி பெஸ்ட் நல்லபடியா போய்ட்டு கண்டுபிடுச்சுட்டு வாங்க ………

இன்பா : கண்டிப்பா சார்

அஞ்சலி : கண்டிப்பா வந்த வேலைய முடுச்சுட்டு தான் வருவோம் சார்

இனியன் : என்ன வந்த வேலை

அஞ்சலி : அது அந்த இடத்தை பத்தி தெருஞ்சுகிறது தான்

ரகு : சரி கிளம்பலாம் …………

இவங்க நாலு பேரும் ட்ரெயின் ஏறிடங்க …………….ரகு அப்றம் அஞ்சலி அவங்க போகுறா இடத்தை பத்தி பேசிட்டு இருந்தாங்க ………….இன்பா கதவுகிட்ட நின்னுட்டு வெளிய வேடிக்கை பாத்துட்டு இருந்தா ………….

இனியன் :என்ன பண்ற

இன்பா : சும்மா நீங்க

இனியன் : நானும் தான்

இன்பா : அவங்க என்ன பன்றாங்க

இனியன் : அவங்க நம்ப போகுற இடத்தை பத்தி பேசிட்டு இருகாங்க

இன்பா : உங்களுக்கு இதுல ஆர்வம் இல்லையா

இனியன் : கண்டிப்பா இல்லை

இன்பா : அப்றம் எப்படி வந்தேங்க

இனியன் : ரகு ரொம்ப கம்பெல் பண்ணான் அதான் வந்தேன்

இன்பா : சரி சரி …………

ரெண்டு பெறும் பேசிட்டே அவங்க இடத்துக்கு வந்து உகர்த்தாங்க …………

அஞ்சலி : ஹே பசிக்குது பா

இன்பா : அஞ்சலி என் பாக்லே  ஸ்னாக்ஸ் இருக்கு எடுத்து சாப்பிடு

அஞ்சலி : ஹே சூப்பர்

அஞ்சலி ஸ்னாக்ஸ் எடுத்து சாப்டுட்டு இருந்தா ……………

இனியன் : நம்ப ஊருக்கு போக எவ்ளோ நேரம் ஆகும்

இன்பா : நம்ப இப்போ தான் எக்மோர்ல இருந்து கிளம்பிருக்கோம் நம்ப கன்னியாகுமாரி போகணும் அங்க இருந்து மருத்துவமலை போகணும்

இனியன் : அப்போ எவ்ளோ நேரம் ஆகும்

இன்பா : 19 ஹௌர் 50 மினிட்ஸ்

இனியன் : ஒஹ்ஹஹ் நோ

இன்பா : ஏன் பா உங்களுக்கு ட்ராவல் பிடிக்காதா

இனியன் : அதுக்குன்னு  இவ்ளோ தூரமா

இன்பா : நம்ப பேசிட்டே போலாம் நல்லாருக்கும்

அஞ்சலி : கரெக்ட்

ரகு : சாப்பிடு டி நீ

அஞ்சலி : நான் அதா தான் பண்றேன்

ரகு : போடி

இனியன் : சரி ரூட் எப்படி போகுது

இன்பா : சென்னை , விழுப்புரம்  , பெரம்பலூர் ,திருச்சிராப்பள்ளி , திண்டுக்கல் ,மதுரை ,விருதுநகர் ,திருநெல்வேலி ,கன்னியாகுமாரி

இனியன் : ஓஓஓஓ ………

ரகு : அங்க இருந்து நம்ப மறுபடியும் மருத்துவமைலை போகணும்

இனியன் : அது எங்க இருக்கு

அஞ்சலி : கன்யாகுமாரில இருந்து ஒரு 15ல இருந்து 20மினிட்ஸ் ட்ராவல்

இனியன் : சரி சரி

ட்ரெயின் இப்போ நின்னுச்சு ……..

இனியன் : அதுக்குள்ள விழுப்புரம் வந்துட்டோமா

இன்பா : இல்லை இது ஏதோ லோக்கல் ஸ்டாப்பிங்

இனியன் : சரி சரி

அஞ்சலி : ஏதோ காடு மாறி இருக்கே

இனியன் : ஆமா அதன் எனக்கும் புரில

இவங்க பேசுறப்போவே ட்ரெயின் நகந்துச்சு ……………..

இன்பா : யாருமே ஏறுன போல இல்லை எதுக்கு நிறுத்துனாங்க

அஞ்சலி : தெரிலயே

அப்றம் ட்ரெயின் போயிட்டே இருந்துச்சு ………….இன்பா அவங்க அம்மாக்கு போன் பண்ணா ……..

இன்பா : அம்மா

அம்மா: சொல்லு மா ……..என்ன பண்ற

இன்பா : ட்ரைன்ல போயிடு இருக்கோம் மா

அம்மா:உன்கூட யார் யார் வரா

இன்பா : சார் ஓட ஸ்டுடென்ட்ஸ் வராங்க மா எல்லாரும் ஒண்ணா தான் போயிடு இருக்கோம்

அம்மா: சரி மா பத்திரமா இரு

இன்பா : சரி மா

பேசி முடுச்சுடா ……..

இனியன் : அம்மாவா

இன்பா : ம்ம்ம்…….ஆமா

அஞ்சலி : உனக்கு ஏன் இதுல எவ்ளோ ஆர்வம்

இன்பா : தெரிலயே பட் ரொம்ப பிடிக்கும் இது பத்திலாம் தெரிஞ்சுக்க ……….

அஞ்சலி : சரி………..

அப்போ இவங்க இருக்க இடத்துக்கு ஒரு பிச்சைக்காரர் வந்தார் ……………

பிச்சைக்காரர் : தாயி

இன்பா ; இந்தாங்க தாத்தா இது சாப்பிடுங்க

பிச்சைக்காரர் : ரொம்ப நன்றி மா

இன்பா : 😊😊😊😊😊

பிச்சைகாரரை : நீ தேடி போகுற காரியம் நல்லபடியா நடக்கும் மா

இன்பா ; அப்டியே நான் எங்க போகுறனு சொல்லுங்க

பிச்சைக்காரர் : நீ மருத்துவமயிலைக்கு தான போகுற

அஞ்சலி : உங்களுக்கு எப்படி தெரியும்…….😲😲😲😲

பிச்சைக்காரர் : தெரியும் தாயி ……….இந்த புத்தகத்தை படி தாயி

இன்பா : என்ன இது

பிச்சைக்காரர் :படி தாயி அப்போ தான்  உனக்கு புரியும்

இன்பா : சரி  தாத்தா

அந்த தாத்தா சிரிச்சுட்டே போய்ட்டார் …………

ரகு : பைத்தியம் போல

இன்பா : அப்படிலாம் சொல்லாத பா

இனியன் : இதை படிக்க போறியா

இன்பா : அப்றம் படிக்கலாம் நமக்கும் பொழுது போகணும்ல

இனியன் : சரி சரி…………

இவங்க மருத்துவ மலைக்கு போய்ட்டு இருகாங்க ………….அங்க இவங்களுக்காக சில பேரு காத்துகிட்டு இருகாங்க ………..ஆனா எதுக்காக……………அடுத்த எபிசோடில் பாக்கலாம் ……….

மீண்டும் வருவாள் ……………………

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்