Loading

அத்தியாயம் 5

 

 

 

 

அவர்களின் தெருவிற்கு அடுத்த தெருவில் இருக்கும் வீட்டின் கூரையில் அமர்ந்திருந்த ஒருவன்..சன்ஜீவனின் வீட்டினை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தான்..

 

அவன் சசங்க சன்ஜீவனின் வீட்டில் பார்வை பதித்து இருந்தாலும் உள்ளுக்குள் சமீப காலமாக கனன்று கொண்டு இருந்த வன்மம் குறைந்து சந்தோஷமாக இருந்தது.. காரணம் சன்ஜீவ அவன் தந்தையின் கையால் அடி வாங்கி இருந்தான் அல்லவா அதனை கேள்விப்பட்டதலில் இருந்து தான்..

 

அவன் கையில் இருந்த வெள்ளை காகிதத்தில் இருந்ததை நாசியின் அருகே கொண்டு சென்று ஆழ சுவாசித்தான்.. அதுவோ மூளைக்குச் சென்று ‘ கிர் ’ என்று போதை ஏறிய உணர்வில் மயங்கி போய் கூரையில் சாய்ந்து படுத்துக் கொண்டான் சசங்க…

 

சன்ஜீவனுக்கு அவனின் தந்தையால் கிடைத்த அடி பற்றாதது போல சசங்கைக்கு தோன்றவே மனதில் வேறு திட்டமொன்றை வகுத்திருந்தான்..அவன் மீது இத்தகைய வன்மம் எதற்காக என்று பின்னால் பார்க்கலாம்..

 

அதே சமயம் சன்ஜீவ அவன் அறையில் கணனி முன்பு அமர்ந்திருந்தான்..விழிகள் அங்குமிங்கும் உருண்டு எதை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் இருந்தான் அவன்..

 

தன் குழப்பத்தினை சரி செய்ய ஜெனனியிடமே கேட்டு விடலாம் என்று எண்ணினான் அவன்.. அவளிடம் எப்படி கேட்பது ஏனென்றால் அன்று போயா நாள் காலையில் பன்சல சென்று வந்திருந்தான்..

 

அன்றைய நாள் மரக்கறி உணவு தான் அவ்வளவாக அவனுக்கு பிடிக்காது மாமிச உணவு ( மீன் , கருவாடு, கோழி இறைச்சி , முட்டை) என்று விரும்பி உண்பவன் மதிய உணவை கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு தான் கணனி முன்பு அமர்ந்திருந்தான்..

 

இதில் ஜெனனியை ஒரு தலையாக வேறு காதலிக்கிறான்.. அவளிடம் காதலை சொல்லி திருமணம் செய்தால் அவள் பாடு தான் இவனோடு தின்டாட்டமாக இருக்க போகிறது..

 

அன்று அவள் வாசலை கூடிக்கொண்டு  இருந்தாள்..அதன் சத்தம் அவன் செவிகளில் கேட்கவும் தாமதிக்காது ஜன்னல் அருகில் வந்தவன் “ ஸ்..ஸ்..ஸ்..” ஜெனனியை அழைக்க..

 

கூட்டிக்கொண்டு இருந்தவள் நிறுத்திவிட்டு காது கொடுத்து செவிமடுக்க மீண்டும் “ ஸ்..ஸ்..ஸ்..” என்ற கேட்டதும் “ பாம்பு சீறுர மாதிரி சத்தம் கேட்குது..” அண்ணாந்து மேலே பார்க்காமல் தோட்டத்தை கண்களால் அலசினால்..

 

“ மெகி இன்னவனே ( இவள் ஒருத்தி) ” கடுப்பாக மொழிந்து விட்டு இது சரியாக இருக்காது என்று நினைத்தவன் “ ஓஹம ஹிடபன்கோ ( இரு வாறான்) ” என்று சொன்னவன் மேசையில் பேனா , பென்சில் வைத்திருக்கும் பென் ஹோல்டர் ஸ்டீலில் ( pen holder steel ) சுற்றி இருந்த ரப்பரை கையில் எடுத்து சரியாக அவள் மேலே தூக்கி எறிந்தான்..

 

அது அவள் தலையில் வந்து விழவும் திடுக்கிட்டு பயத்தில் நெஞ்சிலே கை வைத்து “ ஆ..அம்மா பாம்பு ” அலறிக்கொண்டே அவ் இடத்தில் இருந்து குதித்து கொண்டு இருக்க..

 

மகளின் அலறலில் சமயலறையில் இருந்து ஓடி வந்தார் வசந்தா..ஜெனனியின் கூத்தை ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டு இருந்தவன் வயிற்றை பிடித்துக் கொண்டு “ ஹா..ஹா..ஹா..ஜெனி ” வாய்விட்டு சத்தமாக சிரித்தான்..

 

ஜெனனி அருகில் வந்து ஓங்கி மண்டையில் கொட்டு வைக்க..“ எதுக்கு ம்மா கொட்டுன ” உச்சந்தலையை தடவினால், “ இப்படியா தொண்டை கிழிய கத்துவ, ஏன்டி நல்லபாம்பு கொத்திரிச்சோ எண்டு பயந்து ஓடி வந்தா சாதாரண ரப்பர் பாம்பை பாத்து கத்துற ” அவளைத் திட்ட..பாவமாக உதட்டை பிதுக்கி “ சும்மா நின்னுட்டு இருந்த எண்ட தலைல தீடிர் எண்டு விழுந்துது தெரியுமா? பயந்து போய் கத்தாம நீ என்ன ம்மா ” அவள் நியாயத்தை பேசிக் கொண்டு இருக்க..இங்கு ஒருவனின் சிரிப்பொலி அவள் செவிகளில் கேட்க..

 

அவ்வளவு தான் “ பக்கத்து வீட்டு தடியன் வேலையா இருக்கும்..” சீற்றத்துடன் ஜன்னலை பார்க்க.. ஜன்னல் வழியே தெரிந்தது அவன் சிரிப்பதை கண்டவள் கோபம் கொப்பளித்தது..“ சன்ஜீவ எருமைட வேலை பாருங்க இன்டைக்கு அவன என்ன செய்ய போறன் எண்டு ” சண்டை கோழியாய் சிலிர்த்து கொண்டு நிற்க..“ ஏய்! சும்மா இருடி..அவன் ஏதோ விளையாட்டுக்கு செஞ்சி இருப்பான் நீ அவன் வீட்டுக்கு போக வேணாம் விடு..” வசந்தா அவளை போக விடாது தடுக்க முயற்சிக்க..

 

அவள் கேட்டால் தானே தாய் சொல்வதை கேட்காது கேட்டை திறந்து சன்ஜீவ வீட்டிற்குச் சென்றுவிட்டாள்..

 

அவன் வீட்டிற்கு நுழைந்தபோது ஹாலில் அமர்ந்திருந்தார் ருவணி…“ ஆன்டி சன்ஜீவ இன்னவத?( ஆன்டி சன்ஜீவ இருக்கானா ? ) ” முகத்தில் தக தக எரிந்து கொண்டு இருந்த அவள் கோபத்தை கண்டவர் “ மொகக் ஹரி பிரஷ்னயக்த துவே எயாவ ஹோயன்னே ( எதுவும் பிரச்சனையா மகள் ? அவன தேடுற) ” அவர் கேட்டதும் “ எஹம தெயக் நே ஆன்டி ( அப்படி எதுவும் இல்ல ஆன்டி ) ” என்றாள் கோபத்தை தனித்து..

 

“ ஹரி துவே எயாகே காமரே இன்னவா அதி கிஹில்லா பலன்டகோ..( சரி மகள்..அவன் அறைல இருப்பான் போய் பாருங்களேன்) ” என்று அவர் சொன்னதும்..

 

ஹாலில் இருந்து மெதுவாக நடந்தவள் படிக்கட்டு வரவும் அவசரமாக படிக்கட்டில் கால் வைத்து அவன் அறையை அடைந்திருந்தாள்..

 

அவனோ கட்டிலில் அமர்ந்து அப்போது தான் கண்ணீர் சிந்த சிரித்து முடிந்து ஆசுவாசம் அடைந்தான்..அவள் அவன் அறை வாசலில் நிற்பதை கவனிக்காது அவன் துரதிஷ்டமோ அவனை எது கொண்டு அடிக்கலாம் என்று யோசித்தவள் அவன் அறையை விழிகளால் சுழல விட்டாள்..

 

நேர்த்தியாக, அழகாக வைத்திருந்தான்.. அவனின் கணனி மேசையில் சிறிய காகிதத்தில் ஏதோ எழுதி இருக்க..

 

அதனை கையில் எடுத்துப் பார்த்தாள்.. கஷ்டப்பட்டு அழகான தமிழ் எழுத்துக்களால் எழுதி இருந்தான் சன்ஜீவ..

 

“ தேன் நிறத்து அழகி..

ஆழி பேரலையாக சுழற்றி 

எடுக்கும் காந்த விழிகளுக்கு 

சொந்தக்காரி..

சிரிக்க..” அவன் பாதியில் எழுதாது அவ் வரியோடு நிறுத்தி இருந்தான்..

 

“ தேன் நிறத்து அழகியா எவ அவ? யாரையாவது லவ் பண்றானோ? ” நாடியை தட்டி அவள் யோசிக்க..“ இருக்கும் இருக்கும் ” சொல்லிட்டு அவனை நோக்கி குரலை செருமினாள்..

 

யார் என்று அவன் பார்க்க..தன் அறைக்கு வந்திருக்கும் ஜெனனி பார்த்து இன்பமாய் அதிர்த்தான்..“ ஜெனி..” என்றதும் அவனை முறைத்தவள் அவனின் ரப்பர் பாம்பை தூக்கி அவன் மேல் போட்டு இருந்தாள்.

 

“ ஏய்..! ” 

 

“ நீங்க தான் என் மேல போட்டது சாரே ” உதட்டை சுழித்து சொல்ல..

 

முதல் தடவையாக பார்ப்பது போல் அவளை தலை முதல் கால் வரை பார்வை கொண்டு சென்றான்..குளித்து இருப்பாள் போலும் உச்சியில் கொண்டை போட்டு இருக்க.. நெற்றியில் வழிந்தது வியர்வை துளிகள் , வான் நீல நிற ஷர்ட் மற்றும் கடும் நீல நிறமும் வான் நீல நிறமும் கலந்த பாவடையை அணிந்திருந்தாள்..

 

அவனை முறைத்து கொண்டு இருக்கும் விழிகளில் அவன் பார்வை ரசனையாக படிந்தது.. அதற்கு கீழே உதட்டை சுழித்து இருந்த மெல்லிய சிவந்த இதழ்களில் அவன் பார்வை மையலாக நிலைக்கவும்..

 

அவனை குறுகுறுவென பார்த்து அவள் “ என் மூஞ்சில பெரஹெரா ஓடுதா என்ன ? ” அவள் கேட்க..

 

“ எஹம தமய் ( அப்படிதான்) ” என்றதும் உள்ளங்கையை மடக்கி மண்டையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்திருந்தாள்…“ ரப்பர் பாம்பை என் மேல போட்டு பயம் காட்டுனதுக்கு கொட்டு..எப்படி பழிக்கு பழி ” ஒற்றை கண்ணடித்து அவள் கேட்க..தலையை தேய்த்துக் கொண்டே  புன்னகைத்தான்…

 

“ ஹேன்ட் ரைட்டிங் அழகாக இருக்கு..சிங்கள கவிதைய வச்சி கூகுள்ல தமிழ் ட்ரான்ஸ்லேஷன் எடுத்து கவிதை எழுதி இருக்கீங்க போல.. யாரையாவது லவ் பண்றீங்களா? ” ஹஸ்கி குரலில் கிசுகிசுப்பாக தலை குனிந்து அவள் கேட்க..

 

அவன் உதடோ சிரிப்பில் விரிந்தது..“ தவ லியன்ட ஓனே ஓக மட தென்டகோ ( இன்னும் எழுதணும்..அத எனக்கு தா ) ” கையை நீட்ட..

 

“ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க சாரே ” ஆர்வத்துடன் அவன் பதிலை எதிர்நோக்க..பெரு மூச்சுடன் “ மகே லவ் வன் சைட் தமய்..தாம மம ஆதரே கரன கெனாட்ட ஆதரே கிவ்வே நே ஜெனி..( என் காதல் வன் சைட் தான்.. இன்னும் நான் லவ் பண்ணவ கிட்ட லவ்வ சொல்லல்ல ஜெனி..) ” கணனி இருக்கும் மேசை பார்த்தபடி அவன் கூற..

 

அவனின் காதலுக்கு உரிமையானவள் அருகில் இருக்கும் போது அவளை யாரென்று கூறாது அவன் சொல்ல..அதே சமயம் காதலை சொல்ல தகுந்த நேரமாக இருந்த போதிலும் அவளிடம் கூற தயங்கி நின்றான்..

 

அவளிடம் காதலை கூறினால் பிடிக்கவில்லை, வேண்டாம் என்று சொல்லிவிடுவாளோ என்ற அச்சமும் அவனுக்கு இருக்க.. வீட்டில் தெரிந்து பிரச்சினை ஆகிவிட்டால் அதன் பிறகு இருவரின் படிப்பும் வீணாகிவிடுமே! என..

 

அவள் மேல் இருக்கும் காதலை சிறு செயலினால் உணர்ந்த முயற்சித்தாலும் உணர்ந்து கொள்ளும் பக்குவம் அவளிடம் இல்லையே..

 

தான் ஒரு நிலைக்கு வந்த பிறகு அவளிடம் காதலை கூறிவிட முடிவு எடுத்திருந்தான்.. அது வரைக்கும் அவளை அறியாமல் ரசித்து பார்த்து ஒருதலையாக காதலிப்பதும் தனி சுகம் தானே..

 

அதன் பின் ஞாபகம் வந்தவனாக கட்டிலை விட்டு எழுந்து கணினி அருகில் இரண்டு சிறிய காகிதங்கள் சுருட்டி வைத்திருந்தது..அதனை கையில் எடுத்து “ ஜெனி மே என்டகோ ( ஜெனி இங்க வாவேன்) ” அவன் அழைக்க..“ அய்? ( என்ன? ) ” அவள் கேட்டதும் “ மே தெக கடதாசியென் எகக் தோர கன்னகோ.. ( இந்த ரெண்டு பேப்பர்ல ஒண்ட தெரிவு செய்) ” என்க..

 

அவன் சொன்னது போல் ஒரு காகித துண்டை எடுத்து அவன் முன்பு நீட்டவும்.. கையில் எடுத்து விரித்து பார்த்ததும் அவன் உதடு சிரிப்பில் விரிந்தது..“ தேங்க்ஸ் ” நெகிழ்வாக அவன் சொல்ல..“ எதுக்கு? ” புரியாமல் அவள் கேட்கவும்..

 

“ ஒயா தென் யன்ட உட எவில்லா கொச்சர வெலாவக்த தன்னவத? அம்மா பய வெய் ஒயா மாத் எக்க ஹிடியோத்..( நீ இப்ப போ..நீ மேல வந்து எவ்ளோ நேரம் தெரியுமா ? அம்மா பயப்புடுவாங்க நீ என் கூட இருந்தா..) ” சிரித்துக் கொண்டே சொல்ல..

 

ஒரு கணம் அவன் சிரிப்பை பார்த்து “ சிரிச்சா அழகா இருக்கீங்க..” சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்..“ நீங்க என்ன திமிங்கிலமா விழுங்குறதுக்கு ” என்று கூறி ஆள் காட்டி விரலை மடக்கி பழிப்பு காட்டி விட்டு அறையை விட்டு ஓடி இருந்தாள்..

 

சிரிப்பு குறையாது கையில் இருந்த சிறு காகித துண்டை பார்த்துவிட்டு கணனியில் இருந்த ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி இருந்தான் சன்ஜீவ..

 

 

 

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்