Loading

அத்தியாயம் -11

கார்த்தியின் திடீர் வரவை எதிர்ப்பார்க்காத வருண் கொஞ்சம் திடுக்கிட்டு தான் போனான்.

ஆனால் சிறிது நேரத்திலேயே முகம் இறுகி போய் எந்த உணர்ச்சியும் காட்டாது கார்த்தியை நோக்கினான்.

” டேய்ய்ய்..!!!” என கத்திய கார்த்தி, ஓடி வந்து செர்டிபிக்கேட்டில் இருந்த நெருப்பை அனைத்திட முயற்சிக்க, அவன் எடுத்த அத்தனை முயற்சியும் தோல்வியையே சந்தித்தது..!

அவனின் கனவு, அவன் கண் முன்னே சாம்பலாகி கையில் கரியாக ஒட்டி கொள்ள, திக் ப்ரமை பிடித்தவன் போல் அப்படியே தரையில் அமர்ந்து விட்டான் கார்த்தி.

கைகளில் கண்ணீர் துளிகள் விழுக, அப்பொழுது தான், தான் அழுகிறோம் என்பதையே உணர்ந்தவன் நிமிர்ந்து வருணை பார்த்தான்.

என்ன நடந்தது, எப்படி நடந்தது, ஏன் நடந்தது என அவன் மனதிற்கு ஒன்றும் விளங்கவில்லை. உள்ளுக்குள் ஆயிரம் கேள்வி ஆனால் வார்த்தைக்கு தான் பஞ்சமாகி போனது.

இந்த மனதானது ஒரு விசித்திர பிறவி அதீத சந்தோசத்திலும் சரி..! துக்கத்திலும் சரி..! உணர்வுகளை உரைக்கும் விதமாக கண்ணீரை தான் முதல் எழுதுகோலாக தருகிறது.

சிறு வயது முதல் அவனின் ஒரே கனவு, லட்சியம், உயிர் துடிப்பு எல்லாம் இந்த விளையாட்டு மட்டுமே. விளையாட்டு மைதானத்தில் அவன் கால் எடுத்து வைத்து விட்டான் என்னில் தனி உலகில் சஞ்சறிப்பது போல் தான் இருப்பான்.

உலகம் உருண்டை என்பர், அவனின் உலகம் அந்த உருண்டை பந்து தான்..!

உடம்பில் உள்ள அனைத்து சக்தியும் வேர்வையாய் வடிந்தோடியது போல் மிகவும் துவண்டு போயிருந்தன்.

“ஏன் டா ” வலி மிகுந்த குரலில் வருணை பார்த்து கேட்டான் கார்த்தி..!

“கார்த்தி என்ன டா போன் பண்ணா எடுக்க மாட்டியா? உங்க அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிருச்சாம் டா..! உங்க அம்மா எனக்கு போன் பண்ணாங்க.. உடனே கெளம்பு சொன்னாங்க..!”

கார்த்தியின் பக்கத்து அறை நண்பன் வந்து கூறவும், செய்வதறியாது அதிர்ந்து உறைந்து போய் இருந்தான்.

இடி மேல் இடி தாக்கியது போல் இருக்க. மூளை செயலிழந்து யோசிக்கும் தன்மை குறைந்திருந்தது.

இந்தா அம்மா பேசறாங்க என போனை அவனிடம் நீட்டினான் , எதிர்முனையில் கார்த்தியின் அம்மா ஒப்பாரி வைத்து கொண்டிருந்தார், ” கார்த்திஈ..! இங்க ஒரே பிரச்னையா இருக்கு டா, டாக்டர் என்ன என்னமோ சொல்றாக டா..! சீக்கிரம் கெளம்பி வா சாமி எனக்கு ரொம்ப பயமா இருக்கு “

தாயின் தவிப்பு அவனிற்குள் ஓர் பிரளயத்தையே உண்டு பண்ணியது..!

வருணோ உன் சோகம் என்னை பாதிக்காது,என்ற ரீதியில் கல்லை தின்றவன் போல் சிலையாக நின்றிருந்தான்.

“கிளம்பு டா வா ” என்றவன் கார்த்தியை இழுத்து கொண்டு செல்ல, வருணையே திரும்பி திரும்பி பார்த்து கொண்டே போனான்.

அவன் தந்தை அனுமதிக்கப்பட்டிருக்கும் ஹாஸ்ப்பிட்டலை வந்தடைந்தான் கார்த்தி. உறவுகள் அனைவரும் கூடி இருக்க, மனதினுள் ஒரு வித பயம் கூடி கொண்டது.

கார்த்தியை பார்த்ததும் அவனின் தாய் ஓடி வந்து அவனை கட்டி கொண்டு அழுதார்.

கார்த்தியின் தந்தை நடேசன், அரசு பணி ஊழியர்..! மிகவும் நேர்மையான மனிதர்.
தன் வேலையை மிகவும் நேசிப்பவர்.

வழக்கம் போல் காலை 9 மணிக்கு ஆஃபிஸீற்கு சென்றவருக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று காத்துகொண்டிருந்தது..!

அவர் லஞ்சம் வாங்கியதாகவும் இவ்வளவு வருடம் வேலை செய்த ஒரே காரணத்திற்காக எச்சரித்து விட்டு, ட்ரான்ஸ்வர் மட்டும் செய்யவதாக நடேசனை உடன் பணியாற்றும் அனைவரின் முன் நிலையிலும் வைத்து கடுமையாக சாடினார் அவரின் மேலதிகாரி..!

சொந்த விஷயத்தை கூட புறம் தள்ளி விட்டு வேலை வேலை என ஓடும் மனிதர் அவர்..! லஞ்சம் வாங்கினாய் என்ற பழி சொல்லை அவரால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.

தன் பக்க நியாத்தை எடுத்து கூற முயன்றும் யாரும் அவருக்கு செவி சாய்ப்பதாய் இல்லை. தன் மேல் இப்படி அபான்டமாக பழி போடுகிறார்களே என மன உழைச்சலில் உழன்று கொண்டிருந்தவர். ஏதோ சிந்தனையில் வண்டியை சரியாக ஓட்டாமல் பள்ளத்தில் விட்டு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது..! உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என கூறிய பிறகே கார்த்தியின் மனம் சற்று லேசானது.

முதல் முறையாக தன் குடும்பத்தை சரியாக கவனிக்கவில்லையோ என்ற எண்ணம் அவனுள் எழுந்தது.

இத்தனை நடந்திருக்கிறது ஆனால் அவனிற்கு ஒன்றும் தெரியவில்லையே..!

தெரியவில்லையா? அல்லது கேட்டு கொள்ளவில்லையா!? அவனின் மனசாட்சி அவனை கேள்வி கேட்க குற்ற உணர்ச்சியில் தலை குனிந்து நின்றான் கார்த்தி.

“ப்ராக்ட்டிஸ்ல இருக்கேன் ம்மா, அப்றம் பேசறேன்” எப்பொழுது தாய் கூப்பிட்டாலும் இதுவே அவனின் பதிலாக இருக்கும்.

இவனிற்கு அடுத்த ஒரு தம்பி பிறந்தான். ஆனால் பிறந்த பத்தே நாளில் விஷ காய்ச்சலிற்கு பலி ஆகி விட்டது அந்த பச்சிளம் குழந்தை..!

புத்திர சோகத்தில் மூழ்கி இருந்த பெற்றோருக்கு கார்த்தி மட்டுமே உலகம் ஆனான். ஒரு வார்த்தை அதட்டி பேசியது இல்ல. அவன் ஆசைக்கு தடை போட்டதும் இல்லை.

பெரிய செல்வாக்கான குடும்பமாக இல்லா விட்டாலும் அவனை செல்வாக்காக தான் வளர்த்தனர்.

தந்தை சரியாகும் வரை அவருடனே இருக்க வேண்டும் என முடிவு செய்தான் கார்த்தி.

” இந்தா கார்த்தி, டீ ஆச்சி குடி எதுவுமே சாப்பிடாம இருக்க!” அவனின் கையில் டீயை திணித்து அருகில் அமர்ந்தார் அவனின் சித்தப்பா.

“அப்பாவ பிரச்னை பண்ணாம டிரான்ஸ்வர வாங்கிக சொல்லு கார்த்தி! வேணும்னே பிரச்னை பண்ணுற மாறி இருக்கு..! நா எனக்கு தெரிஞ்ச பக்கம் விசாரிச்சி பாத்தேன் மேலெடத்து விவாவகாரம் போல. நம்மக்கு எதுக்கு அவங்களோட சண்டை? நீ தான் அண்ணனுக்கு புத்திமதி சொல்லி சம்மதிக்க வைக்கனும் சரியா? எப்படியும் இன்னும் ரெண்டு மூணு மாசத்துக்கு அப்பா பெட் ரெஸ்ட்டா தான் இருக்கனும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. நீ என்ன பண்ணுற வேலைக்கு எதுக்காவு போய்ட்டு இருக்கியா? இல்ல இன்னும் அந்த பந்த புடிச்சி தான் சுத்திட்டு இருக்கியா? வீட்டுக்கு தல புள்ள நீ..! கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோப்பா. எனக்கு தெரிஞ்ச மில்லுல கணக்கு பாக்குற வேல இருக்காம்.. இருவதாயிரம் சம்பளம், போய் பாரு இப்போவே ஹாஸ்பிட்டல் செலவு ரெண்டு லட்சம் ஆகிருச்சி..! வீட்டு சூழ்நிலைய புரிஞ்சி நடந்துக்கோ “

இவ்வளவு நாள் அவனின் கனவை பற்றி மட்டுமே யோசித்து செயல்ப்பட்டு கொண்டிருந்தவனிற்கு முகதில் அறைந்தார் போல் தீடிரென நிஜம் சுட செய்வதறியாது பரிதவித்து போனான் பாவம்.

வருண் அவனின் உற்ற நண்பன் மட்டுமல்ல..
உற்ற ஆலோசகனும் கூட..!

அவனை விட அவனின் வாழ்கை பற்றி யோசித்து சரியாக திட்டமிட்டு கொடுப்பவன்..!

இவ்வளவு வருடமாக வருணை சார்ந்தே வாழ்ந்தவனிற்கு , இந்த இக்கட்டான சூழ்நிலையில் மனம் அவனை மிகவும் தேடியது.

இந்த வாழ்க்கையை தான் என்ன வென்று சொல்வது. ஆசையாய் விளையாடி கொண்டிருக்கும் பொம்மையை குழந்தையிடம் இருந்து சட்டென பிடிங்கி விடுவது போல், நாம் மிகவும் நம்பிய, நேசித்த நபர்கள் திடீரென நம்மிடமிருந்து பிடுங்கிக் கொள்கிறது.
குழந்தையை போல் அழுகவும் முடியாமல், பெரிய மனிதரை போல் அதை ஏற்றி கொள்ளவும் முடியாமல் நடுவில் சிக்கி, விக்கி, மோதி நம்மளை ஒரு வழி பண்ணிவிட்டே செல்லும்..!

ஆனால் அந்த கலக்கத்திற்கு பிறகு வரும் தெளிவானது, நம் வாழ்கை பயணத்தில் நிலைத்த கலைங்கரை விளக்காய் வழி காட்டும் என்பதில் எந்த வித ஐயப்பாடும் இல்லை..!

நடேசனை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர்.

வருண் கூப்பிடுவான், அவன் செய்த காரியத்திற்கு ஏதாவது காரணம் சொல்லுவான். நிச்சயம் தன்னை வந்து சந்திப்பான் என எதிர்ப்பார்த்த கார்த்திக்கு மிஞ்சியது எல்லாம் வெறும் ஏம்மாற்றம் மட்டுமே..!

இனி வாழ்கையில் அடுத்து என செய்வது என குழம்பியவனிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி செய்தி அவனின் பாஸ்கெட்பால் கோச் சொன்ன விஷயங்கள்.

” கார்த்தி உன் ஃபிரண்ட் வருண் வந்தான் ப்பா இனிமே உனக்கு ட்ரெயினிங் கொடுக்க கூடாது உன்ன பாக்க கூடாதுனு சொல்லி, 1 லட்ச ரூபா கொடுத்துட்டு போனான். உன்கிட்ட இந்த விஷயத்த சொல்ல கூடாதுனு சொன்னான். ஆனா நான் தான் மனசு கேக்காம சொல்லிட்டேன், எனக்கும் பண தேவ இருந்திச்சி ப்பா அதான் வாங்கிட்டேன் என்ன மன்னிச்சிரு..!”

மனதளவில் மிகவும் நொறுங்கி போனான் கார்த்தி.

ஏன்.. ஏன்.. ஏன்.. என்ற கேள்வி அவன் மனதை வண்டாய் குடைய,
அவனிடம் நிச்சயம் ஏதேனும் காரணம் இருக்கும் என நம்பியவனின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக காற்றோடு காற்றாய் கரைந்து போனது.

அவனின் தயவால் தானே தான் அங்கு தங்கி கோச் வைத்து ட்ரெயிங் எடுத்தோம்? இனி எதுவாயிருந்தாலும் சொந்த காலில் இருந்தே செய்ய வேண்டும் என முடிவெடுத்தவன்,
முதலில் சித்தப்பா சொன்ன வேலையில் போய் சேர்ந்தான்.

ஒரு மாத காலம் ஆயிற்று அவன் வேலையில் சேர்ந்து. தன் காசில் குடும்பத்தை பார்த்து கொள்கிறோம் என்ற எண்ணமே அவனிற்கு தித்திப்பாய் இருந்தது. இருந்தாலும் அவனுள் தன் கனவு கானல் நீராய் மாறி விடுமோ என்ற பயம் மட்டும் எட்டிப்பார்த்து கொண்டே இருக்கும். இருப்பினும் முதலில் குடும்பம் தான் முக்கியம் என முடிவெடுத்தவன் அவனின் கனவை ஓரம் கட்டி வைத்தான்.

அன்று அவன் வேலை செய்யும் மில்லின் ஓனர் வீட்டிற்கு, ஒரு விஷயமாக அவரை பார்க்க சென்றிருந்தான். அவருக்காக வெளியே காத்திருந்தவனின் கண்ணில் ஓனரின் பத்து வயது மகன் பந்தை வைத்து பாஸ்கெட்பால் விளையாடி கொண்டிருந்த காட்சி விழுந்தது.

அவன் தவறாக விளையாட, கார்த்தி எழுந்து போய் அவனிற்கு சொல்லி கொடுத்தான். சிறுவனிற்கு மிகவும் குஷியாகி விட்டது. அந்த சமயம் ஓனரின் மனைவி அதை பார்க்க, அவனை அழைத்து, “தம்பி நல்லா விளையாடறீங்க உங்களுக்கு இந்த விளையாட்டு தெரியுமா? தினமும் சாய்ந்திரம் ஒரு மணி நேரம் இவனுக்கு வந்து சொல்லி தரீங்களா? இவனோட ஸ்கூல்ல பாஸ்கெட்பால் க்ரவுண்ட் எல்லாம் இல்ல, ஆனா இவன் டி.வியில் இத பாத்துட்டு ஒரே அடம் இத விளையாடனும்னு..! அப்றம் தான் அந்த பந்து போடுற நெட் எல்லாம் வாங்கி மாட்டி, வீட்டு வாசல்லயே இத ரெடி பண்ணி கொடுத்தோம். இதுக்கு தனியா சம்பளம் கூட வாங்கி கோங்க”

முதலில் சிறிது தயங்கியவன் பிறகு ஒற்று கொண்டான். அது தான் அவன் வாழ்வை மாற்ற போகும் ஆரம்ப புள்ளி என அறியாமல்..!

தந்தையும் சற்று தேறி வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவரகளின் குடும்ப நிலை சீர் ஆனது.

வழக்கம் போல் அன்று சாய்ந்திரம் வேலை முடித்து விட்டு பாஸ்கெட் பால் சொல்லி கொடுக்க ஓனர் வீட்டிற்கு செல்ல, அங்கு அவனை சந்தித்தார் அறுபது வயது மதிக்க தக்க ஒருவர்.

“ஹாய், ஐ ஆம் சீதாராமன் ரிட்டையர்ட் இந்தியன் பாஸ்கெட்பால் கோச்..!” என கை நீட்டினார்.

அவரின் பெயரை சொன்னவுடனே அவரை கண்டு கொண்டான் கார்த்தி. அவரை பற்றி நேரிய கேள்விப்பட்டு இருக்கிறான். ஆனா போட்டோ பார்த்ததில்லை..!

” என்ன எங் மேன்..! நீங்க தான் இந்த வாண்டுக்கு சொல்லி தரீங்களாமா? உங்க டேலேண்ட்ட கொஞ்சம் டெஸ்ட் பண்ணலாமா? மேட்ச்? “

உண்மையில் கார்த்திக்கு என்ன பதில் கூறுவது என்ன ஒன்றும் புரியவில்லை.
இவ்வளவு பெரிய மனிதர் தன்னிடம் பேசி கொண்டிருக்கிறார் என்பதே அவனிற்கு நம்ப முடியாமல் இருக்க, இதில் அவருடன் சரிக்கு சரிக்கு சம்மமாக நான் விளையாடுவதா? அவன் சிந்தனையில் மூழ்கி இருக்க அவனை நோக்கி அசுர வேகத்தில் வந்த பந்தை லாவாக பிடித்து அவனும் களத்தில் இறங்கி விட்டான்.

உண்மையில் சீதாராமனிற்கு அறுபது வயது என சொன்னால் சின்ன குழந்தை கூட நம்பாது. நாற்பதி ஐந்து வயது சிங்கம் போல் அவர் களம் ஆடியதில் கொஞ்சம் திணறி தான் போனான் கார்த்தி. ஆனால் தானும் சலித்தவன் இல்லை என அவருக்கு ஈடு கொடுத்தே விளையாடினான்..!

” நோட் பேட்..!” என்றவர் அவனின் தோலை தட்டி கொடுக்க,

அவரின் பாராட்டு அவனை உச்சி குளிர வைத்தது.

“இன்னும் கொஞ்சம் மட்டும் ட்ரெயிங் எடுத்தா போதும். யூ வில் பீ அ குட் பிளேயர், சென்னை வரியா என்ன மீட் பண்ண? வீ கேன் டாக் ” என்றவர் அவரின் விசிட்டிங் கார்டை கொடுத்து விட்டு போக, தலை கால் புரியாமல் சந்தோசத்தில் குதித்தான் கார்த்தி..!

சீதாராமன் பிசினஸ் விஷயமாக மில் ஓனரை பார்க்க வந்திருக்கிறார். அப்பொழுது அவரின் பையன் கார்த்தியின் புராணத்தை பேச அவனை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு தோன்றியது. பிறகு அவனின் திறமையை பார்த்து அவனை வந்து சந்திக்கும் படி கூறி இருக்கிறார்.

இது தான் விதியின் விளையாட்டோ? நாம் எதிர்பார்க்காத நேரத்தில் மிகவும் எதிர்ப்பார்த்த விஷயம் நடப்பது..!

தாய் தந்தையிடன் இதை கூறி அவர்களிடம் ஆசி பெற்று இனிதே தொடங்கியது அவனின் சென்னை பயணம். சீதாராமன் பாஸ்கெட் பால் அகாடமி நடந்திவருகிறார்.

சின்ன சின்ன நுணுக்கங்கள் சொல்லி கொடுத்து அவனை இன்னும் மெருகேற்றினார்.

அன்று இரவு வழக்கம் போல் பிராக்ட்டிஸ் முடித்து அவன் கிளம்பும் போது அவனை அழைத்தார் சீதாராமன்.

” சொல்லுங்க கோச் “

” அடுத்த என்ன பிளான் வெச்சிருக்க கார்த்தி? “

” பிளான்னா.. வேற என்ன கேம் தா. என்னோட செர்டிபிகேட்ஸ் எல்லாம் ஒரு ஆக்சிடென்ட்ல எரிஞ்சுருச்சு, அதுக்கு ரீ-அப்ளை பண்ணிருக்கேன். அது வந்துருச்சுனா அடுத்து நேஷனல்ஸ் அப்றம், இந்தியன் டீம்ல செலக்ட் ஆகறது தான் “

” இது தான் இங்க இருக்க எல்லாருக்குமே கனவு ஆனா என்னால தான் எல்லாருக்கும் கோச் பண்ண முடியுமானு தெரில”

“கோச் அப்படி எல்லாம் பேசாதீங்க நீங்க இன்னும் இருபது வருஷம் கன் மாறி இருப்பீங்க பாருங்க “

” சும்மா சொல்லிக்கலாம் கார்த்தி எனக்கும் வயசாகுதுல்ல? எனக்கு அப்றம் இந்த அகாடமிய யார் பாத்துப்பாங்க! என்னோட பொண்ணு, பையன் எல்லாம் யூ.எஸ் ல செட்டில் ஆகிட்டாங்க. என்னயும் அங்க வர சொல்லாறங்க, ஆனா சரியான கைகள்ல இந்த அகாடமிய ஒப்படைக்காம என்னால போக முடியாது. நா எடுத்து இருக்கறது சுயநலமான முடிவா தெரியலாம். பட் நா இத நல்லா யோசிச்சு தான் சொல்லறேன். எனக்கு அப்றம் நீ தான் கார்த்தி இந்த அகாடமியையும் பசங்களயும் பாத்துக்கனும். எஸ் உன்ன நான் இங்க கூப்ட்டது உன்ன ஒரு பிளேயரா ட்ரெயின் பண்ணுறதுக்கு இல்ல ஒரு கோச்சா உன்ன உருவாக்கறதுக்கு தான்..! “

சீதாராமனின் பேச்சில் அவரை அதிர்ந்து நோக்கினான் கார்த்தி..!

” சரியான ட்ரெயினிங் எடுத்தா யார் வேணா பிளேயர் ஆக முடியும். ஆனா கோச் ஆகறது அவ்வளவு ஈசி ஜாப் இல்ல, உன் கிட்ட அந்த திறமை இருக்கு யோசிச்சி நல்ல முடிவா சொல்லு..!”

சீதாராமனின் ஆசைபடியே அவனும் ஒற்று கொண்டான். அவனின் ஆசைபடி அவன் இந்தியன் டீமிற்காக விளையாடி இருந்தால் அவன் ஒருவனின் கனவு மட்டுமே நிறைவேறி இருக்கும்.

ஆனால் இப்பொழுது எத்தனையோ மணவர்களின் கனவை நிறைவேற்றி கொண்டிருக்கிறான்.

இது தான் கடவுளின் கூற்று..!

ஒரு கதவை மூடினால், நிச்சயமாக நம்மகான இன்னொரு கதவை அவர் நீக்குவார். அந்த கதவு போல் இந்த கதவு இல்லயே என குழம்பி வாதாடாமல் அதை ஏற்று கொண்டால்..

எப்பொழுதும் வெற்றி நமதே..!!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
28
+1
2
+1
1

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  4 Comments

  1. kavitharajasekaran28175

   What isbthe reason behind Varun’s behaviour is in known…without knowing the unknown, can’take anything of the situation…so waiting for the enlightenment…nice episode…🔥❤️

     1. காதல் காத்தாடி
      Author

      🤩🤩 கண்மணிக்கு மட்டும் அவளுக்கு இப்படி ஒரு ரசிகை இருக்காங்கணு தெரிஞ்சா அவள கையில புடிக்க முடியாது 🤣🤣 ஹாஹா 😆😆

      Ur vayadi will be back with a super rocking episode..!🥳🥳💃💃❤️❤️