Loading

   குழந்தைகளுக்கு இரண்டரை மாதம் ஆனதால் தடுப்பூசி போட யாகவி குழந்தைகள் மற்றும் மதிவதனி உடன் கிளம்பினாள்.இந்த 20 நாட்களில் எங்கு பார்த்தாலும் சாந்தி(முன்பு யாகவியையும் குழந்தைகளையும் பார்த்துக் கொண்ட பணிப்பெண்) அவளை முறைப்பதும் இவள் கண்டுகொள்ளாமல் இருப்பதுமாக நாட்கள் நகர்ந்தது.

 

  அன்றைக்கு பிறகு அம்சவல்லி அம்மாளை பார்த்தாலும் இவள் கண்டுகொள்ளாமல் செல்ல அவரின் முணுமுணுப்பு காதில் கேட்டாலும் கண்டுகொள்ளவே மாட்டாள். அதற்கு முக்கிய காரணம் யாகவியே ஆகும். அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்ல போனவளை அதட்டி உருட்டி மிரட்டி தன்னுடன் வைத்துக்கொண்டாள். ஏனோ தான் பேசியதற்கு அவள் மன்னிப்பு கேட்பது சரியாக இருக்காது என்பதாலேயே யாகவி மதியை தடுத்து இருந்தாள்.

 

    அது மட்டும் இல்லாமல் மதி தன் தாயிடம் மன்னிப்பு கேட்டாலும் அவரின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை நன்கு அறிந்தவளுக்கு மென்மை மனம் கொண்டவளை தாயிடம் அனுப்பி வார்த்தைகளால் காயப்பட வைக்க விரும்பவில்லை.

 

    கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு கழித்து வெளியே வந்த யாகவிக்கு அவ்வளவு புத்துணர்ச்சியாக இருந்தது. இயல்பிலே தைரியமான குணம் கொண்டவள். கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் தனக்குள் நத்தையாக சுருண்டு கொண்டாள். அனைத்தையும் யோசித்து கொண்டு இருந்தவள்.குழந்தையின் கீச்சு குரல் ஒலியிலும் மதியின் சிரிப்பு சத்தத்திலும் உணர்வு பெற்று அவர்களை பார்த்தாள்.

 

   இரண்டு பிள்ளைகளின் முகத்தில் தெரிந்த அதே குழந்தைத்தனம் மதியின் முகத்திலும் தெரிவது கண்டு புன்னகை புரிந்தவள். யோசித்து இருக்கவே மாட்டாள் இன்னும் சிறிது நேரம் கழித்து அவள் கதற போகும் கதறலை.

 

     காரானது கோயம்புத்தூரில் பிரபலமான எம் டி எம் ஹாஸ்பிடலில் வந்து இறங்க மதியே குழந்தைகள் இருவரையும் தூக்கிக்கொள்ள நால்வரும் விஐபிக்கு என்று பிரத்தியேகமாக இருக்கும் வாயிலில் நுழைந்தவர்கள் குழந்தைகள் தளத்திற்கு வந்தடைந்தனர். அடுத்து ஐந்து நிமிடங்களிலே இரு குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. அதில் வலியில் குழந்தைகள் கத்திக் கொண்டே இருக்க யாகவியால் சமாளிக்கவே முடியாமல் போனது. நடந்தால் குழந்தைகள் அழுகையை சிறிது நேரம் அடக்குவதும் அப்படியே அமர்ந்துவிட்டால் அழுவதுமாக இருக்க யாகவிக்கோ கண்ணீர் முட்டி கொண்டு வந்தது தன் இயலாமையை நினைத்து.

 

    இரு குழந்தைகளும் கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்த மதிக்கு குழந்தைகளே சமாதானப்படுத்துவதா? இல்லை அழுது கொண்டிருக்கும் யாகவியை சமாதானப்படுத்துவதா என்று புரியாமல் திண்டாடி போனாள். குழந்தைகள் அருகிலே இருந்தால் இன்னும் தான் அழுவாள் எனப் புரிந்து வெளியே வராண்டாவில் வெளிகாற்றிற்கு கொண்டு வர குழந்தைகளும் சிறந்து சிறிதாக அழுகையை நிறுத்தியது. இரு குழந்தைகளும் செல்லமாக முறைத்தவள். அம்மா கிட்ட அடம் பிடிக்காமல் இருக்கணும் சரியா தங்க கட்டிங்களா எனப் பொய் கோபத்துடன் அதட்ட இருவருமே ஒரே நேரத்தில் புன்னகைத்ததை காண கண் கோடி வேண்டும்.

 

    சந்தோஷத்துடன் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் கர்சிப் கொண்டு மூடப்பட ஆழ்ந்த மூச்சை எடுத்தவள். அதை சுவாசிக்காமல் இருக்க போராடினாள்.ஆனால் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு தடுமாற இறுதிவரை குழந்தைகளை இறுக்கமாக பிடித்து பிடித்து கீழே விழாமல் பார்த்துக் கொண்டாள்.

 

   ஓரளவுக்கு மேல் மருந்தின் நெடியை தாங்க முடியாமல் அப்படியே மயங்கி சரிய போக அரைகுறையாக அடி கண்ணால் பார்த்ததில் மாஸ்க் அணிந்து டாக்டர் உடையில் இருந்த இருவர் அவளை தூக்கி செல்வது புரிந்தாலும் அனைத்தும் மங்கலாகவே தெரிந்தது.அதில் ஒருவர் குழந்தைகளை பிடிக்க வரவும் மார்போடு இருக்க அணைத்தவள். இறுதி வரை குழந்தைகளை விடாமலேயே மயங்கி சரிந்தாள்.

 

    குழந்தைகளை காணோம் என்று வெளியே வர பார்த்த யாகவியையும் ஒரு செவிலியர் வந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டதால் அடுத்து கொடுக்க வேண்டிய காய்ச்சல் மருந்து சளி மருந்து அனைத்தையும் விளக்கிக் கொண்டிருக்க அவளும் சிரத்தையாக கேட்டுக் கொண்டிருந்தாள்.அதன் பிறகும் அடுத்தடுத்து போட வேண்டிய தடுப்பூசிகளைப் பற்றியும் பேசிக்கொண்டே போக நேரம் கடந்து கொண்டிருப்பதை உணர்ந்தவள்.

 

   உடனே தன்னிடம் பேசிக் கொண்டிருந்த நர்சிடம் “டைமாச்சு அடுத்த தடவை வரும்போது பார்த்துகிறேன். தேங்க்ஸ் ஃபார் யுவர் கவுன்சிலிங் என்று அவரின் பேச்சை கத்தரித்த படி பதறயப்படி வெளியே வர அந்த வராண்டாவில் ஆள் இருப்பதற்கான அடையாளமே தெரியவில்லை. விஐபி ப்ளோர் என்பதால் யாரும் இல்லாமல் இருக்கலாம் என்று மனதை தேற்றிக்கொண்டு அந்த வரண்டா முழுவதும் தேடிப் பார்க்க மதியும் குழந்தைகளும் இருப்பதற்கான அடையாளமே தெரியாமல் போக இவ்வளவு நேரம் தைரியமாக இருப்பதாக காட்டிக் கொண்டவள்.

 

    குழந்தைகளை காணாமல் மொத்தமாக உடைந்து போனாள்.அடுத்த நிமிடமே இப்படியே அமர்ந்திருப்பது சரி வராது என்று நிதர்சனம் நொடியில் புரிய தன்னை தேற்றிக்கொண்டு ஹாஸ்பிடல் நிர்வாகி இடம் புகார் அளிக்க அவர்களும் நந்தன் குடும்பத்தின் உயரம் தெரிந்து பரபரப்பாக சிசிடிவியை ஆராய பத்து நிமிடங்கள் அதில் கழிய அவளுக்கு அந்த நேரம் பத்து யுகம் போல் இருந்தது.

 

   சிசிடிவி ஆபரேட்டர் எதுவும் பதிவாகவில்லை கேமராவில் பழுது என்று கூறியதும் டீன் சரமாரியாக சிசிடிவி கேமரா ஆபரேட்டரை திட்டினாலும் தங்களால் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது.லீகலாக செல்ல அனைத்து உதவிகளையும் செய்கிறோம் எனக் கூற உடைந்து தான் போனாள்.

 

  அடுத்த நிமிடமே ஆறு மாதமாக பேசாமல் இருந்த தனது தம்பிக்கு அழைக்க அதிசயமாக கடந்த மூன்று மாதங்களாக சுவிட்ச் ஆப்பில் இருந்த யதுவரின் போனும் அதிர்ஷ்டவசமாக ரிங்காக தனது தமக்கைக்காக வைத்திருந்த பிரத்தியேகமான ரிங்டோன் சத்தத்தில் எக்சர்சைஸ் செய்து கொண்டிருந்தவன் புருவ முடிச்சவுடன் அட்டென்ட் செய்து காதில் வைத்த அடுத்த நொடி எதிர்புறம் கேட்ட அழுகுரல் அவன் கல் இதயத்தையும் ஒரு நொடி கலங்க செய்தது.

 

    அதை நொடியில் சமாளித்து எதுவும் கூறாமல் அழுது கொண்டிருக்கும் அக்காவை கண்டு கோபம் கொண்டவன்.” முதலில் வாயை மூடுரியா என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லு” என சிங்கமாக கர்ஜிக்க அதில் ஒரு நொடி எப்போதும் போல் உள்ளம் நடுங்கினாலும் அவனின் குரலில் நம்பிக்கை பெற்று நடந்ததை கூற ஒரு நொடி அமைதி காத்தவன்.

 

     அடுத்த நிமிடமே “பயப்படாதே. கார் அனுப்பி விடுறேன். பத்திரமா வீட்டுக்கு வா இன்னும் ஒரு மணி நேரத்தில் குழந்தைகள் உன் கையில் இருப்பாங்க” என்று உறுதியாக கூறியதும் தான் அவளும் நம்பிக்கை பெற்று அழுகையை நிறுத்தி இருக்க அடுத்த பத்து நிமிடத்தில் வந்த காரில் ஏறி வீட்டை அடைந்தாள். வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தவளை அம்சவள்ளியின் குரலே வரவேற்றது.

 

    உடைந்து போய் வந்திருக்கும் மகளை கண்டு கோபம் கொண்டவர். “பிள்ளைகளை அநியாயமா தொலைச்சிட்டு வந்து இருக்கியே. ஏழு வருஷம் ஆனதுக்கு அப்புறம் பொறந்த பிள்ளைங்க. மருமகன் கேட்டால் என்ன சொல்லுவேனா.எல்லார் முன்னாலையும் தான் அவளை தலையில் தூக்கி வெச்சி ஆடுன இல்ல. இப்ப பாரு என்ன பண்ணி வச்சிருக்காள். எல்லாம் அந்த நர்ஸ் ஆக வந்த பொண்ணால் தான். உன்னை நல்லா மயக்கி இப்ப குழந்தைகளை தூக்கிட்டு போயிட்டாள்.

 

   குழந்தைகளை தூக்கிட்டு போனவ என்ன பண்றாலோ தெரியலையே” என புலம்பியவர்.அப்படியே சோபாவில் அமர்ந்து விட யாகவியோ உணர்ச்சியை துடைத்த முகத்துடன் அவரை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

   “உங்க புலம்பலை முதலில் ஸ்டாப் பண்றீங்களா “என்று கேட்ட குரலில் வேலையாட்கள் முதல் அனைவரும் நிமிர்ந்து பார்க்க முதல் தளத்தில் சிங்கம் என கர்ஜித்து கொண்டிருந்தவனை கண்டவர்களுக்கு உடல் அதிர வேலையாட்கள் அனைவரும் அப்படியே தலை குனிந்து நின்றனர்.

 

   இன்னும் ஒன் ஹவரில் குழந்தைங்க வீட்டில் இருப்பாங்க. இனி ஹாலில் இருந்து ஒரு சத்தம் வரக்கூடாது என்று கூறியவன்.அப்படியே அறைக்குள் அடைந்து கொள்ள அம்சவல்லி தான் மூன்று மாதங்கள் கழித்து அறையை விட்டு வெளி வந்த மகனை அதிர்ந்து பார்த்தார். யாகவிவும் தம்பியை நம்பி தனது அறைக்கு சென்றாள். அறைக்குள் நுழைந்தவளை வெற்று தொட்டிலே வரவேற்க அப்படியே தொட்டிலை பிடித்தபடி கதறி அழ ஆரம்பித்தாள்.

 

    வாழ்க்கையில் நீண்ட ஏழு வருடங்கள் கழித்து கிடைத்து பொக்கிஷமாயிற்றே.அதை நினைத்து அழுது கொண்டே இருக்க போன் அடிக்கும் சத்தத்திலேயே உணர்வு பெற்றவள். அதில் தெரிந்த கணவனின் எண்ணை கண்டு இன்னும் அழுகை பிறியிட்டது. அப்படியே அட்டென்ட் செய்து காதில் வைத்தவள் கதறிய அழ ஆரம்பிக்க எதிர்ப்புறம் அவளுக்கு மேல் பதறி தான் போனான். சந்தோஷ் அந்த வீட்டின் மூத்த மருமகன். பெயருக்கு ஏற்றது போல் யாகவியின் வாழ்க்கையில் சந்தோஷத்தை நிரம்ப தந்தவன்.

 

  யதுவீர் ஆசை ஆசையாக அமெரிக்காவில் உருவாக்கிய தொழில் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியை தாங்கி பிடிக்க அனைவரின் மறுப்பையும் தன் மச்சானின் கோபத்தையும் பெற்றுக் கொண்டு அமெரிக்காவுக்கு பயணமானவன்.

 

   ஆறு மாதத்தில் சரிந்த தொழில் சாம்ராஜ்யத்தை மேல் நிறுத்தியுள்ளான். பிள்ளைகள் மனைவியின் பிரிவு துயர் வாட்டும்போதெல்லாம் ஆபீஸே கதி என்று கிடப்பதால் ஆபீஸின் வளர்ச்சி தேர்முகமாக தான் சென்று கொண்டுள்ளது.

 

    மாமா என்று தேம்பி அழுபவளை அணைத்து ஆறுதல் படுத்த முடியாமல் தொலைதூரத்தில் இருக்கும் தன்னையே நொந்து கொண்டான். குழந்தைகள் காணவில்லை என்று தெரிந்த அடுத்த நொடியே டிக்கெட் போட்டு இப்பொழுது ஏர்போட்டில் உள்ளான்.

 

  உள்ளுக்குள் இருக்கும் பயத்தையும் பதட்டத்தையும் மறைத்துக் கொண்டு “அமுலு மாமா வந்துகிட்டே இருக்கேன் உன்னோட அழுகை என்னை பலவீனமாக்கணும் சொல்லி இருக்கேன் இல்ல” என்று கூற அருகிலே கணவன் இருப்பது போல் உணர்ந்தவள். அழுகையை நிறுத்தி இருக்க தன்னுடைய ஒரு சொல்லுக்கு அப்படியே கட்டுப்படுபவளை எண்ணி காதல் பெருக்கெடுத்தாலும் தன் உயிர் நீரில் விளைந்த மழலைகளின் நினைவு அந்த ஆறடி ஆண்மகனை வாட்டி எடுத்தது.

 

    மாமா இன்னும் இருபது மணி நேரத்தில அவங்க இருப்பேன்.யது மமேலே நம்பிக்கை வை. கண்டிப்பா இன்னும் கொஞ்சம் நேரத்தில் குழந்தைகளை கண்டுபிடித்து விடுவான்.மனசை விட்டுராத தைரியமா இரு “எனக் கூறியவன்.அப்படியே கட் செய்ய தம்பியின் வார்த்தைகளிலும் கணவன் அளித்த தைரியத்திலும் உறுதி பெற்றவள். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பூஜை அறைக்கு சென்றாள்.

 

    அம்சவல்லி அதன் பிறகு எதுவும் பேசவில்லை என்றாலும் அவருக்குள்ளும் அந்த மழலையின் முகமே வாட்ட அவரும் தளர்ந்து போய் அப்படியே அமர்ந்திருந்தார்.

 

    கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரங்கள் கழித்து கண்விழித்தவளுக்கு காட்சிகள் எல்லாம் மங்கலாக தெரிய அதன்பிறகு தான் இறுதியாக நடந்ததை நினைவு வந்ததும் மின்சாரம் தாக்கியது போல் எழுந்து அமர்ந்தாள். அங்கு சீட்டு ஆடிக்கொண்டிருந்த ஐவர் கொண்ட தடியர்களில் ஒருவன் குட்டி எழுந்திருச்சுடா என்று கேவலமாக இளித்தபடி அவள் அருகில் நெருங்கி வர அவர்களை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் அந்த இடத்தை சுற்றிப் பார்த்தாள்.

 

     பாழடைந்த இரும்பு உருக்காலை போல் காணப்பட்டது. சுற்றி எங்கிலும் இரும்பு குவிக்கப்பட்டு இருந்தது. இரும்பு தயாரிக்கும் மிஷின்கள் அனைத்தும் துருப்பிடித்து ஒட்டடை படிந்து கிடந்தது.வெளியே எந்த சத்தமும் இல்லாமல் இருக்க ஊருக்கு ஒதுக்கப்புறமாக தான் தங்களை அழைத்து வந்து உள்ளார்கள் என்பதை அறிந்து கொண்டவள். குழந்தைகளின் சிணுங்கல் சத்தத்தில் திரும்பினாள்.

 

    அங்கு வயதான பெண்மணியின் கையில் இரு குழந்தைகளும் இருக்க தட்டித் தடுமாறி எழுந்து குழந்தைகள் அருகில் செல்ல பார்த்தவளின் முடி கொத்தாக அங்கிருந்த ஒரு முரடனால் பிடிக்கப்பட்டது.”ஏ குட்டி அவ்வளவு சீக்கிரம் விடுறதுக்காகவா உங்களை தூக்கிட்டு வந்தோம். உங்களை வைத்து வேற லெவலில் பிளான் இருக்கு. அமைதியா ஒரு மூலையில் படுத்து கிட. நைட் உன்னை நல்லா கவனிச்சிக்கிறோம் “என தள்ளிவிட அங்கிருந்த ஒரு இரும்பு மேஜையில் தலை மோதியதில் நெற்றி கிழித்து ரத்தம் பீறிட்டது. அதை சிறிதும் இரக்கமில்லாமல் புன்னகையுடன் அந்த ஐந்து தடியர்களும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

 ஹலோ நட்புக்களே..

 கதை எப்படி இருக்குன்னு கமெண்ட் பண்ணுங்க…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
5
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்