Loading

அவளுக்கு மாலை போடும் நிகழ்வில், அகமொழி அகனை உறைந்து சிவந்து பார்த்த தருணத்தை போட்டோகிராபர் படம் பிடித்து இருக்க, அந்தப் புகைப்படத்தை அவளது முகப்பு படமாக வைத்து, திருமணத்தை அறிவித்து விட்டான்.

‘அட பைத்தியக்காரா!’ தலையில் அடித்துக் கொண்டவள், “ரூஹி” என ஆரம்பிக்க, அவளோ “இதெல்லாம் டூ மச் அகா. உங்களுக்குள்ள என்ன பிரச்சினை வேணாலும் இருக்கலாம். அதுக்காக அவனை மறந்துட்டு இன்னொருத்தனை அதுவும் அந்த வுமனைசரை கல்யாணம் பண்ணனுமா?” என்றதில் அகமொழி முகம் இறுகினாள்.

“இதோ பாரு. நிச்சயதார்த்தம் வேணாம்னு கிளம்புனது அவன். என் விளக்கத்தை கேட்க அவன் தயாரா இல்லாதப்ப, அவன் புருஞ்சுட்டு என்னைத் தேடி வருவான்னு விட்டத்தை பார்த்துட்டு என்னால வாழ முடியாது. மூவ் ஆன் ஆகுறதுன்னு முடிவு பண்ணதுக்கு அப்பறம், நாள் கிழமை எல்லாம் பார்க்கவும் முடியாது. நான் அகனை கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலை. ரிஷு வீட்ல எப்படி கம்பெல் பண்ணி கூட்டிட்டுப் போனாங்களோ அதே மாதிரி என் வீட்ல கம்பெல் பண்ணாங்க. கல்யாணம் பண்ணிக்கிட்டேன். தட்ஸ் இட். அண்ட் மோர் ஓவர், ஹீ இஸ் மை ஹஸ்பண்ட். பெட்டெர் யூ ஹோல்டு யுவர் டங்!” என்று அழைப்பைத் துண்டித்து விட, ரூஹிக்கு தலையே வெடித்தது.

“எனக்காக அவள் வெய்ட் பண்ண மாட்டாளா? கொஞ்ச நாள்ல என் வீட்ல பேசி சரி பண்ணிருப்பேன்ல. என் லவ் அவளுக்கு அவ்ளோ தானா?” ரிஷான் புலம்பித் தள்ளி விட்டான்.

குடம் குடமாக கண்ணீர் வேறு!

“நீ நடந்ததை சொன்னா தான் நான் மேற்கொண்டு பேச முடியும்” ரூஹி எரிச்சலாக கூற, ரிஷான் நடந்ததை உரைத்ததும் திகைத்தாள்.

“டேய் லூசா நீ. எவனோ ஒருத்தன் வந்து ஏதாச்சு சொன்னா, அப்படியே நம்பிடுறதா? அவனே ஒரு பொம்பள பொறுக்கி… அறிவு கெட்டவனே! அவள் உன்ன திட்டுனதுல தப்பே இல்ல.”

“அவள் தான் ரிஸார்ட்டுக்குப் போனேன்னு சொன்னா ரூஹி. எனக்குப் புரியுது. நான் அவள்கிட்ட விளக்கம் கேட்டுருக்கணும். என் அப்பா தான் வம்படியா இழுத்துட்டு வந்துட்டாரு. அப்படியும் பாதி வழில காரை நிறுத்தி தர்ணா போராட்டமே பண்ணி பார்த்தேன். நடுரோடுல வச்சு என்னை அடிச்சுட்டாரு. சூசைட் பண்ணிப்பேன்னு மிரட்டல் வேற. எனக்கு என்ன செய்யன்னே தெரியலடி. அவளை விட்டுட்டேன்ல” என்றவனுக்கு தேம்பல் அதிகரித்தது.

“ப்ச்… அவள் நம்பரை ஏன் பிளாக் பண்ணுன?”

“என் அப்பா தான்டி பண்ணி வச்சிருக்காரு. எனக்கே தெரியல. இப்ப அவ சொன்னதும் தான் நானே கவனிச்சேன் பிளாக்ல இருக்கறதை… எனக்கு அவள் வேணும் ரூஹி” என்றவனை பரிதாபமாகப் பார்த்தவள்,

“அந்தக் கடன்காரி அவ புருஷனை தப்பா பேசக்கூடாதுன்னு என்னையே திட்டுறாடா. அங்க போனா தான் என்ன நடக்குதுன்னே தெரியும். ப்ச்… இந்த நேரத்துல இப்படி ஹாஸ்பிடலுக்கு அலையுற நிலைமை” என்று தலையில் கை வைத்தாள்.

“நான் இனி அங்க வரல…” சொன்ன ரிஷானை கன்னத்தில் அடித்தவள்,

“செருப்பு பிய்யும். வேலை இல்லாம பிச்சை எடுக்க போறியா. மிஞ்சி போனா பத்து நாள்ல அப்பாவை டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. நம்ம போய் பேசிக்கலாம் அவள்கிட்ட. அதுவரை இங்கயே இரு. உனக்கும் மனசு மாற டைம் வேணும்…” என கடுமையாக ஆரம்பித்து மென்மையாக முடித்தாள்.

அவனது கண்ணீர் வருத்தத்தையும் பரிசளிக்க, “விடுடா பார்த்துக்கலாம்” என்று அவன் கையைப் பிடித்தாள்.

“தப்பு பண்ணிட்டேனோ?”

“ப்ச் விடு இட் ஹேப்பன்ஸ்!”

“வலிக்குது ரூஹி…” குளம் கட்டிய நீருடன் தளர்ந்திருந்தவனை தேற்றும் வழி தெரியாது திணறினாள்.

——–

அடுத்த மூன்று நாள்களும் கண்ணிமைக்கும் பொழுதில் கரைந்தது. பிரணீத் தங்கையின் நிச்சயதார்த்த வேலைக்காக சென்னைக்குச் சென்றிருக்க, இங்கு அர்ஜித்திற்கு வேலைப்பளு இரட்டிப்பானது.

அகமொழிக்கும் மாதவிடாய் காலம் முடிந்திருக்க, அடிவயிற்றில் புது பயம் ஒன்று முளைத்தது.

கடந்த நாள்களாக அர்ஜித்தும் நன்றாக பேசினாலும், அவள் மீது மறைமுக கோபத்தில் தான் இருந்தான். உணவகத்தில் அவள் பேசிய வார்த்தைகளின் மீதிருந்த சினம் இன்னும் தீரவில்லை அவனுக்கு.

இதில் சுஜாதாவும் அவர்களை கோவிலுக்குச் செல்ல சொன்னார். மறுவீட்டிற்கும் அழைக்க அவளது பெற்றோரை அழைத்திருந்தார்.

அன்றைய காலையில் எழும்போதே அகமொழிக்கு சின்ன உறுத்தல். கோவிலுக்குச் செல்வதால் சீக்கிரமே எழுந்திருந்தாள்.

பூஜையே ஒன்பது மணிக்கு மேல் தான் என சுஜாதா சொல்லி இருந்ததால், காலை உணவிற்கு உதவி செய்யும்பொருட்டு அடுக்களைக்கு வந்தாள்.

“வா மோளே… கோவிலுக்கு போகான் ரெடி ஆயோ?” சுஜாதா கேட்டதில் “ஆமா அத்தை… என்ன சமைக்கிறீங்க?” என எட்டிப் பார்த்தாள்.

“ஆப்பமும் முட்டைக்கறியும்”

“வாவ் மார்னிங்கே நான் வெஜா” என்றவளைக் கண்டு நகைத்தார்.

“ஒரு கொதி வரம்போழ் (வரும்போது) ஆஃப் செய்யுறியா? ஞான் அச்சனுக்கு சூப் கொடுத்துட்டு, அவரையும் எழுப்பி விட்டுட்டு வரேம். அமையா சாப்பாடு சோதிக்கும்…” என்றதும், “நீங்க போங்க அத்தை நான் பார்த்துக்கறேன்” என்றாள்.

“ஹான் பின்ன மூடி பாத்திரத்தை வெச்சிரிக்கட்டே. எந்துன்னு அறியில்லா, கொச்சு பல்லி சுத்துன்னு. விஷ்ணுவோடே பரஞ்சு இதொக்கே க்ளீன் செய்யான் ஆளை வரப் பரஞ்சிருக்கணும்… அவன் இன்னும் செய்யாதே இரிக்குன்னு!” என்றபடி அவரும் சென்றார்.

அகமொழி சுவற்றில் சுற்றி பார்த்தாள். பல்லி எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. முட்டைக்கறியை கிண்டும்போதே, அன்விதா வந்தாள்.

“இந்தப் பொண்ணு ஸ்கூலுக்கு கிளம்புறதுக்குள்ள பம்பரமா சுத்த விடுறா” எனத் தலையாட்டி சலித்திட,

“நீங்க ஏன் இப்படி நனைஞ்சு போயிருக்கீங்க. அவளோட சேர்ந்து நீங்களும் குளிச்சுட்டீங்களா?” குறும்பாக கேட்டாள் அகமொழி.

“நீ வேற தண்ணிய ஊத்தி விட்டுட்டா அகா…”

“சரி சரி ஆப்பம் சுட்டு தான் இருக்கு. நீங்க போய் ட்ரெஸ் மாத்துங்க. நான் அமையாக்குட்டிக்கு ஊட்டி விடுறேன்” என்றிட, “தேங்க்ஸ் அகா” என்றவள் உடை மாற்ற அறைக்குச் சென்றாள்.

“அமையா சித்திட்ட போய் ஆப்பம் சாப்பிடுங்க. நான் ட்ரெஸ் மாத்திட்டு வந்துடுறேன்” என அழைக்க, அப்போது தான் கிளம்பி இருந்த விஷ்ணு முறைத்தான்.

“கண்டவ என் மோளுக்கு சாப்பாடு குடுக்கணுமா. நினக்கு கை நல்லாயி தன்னே இரிக்குன்னல்லோ!” என்று சீறினான்.

அதில் இறுகியவள், “நானே குடுத்துக்குறேன்” என திரும்ப போக, “ஆவஸ்யம் இல்லா! ஞான் தன்னே நோக்கிக்கொள்ளாம். நீ சீவி சிங்காரிச்சுட்டு போடி!”என்று கடிந்து விட்டு மகளைத் தூக்கிக் கொண்டு டைனிங் டேபிளுக்குச் சென்றான். பாவையின் பளபளத்த கண்ணீர் தடங்களை கண்டுகொள்ளாமலேயே.

விஷ்ணு வந்ததில், அகமொழியும் உணவை தட்டில் வைத்து கொடுத்து விட்டு அடுக்களைக்கு நகர்ந்தவள், அதன்பிறகே பாத்திரம் திறந்திருந்ததை கண்டாள்.

“அச்சோ அத்தை மூடி வைக்க சொன்னாங்களே” என்றபடி கிண்டி விட்டு மூட முயன்றவள் அதில் கிடந்த ஒரு குட்டி பல்லியை பார்த்து பயந்து பின்னால் நகன்றாள்.

“ஐயோ!” என வேகமாக டைனிங் ஹாலுக்கு சென்றவள், விஷ்ணு அமையாவிற்கு ஊட்ட போகும்போதே தட்டி விட்டாள்.

“ஏய் எந்தா?” விஷ்ணுவின் கோபத்தில் பார்க்க, “அது அது… பல்லி விழுந்துடுச்சு” என்றவளுக்கு தலையே சுற்றியது.

“அமையாக்கு குடுக்கலைல” எனக் கேட்கும்போதே விஷ்ணு அவளைக் கன்னத்தில் பளாரென அறைந்திருந்தான்.

“எத்ர நாள் பிளான்டி என்டே மோளை கொல்லணம்னு?!” என்று கேட்டதில் சிலையாக நின்றாள்.

விஷ்ணுவின் சத்தம் கேட்ட பிறகே மொத்த குடும்பமும் ஹாலில் கூடியது.

“இல்ல ப்ரோ. தெரியாம…” அவள் பதறி விளக்கம் சொல்ல முன்வர, அர்ஜித் அகனும் அப்போது தான் அலுவல் செல்லும்பொருட்டு கீழிறங்கி வந்தான்.

“எந்தாச்சு?” கலங்கி நின்ற மனையாளின் முகத்தை பார்த்தபடி கேட்டான்.

“நின்டெ பொண்டாட்டி என்டே மோளை கொலை செய்யான் போயிருக்கா! அந்து (அன்னைக்கு )பெரிய இவன் போல சம்சாரிச்சல்லோ… இன்னைக்கு சம்சாரிடா!” விஷ்ணு கொந்தளிக்க, “எந்தா உளறுற? எந்தாச்சு மொழி” என்றதில் அவனை ஏறிட இயலாமல் தலையை தரையில் புதைத்தாள்.

“பல்லியை பட்சணத்திலிட்டு(சாப்பாடுல போட்டு) அமையாக்கு கொண்டு கொடுத்துன்னு!” என்றதும் தான் நடப்பது புரிந்து குடும்பமே அதிர்ந்தது.

அன்விதா அமையாவின் அருகில் வந்து, “குடுக்கல தான?” எனப் பதறி கேட்க,

“பல்லி விழுந்தது தெரியல. பாப்பாக்கு குடுக்குறதுக்கு முன்னாடி நான் வந்து தடுத்துட்டேன்…” அவள் தன்னிலை விளக்கம் கூறியதில்,

“இதோ ஈ இளிச்சவாய் வருவான்னு ஆலோயிச்சிருக்கும்… என்னே எதிர்பார்த்ரில்லா அல்லோ?!(இதோ இந்த இளிச்சவாய் வருவான்னு நினைச்சுருப்ப. என்னை எதிர்பார்த்துருக்க மாட்டீல)” விஷ்ணு இகழ்ச்சியாக கூறினான்.

அர்ஜித் தான் நிலையை கிரகித்துக் கொண்டு, “ஏட்டா… அவள் வேணும்னு செய்ததாயிருக்குமோ? தெரியாதே நடந்திருக்கும். பாப்பா சாப்பிட்டதில்லா அல்லோ… விடு இதை…” என்று சற்று பொறுமையாகவே தான் சமன்படுத்தினான்.

விஷ்ணுவோ, “அப்போ அவளுக்கு கொடுத்துருந்தா ஓகேவா நினக்கு?! என்டே மோள் நிங்களுக்கு விளையாட்டு பொம்மையானோ? நீ நின்டெ வீரம் காட்ட அமையாவை இவள் கூடே விட்டதும், ஈ மகாராணி என்டே மோளை எங்கனே வளர்த்தணம்னு எங்களுக்குத் தன்னே பாடம் படிப்பிச்சதும்… ரிஸார்ட்டில் வந்தவளை ரிஸார்ட்டோடே விடாதே வீடு வரை கொண்டுவந்தா இங்ஙனெ தான் நடக்கும்!” என்ற விஷ்ணுவின் கூற்றில் கையை இறுக்கி மூடி கோபத்தை அடக்கிய அர்ஜித்,

“நீ ரூம்க்கு போ மொழி” என்றான் உத்தரவாக.

விஷ்ணுவின் கூற்றில் உள்ளம் காயப்பட்டு போக, அதை விட அமையாவை எண்ணியே பரிதவித்தாள். ‘ஒருவேளை சாப்பிட்டு இருந்தால்…’ அவளால் கிரகித்துக் கொள்ளவே இயலவில்லை.

யாரையும் நிமிர்ந்து பாராமல் அறைக்குச் சென்று விட்டாள்.

அவள் சென்றதும் விஷ்ணுவை அழுத்தமாக ஏறிட்டவன், “தெரியாதே நடந்து கழிஞ்சு! தப்பாய் எதுவும் நடந்ததில்லா அல்லோ… அவ்ளோ தான். ‘இங்ஙனெ (இப்படி) நடந்திருந்தா அங்ஙனெ (அப்படி) நடந்திருந்தா’ன்னு நீயே ஏதேங்கிலும் கற்பனை செய்து சம்சாரிச்சோண்டு இரிக்காதே, அமையாவை நோக்கு! அவள் பயந்திருக்கா. இன்னொரு தடவ அவளைப் பத்தி தரங்கெட்ட வார்த்தை வந்துச்சு… இவிடே எந்தா நடக்கும்னு எனிக்குத் தன்னே அறியான் பற்றில்லா… மைண்ட் இட்!” என அடக்கப்பட்ட சினத்துடன் மாடிக்கு விரைந்தான்.

விட்டிருந்தால் விஷ்ணுவை அறைந்திருப்பான். எந்த தகப்பனுக்கும் வரும் பதற்றமும் கோபமும் தான் என்ற உண்மை உறைக்க மட்டுமே இத்தனை அமைதி அவனிடம்.

அறையில் அகமொழி கேவி கேவி அழுது கொண்டிருந்தாள்.

அவன் வரும் அரவம் கேட்டதும், “நான் வேணும்னே பண்ணல அகன். ஆனா தப்பு என் மேல தான். நான் கவனமா இருந்துருக்கணும். அத்தை சொல்லிட்டு தான் போனாங்க… பாத்திரத்தை மூடி வைக்க சொல்லி… நான் தான்… அவள் சாப்ட்ருந்தா… குற்ற உணர்ச்சியிலேயே செத்துருப்பேன்” எனத் தேம்பியதில்,

அவள் முன்னே முட்டியிட்டு அமர்ந்தவன், “லூசு போலே சம்சாரிக்குந்தேண்டி!(பேசாதடி) தெரியாதே நடந்து கழிஞ்சு, விடு இதை… இது ஒரு ஆக்சிடென்ட், அவ்வளவு தான். அம்மே தன்னே ஒரு தடவ சமைக்கும் போது பல்லி வீணிருக்கான். (அம்மா ஒரு தடவை சமைக்கும்போதும் பல்லி விழுந்துச்சு) அப்போ உடனே கண்டுபிடிச்சாங்க. ஒருவேளை காணாதே போயிருந்தா…? சும்மா எல்லா பாஸிபிலிட்டிஸையும் ஆலோயிச்சு ஸ்ட்ரெஸ் ஆவாதே! தப்பாய் எதுவும் நடந்ததில்லா. பாப்பா நம்முடெ கண்ணின் முன்னில் நல்லாயி தன்னே இரிக்குன்னல்லோ… யூ ஜஸ்ட் ரிலாக்ஸ்!”என்றான் மென்மையாக.

எப்படியும் தன்மீது இருக்கும் பிழைக்கு சண்டை போடுவான். குத்தி காட்டுவான் என்றே எண்ணி இருந்தாள்.

விஷ்ணுவிடம் கூட தன்னை தாழ்த்தி பேசவில்லையே.

“சாரிடா…” கண்ணைச் சுருக்கி கெஞ்சலாக மன்னிப்பு வேண்டியதில் அவனுள் எதுவோ உருகும் நிலை.

கோபங்களெல்லாம் எங்கு சென்றதென்று தெரியவில்லை.

“விடு காந்தாரி. இட்ஸ் ஓகே!” அவள் கன்னம் பிடித்து அவளை அமைதி படுத்த முயன்றவன், ஏதோ தோன்ற அவளது முகத்தைத் திருப்பி பார்த்தான்.

மென்மைகள் எல்லாம் மறந்து போக, விழி இடுங்கியது.

“விஷ்ணு நின்னே அடிச்சாயோ?!”

அக்கேள்வியில் விழித்தவளுக்கு பொய் சொல்லவும் இயலவில்லை.

தலையை மட்டும் ஆட்டியவள், மீண்டும் கண்ணில் நீர் சுரக்க விழிகளை தாழ்த்திக்கொண்டாள்.

சுறுசுறுவென ஆத்திரம் தலைக்கேற எழுந்தவன், வாசலுக்கு செல்ல எத்தனிக்க, அவளோ வேகமாக ஓடி தடுத்தாள்.

“அகன்… எங்க போற?”

“அவன் எந்து ஆலோயிச்சுட்டு (என்ன நினைச்சுட்டு இருக்கான்) இரிக்குன்னு மனசில்?! எத்ர தைரியம் இருந்தா நின்னே அடிச்சிருக்கும்…” புஜங்கள் இறுக, சினத்தில் சீறினான்.

அவளுக்கோ அவனது கோபம் கண்டு மிரட்சியே தோன்றியது.

“என்மேல தான தப்பு அகன். அவர் இடத்துல நம்ம இருந்துருந்தாலும் இப்படி தான பிஹேவ் பண்ணிருப்போம். விடு அகன். ப்ளீஸ் பிரச்சினை வேணாமே”

“எந்தாடி சம்சாரிக்குன்னு?! அதுக்காக அடிக்காமோ?! அவன் வேணும்னு செய்யுன்னு… அதான் நீ கரெக்ட் டைம்ல தடுத்தல்லோ! அவனை இன்னைக்கு விடுன்னு இல்லா…” என்றவனின் உடல்மொழியே அவளை பயமுறுத்தியது.

“ஐயோ வேணாம் அகன். நீ இப்ப மறுபடியும் பேசுனா பிரச்சினை தான் ஆகும். விஷ்ணுவும் இதை விட மாட்டாரு. பெருசாக்குவாரு…”

“அதுக்காக நின்னே அடிச்சது வேடிக்கை நோக்கான் பரயுன்னோ?! (வேடிக்கை பார்க்க சொல்றியா?) அடுத்தவன்றே பொண்டாட்டி மேல கை வைக்குனது எல்லாம் எந்து (என்ன பழக்கம்) பழக்கம்?!” அவன் உச்ச பட்ச கோபத்தில் கத்திட, “உஷ் உஷ்… கத்தாத கத்தாத” என அவன் கையைப் பிடித்து பதறினாள்.

“விடுடி நீ…” எனக் கையில் இருந்த காப்பை பின்னால் நகற்றி விட்டு முன்னேற,

“ப்ளீஸ்டா தயவு செஞ்சு அமைதியா இரு. என்னை தான அடிச்சாரு. விடேன்…” அவளும் கெஞ்சினாள்.

“ஆரு வேணெங்ஙிலும் வந்து அடிச்சுட்டு போங்கன்னு ஷோகேஸில் காட்டான் (ஷோ கேசில் காட்ட) நின்னே கல்யாணம் செய்ததில்லா மொழி! எனிக்கு நின்டெ மேல நல்லா கோபம் இரிக்குன்னு, ஐ அக்ரீ. பட் நீ என்டெ ஒயிஃப்! நீ தப்பே செய்திருந்தாலும் நின்னே தண்டிக்கன உரிமை அடுத்தவங்களுக்கு கிடையாது!” அழுத்தக்குரலில் அவளது உரிமையை பதிய வைத்தான்.

ஒரு கணம் திகைத்தவள், “சரிடா நீ ரிலாக்ஸ் ஆகு. பல்லி விழுந்த சாப்பாடை குழந்தைக்கு குடுக்க போய்ட்ட பதட்டத்துல அடிச்சுருப்பாங்க. இது பேச பேச பெருசாகும். ப்ளீஸ் என் செல்லப் புருஷன்ல… ப்ளீஸ்டா அகன்” என அவனைப் போலவே கெஞ்சி அவனை சமநிலைப் படுத்த முயல, அவன் அதற்கெல்லாம் மசிந்தானில்லை.

“தள்ளிப்போடி…!” அனலாய் தகித்தவன் அவளை விலக்கி விட்டு வெளியில் செல்ல,

தலையில் கை வைத்தவள், “அகன் அகன்… நில்லுடா” என ஓடிச்சென்று படிக்கட்டில் பிடித்து விட்டாள்.

“தயவு செஞ்சு அமைதியா இரு அகன்!”

“போ!” அவனது கோபத்தின் அளவு அதிகமாக இருக்க, அவனை நிதானப்படுத்தும் வழி தெரியாதவள், சுற்றி முற்றி ஒரு முறை பார்த்து விட்டு காலை எக்கி அவன் இதழ்களில் அழுந்த முத்தமிட்டாள்.

ஆடவன் ஒரு நொடி உறைந்திருக்க, அவனது இதழீரத்தை உணர்ந்து சிவந்த மேனியதை ஒதுக்கி தள்ளியவளுக்கு தற்போது அவனை அடக்கியே ஆகவேண்டிய கட்டாயம்.

“இப்ப கோபம் குறைஞ்சுடுச்சா?” விழிகளை உருட்டி அவள் கேட்ட விதத்தில் இறுக்கம் தளர்ந்தது தான் என்றாலும் கோபம் குறையவில்லை.

“என்னே டைவர்ட் செய்யாதே மொழி!” தடுமாற்றத்துடன் கூறியவனின் அதரங்களில் மீண்டும் முத்தமிட்டாள்.

“இப்போ?” அவன் தேகம் தளர்வதைக் காண தவிப்புடன் கேட்டாள்.

“ஊஃப்” எனக் கேசத்தை அழுந்தக் கோதியவனுக்கும் அல்லவா தவிப்பு பெருகியது. தவிப்புகளின் தீர்வாகவே தீரா நேசமும் பிறந்திடுமோ?

அகன் வசமாவாள்/வான்
மேகா

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 67

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
62
+1
3
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அகன் கோபம் வந்த ரொமான்ஸ் நடக்குது. ரிஷி அகா வேண்டுமாம் ஓவர்

  2. பாவம் ரெண்டு பேரும்.. விருப்பமில்லாம கல்யாணம் பண்ணதால கம்மியா ரொமான்ஸ் பண்றாங்க..😉😉😁😁