
சண்டையிலும், வாதங்களிலும் கொஞ்சமே கொஞ்சம் ரசனையிலுமே இரு நாள்கள் கழிந்தது.
அமையாவின் ஸ்பீச் தெரபியும் நன்முறையில் சென்று கொண்டிருக்க, காலை உணவிற்காக டைனிங் டேபிளுக்கு வந்தாள் அகமொழி. அனகா, அன்விதா, சுஜாதா மூவருமே அங்கு அமர்ந்திருக்க,
“ஹாய்…” என்றபடி ஹாட் பாக்ஸைத் திறந்ததும் அதில் இட்லி சூடாக இருக்க, காரச் சட்னியும் சிவப்பாகி மிளிர்ந்தது.
“என்ன இது? எப்பவும் புட்டு, இடியாப்பம், ஆப்பம்னு ரவுண்டு கட்டுவீங்க. இன்னைக்கு இட்லி இருக்கே?” அகமொழி வினவியதில்,
அனகா, “இனி தமிழ்நாடு சைட் புட்டும் மெனுல கண்டிப்பா இரிக்கணமாம். பெரிய இடத்து ஆர்டர்!” எனக் குறும்பாகச் சிரித்தாள்.
“நான் எதுவும் ஆர்டர் போடலையே” எனத் தலையைச் சொறிந்தபடி அகமொழி பார்க்க, “ஹையோ சேட்டனோட ஆர்டர்…” என்றாள்.
“அட, விஷ்ணு ப்ரோக்கு திடீர்னு என்மேல இவ்ளோ பாசமா?” என அதிசயித்தாள்.
“ஏடத்த்த்தி… ஞான் பரஞ்சது அர்ஜியை…” பல்லைக் கடித்த அனகாவிடம்,
“நீ எப்பவும் அவரைப் பேர் சொல்லித் தான கூப்பிடுவ. திடீர்னு மரியாதை கொடுத்ததும் குழம்பிட்டேன்.” என்றவளோ, ‘வாந்தி எடுத்து விடக் கூடாதென்று தெளிவாக வேலை பார்க்கிறான்.’ மனத்தினுள் திட்டிக் கொண்டவள், இட்லியைப் பதம் பார்க்கத் தொடங்கினாள்.
சுஜாதா தான், “நினக்குச் சமைக்க அறியுமோ மோளே?” எனக் கேட்க,
“தெரியும் அத்தை. ஆனா சமைக்க டைம் இருந்தது இல்ல. நைட்டே அம்மாவுக்கு அடுத்த நாளைக்குத் தேவையான எல்லாம் கட் பண்ணி வச்சுட்டு, மார்னிங் வீடை க்ளீன் பண்ணிட்டு வேலைக்குக் கிளம்பிடுவேன். நைட்டு வந்து பாத்திரம் கழுவிக் குடுத்துப்பேன்…” எனப் பேசிக் கொண்டே உண்டாள்.
அர்ஜித் அகனும் கடிகாரத்தைப் பார்த்தபடி உண்ண வர, அவனுக்கு அன்விதாவே பரிமாறினாள்.
“எப்போ படிச்சு இதொக்கே…” அனகா கேட்க,
“நான் காலேஜ் படிக்கும்போதே…” என்றாள்.
சுஜாதா தான் அனகாவைக் கண்டித்தார்.
“நீயும் தன்னே காலேஜ் படிக்கன. வீட்ல ஒரு வேலையாச்சும் அறயுமா? நின் ஏடத்தியைப் பார்த்துக் கத்துக்கோ” என்றிட, அகமொழி லொக்கு லொக்கு என இருமினாள்.
இதில் அனகா வேறு, “வந்து நாலு திவசத்துல எனிக்கு திட்டு வாங்கித் தந்தல்லே…” என நம்பியார் தோரணையில் முறைக்க,
“அத்த… அவளை ஏன் எனக்குத் திருப்பி விட்டுட்டு இருக்கீங்க. யம்மா நீ உன் இஷ்டம் போல இருமா. இத வச்சுட்டு வெஞ்சன்ஸ் எடுத்துட்டு வராத.” என்றதில் அனகா சிரித்தாள்.
“அதில்ல அகா… எப்ப நோக்கியாலும் செறிய விஷயத்தினும் ஞான் தன்னே வரணம் அவளுக்கு… அதானு…”
“ப்ச், நான்லாம் ஸ்கூல் படிக்கும்போது வீட்ல சாப்பிட்ட தட்டைக் கூட எடுத்து வைக்க மாட்டேன் அத்தை. ஷு கழற்றக் கூட அம்மா வேலை முடிச்சு வர வரைக்கும் வெய்ட் பண்ணுவேன். அப்படி ஒரு அட்டைச் சோம்பேறி நானு… அப்புறம் அம்மாவுக்கு மூட்டு வலி வந்ததுல இருந்து வீட்டு வேலை எல்லாம் ஹெல்ப் பண்ண ஆரம்பிச்சு அப்புறம், மொத்தமே அவங்களை எதுவும் பண்ண விடுறது இல்ல. அப்பா ரிட்டையர் ஆனதும் பைனான்ஷியலாவும் மேனேஜ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்…
செஞ்சு தான் ஆகணும்னு சூழ்நிலை வர்றப்ப அவளே கத்துப்பா!”
அகமொழி தனக்கு ஆதரவாகப் பேசியதில், “இப்ப ஞான் என்ன தான் செய்யணும்” என்று அனகா கன்னத்தில் கை வைக்க, குறும்பு நகை வீசிய அகமொழி, “ஒன்னும் இல்ல. அத்தைக்கு மூட்டு வலி வர்ற வரைக்கும் வெய்ட் பண்ணு.” எனக் கண் சிமிட்டியதில் அனகா வாய் விட்டே சிரித்தாள்.
“அடிப்பாவி!” சுஜாதா செல்லமாக முறைக்க, அன்விதாவும் “அம்மய்க்கு ஹெல்ப் பண்ண தான் நம்ம இருக்கோமே அகா. நியாயமா அவளோட மாமியாருக்கு மூட்டு வலி வர்ற வரைக்கும் அவள் வெயிட் பண்ணலாம்.” என்று புன்னகைத்ததில், “நோக்கு… வர வர இவங்களோட சேர்ந்து நிங்களும் கலாய்க்கனு ஏடத்தி…” என்று சிலாகித்தாள் அனகா.
“ஏன் இதுக்கு முன்னாடி பேசுனது இல்லையா?”
“ஐயோ இல்ல, ஏடத்திவாய்க்கு கம் போட்டு வச்சிரிக்கும். நிங்களோடு மட்டும் தன்னே நல்லா சம்சாரிக்கனது…” என்றதில் அன்விதா “ஹே நீ அவள்கிட்ட பேசுற மாதிரி என்கிட்ட ப்ரீயா பேச மாட்ட தான.” என்றதும் அனகா விழித்தாள்.
“அது பெரிய சேட்டனோட வைப். மரியாதை நிமித்தமா குறச்சு அடக்கி வாசிச்சிருப்பேன்… நிங்கள் ஒரு இண்ட்ரோவர்ட், ஆனா பேசினா நல்லா பேசுவீங்கன்னு இத்தர வருஷம் கழிச்சு இப்ப தன்னே அறயனது.” அனகா அதிசயிக்க, அன்விதா முறுவலித்தாள்.
“அதுவும் இல்லாதே, சேட்டன் தன்னே அவர் பொண்டாட்டியை யாரும் கலாய்க்கக் கூடாது, கிண்டல் பண்ணக் கூடாதுனு ரூல்ஸ் போட்டு இருந்தில்லே… ஆனா அகா ஏடத்தியை அர்ஜியே செம்மயா கலாய்ப்பான், இல்ல ஏட்டா…” என்று கமுக்கமாக நகைக்க, ஏதோ யோசனையில் இருந்த அர்ஜித் அகன் தான் “ம்ம்…” எனத் தலையாட்டினான், அவளது கூற்றைக் கவனியாமல்…
வெடித்துச் சிரித்த அனகா, “பார்த்தீங்களா, இவனே சும்மா விடாதீங்க ஏடத்தி…” என்றதும் தான் நிகழ்வுணர்ந்தவன், “எடி…” என முறைத்தான்.
“உன் சேட்டனை நான் கலாய்ச்சு நீ பார்த்தது இல்லையே… ஹோட்டல் மேட்டரை சொல்லட்டா” என அவனை இடித்து வார, “எந்தா அது?” என ஆர்வமாக கேட்டாள் அனகா.
“நீ மூடு…” என்றவன்,
“ஏடத்தி… பிரணீயுடே தங்கச்சிக்கு நெக்ஸ்ட் வீக் எங்கேஜ்மென்ட் ஃபிக்ஸ் செய்திட்டுண்டு போலும்…” என அன்விதாவிடம் கூறினான்.
அவள் சுஜாதாவை ஒரு முறை பார்த்து விட்டு, “எங்களுக்கும் ப்ரணீ அப்பா கால் பண்ணுனாங்க அர்ஜி. விஷ்ணு திடீர்னு கிளம்ப முடியாது வேலை இருக்குன்னு சொன்னாரு… உங்களையும் அகாவையும் அனுப்பலாம்னு அம்மே சொல்லிட்டு இருந்தாங்க” என்றாள்.
“ஏன், நிங்களும் வா… நிங்கள்டெ ஃப்ரெண்டிண்டெ தங்கச்சி தன்னே?” அவன் கூர்மையாக பார்க்க,
“ஆனா விஷ்ணு கல்யாணத்துக்கு போகலாம்னு சொல்றாரே. அதுவும் இல்லாம, அமையா இப்ப தான் ஸ்பீச் தெரபி போயிட்டு இருக்கா, இடைல மிஸ் பண்ணுனா அவளுக்கும் கன்டின்யூவேஷன் போய்டும். ப்ரணீட்டயும் சொல்லிட்டேன். அவனும் சரின்னு சொன்னான்…” என்றாள்.
அமையாவிற்காக யோசித்தாலும் ஒரு நாள் தானே என்ற எண்ணம் வராமல் இல்லை அவனுக்கு.
“நீ ஃப்ரீயா?” என மனையாளைப் பார்த்து கேட்க,
“எப்ப போகணும்? ஒரு நாளைக்கு தான” என விவரம் கேட்டுக் கொண்டவள், “ஓகே ஒன் டே’ னா ப்ராப்ளம் இல்ல போகலாம்… நீங்க எக்ஸ்டரா டே இருக்குற மாதிரி வந்தா, என்னை மட்டும் பஸ் ஏத்தி விட்டுடுங்க. இங்க ஆள் இல்ல…” என்றதும் அவனும் தலையசைத்தான்.
அனகா தான் பொங்கினாள்.
“அவன் தங்கச்சிக்கு எல்லாம் கல்யாணம் செய்யுன்னு… எனிக்கு ஒரு கல்யாணம் செய்யனம்னு தோன்னுந்தோ”
அகமொழியோ, “விடு அனு… உன்னைக் கல்யாணம் பண்ணிக்க போறவன் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கட்டும்! இப்பவே போய் டார்ச்சர் பண்ணனுமா?” என்றதில் அர்ஜித் நமுட்டு நகை புரிந்தான்.
“டா… என்னை கலாய்ச்சதை கூட நின்டெ ஆளோடே பரஞ்சு வெச்சிருக்காயோ! இவனும் என்னே இங்ஙனெ தான் கிண்டல் செய்யுவான் ஏடத்தி!” என சிணுங்க,
“உண்மையை ஆரு வேணெங்கிலும் பறையாம்டி!” என்று அர்ஜித் வாரியதில், அவனை அடித்தாள்.
பதிலுக்கு அவனும் அடிக்க, சிறிது நேரத்தில் அவ்விடமே போர்க்களமாக மாறியது.
“டேய் ரெண்டு பேரும் என்னை நடுவுல உக்கார வச்சுட்டு தான் சண்டை போடுவீங்களா…” என தடுத்து நிறுத்தினாலும் அவளுக்கும் நண்பர்களின் நினைவு பலமாக தாக்கியது.
உடன்பிறந்தவர்கள், உற்றார் உறவினர்கள் என பெரியதாக யாரும் இல்லை. அடித்தாலும் பிடித்தாலும் ரிஷானும் ரூஹியும் மட்டுமே அவளுக்கு அனைத்துமாக இருந்தனர்.
மெலிதான வருத்தம் தாக்கிட, அமைதியாக உண்டாள்.
அந்நேரம் பெரியவர்களும் வந்து கலந்து கொள்ள, வேறு இடம் இல்லாததால் அகமொழியின் அருகிலேயே அமரும் நிலை கல்யாணிக்கு.
அவளைத் திரும்பி பாராது உண்டவருக்கு இருமல் வந்து விட, அவரை நிமிர்ந்து பார்த்தவள், தனது இட்லியில் கவனமானாள்.
பின் மீண்டும் இருமியதில், அர்ஜித் நீரை க்ளாசில் ஊற்றி அவளிடம் கொடுக்க சொல்லி கொடுக்க, அவளோ கல்யாணிக்கு கொடுக்காமல் தானே குடித்ததில் கல்யாணி மட்டுமல்லாது அர்ஜித்தும் முறைத்தான்.
“இவங்க என் கையால தண்ணி குடிக்க மாட்டாங்களாம் அகன்…” எனப் பரிதாபமாகக் கூறி கல்யாணியைப் போட்டு விட, “ஆரு பறஞ்சு?” அர்ஜித் கோபமாகக் கேட்டான்.
“வேற யாரு? உங்க பாட்டி தான் சொன்னாங்க”
இப்போது அர்ஜித்தின் அனல் பார்வை கல்யாணியை மேய, அவருக்கோ மனம் படபடத்து விட்டது. விஷ்ணுவின் மீது கண்ணாடி ஜக்கை எறிந்ததை கேள்வி பட்டதில் இருந்து அவளை ஒதுக்குவதில் தன்மீது கோபப்படுவானோ என்ற பயம் இருந்தது அவருக்கு.
இப்போதோ ‘மடச்சி… என்னே மாட்டி விட்டுட்டா’ என்று புலம்பியவர், “அதெல்லாம் ஒன்னும் இல்லையே” என வேகமாக மறுத்தார்.
“அப்போ தண்ணி குடிங்க…” என சிரிப்பை அடக்கிக்கொண்டு அகமொழி கிளாஸை நீட்ட, பேரனின் பார்வை வீச்சு தாளாது அதனை வாங்கி மடமடவென குடித்ததைக் கண்டு சுஜாதாவிற்கு சிரிப்பு எழுந்தது.
மாமியாரும் மருமகளும் பார்வையாலேயே சிரிப்பை பரிமாறிக்கொள்வதை கவனித்த அர்ஜித் அகனும், “வீட்டில் எல்லாரையும் கைக்குள்ள போட்டுட்டா…” எனத் திட்டினான், அதுவும் செல்லக்கொஞ்சல்களாவே வெளிவந்தது.
காரில் இருவரும் ஒன்றாக தத்தம் ரிசார்ட் நோக்கி செல்லும்போதே, அவளுக்கு அக்கவுண்ட்ஸ் மேனேஜரிடம் இருந்து இருந்து அழைப்பு வந்தது.
“சொல்லுங்க சார்…”
—-
“இப்ப வேணுமா?”
—
“ஓகே… நான் அனுப்புறேன்…” என்று யோசனையாக கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தவள், ரூஹிக்கு அழைத்தாள்.
உடனே அழைப்பை ஏற்ற ரூஹியிடம், “எனக்கு ஜிஎஸ்டி சம்பந்தமான பைல் ஒன்னு வேணும் ரூஹி. ஆபிஸ் சிஸ்டம் கிராஷ் ஆகிடுச்சு. ரிஷுவோட மொபைல்ல அவன் எல்லாம் வச்சுருப்பான். எனக்கு அனுப்ப சொல்லு” என்றாள்.
ஓரக்கண்ணில் ஆடவனையும் பார்த்துக் கொண்டாள்.
“ஏன்டி அதை அவன்கிட்டயே கேட்க வேண்டியது தான?” ரூஹி கேட்டதில்,
“அந்த நாய் தான் என்னை பிளாக் பண்ணி வச்சுருக்கே. நீயே போன் பண்ணி கேளு…” என்றாள்.
அவளுக்கு அருகில் சிரிப்பை தொலைத்த முகத்துடன் அமர்ந்திருந்த ரிஷான் ‘என்ன?’ எனக் கேட்க, “அவன் என் பக்கத்துல தான் இருக்கான். கேட்டு சொல்றேன்…” என்றவள் அவனிடம் விவரம் கூறியதில், “ம்ம்” எனத் தனியே சென்று அமர்ந்து அலைபேசியில் தேடினான்.
அவனைப் பரிதாபமாகப் பார்த்த ரூஹி, “அவன் அப்பா அவனை அடிச்சுருப்பாரு போலடி…” என்றதில்,
“அவன் அப்பா அவனை தொட்டில்ல போட்டு ஆட்டட்டும் தூக்கி தூக்குல போடட்டும் அதுக்கு நான் என்ன பண்ண முடியும். எருமை மாட்டுக்கு முழுசா 24 முடிஞ்சு 25 ஆவுது. ரெண்டு வயசு கொழந்தை இல்லைல” என கடுகடுத்தாள் அகமொழி.
“என்ன தான்டி பிரச்சினை?” ரூஹி எரிச்சலாகக் கேட்டாள்.
“ஏன் சார் எதுவும் சொல்லலையா?”
அவன் வாயே திறக்கல.
“ஆமா வாயே திறக்காம இருந்தா, இங்க பிசினஸ யாரு பாக்குறது. பெர்சனல் வேற இது வேற. அத மொதல்ல புரிய வை…”
“நீ விடு. நான் சீக்கிரம் வந்துடுவேன். அவனையும் இழுத்துட்டு வந்துடுறேன். நீ அதுவரை மேனேஜ் பண்ணு” என்றவளுக்கும் இன்னும் செய்தி தெரியவில்லை.
“ம்ம்!” அழைப்பைத் துண்டித்ததுமே, ரிஷானிடம் இருந்து அவள் கேட்ட பைல் வந்திருந்தது.
அதே நேரம் அவள் ‘சேட்’டை திறக்கும் போதே, எதேச்சையாக அர்ஜித் அகன் திரும்பிட, அவன் கண்ணில் முத்த ஸ்மைலிகள் தென்பட்டதில் ஸ்டியரிங்கை இறுக்கிப் பிடித்தான்.
அவளது வாட்சப் முகப்பு படத்திலும் அவளும் ரிஷானும் ஒன்றாக எடுத்த செல்பியே இன்னும் இருந்தது. பல நாள்களுக்கு முன் வைத்தது. அதை நீக்க கூட அவளுக்கு நினைவு இல்லை.
அவளது கிளாம்பிங் வந்ததுமே இறங்க முயன்றவளை தடுத்து நிறுத்தியவன் “நின்டெ போன் தா” என்றான்.
“எதுக்கு?”
அவன் கையை நீட்டி கடுமையாகப் பார்க்க, ஒன்றும் புரியாமல் அலைபேசியைக் கொடுத்தாள்.
அதில், அவன் விரல்கள் வேகமாக எதுவோ செய்ய மெல்ல எட்டிப்பார்த்தாள். அவன் நிமிர்ந்து தீயாய் முறைத்து விட்டு அலைபேசியை மீண்டும் கொடுத்தவன், அவளை இறக்கி விட்டுத் திரும்பிப் பாராது சென்றிருந்தான்.
கடந்த இரு நாள்களாக, “பைடீ காந்தாரி” எனக் கண் சிமிட்டி விட்டுச் செல்வது வழக்கம் அவனுக்கு.
தோளைக் குலுக்கிக் கொண்டவள், வேலையில் புதையும்போதே ரூஹி மீண்டும் அழைத்தாள்.
“என்னடி செஞ்சு வச்சுருக்க?” அவளது கோபத்தில் புரியாமல் விழித்தவள், “நான் ஒன்னும் பண்ணலையே” எனக் குழம்பினாள்.
“உன் டிபி சொல்லுதே. அங்க என்ன நடந்துட்டு இருக்குன்னு!” பற்களை கடிக்கும் சத்தம் அலைபேசி வழியே கேட்க, அவளுக்கு அருகில் ரிஷான் தேம்பி தேம்பி அழும் சத்தம் வேறு கேட்டது.
“ஏய் இப்ப என்ன ஆச்சு? என்ன டிபி” எனப் புரியாமல் அவளது அழைப்பைத் துண்டிக்காமலே வாட்சப் முகப்பு பக்கத்தை பார்த்தவள் நெஞ்சில் கை வைத்தாள்.
அகன் வசமாவாள்(வான்)
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
50
+1
1
+1
3
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அகன் கல்யாண போட்டோ வைத்தானா?. செம.