Loading

அத்தியாயம் 17

மணி அடித்தது போன்று மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வந்தாள் அகமொழி.

அன்விதாவின் முகமே வெகுவாய் வாடியிருந்தது.

விஷ்ணுவின் காலில் இருந்த கண்ணாடித் துகள்களைக் கண்டு பதறிய பெரியவர்கள் தான், “நோக்கி இரிக்கக் கூடாதா மோனே” என்று பரிதவித்தனர்.

விஷ்ணு அடக்கப்பட்ட கோபத்துடன் அன்விதாவை முறைத்தான்.

அன்விதாவும் அவர்களிடம் எதையும் பகிரப் பிடிக்காது அமைதி காத்தாள்.

அகமொழி விஷ்ணுவைப் பாராது, “அமையா கிளம்பிட்டாளாக்கா?” என வினவ,

“ம்ம்! நானும் வரட்டா அகா…” என்றாள் அன்விதா.

அதில் விஷ்ணுவின் பார்வை இன்னும் காட்டமாக அவள் மீது படிய, “வாங்கக்கா…” என்றாள்.

பெரியவர்களிடமும் விவரம் பகிரப்பட, அவர்களும் மறுக்கவில்லை.

அந்நேரம் அர்ஜித்தும் அகமொழிக்கு அழைத்தான்.

“ரெடியாகியோ?”

“ம்ம், வீட்ல தான் இருக்கேன். அக்காவும் வரேன்னு சொன்னாங்க…”

“ஓகே… அவிடே ட்ரைவர் உண்டாகும். நிங்களைக் கூட்டிட்டுப் போயிட்டு வரும்.” என்றதும் வெளியில் வந்து பார்த்தாள்.

அந்தப் பரந்த பார்க்கிங்கில் இரண்டு ஜீப்பும் ஒரு காரும் இருந்தது. கூடவே அன்றுப் பிரச்சினை செய்த ஓட்டுநரும்.

அகமொழியைக் கண்டு அவ்வப்பொழுது ஒளிந்து கொண்டிருந்தார்.

“இந்த ஆளோட எல்லாம் என்னால போக முடியாது.” அவள் உடனடியாக மறுக்க, “ஏய்!” எனப் பல்லைக் கடித்தான்.

“அன்னைக்கு காரை ஸ்க்ராட்ச் பண்ணிட்டு, நான் தான் தப்பா வந்தேன்னு என்மேல பழி போட்டான்.”

“தப்பா வந்தது நீ!”

“நீ பார்த்தியா?”

“மொழி… ஆவஸ்யமில்லாதே (தேவையில்லாம )ஆர்கியூ பண்ணாத…” என்றவன் வேலைப்பளு எரிச்சலில் இருக்க, “முடியாது. நான் இவனோட போக மாட்டேன்… காரை ஸ்க்ராட்ச் பண்ணிட்டு…” என மீண்டும் மீண்டும் அவள் வாதிட, “அதினு பணம் கொடுத்தில்லே…” அவனும் கோபத்தில் கடிந்தான்.

“நீ கொடுக்கல. தூக்கி எறிஞ்சுட்டுப் போன! உன் பிச்சைக்காசு ஒன்னும் எனக்குத் தேவை இல்ல…” எனும்போதே அவன் அழைப்பைத் துண்டித்து விட்டான்.

“இவன் கூட கொஞ்சிக் குலாவுற பொண்ணுங்க மாதிரி நினைச்சுட்டான் போல… காசைத் தூக்கி எறியவும் அள்ளிட்டுப் போறதுக்கு…” என்றவளுக்கும் ஆத்திரம் மலையெனப் பொங்கியது.

அமையாவை அழைத்துக் கொண்டு வந்த அன்விதா தான், “என்ன அகா? தனியா புலம்பிட்டு இருக்க…” என வினவ, “ஒன்னும் இல்ல…” என முணுமுணுத்தபடி அந்த ஓட்டுநரிடம் கார் சாவியை வாங்கிக்கொண்டு தானே ஓட்டிச் சென்றாள்.

அன்விதா, அகமொழியைத் தவிப்பாக ஏறிட்டு, “சாரி அகா… விஷ்ணு பேசுனதுக்கு!” எனக் கெஞ்சலாகக் கூற,

அதில் தான் சற்றே தணிந்தவள், “அட… உங்க சாரி எல்லாம் ஒன்னும் வேணாம்கா…” என்று விட்டுச் சாலையில் கவனமானாள்.

இங்கோ விஷ்ணு வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான்.

“எந்து விசாரிச்சுட்டு (என்ன நினைச்சுட்டு) இருக்கான் நிங்கள்டே செறிய மகன்? அவன் ஒயிஃபைப் பேசிட்டேனாம்… அங்கனே சிலிர்த்துகிட்டுச் சண்டைக்கு வரான்…” விஷ்ணு சீறினான்.

“எந்தா மோனே பரயனது? ஞங்கள் இல்லாத நேரத்துல எதுவும் பிரச்சினையா?” கோபால கிருஷ்ணன் கேட்டதில்,

“இதோ, கண்ணாடி ஜக்கை அவன் தன்னே தூக்கி எறிஞ்சது. விட்டா என்டே தலையை உடைச்சிருப்பான். என்டெ மோளை ஸ்பீச் தெரபி கூட்டிட்டுப் போகான் அவள் ஆரு? கல்யாணத்தினு முன்னே ரிஸார்ட்டுக்கு வந்தவள் அல்லே… உண்மையைப் பரஞ்சதினு அவனுக்கு கோபம் வேற வருனு! இன்னொரு தடவை, அவன் என்டெ விஷயத்துல தலையிட்டால், தேவை இல்லாதே குடும்பம் பிரிய வேண்டியது வரும்.” என்று மிரட்டி விட்டுச் செல்ல, கேசவ நாயர் வருத்தமாக சுஜாதாவைப் பார்த்தார்.

சுஜாதாவும் விஷ்ணுவின் கூற்றில் அதிர்ந்திருந்தார்.

அவர்களுக்குள் பிரச்சினை என்றளவு புரிந்தது. அதற்காக அகமொழியை அவன் பேசிய விதத்தைப் பெரியவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. வீட்டிற்கு மருமகளென வந்த பெண்ணைத் தரக்குறைவாகப் பேசியதில் சுஜாதாவிற்கு உடன்பாடில்லை.

‘ஏதோ காதலித்து இருக்கிறார்கள்… பின் ஏதோ குழப்பத்தில் பிரிந்து பின் இணைந்திருப்பார்கள்.’ என்ற எண்ணமே அவர்களுக்கு! அப்படியும் கல்யாணியால் பேரனைத் தவறாக எண்ண இயலவில்லை.

அகமொழி வேண்டுமென்றே வந்து பிரச்சினை இழுத்தது போல இருந்ததில் தானே அவர் அவளைக் கண்டுகொள்ளாது இருந்ததும்.

மற்றபடி அனகா, அன்விதா, சுஜாதா அனைவரிடமும் அழகாய் பொருந்திப் போனவளைத் தேவையின்றிக் குற்றம் சுமத்த அவருக்கு விருப்பமும் இல்லை.

பெரியவர்களுக்கு அந்த மாலை நேரம் வருத்தமாகவே கழிந்தது.

மருத்துவரிடம் சென்று வந்த பிறகு, சுஜாதா “எந்து பரஞ்சு மோளே” என அன்விதாவிடம் விசாரிக்க, “ஒன்னும் பிரச்சினை இல்ல அம்மே. தொடர்ந்து செஷன் அட்டென்ட் பண்ணுனா, சென்டென்ஸ் மேக் பண்ணப் பழகிடுவான்னு சொன்னாங்க…” என எப்போதும் போலப் போலி முறுவலை முகத்தில் அணிந்து விட்டு அறைக்குச் செல்ல, அங்கு விஷ்ணு சிவந்த விழிகளுடன் அமர்ந்திருந்தான்.

அவனைக் கண்டதும் உணர்வற்ற முகத்துடன் மருத்துவர் கூறியதைப் பகிர்ந்தவள், மீண்டும் வெளியில் வந்து விட்டாள்.

ஏழு மணியளவில் ப்ரணீத்தும், அர்ஜித்தும் வீட்டிற்கு வந்தனர். ப்ரணீத்திற்கு நடந்த விஷயங்கள் தெரியவில்லை.

அகமொழி சுஜாதாவிடம் அளவளாவிக் கொண்டிருக்க, “ஹாய் ப்ரோ…” என்றவள், அர்ஜித்தைக் கண்டுகொள்ளவில்லை. அவனும் அவள் மீதிருந்த கோபத்தில் அவளது முகம் பாராது, அன்விதாவிடம் விவரம் கேட்டுக் கொண்டான்.

“என் குட்டிச் சிட்டு ஸ்கூலுக்குப் போறதே பெரிய விஷயம். அவளை ஏன் எல்லாருமா இப்படி அலைக்கழிக்கிறீங்க…” என முறுக்கிய பிரணீத், “நீ வாடி தங்கம்… சித்தப்பா உனக்கு சாக்லேட் தரேன்…” எனத் தூக்கியவன், அவளுக்கு வாங்கி வந்த சாக்லேட்டைக் கொடுக்க, அதனை வெடுக்கெனப் பிடுங்கிய அகமொழி, “இந்த டைம்ல நோ சாக்லேட். அமையா குட்டி மார்னிங் சாப்பிடுவீங்களாம் ஓகேவா?” என்றதும் அவள் “சித்தி, சாக்லேட்” என்று குதித்தாள்.

“ம்ம்ஹும், தரமாட்டேன்.” அவள் மறுப்பாகத் தலையசைக்க,

“ப்ளீஸ்… சாக்லேட்!” அவள் உதட்டைப் பிதுக்க, “அப்போ ஒரு கிஸ் குடு…” என்று கன்னத்தைக் காட்டியதில், அவளும் பாய்ந்து வந்து முத்தம் கொடுத்தாள்.

“வெரி குட்… இந்தாங்க” என அவளே சாக்லேட்டை வாங்கி வந்தது போல கொடுத்து விட்டு,

“தேங்க்ஸ் சித்தி சொல்லுங்க…” என்றிட, அவளும் கிளிப்பிள்ளையாக “தேங்க்ஸ் சித்தி” என்று குதித்தாள்.

“அடிப்பாவி சாக்லேட் வாங்கிட்டு வந்தது நானு” பிரணீத் முறைக்க,

“க்ரெடிட்ஸ் எல்லாம் அப்போ அப்போ நீங்க தான் வாங்கணும். இல்லைன்னா யாராச்சு இடைல புகுந்துடுவாங்க ப்ரோ…” எனக் கண்சிமிட்டினாள்.

“உன் பிராணநாதர் ரூம்கு போனாரே. நீ பின்னாடி போகலையா?” அவன் நக்கலாகக் கேட்க,

“ஏன் பிராணநாதர்கு சட்டையைக் கழட்டி ஹேங்கர்ல மாட்ட யாரும் வந்து க்ளாஸ் எடுக்கணுமா?” என சிலுப்பிக் கொண்டதில், இருவரையும் முறைத்தபடி அங்கு வந்தான் அர்ஜித் அகன்.

வேறு உடைக்கு மாறி இருந்தவன், “வா” என அவனை இழுத்துக்கொண்டு செல்ல முயல, “ப்ரணீ மோனே… சாப்பிட்டுப் போகலாம்ல” என்றார் சுஜாதா.

“நாங்க சாப்பிட தான் போறோம்மா” என்ற பிரணீத், “ஓய் சிட்டு உனக்கு பரோட்டா வேணுமா?” எனக் கேட்டான்.

“வேணாம்… வீட்ல செய்யும்போது ஏன் நீ ஹோட்டலுக்கு ஓடுறியோ” என முறைத்தாள்.

அதற்கு பதில் உரைக்காது, தன்னையே குறுகுறுவென பார்த்திருந்த அகமொழியிடம் ஒப்புக்காக “நீயும் வர்றியா சிஸ்டர்” எனக் கேட்க,

“ஆக்சுவலி எனக்கு வர விருப்பம் இல்ல. ஆனா நீங்க இவ்ளோ போர்ஸ் பண்ணி கூப்புடுறதுனால சரி ஓகே நானும் வரேன்” என்று வெகுவாய் சலித்ததில், பிரணீத் திருதிருவென விழித்தான்.

அர்ஜித் அகன் தான் நண்பனைத் தீயாக முறைத்தான்.

“ஈ காந்தாரியை எதினாடா கூப்புட்ட…” நண்பனின் பார்வையில் எழுந்த தீப்பந்தத்தில் எச்சிலை விழுங்கியவன், “சாரி சேட்டா பாய். நம்ம ஒன்னு நினைக்க விதி ஒன்னு நினைக்குது…” என முணுமுணுக்க,

“விதி தான்… ஆ ஃபாரின் சரக்கை சாக்கடையில் ஒழிக்கூ(ஊத்து)…” எனக் கொந்தளித்து விட்டு காருக்குச் சென்றான்.

இருவரும் இணைந்து ஆல்கஹால் பார்ட்டி செய்வதாக திட்டம்.

அது பாழாய் போன பரிதவிப்பில் நின்ற ப்ரணீத், “சரி வா” எனக் கடுப்பாகக் கூற,

“வா’ன்னா உடனே வர முடியுமா. நீங்க போய் கார்ல இருங்க. நான் கிளம்பி வரேன். பைவ் மினிட்ஸ் ஆகும்…” என அறைக்குச் செல்ல, “சத்திய சோதனை” என நொந்தான்.

சொன்னது போன்றே ஐந்து நிமிடத்தில் கிளம்பி வந்தவள் பின்னால் ஏறிக்கொண்டாள்.

சிறிது தூரம் சென்றபிறகு அவளுக்கு அருகில் ஏதோ மினுமினுக்க, “என்ன இது” என எடுத்துப் பார்த்தவள், “அடப்பாவிகளா… கார்ல பீரை வச்சுட்டு சுத்துறீங்களா?” என்றதுமே கண்ணாடி வழியே அவளை முறைத்தான் அர்ஜித்.

“அது பீர் இல்ல சிஸ்டர்… வைன்!” பிரணீத் திருத்த,

“ஓ… சரக்கடிக்க தான் ரெண்டு பேரும் எஸ்கேப் ஆக ட்ரை பண்ணீங்களா? நான் எதுவும் கரடியா வந்துடலையே…” என வெகு அடக்கமாக கேட்டதில், “ச்சே ச்சே! உனக்கு ஒரு பெக் வேணும்னாலும் தர்றோம்…” என்று கருணை காட்டினான் பிரணீத்.

“பெக் எப்படி வரும். நான் தான் இந்தக் கருமத்தை இப்ப வெளில போட போறேனே” நக்கல் நகையுடன் கூறியபடி ஜன்னலைத் திறக்க முயல,

“எடி… வெளில போடாத… கொல்லும் ஞான்” அர்ஜித் கோபமாகக் கூறியதில், நான் போடுவேன் எனும்போதே ஜன்னல் கதவை லாக் செய்தான்.

“டேய் அன்லாக் பண்ணு”

“புறத்து போட்டா(வெளில போட்டா) வெளுத்துக் களையும். வெக்கடீ அதை…”

“முடியாது நீ ஜன்னலை அன்லாக் பண்ணலைன்னா டோரை திறப்பேன்…” என மிரட்டினாள்.

அந்நேரம் உணவகமும் வந்திருக்க, காரை ஓரமாக நிறுத்தியவன், “நீ போடா” என்று கண்ணை காட்டியதில் பிரணீத் அந்த சரக்கு பாட்டில்களை பரிதாபமாகப் பார்த்து சென்றான்.

காரை விட்டு இறங்கி கதவை அறைந்து அடைத்து விட்டு பின்னால் வந்து அமர்ந்த அர்ஜித், “தாடீ அதை…” என ஒரு விரலை நீட்டி கேட்டான்.

“முடியாது!”

“ப்ச் தாடீ” அவளிடம் இருந்து பிடுங்க முயல, அவள் கதவைத் திறக்க முயன்றதில், அர்ஜித் அவளின் மீதே ஏறி அமர்ந்தான்.

“டேய் என்ன பண்ற?” அவள் மிரண்டு விழிக்க, “இன்னைக்கு பிரணீக்கு பர்த்டே. பார்ட்டி செய்யான் தான் இது. ஒழுங்ஙாயி தா… அவன் சோதிச்சதினால (கேட்டதுனால) தான் காஸ்ட்லியாயி வாங்ஙியது…” எனப் பிடுங்கினான்.

“நீ முதல்ல எந்திரி…” காலை இரண்டு பக்கம் போட்டு அவன் அமர்ந்த விதம் அவளுள் பலவித உணர்வுகளை கொடுத்துச் சென்றது.

“என் செல்லப் பொண்டாட்டி அல்லோ… கொடுத்துடேடீ!” என்று கொஞ்சும் குரலில் அவள் கன்னம் வருடி கழுத்தின் வழியே விரல்களை பயணிக்க வைக்க, திக்பிரம்மை பிடித்தது போல அமர்ந்திருந்தாள் அவள்.

அந்த நிலையைப் பயன்படுத்தி கவரைப் பிடுங்கி முன் இருக்கையில் போட்டவன், “எந்தடீ ஓவரா செய்யான்னு… பிச்சக்காசு போட்டான்னு பறஞ்ச ஈ லிப்ஸை எந்தா செய்யாம்?(என்ன செய்யலாம்)” என்று இரு விரலால் இதழ்களை இறுக்கிப் பிடித்தவன், தண்டனை கொடுக்க விழைய அவனைப் பிடித்து தள்ளியவள்,

“குடிச்சா ஒரு வாரத்துக்கு என் பக்கத்துலயே வரக்கூடாது” என்றாள் சீறலாக.

“ப்ச்!” அவன் உச்சுக் கொட்டினான்.

“நீ அப்படி தான பணத்தை தூக்கி எறிஞ்ச. உன் ட்ரைவர் தான் ராங் ரூட்ல வந்தான். நான் மட்டும் காரை திருப்பலைன்னா நேருக்கு நேரா வந்து மோதிருப்பான். எப்பவும் எதையும் மேலோட்டமாக பார்த்து முடிவு பண்ணாதீங்க மிஸ்டர் மலையாளி…” அழுத்தம் திருத்தமாக கோபத்தைப் பொழிய, அர்ஜித் அகனின் புருவ மத்தியில் சிறு முடிச்சு.

“ம்ம்! அதினாலா நீ செய்ததினு எல்லாம் தண்டன தராம விடும்னு கருதல்லே காந்தாரி!” என்றவன் அவள் காதோரம் சொருகி இருந்த கூந்தலை ஆழ்ந்து சுவாசிக்க, “நகருடா…” என நெஞ்சில் கை வைத்து தள்ளினாள்.

“குடிச்சுட்டு வந்து நின்டெ மேல பாய மாட்டேன்டி. ஞான் ரிசார்ட்டினே தான் போகுன்னு!” அவள் அண்மையில் கொஞ்சம் நெஞ்சம் கிறங்கி இருந்தது.

“ஓ! அங்க போய் எவளோட கூத்தடிக்க போற” என சீறியதும் மயக்கம் தெளிந்து முறைத்தான்.

“நான் சொன்ன ரூல்ஸ் உனக்கு ஞாபகம் இருக்குல்ல. இல்ல ஞாபகப்படுத்தணுமா?”

“அதே… ஞாபகப்படுத்து!” என்றவன் இன்னும் நிலையை மாற்றாது அவளை அதிகம் நெருங்கினான்.

“ஹான்… எப்ப… எப்படி? போடா…”

“நீ குடுக்க வேண்டியதை குடுத்தா, ஞான் ரிசார்ட்டினே போகல்லே(ரிஸார்ட்டுக்குப் போகல)”

“இல்லன்னா போய்டுவியா?” பல்லைக்கடித்தாள்.

“கூத்தடிக்க போறதா சொன்னது நீ. ஞான் அல்ல” கண்ணைச் சுருக்கியவனின் தோரணை கிலி பிடிக்க வைக்க,

“ஞாபகப்படுத்துன்னு பறஞ்சதல்லோ” இப்போது அவன் விழிகள் சினத்தில் சிவந்திருந்தது.

“இப்… இப்ப எப்படி?” தானாய் இதழ்கள் உளற,

“கிஸ் மீ!” என்றான் கடுமையாக.

“எதே?”

“ஞான் போகாம்பாடில்லை (போகக்கூடாதுல) அல்லோ… தென் கிஸ் மீ!”

“ஓவரா பண்ற அகன்…”

அவளது குற்றச்சாட்டை கண்டுகொள்ளாதவன், அழுத்தமாக அமர்ந்திருக்க அவளுக்கு கால் வேறு வலித்தது.

“ஐயோ தள்ளு!” அவள் பிடித்து தள்ளவும் இயலவில்லை.

அவன் அசையாது அவளையே உறுத்து விழித்ததில் நொந்து போனவள், “கிஸ் குடுத்தா போக மாட்டியா?” எனக் கேட்டாள் மெலிதாக.

அவள் தவிப்பு புரிந்தாலும், அதை விட கோபம் அவனை ஆக்கிரமித்திருக்க, மறுப்பாக தலையாட்டினான்.

இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டவள், அவன் சட்டையைப் பற்றிக்கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டு விலக, “நாட் பேட்! பட் முத்தம் இங்ஙனெ தரணம்!” என அவள் இதழ்களை விழுங்கி முத்தப் பாடம் நடத்தி விட்டே விலகினான்.

வெட்கத்தில் விட கோபத்தில் சிவந்தது அவள் முகம்!

அவனைப் பாராது விழிகளை திருப்பிக்கொண்டவள் மௌனத்தை கடைபிடித்ததில், மெல்லத் தணிந்தவன் அவள் முகம் திருப்பி,

“ஞான் ஜஸ்ட் டிரிங்க் செய்யான் தான் ரிசார்ட் போவான்னு பறஞ்சது… நீயா ஒன்னும் கற்பிச்சுக்கண்டா!(கற்பனை பண்ணாத)”என்றான் சற்று மென்மையாகவே.

“ம்ம்!” அவனது அழுத்தத்தை விடவும் இம்மென்மை அவளை என்னவோ செய்தது.

நெஞ்சை அடைத்து தேவையற்று கண் கலங்க எத்தனிக்க திகைத்தாள்.

மாதவிடாய் காலத்தின் ‘ஹார்மோனல் ஸ்ட்ரெஸ்’ என்றே மனதை நிலைப்படுத்திக்கொண்டவள், அப்போதும் அவனைப் பாராது இருக்க,

“மொழி!” என்றான் வார்த்தைக்கும் வலிக்கும்படி.

“எப்பவும் எதையும் மேலோட்டமா கண்டு முடிவு பண்ணாதடி!” அவள் சொன்ன வசனத்தை அவளுக்கே திருப்பிக் கொடுத்தான். அவனது கட்டை விரல் சிவந்திருந்த இதழ்களை வருடியது.

அவள் அப்போதும் இறுக்கமாக அமர்ந்திருக்க, “சரியி… ஞான் டிரிங்க் செய்யல்ல… மதி(போதுமா)?” இன்னும் கொஞ்சம் மனம் இறங்கினான்.

“அப்போ அதை தூக்கி போடு!”

“ஏய்… அது பிரணீக்காயி வாங்கியதுன்னு பறஞ்ஞதாணல்லோ!அவன் இன்னும் சிங்கிள் தானே… அவனெங்கிலும் சந்தோஷமாயி இருக்கட்டும்டி!” என்றதில் நிமிர்ந்து சீறும் பார்வை பார்த்தாள்.

ஆடவனின் இதழ்கள் குறும்பாக நகைத்ததை கண்டபிறகே கேலி செய்திருக்கிறான் எனப் புரிய, பார்வையைத் திருப்பியவள், “பிரெண்டை குடிக்க வச்சு வேடிக்கை பாக்குறது எல்லாம் நல்ல ப்ரெண்ட்ஷிப்கு அழகு இல்ல. இது நல்ல ப்ரெண்ட்ஷிப் இல்லைன்னா தாராளமா அதை குடுத்துடு!” என்றாள் கண்டிப்பாக.

“நீ ஏதோ எங்களை குடிகாரன் ரேஞ்சுக்கு நோக்கல்லேடி… அப்பப்போ மாத்ரமே!””

அவனது கூற்றை காதில் வாங்காதது போன்று கழுத்தை ஜன்னல் புறம் திருப்பிக்கொள்ள “இம்சை…” என முனகியவன், அந்தக் கவரை தூக்கி கீழே போட, பாட்டில்கள் சுக்கு நூறாக உடைந்தது.

‘என்ன இதுங்களை இன்னும் காணோம்’ என்ற எண்ணத்தில் வெளியில் வந்த பிரணீத் இருவரும் காரில் முத்தக்காட்சி நிகழ்த்துவதை உணர்ந்து ‘அடப்பாவி’ என வாயில் கை வைத்தான்.

‘எங்களுக்கு இடைஞ்சலா இவள் வர்றான்னு நினைச்சோம். ஆனா இவங்களுக்கு இடைஞ்சலா தான் நான் வந்துருக்கேனா…’ என நெஞ்சில் கை வைக்கும்போதே, அர்ஜித் மடமடவென இறங்கி வந்து மதுபாட்டிலை உடைத்ததில் அவனது இதயமும் சுக்கு நூறானது.

“டேய் அதை ஏன்டா உடைச்ச?”

“அதை அவளோட சோதிச்சுக்கோ” கடுப்புடன் உணவகத்தினுள் சென்றான்.

அவன் பாட்டில்களை உடைத்தே விட்டதில் மனதில் வீற்றிருந்த அழுத்தங்கள் கரைந்தே விட, “சிஸ்டர்” என்று சண்டை போடுவது போல அவளிடம் வந்த ப்ரணீத்திடம் திரும்பியவள், “என்ன?” என ஏகத்தாளமாகக் கேட்டதில், “உனக்கு பரோட்டா வேணுமான்னு கேட்க வந்தேன் சிஸ்டர்” என்று அசடு வழிந்தான்.

“வாங்க சேர்ந்தே ஆர்டர் பண்ணலாம்…” என அவனை உள்ளே இழுத்துச் சென்றாள்.

அவளோ மடமடவென ஹோட்டலில் இருக்கும் பாதி உணவு வகைகளை அலைபேசியை பார்த்தபடி ஆர்டர் செய்ய, “என்னமா… இங்க சாப்பாடு வாங்கி வெளில பிளாக்ல விக்க போறியா?” என்றான் பிரணீத்.

“ம்ம்ம்!!!” அவனை மூக்கு விடைக்க முறைத்தவள், “இதெல்லாம் பார்சல்” என்றிட,

“யாருக்கு பார்சல் வாங்குன்னே?” எனக் குழம்பினான் அர்ஜித்.

“நம்ம வீட்டுக்கு தான்” அவள் தோளைக் குலுக்கியதில், “ஹே அவிட யாரும் இவ்ளோலாம் சாப்பிட மாட்டாங்க… நைட்டு லைட் புட் மாத்ரம் தான்…” என்றான்.

“இல்லையே… யார் யாருக்கு என்ன வேணும்னு ஒரு லிஸ்ட் எனக்கு அனுப்பி இருக்காங்களே” என்று அலைபேசியைக் காட்ட, அவனுக்கு முன் பிரணீத் வாங்கினான்.

“அவ்வ்வா… செஷ்வாங் பிரைட் ரைஸ் யாருக்கு… அன்விக்கா?”

“ம்ம் ஆமா”

“சேட்டா அந்த சிட்டுக்கு சேட்டையை பார்த்தியா. வயிறு முழுக்க அல்சர் அதுக்கு” என வாயில் கை வைத்தான்.

“ஈ பீப் கறி யாருக்கு?” அர்ஜித் புருவம் உயர்த்தி கேட்க,

“அது தாத்தாக்காம்” என்றதும், “அவருக்கு சரீரம் முழுதும் பிபி… இதுல பீப் கறியாம்…” என்று முறைத்தான்.

“ஆமா சிட்டுட்ட நானும் ஹோட்டல் போறப்ப எல்லாம் பரோட்டா வேணுமான்னு கேட்பேன். எப்ப கேட்டாலும் வேணாம்னு தான சொல்லுவா.” ப்ரணீ அங்கலாய்க்க,

அவனிடம் இருந்து அலைபேசியை பிடுங்கியவள், “நீங்க கேட்டது பார்மாலிட்டிக்கு…” என்றதில்,

“நீ மட்டும் என்ன, தங்கத் தட்டுல வெத்தலை பாக்கு வச்சு கேட்டியா?” என நக்கலடித்தான்.

“ப்ச், நான் எல்லாருக்கும் என்ன பிடிக்கும்னு கேட்டேன். அத்தை இன்னும் டின்னர் செய்ய ஸ்டார்ட் பண்ணல. சோ நானே எல்லாரும் வாங்கிட்டு வரேன்னு சொன்னேன். அத்தையும் சரின்னு சொன்னாங்க… நீங்க ஒழுங்கா கேட்ருக்கனும்” என்று நொடித்தாள்.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். முத்தச்சனுக்கு நைட்டு ஹெவி புட் எல்லாம் செட்டாகில்லா… இதெல்லாம் கேன்சல் செய்யடி!”” என்று அர்ஜித் கண்டிப்பாக கூற,

“ஹே அகன், ஆசையா கேட்டுருக்காங்கள்ல டிசப்பாய்ண்ட் பண்ணாத” என அதட்டினாள்.

“ஏய் இதெல்லாம் அவர்க்கு செட்டாகில்லா மொழி.”

“ஒரு நாள் ஒரு வேளை கொஞ்சமா சாப்புடுறனால ஒன்னும் ஆகாது அகன். ப்ளீஸ்” என மூக்கை சுருக்கிட,

“ஒரு ஃப்ரைட் ரைஸ்காக மொத்த குடும்பமும் என்னே நின்னோடே அடமானம் வெச்சடி…” என ஸ்பூனை எடுத்து அவள் கையில் தட்ட, அவளும் “இங்க மட்டும் என்னவாம்… ஒரு கிளாம்பிங்காக தான் என்னையே உங்கிட்ட அடமானம் வச்சுருக்கேன்…” என சிலுப்பிக் கொள்ள, அர்ஜித் அகனின் முகம் இறுகிப்போனது.

அந்நேரம் அவளுக்கு அலைபேசி அழைப்பு வர, வசந்தி தான் அழைத்திருந்தார்.

அவனது கோபத்தை கண்டு களித்தபடி வெளியில் சென்றவள் “சொல்லுங்கம்மா… சாப்டீங்களா?” எனக் கேட்க, “சாப்டாச்சு அகா… இன்னைக்கு வேலைக்கு ஒரு ஆள் வந்தாங்க” என இழுத்தார்.

“நான் யாரையும் அனுப்பலையே” அவள் குழம்பினாள்.

“இல்ல மாப்பிள்ளை அனுப்புனதா சொன்னாங்க…” என்றதும் அகமொழி பேச மறந்து நின்றாள்.

“ஓ… சரி!”

“ஆனா, உன் அப்பா அவங்களையும் வேணாம்னு அனுப்பிட்டாரு…” என்றதும் வந்ததே கோபம் அவளுக்கு.

“அவர் பக்கத்துல இருக்காரா?”

“ம்ம்”

“போனை லவுட் ஸ்பீக்கர்ல போடுங்க” உட்சபட்ச கோபத்தில் கூறியதில்,

“அகா வேணாமே” வசந்தி மறுத்திட, “இப்ப போடா போறீங்களா இல்லையா?” என அடிக்குரலில் உறுமினாள்.

வசந்தி இத்தகைய கோபத்தை மகளிடம் கண்டதில்லை ஆதலால் பதறி லவுட் ஸ்பீக்கரை போட்டு விட,

“இதோ பாருங்க… உங்களுக்கு கோபம் என் மேலன்னா தாராளமா கோபப்பட்டுக்கோங்க. நாலு அடி கூட அடிங்க. ஆனா அவரை அவமானப்படுத்துற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க. நான் ஆள் அனுப்பி வேணாம்னு சொன்னீங்க ஓகே… ஆனா அதையே அவருக்கும் பண்ணுனா, வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு இதான் நீங்க குடுக்குற மரியாதையா?” எனப் பொங்கி விட பாஸ்கரே பதறி விட்டார்.

“இல்ல இல்ல மரியாதை குடுக்க கூடாதுன்னு பண்ணல…” பாஸ்கர் தடுமாறியதில்,

“ம்மா… அவர் வேலைக்கு ஆள் அனுப்பி இருக்காரு. அதை மறுத்து அனுப்புறது மரியாதை குறைச்சலா உங்களுக்கு கூட தெரியலையா? வேலைக்கு வந்தவங்க அவரை என்ன நினைப்பாங்க…” எனக் கத்தி விட்டதில்,

“அகா அகா… அவங்க நம்பர் குடுத்துட்டு தான் போனாங்க. நான் நாளைக்கே பேசி வர சொல்றேன். ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இரு…” என்று வசந்தி தவித்தார்.

“அதை செய்ங்க முதல்ல!” என இன்னுமாக கோபத்தைக் கொட்டி விட்டு அலைபேசியைத் துண்டித்தவளுக்கு திடீரென மதம் பிடித்த நிலை தான்.

அகன் அவர்கள் நலத்திற்காக ஒரு விஷயத்தை செய்ய வந்து அவர்கள் தடுத்து விட்டார்களாம். அவமதித்து விட்டார்களாம். இரத்தமே கொதித்தது அவளுக்கு.

அவனது தமையனிடம் அவன் தன்னை விட்டுக் கொடுக்கவில்லை. அதே போல அவனையும் தான் விட்டுக் கொடுக்கக் கூடாது… மூளை எளிமையாக ஒரு அர்த்தத்தைக் கற்பித்துக் கொண்டது. ஆனால், மனம் மட்டும் ஏன் இத்தகைய கோபத்தில் கொந்தளிக்கிறதாம்?

அகமொழி பேசி விட்டுச் சென்ற வாக்கியத்தில் அர்ஜித் அகனுக்கு சுறுசுறுவென கோபம் தலைக்கேறியது.

அலைபேசியுடன் வெளியில் சென்றவளின் மீது கொலைவெறியுடன் தான் அவள் பின்னே வந்தான் அர்ஜித்.

ஆனால் அவளது பெற்றோரிடம் தனது மரியாதைக்காக சண்டையிட்டதில் அவனிடம் சிறு அதிர்வு! சின்னச் சின்ன அதிர்வுகளெல்லாம் ஒன்று திரண்டு மன அதிர்வுகளை எப்போது காட்டிக்கொடுக்குமோ?

அகன் வசமாவாள்!
மேகா

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 74

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
55
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ரெண்டு பேரும் மற்றவரிடம் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்காம, தங்களுக்குள் ஒருவருக்காக மற்றவர் இறங்கி போவது…so cute 🥰🥰…romance வர வர கூடிட்டே போகுது 💙💚💖💕💞

  2. இரண்டு பேரும் காதல் உணர்வை எப்போது புரிய.