Loading

ஏ. எம். உயர்தர ஹால். பிரம்மாண்டமான அந்த மண்டபத்தினுள் அர்ஜித் அகன் நுழையும் போதே, சுஜாதாவும் கல்யாணியும் அவனை ஆரத்தியுடன் நிறுத்தி விட்டனர்.

அவனது நெருங்கிய சொந்த பந்தங்களே அந்த மண்டபம் முழுக்க வியாபித்திருக்க, “எங்கேஜ்மென்டினே ஊரைக் கூட்டியோ அம்மே?” எனக் கிண்டல் செய்தான்.

அனைவரிடமும் புன்னகையுடன் சிறு தலையசைப்பைக் கொடுத்து விட்டு அவனுக்கு ஒதுக்கி இருந்த அறைக்குச் செல்ல, அங்கு அமையா கட்டிலில் அமர்ந்து தீவிரமாக ஏதோ செய்து கொண்டிருந்தாள்.

“என்டே மோளு எந்தா அதிசயமாயிட்டு மிண்டாதே இரிக்கனது!” கேட்டபடி அவளருகில் அமர,

“ஸ்டிக்கர்…” எனத் தூக்கிக் காட்டினாள்.

ஸ்டிக்கர் புத்தகத்தில் மிருகங்கள் மற்றும் பறவைகளின் உருவத்திற்கு ஏற்ப சரியான ஸ்டிக்கரைத் தேடிக் கண்டறிந்து ஒட்டிக் கொண்டிருந்தாள்.
வெளியில் பிரணீத்தை அனகா பிடித்து விட, சுஜாதா தான்

“அன்வி, அர்ஜிக்கு காபி வேணோந்து சோதிச்சு கொடுத்துட்டு வா… அவனு வாங்கிய ட்ரெஸ் எவிடெ வச்சது?” எனத் தேடிட,

“முத்தச்சன் தானே எடுத்துட்டு வந்தது அம்மே…” என்றதும்

“செரி ஞான் வாங்கிட்டு வராம்…” என மாமனாரைத் தேடிச் செல்ல, அன்விதா அர்ஜித் அகனின் அறைக்குச் சென்றாள் காபியுடன்.

“எந்தா ஏடத்தி… எப்பளும் டாய்ஸ் அல்லே வாங்கிக் கொடுக்குகா, அதையும் உடனே உடைச்சுடுவாளே…”

காபியை வாங்கியபடி அவளிடம் வினவ,

“அன்னைக்கு நகைக்கடைல பார்த்தோமே அகமொழி, அவங்க தான் சொன்னாங்க. அவளை பிசியா வச்சுக்குற மாதிரி ஆக்டிவிட்டி வாங்கிக் குடுத்தா கான்செண்ட்ரேஷன் பண்ணுவான்னு. எனக்கு லிங்க் கூட அனுப்பி இருந்தாங்க. அதான் வாங்குனேன்.”

‘எப்போது அலைபேசி எண்ணை எல்லாம் மாற்றிக் கொண்டனர்’ என விழி உயர்த்தினாலும், அதனைக் காதில் வாங்காதவாறு காபியில் கவனமானான்.

“விஷ்ணு எப்போ வரும்?”

“இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடறதா சொன்னாங்க…”

“ம்ம்…”

அன்விதா இன்னும் நகராமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்க அவளை நிமிர்ந்து பார்த்தவன், “ஞான் நோக்கிக் கொள்ளாம் இவளை…” என்றிட,

“அது வந்து…” எனத் தயங்கினாள்.

“எதுவும் பரயனுமா ஏடத்தி?”

“அது அர்ஜி… அமையாவை ஸ்பீச் தெரபி கூட்டிட்டுப் போகச் சொல்லி, ஸ்கூல்ல சஜஸ்ட் பண்றாங்க.” அவள் தயக்கத்துடன் ஆரம்பிக்க,

“செரி கூட்டிட்டுப் போகாம். அதினு எந்தா?” எனப் புருவம் சுருக்கினான்.

“அது இல்ல. விஷ்ணுகிட்ட இதைப் பத்தி ஏற்கெனவே சொன்னேன். அவர் வேணாம்னு சொன்னாரு. ஆனாலும் ஸ்பீச் தெரபி கூட்டிட்டுப் போனா நல்லதுன்னு தோணுது. நீங்க சொன்னா அவர் கேட்பாரு. அதான்…”

“இத்தரே உள்ளூ… நிங்கள் எந்தினு அவன்டடுத்து சோதிச்சிட்டு இரிக்கனது. கூட்டிப் போயிட்டு வரால்லோ… என்டடுத்து பரஞ்சிருந்தா ஞானே கூட்டிட்டுப் போயிரிக்கும்…” இன்னும் புரியாமல் கேட்டான்.

“இல்ல, அவர் வேணாம்னு சொல்லும்போது எப்படி வம்படியா கூட்டிட்டுப் போறதுன்னு தான்… “

“எந்தாலும், அவன் பரயனதை நிங்கள் இத்தர சீரியஸாய் கேட்க வேண்டியது இல்லா!” எனக் கேலி செய்தவன், விஷ்ணுவிடம் பேசுவதாகக் கூறியதில் அவளும் முகம் மலர்ந்து வெளியில் சென்றாள்.

அவள் சென்ற திசையைக் குழப்பமாகப் பார்த்த அர்ஜித் அகனுக்குச் சிறு வியப்பும்.

இதுவரை, அவள் இப்படித் தன்னிடம் வந்து எதுவும் கேட்டதில்லையே!

‘இப்போதும் மகளுக்காக மட்டுமே வந்து நிற்கிறாள்’ என்பதை முழுதாய் உணர்ந்து கொள்ளாதவன், அமையாவுடன் மூழ்கிப் போனான்.

சுஜாதா உடை கொண்டு வந்து கொடுத்ததும், “அமையாவைக் கண்டோ, எத்தர சமத்துக் குட்டியா இருக்கான்னு. இதை வச்சே சோறும் கொடுத்தாச்சு. அல்லெங்கில் நின்டெ ஏடத்தி அங்கேயும் இங்கயும் ஓடி ஓடிக் கொடுத்திட்டு இரிக்கும்… நல்ல பெண்குட்டி!” என்றதும்,

“மின்டாதே இரிந்தா மட்டும் நல்ல குட்டியோ?” அர்ஜித் போலியாய் முறைக்க,

“அட, ஞான் அமையாவைப் பரஞ்சில்லா… ஆ அகமொழியைப் பரஞ்சதா. அவள் தன்னே இங்கனே ஐடியா கொடுத்தது.” என்று விட்டுச் செல்ல,

“அதுசரி!” எனத் தோளைக் குலுக்கிக் கொண்டான்.

இங்கு அனகா, “இதே போல நினக்கு எப்போ டார்லிங் மாப்பிள்ளை வேஷம் போடனது?” எனச் சீண்டினாள்.

“ம்ம், எனக்கு இந்த வேஷமே போதும்மா… நீ ஒழுங்கா போயிடு. யாரும் கேட்டா ஏதாவது நினைப்பாங்க. நானே உன் சேட்டன் செஞ்ச காரியத்துல படபடத்துப் போயிருக்கேன்.” என நெஞ்சில் கை வைக்க, “எந்து செய்தான்?” எனக் குழம்பினாள்.

“அதெல்லாம் சொல்லறதுக்கு இல்ல. நீ போ!”

“ப்ச், ஞானும் ஒரு சவுத் இந்தியன் பட்டுப் புடவையைக் கட்டிட்டு வலம் வராமெந்து பிளான் பண்றேன், ஒந்தும் நடக்குனில்லால்லோ” எனப் பெருமூச்சு விட்டுச் செல்ல, “இவளை… குட்டிச்சாத்தான்!” என்று பல்லைக் கடித்தான் பிரணீத்.

“என்னடா, தனியா புலம்பிட்டு இருக்க?” அவனுக்கு காபியை நீட்டியபடி அன்விதா கேட்க,

“உன் நாத்தனாரு இம்சை தான் பெரிய இம்சையா இருக்கு.” என்றதில், அவள் முறுவலித்தாள்.

“நீ கல்யாணம் வரைக்கும் இங்க தான ப்ரணீ?” அவள் கேட்டதில்,

“உடனேவா கல்யாணம்?” எனக் கேட்டான்.

“ஆமா, சொந்தக்காரங்க எல்லாம் வந்ததோட கல்யாணமும் பண்ணிடலாம்னு பேசிக்கிறாங்க ப்ரணீ… அம்மா, அப்பா வரலையா?”

“அவங்களுக்கு அலையுறது கஷ்டம் சிட்டு… மேரேஜ்க்கு வரேன்னு சொன்னாங்க. நீயும் அண்ணாவும் தான் விருந்துக்கு வரேன், வரேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டீங்க.” எனக் குறைபட்டான்.

“எங்க… அமையா வந்தப்புறம் எங்கயும் நகர முடியல.”

“ம்ம், ஆமா… பிறக்குறதுக்கு முன்னாடியே அமையா செம்ம பாஸ்ட் தான்.” அவள் உடனடியாகக் கருவுற்றதைக் கிண்டல் செய்ததில், “டேய்… ச்சை!” என அசடு வழிந்து அவனை அடித்தாள்.

அந்நேரம் விஷ்ணுவும் அங்கு கைப்பையுடன் வந்து விட, அவனைக் கண்டதும் “ஹாய் அண்ணா…” எனச் சம்பிரதாயமாகக் கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

விஷ்ணுவின் முகம் தான் கடுமையாக இருந்தது.

“நின்டெ ப்ரெண்ட்ஷிப்பை இங்கனே நடு ஹால்ல நிந்து தன்னே காட்டனோ?” வெறுப்பைத் தேக்கிக் கேட்டவனைக் கண்டு திகைத்தவள்,

“அதில்ல விஷ்ணு…” எனப் பதறினாள்.

“நினக்கு ஞான் மாத்திரம் தன்னே இளிச்சவாயன்!” என்று எரிந்து விழுந்து விட்டே உள்ளே சென்றான்.

ஏனோ கண்ணில் நீர் நிறைய விருப்பமற்று, இறுகியே இருந்தது அன்விதாவிற்கு.

“சேட்டா…” தமையனைக் கண்டதும் ஓடி வந்து பிடித்துக் கொண்ட அனகாவைக் கண்டு புன்னகைத்த விஷ்ணு, “ஞான் இல்லாதே ஜாலியாய் இருந்தோ அனு…” என்றான் கிண்டலாக.

“ஓ! ஃபுல்ல் ஜாலி…” அவள் சிரிப்பை அடக்கி வார, “குறும்பி!” என்று அவள் தலையில் கொட்டியவன் “கல்யாணச் செருக்கனைக் காணான் போகாம் வா…” என்று தம்பியின் அறைக்குச் சென்றான்.

அங்கோ விஷ்ணுவைக் கண்டதும் அர்ஜித் தடுமாற, விஷ்ணு அவனை முறைத்து வைத்தான்.

வீடியோ விஷயத்தில் அவன் மீது கடுங்கோபம் விஷ்ணுவிற்கு.

வீட்டில் தெரியக் கூடாதென்று அர்ஜித் வருந்திக் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே அமைதி காக்கிறான்.

——–

குடும்பமே அகமொழியைத் தீயாக முறைத்தபடி நின்றது.

அவளோ அசையாது அனைத்தையும் வாங்கிக் கொள்ள, “எனக்கு என்னவோ வந்ததுல இருந்தே இங்க சம்பந்தம் பண்ண ஒப்பல ராகவா… கிளம்பலாம்.” என்று ரேவதி முற்றும் முடிவாகக் கூறி விட, ரிஷான் அவளைக் காணாமல் இறுகியே இருந்தான்.

“என்னைப் பிடிக்கலைன்னா அன்னைக்கே சொல்லிருக்கலாம்!” அவனிடம் வந்த வலி நிறைந்த வார்த்தையில்,

அகமொழி தான், “ரிஷு… நீ என்னை இப்போ நம்பியே ஆகணும்னுலாம் நான் எதிர்பார்க்க மாட்டேன். சிச்சுவேஷன் ஹேப்பண்ஸ்! இதே நிலைமைல நீ இருந்தாலும் நானும் உன்மேல கோபப்பட்டிருப்பேன். பட் நான் உன்கூடத் தனியா பேசணும். இந்த பியான்ஸ் ரிலேஷன்ஷிப்காக இல்ல. நீ என் பெஸ்ட் ப்ரெண்ட், ஒரு ப்ரெண்டா நான் உங்கிட்டப் பேசியே ஆகணும். அதுக்கு மேல நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு ஓகே தான். நீ எந்த முடிவு எடுத்தாலும் நான் தப்பா நினைக்க மாட்டேன்.” என்றாள் தெளிவாக.

ராகவனோ, “இப்படிப் பேசிப் பேசித் தான அவனைக் கைக்குள்ள போட்டு வச்சுருக்க.” என்றதில் அவள் நிமிர்ந்து காட்டத்துடன் பார்த்தாள்.

“உங்க பையன் ஒன்னும் விரல் சூப்புற குழந்தை இல்லைல?”

அவள் எதிர்த்துப் பேசியது அவரை அதிகம் கோபப்படுத்தியது.

“நீயும் குழந்தை இல்லைனு நல்லாவே நிரூபிச்சுட்ட.”

“நான் குழந்தைன்னு எப்போ சொன்னேன்?” அவள் தோளைக் குலுக்கி விட்டு, “ரிஷு பேசணும்.” என்றாள் அழுத்தமாக.

ராகவனோ, ”இனி இவள் பின்னாடி நீ போன, எங்களை மறந்துட வேண்டியது தான். வா…” என அவன் கையைப் பிடித்து இழுத்துச் செல்ல, அவனோ இருபுறமும் பேச இயலாது தவித்தான்.

இப்போது இங்கு நிச்சயதார்த்தம் நடக்காது என்பதே அவனுக்குப் பெரும் அடி. அப்போதும், ‘அவன் தவறாகவே நினைத்தாலும் விளக்கம் கேட்டு விட்டுப் புரிந்து கொண்டு நிச்சயத்தை நடத்த விரும்புவதும் அவனது விருப்பம்’ என்று விட்டாள்.

ஆனால், அவனால் ராகவனை மீறி எதையும் செய்ய இயலவில்லை என்பதே நிதர்சனம்.

மாதவியோ, “என்ன சொல்லணுமோ இங்கயே சொல்லு. அதான் மானம் தெரு வரை வந்துடுச்சுல.” என எரிச்சலடைய,

“எல்லார்கிட்டயும் நான் இந்த விஷயத்துல விளக்கம் சொல்லத் தேவை இல்ல. பதில் உருவாக்கி வச்சுட்டுக் கேள்வி கேட்கத் தோணாம தண்டனை குடுக்குறவங்களுக்கு நான் பதில் சொல்லவும் போறது இல்ல.” என்று பாஸ்கரைப் பாராமல் கூற, அவருக்கு அது கோபத்தையே கிளறியது.

வசந்தி தான் சற்றே நிதானித்து, “இப்படிப் பேசுனா எப்படி அகா…” என்றார்.

அவளுக்கோ அந்த அகனின் முன்பு தந்தை அறைந்ததை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. என்ன கோபமிருப்பினும், தான் தவறே செய்திருந்தாலும் அவன் சென்ற பிறகல்லவா தண்டித்திருக்க வேண்டும்!

“எனக்கு விளக்கம் சொல்ல வேண்டிய கடமை அவனுக்கு மட்டும் தான். அவன் கேட்டா கேட்கட்டும். இல்லைன்னா தட்ஸ் இட்…” என்று விட, ரிஷான் குழம்பி நின்றான்.

ஆனால் வீட்டினர் அவனை வலுக்கட்டாயமாக அதட்டி இழுத்துச் செல்ல, அவன் அவளைப் பாராது கிளம்பியே விட்டதில் அவளுக்கும் பெரு வலி.

ஏமாற்றம் நெஞ்சை அடைத்திட, தாய் தந்தையை நிமிர்ந்து பாராது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு தனது அகவனா ஸ்டேக்குச் சென்று விட்டாள்.

மலை உச்சியின் விளிம்பில் நின்றவளுக்குக் கண்ணில் நீர் நிரம்பி நின்றது.

தனது அன்பு ஒரு இடத்தில் நிராகரிக்கப்படுவதும், அவமானப் படுத்தப்படுவதும் சாதாரணம் இல்லையே!

நேரம் செல்லச் செல்ல அவளது தேம்பல்கள் அதிகமானது.

அலைபேசியை எடுத்தவள், “ரிஷு… நீ என் பக்க நியாயத்தைக் கேட்கவே மாட்டியா?” என வாட்சப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப அந்தோ பரிதாபம் அது அவனைச் சென்றடையவே இல்லை.

தன்னை பிளாக் செய்து வைத்திருக்கிறான் என்ற உண்மை புரிய, மீண்டும் ஓ வென அழ ஆரம்பித்து விட்டாள்.

அவன் தன்னிடம் ப்ரொபோஸ் செய்த நொடிகள் ஓர் முறை மனத்தில் நினைவாக வந்து சென்றது.

ரூஹியின் தந்தையைப் பார்ப்பதற்காக மூவருமே ஊட்டிக்குச் சென்றிருந்தனர்.

அங்கு ஊரைச் சுற்றி விட்டு ஒரு உணவகத்தில் அமர்ந்திருக்கும் போது தான், சடாரென ஒரு பொக்கேவை நீட்டி அவள் முன்னே முட்டியிட்டு அமர்ந்து, “ஐ லவ் யூ அகா!” எனக் காதலை உரைத்தான் ரிஷான்.

அவனைத் திகிலாகப் பார்த்தவள், பொக்கேவை வாங்கித் திருப்பித் திருப்பிப் பார்த்து விட்டு, “என்ன கருமம்டா இது?” எனக் கேட்க அவன் முறைத்தான்.

“ப்ரோபோசல்டி…”

“என்ன திடீர்னு?”

“வீட்ல என் கல்யாணத்தைப் பத்திப் பேசுனாங்க. ஆனா மேரேஜ்னு சொன்னதும் உன் ஞாபகம் தான் எனக்கு வந்துச்சு. சடனா லவ்வும்…” என்று வெட்கம் கொண்டு பேசியவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தாள்.

“உனக்குலாம் இப்ப எதுக்குடா கல்யாணம்?”

“ஐ ஆம் அ பிக் பாய் நவ்டி…” என்றவனைக் கண்டு சிரிப்பு வந்தது.

“சரி, இந்த லவ் வந்ததுக்கும், என்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறதுக்கும் நல்ல ரீசன்ஸ் சொல்லு. நான் ஏன் உனக்கு ஓகே சொல்லணும்?”

“நீ ஒரு யூனிக் பீஸ் அகா!” என்றவனை முறைத்தவள், “நான் பீசா?” என்றாள்.

“ஏய் அதில்ல… நம்ம ஒண்ணா பிசினஸ் பண்றோம். பிராஃபிட்டை ஷேர் பண்ணிக்கிற மாதிரி நாம ஏன் லைஃபை ஷேர் பண்ணிக்கக் கூடாது?” அவளோ கன்னத்தில் கை வைத்து கன்டின்யூ என்று சைகை காட்டினாள்.

“நீ ஒரு அழகுப் பதுமை…” என ஆரம்பித்தவனை “டேய்… உண்மையை மட்டும் சொல்லு!” என்றதில்,

“ஹிஹி… கொஞ்சம் சுமாரான பிகரு தான். பட் உன் ஆட்டிட்யூட், உன் கேரக்டர் எல்லாமே அழகு அகா… பொதுவா சொந்தமா சம்பாரிக்கிற பொண்ணுங்களுக்கு, நான் சம்பாரிக்கிறேன் மை லைஃப் மை ரூல்ஸ்ன்ற ஒரு மெண்டாலிட்டி இருக்கும். சம்பிரதாயம், குடும்ப நடைமுறைகள் எல்லாம் சிலருக்கு எரிச்சலாவும் இருக்கும். இதெல்லாம் நான் தப்புச் சொல்ல மாட்டேன். அவங்க இஷ்டம்… பட் நீ மாடர்னா இருப்ப. பிசினஸ்ல புகுந்து விளையாடுவ. வீடுன்னு வந்துட்டா வீட்டு வேலைக்காரியாவே மாறிடுவ…” எனக் குறும்பாய் கூறி அவளிடம் முறைப்பை பரிசாய் வாங்கி விட்டு, “சும்மா லுலுலுவாய்க்கு டி… அப்படி ஹோம்லியா மாறிடுவனு சொல்ல வந்தேன். உனக்குப் பிடிக்கலைன்னா கூட, அங்கிள் ஆண்ட்டியோட நம்பிக்கையை அவங்களோட பழக்க வழக்கங்களை உதாசீனப்படுத்த மாட்ட. அதே மாதிரி தான் எங்ககிட்டயும் நடந்துப்ப…

பெண்ணுரிமை, பெண் அடிமைத்தனம்னு வீட்டு வேலை பார்க்குறதுல கூட சம உரிமை வேணும்னு இந்த ஜெனரேஷன் ஒதுக்கித் தள்ளுற விஷயங்களை எல்லாம் நீ அப்பா, அம்மாவுக்காகப் பொறுப்பெடுத்துப் பார்த்துக்குற… சில நேரம் என் துணியைவே வாஷிங் மெஷின் ஒர்க் ஆகலைனா நீ தான துவைச்சுத் தருவ. நான் ஏன் உனக்குப் பண்ணனும்னு நீ எதையுமே ஒதுக்குனது இல்ல… இதெல்லாம் மேல நீ என்னோட பெஸ்ட் பெஸ்ட் பிரெண்டு. சோ நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன தப்பு?” என்று முடித்து வைத்தான்.

அவன் பேசியதில் சிரித்தவள், “எல்லாம் சரி தான். ஆனா, என்னை நோக்கி என்ன வருதோ அதுக்கான எதிர்வினை தான் என்கிட்ட இருக்கும் ரிஷு… பிசினஸ்னு வரும்போது, நீ என்னை என்னைக்கும் குறைச்சுப் பேசுனது இல்ல. தப்பாவே இருந்தா கூட என்னோட முடிவுல நீ தலையிட்டது இல்ல. என்னையும் ரூஹியையும் நீ ஆப்டர் ஆல் பொண்ணுங்க கூட நான் ஈகுவலா வேலை பார்க்கணுமான்னு ஈகோ பார்த்தது இல்ல. நான் ஆம்பளை, இந்த வேலை மட்டும் தான் பார்ப்பேன்னு இல்லாம, என் வீட்டுக்கு வந்தா குப்பை கூடக் கொட்டிட்டு வருவ… சோ, நானும் உங்கிட்ட அப்படி நடந்துக்குறேன். நீ சில விஷயம் சாக்ரிபைஸ் பண்ணுனா நான் சில விஷயம் சாக்ரிபைஸ் பண்ணுவேன், அவ்ளோ தான்…” என்றாள் எளிதாக.

“அதே சாக்ரிபைஸைக் கல்யாணம் பண்ணியும் பண்ணலாமே அகா…” எனக் கெஞ்சலாகக் கேட்க, அவள் சற்றே தடுமாறினாள்.

“நான் யோசிச்சு சொல்லட்டா?”

“யம்மா என்னால எல்லாம் சஸ்பென்ஸ் தாங்க முடியாது. உடனே சொல்லிடுடி.”

“என்னடா, கடன்காரன் மாறி உடனே கேட்குற?” எனச் சலித்துக் கொண்டாலும் பின் ஒப்புக்கொண்ட நினைவுகள் அவளை அலைக்கழித்தது.

மாலை வேளையைத் தாண்டி இருக்க, அழுகை மெல்ல மட்டுப்பட்டு கோபம் உருவெடுத்தது அவளுக்கு.

மணியைப் பார்த்தாள். ஆறரை.

“ஏ. எம் மஹால்ல சாயந்தரம் ஏழு டு ஏழரை தான் தட்டு மாத்துறோம். முடிஞ்சா கண்டிப்பா வரணும் வசந்திமா…” என சுஜாதா கூறியது நினைவில் வர, முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.

“எவ்ளோ தைரியம் இருந்தா, என் மேல அவ்ளோ பெரிய பழி போடுவ. நீ யாருன்னு காட்டிட்ட. மவனே, நான் யார்னு உனக்குக் காட்ட வேணாம்.” என்றவள் ஸ்கூட்டியில் ஏ. எம் மஹாலை நோக்கிப் படையெடுத்தாள்.

அங்கு மணமேடையில் சஹானா மெலிதான அலங்காரத்தில் மிதக்க, அர்ஜித் அகன் சந்தன நிற ஷர்வானியில் கம்பீரம் பொங்க நின்றிருந்தான்.

இரு வீட்டுப் பெரியவர்களும் எதிர் எதிரில் அமர்ந்திருக்க, ஒரு பக்கம் டிஜே இசை மெல்லமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.

பிரணீத் நண்பனுடன் சில நேரமும், இரவு உணவிற்கான வேலையிலும் வெகு பிசியாக இருந்தவன், சட்டெனப் பேயறைந்தது போல நின்றான்.

அந்த ஏசி அறையின் கதவைத் திறந்து கொண்டு, இன்னும் தனது உடை அலங்காரங்களைக் கூடக் கலைக்காது, முந்தானையைக் கையில் வைத்துச் சுற்றியபடி திமிர் நடையுடன் உள்ளே வந்தாள் அகமொழி.

டிஜேவை ஒரு முறை பார்த்தவள், “ப்ரோ… நல்லா எல்லாரும் எழுந்துருச்சு ஆடுற மாதிரி ராப் சாங்கா போடுங்க.” என்றிட, அவளது அலங்காரம் கண்டு அவளும் உரிமையாளர் போல என்றெண்ணி, அவனும் பாடலைத் தேடினான்.

‘இவ எதுக்கு இங்க வந்துருக்கா?’ என பிரணீத் எச்சிலை விழுங்கிட, இங்கோ சுஜாதா, “அர்ஜி கண்ணா, மோதிரம் மாத்திக்கோங்க!” என்று அழைத்தார்.

அதில் அர்ஜித் சஹானாவின் கையைப் பிடித்து மோதிரம் அணியப்போக, எதேச்சையாக நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் அகப்பட்டாள் அகமொழி.

அவனிடம் சிறு திகைப்பு.

“போடி…” கண்ணைக் காட்டினான் ஆத்திரத்துடன்.

இதில் பின்னணியில்,

வேங்கை மவன் அவன் ஒத்தைல நிக்கிறான்
மொத்தமா வர்றாங்களே…
நேந்து உட்ட
ஆட்டுக்குட்டிய
வெட்ட போறாய்ங்களே

க்யா ரே என்ன செட்டிங்கா
இல்ல பயத்துல ஒடம்பெல்லாம் ஸ்வெட்டிங்கா
உன் ஆளு முன்னால நத்திங்கா
ஆவபோற மச்சான் சாவப்போறடா

என பாடல் ஆரம்பிக்க, “அடடா, வாட் அ சிச்சுவேஷன் சாங்” என சிலாகித்தபடி அவனைப் பார்த்து நடந்து வந்தாள்.

பக்கவாட்டில் பிரணீத் சிலையாக நிற்க, அவனது சட்டையில் மாட்டி இருந்த குளிர் கண்ணாடியை ஒற்றை விரலால் ஸ்டைலாகத் தூக்கி விட்டு கேட்ச் பிடித்து மாட்டிக் கொண்டதில் அர்ஜித் நறநறவெனப் பல்லைக் கடித்தான்.

“ஓவர் சீன் வேண்டடி…” வாய்க்குள்ளேயே முனகினான்.

அவன் இன்னும் மோதிரம் போடாததால் குழம்பிய குடும்பத்தினர், அகமொழியைக் கண்டு விட்டனர்.

சுஜாதா தான் அவளைக் கண்டு முகம் மலர்ந்து “வா மோளே… வசந்திமா வந்தில்லே…” என வாசலில் தேட, அவரைக் கண்டு ஒரு நொடி இளகியவள், மறுகணமே உதட்டைப் பிதுக்கி நின்றாள்.

“நான் ஒன்னும் இங்க நிச்சய சாப்பாடு சாப்பிட வரலை. இவர்கிட்ட நான் தனியா பேசணும்.” என அர்ஜித்தைக் கை காட்ட, அவனோ கையை இறுக மூடி கோபத்தில் தகித்தபடி அவளை வெறித்தான்.

“அர்ஜிகிட்டயா?” கோபால கிருஷ்ணன் புரியாமல் கேட்க,

“ஆமா அங்கிள். உங்க பையன், என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஏமாத்திட்டாரு. நானும் அவ்ளோ ஆசையா லவ் பண்ணேன். ஆனா அவரு… என்னை ரூமுக்கு வரச் சொல்லி…” என்று சொல்ல முடியாதவாறு நிறுத்தி விசும்பிட, அர்ஜித் தான் ‘ஆக்டிங்ல பி. எச்டி வாங்கிரிக்கும் தோணுந்து காந்தாரி!’ என்று வெப்ப மூச்சை வெளியிட்டான்.

குடும்பமே திகைத்து நின்றது.

சுஜாதாவோ “எந்தா அர்ஜி இது?” எனக் கேட்க, அவன் பதில் சொல்லும் முன்னே,

“அவர் என்னை ரூமுக்குக் கூப்பிடலைன்னு அவரையே சொல்லச் சொல்லுங்க பாப்போம். சொல்ல மாட்டாரு! ஏன்னா அவருக்கும் என்னை அவ்ளோவ்வ் பிடிக்கும். என்ன தான் இன்னொருத்தரை நிச்சயம் பண்ணப் போனாலும், என்னால அவரை மறக்க முடியல. அவரை மாதிரி… இப்பக் கூட எனக்கு நியாயம் கிடைக்கும்னுலாம் நான் வரலை. நாங்க ரெண்டு பேரும் ரூம்ல ஒண்ணா இருந்த போட்டோ எல்லாம் வச்சு என்னை பிளாக்மெயில் பண்ணாரு. அதெல்லாம் டெலிட் பண்ணச் சொல்லிட்டுப் போகலாம்னு தான் வந்தேன்.” என மூக்கை உறிஞ்சிட, குடும்பமே அவனைக் கோபத்துடன் ஏறிட்டது.

சஹானா தான், “அதானோ, அந்து ஜூவல் ஷாப்ல கூடே அவளை நோக்கிட்டே நிந்ததோ?” என விழி சிவக்கக் கேட்டிருக்க, அவனோ அசையாமல் நின்றான்.

‘என் வேலைய ஈஸியாக்க வந்த ஈஸ்வரியே!’ என்று சஹானாவிற்கு மனத்தில் கோவில் கட்டிய அகமொழி,

“ம்ம்ம்… என் மேல அவ்ளோ ஆசை!” என்று நெளிந்தாள்.

அவளை மேலிருந்து கீழ் வரை கடுமையாகப் பார்த்த அர்ஜித், ‘த்து…’ என அவள் மட்டும் அறியும் வண்ணம் துப்பினான்.

பிரணீத் தான் உயிர் வந்த சிலையாக, “தேவையில்லாம பேசாத… உன்கூட அவன் இருந்தான்னு என்ன ஆதாரம் இருக்கு?” என நண்பனுக்காகப் பரிந்து வர,

அவனைக் கண்ணாடியைக் கழற்றிக்கொண்டு பார்த்தவள், “நீ யாரு மேன் அவனுக்கு…” என வினவினாள்.

“ப்ரெண்டு!”

“ஓ…” என முட்டியால் அவன் தோளில் கை வைத்துக் கொண்டவள், “ப்ரீ அட்வைஸ் சொல்றேன் ப்ரோ… இந்த ப்ரெண்ட்ஸுங்களை நம்பவே நம்பாதீங்க. எப்பக் கழற்றி விடுவானுங்கன்னே தெரியாது…” என்றவளுக்கு ரிஷானின் நினைவில் உண்மையாக வேதனை மேலோங்கியது.

“ல்ல!” அவன் கேட்டதில் அர்ஜித் கொலைவெறியுடன் அவனைப் பார்க்க, கூடவே அன்விதாவும் அனகாவும் முறைத்தனர்.

‘என்ன, குடும்பமா முறைக்கிறாங்க?’ என மிரண்டவன், அவள் தள்ளாடியபடி நின்றதில், “சரக்கு எதுவும் அடிச்சுட்டு வந்துட்டியாமா?” என்றான்.

“சரக்கு இல்லை ப்ரோ… காதல் தோல்வில காலைல இருந்து சாப்பிடாம கால் உயிரா இருக்கேன்.” என்று உயிர் உருகப் பேச, “ரைட்டு…” என்று நொந்தான்.

“ஹான், அப்பறம் ஒரு குட் குவெஸ்ட்டின் கேட்டீங்களே என்ன அது… ஆதாரமா? சொல்லிடுவேன். ஆனா எனக்கு வெட்கமா இருக்கே.” என்று உடலை வளைத்து நெளிந்தாள்.

அர்ஜித் அதற்கும் சேர்த்து நண்பனையே எரித்தான்.

“அந்தப் பிராந்தியைத் தூண்டி விட்டுட்டான் பரதேசி…’

“உன் வெட்கம் எனக்குத் துக்கம்…” பிரணீத் கூறியதில், “சொல்லிடவா…” என அர்ஜித்தை நக்கலாகப் பார்த்துக் கேட்க, “சொல்லுங்க… நீங்க வந்து பேசுனதும் அப்படியே நம்பிட முடியாதுல.” என அனகா முட்டுக் கொடுத்தாள்.

“அது வந்து… அவர்ர்ர் முதுகுக்குக் கீழ ஒரு பெரிய சைஸ் மச்சம் இருக்கும்.” என்று கூறி விட்டு முகத்தை மூடி வெட்கத்தைத் தொடர, “மொத்தமா முடிச்சுட்டா” என்று காலைத் தரையில் உதைத்தான் அர்ஜித்.

சுஜாதா தான் மகனை உணர்வின்றிப் பார்க்க, அவனோ “அம்மா…” எனப் பேச வரும்போதே அவனைப் பளாரென அறைந்தார்.

அதில் முகம் இறுகியவன், பார்வையை அகமொழியிடம் திருப்பி ஆத்திரத்தை அளவில்லாது கொட்ட,

அவளோ அவன் மட்டுமே அறியும் நக்கல் சிரிப்பை உதித்தாள்.

“பை தி வே, அடுத்த ஜென்மத்துலயாவது நான் மலையாளியா பிறக்கணும். நீங்க என் மணவாளனா பிறக்கணும். மிஸ் யூ அகன்…” என்று வெகுவாய் வருந்திப் பேச,

ஏற்கெனவே மண்டை சூடாகி இருந்த பிரணீத், “முதல்ல நீங்க ரெண்டு பேரும் மனுஷப் பிறவிங்களா பிறங்க…” என்றதில், பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, “பௌ… பௌ…” என அர்ஜித்தை நோக்கி மற்றவர் அறியாது அழகு காட்டி விட்டு, வந்த வழியே சென்றவள் இதற்கான எதிர்வினையை அறியாது போனது தான் விந்தை!

அகன் வசமாவாள்
மேகா

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 31

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
27
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அகா கலக்கிட்டா..இப்ப மறுபடியும் இவன் ஆரம்பிப்பான்…இப்படியே சண்டை போட்டு ஆளாளுக்கு பழி வாங்கினா எப்ப சமாதானம் ஆகுறது?