Loading

“நம்மகிட்டயே டிஸ்கவுண்ட் வாங்கிட்டு, நம்மளை பத்தியே எவ்ளோ தப்பா போட்டுருக்கான் பாரு!” அகமொழிக்கு சுறுசுறுவென ஆத்திரம் ஏறியது.

“இது என்ன புது பிரச்சினை அகா” ரிஷானும் ரூஹியும் பதறினர்.

“வியூஸ் பாருடி. ஒன் மில்லியன் தாண்டி போகுது…” ரூஹிக்கு அழுகையே வரும்போல இருந்தது.

ரிசார்ட், ஹோட்டல் என அனைத்தும் போக, மிச்சம் மீதி இருப்பவர்கள் தான் இது போலான கிளாம்பிங் ஸ்டேக்காக வருவார்கள். அவர்கள் இந்த வீடியோவைப் பார்த்து விட்டால், தொழில் எப்படி நடக்கும்? இப்போதே ஒரு மாதத்திற்கான லாபமும் வருமானமும் அடிபட்டுப் போய்விட்டதே.

இதை வைத்து ஹாபிட் ஹவுஸிற்கும் லோன் அப்ளை செய்திருந்தாளே!

நெஞ்சம் படபடவென அடித்தது அகமொழிக்கு.

“இவன் எதுக்குடா இப்டி பண்ணிருக்கான்? இதுனால இவனுக்கு என்ன லாபம்?” அகமொழி எரிச்சலாக வினவ, ரூஹி “இரு அவன் நம்பர் இருக்கு நான் கால் பண்றேன்…” என நிக்கிக்கு அழைத்தாள்.

அவனோ, ஹில்மிஸ்ட் மேனேஜர் தான் தனக்கு பணம் கொடுத்து இப்படி பேச சொன்னதாகக் கூற, மூவரும் அதிர்ந்தனர்.

“ஹே மிஸ்டர், அவங்க காசு குடுத்தா நீ இஷ்டத்துக்கு ரிவ்யூ குடுப்பியா?” அகமொழி கோபமாகக் கேட்க,

“இதோ பாருங்க… அவங்களோட ப்ராண்ட் அம்பாசிடர் நான். நான் என் வேலையைத் தான் பார்த்தேன். உங்களுக்கு நல்ல ரிவியூ வேணும்னா, நீங்களும் எனக்கு அமௌன்ட் குடுங்க. நான் நல்லதா சொல்றேன்” என்றான் இயல்பாக.

“உனக்கு எவ்ளோ பணம் வேணும்?” ரிஷான் கேட்டதில், “ஆல்ரெடி தப்பா சொன்ன ஒரு இடத்தை நல்லதா சொல்லனும்னா, 10 லாக்ஸ் ஆகும்…” என்றதில் மூவரும் விழித்தனர்.

“ஒரு ரிவியூக்கு டென் லாக்ஸ்சா?” ரூஹி நொந்தாள்.

“பின்ன, ஹில்மிஸ்ட் எம். டி எனக்கு எவ்ளோ பே’ பண்ணுவாரு தெரியுமா? மொத்த மார்கெட்டிங்கும் அவங்களுக்கு இன்ஸ்ட்டால தான். நான் அப்போ அப்போ ஒரு வீடியோ போட்டா போதும், நான் வீடியோ போட்டேன்னு போட்டிக்கு மத்த செலிபிரிட்டியும் அங்க போய் ஃப்ரீ மார்க்கெட்டிங் பண்ணிடுவாங்க. அதுனால அவரோட மொத்த மார்க்கெட்டிங் பட்ஜெட்டும் எனக்கு தான்…” எனப் பெருமை பீத்திட, அகமொழிக்கு கோபத்தை அடக்குவது பெரும்பாடாக இருந்தது.

நிக்கி அழைப்பைத் துண்டித்ததும் மூவரும் முகம் செத்து அமர்ந்திருந்தனர்.

ரூஹி தான் ஆரம்பித்தாள்.

“ஹே அகா உனக்கு ஞாபகம் இருக்கா? போன மாசம் இதே ஹில்மிஸ்ட் மேனேஜர் நம்ம இடத்துக்கு வந்து பேசிட்டு இருந்தாருல. இந்த இடத்தை விலைக்கு கேட்டது ஞாபகம் இருக்கா?”

“இந்த மாதிரி நிறைய பேர் வருவாங்களே ரூஹி” ரிஷான் கேட்டதில்,

“இல்லடா மத்தவங்க கேட்டுட்டு நோ சொன்னா போய்டுவாங்க ஆனா அந்த ஆளு போகவே இல்ல. அதிக அமவுண்டுக்கு பேரம் பேசுனான்…” என்றதும் அகமொழிக்கும் நினைவு வந்தது.

“அந்த ஆளு பேர் ஜெகன்னு சொன்னதா ஞாபகம். இடத்தை தரலைன்னு வேணும்னே வேலையை பார்த்து விட்டுருக்கான்டி…” அகமொழி பல்லைக்கடித்தாள்.

“இப்ப பிசினஸை படுக்க விடாம பிடிக்கணும் அகா… பேசாம அந்த நிக்கிக்கு கேட்ட பணத்தை குடுத்துடுவோமா?” ரிஷான் பரபரத்தான்.

“எது பத்து லட்சமா? விளையாடுறியா? நம்ம கிட்ட ஏது அவ்ளோ பணம். சரி அப்படியே பிரட்டி குடுத்தா கூட அவன நம்ப முடியாதுடா. பணத்தை வாங்கிட்டு மாத்தி பேசுனா என்ன செய்வ?” என்ற அகமொழியின் கூற்றில் தலையைப் பிடித்தான்.

“இதுனால பிசினஸ் அடி தான். ஆனா கண்டிப்பா படுக்காது. ஆல்ரெடி இங்க வந்துட்டுப் போனவங்களே திரும்ப வர வாய்ப்பிருக்கு. எக்ஸ்பீரியன்ஸ் பண்ண செலிபிரிட்டிஸ்கு தெரியும்ல… கொஞ்ச நாள்ல சரி ஆகிடும்டா” என அப்போதைக்கு வருத்தத்தை விழுங்கிக் கொண்டாள்.

ஆனால் அவள் நினைத்தது போல சரியாகவில்லை.

ஏற்கனவே அவளது கிளாம்பிங்கை ஆஹா ஓஹோவென புகழ்ந்த இன்ஸ்ட்டா செலிபிரிட்டி கூட, ஹில்மிஸ்ட் ரிஸார்ட்டிற்கு கூவ ஆரம்பித்து விட்டார்கள்.

கேன்சல் ஆகிய பிறகு, புக்கிங்கின் எண்ணிக்கை படு வீழ்ச்சி அடைந்திட, ரிஷானுக்கு தனது தந்தையை நினைத்தே பயம்.

“மனுஷன் என்னை கொன்னுடுவாருடி… லாஸ் ஆகுறது ஓகே. ஆனா நாலு வருஷம் சக்ஸஸ் காட்டிட்டு லாஸ் ஆகுதுன்னு சொன்னா, அவளோ தான். ஏதாச்சு பண்ணலாம் அகா…”

அவனைப் பாவமாக பார்த்த அகமொழி, அவர்களுக்கு தெரிந்த செலிபிரிட்டியைப் பிடித்து காசு கொடுத்து வ்லாக் எடுக்க வைத்தனர்.

அப்படியும் லாபம் ஈட்ட இயலவில்லை. ஆகினும் இப்படியே கொஞ்ச நாள் கழித்து விட்டால், பின் அந்த வீடியோவை மக்கள் மறந்து விடுவார்கள் என்ற ஒரு நம்பிக்கை அகமொழிக்கு.

ஆனால், வங்கிக்கடன் ரிஜெக்ட் ஆனதும் தான் அவளுக்கு தாங்க இயலாத சினமே பீறிட்டது.

அவளது வருங்கால கனவையும் சிதைத்து விட்டனரே!

“அந்த ஹில்மிஸ்ட் எம். டி என்கிட்ட செத்தான்…” என்று வங்கியில் இருந்தே நேராக காரை ஹில்மிஸ்ட்டிற்கு விட்டாள்.

“அகா பிரச்சினை வேணாம்” ரிஷான் கூற,

“இதுக்கு மேல என்ன ஆகணும் ரிஷு. நாக்கைப் புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்டா தான் என் மனசு ஆறும். அவங்களை சும்மா விடக்கூடாதுடா. மார்க்கெட்டிங் அவங்களுக்கு பண்ணிக்க வேண்டியது தான். ஆனா அடுத்தவங்க பொழப்புல ஏன் மண்ணள்ளி போடணும்… இதுக்கு நான் பதிலடி குடுக்காம சும்மா விட மாட்டேன்…” என்று மூச்சிரைக்க கத்த, ரிஷானுக்கும் செய்வதறியாத நிலை.

———-

“டேய் என்னை எப்படா சென்னைக்கு விடுவ?: கன்னத்தில் கை வைத்தபடி கேட்ட நண்பனிடம், “இரியடா. அம்மா இந்த வீக்கெண்ட் என்கேஜ்மெண்ட்னு சொல்லிட்டு இருக்காங்க. நீ போயிட்டா திரும்பி வரவைக்க உன்னை கெஞ்ச முடியாது…” என்றான் அர்ஜித்.

“அம்மா சொன்னாங்க தான். ஆனா எனக்கும் பொண்ணு பாக்குறேனு டார்ச்சர் பண்றாங்கடா…”

“செய்தோ”

“நீ அனுபவி மேன்… வை மீ?”

அந்நேரம் அர்ஜித் அகனுக்கு அழைப்பு வர, மறுமுனையில் அவனுக்குப் பார்த்திருந்த மணப்பெண் தான் பேசினாள்.

“ஹாய் அர்ஜித். ஞான் சஹானா. அச்சன் உங்க நம்பர் தந்நூ… சுகமல்லே” என்றதும், “ஹாய் சஹானா… ஐ ஆம் பைன். கொறச்சு பிசி. அதான் கால் பண்ண முடியல…” என்றான்.

“இட்ஸ் ஓகே… நம்மளுக்கு நேரில் கண்டு சம்சாரிச்சாலோ?”

“சியூர் சஹானா. வில் மீட்” எனும்போதே,

“உன் ஆளா?” பிரணீத் சைகையிலேயே கேட்க, அர்ஜித் முறைத்தபடி தலையாட்டினான்.

“என்ஜாய் சேட்டா பாய்…” என்று அவனைக் கிண்டல் செய்து விட்டு வெளியில் வந்தான்.

அங்கோ மேனேஜர் ஜெகனிடம் சண்டை பிடித்துக்கொண்டிருந்தாள் அகமொழி.

தமிழில் பேசிய அப்பெண்ணை யாரென ஆராய்ந்தவனுக்கோ, அவள் இடை இடையே கெட்ட வார்த்தைகளை வேற பேசியதில் கிலி பிடித்தது.

இருந்தும், “என்ன ஆச்சு?” என ஜெகனிடம் கேட்ட ப்ரணீத்திடம் எகிறினாள்.

“நீ தான் எம்.டியா?”

அக்கேள்வியில் திருதிருவென விழித்தவன், ஏதோ பெரிய பிரச்சினை போல இருக்கு என எண்ணி,
“இல்லைங்க நான் தண்ணி கேன் போட வந்தேன்” என்றான் பரிதாபமாக.

அவனைத் தீயாக முறைத்த அகமொழியிடம் ஜெகன் எகிறினான்.

“இதோ நோக்கு அம்மா… சும்மா வாயில் வந்ததை சம்சாரிச்சு கொண்டு இரிக்கறுது (பேசக் கூடாது). உனக்கு ஒழுங்கா பிசினஸ் நடத்த அறியதில்லா… இவிடே வந்து கதறுன்னு. பிசினஸ்னா எதிரிகள் வரத்தான் செய்யும், போட்டி உண்டாகத்தான் செய்யும். அதை மேனேஜ் செய்யான் பற்றதில்லெங்கில், ஆ இடத்தை கொடுத்துட்டு போ…” என்று திமிராக பேச,

“அந்த இடத்துல உன் எம்டிக்கு சமாதி கட்டுவேனே தவிர உங்கிட்ட குடுப்பேன்னு மட்டும் நினைக்காத. இடியட்… செய்றதையும் செஞ்சுட்டு…” என முழுதாய் பேசி முடிக்கும் முன்னே,

“தைரியம் உண்டெங்கில் சமாதி கெட்டி நோக்குடீ!” திணக்கமான ஆண்குரலில் திரும்பிய அகமொழி சர்வ நிச்சயமாக அங்கு அந்த கேரளத்துக்காரனை எதிர்பார்க்கவில்லை.

“அகா இவன்டி… வா ஓடிடலாம்” ரிஷான் அவளது கையைப் பிடித்து ஓடத் தயாராக நிற்க,

அவன் கையை உதறி முறைத்தவள், “நீ தான் இந்த ரிசார்ட் ஓனரா? உனக்கு என்ன பெரிய இவன்னு நினைப்பா…” அகமொழி அடுத்த வார்த்தை பேசும் முன்னே, அவளது கையைப் பிடித்து வளைத்திருந்தான்.

திரும்பி ஜெகனை ஒரு பார்வை பார்க்க, அவனோ “ஈ பெண்ணு கிளாம்பிங் வச்சு நடத்திட்டு இருக்கா சாரே. நம்ம ரிசார்ட்காக செய்யுன்ன மார்க்கெட்டிங் இவரூடே பிசினஸை கெடுக்குதாம். சின்னப்பிள்ளைத்தனம் போலே சண்டை இடூன்னு. இவர்களுக்கெல்லாம் ஆரு இவிடே அப்ரூவல் கொடுத்ததுனு அறியதில்லா…” என்றதில்,

“என் இடத்திற்கு வந்து என்கிட்டயே கத்திப் பேச தைரியமெல்லாம் உனக்கு ஆரு கொடுத்தது? அன்றைக்கே உன்னை மலையில எறிஞ்சிருக்கணும்…” என அகமொழியைப் பார்த்து பல்லைக்கடித்தான் அகன்.

“டேய் என்னைத் தொடுற வேலை எல்லாம் வச்சுக்காத. விடுடா விடுடா…” என ஒரு கையால் அவன் நெஞ்சில் அடிக்க,

“அடுத்தவர்களூடே இடத்திற்கு வந்து இங்ஙனே இண்டீசன்ட்டா கத்துவியா? அப்படி கத்தினா எந்து நடக்கும்னு உனக்கு அறியணமல்லோ…” என்றவன் கிஞ்சித்துக்கும் அவள் கையை விட்டானில்லை.

ரிஷான் தான் “சார் சார் ப்ளீஸ் விட்டுடுங்க. தேவையில்லாத பிரச்சினை வேணாம்…” எனக் கெஞ்ச,

“நின்டே அரை மெண்டல் கேர்ள் பிரெண்டை வீட்டில் லாக் பண்ண மாட்டியா?” என அவனிடம் காய்ந்தான் அர்ஜித் அகன்.

“யாருடா அரை மெண்டல்… உன் பிசினஸ்காக அடுத்தவங்களை பிசினஸ் பண்ண விடாம செய்ற நீ தான் அரை மெண்டல். முழு மெண்டல்… பைத்திக்காரா… கையை விடுடா.”

“இவள் பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டலா வச்சுட்டு இருக்கா? எனக்கு நீ போட்டியாடி? டிஸ்கஸ்டிங்! உன்னை இனிமேல் இவிடே கண்டால்… கொன்னு போடும் ஞான்!”என மிரட்டி விட்டே கையை விட்டதில், அவளுக்கு கோபமும் கை வலியும் ஒருங்கே தோன்றியது.

“உன்ன சும்மா விட மாட்டேன் மிஸ்டர். ரெண்டு இன்சிடென்ட்கும் சேர்த்து உன்னை செய்யல… யூ ஃபக்கிங் இடியட்!” என இறுதி வரியை முணுமுணுக்க, “ஏய்” எனக் கர்ஜனையுடன் அவளை நோக்கி அவன் முன்னேறியதில் அவள் சட்டென பின்னால் நகன்றாள்.

பிரணீத் தான், “விடுடா… ம்மா நீ போமா முதல்ல…” என அவளை அனுப்பி விட முயல, அகமொழி அர்ஜித் அகனை வஞ்சத்துடன் உறுத்து விழித்து விட்டே சென்றாள்.

இன்னும் ஆத்திரம் அடங்காத அர்ஜித், “ஜெகன்… எவிடேயா ஆ கிளாம்பிங் ஸ்டே?” என விசாரிக்க, “எதுக்குடா இப்ப அது?” என மிரண்டான் பிரணீத்.

அவனுக்குப் பதில் கூறாது ஜெகனை அழுத்தமாக ஏறிட, “இவிடேன்னு நாலு கிலோமீட்டர் மாத்ரமே உள்ளூ சாரே. நம்ம அடுத்ததாக ஆ இடத்தில் தான் ரிசார்ட் கட்ட பிளான் செய்து ஆ பெண்ணுகிட்ட சம்சாரிச்சோம். பக்ஷே ஆ இடத்தை தரமாட்டேன்னு சொல்லிட்டா. இப்ப அதிக விலைக்கு நம்மகிட்ட விக்க பிளான் செய்யுன்னு நினைக்கிறேன். ஏதேனும் பிரச்சனையை உண்டாக்கியால் தானே, நம்ம எக்ஸ்ட்ரா பே செய்து வாங்குவோம். ஈ மாதிரி ஏகப்பட்ட பேரை கண்டிருக்கோமே…” என்றதில்,

“இடம் ஆருடே பேரில் இருக்கு? ஆ பிடாரி பேரில் தானோ?” என வினவினான்.

“இல்ல சாரே… விசாரிச்சவரை அது அவங்களூடே அச்சன் பேரில் தான் இருக்கு… அவரேயும் கண்டு சம்சாரிச்சோம். பக்ஷே ஒன்னும் காரியமாயில்லா.”

தோளைக் குலுக்கிக் கொண்டவன், குளிர் கண்ணாடியை அணிந்தபடி “ஞான் பரயும்போது, ஜேசிபி வச்சு ஆ கிளாம்பிங்கை இடிச்சுடு. பாக்கி ஞான் நோக்கிக்கொள்ளாம்!” என அலட்டலின்றி கூறி விட்டு செல்ல, ஜெகன் சரியென தலையாட்டியதில், பிரணீத் திகைத்தான்.

“சேட்டா பாய்… உங்க வில்லத்தனத்தை பொண்ணுக்கிட்டயும் காட்டணுமா?”

“அவள் பெண்ணே அல்லடா காந்தாரி…” என சினம் பீறிட இகழ்ச்சியாய் இதழ் விரித்தவன், ஒற்றை விரலால் நெற்றியை நீவிட, லேசாய் முகம் சுருக்கினான்.

அதே வெண்ணிலா நறுமணம் அவனிடம்.

“ச்சே… டிஸ்கஸ்டிங்… ஞான் வீட்டுக்குப் போய்ட்டு வராம்” எனத் தானாய் கடுப்பாகி விட்டு சென்ற நண்பனை பரிதாபமாகப் பார்த்திருந்தான் பிரணீத்.

மதிய வேளையில் வீட்டுக்கு வந்த தமையனைக் கண்ட அனகா, “எந்தா சேட்டா, இப்போ பகலில் வீட்டில வருன்னது? ஆப்டர் மேரேஜ்க்கு இப்போழே பிராக்டீஸா?” எனக் கண்சிமிட்டிட,
வீட்டுப் பெரியவர்கள் நமுட்டு நகை புரிந்தனர்.

“போடீ லூசே…” தங்கையை தலையில் அடித்து விட்டுச் சென்றவன் பின்னாலேயே பொமேரியன் நாய்க்குட்டி போல சென்றாள்.

“எந்தடா… முகத்தில் ஒரு வண்டி எரிச்சல்?”

“ஒரு பிராந்துக்காரி செய்த வேலை”

முதல்வேலையாக சட்டையைக் கழற்றியவன் வேறு சட்டையை அணிந்து கொள்ள, “டா… ஆ ஷர்ட் நல்லா தானே இருந்தூ. கசங்கியா போலும் இல்லா… எந்துனா கழற்றியது?” எனத் திட்டியபடி அதனை வாங்கி அழுக்கு கூடையில் போட்டாள்.

பின் கையைப் பிசைந்தபடியே “அர்ஜி… பிரணீயோடு கல்யாண காரியம் சம்சாரிச்சோ?” எனக் கேட்டாள் தயக்கமாக.

“ம்ம் சம்சாரிச்சல்லோ… அவன் பிடி தரலை அனு!”

“ஓ!” முகம் வாடிப்போன அனகா, “அச்சன்… அவன் ஜாதகத்தை ஜோசியர்ட்ட காட்டினாராம். கல்யாண யோகம் வந்தூன்னு பரஞ்ஞூ. பக்ஷே அவன் ஓகே சொல்லாம யோகம் எங்ஙனே வரூம்?” என முணுமுணுத்தாள்.

“ஏன் அவனை எல்லாரும் ப்ரெஷர் செய்யூன்னது. அவனுக்குன்னு டைம் வரும்போது செய்துகொள்ளும்.”

“டைம் எப்போ வரூமாம்? நீயும் அவனும் ரிசார்ட்டில் குடிச்சுட்டு கூத்தடிக்கிறது எனக்கு தெரியாதுன்னு நினைக்காதே சேட்டா!” அனகா இடுப்பில் கையூன்றி நக்கலடிக்க,

“பிசாசு…” வாய்க்குள்ளேயே தங்கையை முறைத்தவன், “வீட்டில் ஏதேனும் வாய் திறந்நால்…” என விரல் நீட்டி எச்சரித்ததில், “அச்சா…” எனக் கத்தி மாட்டி விட பார்த்தாள்.

அவளது வாயை மூடிய அர்ஜித், “எந்தடீ வேணம் நினக்கு?” எனக் கேட்க,

வலுக்கட்டாயமாக அவனது கையை எடுத்து விட்டவள், “ப்ரணீயை கல்யாணத்துக்கு ஓகே சொல்ல வைக்கணும். ஏடத்தியோட விஷ். அப்பறம், எனக்கு ஒரு டயமண்ட் ரிங்க் வேணம். இது நீ கூத்தடிக்கிறதை வீட்ல சொல்லாம இருக்க…” எனப் புருவத்தை உயர்த்தி மிரட்ட, “இம்சை…” எனத் திட்டியவன் பணத்தைக் கொடுத்து அனுப்பினான்.

பணத்தை வாங்கிக்கொண்டு அறைக்கு வந்த அனகாவின் முகத்தில் வேதனையின் சாயல்.

ப்ரணீதைத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்கவே தமையனிடம் பேரம் பேசினாள்! ஒத்துக்கொள்வானா? மனம் சண்டித்தனம் செய்தது.

இதனை எல்லாம் ஆராயாதவனாக மீண்டும் வெளியில் செல்ல முயன்றவனை நிறுத்திய கல்யாணி,

“நிச்சயத்துக்கு இனி நாலு நாள் தான் இருக்கு அர்ஜி. கிராண்டா செய்யணும்னு ஆசைப்படுறோம். நினக்கு டிரஸ் எல்லாம்…” என ஆரம்பிக்கும்போதே,

“நீங்கள் எங்ஙனே வேணாலும் செய்யூ முத்தாச்சி… ஞான் வேலைக்கு எக்ஸ்ட்ரா ஆள் வேணும்னா அனுப்புறேன். டிரஸ் எல்லாம் வாட்ஸ்அப்ல செலக்ட் செய்யாம்… கொஞ்சம் டைட் வொர்க்.” என்று அவர் கன்னம் தட்டி விட்டுச் சென்றவனை புன்னகையுடன் பார்த்தார்.

“அர்ஜி… கல்யாணப் பெண்ணு நின்னோடு சம்சாரிச்சோ?” கோபாலகிருஷ்ணன் கேட்க, நடையை நிறுத்தாதவனாக “சம்சாரிச்சூ அச்சா. ஈவினிங் மீட் செய்யூன்னு…” என்றபடி சென்றவனைக் கண்டு,

“மூத்தவனாவது நிறுத்தி நிதானிச்சு லவ் பண்ணி கல்யாணம் கழிச்சான் அம்மே. இவன் ஆற அமர கல்யாணப் பெண்ணோடு பேசக் கூட நேரமில்லாம சுத்துறானே…” என சலித்துக் கொண்டார்.

“கல்யாணத்துக்கு அப்பறம் தலைகீழா மாறினாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல கோபாலா…” கல்யாணியின் கூற்றில் கோபாலகிருஷ்ணனும் சிரித்தார்.

“நின்டெ அச்சனும் இப்படி சுத்திட்டு இருந்தவரு தான?” அப்போது தான் அறையை விட்டு வந்த கேசவ நாயரை வம்புக்கு இழுத்தார் கல்யாணி.

“எனிக்கு அப்போசிட்டா உன் மகன் தான், என் மருமகளை காதலிச்சு கல்யாணம் கழிச்சானே. அப்போ ஓகே சொன்னதுக்கு இப்ப ஒரு காபி கூட தராம கொடுமை படுத்துறா” என அவர் மருமகளை வாரினார்.

சுஜாதா தான், “ஐயோ அச்சா…” எனப் பதறியதில், சிரிப்பலை வீட்டை நிறைத்தது.

கூடிய விரைவிலேயே அவ்வீட்டின் செல்வங்களால் சிரிப்பொலிகள் சிதறப் போகும் நிலை புரியாது, நிச்சயதார்த்த வேலைகளில் மூழ்கிப் போகினர். இங்கு, அதே ஞாயிறு அன்று ரிஷானுக்கும் அகமொழிக்கும் நிச்சயதார்த்தம் முடிவாகி இருந்தது.

அகன் வசமாவாள்!
மேகா

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
18
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment