

“நிவேதாவும் நித்திப்பாவும் ஸ்கூல் டேஸ்லருந்தே ஃப்ரண்ட்டா இருந்திருக்காங்க. நிவேதா ஊருக்கு இவங்க போகும் போதெல்லாம், நிவேதா கூடத் தான் நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணுவாங்கனு சொன்னாரு. நிவேதாக்கு இங்கயே ஐடி வேலை கிடைக்கவும், இப்படி வீக்கெண்ட்ல மீட் பண்ணிப்பாங்கனு சொன்னாரு. நிவேதாவும் இவங்களும் க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ்னும் இவங்களுக்குள்ள தெரியாத எந்த ரகசியமும் இல்லனும் சொன்னாரு”
“ஓ அந்தளவுக்கு திக் ஃப்ரண்ட்ஸ்ஸா அவங்க?” என்றே பவானி கேட்க,
“ஹ்ம்ம் ஆமாடி எனக்கு அவங்க லவ்வர்ஸ் இல்ல ஃப்ரண்ட்ஸ் தான்னு தெரிஞ்சதுல செம்ம சந்தோஷம். அப்ப
என் எண்ணமெல்லாம் நித்திப்பாவைக் கல்யாணம் செய்றதுல தீவிரமாக இருந்தனால நிவேதா பத்தி நான் பெரிசா யோசிச்சிக்கலை. அவரை நான் மிஸ் செஞ்சிட கூடாதுங்கிற எண்ணம் மட்டும் தான் அப்ப எனக்கு இருந்துச்சு. அடுத்து வந்த வீக்கெண்ட்ல நித்திலனோட தான் சென்னைக்குப் போனேன். அப்பா அம்மாக்கு அவரை ரொம்பப் பிடிச்சிது. ஃப்ரண்ட்னு தான் அப்போதைக்குச் சொல்லி வச்சேன்.
நான் இப்படி ஒருத்தரை ஃப்ரண்ட்டுனு வீட்டுக்கு கூட்டிட்டு போனதே அப்ப தான் ஃபர்ஸ்ட் டைம். அதனால எல்லாருக்குமே சந்தேகம் வந்துடுச்சு. தாத்தாக்கு நித்திப்பாவை சுத்தமா பிடிக்கலை. நேரடியாவே அவர்க்கிட்ட ஹார்ஷா தான் தாத்தா பேசினாங்க. தாத்தாக்கு அவர் எங்க சாதி இல்லன்றது பெரிய பிரச்சனையா இருந்துச்சு. ஆனா அப்பா அம்மா என் சந்தோஷம் தான் முக்கியம்னு எங்க காதலை ஏத்துக்கிட்டாங்க. தாத்தா கோபத்துல என்கிட்ட பேசுறதை நிறுத்திட்டாரு. நித்திலன் பேமிலிகிட்ட பேசி கல்யாணம்லாம் முடிவான பிறகு அப்பா அம்மா நான் எல்லாரும் சேர்ந்து பேசி தாத்தாவை சமாதானம் செஞ்சோம். கல்யாணம் அண்ட் ரிசப்ஷென் எல்லாமே சென்னைல கடல் கிட்ட நடந்துச்சு. இது கூட எனக்கு கனவா வந்துச்சுடி பவா. அந்த வெட்டிங்கை அப்படியே கனவுல பார்த்தேன்டி. அப்ப நானும் நித்திப்பாவும் ஒவ்வொன்னும் ப்ளான் பண்ணி அரேஞ்ச் பண்ணோம். Those are the most happiest days of my life. அங்க இருந்த எங்களோட பீச் ஹவுஸ்ல ஒன் வீக் ஸ்டே செஞ்சோம். அந்தக் கடலலைல என் கால் படுற மாதிரி நின்னு லவ் யூ நித்திப்பானு கத்தி இருக்கேன். தினமும் நைட் அவர் கூடக் காலாற அந்தக் கடல் மணல்ல பேசிட்டே நடக்கிறது மனசுக்கு அவ்ளோ சுகமா இருக்கும். என்னை அங்கிருந்து டெய்லி தூக்கிட்டுப் போகச் சொல்லி அடம்பிடிச்சி அவர்கிட்ட ரொம்பவே கொஞ்சிட்டு இருப்பேன்” என்றவள் சொன்னதும்,
“இப்ப மட்டும் மேடம் என்ன உங்க புருஷனைக் கம்மியா கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க?” என்று கேலிச் செய்தாள் பவானி.
வெட்கப் புன்னகைச் சிந்தியவளாய் அவளின் அருகில் சென்று அமர்ந்த நிவாசினி, “கல்யாணத்துக்குப் பிறகு ஹனிமூனுக்காக மாஞ்சோலை போனோம்” என்றாள்.
“ஓ அதான் உன்னை பிளான் பண்ணி மாஞ்சோலை கூட்டிட்டு போனாங்களா அண்ணா. உனக்கு பழைய நினைவுகளை வர வைக்க முயற்சி செஞ்சிருக்காங்க” என்றாள் பவானி.
“ஆமா பவா. அப்ப நாங்க தங்கியிருந்த அதே வீட்டுல தான் இப்பவும் ரூம் எடுத்து தங்கியிருந்தோம். அப்ப அங்க இருந்த மலை ஜாதி மக்கள் டாட்டூ குத்துவாங்கனு கேள்விப்பட்டு, நானும் நித்திப்பாவும் டாட்டூ குத்திகலாம்னு போனோம். அவங்க கைல நிநினு டாட்டூ குத்திக்கிட்டாங்க. அவருக்குக் குத்தும் போதே நான் முகத்தைச் சுருக்கினதை பார்த்துட்டு அவர் என்னை டாட்டூ குத்திக்க விடலை” என்றாள்.
“ஓ அண்ணா கைல இருக்க நிநிக்கு அர்த்தம் நித்திலன் நிவாசினியா? நான் நிவேதா நித்திலனோனு நினைச்சேன்டி” என்றாள் பவானி.
“நான் கூட அப்படித் தான்டி நினைச்சேன். இந்த டாட்டூ பத்தி கேட்டப்பலாம் எதையாவது சொல்லி சமாளிச்சிருக்காருனு இப்ப தான் புரியுது” என்று சொல்லி சிரித்தாள் நிவாசினி.
“அப்புறம் அங்க நிவேதா வீட்டுல மறுவீடு அழைப்புக்கு போனோம். பாலன் மாமா, நிவேதா தம்பி தான் இருந்தாங்க. நிவேதா அப்ப அங்க வரலை. ஆபிஸ்ல லீவ் தரலைனு சொல்லிட்டாங்க. மேரேஜ்க்குமே முழுசா அவங்க நிக்கலைனு அப்ப தான் யோசிக்க ஆரம்பிச்சேன். மேரேஜ் அன்னிக்கு சென்னைக்கே லாஸ்ட் மினிட்ல தான் வந்தாங்க. மேரேஜ் முடிஞ்சதும் கிளம்பி போய்ட்டாங்க. அவங்க ஆபிஸ்ல லீவ் இல்லனு நித்திப்பா அப்ப சொன்னதால நானும் பெரிசா எடுத்துக்கலை. அங்க நிவேதா வீட்டுல மறுவீடு விருந்து முடிஞ்சு, பாலன் மாமாவோட யமாஹா டூ வீலர் வண்டியில நாங்க ரிட்டன் மாஞ்சோலை ரூம்க்கு போகும் போது எங்களுக்கு அங்கிருந்த கவர்மெண்ட் ஸ்கூல் கிட்ட ஆக்சிடெண்ட் நடந்துச்சு. அவருக்குக் கால் முட்டியில ரொம்பவே ரத்தம் வந்தது. எங்கேயும் ப்ராக்சர் ஆகலைனாலும் நான் ரொம்பவே பயந்து போய்ட்டேன். நித்திப்பாவோட அப்பா அம்மா, என்னோட அப்பா அம்மாலாம் வந்துட்டாங்க. தாத்தா வரலை. இரண்டு பேரோட அப்பா அம்மாவும் எங்க கூட ஒன் வீக் தங்கிருந்துட்டு போனாங்க. ஒரு மாசம் அங்க தான் இருக்கனும் முழுசா குணமான பிறகு போய்க்கலாம்னு சொல்லி அங்கேயே ஒரு மாசம் தங்க வச்சிட்டேன்” என்ற நிவாசினி,
“இந்த விஷயம்லாம் என் மனசுல ஆழமா பதிஞ்சி போயிருச்சு போல பவா. இதே மாதிரி ஆக்சிடென்ட் கனவு எனக்கு வந்துச்சு. நித்திப்பா இதே மாதிரி திரும்பவும் ஆக்சிடெண்ட் ஆச்சு. நம்ம எண்ணங்கள் எதை நோக்கி இருக்கோ அது நடக்கும்னு டாக்டர் சொன்ன மாதிரி தான் இதெல்லாம் நடந்திருக்குனு இப்ப புரியுது” என்றாள்.
“இப்படிலாம் நடக்குமானு ஆச்சரியமா இருக்குடி. நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் மாதிரி இருந்திருக்கடி நீ” என்று சிரித்தாள் பவானி.
“ஹா ஹா ஹா ஆமாடி. அதுக்குப் பிறகு பெங்களூர்ல இரண்டு பேரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினோம். அங்கே எங்களோட மேரேஜ் லைப் ஸ்டார்ட் ஆச்சு. நான் அணு அணுவாய் ரசிச்சு வாழ்ந்த காலம்டி அதெல்லாம். என் உலகம் முழுசும் அவர் மட்டுமே நிறைஞ்சி இருந்தாரு” என்று அவள் கூறவும்,
“இப்ப மட்டும் ரசிச்சு வாழாம எப்படி வாழ்ந்தியாம்? ஆனாலும் நீ கொடுத்து வச்சவ தான்டி. அதே வாழ்க்கையை திரும்பவும் வாழ்ந்து பாத்திருக்கியே” என்றாள் பவானி.
“அதுக்குக் காரணம் நித்திப்பா தான்டி பவா. நான் அவரையே மறந்து இருந்தப்ப கூட அவர் என்னை விடாம இருந்திருக்காரே” என்றாள் நிவாசினி.
“சரி அப்புறம் என்னாச்சு?” என்று சுவாரஸ்யமான குரலில் கேட்டாள் பவானி.
“என் வாழ்க்கை உனக்கு கதையா இருக்காடி?” என்று முறைத்தாள் நிவாசினி.
“ஆமாடி இதை படமா எடுத்தா பிச்சிக்கிட்டு போகும் தெரியுமா” என்று கண் சிமிட்டிய பவானி,
“சரி சொல்லு உன்னோட நித்திப்பா ஏன் அப்படி மருந்து கொடுத்தாரு. அவர் உன் வாழ்க்கைல ஹீரோவா வில்லனானு எனக்கு முதல்ல தெரியனும்” என்றாள் நிவாசினி.
“ஆறு மாதம் முடிஞ்சிருந்த டைம்ல தாத்தா எங்களைப் பார்க்க பெங்களூர் வந்திருந்தாருடி. அப்ப அவருக்குக் கோபம் குறைஞ்சிருந்தது. எனக்குத் தாத்தாவே எங்களைப் பார்க்க வந்ததுல ரொம்ப சந்தோஷம். நித்திப்பா ஆபிஸ் விட்டு வர்ற நேரமாகும்னு சொன்னதால நானும் தாத்தாவும் கோயிலுக்குப் போனோம். திரும்பி வந்தப்ப நிவேதாவும் நித்திப்பாவும் வீட்டுக்குள்ள பேசிக்கிற சத்தம் கேட்டுச்சு. கதவைத் திறக்க போன நேரத்துல நிவேதா நித்திப்பாவை லவ் பண்றதா சொல்றது கேட்டு அப்படியே கதவுக்கிட்டயே நாங்க நின்னுட்டோம். நிவேதா நித்திப்பாவை லவ் பண்றது கூட, நித்திப்பா என்னை லவ் செஞ்ச பிறகு, அவங்களுக்கு வந்த லோன்லினஸ் ஃபீல்ல தான் தெரிஞ்சிக்கிட்டதாக நிவேதா சொன்னாங்க. இதைக் கேட்டதும் தாத்தாக்கு செம்ம கோபம் வந்துடுச்சு. உடனே வீட்டுக்குள்ள நுழைஞ்சு நித்திப்பாவை ரொம்பவே அசிங்கமா அவங்க ஜாதி வச்சிலாம் பேசி திட்டிட்டாங்க. நிவேதா அழுதுட்டே அங்கிருந்து போக, நித்திப்பாக்கும் தாத்தாக்கும் செம்ம சண்டை நடந்துச்சு.
தாத்தா அடுத்த நாளே அவரோட அப்பா அம்மா என்னோட அப்பா அம்மானு எல்லாரையும் வர வச்சி ரொம்பவே பேசிட்டாங்க. அதுல நித்திப்பா எங்கப்பா அம்மாவை எதிர்த்து பேச, வார்த்தை வளர்ந்து போய்ப் பெரிய சண்டையா போன சமயத்துல, இது எனக்கும் என் புருஷனுக்கும் இடையே உள்ள பிரச்சனை. இதை நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு எல்லாரையும் அனுப்பி வச்சிட்டேன்.
ஆனா நித்திப்பா மேல எனக்கு நிறையக் கோபம், நிவேதாவை ஃப்ரண்ட்னு சொல்லி என்னை ஏமாத்திருக்காரு. நிவேதா இவரை ஒன் சைட்டா லவ் பண்ணதை என்கிட்ட சொல்லாம மறைச்சிருக்காரு, இதுல எங்க வீட்டாளுங்க கேட்டதுக்குச் சண்டைக்கு நின்னாருனு அவர் மேலுள்ள க்ரைம் ரேட் கூடிட்டே போகச் சண்டையும் சச்சரவுமாவே இரண்டு மாசம் ஓடி போச்சு. நிவேதாவை வச்சே எங்க ரெண்டு பேருக்குள்ள நிறையச் சண்டை வந்துச்சு. நான் அவரை அவகிட்ட பேச கூடாதுனு சொன்னதுக்கு, ‘அவளுக்கு மேரேஜ் ஆகிடுச்சுனா சரியாகிடும். அவ முன்னாடிலாம் இப்படி இல்ல. இப்ப லோன்லியா ஃபீல் செய்றதால அப்படிப் பேசுறா. நான் சொல்லி புரிய வைக்கிறேன்னு’ சொன்னாரு. அதே மாதிரி நிவேதாகிட்டயும் போய்ப் பேசினாரு. நிவேதா சீக்கிரமா மேரேஜ் செஞ்சிக்கிறதா சொன்னாங்க. அவங்களால எங்க வாழ்க்கைல பிரச்சனை வர மாதிரி இனி நடந்துக்க மாட்டாங்கனு சொன்னாங்க. அதுக்குப் பிறகு நித்திப்பா நிவேதாகிட்ட ரொம்பப் பேசுறதை குறைச்சிக்கிட்டாங்க.
தாத்தா என்னை நித்திப்பாவை டிவோர்ஸ் செஞ்சிட்டு வர சொன்னாரு. இல்லனா அப்பாவை கம்பெல் பண்ணி சொத்தெல்லாம் அனாதை ஆசிரமத்துக்கு எழுதி கொடுத்திட வச்சிடுவேன்னு என்கிட்ட சொன்னாரு. சொத்தெல்லாம் தாத்தாக்கிட்ட இருந்து அப்பாக்கு எப்பவோ மாத்தியிருந்தாரு தாத்தா. அதனால் அப்பாக்கிட்ட சொல்லி மாத்த வச்சிடுவேன்னு பிளாக் மெயில் செஞ்சாரு. என்ன நடந்தாலும் நான் நித்திப்பாவை விட்டு பிரிஞ்சிட கூடாதுங்கறதுல முடிவா இருந்தேன். அப்ப தான் என்னோட ப்ரக்னன்சி கன்ஃபர்ம் ஆச்சு” என்று நிறுத்திய நிவாசினியின் குரல் கலங்கி இருந்தது.
“ஓ இவ்ளோ நடந்துச்சாடி! இன்னும் அந்த நிவேதா பொண்ணுக்கு கல்யாணம் ஆகலை தானே! இன்னும் அந்தப் பொண்ணு நித்திலன் அண்ணாவை லவ் பண்ணிட்டு தான் இருக்கா?” எனக் கேட்டாள் பவானி.
“ஆமா அப்படித் தான் நினைக்கிறேன். நாங்க இந்தத் தடவை போனப்பவும் நித்திப்பா நிவேதாவை சீக்கிரம் கல்யாணம் செஞ்சிக்கச் சொல்லி சொன்னாங்க. இந்தத் தடவையும் அவங்க ரெண்டு பேரும் தனியா பேசினதை வச்சி தான் எங்களுக்குள்ள சண்டை வந்துச்சு. வாழ்க்கை ஒரு வட்டம்டானு சொல்ற மாதிரி அதே மாதிரி திரும்ப சந்தோஷமும் பிரச்சனைகளும் எனக்கு வந்திருக்கு பாரேன்” என்று கண்ணீருடன் சிரித்தாள் நிவாசினி.
அவளின் தோளில் தட்டியவளாய், “கஷ்டமில்லாத வாழ்க்கைனு ஒன்னு யாருக்கும் இல்ல நிவாஸூ” என்று பவானி உரைக்கவும்,
“அடியேய்” என்று முறைத்தவளாய் சிரித்த நிவாசினி தொடர்ந்தாள்.
“நான் கர்பமானது கன்ஃபர்ம் ஆனதும் திரும்ப வாழ்க்கை இன்பமயமாய் மாறிச்சு. குழந்தைக்கு பேர்லாம் செலக்ட் செஞ்சி எப்படி வளர்க்கனும்னுலாம் ப்ளான் செஞ்சோம். அப்ப முழுக்க முழுக்க எங்க பேச்சு எல்லாமே பொறக்க போற எங்க குழந்தைய சுத்தியே தான் இருந்துச்சு. ரெண்டு மாசமான நிலைல அபாஷனாயிடுச்சு. அதுக்கு நான் குடிச்ச மருந்து தான் காரணம்னு டாக்டர் சொன்னாரு. அப்பலாம் எனக்கு நித்திப்பா மேல எந்த சந்தேகமும் இல்லை. அவர் டாக்டர் சொல்லி கொடுத்த மருந்துனு அந்த டாக்டரைத் தான் நான் திட்டினேன். அப்ப அம்மா அப்பா வந்து என்னை அவங்க கூட கொஞ்ச நாள் இருந்து ரெஸ்ட் எடுக்கச் சொல்லி சென்னைக்குக் கூட்டிட்டுப் போனாங்க.
தாத்தா சொத்தை வச்சி பிளாக் மெயில் செஞ்சி என்னை டிவோர்ஸ் செய்யச் சொன்னது அப்பாக்கு அப்ப தான் தெரிய வந்துச்சு. அதனால அப்பா சொத்தை என் பேருக்கு மாத்திட்டாங்க. நான் சென்னைக்கு வந்த ஒரு வாரத்துல நானும் அப்பா அம்மாவும் கார்ல கோயிலுக்குப் போய்டு இருந்தப்ப நடந்த ஆக்சிடெண்ட்ல அப்பா அம்மா இறந்திருக்காங்க” என்று கண்ணீர் வழியக் கூறினாள் நிவாசினி.
அவளின் இதயம் படபடவெனத் துடித்திருந்தது.
“அந்த ஆக்சிடெண்ட் நடந்து என்னை ஹாஸ்பிட்டல்ல சேர்த்த நேரம், அப்ப ஏதோ ஆப்ரேஷன் எனக்குச் செஞ்சாங்க. அது முடிஞ்சதும் மைல்ட்டா எனக்கு நினைவு திரும்பிச்சு! அப்ப தாத்தா நித்திலன்கிட்ட, “நீ தான் டா இது எல்லாத்துக்கும் காரணம். உன்னால தான் இந்த ஆக்சிடெண்ட் நடந்துச்சுனு” திட்டிட்டு இருந்தது கேட்டாச்சு. அப்படியே நான் திரும்பவும் மயக்கமாகிட்டேன். எனக்கு அப்ப அப்பா அம்மா இறந்ததுலாம் தெரியாது பவா.
திரும்ப முழிச்சி பார்த்தப்ப நித்திப்பா பிளான் செஞ்சி மருந்து கொடுத்து தான் எனக்கு அபார்ஷன் ஆனதா தாத்தா சொன்னாரு. அதோட நான் கோமால போய்ட்டேன். முழுச்சி பார்த்தப்ப தாத்தா நான் கோமால இருந்ததாகவும் அப்பா அம்மா இறந்துட்டதாகவும் சொன்னாங்க” என்றவள்,
“இங்கே தான்டி பெரிய டிவிஸ்ட். என் தாத்தா எவ்ளோ சாதிவெறிப் பிடிச்சவங்கனு இப்ப தான்டி எனக்குப் புரிஞ்சிது. தன்னோட மகனும் மருமகளும் இறந்த துக்கத்தை விட தன்னோட பேத்தி வேத்து சாதிக்கார பிள்ளைய வயித்துல சுமக்கக் கூடாது, அவன் கூட திரும்ப சேர்ந்து வாழ கூடாதுனு எங்களைப் பிரிக்க பிளான் செஞ்சி பொய் சொல்லி என் வாயாலேயே நித்திப்பா எனக்கு வேண்டாம்னு சொல்ல வச்சிருக்காரு. நான் கடைசியா நித்திப்பாகிட்ட டிவோர்ஸ் செஞ்சிடுறேன்னு சொல்லிட்டு நான் மயக்கத்துல போய் கோமாக்குப் போனேன் பவா. அந்தத் துக்கமும் சோகமும் தாங்க முடியாம தான் அதுவும் எங்கே நித்திப்பா உயிருக்கு தாத்தானால எதுவும் ஆகிடுமோனு பயந்து தான் அவரை மறந்தாலும் பரவாயில்ல அவர் உயிரோட இருக்கனும்னு நான் கோமாக்கு போயிருக்கேன்” என்று தான் கண்ட கனவையும் அதன் பிறகு தான் தனக்கு பழைய நினைவுகள் மீண்டு வந்ததையும் உரைத்தாள் நிவாசினி.
“ஓ மை காட்” என்று பேச்சற்று அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தாள் பவானி.
“கோமாலருந்து நான் முழிச்ச பிறகு எனக்கு நித்திலன்னு ஒருத்தர் என் வாழ்க்கைல இருந்த நினைவே இல்ல பவா” என்று கூறும் போது இதயம் வலிக்க அவளின் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.
“தாத்தா என்னை ஒரு அப்பார்ட்மெண்ட்டுக்கு கூட்டிட்டு போனாங்க. நான் பெங்களூர் போன பிறகு தான் அந்த அப்பார்ட்மெண்ட்க்கு அப்பாவும் அம்மாவும் வீடு மாறினாங்க. நான் அப்பப்ப வீக்கெண்ட்ல வந்து போனதுல அங்க சில பேர்கிட்ட பேசியிருக்கேன். அதனால் தான் கோமால இருந்து விழிச்சதுக்குப் பிறகு எனக்கு அங்கிருந்தது எதுவும் நினைவுல இல்ல. அடுத்து ஆறு மாசம் என்னை ஊட்டிக்கு கூட்டிட்டுப் போய்த் தங்க வச்சிருந்தாங்க தாத்தா.
டாக்டர் இயற்கையான சூழல்ல நான் இருக்கனும்னு சொன்னதால கூட்டிட்டு வந்ததா சொன்னாங்க, ஆனா இப்ப தான் புரியுது அவங்க என்னை நித்திப்பாகிட்ட இருந்து மறைக்க இப்படிக் கூட்டிட்டு வந்திருக்காங்கனு! என்னோட அம்னீசியாவ யூஸ் பண்ணி எனக்கும் நித்திப்பாவுக்கும் நடந்த கல்யாணத்தை மறைச்சி வேறொருத்தருக்கு என்னை கட்டிக் கொடுக்க நினைச்சிருந்திருக்காங்க தாத்தானு இப்ப புரியது. நாங்க திரும்பச் சென்னைக்கு வந்தப்ப என்னை ஒரு வாடகை வீட்டுக்கு தான் கூட்டிட்டு போனாங்க. அப்புறம் தான் ஒரு கம்பெனியில இன்டர்வியூ அட்டெண்ட் செய்யும் போது உன்னைப் பார்த்தேன்.
கோமால இருந்து நான் முழிச்ச நாள்லருந்து என் மனசுல இனம்புரியாத வலியும் வேதனையும் இருந்துட்டே இருந்துச்சு பவா. உன்னைப் பார்த்த பிறகு என்னோட கவலைகள்ல இருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளில வர ஆரம்பிச்சேன்டி. அதுக்குள்ள அடுத்த ஆறேழு மாசத்துல தாத்தா உடம்பு சரியில்லமா இறந்துட்டாங்க. அதுக்குப் பிறகு எனக்குனு யாரும் இல்லனு மீளாத் துயரத்துக்குள்ள திரும்பவும் போய்ட்டேன்” என்றவளாய் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள் நிவாசினி.
இப்படி எல்லாம் கூட ஒருத்தியின் வாழ்வில் நிகழுமா என்று திகைத்து, அவளின் காதலை எண்ணி நெகிழ்ந்து, அவளின் துயரைக் கண்டு வருந்தி என கலவையான உணர்வுடன் அமர்ந்திருந்தாள் பவானி.
நிவாசினி சோகமாய் அமர்ந்திருந்தாள். மனமெங்கும் வலியை உணர்ந்தாள்.
“திரும்பவும் வேறொருத்தியை கல்யாணம் செஞ்சிக்காம, நித்திப்பா என்னையே நினைச்சிக்கிட்டு என்னை திரும்பவும் பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சி செஞ்சிருக்காரு. இப்ப சொல்லு அவரை நான் டிவோர்ஸ் செய்யனுமா?” என் பவானியைப் பார்த்துக் கேட்டாள் நிவாசினி.
“எல்லாம் சரி ஆனா ஏன் அண்ணா இப்ப உனக்கு அந்த மருந்தைக் கொடுத்தாரு. பழைய வாழ்க்கைலயும் அவர் கொடுத்த மருந்துனால தானே உனக்கு அபார்ஷன் ஆகிருக்கு. அப்ப அவருக்கு நீ வேணும் ஆனா குழந்தை வேண்டாம்னு நினைக்கிறாரா?” என்று பவானி கேட்டிருந்த நேரம்,
“வனி இங்கே வாயேன்” என்று அபிநந்தன் அழைத்தான்.
“இதோ வரேன் அபி” என்று சத்தம் கொடுத்தவள், “சரி நீ கண்டதையும் யோசிக்காம தூங்கு. மத்ததை நாளைக்குப் பேசிக்கலாம்” என்றவளாய் அங்கிருந்து சென்றிருந்தாள்.
பவானி சென்றதும் பெருமூச்சுடன் கட்டிலில் சாய்ந்தவாறு அமர்ந்த நிவாசினி தனது கைப்பேசியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த வானொலியை இயக்கினாள்.
நித்திலனின் நித்தில நினைவுகள் நிகழ்ச்சி நிறைவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
“இன்னிக்கு டாபிக்கு என்னோட நினைவுகளைப் பகிர்ந்துகிறேன்” என்று ஆரம்பித்த நித்திலன்,
“உங்க காதலி இல்லனா மனைவி நாம பிரிஞ்சிடலாம்னு சொன்ன தருணங்கள் உங்க வாழ்க்கை நடந்திருந்த அப்ப இருந்த மனநிலை பத்தியும் அதுலருந்து நீங்க மீண்டு வந்ததைப் பத்தியும் ஷேர் செய்யுங்கனு சொல்லிருந்தேன். போன் செஞ்சி எமோஷனலா உங்க வாழ்க்கையில் நடந்ததை என்கிட்ட ஷேர் செஞ்சிருந்தீங்க. ஷேர் செஞ்ச எல்லாருக்கும் என்னுடைய நன்றிகள்”
“இந்த மாதிரி என் வாழ்க்கைல நடந்திருக்கானு கேட்டா ஒரு தடவை இல்ல ரெண்டு தடவை நடந்திருக்கு. ரெண்டு தடவை ரெண்டு வேற காதலியானு நினைச்சிடாதீங்க. என் வாழ்க்கைல இருந்த இருக்கப் போற ஒன் அண்ட் ஒன்லி காதலி மனைவி அவ மட்டும் தான். ‘எனக்கு நீங்க வேண்டாம் நித்திப்பானு’ ரெண்டு முறை என் மூஞ்சுக்கு நேரா சொல்லி என் இதயத்தைச் சுக்கு நூறா உடைச்சிருக்கா” என்று கூறியவனின் குரல் கலங்கிக் கரகரத்தது.
நெஞ்சம் கனத்துப் போனது அவனுக்கு. மனத்தின் பாரத்தை வார்த்தையால் வடிக்க முடியாமல் திணறினான்.
“ஒவ்வொரு முறையும் என் நெஞ்சுல ஈட்டியை வச்சி குத்துற மாதிரி நீ எனக்கு வேண்டாம்னு அவ சொன்னப்ப, என் காதல் உனக்கு புரியவே இல்லயா பொண்ணேனு எனக்கு அவ்ளோ வலிச்சது” என்று தன்னை மீறி அழுதே விட்டிருந்தான் நித்திலன்.
அவனுடைய வலி நிறைந்த குரலில் வாயிலாக இதனை இங்குக் கேட்டுக் கொண்டிருந்த நிவாசினியின கண்களும் கலங்கிப் போயின.
“சாரி நித்திப்பா” என்று அவளின் வாய் அவளை மீறி அவனிடம் மன்னிப்பு கேட்டது.
குரலைச் செருமி தன்னை நிலைப்படுத்தியவனாய் தொடர்ந்தவன், “ஆனா அப்படிச் சொல்லு போதெல்லாம் அவளும் ஒன்னும் சந்தோஷமா சொல்லலை. மனசு முழுக்க வலியோட வேதனையில் துடிச்சு போய் தான் சொன்னா. அவளுக்கு என் மேல இருக்க காதல் எப்படினா மீண்டும் மீண்டும் பிறந்து வந்தாலும் உன்னை மட்டும் தான் காதலிப்பேன்ற அன்பு அவளோடது. அதை அணுஅணுவா அனுபவிச்சி வாழ்ந்தவன் நான். உனக்கு என்னை விட்டு பிரிஞ்சி இருக்கிறது தான் சந்தோஷம்னா பிரிஞ்சிடலாம்னு சொல்லிட்டேன்” என்று மீண்டுமாய் குரலைச் செருமினான்.
“சொல்லிட்டேன் ஆனா திரும்பவும் அவளை இழக்க இந்த மனசுல திராணி இல்ல” என்று பெருமூச்சை விட்டவன்,
“உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருந்தும் ஏன் இந்த மனசு ஹனி ஹனினு அவ பின்னாடியே சுத்துதுனு என்னை நானே கேட்டுக்காத நாளே இல்லை” என்று கூறிச் சிரித்தான் நித்திலன்.
கண்களில் கண்ணீர் வழிய இவளும் மென்னகைப் புரிந்தாள்.
“இப்ப நான் போடுற இந்த நிகழ்ச்சியோட நிறைவு பாட்டு என்னோட ஹனிக்கு தான் நான் டெடிகேட் செய்றேன்” என்றவன் அந்தப் பாடலின் முதல் சில வரிகளை ஓட விட்டான்.
அழகே பிரம்மனிடம்
மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்டு பல காத்திருக்க
வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன்
என்று நானும் சொல்லி வந்தேன்
என் ஆசை நிறைவேறுமா
என் தோழி நீயும் சொல்லம்மா
“என் ஆசை நிறைவேறுமா ஹனி” என்று கேட்டு அவன் இடைவெளி விட,
“எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்க மட்டும் எனக்கு புருஷன் நித்திப்பா” என்றவளாய் கதறி அழுதிருந்தாள் நிவாசினி.
“இந்தப் பாடலுடன் இன்றைய நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. மீண்டும் நாளை சந்திக்கலாம்” என்று அவன் விடைபெற்றுச் செல்ல பாடல் தொடர்ந்து வந்தது.
கண்ணீருடன் நித்திலனின் நினைவுகளுடனே உறங்கியிருந்தாள் நிவாசினி.

