Loading

 

“எங்க அந்த பொண்ணு?” என்று கேட்டுக்கொண்டே அவன் இருக்கும் இரண்டு அறைகளில் தேடிக்கொண்டிருந்தான் நந்தா.

 

“யாருடா பரதேவதையா?” கால்களை நீட்டி அமர்ந்தபடி மிக சாவகாசமாக கேட்டான் கேணி.

 

“அவளே தான், எங்க அவ?”

 

“எங்கையோ வாக்கிங் போயிருக்காடா. அந்த பொண்ணு எதோ ஹை கிளாஸ் பொண்ணு போல, நம்ம பக்கத்து ரோட்டாண்டா இட்லி கடையில இட்லி வாங்கிக் கொடுத்தா, வாந்தி எடுத்து அலப்பறை பண்ணிடுச்சுப்பா. ஜஸ்ட் மிஸ்… மூஞ்சி மேல வாந்தி எடுத்திருக்கும்.”

 

“அச்சச்சோ ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சே?” என்று உச் கொட்டினான் நந்தா.

 

“ஆமா நீ சந்தோசமா சொல்றியா? இல்லை என் மூஞ்சில வாந்தி எடுக்கலைனு கவலை படுறியா?”

 

“என்ன பார்த்தா எப்படி சந்தோசமா சொல்ற மாதிரியா தெரியுது?”

 

“இல்லையே.” என்றவனுக்கோ அப்போது தான் சரியாக புரிய, “நல்லா வருவடா சிஷ்யா நீ ரொம்ப நல்லா வருவ.” பல்லைக் கடித்தான் கேணி. 

 

இங்கு இருவரும் பேசிக்கொண்டிருக்க, மானசாவோ, யோசனையுடன் அவ்விடத்திலிருந்து சில மைல் தூரம் தள்ளியிருந்த பூங்காவினுள் நடந்துக் கொண்டிருந்தாள். ரகுவரனது நினைவுகள் அவளுக்குள் இருந்துக் கொண்டே இருந்தது. 

 

மும்பையில் அவனைத் தேடி தேடி காதலித்தவள் அவள் ஒருத்தி தான். எந்த பெண்ணிடமும் பேசாமல் மிக இறுக்கமாகவே வேலைக்கு வருபவனது மிடுக்கும் திமிரும் தான் அவளை முதலில் கவர்ந்தது. அவளாக சென்று பேசிப்பேசியே அவனிடம் நட்பை வளர்த்துக் கொண்டாள்.

 

சில நேரம் இறுக்கமாக இருப்பவனுக்கு அவளது வருகை ஆறுதலாக மாறியது. 

“லிசன் மானசா இந்த லவ் மேரெஜ் இதுல எல்லாம் எனக்கு ஈடுபாடு இல்லை. அதுக்கு ஏத்த மாதிரி என்னோட பழகு.” என்று பழகிய சில தினங்களில் கட்டளை இட்டவனை பிடித்தே சம்மதித்தாள். அவளுக்கோ அவள் காதல் மீது நம்பிக்கை இருந்தது. தன் காதலால் அவனுக்குள்ளும் காதலை வளர்த்து விடுவோம் என்று முழுமையாக நம்பினாள். 

 

ஒருநாள் அவனது முகம் இறுகிப் போய் காணப்பட்டது. அவனைக் காண வந்தவள் அன்று தான் குழந்தை போல் அழும் ரகுவரனைக் கண்டாள். அவள் வந்ததை உணர்ந்தவன் தன் கண்ணீரை மறைக்க, அவளும் அதை உணர்ந்து அவனுக்கு தனிமைக் கொடுத்துவிட்டு வெளியே வர, சில நொடிகளில் அவ்விடம் வந்தவன் பெண்ணவளின் கைகளை பற்றினான்.

 

“ஐ கான்ட் கன்ட்ரோல் மை ஃபீலிங்ஸ். என்னோட ஃபீலிங்ஸ் பிசிக்கல்லா ஷேர் பண்ணனும்னு நினைக்கிறேன். உனக்கு ஓகேவா?” என்றவன் தயக்கத்துடன் தான் அவளை நாடினான்.

 

ஏனோ அவனுக்கு அந்நொடி, தான் தேவை என்பதை உணர்ந்தவளின் மனம், தன்னையே அவனிடம் ஒப்படைத்தது. இருவருக்குமே அது முதல் முறையான கூடல் என்பதை இருவராலும் உணர முடிந்தது. 

 

“பேபி பார்த்து.” என்றவள் கூறும் முன்னரே அவளிடம் மென்மையை கடைபிடித்தான். அறியாத ஒன்றை அவள் மூலம் அறியும் போது அந்த நொடி உலகையும் மறந்திருந்தான். காதல் இல்லை என்று கூறினாலும் அவள் மனம் அவனது செயலைக் காதலாக தான் பார்த்தது. 

 

கூடல் முடிந்து அவன் நெஞ்சத்தில் தலை சாய்த்தவள் அவளையும் அறியாது கண்ணீர் விட, அவளை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டவன், “தாங்ஸ் பேப்ஸ்” என்று பெண்ணவளின் காதோரம் கூற, அவனுள் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள் மானசா.

 

திருமணமாகமலே அவனோடு அவள் சேர்ந்திருக்க காரணம் அவள் அவன் மீதுக் கொண்ட நம்பிக்கை தான். நிச்சயம் அவன் தன்னை ஏற்பான் என்கிற அவளது நம்பிக்கை ஒவ்வொன்றையும் தகர்த்தெறிந்தது அன்று ஹோட்டலில் அவன் அவளை அறைந்த அந்நிகழ்வு தான். 

 

“நான் உன் லவ்வர் இல்லையா?” என்றவளின் கேள்விக்கு “இல்லை.” என்றவன் வெடுக்கென்று கூறிவிட்டு சென்றுவிட, அவள் கத்திய கத்தல் அவ்வறையை உலுக்கியது.

 

காதலை தெரிவிக்காமல் அவனுக்கு அவள் தேவைப்படும் நேரம் எடுத்துக் கொண்டவன் மீது இவள் வைத்த நம்பிக்கை கானல் நீர் போன்றது. உரிமையானவனே என்றாலும் அதற்காக தன்னைதானே கொடுப்பது என்பது தவறாகும். அந்த தவறை நினைத்து பின் கலங்கி என்ன பயன்?

 

தன் மீது அத்தனை அன்பாக இருந்தவனுக்கு சிறுதுளி காதல் கூட என் மீது இல்லையா? நினைக்கும் போதே அவள் மனம் வலித்தது. அவன் அவளது வாழ்வை விட்டு சென்றபின்னரே தனது வயிற்றில் அவனது வாரிசை சுமந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தாள். எப்படியும் குழந்தைக்காக அவன் மனம் மாறும் என்று ஆசையுடன் வந்தவளை, நேற்று துரத்தி அனுப்பியவனின் செயலை நினைக்கும் போதே அவள் மனம் துடித்தது.

 

“ஏன்டா, இப்படி மாறுன? ஐ நீட் யுவர் கேர் பேபி.” என்று பூங்காவில் நடந்தபடி தன்னந்தனியாக பேசிக் கொண்டிருந்தாள் மானசா. 

 

அவனை நினைத்துக் கொண்டே இவள் நடந்து செல்ல, அவளை அவளுக்கே தெரியாமல் பின் தொடர்ந்தது இரண்டு கண்கள். அந்நொடி போலீஸார் திருடன் ஒருவனை துரத்திக்கொண்டு வந்திருக்க, அடித்துப் பிடித்தபடி ஓடிக் கொண்டிருந்த திருடனோ, எதிரே வரும் பெண்ணவளை பலமாக இடித்து தள்ளிவிட்டு சென்றான்.

 

அதை சற்றும் எதிர்பாராதவள், “அம்மா…” என்று கத்திக்கொண்டே கீழே விழச்செல்லும் நொடி அவளை தாங்கிப் பற்றி இருந்தது ஒரு கரம்.

 

அவளோ அதிர்ச்சியில் கண்களை மூடியிருக்க, அவனது அழுத்தமான கைகள் அவளது மணி வயிற்றை அழுந்த பற்றியிருந்த நொடி அவனது உடலில் ஒரு வித சிலிர்ப்பு தோன்றியது. அவளை பின் தொடர்ந்த கண்களுக்கு சொந்தக்காரனும் அவனே.

 

அவன் தொடுகையில் பட்டென்று கண்களைத் திறந்தளது உணர்வே கூறியது இது அவன் தான் என்று. உள்ளம் பூரிக்க அவனை பார்த்தவளது கண்களில் அவளையும் மீறி கண்ணீர் தாரையென வழிந்தது.

 

“ரகு” சொல்லத் துடித்த உதடுகள் அவன் பெயரை கூறியிருக்க, பெண்ணவளை நேருக்கு நேராக சந்தித்தது ஆணவனின் கண்கள்.

 

“பார்த்து மா… மானசா.” என்றான் தயக்கத்துடன். அவளோ அவனது கரத்தைப் பார்த்தாள். அது அழகாய் பெண்ணவளின் வயிற்றினை பற்றி இருந்தது. அந்நொடி வலியுடன் புன்னகைத்தாள் மானசா.

 

“நம்ம பேபியை நீ சேஃவ் பண்ணிட்ட.” 

 

“ம்ம்ம்.” என்றவன் அவளை நேராக பிடித்து நிற்க வைத்தான். 

 

“நீ இன்னும் ஊருக்கு போகலையா?”

 

“நீ இல்லாமல் போறதா இல்லை.”

 

“எதுக்கு இவ்வளவு பிடிவாதம். அப்புறம் உன்னால இந்த குழந்தையை தனியா வளர்க்க முடியாது.”

 

“இரண்டு பேரும் சேர்ந்தா வளர்க்கலாம்.”

 

“புரியாமல் பேசாத மானசா. போதும் இதுக்கு மேல நீ இங்க இருக்க வேண்டாம்.”

 

“இல்லை இங்க இருக்க கூடாதா? இல்லை உன் வாழ்க்கையிலும் இருக்கக்கூடாதா?” என்றவள் கண்கள் கலங்க கூறும்போதே, அவள் அடி வயிற்றில் வலியை உணர்ந்தவள், “அம்மா” என்று வயிற்றைப் பற்றிக்கொண்டு நடுவழியில் அமர்ந்தாள்.

 

“ஏய் என்னாச்சு.” என்றவன் பதட்டத்துடன் அவளை பிடிக்க, 

“என்னன்னு தெரியலை வயிறு வலிக்குது.” என்றவளை தன்னிரு கைகளில் ஏந்தியவன், தான் வந்த காரினுள் அவளை ஏற்றியபடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

 

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவளை பரிசோதித்த மருத்துவர் அவள் நலமாக இருப்பதாக கூறினார். அவன் முகம் அந்நொடி எதையோ யோசிக்க, அவனது கைகளை பற்றினாள் மானசா.

 

“தாங்க்ஸ் பேபி.” என்றவள் அவனது அன்பில் கரைந்துப் போனாள்.

 

என்ன தான் தன்னை அவன் துரத்தினாலும், தன் குழந்தை இல்லை என்று பொய் கூறினாலும் இன்று அவன் ஓடி வந்திருக்கிறான் என்றால் நிச்சயம் அவனுக்கு தன் மீதும் குழந்தை மீதும் அக்கறை உள்ளது என்றே நினைத்தது பெண்ணின் மனம். 

 

“சாப்டியா?” என்றவனின் கேள்விக்கு அவள் இல்லை என்று தலையாட்ட, அவளை மருத்துவமனைக்கு அருகிலிருந்த உணவுவிடுதிக்கு அழைத்துச் சென்றவன், அவளுக்கு பிடித்த சாப்பாத்தியை வாங்கிக் கொடுத்தான். சப்பாத்தியை உண்டவள் அருகிலிருந்த தண்ணீரை எடுத்து அருந்தினாள்.

 

“மானசா. இது ஒரு சாதாரண வயிற்று வலி தான். போக போக உனக்கு நிறைய பெய்ன்ஸ் வரும். பிரெக்னன்சி பெயின் தாங்க முடியாத அளவுக்கு இருக்கும்.”

 

“ம்ம்ம்… தெரியும். அப்படி எல்லாம் யோசிச்சா யாரும் குழந்தை பெத்துக்க முடியாது பேபி.”

 

“ஐ அக்ரி. அப்படி இருக்கப்போ உன்னால தனியா மேனேஜ் பண்ண முடியாது. நீ ஏன் அபார்சன் பத்தி யோசிக்கக் கூடாது. அதுதான் உன் எதிர்காலத்துக்கும் நல்லது.” என்றவன் கூறிய நொடி அதிர்ந்தவள், எதிரே இருந்த குவளையிலிருந்த தண்ணீரை அவனது முகத்தில் ஊற்றினாள். 

 

அவளது செயலில் அதிர்ந்தவன் எழுந்துக் கொள்ள, “உன்னை மாதிரி ஒரு கேவலமான மனுசனை நான் பார்த்ததே இல்லை. ச்சே, இப்போ நீ பண்ணது எல்லாம் நம்ம குழந்தை மேல இருக்குற கேர்னு நினைச்சேன்டா. இப்போ தானே தெரியுது உன் கேவலமான புத்தி. ச்சீ போ. என் மூஞ்சியில முழிக்காத. எனக்கு எது நல்லதுனு தெரியும். அதை நீ சொல்ல வேண்டிய அவசியம் இல்லவே இல்லை.” என்றவள் கண்கள் சிவக்க அவனை பார்த்து கத்தினாள். 

 

சுற்றியிருந்த அனைவரும் இவர்களையே காண, அவன் பற்களை கடித்தபடி அமைதியாக நிற்க, அவளோ அவனை பொருட்டாகக் கூட மதிக்காமல் அங்கிருந்து விறுவிறுவென்று சென்றாள்.

 

இங்கு மதுவர்ணிகாவோ, வெண்ணிலாவின் அறையிலிருந்தாள்.

 

“பால் கொதிக்குதுனு தெரியுதுல. ஏன் பார்த்து குடிக்க வேண்டியது தானே நிலா.”

 

“அண்ணி, அது வந்து.”

 

“ஏய், பேசாத. பேசி ஸ்ட்ரைன் பண்ணிக்காத. இந்த ஆயின்மெண்ட் கொஞ்சம் உனக்கு ரிலிஃப்பா இருக்கும்.” என்றவள் அவளது உதட்டின் மீது மென்மையாக தடவி விட்டாள்.

 

அதன் பின் தனதறைக்கு வந்தவள், புத்தகம் ஒன்றை எடுத்துப் படிக்க, அதன் முகப்பு பக்கத்தில் நந்தாவின் கையொப்பங்கள் கிறுக்கல்களாக இருந்தது. 

 

“பெரிய எழுத்தாளர் ஆட்டோகிராப் போட்ருக்காங்க.” என்று தலையில் அடிக்காத குறையாக அடித்துக் கொண்டாள் பெண்.

 

நேரங்கள் விரைந்தோடியது. ஆனால் அவனது நினைப்பு அவளையும் அறியாது உதித்துக் கொண்டே இருந்தது. எதுவும் அருகிலிருக்கும் போது தெரியாமல் போனாலும் தொலைவில் உள்ள நொடி அதன் நினைப்பே நம் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கும், அதை தான் தற்போது உணர்ந்தாள் மதுவர்ணிகா. இருந்தும் அவள் மனம் அதை ஏற்க மறுத்தது.

 

நேரம் பதினொன்றை கடக்க, மெத்தையின் மீது உறக்கத்தினை தழுவியிருந்தாள் மது. அந்நொடி கதவினை சத்தமின்றி திறந்து வந்தான் நந்தா. வந்தவன் அவளை தன் கைகளில் தூக்கம் கலையாமல் தூக்கிக் கொண்டவன், அவளை சத்தமின்றி தூக்கம் கலைந்திடாமல் பால்கனிக்கு தூக்கி சென்றான்.

 

“சிக்ஸ்டி கேஜி இப்போ சிக்ஸிடி ஃபை கேஜி ஆகிடுச்சு போலயே.” என்றவன் முணுமுணுத்தபடி அவளைத் தூக்கிக் கொண்டு செல்ல, அவளும் அவனது கழுத்து வளைவில் முகத்தை புதைத்துக் கொண்டு தூக்கத்தை தொடர்ந்தாள்.

 

“கும்பகர்ணி இந்த குலுங்கல்லையும் அசராமல் தூங்குறா பாரு.” செல்லம் போல அவளை கொஞ்ச நினைத்தது அவன் மனம்.

 

மேலே மாடிக்கு சென்றவன் அங்கிருந்த மெத்தையில் அவளை படுக்க வைக்க நினைக்க, அவளோ அவனது கழுத்தை விடாமல் பற்றிக்கொண்டாள்.

 

“ஏன் ஜூஜிலி தூக்கத்துல மட்டும் என்ன விட மாட்டீங்குற? இப்படி நேர்லயும் விடாமல் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்?” பெருமூச்சொன்றை விடுத்தான். 

 

அதன் பின்னர் அவளை வாகாக மெத்தையில் படுக்க வைத்தவன், அவளது கார் கூந்தலை பெண்ணவளின் காதோரம் ஒதுக்கி வைத்தான். நிலா வெளிச்சத்தில் பெண்ணவளின் தளிர் மேனி அழகாய் மிளிர, அவளது சிவந்த அதரங்களை சிறைபிடிக்கத் துடித்தது அவனது அதரங்கள்.

 

“இவ்ளோ அழகா ஏன்டி பொறந்து இப்படி இம்சை பண்ற?” என்றவனது கரம் அவளது முகத்தை தீண்டும் அளவிற்கு மிக அருகில் சென்றது. 

 

“கன்ட்ரோல் நந்தா. கன்ட்ரோல் யுவர் செல்ஃப்.” என்று தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டவன், அவ்விடம் வைக்கப்பட்டிருந்த மயிலிறகைக் கொண்டு பெண்ணவளின் முகத்தில் மென்மையாக வருடி விட்டான்.

 

அதில் குழந்தை போல நெளிந்தவள் திரும்ப, “மது” அவனது மென்மையான அழைப்பும் சேர்ந்து அவளை எழுப்ப முயன்றது. 

 

“ஜூஜிலி எந்திரிடி.” என்றவன் மயிலிறகை அவளது கண்களில் தொடங்கி, அவளது தாடை வரை வருட, அவனது செயலில் மெதுவாக கண் திறந்தவள் பரந்த வானை பார்க்க, அந்நொடி வானைக் கிழித்துக்கொண்டு கண்கவர் பட்டாசுகள் வெடிக்கத்தொடங்க, அவளது கண்கள் மேலும் பெரிதாக விரிந்தது.

 

பல்வேறு விதவிதமான வண்ணங்களில் வானத்தில் வேடிக்கை நிகழ்த்திக் கொண்டிருந்தது கண்கவர் பட்டாசுகள். அதே சமயம் வானில் வெளிச்சத்தை பரப்பிக் கொண்டு ஒவ்வொரு வண்ண பலூன்கள் பறக்க, இவையனைத்தையும் எதிர்ப்பாராதவள் குழம்பிப் போய் பார்த்தாள்.

 

“ஹாப்பி பர்த்டே மது” என்ற கரவொலி அவ்விடத்தில் கேட்க, மெத்தையிலிருந்து எழுந்தவள் சுற்றிலும் பார்க்க, அவ்விடமே அவளை மெய் சிலிர்க்க வைக்கும் அளவிற்கு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அவளையும் மீறி கண்கள் கலங்கிவிட, தன்னெதிரே இருந்தவனை பார்த்தவள், அடுத்த நொடி செய்த செயலில் அதிர்ந்து போய் நின்றான் நந்தா.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்