உன் விழியாக நானாகிறேன் அத்தியாயம் -15

Loading

அத்தியாயம் -15

அவனோ “சரி சரி” என்றதும் “ஒழுங்கா காட்டுங்க கலர் சரியா தெரியலை”என்று ஒரு அதட்டல் வேறு.

அவனோ சிரித்துக் கொண்டே “ம்ம்… ஓகே ஓகே” என்று அவளிடம்  காட்டினான்.

இது எப்படி? அது என்ன? என்று பல கேள்விகளை  கேட்டு இரண்டு வளையலை தேர்வு செய்து விட்டு “சீக்கிரம் வாங்கிட்டு வாங்க பாய்” என்று அங்கிருந்து ஓடி விட்டாள் வியன்கா.

ஆதிரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.தர்ஷன் சிரித்துக் கொண்டே “உங்களுக்கு என்ன கலர் வேணும் ஆதி?”

அவளோ ஆழ்ந்த யோசனையில் இருந்தாள் “ஆதி ஆதி” திரும்பவும் அழைத்தான்.

அவளோ முகமாறுதலுடன் “சொல்லுங்க”

அவளின் முகமாற்றத்தைக் கண்டவன் “என்னாச்சு ஆதி ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?”

அவளோ “தர்ஷன் நான் அப்புறமா பேசட்டுமா?” என்றாள்.

தர்ஷன் பொறுமையாக… “சரிங்க ஆதி உங்களுக்கு எதாவது சொல்லனும்னா தயங்காமல் சொல்லுங்க” என்றாள்.

சரியென்று அழைப்பை துண்டித்தாள்.வியன்காவின் இன்னொரு துடிப்பான கிண்டல் பேச்சு எல்லாம் அவளுக்கு வித்தியாசமாக இருந்தது.அவள் இப்படித்  தான் தானே தவறாக எண்ணி விட்டோமோ! என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள்.

ஆயிரம் சொல்ல முடியாத யோசனைகள் வந்து மொத்தமாய் நின்றது.தன்னுடைய விருப்பத்திற்காக அவளுடைய அன்பையும் வெளிப்படுத்தும் விதத்தை மாற்றி வைத்திருக்கிறோமோ? நீ இப்படித் தான் இருக்க வேண்டும் வியன்காவை கட்டாயப்படுத்துகிறோமோ! என்று எண்ணங்கள் வந்து போனது.ஆனால் இதற்கு காரணமானவனோ வேறு வாழ்க்கையை தேடிக் கொண்டு அவனுக்கு பிறந்த இன்னொரு குழந்தைக்கு எல்லாம் கிடைக்கிறது என்ற கோபமும் இயலாமையும் அவளை இன்னும் வேதனைப்படுத்தியது.

நன்றாக பேசிக் கொண்டிருந்தவள் திடீரென்று அழைப்பை துண்டித்தது அவனுக்கும் கவலையாக இருந்தது.வெளிப்படையாக கேட்க முடியாத நிலைமையில் இருந்தான் தர்ஷன்.அந்தளவிற்கு அவர்களுக்கான பழக்கம் என்பது இல்லையே! என்று நினைத்தான்.

ஆதிரை யோசனையாக அமர்ந்திருப்பதைப் பார்த்த அவளது அம்மா அஞ்சலி அருகில் வந்து அமர்ந்து “ஏன்ம்மா முகமே சரியில்லை”

“அம்மா வியன்காவுக்கு என்னால முடிஞ்ச வரை எல்லா சந்தோஷத்தையும் நான் கொடுக்கிறேன் அம்மா ஆனால்…” என்று இழுத்தாள்.

மகளின் நிலைமையை ஓரளவு புரிந்துக் கொண்டவர் “எல்லா சந்தோஷமும் கொடுக்கலாம் ஆனால் அவளுக்கான அப்பா என்கிற உறவை உன்னால தர முடியாதும்மா” என்றதும் விழிகளில் கண்ணீர் நிரப்பிக் கொண்டது ஆதிரைக்கு.

“அம்மா நான் வேணும்னு அப்படி செய்யலைம்மா”

“எனக்குத் தெரியும் ஆதிரை.சில இடங்கள்ல அம்மா இல்லாத குறையை அப்பாவுல நிவர்த்தி பண்ண முடியாதும்மா”

“ஆனால் அப்படி நினைச்சு ஆரம்பிக்கிற வாழ்க்கை கடைசில ஏன்டா இந்த புது உறவை ஏத்துகிட்டோம்னு நினைக்க வைக்குதும்மா” என்று ஆதிரை சொன்னதும் அதைக்கேட்டு சிரித்தவர் “உண்மை தான் முதல் தடவை நடந்த தவறு திரும்ப செய்யக் கூடாது என்பதற்குத் தானே அதை திருத்தி சரி செய்யறது தானே முறை இந்த தடவை ஒன்றுக்கு பலமுறை யோசித்து பழகி கூட எடுக்கலாமே! எல்லாம் மனசை பொறுத்து இருக்கு ஆதிரை”  என்றார்.

அவளோ ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருக்க “என்னாச்சு ஆதிரை நீ திடீர்னு இப்படி யோசிக்க காரணம்?”

பெங்களூரில் அரவிந்த்தை சந்தித்தது அவன் குடும்பம் நடந்த அனைத்தையும் சொன்னாள்.

அவரால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.அமைதியாக இருந்தார்.“அந்த இடத்துல நான் ஒருநிமிசம் வியன்காவை தான் நினைச்சேன்” என்றாள்.

“புரியுது ஆதிரை அவ்வளவு அநியாயம் செய்த அவன் நல்லா இருக்கான் உனக்கென்ன வியன்காவுக்கும் அந்த குறை சீக்கிரம் மறைஞ்சு போகும் ஆதி கவலைப்படாதே! இருந்தாலும் உன்னோடு முடிவும் முக்கியம்” என்றார்.

ஆதிரை என்னச் செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போய் உட்கார்ந்தாள்.அப்பொழுது தர்ஷனிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.

“என்னன்னு தெரியலை ஆதி நீங்க சரியாக பேசலை ஏதோ எனக்கும் மனசே சரியில்லை இதுவும் கடந்து போகும் அவ்வளவுதான் வாழ்க்கை” என்று அனுப்பினான்.

அவன் அனுப்பிய குறுஞ்செய்தியில் மொத்த கவலையும் தீர்ந்தது போல் இருந்தது ஆதிரைக்கு.என்னவென்று தெரியாமல் அவனின் ஆறுதல் மொழிகள் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக மனதை லேசாக ஆரம்பித்தது.

விடியற்காலையில் எழுந்தவள் காலை வேலைகளை முடித்து விட்டு வேலைக்கு செல்லலாம் என்று நினைத்தவள் வியன்காவிடம் “இன்னைக்கு க்ளாஸ்க்கு போறியா?”

 

“இல்லைம்மா”

 

“நான் வேலைக்கு போகனுமே!”

 

“அம்மா இன்னைக்கு எங்கேயாவது வெளியே போகலாமே!”

 

“சரிம்மா” என்று அலுவலகத்திற்கு  விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்த எல்லாப் பொருட்களையும் முதலில் சுத்தம் செய்ய ஆரம்பித்தனர்.

 

காலையிலேயே ஆதிரையின் பெற்றோர் இருவரும் மகனுடைய வீட்டிற்குச் சென்று இருந்தனர்.அதனால் அவர்களே வேலைகளை முடித்து பக்கத்தில் உள்ள  வணிக வளாகத்திற்கு ஆதிரை  தன் இருசக்கர வாகனத்தில்  அழைத்துச் சென்றாள்.

 

கொஞ்ச நேரம் இருவரும் சுற்றிப் பார்த்து விட்டு எதாவது சாப்பிடலாம்  என்று அமர்ந்தனர்.அங்கே இவர்களுக்கு அருகில் அடுத்தடுத்து என்று சில பேர் தங்களின் குடும்பத்தோடு வந்திருந்தனர்.

 

அவர்களை வியன்கா எதாவது யோசனையோடு பார்க்கிறாளா? என்று கவனித்தாள்.ஆனால் அது எதுவும் இல்லை.அவள் தான் வந்த வேலையைப் பார்த்தாள்.

 

இன்னும் கொஞ்ச நேரம் விளையாடி விட்டு வீட்டுக்கு வந்தனர்.ஆதிரைக்கு வியன்காவை நினைத்து குழப்பமாகவே இருந்தது.

 

தர்ஷனிடமிருந்து எந்தவொரு குறுஞ்செய்தியும் இல்லை.அவளும் அவனிடம் பேசவில்லை.இதற்கிடையில் சிந்தியாவிடம் கைப்பேசியில் பேசி நலம் விசாரித்தவள் பெங்களூர் சென்றதும் அங்கே நடந்த விவரங்களை எல்லாம் சொன்னாள்.சிந்தியாவோ “கவலைப்படாதே ஆதி அவனை இனிமேல் சந்திக்கிற நிலைமை வராது” என்று அவளால் ஆறுதல் வார்த்தைகள்  தான் சொல்ல முடிந்தது.

 

வியன்காவுக்கு பள்ளியும் திறந்ததால் அவள் அங்கே செல்லவும்  ஆதிரை வேலைக்குச் செல்ல என இருவருக்கும் அதிலே நேரம் சென்றது.

 

தினமும் தர்ஷனின் எண்ணை எடுத்து அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் என்று நினைப்பவள் ஏனோ ஒருவித தயக்கம் அவளுள் இருந்துக் கொண்டே இருந்தது.

 

நான்கு நாட்கள் சென்றிருந்த நிலையில் எப்போதும் போல் இரவு வானொலி நிகழ்ச்சியைப் போட்டாள் ஆதிரை.

 

அந்த நிகழ்ச்சியில் “ஹலோ மக்களே! எல்லோரும் எப்படி இருக்கீங்க? நான் உங்கள் ருத்ரா திரும்ப வந்துட்டேன் நீங்க என்னை மிஸ் செய்தீங்களா? நான் உங்களை மிஸ் செய்யு இந்த முறை நிறைய பயணம் அதே போல் நிறைந்த அனுபவங்களும் இருக்கு இன்னும் பேசலாம்” என்றான் குதூகலமாய்…

 

அவனைப் போலவே அவளுக்குள்ளும் ஒரு புத்துணர்ச்சி.சிரித்தப்படியே கேட்க ஆரம்பித்தாள்.அங்கே திருமணத்தில் நடந்த சில நிகழ்வுகளைப் பற்றி சுவாரஸ்யமாகச் சொன்னான்.

அதைக் கேட்கவும் அன்றைய தினத்திற்கு சென்றது போலவே இருந்தது.

 

சின்னச் சின்ன நிகழ்வுகள் தான் அதை அவன் கூறுவதில் தான் அத்தனை சுவாரஸ்யம் நிறைந்து இருந்தது.முகம் முழுக்க புன்னகையோடு மனதிலே புது தேடுதலோடு அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

நிகழ்ச்சியின் நிறைவுக்கு முன்னர் ருத்ரா வானொலியில் “மனிதர்கள் எல்லோரையும் நேசியுங்கள் ஆனால் மனதார இரசிப்பது பெண்களைத் தான் அவர்கள் எப்போதும் புதிராத புதிர் தான் கண்கள் பேசும் வார்த்தை ஜாலங்களை அவர்களிடமே கற்றுக் கொள்ளலாம் மனம் கவர்ந்தவளை  அப்படி பேசும் பெண்ணை சந்தித்து பேசிய பெண்” என்று அவன் நிறுத்தவும் ஆதிரைக்கு மனது திக் திக் என்று இருந்தது.

 

மனதினுள் ‘தர்ஷன் என்னைப் பத்தி தான் சொல்லுறாங்களா?’ என்று செவியை கூர்மையாக்கி கேட்கும் போது “மணப்பெண்ணை பற்றி பார்க்கலாம்” என்று முடித்து வைத்தான்.

 

அவள் ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருக்கும் போது அவளின் கைப்பேசியிலிருந்து ஒரு சத்தம் குறுஞ்செய்தி வந்திருக்கிறது என்று.யாரென்றுப் பார்க்க தர்ஷன் தான் அனுப்பி இருக்கிறான்.

 

“ஆதி நிகழ்ச்சியை கேட்டீங்களா? எப்படி இருந்துச்சு” என்று அனுப்பியிருந்தான்.

 

உடனே ஆதிரை “ரொம்ப நாள் கழிச்சு உங்க குரலை கேட்கிறதே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு” என்ற செய்தியை அனுப்பினாள்.

 

அவனோ “அவ்வளவு தானா?”

 

ஆதிரை “வேற என்ன?”

 

தர்ஷன் “என்னை மிஸ் பண்ணலையா????” கேள்விக் குறிகளோடு அனுப்பினான்.

 

“அதனாலத் தானே ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு சொன்னேன்” என்றாள்.

 

தர்ஷன் “புரியலை” என்றான்.

 

இவளோ என்ன பதில் சொல்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அவளின் பதிலுக்கு காத்திருக்காமல் அவனே கைப்பேசியில் அழைத்தான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்