விழியால் தொட்ட அழகே – 12

Loading

அத்தியாயம் – 12

அன்று காலை சீக்கிரமே எழுந்து கணவனுக்கு வேண்டிய உடையெல்லாம் அயர்ன் செய்து, குளிப்பதற்கு துண்டு எடுத்து வைத்து, அவன் கட்டும் வாட்ச், கால் உறை என அவனுக்கு வேண்டிய ஒவ்வொரு பொருளையும் அவன் கேட்கும் முன்பாகவே அவன் முன் வைத்திருந்தாள் நித்யஸ்ரீ,….

“என்ன நித்து,… முழுசா மனைவி பொறுப்பை ஏத்துகிட்ட போல” காக்கி உடையில் தயாராகியிருந்தவன், பெட்டில் அமர்ந்து காலுக்கு காலுறை அணிந்தபடியே வினவினான்,…

“என்ன இருந்தாலும் இதெல்லாம் நான் தானே பண்ணியாகனும், அதான்” என்பதோடு அவள் நிறுத்திக் கொள்ள,…. “எவ்ளோ நாளைக்கு” என்றான்,…

அவன் கேட்கும் கேள்வியின் அர்த்தம் புரியாமல் அவள் விழித்துக் கொண்டு நிற்க,… “இல்ல நீ தான் உன் லவ்வர் கூட போயிடுவல்ல அதான் இதெல்லாம் எத்தனை நாளைக்கு பண்ணுவ, எனக்கு தேவையான அனைத்தையும் டக்கு டக்குனு எடுத்து கொடுத்துடுற, நீ போயிடன்னா எனக்கு தானே கஷ்டமா இருக்கும்” முகத்தில் எந்த ஒரு உணர்ச்சிகளையும் காட்டாமல் சாதாரணமாகவே வினவினான்….

அவளுக்கு அவன் கேட்ட கேள்வி மனதை வலிக்க வைக்க, எதுவும் பேசாமல் தலை குனிந்து கொள்ள,.. அவனோ,… “ஏன் நித்து கருணா வந்து கூப்பிட்டா நிஜமாவே நீ போயிடுவியா” என்றான், அவன் தான் வாக்கு கொடுத்தான் முழு மனதோடு, ஆனாலும் அதை நினைத்து பார்க்கவே மனம் ஒருமாதிரி பிசையவும் தான் அவளிடமே கேட்டு விட்டான் மாட்டேன் என்று சொல்ல மாட்டாளா என்ற ஏக்கத்தில்…

சில நொடிகள் மௌனமாக நின்றவள், அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூறவில்லை, மாறாக “நீங்க போலீஸ் தானே, கருணா எந்த ஹாஸ்ப்பிடல்ல அட்மிட் ஆகிருக்கான்னு விசாரிச்சு சொல்ல முடியுமா?” என்றாள்,….

ஒரு பெருமூச்சை வெளியிட்டு அவளை நோக்கியவன்,… “லவ்வரை பார்க்காம இருக்க முடியலயா உன்னால” என்று கேட்டு ஆழ்ந்து நோக்கிவிட்டு.. “ஈவினிங் ரெடியா இரு, நான் வந்து உன்னை கூப்பிட்டு போறேன்” என்றதும் பெரிய புன்னகையுடன் தலையசைத்தாள் அவள்…

நிமிடங்கள் கடந்தும் போகாமல் அவளையே நின்று பார்த்து கொண்டிருந்த நேரம் அவன் போன் அடிக்கவும், அழைப்பை ஏற்று காதில் வைத்தான்,… “ம்ம்ம்… ம்ம்ம்” என்று மறுபக்கத்தில் பேசுபவரின் சொற்களை காதில் வாங்கி கொண்டவன்…. “நான் வர டூ ஹவராகும், நீ மேனேஜ் பண்ணிக்கோ” என்றவன் சற்று நேரத்திற்கு முன் அணிந்து கொண்ட காக்கி சட்டையின் பட்டன்களை ஒவ்வொன்றாக கழட்டினான்,…..

முழுதாக கழட்டி அதனை ஹேங்கரில் மாட்டியவனை…. ‘இவன் என்ன பண்ணுறான்’ என்பது புரியாமல் மலங்க மலங்க பார்த்துக்கொண்டிருந்தவள்,.. “என்ன பண்ணுறீங்க” என கேட்கும் முன்னே அவளை தன் பக்கம் இழுத்து அவள் இதழை தன் இதழ்களுக்குள் ஆழமாக நுழைத்துக் கொண்டான்,…

கடந்த நாட்களில் எத்தனையோ முறை இதழ் முத்தம் நிகழ்த்தியிருக்கிறான் தான், ஆனால் இன்றைய வேகமும் ஆவேசமும் அவள் எதிர்பார்க்காத ஒன்று, அவளிடமிருந்து உயிர், பொருள், ஆவி என அனைத்தையும் எடுத்துக் கொள்வது போல அத்தனை வேகமாக இருந்த அம்முத்தத்தில் அவன் அவளை எவ்வளவு விரும்புகிறான் என்பது புலப்பட்டது,….

ஆம், அவளுக்கு தெரிந்திருந்தது அவன் தன்னை நேசிக்கிறான் என்று, முதல் கூடலின் போதே வாரத்தைகளால் சொல்லிவிட்டான் அவன் அவளை காதலிப்பதை, ஏன் காதலித்தாய்? எப்போதிலிருந்து காதலிக்கிறாய்? திருமணமானால் மனைவியின் மீது காதல் வந்து விடுமா என்ன? என்ற எந்த ஒரு கேள்வியையும் அவனிடமும் அவள் வைக்கவில்லை, அதை பற்றி யோசித்து பார்க்கவுமில்லை, ஆனால் அவளுக்கு பிடித்திருந்தது, அவன் தன்னை ஆசையாக பார்க்கும் பார்வை, அவன் விழிகளில் தெரியும் தனக்கான காதல், ஒவ்வொரு நாளும் கூடல் முடியும் தருவாயில் லவ்யூ நித்து லவ் யூ நித்து என்று  அதிகமான மூச்சுவாங்களோடு சேர்த்து அவன் உதடுகள் முணுமுணுக்கும் அவ்வார்தைகள் எல்லாம் அவளை உச்சகட்டத்தை அடைய வைத்திருக்கும்,…

கருணா அவள் கரத்தை எத்தனையோ முறை பற்றியிருக்கிறான், ஒரு முறை அவளை அணைத்து அழுதிருக்கிறான் தன் சோக கதையை கூறி, அப்போதெல்லாம் ரிஷி தொடுவது போல்  ஏற்படும் உணர்வெல்லாம் ஏற்பட்டதில்லை, கருணாவுடன் இருந்தபோதெல்லாம் அவளுக்கு ஏற்படும் உணர்வு வேறு விதமாக இருக்கும், ஆனால் ரிஷியிடம் அவன் தொட்டாலே உருகி கரைந்து போய்விடுகிறாள், அவன் தன்னை பார்க்கும் பார்வையில் ஒரு வித மயக்கம் ஏற்படுவதை அவளால் உணர முடிந்தது, அவன் மார்பு சூட்டில் இதமான கதகதப்பை உணர்கிறாள், அவனுடன் இருக்கும் போதெல்லாம் அவனை விட்டு பிரிய மனம் மறுக்கிறது, முதல் கூடலின் போதே இது அனைத்தையும் உணர்ந்து விட்டாள், கருணாவை தான் காதலிக்கவில்லை என்பதையும் அந்த நாளில் தான் புரிந்து கொண்டாள், ஒரு ஆணை பிடித்திருந்தால் அதற்கு பெயர் காதல் என நினைத்து கொண்டிருந்தவளுக்கு அது தவறு என புரிந்தது, பிடித்தம் வேறு காதல் வேறு என்பதை ரிஷியுடன் கூடி கழித்த பிறகு தான் புரிந்தது,…

அதற்காக ரிஷியின் மீது காதல் வந்துவிட்டது என்றெல்லாம் அவள் நினைக்கவில்லை, இது தான் காதல் என்று அவளால் ஒரு முடிவெடுக்கவும் இயலவில்லை, மனதில் பல குழப்பங்கள், இந்த குழப்பங்கள் எப்போது தீரும் என்று அவளுக்கும் தெரியாது, அதை கிடப்பில் போட்டுவிட்டவள் கருணாவின் விஷயத்திற்கு வந்தாள்…….

இவள் கருணாவை நேசிக்காமல் போயிருக்கலாம், ஆனால் கருணா இவளை நேசித்தானே நேசித்து கொண்டிருக்கிறானே, வாழ்க்கை முழுக்க அவனுடன் இருப்பேன் என்று வேறு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாள், அவனுக்கு என்ன பதில் சொல்ல போகிறோம், தான் அவனை ஏமாற்றிவிட கூடாது என்று வேறு மனம் கூக்குரலிக்கிட்டே இருந்தது, கணவன் அவனுடன் போக அனுமதி தந்துவிட்டான், போய்விட வேண்டியது தானே என்று எங்கோ ஒரு இடத்திலிருந்து மனசாட்சி கூறினாலும், அவளால் சட்டென்று அந்த முடிவையும் எடுக்க முடியவில்லை, தற்சமயம் ரிஷி கருணா இருவருமே அவளுக்கு உயர்ந்தவவர்களாகி போய் நின்றார்கள், இருவரில் ஒருவரை கூட அவள் மனம் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை, அதற்காக இருவருடனுமா இருக்க இயலும், அதுவும் அசாதாரணமாயிற்றே, தனக்கு ஏன் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையை கொடுத்தாய் என்று இறைவனடினம் கேட்டு மருகி போனாள்,…

மனைவியை ஆண்டு அனுபவித்து விட்டு வேலைக்கு புறப்பட்டு விட்டான் ரிஷி, அந்த தனிமையில் தான் மருகி போய் கிடந்தாள் நித்யா, மதியம் வரை அவள் அறையை விட்டு வெளியே செல்லவில்லை, நித்யாவை காணாமல் அவளறைக்கே வந்து விட்டார் செவ்வந்தி,…..

கணவன் சென்றதும் மீண்டுமொரு குளியல் போட்டு விட்டு, தலையை கூட துவட்டாமல் படுத்து விட்டவள், “நித்யா கண்ணு” என்ற பாட்டியின் தலை கோதலில் தான் சுயநிலைக்கே வந்தாள்,…

“பாட்டி” என்று எழுந்து அமர்ந்தவள்…. “நீங்க ஏன் பாட்டி மாடிப்படி ஏறி வந்தீங்க, சொல்லிருந்தா நானே வந்திருப்பேனே” அவருக்கு கால் வலி இருப்பதால் மாடிபடியிலெல்லாம் ஏற மாட்டார் என தெரியும், அதனால் தான் முதலில் அக்கறையாக இந்த கேள்வியை வைக்க…. “நீ வரலையே அதான் உடம்பு எதுவும் சரி இல்லையோன்னு நானே வந்துட்டேன், என்னாச்சு கண்ணு தலை முடியை கூட உலர்த்தாம படுத்திருக்க, என்ன செய்யுது உடம்புக்கு” அவள் முடியை கொஞ்சம் கொஞ்சமாக விரல்களால் பிரித்து விட்டபடி வினவினார்,…

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை பாட்டி, தூக்கமா வந்தது அதான் படுத்துட்டேன்” என பொய்யுரைத்தவள்,… “நீங்க ஏன் பாட்டி படிஏறி வந்தீங்க, அக்காங்க இருப்பாங்கள்ல அவங்க கிட்டயாச்சும் சொல்லிருக்கலாம், இல்லனா ஒரு குரல் கொடுத்திருந்தா நானே வந்திருப்பேன், எல்லாம் என்னால தான், நான் அப்போவே வந்திருக்கணும்” என்றாள் வருந்தும் குரலில்,…

“இதுக்கு ஏன் கண்ணு நீ வருத்தப்பட்டுகிட்டு இருக்க, இந்த கிழவிக்கு கால்ல இன்னமும் பலம் இருக்கு, படியேறுனது அவ்வளவு ஒன்னும் கஷ்டத்தை தரல, உன்னை பார்த்த பிறகு தான் மனசுக்கு கொஞ்சம் திருப்தியா இருக்கு” என்றவர்,…. “ஏன் கண்ணு நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே” என்றார் பீடிகையுடன்,…

“கேளுங்க பாட்டி, உங்களை எப்படி நான் தப்பா நினைப்பேன்” அவள் கூற,… “நீயும் என் பேரனும் சந்தோசமா வாழ ஆரம்பிச்சுட்டீங்க என்பதை ரெண்டாவது நாளே நான் புரிஞ்சிக்கிட்டேன், ஆனா நேத்துல இருந்து உன் முகமே சரி இல்ல, என்ன கண்ணு ஏதாவது பிரட்சனையா?” என்றார்,…

“பிரட்சனை எல்லாம் இல்ல பாட்டி, நேத்து நான் தான் அவரை கொஞ்சம் வருத்த பட வச்சுட்டேன், அதனால என் மனசுக்கும் ஒரு மாதிரியா இருந்தது, நேத்து நைட்டே அது சரியாவும் போச்சு, நீங்க எங்களை நினைச்சு வருத்தப்படாதீங்க பாட்டி, நாங்க சின்ன பசங்க இல்ல, எது சரி எது தவறுன்னு புரிஞ்சிக்கிற பக்குவம் இருக்கு, இப்போ தானே எங்க வாழ்க்கை ஆரம்பிச்சிருக்கு சின்ன சின்ன மனஸ்தாபம் வர தான் செய்யும், அதையெல்லாம் கடந்து வரது தானே வாழ்க்கை” பாட்டியின் மனம் வாடுவதை காண அவளுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை, வயதான காலத்தில் அவருக்கு வேண்டியதெல்லாம் நிம்மதி மட்டுமே, அது தன் பேரன் மற்றும் பேத்தியின் சந்தோசத்தில் தான் உள்ளது என்பதை அவளும் அறிந்தாள், அவருக்கு நம்பிக்கையை ஊட்டினாள், இனி ஒரு தரம் கூட தங்களை நினைத்து அவர் வருந்தக்கூடாது என எண்ணி அவர் மனதை தன் வார்த்தைகளால் குளிர்வித்தாள், தான் கூறியது போல் ரிஷியுடன் வாழ்வாளா என்பதெல்லாம் அவளுக்கு தெரியாது, அதெல்லாம் இரண்டாம் பட்சம், தன் வார்த்தையால் பாட்டி மனம் நிம்மதி கொண்டால் போதும் என்ற எண்ணத்தில் மட்டுமே அவருக்கு நம்பிக்கை கொடுத்தாள்,…

செவ்வந்தியும் மனதில் இருந்த சின்ன சின்ன உறுத்தல்களும் நீங்கி, பேத்தியை உச்சி முகர்ந்து விட்டு, மனம் நிறைவுடன் புறப்பட்டு விட்டார்,…

அன்று மாலை ஐந்து மணியளவில் வீடு வந்து சேர்ந்த ரிஷி,… “கிளம்பலாமா நித்து” என்றான் மனைவியிடம்,…

‘எங்கே’ என்பது போல் அவள் பார்க்க,.. “என்ன தெரியாத மாதிரி பார்க்கிற, உன் லவ்வரை பார்க்க போகணும்னு சொன்ன, கிளம்பு போலாம்” என்றவன்,… “நீ கீழ வெயிட் பண்ணு நான் ஃபைவ் மினிட்ஸ்ல வந்துடுறேன்” என பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான்,…

தன் தேவையை முடித்து விட்டு அவன் வெளிவந்த போது நித்யா இன்னமும் அங்கு இருப்பதை கண்டவன்,… “என்ன இங்க இருக்க, உன்னை கீழ தானே வெயிட் பண்ண சொன்னேன்” என்றவாறு கண்ணாடியின் முன்பு நின்று தலைவாற தொடங்கினான்,…

“நீங்க” என தயங்கியவள்,…. “நீங்க எதுவும் தப்பா நினைக்கலயே” என்றாள்,…

“எதை தப்பா நினைக்கணும்” அவன் தலை சீவிக் கொண்டே வினவ…. “அதான் நான் கருணாவை பார்க்க போறதால” என்று இழுத்து நிறுத்தினாள்,…

“உன் லவ்வரை நீ பார்க்க ஆசை பட்டு பார்க்க போற, இதை நான் எதுக்கு தப்பா நினைக்கணும், உனக்கு எது சரின்னு படுதோ என்ன செய்யணும்னு தோணுதோ அதை செய், நான் என்னைக்கும் உனக்கு தடையா நிற்க மாட்டேன்” என்று கூறிவிட்டு வெளியேறியவன், அவள் ஏதோ யோசனையோடு அதே இடத்தில் சிலை போல் நிறப்பதை கண்டு “வா” என அழைத்தான்,….

  1. “பாட்டிகிட்டயும் தாத்தாகிட்டயும் என்ன சொல்லிட்டு வர” அவள் தயங்கி கொண்டு கேட்க,… “உன் லவ்வரை பார்க்க போறேன்னு சொல்லு, என்ன இருந்தாலும் ஒரு நாள் இல்ல ஒருநாள் என்னை விட்டு அவன் கூட தானே போக போற, அப்போ தெரிய போறது இப்போவே தெரியட்டும்” என்று தோள்களை குலுக்கி கூறியவன், அவ்விடத்தில் நிற்காமல் வேகமாக அகன்று விட, நித்யா தான் செய்வதறியாத நிலையில் நின்றாள்,….

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. என்னடா சொல்றான் இவன்? லவ்வர பாக்க போறேன்னு தாத்தா பாட்டி கிட்ட சொல்லணுமா?? இவன் என்ன make ன்னே புரியலையே??🤔🤔