Loading

மரம் தேடும் மழைத்துளி 7

 

நண்பர்கள் நால்வரும் எப்போதும் தண்ணி அடிக்கும் இடமான, கருவேலம் காட்டுக்கு சென்றார்கள்.

 

முருகன் தனது எம்80 பைக்கில் கணேசனை ஏற்றிக் கொண்டான்.

 

கதிர், அவனது பைக்கில் கருப்புவை ஏற்றிக் கொண்டு, செல்லும் வழியில்.

 

முருகன், “மாப்ள, வீட்ல ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துடறேன். என்று அவன் வீட்டின் அருகில் வண்டியை நிறுத்தினான்”.

 

கணேசன், “பரவால்ல மாப்ள. தண்ணி அடிக்கிறதையும், தவறாமல் வீட்ல சொல்லிட்டு வரணும்னு நினைக்கிறியே. அதுவும் புதுசா கல்யாணம் ஆகியிருக்கு. பயமில்லாமல் வீட்ல சொல்லப்போறேன்னு சொல்ற.”

 

“செய்ய போறது நல்லதோ கெட்டதோ. வீட்டில் சொல்லிட்டு போகணும். அதுதான் நான் பழகிருக்க நடைமுறை,“

 

“உன்னை கெட்டுன பொண்டாட்டி, உண்மையிலேயே கொடுத்து வச்சவ மாப்ள. இப்படி ஒரு உண்மையான புருஷனா நீ இருப்பேனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. போ, போ… சொல்லிட்டு வா… ரொம்ப நேரம் காக்க வச்சிடாதே.” என்று வழி அனுப்பி வைத்தான் கணேசன்.

 

வீட்டுக்குள்ளே சென்ற முருகன், பார்வதியிடம், “அம்மா… நைட்டு வேலை இருக்கு. ஒரு மணி வரைக்கும் வேலை இருக்கும். போயிட்டு வந்துடறேன்”. என்று சொன்னவன்,. ருக்குவிடம் “ருக்கு… நீ, கீழேயே அம்மா கூடவே படுத்துக்கோ. மேல ஒத்தையில தங்க வேண்டாம்.” என்று பொறுப்பாக சொல்லிவிட்டு. வேலைக்கு கிளம்புவதைப் போல அங்குமம் இங்கும் அலைந்து பரபரப்பாக காட்டிக்கொண்டு வெளியேறினான்.

 

பார்வதிக்கு, அவன் சொல்வது வெறும் காரணம் என்று தெரிந்திருந்தாலும், ருக்மணியின் முன்பு விவரிக்காமல் அமைதியாய் இருந்தார்.

 

ருக்மணிக்கு, இன்று இரவு, இன்னும் இயல்பாய் இருக்கும். என்று எண்ணிக் கொண்டு இருந்து விட்டாள்.

 

அங்கிருந்த நால்வரும், கடையில் சென்று தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொண்டு. எப்போதும் அமர்ந்து குடிக்கும் இடத்திற்கு சென்றார்கள். வெளிச்சத்திற்காக இருவரது மொபைலை எடுத்து டார்ச் லைட்டை ஆன் செய்து அருகருகே வைத்துக் கொண்டார்கள். நால்வரும் போதை தரும் மதுவை பகிர்ந்து உண்டார்கள். ஆளுக்கு ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு புலம்ப தொடங்கினார்கள்.

 

“மாப்ள என்னடா ஆச்சு உனக்கு? ஏன் இப்படி முகம் தொங்கிப் போய் அலையிறே… இப்பவாவது மனச தொறந்து சொல்லு. என்று கணேசன் முருகனிடம் கேட்க

 

முருகன், “வெளியில சொன்னால் வெட்கக்கேடு. என் தாய் மாமன் மகள்னு ஆசையோட கட்டிட்டு வந்த பொண்டாட்டிக்கு, என் மூஞ்ச பாத்தால் கொமட்டிக்கிட்டு வருது.”

 

கதிர், “தண்ணி அடிச்சிட்டு, வாயை கழுவாம கிட்டே போனல், என் பொண்டாட்டிகூட மூக்க புடிச்சிட்டு ஏசுவாள்.”

 

கருப்பு, “உன் பொண்டாட்டியும், அவன் பொண்டாட்டியும் ஒன்னா? மாப்பிள்ளைக்கு புது பொண்டாட்டி.”

 

கணேசன், “ரெண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருங்கடா. அவன் என்ன சொல்ல வரான்னு முழுசா கேட்க விடுங்க.”

 

“நீ சொல்லு மாப்ள.” என்று கதிர் முருகனிடம் கேட்க.

 

“எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடுவுல எதுவுமே இல்லை. நான் ஆசையா தொட்டதுக்கு, முகத்தை சுளிச்சுக்கிட்டு, அருவருப்பா என்னை பாக்குறா. அந்த முகத்தை பார்த்தாலே… எனக்கு அவளோட சந்தோசமா இருக்க தோணுமா? இல்ல அடிக்க தோணுமா?

 

கணேசன், “அதனால அடிச்சிட்டயா மாப்பிள்ளை.”

 

“அதெல்லாம் ஒன்னும் பண்ணல. நீயும் வேண்டாம். உன் சங்காத்தமும் வேண்டாம்ன் விலகி இருக்கிறேன்.

 

கருப்பு, “மாப்பிள்ளை உனக்கு இன்னும் வாழ்க்கையோட நெளிவு, சுழிவு சரியா விளங்கலனு நினைக்கிறேன். ஆம்பளைங்க போய் தொட்டதும், வாடா ராசானு, எந்த பொம்பளையும் கூப்பிட மாட்டா. இதெல்லாம் எனக்கு பிடிக்காதுங்குற மாதிரி முகத்த வச்சுப்பாளுங்க. மத்தபடி அவங்களுக்கும் நம்மள மாதிரி எல்லா ஆசையும் இருக்கும். இதுக்கெல்லாம் கோபப்பட்டால் வேலையாகுமா? நீயி முதல் நாள் முரண்டு பிடிச்சால் மறுநாள் அமைச்சிருக்கணும்.”

 

கணேசன், “கருப்பு சொல்றதை, ஒரு வகையில சரின்னு நானும் சொல்லுவேன். நடக்க வேண்டியது நல்லபடியா நடந்துட்டா நம்ம சொல்றத அப்படியே கேப்பாங்க. அதுதாண்டா பொம்பளைங்க. நீ இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்கீயே?“

 

“நானும் ஒரு ஆவேசத்துல, இனிமே உன்னை தொட மாட்டேன்னு சொல்லிட்டேனே.”

 

“இன்னும் அதேயேவா அவ மனசுல வச்சுட்டு இருக்க போறாள். நாளைக்கே நல்லபடியா நடத்தி முடி. எல்லாம் நல்லபடியா நடக்கும்.” என்று முருகனுக்கு கணேசன் ஆசிகூறினான்.

 

கதிர், “இதுல இன்னொரு முக்கியமான விஷயம் இருக்குது மாப்ள, பொம்பளைங்க எப்படி ஆம்பளைங்க சொல்றத கேக்குறாங்களோ… அதே போல சில நேரங்களில் ஆம்பளைங்க, பொம்பளைங்க சொல்றத கேக்குறவங்களா மாறிடுவானுக. அதனால, நீயும் சரியிறதுக்கு வாய்ப்பு இருக்கு. நீ திடமா இருக்க வேண்டிய நேரம் மாப்பிள”.

 

கருப்பு, “என் மாப்பிள்ளை பத்தி எனக்கு தெரியும் டா… அவன் ரொம்ப திடமான ஆளு.”

 

“மாப்ள சந்தோசமா இருக்க வேண்டிய நேரத்துல சந்தோசமா இருக்கணும். இந்த நேரத்திலே சண்டை பிடிச்சுக்கிட்டு. வாழ வேண்டிய வயசு கடந்ததுக்கப்புறம், ஏங்க கூடாது. நீ பெருசா? நான் பெருசாங்க? எண்ணம் வரக்கூடாது. இருந்துட்டு போகட்டுமே… அவளே பெரிய ஆளா, இருந்துட்டு போகட்டுமே. ஒரு புள்ள குட்டி என்று ஆன பிறகு, இப்ப இருக்கிற திமிரும், தெனாவட்டும் அப்போ இல்லாம போயிரும். அதுக்கு பிறகு உன்னை பிரிஞ்சு எங்கேயும் போக முடியாது. ஏன்னா… பிள்ளைக்காக இருந்துதான் ஆகணும்டா. பிள்ளைய பிரியமுடியாதுங்குற கட்டாயத்துக்கு கட்டுப்பட்டு இருப்பாங்க. நான் சொல்றதை சொல்லிட்டேன். அதை நீ நல்லபடியா கேட்டுக்கனும் மாப்பிள்ளை.” என்று கதிர் தன் பங்குக்கு முருகனுக்கு அறிவுரை சொன்னான்.

 

கொண்டு சென்ற அனைத்தையும் சாப்பிட்டு முடித்த பிறகு. தட்டுதடுமாறி இரவு 12 மணிக்குமேல், மெதுவாக கருவேலம் காட்டை விட்டு வெளியே வந்தார்கள். வரும்போது இருட்டில் சரியாக பாதை தெரியாததால் தலைக்கு மேல் வளர்ந்திருந்த கருவேல முள், முருகனின் கண்ணை பதம் பார்க்க வேண்டியது, தவறுதலாக புருவத்தில் கோடோடு விட்டுவிட்டது. நண்பர்கள் மூவரும் என்னடா ஆச்சு மாப்பிள்ளை? என்னடா… பாத்து வர வேண்டியது தானடா? என்று துடித்து போனார்கள். கருவேல முள் தைத்த காயத்தில் கதிர் தன்னுடைய எச்சிலால் மருந்திட்டு முருகனை பத்திரமாக கொண்டு வந்து வீடு சேர்த்தான். கீழே வீடு பூட்டி இருக்க.மெல்ல மாடிப்படி ஏறி, தனி அறையில் சென்று படுத்துக் கொண்டான்.

 

மறுநாள் வழக்கம்போல், தினசரி வேலைகளை செய்துவிட்டு. இரவின் தொடக்கத்தில் வீடு வந்து சேர்ந்திருந்தான் முருகன்.

 

தன்னுடைய சாப்பாட்டு கூடையை கீழ் வீட்டில் வைக்காமல், அப்படியே மாடிப்படி ஏறிச்சென்று தனியறையில் வைத்துவிட்டு கீழே வந்தான்.

 

பார்வதி, “இன்னைக்கு நைட்டு வேலை இருக்கா? இல்லையா?”

 

“இன்னைக்கி பால் காய்ச்சு இருக்கு. அதனால ராத்திரி, கதவுக்கு மட்டி அடிக்க கூப்பிட்டாங்க போனேன். இன்னைக்கு வேலை கிடையாது.”

 

“அது எந்த மகராசன் செவ்வாக்கிழமை பால் காய்ச்சபோறவன்?”

 

“அடடா, இல்லனு ஒரு வார்த்தைல சொல்ற பதிலை, இல்லாததும் பொல்லாததும் சொல்லி மாட்டிக்கிட்டேனே…” என்று எண்ணிய முருகன், “கூப்பிடுறவக, இன்னும் ஒரு மணி நேரத்திலே பால் காய்ச்ச போறேன்னு சொல்லுவாங்க. அதுக்காக ஒரு மணி நேரத்தில பால் காய்ச்சிடுவாங்களா? இன்னைக்கு வேலை இல்ல. இன்னும் கொஞ்ச நேரத்துல வேலைக்கு வானு கூப்பிட்டா போகணும்.” என்று சொல்லிவிட்டு சாப்பிடுவதற்கு அமர்ந்தான்.

 

ருக்மணி, முருகனுக்கு முன்பு தட்டு, சாதம், குழம்பு, நிறை சொம்பு தண்ணீர் என்று வைத்துவிட்டு நின்று இருந்தாள்.

 

 

பார்வதி, “ருக்கு… உட்கார்ந்து பரிமாறு.”

 

ருக்குவுக்கு, உக்காரவா? வேண்டாமா என்று யோசனையோட,

 

முருகன், அதான் அம்மா சொல்றாங்கல்ல, உட்கார்ந்து பரிமாறு. என்று முருகன் சொன்னதும்.

 

தரையில் அமர்ந்த ருக்கு, சோற்று சட்டியை தொடும் முன்பு.

 

முருகனே… சாதம் எடுத்து வைத்துக் கொண்டு குழம்பை ஊற்றிக்கொண்டு. சாப்பிட்டு முடித்து. சொம்பில் இருந்த தண்ணீரில் கையை கழுவி, மீதம் இருந்த தண்ணீரை குடித்துக் கொண்டு. அனைத்தையும் எடுத்து சமையல் அறையில் வைத்து விட்டு, “நான் மாடில இருக்கேன் வந்துரு.” என்று சொல்லிவிட்டு சென்றான்.

 

ருக்மணி, உட்கார்ந்த இடத்திலேயே முருகனைப் பார்த்து பிரமித்து போய், எழுந்திருக்க மறந்து போனாள்

 

அவளைப் பார்த்த பார்வதியும், “எதுக்கு இந்த புள்ள இப்படி இருக்கு?” என்று எண்ணிக் கொண்டு மலைத்துப் போனார்.

 

“ருக்கு… நீயும் கையோட சாப்பிட்டுட்டு, படுக்கப் போ…” என்று பார்வதி சொன்னதும். சுயநினைவு பெற்றவளாக எழுந்து சென்றாள் ருக்மணி.

 

மாமியாரும், மருமகளும் ஒன்றாக அமர்ந்து உண்டு முடித்தார்கள். சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு. காலை தேவைக்க, அருகில் இருந்த அடி குழாயில் சென்று, ஐந்து குடம் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து வைத்துவிட்டு. மாடி அறைக்கு சென்றான் ருக்மணி.

 

படுக்கையில் ருக்குவிற்காக காத்துக் கொண்டிருந்தான் முருகன்.

 

ருக்மணி, “நீங்களே ஜமுக்காளத்தை விருச்சிட்டீங்களா மாமா? கூப்பிட்டீங்கன்னா வீட்டை கூட்டிவிட்டு நானே வந்து விரிச்சு கொடுத்திருப்பேனே.”

 

“நீ வீட்டுல வேலை பார்த்துக்கிட்டு இருந்தே. அதான் நான், வீட்டையும் கூட்டிவிட்டு. விரிப்ப போட்டு வச்சிருக்கேன். என்று சொன்ன முருகன், பக்கத்தில் வைத்திருந்த பால்கோவா பொட்டலத்தை எடுத்து கொடுத்து, “முதல்ல இப்படி உட்காரு. தெரிஞ்சவர் ஒருத்தர் பால்கோவா வாங்கிட்டு வந்து கொடுத்தாரு, என்று ருக்மணியை அருகில் அமர்த்தி அவள் கையில் கொடுத்தான்.

 

பால்கோவாவை வாங்கிக் கொண்ட ருக்மணி, பொட்டலத்தை பிரித்து. அவனுக்கும் அதில் கொஞ்சம் எடுத்து கையில் கொடுக்க.

 

“எனக்கு உன் கையால சாப்பிடணும்னு ஆசையா இருக்கு ருக்கு. எனக்கு ஊட்டி விடுவியா?” என்று கண்களில் காதல் வழிய, தேன் சொட்டும் வார்த்தைகளால் பேசினான்.

 

அவன் கேட்டவுடன் ருக்குவுக்கு வெட்கம் வந்து அப்பிக் கொண்டது. தலையை கவிழ்ந்து கொண்டு, கையில் இருக்கும் பால்கோவாவை நீட்டி அவன் வாயருகே கொண்டு செல்கிறேன் என்று மூக்கின் அருகில் கொண்டு சென்றாள்.

 

முருகன், ருக்குவின் கையை பிடித்து, தன்னுடைய வாயில் ஊட்டி விடும்படி வைத்துக் கொண்டு, அவள் கையில் இருந்த பால்கோவா சுவைத்து உண்டவன், அவளது கைவிரல்களையும் சேர்த்து சுவைத்தான்.

 

முருகனது நாக்கின் வருடல்கள் ருக்மணியின் மேனியை நடுங்கச் செய்தது. அந்த நடுக்கம் அவளுக்கு அவன் மேல் பயத்தை தரவில்லை. அவன் மேல் ஒருவிதமான ஈர்ப்பை கொடுத்தது.

 

தன்னிலை மறந்தவள், கண்களை மெல்ல மூடிக்கொண்டாள். அவள் கையில் வைத்திருந்த பால்கோவாவை வாங்கிய முருகன், அவளுக்கும் ஊட்டிவிட்டான். வாய்க்குள் இருந்த பால்கோவா வழுகி செல்ல மறுத்தது.

 

அந்த பால்கோவா வீணாக்கி விட வேண்டாம் என்று, முருகன் தனது வாயில் வாங்கிக் கொண்டான்.

 

இப்பொழுது கொடுக்கும் ருக்மணியின் முகம், இயல்பாகவே இருந்தது. அதையும் கவனித்துக்கொண்டான் முருகன்

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்