அன்று மதியமே வேலை முடிந்துவிட்டதால், பொறுமையாகக் கிளம்பி பக்கத்தில் இருக்கும் கஃபேவிற்கு மதிய உணவிற்காக வந்திருந்தாள் ராகவி. தனக்கான உணவை ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருக்கும் போது, அவளுக்குப் பின் ஒரு பரிச்சயமான குரல் கேட்டது. யார் அது எனத் திரும்பிப் பார்க்க நினைக்கும் முன் அவளுக்கான உணவு வர, அவர்கள் பேசியதை மட்டும் கேட்டுக்கொண்டே சாப்பிட ஆரம்பித்த ராகவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தாரகேஷ், “எப்படிம்மா இருக்க? எல்லாம் ஓகேதானே? ஒன்னும் பிரச்சனையில்லையே?”
சஞ்சனா, “அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்லைண்ணா..”
தாரகேஷ், “மறுபடியும் அவன் ஏதாவது பிரச்சனை பண்ணான்னா..?”
சஞ்சனா, “அப்படியெல்லாம் இல்லைண்ணா.. பொண்ணை மட்டும் ஞாயிற்றுக்கிழமை பார்த்துட்டுப் போய்டுவாரு. அத்தையும் போன தடவை சண்டை போட்டு ரொம்ப பிரச்சனை ஆச்சு.. அப்புறம் போய்ட்டாரு. வேற ஒன்னும் இல்லைண்ணா.. பாப்பாவைப் பார்க்க நீங்க வீட்டுக்கு வரலாம்லண்ணா?”
தாரகேஷ், “இருக்கட்டும்மா.. பாப்பாவைப் பார்த்தா மறுபடியும் நான் எமோஷனல் ஆகிருவேன். பாப்பா பத்திரமா வளரட்டும். எந்தச் சூழ்நிலையிலும் அவளைக் காப்பாத்துவேன். உன்னைய மாதிரி கஷ்டப்பட விடமாட்டேன். அவளைப் பாதுகாப்பா வளர்க்க வேண்டியது என் பொறுப்பு,” எனக் கூறும்போதே அவன் கண்களில் கோபத்துடன் கூடிய வலி தெரிந்தது.
மேலும் சிறிது நேரம் இருவரும் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டனர். இவர்கள் பேசியதைக் கேட்ட ராகவி மேலும் குழம்பினாள். ‘தாரகேஷ் ஒரே மாதிரி காதலைப் பிரித்து ஆண்களின் வாழ்க்கையை அழித்துவிடுகிறான்’ என அவள் நினைத்திருக்க, அதற்குச் சற்றும் பொருந்தாத சஞ்சனாவின் வாழ்க்கையில் தாரகேஷ் ‘அண்ணனாக’ இருப்பது அவளை மேலும் குழப்பியது.
அதற்கு மேல் சாப்பிட முடியாத ராகவி, ஆபீஸில் இருந்து நேரே வீட்டிற்குச் சென்று சஞ்சனாவிற்காகக் காத்திருந்தாள். சஞ்சனா வேலை முடிந்து தங்களது தெருவிற்குள் வருவதை வாசலில் வைத்தே கவனித்த ராகவி, அவளிடம் பேசக் காத்துக்கொண்டிருந்தாள். ராகவி தனக்காகக் காத்துக்கொண்டிருப்பதை அறியாத சஞ்சனா, வழக்கம்போல ஒரு புன்னகையுடன் தலையசைத்துவிட்டுத் தன் வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
அவ்வளவு நேரம் பொறுமையாக இருந்த ராகவி, இப்போது சஞ்சனாவிடம் சென்று கேட்க ஒரு நொடி தயங்கினாள். பின் ஒரு முடிவோடு எதிர் வீட்டுக்குச் சென்றவள், சஞ்சனாவை அழைத்தாள்.
சஞ்சனா, “வா ராகவி.. என்ன விஷயம்?”
ராகவி, “உள்ள வந்து பேசவா சஞ்சனா?”
சஞ்சனா, “வா ராகவி..” என்றவள் ராகவிக்கு வழிவிட்டு கதவைத் திறந்தாள். உள்ளே வந்து சோஃபாவில் அமர்ந்த ராகவி, டென்ஷனாக இருந்தாள். பின் ஒருவாறாகத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.
ராகவி, “இன்னைக்கு ஆஃப்டர்நூன் உங்களை சென்ட்ரல் கஃபேல ஒருத்தரோட பார்த்தேன்.. அது…” எனத் தயங்கினாள்.
சஞ்சனா, “தாரகேஷ் அண்ணனா? அவருக்கு என்ன?” என்று புரியாமல் கேட்டாள்.
ராகவி, “கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. அவர் உங்களுக்கு எப்படி சொந்தம்? ஐ மீன்.. அவர் உங்க சொந்த அண்ணனா?”
சஞ்சனா, “இல்லை ராகவி, தாரகேஷ் அண்ணன் என் அம்மா வீட்டுக்கு பக்கத்து வீட்டுல இருந்தாரு.”
ராகவி புரியாமல் பார்க்க, சஞ்சனா தொடர்ந்தாள்.
“என் கல்யாணத்துக்கு முன்னாடி நானும் தாரகேஷும் பக்கத்துப் பக்கத்து வீட்டுல தான் இருந்தோம். தாரகேஷ் எனக்கு அண்ணா மாதிரி. என்னை ரொம்பப் பத்திரமா பாத்துப்பார். ஊருல இருக்க அத்தனை ஆம்பள பசங்களும் பொண்ணுங்களை அவங்களோட உடைமையா பார்க்கும் போது, அண்ணன் மட்டும்தான் ‘பூ’ மாதிரி பார்ப்பார்.
நானும் காலேஜ் முடிச்சுட்டு வேலைக்காகக் காத்துட்டு இருந்தேன். அப்போ தான் ராகேஷோட சம்பந்தம் எங்க வீட்டுக்கு வந்தது. நல்ல பையன், எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது, என்னை நல்லாப் பாத்துப்பான்னு சொன்னாங்க. எனக்கும் அவரை வேண்டாம்னு சொல்லப் பெரிய காரணம் இல்லை. கொஞ்சம் பிடிக்கவும் செஞ்சது. சரின்னு சொல்லிட்டேன்.
ராகேஷ் எங்க வீட்டுக்கு வந்ததுல இருந்து ஆறு மாசத்துல எங்களுக்குக் கல்யாணம் நடந்தது. இடைப்பட்ட அந்த ஆறு மாசத்துல நிறையப் பேசுனோம், அடிக்கடி வெளிய போனோம். ரெண்டு பேருக்கும் நிறையச் சிந்தனைகள் ஒத்துப்போச்சு. குட்டி குட்டி சண்டைகளோட அந்த ஆறு மாசம் எங்களுக்கு சொர்க்கம் தான்.
ஆனா கல்யாண நாள் நெருங்க நெருங்க அவர் கிட்ட ஒரு விலகல் இருந்தது. என்ன பிரச்சனைனு தெரியல, ஆனா கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது. அதுக்கப்புறம் தான் தெரிந்தது, அவருக்கு நிறையக் கடன் இருக்குன்னு. ஆன்லைன் கேம்ப்ளிங்ல (Online Gambling) 5 லட்சத்துக்கும் மேல! நாங்க ‘இருக்கிற கடன் போதும், இனிமேல் விளையாடாதீங்க’னு சொன்னாலும் கேக்கல. ரொம்ப அடிக்ட் ஆகிட்டாரு. கல்யாணம் ஆன ஒரு மாசத்துலேயே அந்த 5 லட்சம் கடன் 6 லட்சமா வந்து நின்னது. அந்த ஒரு மாசத்துலயும் நாங்க வாழ்ந்ததே ஒரு வாரம் தான். எப்பவும் கேம் தான், நைட் எல்லாம் தூங்காம விளையாடுவாரு.
அத்தைக்கும் முதல்ல விஷயம் தெரியல. தெரிஞ்சதும் வீட்டுல பெரிய சண்டை. அப்புறமும் அவர் கேக்கல. நாங்க ஒரு வாரம் வாழ்ந்ததுலயே நான் பிரெக்னென்ட் ஆகிட்டேன். குழந்தைச் செலவு, ஹாஸ்பிட்டல்னு இன்னும் செலவு தான் வந்தது. கடன்காரன் வீட்டு வாசல்ல வந்து நிக்க ஆரம்பிச்சான். என் அம்மா வீட்டுல ‘கட்டிக்கொடுத்தாச்சு, கடன் எல்லாம் ஒரு பிரச்சனையா? அட்ஜஸ்ட் பண்ணி வாழு’னு சொல்லிட்டாங்க. நான் அங்க போய்ட்டா கடன் அவங்க தலைல விழுந்துருமோன்னு பயம் அவங்களுக்கு.
அத்தை ‘நான் உங்களைக் காப்பாத்துறேன்’னு வேலைக்குப் போக ஆரம்பிச்சாங்க. நானும் அப்போ ஒரு சூப்பர் மார்க்கெட்ல வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். அப்போ தான் அண்ணாவைத் திரும்பப் பார்த்தேன். வயித்துல குழந்தையை வச்சுட்டு நான் கஷ்டப்படுறதைப் பார்த்து அண்ணன் ரொம்பவே துடிச்சுப் போய்ட்டார். என்கிட்ட என்ன பிரச்சனைனு விசாரிச்சாரு. ‘இதுக்கு அப்புறமும் கடன்காரன்கிட்ட நீ கஷ்டப்படணும்னு அவசியம் இல்லை, வா போகலாம்’னு மொத்த கடனையும் அடைச்சாரு.
ஆனா ராகேஷால அந்த அடிக்ஷன்ல இருந்து வெளிய வர முடியல. மறுபடியும் கடன் வாங்க ஆரம்பிச்சாரு. ஆனா இந்தத் தடவை அண்ணன் அதுல என் பேரு இல்லாம தடுத்துட்டாரு. அவன் கூட இருந்து கஷ்டப்பட்டது எல்லாம் போதும்னு எனக்கும் ராகேஷுக்கும் டைவர்ஸ் வாங்கி கொடுத்ததே அண்ணன் தான். அத்தையே சொன்னாங்க, அண்ணனுக்கு இருக்கிற அக்கறை கூட தன் மகனுக்கு இல்லைன்னு. என்னதான் ராகேஷும் நானும் பிரிஞ்சாலும் எங்களைக் கைவிடக்கூடாதுனு அத்தை எங்க கூடவே வந்துட்டாங்க.
அண்ணனுக்கு ஏற்கனவே ராகேஷ் மேல டவுட் இருந்திருக்கு. கல்யாணத்துக்கு முன்னாடியே எங்க வீட்டுல ‘மாப்பிள்ளையைப் பத்தி நல்லா விசாரிச்சீங்களா?’னு கேட்டுட்டே இருந்தாரு. நாங்களும் முதல்ல விசாரிச்சப்ப பெருசா எதுவும் ராகேஷ் பத்தி தப்பா சொல்லாதனால நல்ல பையன் தான்னு சொல்லி முடிச்சுட்டோம். அதுக்கப்புறம் அண்ணாவைப் பார்க்கவே இல்லை. என் கல்யாணம் முடியிற வரை வீட்டை விட்டு அண்ணா வரலைனு மத்தவங்க பேசுனது லேட்டாதான் தெரிஞ்சது. அப்போவே அண்ணன் சொன்னதைக் கேட்டிருக்கலாம்,” எனத் தன் கதையை முடித்த சஞ்சனா பெருமூச்சு விட்டாள்.
சஞ்சனா சொன்னதைக் கேட்ட ராகவி மேலும் குழம்பினாள். ஆனால், ராகேஷ் கேம் அடிக்ட் ஆக தாரகேஷ் என்ன செய்திருக்க முடியும்? இருப்பினும் அந்த வாரம் வந்த ராகேஷிடம் அது பற்றி கேட்க, அவனோ, “எனக்கு ஒரு நாள் ஒரு சிம்பிள் கேம் விளையாட லிங்க் வந்தது. யார்னாலும் விளையாடுற மாதிரி ரொம்ப ஈஸியா தான் கேம் இருந்தது. சரி ட்ரை பண்ணுவோம்னு விளையாண்டப்ப ரொம்ப ஈஸியா 5000 ஜெயிச்சேன். அங்கதான் நான் வாழ்க்கையில தோத்தேன்,” என்று கேம் அடிக்ஷனில் இருக்கும் பலரைப் போலத் தான் கதை சொன்னான்.
ஆனாலும் சஞ்சனாவின் கடனை அடைக்கும் அளவுக்குத் தாரகேஷ் இதில் எப்படி சம்பந்தப்பட்டிருப்பான் என்று மேலும் குழம்பினாள். இப்படியான சூழ்நிலையில் தான் ராகவி ஒரு கான்பரன்ஸிற்காகப் பெங்களூரு செல்ல வேண்டியது இருந்தது. பெங்களூரு சென்ற ராகவி, சரண்யாவுடன் அவள் இருக்கும் கம்பெனி அப்பார்ட்மெண்டில் தங்கினாள்.
மாலையில் காற்றாட சரண்யாவும் ராகவியும் பார்க்கில் வாக்கிங் செல்ல, அங்கே தோட்டத்துப் பூக்களுடன் தாரகேஷ் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டாள். 30 நிமிடங்களுக்கும் மேலாக மெய்மறந்து பூக்களிடம் பேசிக்கொண்டிருந்த தாரகேஷைப் பார்த்த ராகவிக்கு, அவன் பெண்களை ‘பூ’ எனப் பலமுறை குறிப்பிட்டது சட்டென ஞாபகம் வந்தது.
ராகவி சரண்யாவிடம், “சரண்… எங்க வீட்டுக்கு எதிர்ல புதுசா வந்த சஞ்சனா சொன்னேன்ல.. அவளுக்கும் கல்யாணம் ஆகி ஒரே வருஷத்துல டைவர்ஸ் ஆகிருக்கு. அவளுக்கு 6 லட்சம் கிட்ட கடன், தாரகேஷ் தான் அடைச்சிருக்காரு. எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு,” என்றாள்.
சரண்யா, “ஆரம்பிச்சுட்டியா? ஹி இஸ் ஸச் எ ஜென்டில்மேன்! சொன்னா கேளு, சும்மா அவரையே சந்தேகப்படாத. வேணும்னா ஒன்னு பண்றேன். டெய்லி தாரகேஷ் முப்பதுல இருந்து 40 நிமிஷம் இந்த மாதிரி பூக்கள் கிட்ட பேசப் போவாரு. அப்போ அவரு வீட்டுல வேலைக்கார அக்கா மட்டும்தான் இருப்பாங்க. அவங்களை எனக்கு நல்ல பழக்கம்னு இல்லாம கொஞ்சம் தெரியும். நாளைக்கு நீ தாரகேஷ் சாரோட பழைய ஜூனியர்னு சொல்லி நாம அங்க போவோம். நான் அந்த அக்காவை என்னால முடிஞ்ச அளவுக்குத் திசை திருப்புறேன். நீ வேணும்னா உனக்கு ஏதாவது ஆதாரம் கிடைக்குதான்னு பாரு. ஆனா உனக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான். ஒருவேளை எதாவது ஆதாரம் கிடைச்சா உடனே நீ இந்த ஊரைவிட்டே கிளம்புற மாதிரி இருக்கும்,” என்று ஐடியா கொடுத்தாள்.
ராகவிக்கும் வேறு வழி இருக்கவில்லை. தன்னைச் சுற்றி இருக்கும் பல பெண்களுக்குக் காதல் வாழ்க்கை தோல்வியில் முடிந்துள்ளது. அதில் எல்லாம் ஆண்கள் கெட்டவர்களாக உள்ளனர், இல்லையெனில் அப்படிக் காட்டப்பட்டுள்ளனர். ஏதோ ஒரு வகையில் தாரகேஷ் சம்பந்தப்பட்டுள்ளான் என்று உள்மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. இதற்கு ஒரு முடிவு வேண்டும் என்று நினைத்தவள் சரண்யாவின் ஐடியாவிற்குச் சம்மதம் கூறினாள்.
மறுநாள் மாலை இருவரும் தாரகேஷ் இல்லாத நேரம் அவன் வீட்டிற்குச் சென்றனர். வேலைக்கார பெண்மணி வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருக்க, இருவரும் அழைப்பு மணியை அழுத்தினர். கதவைத் திறந்த அவர், “என்னம்மா சரண்யா? யார் இது? சார் இல்லையே, கீழ பார்க்ல இருப்பாரு,” என்றார்.
சரண்யா, “அப்படியாக்கா? இது என் பிரண்ட் ராகவி, கொஞ்ச வருஷம் முன்னாடி சாரோட ஜூனியரா இருந்தா. இங்க வேலைக்கு வந்தவ, இன்னைக்கு ஊருக்குக் கிளம்புறதுக்கு முன்னாடி சாரைப் பார்க்க வந்தா.. சரி பரவால்ல.. நாங்க கிளம்புறோம்,” என்று கிளம்புவது போல் சீன் போட்டாள்.
வேலைக்கார பெண்மணி, “அட என்னம்மா.. ரொம்ப வருஷம் கழிச்சு சாரைப் பார்க்க வந்திருக்கிற பொண்ணுன்னு சொல்ற.. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க, சார் 10 நிமிஷத்துல வந்துருவாரு. நான் டீ போட்டுத் தரேன். பொண்ணுங்களைச் சரியா நடத்தலன்னா சாருக்குப் பிடிக்காது,” என்று கிச்சனுக்குள் சென்றார்.
அவருடனே உள்ளே சென்ற சரண்யா, பேச்சு கொடுத்துக்கொண்டே அவரை கிச்சனிலேயே பிடித்து வைத்துக்கொண்டாள். அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்ட ராகவி, அங்கே வீட்டைச் சுற்றிப்பார்ப்பது போல் பார்த்துக்கொண்டே ஒரு படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.
நல்லவேளையாக அது தாரகேஷின் அறையாக இருந்தது. வேகமாக அங்கே இருந்த பொருட்களைக் கலைக்காமல், கண்களினாலே ஏதாவது வித்தியாசமாகத் தெரிகிறதா என்று பார்க்க, அங்கே இருந்த டேபிளின் கீழ் வித்தியாசமாக ஒரு டிராயர் கண்ணில் பட்டது. அதைத் திறந்து பார்க்க, அதில் பல விதமான ஜர்னல்கள் வரிசையாக இருந்தது. அதைத் திறந்து பார்க்க, வருடங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. அவளுக்கு பிரேக்-அப் ஆன 2024-க்கான ஜர்னலை மட்டும் எடுத்துக்கொண்டவள், வேகமாக டிராயரைப் பூட்டிவிட்டு வெளியே வந்தாள்.
வேலைக்காரப் பெண்மணியிடம் நேரமாவதாகக் கூறி இருவரும் வீட்டை விட்டு வெளியே வர, எதிரே தாரகேஷ் வந்துகொண்டிருந்தான். அவனைப் பார்த்த இருவரும் மூச்சடைத்து நின்றனர்.அத்தியாயம்: 8

வேலைக்காரப் பெண்மணியிடம் நேரமாவதாகக் கூறி இருவரும் வீட்டை விட்டு வெளியே வர, எதிரே தாரகேஷ் வந்துகொண்டிருந்தான். அவனைப் பார்த்த இருவரும் மூச்சடைத்து நின்றனர்.