Loading

அத்தியாயம் 41

 

“நா படுக்குறேன், யாரையும் ரூம்குள்ள மட்டும் விடாத, நீயும் ரூம் வாசல்லயே எல்லாத்தையும் வச்சுரு, நா எடுத்துக்குறேன்”. 

 

“ஏன்? ஏன்? எதுக்கு? சாதாரண பீவர்ன்னீங்க, அப்றம் ஏன் இப்டி சொல்றீங்க?” என படபடத்தாள். 

 

“ம்மா, எல்லாமே சேஃப்டிக்குத்தான். என் ஒருத்தனுக்கு மட்டும்னா நீங்க எல்லாரும் சேந்து பாத்துப்பீங்க, இன்னொருத்தருக்கும் ஸ்ப்ரட் ஆகிடக்கூடாதுன்னு முன்னெச்சரிக்கையா சொல்றேன் பயந்துக்காத”.

 

“ம்ம்” என்ற தலையாட்டலுடன், அவனுடன் சென்று அவன் படுக்க ஏதுவகை செய்தாள். 

 

“நீ உள்ள வர வேணாம், அப்டியே வந்தாலும் மாஸ்க் போட்டு வா. இங்கயிருந்து வெளில போன உடனே கைய கழுவிடு. அசால்டா இருக்க வேணாம், புரியுதா?”. 

 

“நீங்க அது தான்னு கன்ஃபார்ம் பண்ணி பேசுறீங்க, அதெல்லாம் ஒன்னும் இருக்காது. நாளைக்கு சரியாயிடும், நீங்க ஏதேதோ சொல்லி என்னை பயமுறுத்தாதீங்க. நா இன்னைக்கு உங்க கூட தான் படுப்பேன். நைட் எது தேவனாலும் எடுத்து தரணும்ல்ல”. 

 

“அதெல்லாம் ஒன்னும் வேணாம், நா பாத்துக்கிறேன், இப்ப போய் சாப்பாடு எடுத்துட்டு வா டேப்லெட் போடணும்” என கண்ணை மூடி படுத்துகொண்டான். 

 

முக சுணங்களுடன் வெளியேறினாள். அந்நேரம் வைரம் வர, “என்னடா சொன்னாங்க?” என்றாள் அவனிடமும். 

 

“இப்போதைக்குப் ஃபீவருக்கு இன்ஜக்ஷன் போட்டாரு, பிளட் டெஸ்ட் எடுத்தாங்க, வைரல் ஃபீவரான்னு தெரிஞ்சுக்க. ரிப்போர்ட் நாளைக்கு தான் சொல்லுவாங்க. பீவேர் நாளைக்கு இல்லன்னா ப்ராப்ளம் இல்ல. நாளைக்கும் கண்டினியூ ஆச்சுன்னா கோவிட் டெஸ்ட் எடுக்கணும்னு சொல்லிருக்காங்க. நீ ஒன்னும் ஒர்ரி பண்ணிக்காத, சீனியருக்கு சரியாகிடும். நா கிளம்பறேன், வரேன் ஆண்ட்டி, வரேன்ம்மா” என அங்கங்கு நின்ற அம்மாக்களிடமும் சொல்லிவிட்டு கிளம்பினான். 

 

அந்த நேரத்திலிருந்து மூன்று பேரும் அவனுக்காக அவரவர் இஷ்ட தெய்வத்தை வணங்க தொடங்கினர். இட்லியை கொண்டு போய்க் கொடுத்து விட்டு அவன் சாப்பிட்டுவிட்டு படுக்கவும் வெளிவந்தாள். 

 

தானும் சாப்பிட அமர இட்லி 2 வில்லைக்கு மேல் இறங்க மறுத்தது மன பயத்தால். எப்படியோ இழுத்துப்பிடித்து ரெண்டு இட்லியை விழுங்கிவிட்டு…, இஞ்சி, மஞ்சள், எலுமிச்சை, மிளகு, உப்பு போட்டு கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொண்டு அவனறைக்கு சென்றாள். 

 

போர்வையை போத்தி ஃபேன் போடாமல் படுத்திருந்தவனைக் கண்டு இவளுக்கு அதிகமாக வேர்த்தது. “என்னாச்சுங்க குளிருதா ரொம்ப, இந்த தண்ணீய சூடா குடிங்க கொஞ்சம் வெக்கையா தெரியும்” என கொடுத்தாள், மறுக்காமல் வாங்கிக் குடித்தான். 

 

வெளியே வந்தவள், “நா இன்னைக்கு அவங்களோட படுத்துகிறேன், கிட்ட இருந்தா தான் பாத்துக்க முடியும். நீங்க ரெண்டு பேரும் பிள்ளைகள பாத்துக்கோங்க” என்றவள் அவர்கள் பதிலையும் எதிர்பார்க்காமல் உள்ளே சென்றுவிட, தத்தித் தத்தி நடந்து வந்த பேரனை தூக்கிக்கொண்டு ராஜம் பிள்ளைகள் அறைக்கு சென்றுவிட, இரு பாட்டில்களயும், ஃப்ளாஸ்கில் பாலையும் ஊற்றி எடுத்துக் கொண்டு எல்லா அறை லைட்டையும் அணைத்துவிட்டு, முன் கதவை பூட்டிவிட்டு பிள்ளைகள் இருக்கும் அறைக்குள் சென்று பாப்பா தூங்கும் தொட்டிலின் கீழ் படுத்துக் கொண்டார் ஜெயந்தி.

 

அங்கு ௭ழில் ப்ரகலத்தன் இருந்த அறைக்குள் சென்று கட்டிலில் அவனருகில் அமர்ந்து போர்வைக்குள் தன்னை நுழைத்துக் கொண்டு அவன் மீது கையை போட்டு படுத்துக் கொண்டள். அவனும் தூக்கத்தில் அவளைத் தன்னோடு இறுக்கிக்கொண்டான். 

 

ஒரு பத்து நிமிடம் சென்றிருக்கும், அவனுக்கு இருமல் வந்து தூக்கம் சற்று தெளிய இறுமியவன் அப்போதுதான் தன் நெஞ்சை நீவி விடும் மனைவியை கண்டு, “நீ எப்ப வந்து படுத்த, உள்ள வராதன்னு சொன்னா. என்னை கட்டி புடிச்சிட்டு வேற படுத்துருக்க ஃபீவேர் உனக்கும் வரட்டும்னாடி. எந்திரி மொதல்ல வெளியே போ, அந்த ரூம்ல படு” என்றவனுக்கு மறுபடியும் இருமல் வர, வேகமாக எழுந்து பிளாஸ்கில் இருந்த தண்ணியை கப்பில் ஊற்றி தந்தாள். 

 

வாங்கி குடித்தவன், மாஸ்க்கை எடுத்து மாட்டிக் கொண்டான். “நா இங்க தான் படுப்பேன், உங்களுக்கு ஒன்னுமில்ல, அப்டியே இருந்தாலும் எனக்கும் வரட்டும் பரவால்ல. நா இங்க தான் படுப்பேன்” ௭ன்றாள் பிடிவாதமாக. 

 

“கோபத்த கிளப்பாம வெளியே போய் படு எழில். எனக்கு டயர்டா இருக்கு பேச முடில” ஆசுவாசமாக சொல்ல. 

 

“நா போக மாட்டேன்”. 

 

“ஏன்டி அடம் புடிக்கிற”. 

 

“நீங்க ஏன் ஃபீவர் வர வச்சீங்க. கவனமா இருந்துருக்க வேண்டியது தான. நாளைக்கு வேற இன்னும் ஃபீவர் இருந்தா கோவிட் டெஸ்ட் எடுப்பாங்கலாம். எனக்கு பயத்துல நெஞ்சே நின்றும் போலருக்கு. தனியா போய் எப்டி படுப்பேன். நா போ மாட்டேன். நீங்க தூங்குங்க”. 

 

“என் கூட இருந்துட்டு அப்டியே போய் பாப்பாக்கு ஃபீட் பண்ணுவியா நீ? நைட் பாப்பா முழிப்பா தான, போ அங்க”. 

 

“பிளாஸ்க்ல பால் ஊத்தி குடுத்துட்டு தான் வந்துருக்கேன். பாப்பா இன்னைக்கு மட்டும் அத குடிச்சுப்பா”. 

 

“இது சரிப்பட்டு வராது. இப்ப நீ வெளில போகலன்னா, நா வெளில எங்கேயாவது போய் தனியா தங்கிப்பேன். எனக்கு இருமல் வருது தள்ளியிருன்னு சொன்னா கேட்க மாட்டேங்குற. என்னால பேச முடியல, நீ போறியா? நா போகவா?” என திட்டி தான் விட்டான் காட்டமாக. 

 

அதிகமாக இவள் தான் அவனிடம் சண்டைக்கு நிற்பாள். அவன் சமாதானம் செய்வான். இப்போது அவன் திட்ட, ஏற்கனவே பயத்தில் இருந்தவளுக்கு அழுகை பிய்த்துக் கொண்டு வர, வெளியே சென்று ஹாலில் இருந்த சோஃபாவை இழுத்து அவன் அறை வாசலுக்கு நேராக போட்டு படுத்துக்கொண்டாள், அவனை பார்த்தவாறே. 

 

சரி சற்று தள்ளியாவது இருக்காளே என்று ஆசுவாசத்துடன் கண்ணயர்ந்தான் ப்ரகலத்தன்.

 

அடுத்த தெருவில் இருந்த தன் அப்பார்ட்மெண்டில், பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு, ஃபர்ஸ்ட் ப்ளோரில் இருந்த தன் வீட்டுக்கு சென்று காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்தான் வைரம். 

 

சிடுசிடுவென்ற முகத்துடன் வந்து கதவை திறந்தாள் லட்சு. “சாரிடி அலங்கு” என்றான் நுழையும்போதே, “அலங்கு, கெழங்குன்ன அசிங்கமா சொல்லிடுவேன் பாத்துக்கோ”. 

 

“சரி சொல்லல, சாப்பாடு எடுத்து வை. குளிச்சுட்டு வந்துடுறேன்”.

 

“அதெப்படி இவ்வளவு நேரம் உன் தங்கச்சி சாப்பாடு போடாம அனுப்பியிருப்பா. நாலா உனக்கு எதுவும் செய்யல. என் அல்வாவை பார்சல் பண்ணி கொண்டு போனல இனிமே மூணு வேலை அங்கேயே போய் கொட்டிக்கோ. இனி எல்லாம் நா சமைக்கிற ஐடியால இல்ல”.

 

“ரொம்ப நல்ல முடிவு, தயவுசெஞ்சு மறுபரிசீலனை செஞ்சுடாத” என்றவன் விறுவிறுவென எழுந்து பாத்ரூம் சென்று மறைந்து விட.

 

“நீ வெளியில வா உனக்கு இருக்கு” என்று டங்டங்கென்று நடந்து சென்று சோபாவில் அமர்ந்து கொண்டாள். 

 

குளித்து முடித்து வெளியே வந்தவன், அலசிய உடையை கொண்டு வந்து பால்கனியில் காயப்போட்டான். அதை பார்த்தவள் “ஆறு வீட்டுக்குத் தான போன, வேற எங்கேயும் போய் சுத்திட்டு வர்றியா? பொய் வேற சொல் ஆரம்பிச்சுட்டியா? 11 மணி வரைக்கும் நா எப்டி போனாலும் பரவாயில்லன்னு ஊர் சுத்திட்டு வந்துருக்க அப்படித்தானே. நா கூட நாலு மணி நேரமா நம்மள பத்தி அவகிட்ட என்ன கம்ப்ளைன்ட் பண்ணிருப்பான்னு இவ்வளவு நேரமா யோசிச்சிட்டு இருக்கேன். நீ அந்த லீனாவை பாக்கத்தானே போன? அவ காலைல போன் போடும் போதே நினைச்சேன், அவ வீடும் இங்க பக்கத்துலதான் இருக்கா? இது சரிப்பட்டு வராது. இரு,,,,,என் மாமனாருக்கும், உன் மாமனாருக்கும் கான்ஃபெரன்ஸ் போடுறேன். நீ அவங்களுக்கே பதில் சொல்லு” என அவள் போக்கில் பேசி திட்டி முடிவுக்கு வந்து போனை எடுக்க. 

 

‘நமக்கு வாச்ச அப்பாவும் சரியில்ல, வாக்கப்பட்ட மாமனாரும் சரியில்ல, ஏதாவது ஒன்னு சரியா இருந்தா இவ இப்படி பேசுவாளா’ என புலம்பி தலையிலடித்தவன் வேகமாக சென்று போனை பிடிங்கி வைத்தான். 

 

“இதுக்குத்தான உன்ன மூழிஅலங்காரிங்கிறேன். என்ன ஏதுன்னு பொறுமையா கேட்டியாடி. நீயா பேசினா முடிவுக்கு வந்த, போன் போட போயிட்ட” அவன் அரட்டல் அவளை கொஞ்சம் அமைதி படுத்த. 

 

“பேச்ச மாத்தாத, நீ ஆறு வீட்டுக்கு தான பிரகிய விடப்போன?”. 

 

“ஆமாடி, பின்ன அவனை அந்த லீனா வீட்டுலயா கொண்டு விட முடியும்”. 

 

“ம் அப்ப நீ லீனா வீட்டுக்கு போல?”. 

 

“அவ வீட்டுக்கு எதுக்கு நா போறேன் லூசா நீ?”. 

 

“அப்ப ஏழு மணிக்கு போனவன், 11 மணி வரை ஆறு கிட்ட என்ன பத்தி அப்டி என்ன கம்ப்ளைன்ட் பண்ணிட்டுருந்த? வீட்ல ஒருத்தி தனியா காத்துட்டுருப்பாளேன்ற பொறுப்பு கூட இல்லாம?”. 

 

ஒரு பெருமூச்சை வெளியேற்றி, “சீனியர்க்கு முடியல ஃபீவேர். ஹாஸ்பிடல் போயிட்டு வந்தோம், வீட்ல விட்டுட்டு வர்றேன். ஹாஸ்பிடல் போயிட்டு வந்ததுனாலதான் வந்ததும் குளிச்சேன், டீடைல் போதுமா, ப்ளீஸ் அலங்கு பசிக்குது, வந்து சாப்பாடு எடுத்து வை”. 

 

“சீனியருக்கு ஃபீவரா? மதியம் கூட ஆறு பேசினாளே ஒன்னும் சொல்லலையே” என்று கூறினாலும் இருவருக்கும் சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டே அமர்ந்தாள். 

 

“அவ சாதாரண ஃபீவரா நினைச்சுருப்பா அதான் சொல்லிருக்க மாட்டா. ஈவினிங் நா போனப்ப ஃபீவர் குறையல, அதான் கூட்டிட்டு போயிட்டு வந்தேன்”. 

 

“ஓ…ஹாஸ்பிடல்ல என்ன சொன்னாங்க? சீனியருக்கு ஃபீவர் இப்ப பரவாயில்லையா?”. 

 

“நாளைக்கும் ஃபீவர் குறையலனா, கோவிட் டெஸ்ட் பாக்கணும்னு சொல்லி இருக்காங்க. சீனியர் கோவிட் தான்னு கன்ஃபார்ம்ல இருக்காங்க. அதனால இன்னைக்கு அவங்களே பிளட் டெஸ்ட் குடுத்துட்டு வந்துட்டாங்க. சிம்டம்ஸ் எல்லாம் கோவிட் மாதிரிதான் தெரியுது. நாளைக்கு ஃபீவர் குறைச்சாலும், குறையலனாலும் ஸ்கேன் டெஸ்ட் எடுத்திரணும்னு ௭ன்ட்ட சொன்னாங்க. நா தான் நாளைக்கு பார்த்துட்டு சொல்லிக்லாம்னு ஆறு கிட்ட எதுவும் சொல்லல. அவ இன்னைக்கு ஹாஸ்பிடல் போனதுக்கே ரொம்ப பயந்து போயிருந்தா”. 

 

” ஏய் ஏன்டா என்னலாமோ சொல்லி பயமுறுத்துற. அதெல்லாம் ஒன்னும் இருக்காது. கொரானா பேர கேட்டாலே பீதியாகுது”. 

 

“காலையில போயிட்டு பாப்போம். சீனியர் என்ன வராதன்னாங்க, நா வருவேன்னு சொல்லிட்டு தான் வந்துருக்கேன்”. 

 

“சரிடா நீ போகும்போது நானும் வரேன். பகல்ல அங்கன இருந்துட்டு வருவோம்”. 

 

“சரிடி, நா தப்பே பண்ணாம ஒன்றை பக்கத்துக்கு திட்டினியே அதுக்கு கொஞ்சம் கூட பீல் பண்ணல”. 

 

“எதுக்கு பீல் பண்ணனும், எப்படியும் என்ன பத்தி அவகிட்ட பாட்டு பாடிட்டு தான் வந்துருப்ப” என்றவள் எழுந்து பாத்திரம் கழுவும் வேலையை பார்க்க. 

 

“நானா வாங்கிட்ட வரம், அனுபவிச்சு தானே ஆகணும்” என்ற புலம்பலுடன் சாப்பிட்ட இடத்தை ஒதுக்கி விட்டு சென்று படுத்தான். 

 

லட்சு வேலையெல்லாம் முடித்து வரும்பொழுது உறங்கியும் இருந்தான். அவனை கண்டு, “என்ன திட்டினாலும் வாங்கிப்பான் என் செல்லக்குட்டி” என முத்தி கொண்டு அணைத்து படுக்க, “என் அலங்கு” என தூக்கத்திலும் கொஞ்சிக் கட்டியணைத்துக் கொண்டான் வைரம்.

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 31

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
30
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்