
காதல் – 58
அஸ்வதி அவளின் காதலனை பார்த்துவிட்டு சந்தோஷத்தில் இருவரும் திளைத்துக் கொண்டிருந்தனர்……..
அவளின் மாணவர்களும் விஹானின் குடும்பத்தினரோடு நன்கு பழகி நண்பர்களாகி போயினர்…….
அஸ்வதி ,விஹான், விஹானா ஆகிய மூவரும் மாணவர்களை அழைத்துக் கொண்டு அஸ்ட்ரோ பிசிக்ஸ் ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்து சென்று வானியல் தொடர்பான விவரங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தனர்……..
அவர்கள் அனைவரும் அந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்று வந்த களைப்பில் அயர்ந்து உறங்கி விட்டனர்……..
ஆனால் அஸ்வதிக்கு உறக்கம் வரவில்லை அவள் அங்கும் இங்கும் புரண்டு கொண்டு இருந்தாள்……
அப்பொழுது அவள் புரண்டு கீழே விழும் சமயம் அவள் விஹானின் கைகளில் இருந்தாள்……
அவனை அங்கு எதிர்பார்த்த அவள் அவனை இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டாள்…….
விஹான்……
என்னடி தூங்காம உருண்டுட்டு இருக்க?
தூக்கம் வரலயே என்று அவள் அவனின் தோள்களில் சாய்ந்து கொண்டாள்…….
ஏன் தூக்கம் வரல? இன்னைக்கு ஃபுல்லா நீ பசங்களுக்கு எக்ஸ்பிளைன் பண்ணிட்டே இருந்த உனக்கு டயர்டா இல்லையா?
நாதான் எக்ஸ்பிளைன் பண்ணிட்டே உங்கள பாத்துட்டே இருந்தேன் அதனால எனக்கு சார்ஜ் குறையவே இல்ல என்று விஹானை பார்த்து அஸ்வதி அழகாக சிரித்தாள்……
அடியே அதுக்குன்னு இப்படியா தூங்காம இருப்ப?நாளைக்கும் ஃபீல்டு விசிட் போனும்ல?ஒழுங்கா தூங்கு என்று அவன் அவளை தூக்கி பெட்டில் படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டு அவளை தூங்க சொன்னான்…….
விஹான்…….
தூங்குடி ஒழுங்கா……
அட போங்க , வராத தூக்கத்த வா வான்னா எப்படி வரும் என்று அவள் அவனை பார்த்து பாவமாக கேட்க அவன் சிரித்து விட்டான்…….
சரி இப்போ என்ன பண்ண?
என்ன வெளியில எங்கயாச்சும் கூட்டிட்டு போங்க என்று அவள் அவனின் கைகளை பிடித்து கொண்டு கண்கள் மின்ன கேட்க அவனால் மறுக்க முடியவில்லை …….
விஹானாவை மாணவர்களை பார்த்து கொள்ளும்படி கூறி விட்டு காதல் பறவைகள் இருவரும் பைக்கில் பறந்து கொண்டிருந்தனர்……..
அவர்கள் இருவரும் சென்று கொண்டிருந்த வழியில் ஒரு மதுபான கடை திறந்து இருந்தது அதை பார்த்த அஸ்வதி விஹானை வண்டியை நிறுத்த சொன்னாள் …….
என்னாச்சு ஏன் இங்க நிறுத்த சொல்ற?
விஹான்……
சொல்லுமா…..
நீங்க முன்ன பின்ன ட்ரிங்க்ஸ் பண்ணிருக்கீங்களா?
ஆமா ஒரு ரெண்டு மூனு தடவை பிரெண்ட்ஸ் கூட சேந்து ட்ரிங்க்ஸ் பண்ணிருக்கேன், இதை ஏன் இப்போ நீ கேக்குற?
விஹான் எனக்கும் ட்ரிங்க்ஸ் பண்ணனும்……
ஏய் என்ன சொல்ற?விளையாட்டுக்கு தானே சொல்ற?
இல்ல விஹான் எனக்கு இப்போ ட்ரிங்க்ஸ் பண்ணனும் எனக்கு வாங்கி கொடுங்க என்று அஸ்வதி கேட்க விஹான் அவளை ஆச்சரியமாக பார்த்தான்……..
விஹான் எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசணும் அதான் எனக்கு ட்ரிங்க்ஸ் பண்ணனும்……
என்கிட்ட நீ டிரிங்க்ஸ் பண்ணாமயே மனசு விட்டு பேசலாமே , என்கிட்ட உனக்கு என்ன தயக்கம்?
இல்ல விஹான் இந்த விஷயத்த நினைச்சா எனக்கு என்னயே நினைச்சு ரொம்ப அசிங்கமா இருக்குது அதான் இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்ல எனக்கு ட்ரிங்க்ஸ் பண்ணனும்……
என்ன நடந்தாலும் பரவாயில்லை அஸ்வதி என்கிட்ட சொல்லுமா உனக்காக நா என்ன வேணாலும் செய்வேன்…….
விஹான் ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க நா சொல்ல போற விஷயத்த கேட்டு நீங்க என்ன விட்டு போக மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் ஆனா……..
அவள் அவ்வாறு தடுமாறவும் விஹான் அவளின் முகத்தை தன் இரு கைகளில் ஏந்தி கொண்டு அஸ்வதி உனக்கு என்ன நடந்துருந்தாலும் உன்ன விட்டு நா போக மாட்டேன் , ட்ரிங்க்ஸ் வேணாம்மா, எங்கிட்ட சொல்லு…..
விஹான் என்று அவள் அவனை அழும் குரலில் அழைக்கவும் , அவன் மறு பேச்சு பேசாமல் அவளுக்கு குடித்தவுடனே போதை தலைக்கு ஏறும் வகையில் ஒரு சரக்கு பாட்டிலை வாங்கி வந்தான்…….
இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் பைக்கை நிறுத்திவிட்டு அங்குள்ள கல்பெஞ்சில் அமர்ந்தனர்……
விஹான் அந்த பாட்டிலை திறந்து அவளுக்கு கொடுத்தான் அஸ்வதி விஹானை பார்த்துக்கொண்டே அந்த முழு பாட்டிலையும் குடித்து முடித்தாள்……
பிறகு அவளுக்கு இருமல் வரவே அவன் அவளின் முதுகை ஆதரவாக தடவி விட்டான்……
சிறிது நேரம் அமைதியாக இருந்த அஸ்வதி பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்…….
அவள் அவ்வாறு அழுகவும் பதறிப்போன விஹான்…..
என்னம்மா ஆச்சு என்று அவன் அவளை தன் நெஞ்சோடு அனைத்து கொண்டான்……
விஹான் நா தப்பு பண்ணிட்டேன் விஹான் என்று அஸ்வதி அழுது கொண்டே கூற ஆரம்பித்தாள்……
விஹான்……
நா….
நா….
போன வருஷம் மே பதினெட்டாம் தேதி காலேஜ்ல நா செமஸ்டர் ரிசல்ட்ட ஆன்லைன்ல அப்லோட் பண்ணிட்டு இருந்தேன் அப்போ என்னோட சிஸ்டம் கொஞ்சம் மக்கர் பண்ணுச்சு அதனால எச்ஓடி என்ன கரஸ்பாண்டன்ட் ரூம்ல நெட் ஸ்பீடாா இருக்கும் சோ அங்க போோய் ரிசல்ட்ட அப்லோட் பண்ண சொன்னாங்க நானும் போய் அப்லோட் பண்ணிட்டு இருந்தேன் அப்போ கரஸ்பாண்டோட சன் துருவ் அங்க வந்தாங்க அவங்க சாரோட சீட்ல உக்காந்துட்டு இருந்தாங்க நா என் வேலைய பாத்துட்டு இருந்தேன் அப்போ என் வேலை முடிச்சுட்டு திரும்பி பாக்குறப்போ துருவ் சார் என் பக்கத்துல நெருங்கி நின்னாங்க அவங்க என்ன செவுத்தோட பிடிச்சு தள்ளி என் மேல் எல்லாம் கை தப்பான இடத்தில் கை வச்சாங்க என்று அஸ்வதி அந்த துருவ் அவள் மேல் கை வைத்த இடங்களை எல்லாம் தட்டி விட்டுக் கொண்டிருந்தாள்…….
அவளின் கைகளை பிடித்து முத்தம் கொடுத்து அவளை இறுக்கமாக அனைத்து கொண்டே அப்புறம் என்ன ஆச்சு அஸ்வதி?
அப்புறம் நா இந்த சைடு சாரீ பின் போட்டு இருப்பேன்ல்ல அதை புடிச்சு இழுத்துட்டாரு நா பயத்துல கத்திட்டே இருந்தேன் அப்போ திடீர்னு கரஸ்பாண்டன்ட் சார் வந்து துருவ் சார செக்யூரிட்டிய கூப்பிட்டு கூட்டிட்டு போக வச்சாரு அப்புறம் என்கிட்ட வந்து இந்த விஷயம் நமக்குள்ளே இருக்கட்டும் அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாரு அதுக்கு அப்புறம் அந்த வாட்ச்மேன் என்ன ரொம்ப தப்பா பார்க்க ஆரம்பிச்சான் அதனால நா தனியா எங்கேயுமே போக மாட்டேன் காலேஜ்ல,
அப்புறம் கரஸ்பாண்டன்ட் சார் ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து சுலோச்சனா கிட்ட இத பத்தி பேசி இருக்காங்க அதனால சுலோச்சனா என்ன ஒரு ஐட்டம் பொண்ணா பாக்க ஆரம்பிச்சாங்க அதனாலதான் என்ன பணக்கார பசங்களை பார்த்து பின்னாலே போயிடுவியான்னு கேட்டுட்டே இருப்பாங்க என்று அஸ்வதி கூறிவிட்டு விஹான் மேல் சாய்ந்து கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள் பிறகு கண்களை துடைத்துக் கொண்டு விஹானின் முகத்தை பார்த்து….
விஹான் இப்ப கூட ஒன்னும் கெட்டுப் போகல நா இப்ப போதையில தான் இருக்குறேன் என்ன நீங்க விட்டுட்டு போனாலும் எனக்கு தெரியாது நாளைக்கு காலைல பாத்துட்டு அழுதுட்டே நா எங்க ஊருக்கு போயிடுறேன் என்று அஸ்வதி கூறி முடிக்கவில்லை ….
விஹான் அஸ்வதியின் இதழில் தன் இதழை ஒருத்தி பொருத்தி அவளுக்கு அழுகை தீரும் வரை அப்படியே இருந்தான் பிறகு அவளின் முகத்தை தன் இரு கைகளில் ஏந்தி கொண்டு அவளின் அழுத கண்களை பார்த்துக் கொண்டே பேசினான்…….
அஸ்வி……. நீ என்னோட உயிர் , உலகம் எல்லாமே நீதான்ம்மா, அந்த பொறுக்கி துருவ் உன்ன என்ன பண்ணிருந்தாலும் அவன கொல்லுவேனே தவிர உன்ன விட்டு நா பிரிய மாட்டேன் என்று அவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்……..
அவன் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தை பார்த்து பயந்த அஸ்வதி அவனின் கைகளை பிடித்துக் கொண்டாள்…..
என்னங்க…..
சொல்லுமா…..
எனக்கு நீங்க ஒரு சத்தியம் செஞ்சு குடுக்கனும்……
என்ன சத்தியம்டா கண்ணம்மா?
நீங்க அந்த துருவ கொல்ல கூடாது , எனக்கு சத்தியம் பண்ணி குடுங்க…….
அவன் சத்தியம் செய்யாமல் அவள் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான்…….
அஸ்வதி அவனின் முகத்தை தன் இரு கைகளில் ஏந்தி கொண்டு ,
விஹான் எனக்கு உங்களோட ரொம்ப ரொம்ப காலம் சேந்து பயணிக்கனும், அதனால நீங்க அவன கொண்ணுட்டு ஜெயில் போயிட்டா நா என்ன பண்ணுவேன் என்று அவள் அவனின் சட்டையை பிடித்து கொண்டு அழுதாள்……
சரி சரி அவன நா கொல்ல மாட்டேன் என்று அவன் அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்தான்…….
விஹான் என்ன விட்டு போக மாட்டீங்கல்ல?
“என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
சத்தியமா சொல்லுறேண்டி
உன்னை யாருக்கும் தரமாட்டேன்“…….
என்று அவன் அவளின் முகத்தை பார்த்து கொண்டே பாடினான் , அதில் அஸ்வதி அவன் சட்டயையை இறுக்கமாக பிடித்து கொண்டே அவன் நெஞ்சினில் சாய்ந்து கொண்டு உறங்கி போனாள்…….
காலையில் அஸ்வதி எழும் போது அவளவனின் இதயத்துடிப்பு மிக மிக துல்லியமாக அவளுக்கு கேட்டது அதிலே அவள் புரிந்து கொண்டாள் தண்ணவன் தன்னை விட்டு செல்லவில்லை என்று……
அவள் கண்களை திறந்து பார்த்தபோது விஹான் அவளைத்தான் பார்த்து கொண்டே இருந்தான்……
அவனின் பார்வைக்கு அர்த்தம் புரியாமல் அஸ்வதி விழிக்க……
ஏய் என்னடி அப்படி முழிய உருட்டி உருட்டி பாக்குற?
அது…..
வந்து…..
நேத்து நீ என்ன சொன்ன?
துருவ் என்ன…….
அதில்ல…..
அதான நேத்து சொன்னேன்…..
இல்ல வேற சில விஷயமும் சொன்ன…..
இல்லையே அது மட்டும் தான் சொன்னேன்……
என்ன விட்டு போறதுன்னா இப்போவே போயிடுங்க , நா இப்போ போதையில் தான் இருக்கேன் சோ நீங்க என்ன விட்டு போனாலும் எனக்கு தெரியாதுன்னு சொன்னது நியாபகம் இருக்கா?
அது…..
அது…..
அஸ்வதி அவ்வாறு தடுமாறவும் விஹான் அவளை தன் பக்கம் இழுத்து அவளின் இதழில் வன்மையாக தன் இதழை பொருத்தி அவள் இதழ் சிவக்கும் அளவிற்கு அவளுக்கு முத்தம் கொடுத்தான்……
பிறகு அவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கவும் அவளை தன் நெஞ்சோடு அனைத்து கொண்டான்…..
கண்ணம்மா என்னோட உலகமே நீதான்டி செல்லம்மா , உன்ன விட்டுட்டு நா எங்க போவேன் அப்படியே உன்ன நா விட்டுட்டு போறதுன்னா அது நா இந்த உலகத்தை விட்டு போற நாள் தான் ……
அப்போ நானும் உங்ககூடவே வந்துடுவேன் என்று அவள் அவனின் மார்பினில் முகம் புதைத்துக் கொண்டாள்…..
அப்போ நம்ம குழந்தைங்கள யாரு பாப்பா?
அதுக்குள்ள நம்ம குழந்தைங்கள நல்லா பெரிய ஆளா ஆக்கி விட்டுட்டு நம்ம வேர்ல்ட் டூர் போயிட்டு இப்படி உங்க நெஞ்சுல இதே மாதிரி சாஞ்சிட்டே உங்க முகத்தை பாத்துட்டே நா செத்து போயிடுவேன்……
நானும் இந்த அழகான முகத்தை என்னோட நெஞ்சுல சாச்சிக்கிட்டே உன்னோட முகத்த பாத்துட்டே நானும் செத்து போயிடுவேன் என்று அவன் அவளின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தான்……..
இருவரும் ஒன்றாக சந்தோஷமாக கட்டி அணைத்து கொண்டு பேசி கொண்டு இருந்தார்கள்…….
அப்பொழுது……
என்னங்க😳😳😳😳
என்னம்மா…..
அய்யோ நா இப்போ புரபஸர், ஸ்டூடண்ட்ஸ்…..
தொடரும்…..
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…….
💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

