
நினைவுகள் -39
அன்று…
கோவிலில் மேடிட்ட வயிற்றுடன் அனன்யாவையும், அவளைத் தாங்கிப் பிடித்த விஸ்வரூபனையும் பார்த்த ராதிகா தவிப்புடன் அங்கிருந்து நகர்ந்தாள்.
அவள் மட்டும் தவிக்கவில்லை. அனன்யாவும் தான் தவித்துப் போனாள்.
ராதிகாவின் பாராமுகம் கண்டு தவித்தவள், ஹிஸ்ட்ரியா பேஷண்ட் போல கத்த… அவளை சமாளித்து சென்னைக்கு கூட்டி வருவதற்குள் விஸ்வரூபனுக்கு போதும் போதுமென்று ஆனது.
சென்னை வந்ததும் முதல் வேலையாக கௌரியிடம், ” அத்தை… அனு எப்படி இருக்கா? அவ ஹெல்த் கண்டிஷன் எப்படி இருக்கு. ரொம்ப டென்ஷனாகுறா. அவளது பிகேவியர், சம்திங் டிஃபரெண்ட்.” என்று சொல்ல…
கௌரி ஒரு டாக்டர். அதனால் அனன்யாவுடைய உடல்நிலையும், மனநிலையும் அவருக்கு நன்குப் புரிந்தது.
அதைப் பற்றி பெரிதாக கூறாமல், ” பி.பி கொஞ்சம் அதிகமாக இருக்கு. டேப்ளேட் கொடுத்துருக்கேன்.” என்று சற்று தடுமாற்றத்துடன் கூறினார்.
” ஓ…” என்ற விஸ்வரூபனோ, அவனது அத்தையின் தடுமாற்றத்தை கவனிக்கவில்லை. அவனுக்கு ராதிகாவை பார்த்ததிலிருந்து மனது அலைபாய, அதனுடன் போராடுவது ஒரு பக்கம், அனுவை நினைத்து கவலை என நிலையில்லாமல் தவித்ததில் கௌரியின் பதிலில் நிம்மதியடைந்து அங்கிருந்து நகர்ந்தான்.
அனு அனிமீக்காக இருக்கிறாள், பிரசவத்தின் போது ஓவர் ப்ளீடிங் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதை கௌரி சொல்லவில்லை. எல்லோரையும் ஏன் பயமுறுத்த வேண்டும், தான் கவனமாக பார்த்துக்கலாம் என்று நினைத்திருந்தவர், அனுவிடம் மட்டும், ” பி.பி ரைஸ்ஸாகக் கூடாது. டேப்ளெட்டெல்லாம் ஒழுங்கா எடுத்துக்கோ. பெயின் லைட்டா வரும் போதே சொல்லு.” என்றெல்லாம் கூற…
அதை காற்றில் பறக்கவிட்டாள் அனன்யா.
கௌரியின் பதற்றத்த்தில் தனா உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்துக் கொண்டாள். அவளுக்கு வாழும் எண்ணம் துளிக் கூட இல்லை.
கிருஷ்ணனிடம் சென்று, ” மாமா… எனக்கு பிரசவத்துல ஏதாவது ஆனால், ராதிகாவை மாமாவுக்கு கட்டி வைச்சிடுங்க.” என.
” அனு… இப்படி எல்லாம் பேசாதே. உனக்கு ஒன்னும் ஆகாது. ஆமாம் யார் அந்த ராதிகா?” என்று கிருஷ்ணன் வினவ.
” ராதிகா தான் மாமா லவ் பண்ற பொண்ணு. அவளைத் தான் நம்ம காலேஜ்ல சேர்க்க கேட்டேன்.” என்று அழுகையை அடக்கிக் கொண்டு கூற.
” ஓ… நீ எதையும் நினைச்சு குழம்பாத. அந்த பொண்ணு ரூபனோட பாஸ்ட். நீ தான் அவன் லைஃப் புரியுதா? தேவையில்லாமல் எதை எதையோ யோசிச்சு அந்தப் பொண்ணோட லைஃபை ஸ்பாயில் பண்ணாதே.” என்ற கிருஷ்ணன் அங்கிருந்து சென்று விட்டார்.
அனன்யாவோ, ‘ மாமா! நான் செய்த தப்பை நானே சரி பண்ண பார்க்குறேன். எப்படியோ உங்கக் காதுல ராதிகா பத்தின விஷயத்தைப் போட்டுட்டேன். இதுவே போதும்.’ என்று நினைத்தவள், நிம்மதியைடைந்தாள்.
கௌரி பயந்தது போலவும், அனன்யா எதிர்ப்பார்த்து போலவுமே, டெலிவரியின் போது ஹைபர் டென்ஷன் அண்ட் ஓவர் ப்ளீடிங்… குழந்தையை பெற்றுக் கொடுத்தது விட்டு, வாழ்க்கையில் போராடியவள், உயிருக்குப் போராடாமல் இறைவனடி சென்று விட்டாள்.
இன்று…
தன் தோழியை நினைத்து கண் கலங்கி நின்ற ராதிகாவை பார்த்த விஸ்வரூபன், ” பாட்டி உயிருக்கு போராடிட்டு இருக்கும் போது, அவங்க பேச்சை என்னால மறுக்க முடியலை. கல்யாணம் நடந்துடுச்சு. பாட்டியும் அவங்க நினைச்சதை சாதிச்சதுல நிம்மதியா போய் சேர்ந்துட்டாங்க.
ஆனால் என் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்றதுன்னு தெரியாமல் நான் தவிச்ச தவிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும். அதுவும் அங்க உன்னை நான் எதிர்பார்க்கவே இல்லை. நீ அழுதுட்டு போகவும் அதுவும் நல்லதுக்குன்னு நினைச்சுட்டேன். என் மேல உள்ள கோபத்துல நீ உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுப்பனு நினைச்சேன்.
ஆனால் நீ என்னை மறக்கவே இல்லை. அதுவும் பெரிய கோவிலில் கலங்கிய உன் முகத்தைப் பார்த்ததும், என் உயிரே போய்டுச்சு.
என்னுடைய உணர்வுகளை கூட வெளிக்காட்ட முடியவில்லை.
நான் வருத்தப்பட்டால், என் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே என்று அம்மா வருத்தப்படுவார்கள். ஏற்கனவே பாட்டி மேல கோபத்துல இருந்தாங்க.
அனுவோ, ஏற்கனவே குற்றவுணர்ச்சியில் தவிச்சிக்கிட்டு இருந்தா. அத்தையோ தான் மட்டுமில்லாமல், தன் மகளும் இப்படி வாழ்க்கையை தொலைச்சிட்டு இருக்காளே என்று கலங்கித் தவிச்சிட்டு இருந்தாங்க.
இப்படி இருக்க, என் உணர்வுகளை வெளிக்காட்டினால் யாரும் தாங்க மாட்டாங்க.
அதான் என்னுடைய உணர்வுகளையெல்லாம் எனக்குள்ளே புதைத்துக் கொண்டேன்.
உயிரிலே தளும்பும் உன் நினைவுகளை வெளிக்காட்டாமல், எனக்குள்ளே அடக்கிக் கொண்டேன். அந்த ஒரு வருடமும் எனக்கு நரகம் தான்.
என்னுடைய அறையில் மட்டுமே, நான் நானாக இருந்தேன். எனக்குத் துணை உன்னுடைய குரல் மட்டுமே. அதுவே எனக்கு பழகிப் போனது. அனுவும் வாழ விருப்பம் இல்லாமல் இந்த உலகத்தை விட்டுப் போய்ட்டா. குழந்தை மட்டுமே என் உலகமாக மாறிப்போனது.
தனக்கு பெண் குழந்தை தான் என்று அவளுக்கு தெரிந்ததால், அம்மா, அப்பாவிடம், “அவந்திகா.” என்று தான் வைக்கணும் என்று சொல்லியிருந்தா… அதான் அவந்திகான்னு பெயர் வச்சோம். கூப்பிடுவது அம்முக்குட்டி.
அம்முக்குட்டி நான் வீட்டுக்கு வந்துட்டா, என்னை விட்டு நகரவே மாட்டா… அவளுக்கும் உன் பாட்டுனா ரொம்ப பிடிக்கும்.” என்றவன் அன்றைய நாளுக்கு சென்று விட்டு வந்தான்.
” பழசெல்லாம் இப்போ எதற்கு விஷ்வா? நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். ” என்று ஆறுதலாக கூற.
” ஆனாலும் ராதா. நான் உன்னோட காதலுக்கு தகுதியானவன் இல்லை. நான் கொஞ்சம் செல்ஃபிஷ் தான் இல்லையா? இல்லைன்னா பாட்டி பேச்சைக் கேட்டுட்டு உன்னை விட்டுக்கொடுத்து இருப்பேனா…” என்று குற்றவுணர்வுடன் வினவ .
அவனுக்காக வரிந்துக் கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கினாள் ராதிகா.
” நீங்க என்னை சும்மா ஒன்னும் விட்டுக் கொடுக்கவில்லை. என்னுடைய நலனுக்காக மட்டும் தான் நீங்க விட்டுக் கொடுத்தீங்க. நான் கஷ்டப்படக்கூடாது. உங்க பாட்டியோட சாபம் பலிச்சுடக் கூடாதுன்னு உங்களை கஷ்டப்படுத்திக்கிட்டீங்க.
உங்க காதலை அடைய நான் கொடுத்து வச்சுருக்கணும். எனக்கு உங்களையும் நல்லாத் தெரியும். அனுவையும் நல்லாத் தெரியும். ஏதோ தவிர்க்க முடியாத சூழ்நிலையால் தான் உங்கள் திருமணம் நடந்திருக்கும் என்று என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. என்னைப் பார்த்தால், உங்க இருவருக்கும் தர்மசங்கடமா இருக்கும் என்று தான் விலகிப் போனேன்.” என்றாள்.
இப்போது விஸ்வரூபனின் முகத்தில், தனது காதலைப் புரிந்துக் கொண்ட மனைவியை எண்ணி பெருமிதம் வழிந்தது.
” சரி வாங்க கீழே போகலாம். எல்லோரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.”என்ற ராதிகா வேகமாக இரண்டு எட்டுத் தான் எடுத்து வைத்திருப்பாள்.
பிறகு வேகமாக திரும்பி வந்தவள், அவள் பின்னே வந்த விஸ்வரூபனின் மேல் மோதி நின்றாள்.
” ஹே… ராதா பார்த்து… ” என்றான் விஸ்வரூபன்.
” விஷ்வா.. ஆதி கிட்ட நீங்க ஏன் சண்டை போடுறீங்க. அவன் என்ன தப்பு பண்ணான். ” என்று ராதிகா மிரட்ட.
அவனோ ஒன்றும் கூறாமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
” விஷ்வா நான் சொல்றதை கேட்பீங்களா…” என்று தன்மையாக வினவினாள் ராதிகா.
“முதல்ல என்ன விஷயம். அதை சொல்லு.” என்று அவளை இறுக்கமாக பார்க்க…
” அது வந்து நம்ம… இல்லை உங்க வீட்டுக்கு வர்றதுக்கு பர்மிஷன் தரணும்.” என்று தயங்கித் தயங்கிக் கூறினாள் ராதிகா.
அவளைப் பார்த்து முறைத்த விஸ்வரூபன், ” உதை வேணுமா? அது நம்ம வீடு.” என்று முதலில் திருத்தியவன் பிறகு, ” ஆதி விஷயம் வேறு. அது நான் மட்டுமா முடிவெடுக்க முடியாது. வீட்டுக்கு வர்றதுக்கு அத்தைக் கிட்ட தான் கேட்கணும். ஆனால் நான் சண்டை போட மாட்டேன் என்று வேணும்னா உறுதித் தரேன்.”என்று விட.
“கௌரி மா கிட்ட நான் சொல்றேன் அவங்க புரிஞ்சுப்பாங்க. யாரோ செஞ்ச தப்புக்கு ஆதவனை ஏன் தண்டிக்கனும். ” என்றாள் ராதிகா.
” நீ சொல்றதும் சரி தான். கொஞ்சம் பொறுமையா யோசிச்சு இருந்திருந்தா, நம்ம அனுவும் நம்மக் கூடவே இருந்திருப்பா. அவசரப்பட்டு வாழ்க்கையை தொலைச்சு, உயிரையும் வெறுத்து இறந்திருக்க மாட்டா ” என்று விஸ்வரூபன் கண் கலங்க.
” சரி விடுங்க விஷ்வா. முடிஞ்ச விஷயத்தைப் பற்றி பேச வேண்டாம். ஆனால் குழந்தையை பற்றி எப்படி ஆதிக்கு தெரியும்.”
” அனுவும், ஆகாஷும் கல்யாணம் முடிஞ்சு அவங்க கெஸ்ட் ஹவுஸ்க்கு தான் போனாங்க. மே பி வாட்ச்மென் சொல்லியிருக்கலாம். ஆக்ஸிடென்ட் ஆனதையே வாட்ச்மேன் ஃபோன் பண்ணி தான் அவங்களுக்கு தெரிய வந்தது. அதுக்கப்புறம் எனக்கு தெரியவந்தது.
அனுவைப் பார்க்க, பல முறை வீட்டுக்கு வந்திருந்தான். நாங்க தான் அனுமதிக்கவில்லை. ஒருமுறை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லும் போது அவள் மாசமாக இருப்பதை பார்த்து விட்டான். அதற்குப் பிறகு அனு எப்போ வெளியே போனாலும் வந்திருவான். அனு ஆகாஷ் இறந்ததுல இருந்து எதையும் கவனிக்க மாட்டாள்.
ஆதியையும் அவ கவனிக்கலை. ஆனால் ஆதி அவக் கிட்ட எப்படியாவது பேசணும்னு முயற்சி பண்ணான். ஆனால் அவ இந்த உலகத்தை விட்டே போயிட்டா.
அதுக்கு பிறகு, குழந்தையை வெளியே அழைத்து வரும் போது எப்படியாவது பார்த்து விடுவான்.” என்றவன் அமைதியாக.
” சரி விஷ்வா… நீங்க ஆதிக்கிட்ட கோபப்பட மாட்டீங்கள்ல” என்று மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள…
” அது… நீ நடந்துக்கிறதில் தான் இருக்கு.”
” என்ன சொல்ற விஷ்வா?”
” அதுவா… எனக்கு இப்போ ஒரு கிஃப்ட் வேண்டும். அது தந்துட்டினா நீ சொல்றபடியெல்லாம் நான் கேட்குறேன்.” என்று கள்ளச் சிரிப்புடன் வினவ.
‘பார்வையே சரியில்லையே.’ என்று நினைத்துக்கொண்டே, ” என்ன கிஃப்ட்.” என்று வினவினாள்.
” இறுக்கி அணைச்சு ஒரு உம்மா குடு.” என்றான் விஸ்வரூபன்.
” ஹாங்.” என்று அதிர்ந்தவள்,” ஊகூம்.” என்று முகம் சிவக்க கூறினாள்.
அந்த பிடிவாதக்காரனோ, தான் நினைத்ததை சாதித்து தான் விட்டான்.
முகம் முழுக்க, பூரிப்புடன் கீழே இறங்கி வந்த இருவரையும் பார்த்தே அங்கிருந்தவர்களுக்கு புரிந்தது.
” வாங்க மாப்பிள்ளை சாப்பிடலாம்.” என்று சண்முகம் அழைக்க.
” எனக்குப் பசிக்கலை. லஞ்சே சாப்பிட்டுக்கிறேன்.” என்றான் விஸ்வரூபன்.
” அது வந்து மாப்பிள்ளை… மதிய சாப்பாடு ரெடியாயிடுச்சு.” என்று தயங்கிக் கொண்டே கூறினார்.
அப்போது தான் மணியைப் பார்த்தான். அசடு வழிய ராதிகாவைப் பார்க்க… அவளோ முகம் சிவக்க தலைக்குனிந்து இருந்தாள்.
” ராது மா. மாப்பிள்ளையை கூட்டிட்டு வந்து உட்கார்.” என்று சுந்தரி கூற.
ஒரு வழியாக அனைவரும் உணவருந்த சென்றனர். ” அப்போ… நான் கிளம்புறேன்.” என்றவன் குழந்தைக்கு முத்தமிட்டு விட்டு, சுந்தரியின் கையில் மனமே இல்லாமல் கொடுத்தான் ஆதவன்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
2
+1
+1

