Loading

அத்தியாயம் – 34

இங்கு வர்ஷூவை அந்த அமைச்சரின் ரகசிய பங்களாவில் சிறை பிடித்து வைத்திருந்தனர்.

 

ஒரு சிறிய வீடு அளவிற்கு இருந்தது அந்த அறை, அதன் செழுமையையும் அழகையும் இரசிக்கும் மனநிலையில் இல்லை வர்ஷூ.

 

எப்போது வேண்டுமானாலும் அந்த கிழட்டு காட்டுப்பூச்சி(அமைச்சர்) உள்ளே வரும் என்ற பயத்தோடு சேர்த்து தன் வாழ்க்கை இப்படியானதையும் பெற்றோரையும் நினைத்து ஒரு மனம் வருந்தினாலும், இன்னொரு மனமோ எப்படி இங்கிருந்து தப்பிப்பது என்றும் சிந்தித்துக் கொண்டிருந்தது.

 

சரியாக அதே சமயம் அறையின் கதவு திறக்கப்பட்டது.

 

அவள் பயந்தது போல் அந்த கிழம் தான் உள்ளே வந்தது ஈஈஈஈ என முப்பத்திரெண்டு பற்களையும் காட்டிக்கொண்டு,

 

‘சேய் சனியன் பிடிச்ச சொட்டை மண்டை பல்லை கூட ஒழுங்கா விளக்க மாட்டான் போல, காவி பிடிச்சு போய் கிடக்கு இதுல இவன்லாம் கல்வித்துறை அமைச்சரா இருந்து என்னத்தை கிழிச்சானோ வரான் பாரு நாய் லெக்பீஸை பார்த்து ஜொல்லு விட்டுகிட்டு வர மாதிரி ‘ என அவனை மனதிற்குள் அவளுக்கு தெரிந்த கெட்ட வார்த்தையெல்லாம் உபயோகப்படுத்தி திட்டித் தீர்க்க,

 

உள்ளே வந்த காளிதாசனோ அவளை இன்ச் பை இன்ச்சாக பார்வையாலே பலாத்காரம் செய்தான்.

 

‘கட்டையில போற வயசுல இவனுக்கு காமப்பார்வை கேட்குது பாரு, கண்ணு ரெண்டையும் நோண்டி கொல்லிவாய் பிசாசுக்கு போடனும்’ என அவன் பார்வையால் உடலில் ஏற்பட்ட அறுவெருப்பை அவனைத் திட்டி சமன்படுத்தினாள்.

 

(இவர்கள் சம்பாஷனைகள் முழுதும் ஹிந்தியில் நடைபெற்றது ஆனால் எனக்கு ஹிந்தி தெரியாத காரணத்தினால் நான் அதை தமிழிலே எழுதிவிட்டேன் செல்லம்ஸ் ஹிஹி)

 

“என்ன குட்டி சாப்பிட்டியா மூஞ்செல்லாம் வீங்கி போய் இருக்கு, கல்யாணப் பொண்ணு இப்படி இருக்கலாமா ” என காளி கேட்டுக் கொண்டே அவள் கன்னத்தை தொடப்போக,

 

அவன் கையை தட்டி விட்டவள் கண்களில் தீப்பொறியுடன் ,”தொட்டு பேசுற வேலையெல்லாம் வேண்டாம் அப்பறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்..ஒழுங்கா என்னை இங்க இருந்து போக விடு” என அவள் கத்த,

 

“அடடா என்ன கண்ணு இப்படி சொல்லிட்ட..என்னை பத்தி உனக்கு இன்னும் தெரியலை இவ்ளோ நேரத்துக்கு உன்னை சும்மா விட்டு வச்சுருக்க காரணம் சாமி சொன்னதுனால தான்..இன்னும் ரெண்டு நாள்ல உன் கழுத்துல தாலியை கட்டுன பின்னாடி உன்னை நான் மொத்தமா எடுத்துக்குறேன் இப்போ நீ தப்பிச்சு போக ப்ளான் பண்ண தற்கொலை பண்ணிக்க நினைச்சு இப்போ ஹாஸ்பிட்டல்ல உயிரோட இருக்க உன் அப்பா அம்மாவை பரலோகத்துக்கு அனுப்பி வச்சிருவேன் ஜாக்கிரதை” என அவள் தலையில் குண்டைப் போட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

 

‘என்னது அப்பா அம்மா தற்கொலை பண்ணிக்க போனாங்களா?? ‘ என விக்கித்துப் போன வர்ஷூ அப்படியே அதிர்ச்சியில் மயங்கிச் சரிந்தாள்.

 

(இதுவும் ஹிந்தி தான் மக்களே)

 

கார்த்திக் கொடுத்த திட்டத்தின் படி அந்த மருத்துவர் கோபாலன் லக்ஷ்மி இருந்த அறைக்குள் ஒரு ஃபைலோடு நுழைந்தார்.

 

அங்கே அவர் எதிர்பார்த்ததைப் போல அந்த தடியன்கள் அமர்ந்து தயிர்சாதத்தை வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தனர்.

 

அவர்களை கண்டுகொள்ளாமல் நேராக கோபாலனிடம் சென்றவர், அவரிடம் அவர் வைத்திருந்த ஃபைலை கொடுத்த, “இந்தாங்க சார் உங்க ரெண்டு பேரோட மெடிக்கல் ரிப்போர்ட், உங்க கூட வேற யாரும் வராததுனால உங்க கிட்டேயே கொடுக்குறேன் படிச்சு பாருங்க” என அவர் கூற,

 

விரக்தியில் இருந்த கோபாலனோ ,”நானே ஏண்டா பிழைச்சோம்னு இருக்கேன் இதுல இது எதுக்கு டாக்டர் நீங்களே எடுத்துட்டு போங்க” என அவர் அதை தூக்கிப் போட,

 

மருத்துவருக்கு பக்கென்று இருந்தது , உடனே அதை மீண்டும் எடுத்தவர்,”காப்பாற்ற வேண்டியது என்னோட கடமை ..நீங்க இதை பார்த்து தான் ஆகணும் மிஸ்டர்” என வாய் அதிகாரமாக கூறினாலும், கண்கள் அவரிடம் ப்ளீஸ் என இறைஞ்சியது.

 

சலிப்புடன் அதை எடுத்து பார்த்தவர் அதில் இருந்த முதல் வரியைக் கண்டு மகிழ்ந்தார் , அது கார்த்திக் அவருக்கு அனுப்பிய கடிதம்.

 

“ஹாய் அங்கிள் , நான் கார்த்திக் ஸ்ரீயோட மாமா..உடனே இதை பார்த்து முகத்துல உணர்ச்சியை காட்டிறாதீங்க.. படிச்சு முடிக்கிற வரைக்கும் முகத்தை சோகமாவே வச்சுக்கோங்க..நான் எதுக்கு இங்க வந்தேன் எப்படின்னுலாம் பின்னாடி சொல்றேன் முதல்ல வர்ஷூக்கு என்னாச்சுன்னு எனக்கு எப்படியாச்சும் தெரிஞ்சுக்கனும் அப்போ தான் அவளை என்னால காப்பாத்த முடியும்..உங்களுக்கு இன்ஜெக்ஷன் போடுற மாதிரி இப்போ அந்த டாக்டர் உங்க ஷர்ட்ல மைக்ரோ கேமெராவை ஃபிக்ஸ் பண்ணிருவாரு..ஜாக்கிரதையா எனக்கு என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க நான் உங்களையும் உங்க பொண்ணையும் கண்டிப்பா இதுல இருந்து காப்பாத்துவேன்..நம்புங்க,,டேக் கேர்” என்றதோடு சேர்த்து சிரிக்கின்ற ஸ்மைலியையும் வரைந்து வைத்திருந்தான் அவர்களின் வருங்கால மருமகன்.

 

கோபாலன் படிக்கும் போதே அவரோடு சேர்த்து லெக்ஷ்மியும் படித்துவிட, அவர் மூளையில் அழகான திட்டம் ஒன்று உருவானது.

 

டாக்டரிடம் தான் பார்த்துக் கொள்வதாய் சைகை செய்ய, அவரும் நம்பிக்கையுடன் அந்த கேமெராவை பொருத்துவிட்டு அந்த அறையை விட்டு அகன்றார்.

 

அவர் போனது தான் தாமதம் , ராஜலெக்ஷ்மி தனது ஒப்பாரியை தொடங்கிவிட்டார்..

 

“டேய் எடுபட்ட தடி மாடுங்களா எங்களை மாதிரி நல்லவங்க வயித்துல அடிச்சு சேர்க்குற பணத்துல இப்படி உங்க வயித்த நிரைக்கிறீங்களே இதெல்லாம் வயித்துல தங்குமா கண்டிப்பா எல்லாம் பேதியா தான் டா போகும் பரதேசி பயலுங்களா” என அழுது கொண்டே அவர்களுக்கு சாபம் விட,

 

அங்கு நன்றாக வெளுத்திக் கட்டிக் கொண்டிருந்த தடிமாடுகளுக்கு புரை ஏறியது.

 

“ஓய் என்ன லந்தா ஓங்கி ஒன்னு வுட்டா பட்டுனு பரலோகத்துக்கு போய் சேர்ந்துருவ ஆளையும் மொகரையும் பாரு” என ஒரு தடியன் தன் கொடுரமான மூஞ்சியை கிட்ட கொண்டு வந்து மிரட்ட,

 

லக்ஷ்மி அரண்டு போய் ஒரு அடி பின்னால் போனவர், பின் மூக்கை உறிஞ்சிக் கொண்டே ,”என்னப்பா தடியன் சார் கூட்டிட்டு போன பொண்ணை தான் திருப்பி தர மாட்டிங்க, அட்லீஸ்ட் பொலம்ப கூட கூடாதா??” என அவர் ஆதங்கமாக கேட்க,

 

அவர் அழுகை நாடகத்தில் கடுப்பான அந்த தடியன் ,”நீ என்ன கருமத்தையோ பண்ணு ஆனா என்னையோ நான் சாப்பிடுறதையோ திட்டுற வேலை மட்டும் வச்சுக்காத சொல்லிட்டேன்” என மிரட்டியவன் , மிச்சம் வைத்த சாப்பாட்டை மூச்சு முட்ட வயிற்றுக்குள் கொட்ட ஆரம்பித்தான்.

 

“பிள்ளையை காலேஜுல சேர்க்கப்போறோமே அதுக்கு முன்னாடி இந்த ஊருலயே பெரிய இவன்னு பீத்திக்கிட்டானே அந்த ***** ஜோசியர்கிட்ட போய் பிள்ளைக்கு ஜோசியம் பார்க்க போனா அந்த வெளங்காதவன் என்ன பண்ணிருக்கனும் ஜோசியம் தான பார்த்துருக்கனும் ..பார்த்துருக்கணுமா இல்லையா” என அழுதுகொண்டே கேட்டவர், அப்படியே தன் கணவனின் தோளில் அடித்துக் கொண்டே புலம்ப,

 

“அடியே புலம்ப சொன்னா என்னையை அடிச்சு அடிச்சே எனக்கு புதைகுழி தோண்டிருவ போல, இத்தனை வருஷமா சேர்த்து வச்சுருந்த ஆத்திரத்தை எல்லாம் இதான் சான்ஸ்னு அடிச்சு தீர்த்துக்கிரியா” என கோபாலன் அவரின் காதுக்குள் முனங்க ,

 

“ஹிஹி சாரிங்க ஒரு வேகத்துல பண்ணிட்டேன்..நீங்க என் சாமிங்க” என லக்ஷ்மி அசடு வழிய,

 

“சகிக்கலை இதுக்கு முன்னாடி பண்ணதையே பண்ணித் தொலை” என கோபாலன் கடுப்புடன் கூறினார்,

 

மீண்டும் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தார் லக்ஷ்மி ,” அந்த படுபாவி அந்த கருவாப்பய காளிதாசங்கிட்ட காசை வாங்கிகிட்டு என் பொண்ணை கல்யாணம் பண்ணா தான் இந்த வீணாப்போனவன் அடுத்து வர எலெக்ஷன்ல ஜெய்ப்பான்னு கொலுத்திப்போட்டு என் பொண்ணை அந்த நாரப்பயகிட்ட கோர்த்துவிட, அந்த நாயும் காஞ்ச மாடு கம்புல மேஞ்ச மாதிரி , ரதி மாதிரி நான் வளர்த்து வச்ச என் புள்ளையை தூக்கிட்டு போய்ட்டானே இந்த கொடுமையை நான் எங்கன்னு போய் சொல்லுவேன் அய்யோய்யோயோ” என அவர் மீண்டும் ஒப்பாரி வைத்தார்.

 

அனைத்தையும் அங்கிருந்து கேட்ட கார்த்திக்கிற்கு விஷயம் புரிந்து விட, அடுத்து என்ன செய்ய வேண்டும் என திட்டம் தீட்டலானான்.

 

ஆனாலும் அவனுக்கு வர்ஷூவின் அன்னையின் நடிப்பை நினைத்து மெச்சாமல் இருக்க முடியவில்லை.

 

அவனின் திட்டப்படி முதலில் காளிதாசனை இந்த ஊரை விட்டு இரண்டு நாளைக்கு எங்காவது அனுப்பி வைக்க வேண்டும், லக்ஷ்மி சொன்னபடி பார்த்தால் அவனுக்கு ஜோசியத்தின் மீதுள்ள நம்பிக்கையை பயன்படுத்தி அவனை சுலபமாக வெளியூருக்கு பார்சல் பண்ணி விட நினைத்தவன் , அடுத்த கட்டமாக அவனுக்கு எதிராக திரட்டியுள்ள ஆதாரங்களை எதிர்க்கட்சியினரிடமும், மீடியாவிடமும் கொடுத்து விட்டால், எலெக்ஷன் சமயத்தில் ஆளுங்கட்சியால் அவனுக்கு உதவ முடியாமல் போய்விடும், எனவே அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வர்ஷூவை மீட்டெடுத்து விடலாம் என கணக்கு போட்டான் கார்த்திக்.

 

கார்த்திக்கும் அவன் நண்பனும் சேகரித்த தகவலின் படி அந்த காளிதாசன் இதுவரை பல லட்சம் கோடிகளை ஊழல் செய்திருப்பதும், இது பத்தாதென்று வெளிநாட்டிலிருந்து வரும் எக்ஸ்பெரி(expired) ஆன மருந்துகளை நம் நாட்டில் விற்க உதவி செய்து அதன் மூலமாகவும் அவன் பணம் பார்த்து வந்தது தெரிய, சாமர்த்தியமாக காய்களை நகர்த்தினர்.

 

முதலில் தன் திட்டப்படி அன்று இரவே அந்த ஜோசியரை கடத்தி வந்தவன் , அவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இப்போதே அந்த காளிதாசனை ஹிமாலயாஸ்க்கு சென்று இரண்டு நாட்கள் தவம் செய்யுமாறு கூறச் சொல்ல, அவரும் வேறு வழியில்லாமல் அந்த அர்த்த ராத்திரியில் காளிதாசனுக்கு போனை போட்டார்.

 

 

 

“இராத்திரி நேரத்து பூஜையில்

ரகசிய தரிசண ஆசையில்”

 

என்று நடுராத்திரி ஒலித்த தன் போனைக் கண்டு வாரிச் சுருட்டி எழுந்த காளிதாசன் திரையில் ஜோசியரின் எண்ணைக் கண்டு குழம்பி,”சொல்லுங்க சாமி” என பவ்யமாக வினவினான்.

 

நெற்றிப்பொட்டில் கார்த்திக் துப்பாக்கியை வைத்திருக்க, பயத்தை கஷ்டப்பட்டு விழுங்கிக் கொண்டு ,”என்ன மினிஸ்டர் ஜி எப்படி இருக்கீங்க” என முயன்று வரவழைத்த உற்சாகமான குரலில் கேட்க,

 

“சாமி இருக்கப்போ எனக்கு என்ன கவலை உங்க புண்ணியத்துல நல்லா இருக்கேன் சாமி” என அந்தப்பக்கம் இருந்து பதில் வந்தது,

 

“ஓம் சிவ சிவ.. ஆனா சிவன் உங்க மேல ஏதோ கோபத்துல இருக்கார் போல தெரியுதே மினிஸ்டர் ஜி” என இவர் சோகமாக கூற,

 

அந்தப்பக்கம் பதறியடித்து எழுந்து அமர்ந்த காளிதாசன் ,” என்ன சாமி இப்படி சொல்லிட்டிங்க..அந்த சிவபெருமானுக்கு இது வரை குறை எதுவுமே நான் வச்சது இல்லையே..இதுக்கு என்ன பரிகாரம் சாமி, எவ்வளவு செலவானலும் பரவாயில்லை, இப்போதைக்கு எனக்கு பதவி தான் முக்கியம்” என கூற,

 

இவரோ ,”இல்லை ஜி இன்னைக்கு பூஜை பண்ணிட்டு இருக்கப்போ உங்களுக்கு வந்த குறி சரியில்லை..இந்த முறை பதவி கிடைக்க வாய்ப்பு கஷ்டம்னு தோணுது..அதுக்கு பரிகாரமா ஹிமாலயாஸ்ல போய் ரெண்டு நாள் எந்த வித தொந்தரவும் இல்லாம முழுமனதோட சிவனை நினைச்சு தவமிருங்க, நிச்சயம் வெற்றி உங்க பக்கம் தான்” என கார்த்திக் சொல்லிக் கொடுத்த டயலாக்கை அச்சுப்பிசகாமல் ஒப்பித்தார்.

 

 

“சாமி சொன்னா சரியா தான் இருக்கும்..கண்டிப்பா நான் செய்யுறேன் சாமி…நான் இப்போவே கிளம்புறேன்.. வெள்ளிக்கிழமை காலையில டைரக்டா கல்யாணத்துக்கு வந்துடுறேன் நீங்களும் வந்திருங்க” என கூறிய காளிதாசன் அப்போதே தன் பி.ஏ விற்கு அழைத்து கிளம்ப வேண்டிய ஏற்பாடுகளை கவனிக்க சொன்னார்.

 

இருந்தும் காளிதாசனுக்கு முன்பே தனக்கு எதிராக ஏதோ வலை பின்னப்படுவதை உணர்ந்தவர் , எதற்கும் முன்ஜாக்கிரதையாக வர்ஷூ தங்கியுள்ள வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு வைத்து விட்டே அங்கிருந்து கிளம்பினார்.

 

அந்த ஜோசியரை இப்போதைக்கு வெளியே விடுவது சரியல்ல என நினைத்த கார்த்திக், அவரை தன் கட்டுப்பாட்டிலே வைத்திருந்தவன் அந்த இரண்டு நாளும் அவனை செம்மையாக கவனிக்க முடிவு செய்து அந்த வேலையை அங்கிருந்தவர்களிடம் ஒப்படைத்தான் , காளிதாசன் வெளியூர் சென்று விட்டதை உறுதி செய்து விட்டு தனக்கு மிகவும் நெருக்கமான அசிஸ்டென்ட் கமிஷ்னரை சந்தித்தான்.

 

அவர்களின் திட்டப்படி நடு இரவில் இந்த செய்திகளை பரப்புவது தான் பரபரப்பை ஏற்படுத்தும் என நினைத்தவர்கள் முன்பே கமிஷ்னர் , பின் மீடியாக்களிடம் சொல்லி வைத்து காளிதாசன் தப்பித்துச் செல்லாதவாறு ஆதாரங்களை இன்னும் வலுப்படுத்தினர்.

 

புதன் இரவு பன்னிரெண்டு மணிக்கு அவர்கள் திட்டமிட்டது போல் அனைத்து மீடியா மற்றும் நியூஸ் சேனலிலும் காளிதாசனின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறியது.

 

மும்பைக்கே அந்த இரவு தூங்கா இரவாகிப் போனது. எங்கு திரும்பினாலும் இந்த செய்தியே ஓடி அவர்கள் நினைத்ததை விட தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

 

 

இதுதான் சமயம் என எதிர்கட்சியினர் அங்கங்கு அமர்ந்து கூட்டம் போராட்டம் என ஆளுங்கட்சியினரை கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருந்தனர்.

 

போலிஸூம் அரெஸ்ட் வாரண்டுடன் காளிதாசனை கைது செய்ய சுற்றிக் கொண்டிருந்தனர்.

 

ஆளுங்கட்சியினர் இப்போதிருக்கும் நிலமையில் காளிதாசனுக்கு கை கொடுத்தால் , தங்கள் தலையில் துண்டை போட வேண்டியதாக இருக்கும் என நினைத்து சாமர்த்தியமாக அவரை அப்போதே கட்சியில் இருந்து நீக்கி விட்டனர்.

 

இதனால் காளிதாசனின் அல்லக்கைகள் சிலர் களத்தில் குதித்து கலவரம் செய்ய, மும்பையே கலவர பூமியாக காட்சியளித்தது.

 

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரசாத் அந்த பி.ஏவைத் தொடர்ந்து சென்றதன் மூலம் கண்டுபிடித்த வர்ஷூவின் இடத்தை நோக்கி கார்த்திக் சென்று கொண்டிருந்தான்.

 

இன்னொரு புறம் வர்ஷூவின் அன்னை தந்தையை மீட்க பிரசாத் சென்றிருந்தான்.

 

வர்ஷூ இருந்த பங்களாவை அடைந்திருந்த கார்த்திக்கிற்கு மலைப்பாக இருந்தது.

 

ஊரே கலவரமாக இருந்தாலும் இன்னும் அங்கு காவலுக்கு இருந்த ஆட்கள் வெளியே செல்லாமல் இங்கேயே தங்கியிருந்தது தான் அதற்குக் காரணம் .

 

 

‘அய்யோ என்னை ப்ரேக்கை பிடுங்கி கொல்ல பார்த்த அந்த பிசாசுக்காக நான் இப்போ ஜாக்கி சான் மாதிரி சண்டை போடணுமா என்ன கொடுமை சரவணன் இது’ என விதியை நொந்து கொண்டவன்,

 

உள்ளே முதலில் எப்படி செல்வது என சிந்திக்க ஆரம்பித்தான்.

 

அங்கிருந்த மரம் அவன் கண்களில் பட, ‘அதில் ஏறலாமா’ என ஒரு நிமிடம் சிந்தித்தவன் அடுத்த நிமிடமே ‘அங்கிருந்து கீழே விழுந்தால் டங்குவாரு அந்துரும் டா கார்த்திக், இது படம் இல்லை ஒழுங்க வேற எதாச்சும் யோசி’ என மூளை எச்சரிக்கை விடுக்க, அதற்கு செவி மடுத்தவன் அடுத்த திட்டத்தை சிந்தித்தான்.

 

ஒரு ஐடியா மூளையில் பளிச்சிட, அங்கிருந்த மரக்கிளையில் ஒருவர் சென்றால் ஏற்படும் சலசலப்பை ஏற்படுத்தியவன் அடுத்து ஒருவர் கீழே குதிப்பது போல் ஒரு பெரிய கல்லைத் தூக்கி உள்ளே எரிந்தான்.

 

அந்த சப்தத்தில் அனைவரும் பின்பக்கம் வந்து தேட, அவன் அந்த கேப்பில் முன்பக்கமாக வீட்டிற்குள் நுழைந்திருந்தான்.

 

கார்த்திக்கிற்கு உதவி செய்யவே அப்போது பின்பக்கமாக ஒரு பூனை செல்ல, அதைக் கண்ட காவலாளிகள் ,”ச்சை இதானா” என நொந்து கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.

 

உள்ளே வந்த கார்த்திக் ‘இங்கி பிங்கி பாங்கி’ உதவியுடன் வர்ஷூவின் அறையைக் கண்டுபிடிக்க, அது பூட்டியிருந்தது.

 

இவன் தான் சரியான ஜகஜால கில்லாடியாயிற்றே காது குடைய வைத்திருந்த சிறிய கம்பி மாதிரி இருந்த ஒன்றை எடுத்து அப்படியும் இப்படியும் ஆட்ட கதவு திறந்து கொண்டது .

 

 

ஆசையாக ,”வர்ஷூ நான் வந்துட்டேன்” என சந்தோஷத்தில் கூவிக்கொண்டே(மெல்லமாகத் தான்) உள்ளே நுழைய, காலி அறையே அவனை வரவேற்றது.

 

‘ச்சை இந்த இங்கி பாங்கின்னு நம்புனா நான் தெருவுல சிங்கி அடிக்கனும் போல’ என நொந்து போனவன் , பக்கத்திலிருந்த அறையைச் சென்று திறந்தான்.

 

இப்போது அவனை ஏமாற்றாமல் அங்கு வர்ஷூ விட்டத்தை வெறித்துக் கொண்டு படுத்திருந்தாள்.

 

சோகச் சித்திரமாய் அங்கு படுத்திருந்த வர்ஷூவைக் கண்டு இவன் மனம் ரணமாய் வலித்தது, மெதுவாக அவளை நெருங்கியவன் அதை விட மெதுவாக அவள் பெயருக்கு வலித்து விடக்கூடாது என நினைத்து ,”வர்ஷூ” என்று அழைக்க,

 

தான் காதிற்கு மிக அருகில் கேட்ட குரலில் அடித்து பிடித்து எழுந்த வர்ஷு , அங்கு ஈஈஎன இழித்துக் கொண்டிருந்த கார்த்திக்கை சத்தியமாய் எதிர்பார்க்கவில்லையென அவள் அதிர்ச்சியில் வாயைப் பிழந்ததிலிருந்தே கண்டுகொண்ட கார்த்திக் ,”ஹேய் முட்டை போண்டா கத்தி கித்தி தொலைச்சிராத, முதல்ல இங்க இருந்து கிளம்பனும் அங்க உன் அப்பா அம்மா நமக்காக காத்துட்டு இருப்பாங்க..அங்க போய் உன்னோட எல்லா கேள்விக்கும் பதில் சொல்றேன் இப்போ கொஞ்சம் வாயை மூடிட்டு வா சீக்கிரம் எஸ்கேப் ஆகனும்” என கூறியவன், அவள் முறைப்பதைப் பொருட்படுத்தாது அவள் கையைப் பிடித்துக் கொண்டு பால்கனிக்கு வந்தான்.

 

அங்கிருந்து பின்பக்கம் பார்க்க, ஆட்களின் நடமாட்டம் இல்லாதது கண்டு திருப்தியுற்று அந்த அறையிலிருந்த பெட்ஷீட்டை பால்கனி கம்பியில் கட்டிவிட்டு அவளை கீழே இறங்க சொல்ல, அவள் எட்டிப்பார்த்துவிட்டு “ம்ஹூம் ரொம்ப ஹைட்டா இருக்கு என்னை தூக்கிட்டு போ குருவி விஜய் மாதிரி” என பயத்தில் உளற,

அவனுக்கு இருந்த கடுப்பில் நங்கென அவன் மண்டையில் கொட்டியவன் “நல்லா குந்தானி மாதிரி இருந்துகிட்டு உனக்கு குருவி விஜய் கேட்குதோ..மரியாதையா இறங்குறியா இல்லை தள்ளிவிடவா?” என அவன் மிரட்ட, வேறு வழியில்லாமல் பயத்தோடு அவள் இறங்க, அவனும் அவளிற்கு பின்னாலே இறங்கினான்.

 

அவர்கள் கீழே வரவும் வாசலில் போலிஸ் ஜீப் காளிதாசனைத் தேடி வரவும் சரியாக இருந்தது.

 

போலிஸ் கண்ணில் பட்டுவிட்டால் வர்ஷூவின் மானம் காட்சிப்பொருளாகும் என்று பயந்து தான் அவர்கள் வருவதற்கு முன் அவளை அங்கிருந்து கூட்டிச் செல்ல திட்டமிட்டு வந்திருந்தான், இருந்தும் இப்போது அவர்கள் வந்துவிட, வேகவேகமாக காம்பவுன்ட்டை நெருங்கியவன், குனிந்து கொண்டு வர்ஷூவை அவன் மேல் ஏறி குதிக்கச் சொல்ல,

 

“என்னாதூஊஊ” என அவள் மீண்டும் வாயப் பிளக்க, “ஒழுங்கா ஏறித் தொலை…நீ ஏறி என் இடுப்பு உடையிறதுக்கு நான் தான் நியாயமா அலறனும் நீ இப்படியே பண்ணிட்டு இருந்த இங்கயே கிடந்து அந்த கிழவனை கல்யாணம் பண்ணிக்கோன்னு போய்ருவேன் பார்த்துக்கோ” என அவன் மிரட்டல் கொஞ்சம் வேலை செய்ய

 

“பகவானே என்னை காப்பாத்து” என வேண்டிக் கொண்டவள் பயத்துடனே ஏறி அங்கிருந்து குதிக்க, அடுத்து காம்பவுன்டில் கை வைத்து ஏறப்போக சரியாக ஒரு தோட்டா அவனின் இடது தோள்பட்டையை கிழித்துக் கொண்டு சென்றது.

 

அங்கிருந்த ஒரு அடியாள் தான் சப்தம் கேட்க பின்பக்கம் வந்தவர் அங்கு அவனைக் கண்டு சந்தேகத்தில் துப்பாக்கியை எடுத்து சுட்டிருக்க,இருட்டில் அவர் குறி தவறியிருந்தாலும் குண்டு அவன் தோள்பட்டையை உரசிசென்று தோளைக் கிழித்து இரத்தம் அவன் சட்டையின் இடதுபுறம் முழுக்க நனைத்தது,வலி உயிர் போனபோதும் அங்கு போலிஸ் வரும் சப்தம் கேட்க,கஷ்டப்பட்டு வலியைப் பொருத்துக் கொண்டு அவன் வேகமாக ஏறிக் குதிக்க, இரத்தப் போக்கு அதிகமானது.

 

உடலெல்லாம் இரத்த அபிஷேகம் செய்தது போல் தன் முன் வந்து விழுந்தவனைக் கண்டு வர்ஷூவின் இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்தியது.

 

அவனோ அவள் முகத்தைக் கண்டு கொள்ளாமல் சற்று தொலைவில் நிறுத்தியிருந்த காரை நோக்கி அவளை இழுத்துக் கொண்டு ஓடினான்.

 

 

அந்தேரியை நோக்கி மிதமான வேகத்தில் அந்த கார் பயணித்துக் கொண்டிருந்தது.

 

முன்பக்க சீட்டில் அமர்ந்து அங்கிருந்து இங்கு வரை விடாமல் அழுது கொண்டு வரும் வர்ஷூவை நினைத்து அவனுக்கு கவலையாக இருந்தது .

 

“வர்ஷூ இப்போ எதுக்கு அழுகுற?? கையில தான பட்டுச்சு ஏதோ நெஞ்சுல பட்டு நான் செத்து..” என சொல்ல வந்தவனின் வாயின் மீது கைவத்தவள் கோபத்துடன் ,”ப்ளீஸ் அப்படியெல்லாம் சொல்லாத கார்த்திக்..உன்னை யாரு அங்க வந்து அடிபட சொன்னது.. உனக்கு என்ன தலையெழுத்தா ?? என் ராசி தான் அப்படி பெத்தவங்க விட்டுட்டு போய்ட்டாங்க, வளர்த்தவங்களையும் சாகடிக்க பார்த்தேன், இப்போ எனக்கு உதவ வந்து உன்னையும் இப்படி ஆகிட்டேன்.. ஏன் கார்த்திக் வந்த ” என கழிவிரக்கத்தில் அவள் அழுது கொண்டே கூற,

 

“ஷ்!! ஏற்கனவே வலிக்கிது வர்ஷூ நீ வேற இப்படி பேசி ஹர்ட் பண்ணாத.. அப்பறம் ட்ரைவ் பண்ண முடியாது” என அவன் வலியோடு ஒரு கையிலே வண்டி ஓட்டிக் கொண்டு வர,

 

 

“நான் வேணா டிரைவ் பண்ணவா??” என அவள் அவனுக்காக கேட்க,

 

“தெய்வமே எனக்கு என் உயிர் மேல ரொம்ப ஆசை என்னை போட்டுத் தள்ள ப்ளான் போடாம பேசாம வா இன்னும் கொஞ்ச தூரம் தான் அப்பறம் ட்ரைன்ல தான் போகப் போறோம்” எனக் கூறியவன் சாலையில் கவனத்தைப் பதித்தான்.

 

வரும் வழியிலே தனக்கு தெரிந்த மருத்துவர் ஒருவரிடம் மேலோட்டமாக மருந்திட்டுவிட்டு கைகளை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தாலும், இன்னும் வலி உயிர் போனது.

 

பெய்ன் கில்லரை சாப்பிட்டால் தூக்கம் வந்துவிடும் என அதையும் தவிர்த்துவிட்டு வலியுடன் பயணித்துக் கொண்டிருந்தான் நம் நவரச நாயகன் கார்த்திக்.

 

சற்று நேரத்திற்கெல்லாம் அவர்கள் அந்தேரி ரயில்வே ஸ்டேஷனை அடைந்திருக்க, காரை அங்கேயே விட்டவன் , அவளை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல, இரவு பதினொன்று இருபதுக்கு செல்ல வேண்டிய மங்களூர் எக்ஸ்பிரஸ் இங்கு நடந்து கொண்டிருக்கும் கலவரம் காரணமாக விடிகாலை நான்கு மணிக்கு புரப்படுவதாக இருந்தது.

 

அங்கே அந்த தடியன்களை ஏமாற்றி ஒருவழியாக வர்ஷூவின் பெற்றோரை அங்கு கூட்டி வந்திருந்த பிரசாத், இவர்களைக் கண்டதும் வர்ஷூவின் பெற்றோரை அந்த ரயிலில் ஏற்றி விட, கார்த்திக்கும் வர்ஷூவும் அவர்கள் பின்னே ஏறினர்.

 

அப்போது தான் அவன் கையிலிருந்த கட்டையும் மீறி இரத்தம் கசிவதை கவனித்த பிரசாத் ,”டேய் மாப்ள என்ன டா இது!!” என பதற,

 

 

“ச்சு அப்பறம் கால் பண்ணி சொல்றேன் டா.. நீ பார்த்துப் போ..ரொம்ப தேங்கஸ் டா” என்று அவனை ஒரு கையால் அணைத்து விடுவித்தான்.

 

அதற்குள் ரயில் கிளம்பி விட, “சரி பார்த்து போய்ட்டு எனக்கு கால் பண்ணாத ட்ரேஸ் பண்ண சான்ஸ் இருக்கு.. பக்கத்து தெருல இருந்த மெக்கானிக் ஷாப்க்கு கால் பண்ணி சொல்லிரு பாய் டா..பார்த்துப் போங்க” என்று விடையளித்தான் பிரசாத்.

 

உள்ளே வந்ததும் பிரிந்த மகளும் பெற்றோர்களும் சற்று நேரம் வரையில் கட்டிப்பிடித்து அழுது தங்கள் வருத்தத்தைக் குறைக்க, பின்பு தான் அங்கு ஒருவன் இருக்கின்ற நினைப்பே அவர்களுக்கு வந்தது.

 

அவனின் காயத்தைக் கண்டு அவளின் பெற்றோரும் பதற, அவர்களை சமாதானப் படுத்தியவன் பின் எவ்வாறு இப்படியாயிற்று எனவும் வினவினான்.

 

கோபாலன் ஒரு பெருமூச்சஒன்றை வெளியிட்டு தாங்கள் இங்கு மாட்டிக்கொண்ட கதையை தெளிவாக சொல்ல ஆரம்பித்தார் ,

 

ராஜலெக்ஷ்மிக்கு கடவுள் மீதும் ஜோசியம் மீதும் மிகுந்த நம்பிக்கை இருந்ததால் , அவளுக்காக வர்ஷூவின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு அவளையும் அழைத்துக்கொண்டு அந்த ஜோசியரிடம் போய் அமர்ந்திருந்த வேளையில் உள்ளே நுழைந்த காளிதாசன் வர்ஷூவைக் கண்டு வழிய, அதைக் கண்டு கொண்ட அந்த ஜோசியக்காரன் வர்ஷூவை அவனிடம் கோர்த்து விட்டால் இன்னும் நிறைய கிடைக்கும் என அல்பமாக நினைத்துக் கொண்டு, வர்ஷூவைக் கல்யாணம் செய்பவன் உலகையே ஆளப் பிறந்தவன் ஆஹா ஓஹோ என அவன் முன் புகழ்ந்து பேசி அவனை உசுப்பேற்றி விட, அந்தக் கிறுக்கும் இவன் சொன்னதை நம்பிக்கொண்டு அப்போது வர்ஷூவைக் கட்டினால் இந்த முறை தனக்குத் தான் பதவி கிடைக்குமா என கேட்டான்.

 

 

அவனும் ஆமாம் என்று சொல்லிவிட, அன்றே அவளை சிறையெடுத்து கொண்டு போய்விட்டான். வர்ஷூவின் பெற்றோர்களும் அவனிடம் எவ்வளவு கெஞ்சியும் அவளை விட மாட்டேன் என்று சொன்னதுமில்லாமல் போலீஸ்க்கு போனால் வர்ஷூவைக் கொல்வதோடு அல்லாது அவளை கேவலமாக வீடியோ எடுத்து அதை உலகம் முழுக்க பார்க்க செய்து விடுவேன் என்று மிரட்டி வைத்திருந்தான். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் சித்தார்த்தின் துணை தேடி அவனை அழைக்க, அதுவும் ஸ்விட்ச் ஆஃப் என்று வரவும் , தங்கள் மகளை காப்பாற்ற முடியாத தங்கள் கையாலாகாத நிலையை எண்ணி அவர்கள் தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ளப் போன சமயத்தில் தான் கார்த்திக் அங்கு அதிரடியாக நுழைந்து அனைத்தையும் திருப்பி போட்டு அவர்களை மீட்டுக் கொண்டு வந்து விட்டான்.

 

அனைத்தும் ஒரு வாரத்தில் நடந்து முடிந்திருந்தாலும் அவர்களுக்கு ஏதோ ஒரு யுகம் கழிந்திருந்ததைப் போல் இருந்தது.

 

கார்த்திக் எப்படி திடிரென்று அங்கு வந்தான் என அவர்கள் தங்கள் சந்தேகத்தைக் கேட்க, அப்போது தான் அவனுக்கும் இங்கு எதற்கு வந்தோம் என்றே நியாபகம் வந்தது.

 

இந்த சம்பவத்தில் சந்துவையே சுத்தமாக மறந்து விட்டோம் என தன்னைக் குறித்தே அவனுக்கு அவமானமாக இருக்க, இப்போது அவர்கள் இருக்கும் நிலமையில் சித்துவின் மீது தனக்கு உதித்துள்ள சந்தேகத்தைப் பற்றிக் கூறி அவர்களை கலவரப்படுத்தாமல், மும்பையில் தான் முன்பு வேலை செய்ததாகவும், ஸ்ரீ மிகவும் சோகமாக இருப்பதால் வர்ஷூவை பேச சொல்லி அவளை சமாதானப்படுத்த சொல்ல வந்ததாகவும் கூறி சமாளித்தான்.

 

அதற்குப் பின் அங்கு மௌனமே ஆட்சி செய்தது. கார்த்திக்கிற்கு வலி உயிர் போனாலும் முகத்தில் எதையும் காட்டாமல் தூங்கவும் இல்லாமல் யாரவது வந்துவிடுவார்களோ என சுற்றிலும் எப்போதும் தன் கண்களை சுழல விட்டுக் கொண்டிருந்தான்.

 

 

ஆனால் வர்ஷூ தான் அவனின் காயத்தையே பார்த்து தனக்குள்ளே மருகிக் கொண்டு வந்தாள்.

 

சரியாக பதினொரு மணிநேர பயணத்திற்குப் பின் இந்தோர் வந்து சேர்ந்தது அந்த ரயில்.

 

அதிலிருந்து இறங்கியவன் அவர்களை அடுத்து நாக்பூர் செல்லும் ஒரு ப்ரைவேட் பஸ்ஸில் ஏற்றினான்.

 

எதற்கு இப்படி மாற்றி மாற்றி செல்கிறோம் என லக்ஷ்மி கேட்க, அவர்கள் நிச்சயம் தங்களை எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில் தொடர்வார்கள் அப்போது ஒரே வழியில் பயணம் செய்தால் அவர்கள் நம்மை கண்டுபிடிப்பது சுலபம் அதை தவிர்க்கவே இப்படி என பதிலளித்தவன் கோபாலனுடன் சென்று அமர்ந்து கொண்டான்.

 

இந்த முறை அவனுக்கு மிகவும் அசதியாக இருந்ததால் அவனையுமறியாமல் உறங்கி விட்டான். ஆனால் மற்ற மூவரும் தான் உறங்காமல் பயத்திலே வந்து கொண்டிருந்தனர்.

 

ஒரு இரண்டு மணிநேரம் கழித்து கண்விழித்த கார்த்திக் அங்கு குழுங்கி குழுங்கி அழுது கொண்டிருந்த கோபாலனைக் கண்டு பதறியவன், மீண்டும் வர்ஷூவைக் காணவில்லையோ என பதறி போய் இரண்டு இருக்கைக்களுக்கு முன்னால் அமர்ந்திருந்த வர்ஷூவைத் தேட, அவளோ தன் அன்னையின் தோளில் சாய்ந்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

‘இவ நல்லா குத்துக்கல்லாட்டம் தான இருக்கா அப்பறம் எதுக்கு இவரு அழுகுறாரு’ என குழம்பிய கார்த்திக் ,”அங்கிள் என்னாச்சு அங்கிள்” என அவரின் தோளைத் தொட்டு உலுக்க,

 

 

அவனை நிமிர்ந்து பார்த்தவர் அவசரமாக தன் கண்ணீரை மறைத்து சிரிக்க முயல, அவனோ ஒரே பிடியாக ,”என்னவானது சொல்லுங்கள் ” என அழுத்தமாக கேட்டான்,

 

வேறு வழியில்லாமல் அவரும் மருத்துமனையில் தன்னை அந்த காளிதாசன் மிரட்டி விட்டுப் போனதை கூறலானார்.

 

“அன்று மருத்துவமனைக்கு வந்த காளிதாசன் அங்கிருந்த கோபாலனிடம் மயங்கி கிடந்த வர்ஷூவின் ஆபாச வீடியோவைக் காட்டி, இங்கிருந்து தப்பிக்கலாம் என்று நினைத்தால் அவை அனைத்தும் அடுத்த நாளே இன்டெர்நெட்டில் வைரலாகும் என மிரட்டிவிட்டு சென்றிருந்தான்” அதைச் சொன்னவர் , இது வெளியே தெரிந்தால் வர்ஷூவின் எதிர்காலம் என்னவாகும் அவளை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என ஒரு தந்தையாக அவர் வருந்த,

 

அவனுக்கோ அவர் கூறியதைக் கேட்டு காளிதாசனை கொன்றுவிடுமளவிற்கு ஆத்திரம் வந்தது. முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு ,”அங்கிள் அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இப்போ இருக்க உலகத்துல டெக்னாலஜி ரொம்பவே வளர்ந்திருச்சு அதை ஈசியா ஹேக் பண்ணி டெலிட் பண்ணிரலாம் ..உங்க பொண்ணு வீடியோவோ அவளை இப்படி கடத்துனது எதுவுமே வெளிய வராது அதுக்கு நான் பொறுப்பு” என வாக்கு கொடுத்தான்.

 

அவரோ அவன் என்ன சமாதானம் செய்தும் சமாதானமாகாமல் மகளின் வாழ்க்கையை நினைத்து வருந்திக் கொண்டே வர ,

 

அப்போது கார்த்திக் ,”வாழ்க்கை முழுவதும் உங்க பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் வராம நான் பார்த்துக்குறேன்..என்னை நம்பி எனக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணித் தரிங்களா அங்கிள்” என அவரை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு வினவ,

 

 

அவருக்கு தன் காதில் வந்து விழுந்த வார்த்தைகளை நம்ப முடியவில்லை, ஆனந்தமாக அதிர்ந்தவர் ,”நிஜமாத் தான் சொன்னியாப்பா” என நம்பாமல் கேட்க அவனும் சிரித்துக் கொண்டே ,”வாழ்க்கை முழுவதும் உங்க பொண்ணோட இம்சையை சகிச்சுக்கிறேன்ன்னு சத்தியமா தான் சொன்னேன் அங்கிள் ” எனக் கூற,

 

அவருக்கு சந்தோஷத்தில் விண்ணில் பறப்பதைப் போல் இருந்தது.

 

கார்த்திக்கின் குடும்பத்தைப் பற்றி முன்பே தெரிந்திருந்ததால், கார்த்திக்கைப் பற்றியும் இந்த ஒரு நாளிலே தெரிந்து கொண்டவர் முழுமனதுடன் அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

 

ஆனால் ஒரு நிபந்தனையுடன் , இன்றே அவர்கள் திருமணம் நடக்க வேண்டுமெனக் கூற , இப்போது அதிர்வது கார்த்திக்கின் முறையானது.

 

அவரின் மனநிலை அப்போது அவனுக்கு நன்றாக புரிந்தது, ஒரு தகப்பனாக அவரின் பயம் அவனுக்கு சரியென்று பட்டாலும், தன் வீட்டாரை நினைத்து அவனுக்கு கவலையாக இருந்தது, வேறு வழியில்லாமல் அவர் முடிவிற்கு தலை சாய்த்தான்.

 

கார்த்திக்கிற்கு எப்போது அவள் மீது காதல் வந்ததென்று புரியவில்லை, ஆனால் அவளின் தந்தை அவளை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறிய அந்த நொடி அவனால் அவளை வேறு ஒருவனுக்கு மனைவியாய் நினைத்து பார்க்க கூட முடியவில்லை.

 

அந்த நிமிடம் தன் காதலை உணர்ந்தவன் , எதையும் யோசிக்காமல் அவளை திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்கு கொடுத்துவிட்டான்.

 

நாக்பூர் வந்ததும், வர்ஷூவையும் கார்த்திக்கையும் பஸ் ஸ்டாண்டில் நிற்க வைத்துவிட்டு தன் மனைவியை அழைத்தவர் , காளிதாசன் பேசியது தொடங்கி கார்த்திக் கல்யாணத்திற்கு ஒப்புக் கொண்டது வரை கூறியவர் , இன்னும் சற்று நேரத்தில் அவர்களுக்கு திருமணம் என அவருக்கு தகவல் போல் கூறினார்.

 

அனைத்தையும் கேட்டு அவருக்கும் அதிர்ச்சியாக இருந்ததால், கணவனின் உறுதியில் வேறு வழியில்லாமல் அவரும் திருமணத்திற்கு தயாரானார்.

 

அங்கேயே ஒரு கோவிலுக்கு சென்றவர்கள் வழியில் வாங்கிய தாலியை எடுத்து கார்த்திக்கிடம் நீட்ட, வர்ஷூ அதிர்ந்து போனாள்.

 

அவளின் சம்மதத்தை அங்கு யாரும் கேட்கத் தயாராக இல்லை, கார்த்திக்கிற்கு வலித்தாலும் வேறு வழியில்லாமல் தாலியை கட்ட கையைத் தூக்க, அதற்குக் கூட அவனின் இடது கை ஒத்துழைக்கவில்லை.

 

அவ்வளவு நேரம் குழப்பத்தில் இருந்தவள் அவனின் வலியைக் கண்டதும் மற்றதை மறந்து அவனுக்காக கண்ணீர் சிந்த,

 

கார்த்திக்கின் முகம் கனிந்தது முகத்தில் மலர்ந்த புன்னகையுடன் கஷ்டப்பட்டு கைகளைத் தூக்கி அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான்.

 

ஒரு வாரத்தில் தன் வாழ்வில் எத்தனை மாற்றங்கள் என வர்ஷூ தன் கழுத்தில் தொங்கிய புது மஞ்சள் கயிறை விரல்கள் நடுங்க தொட்டுப் பார்த்தாள்.

 

அதன் பின் அவர்கள் அங்கிருந்து கோவாவிற்கு ப்ளைட்டில் சென்றிறங்கி அதைத் தொடர்ந்து அங்கிருந்து ஹைதராபாத்திற்கு ட்ரைனில் வந்தவர்கள் அங்கிருந்து சென்னைக்கு பஸ்ஸில் வந்து தங்கள் ஊருக்கு ப்ளைட்டில் வந்து சேர்ந்தனர்.

 

இப்போதிருக்கும் நிலமையில் திருமணத்தைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என அவர்களிடம் கூறியவன் , அவர்கள் வீட்டில் மூவரையும் விட்டுவிட்டு தன்னுடைய நண்பனின் மருத்துவமனைக்குச் சென்று அட்மிட் ஆகிவிட்டான்.

 

 

மும்பையிலோ அன்றே காளிதாசனை அரெஸ்ட் செய்துவிட்டனர், அவரைக் காப்பதே இப்போது முக்கியம் என நினைத்த அவனின் அல்லக்கைகள் வர்ஷூவைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டு அவருக்கு ஜாமீன் கிடைக்க போராடினர்.

 

இதைப்பற்றி யாரிடமும் மூச்சுவிடக் கூடாது என முடிவெடுத்த கார்த்திக் ஹாஸ்பிடலில் இருந்து இரண்டு நாள் கழித்து டிஸ்சார்ஜ் ஆன பின் வீட்டிற்குச் சென்றான்.

 

கார்த்திக் இதை ஹரியிடம் கூட சொல்லாததன் காரணம், தனக்கு குண்டடிபட்டது தெரிந்தால் நிச்சயம் அவன் அமைதியாக இல்லாமல் அவர்களை ஏதாவது செய்யப்போவான் அது அவனுக்கு பிரச்சனை என்று தான் அவனிடம் கூட உண்மையை மறைத்திருந்தான் அதை பின்னாளில் உணர்ந்து கொண்ட ஹரிக்கும் கார்த்திக் மட்டும் தனியாக எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தான் என வேதனை மனதைப் பிசைந்தது.

 

வீட்டிற்குச் சென்றதும் ஹரிக்கு அவனின் தோற்றத்தில் வித்தியாசம் தெரிந்தாலும் அப்போது சந்து , ஸ்ரீ என அவனுக்கு இருந்த பிரச்சனையில் அதை கார்த்திக்கிடம் கேட்டு அவன் ஒன்றுமில்லை என மறுத்துவிட்டதும் அப்படியே விட்டுவிட்டான். இந்த ஒரு வாரத்தில் ஹரியே சித்துவைப் பற்றி ஓரளவு சேகரித்து வைத்திருக்க, தான் சேகரித்ததை கார்த்திகிடம் பகிர்ந்து கொண்டான்.

 

கார்த்திக் வந்ததும் தங்களுக்கு கிடைத்த சித்துவின் நம்பருக்கு அழைத்து விஷயத்தைக் கேட்க, அவனும் அட்ரெஸ் கொடுத்து நேராக வரச்சொல்லிவிட்டான்.

 

 

அங்கு போன பின் தான் இந்த இரு மாதமாக சந்துவின் நிலமை மிகவும் மோசமாக இருந்ததை அறிந்தனர், இங்கு வந்ததிலிருந்து எந்நேரமும் கோபமாக எதையாவது உடைத்துவிட்டு அழுவது கத்துவது என சந்து சித்துவை பாடாய்படுத்தியிருப்பதை அறிந்த கார்த்திக் ,அதனால் தான் அவனின் பெற்றோரிடம் அவனுக்கு ஆதரவாக பொய் சொன்னான்.

 

அதன் பின் வர்ஷூவையும் சென்னையிலே சேர்த்துவிட, கார்த்திக்கிற்கு நிம்மதியாக இருந்தது. நாலு வருடமாக அவளை தன் கண்கானிப்பிலே வைத்திருந்த கார்த்திக், ஸ்ரீயை பார்க்கப் போகும் சாக்கில் மனைவிக்கும் ரூட் விட்டுக் கொண்டிருந்தான்.ஆனால் வர்ஷூவிற்குத் தான் அவனை பிடித்திருந்தாலும் அவன் தன்னை தன் தந்தையின் கட்டயாத்தின் பேரில் கல்யாணம் செய்து கொண்டதால் தான் இப்படி இருக்கிறான் மற்றபடி அவனுக்கு தன்மேல் காதலெல்லாம் இல்லை என நினைத்து தன்னையும் குழப்பிக் கொண்டு அவனையும் வதைத்துக் கொண்டிருந்தாள்.

 

ஹரியின் திருமணத்தின் போது இதுதான் சரியான சமயம் என ஒருவழியாக அனைவரிடமும் உண்மையை போட்டு உடைத்துவிட்டான் கார்த்திக்.

 

அப்போதும் வர்ஷூவிற்கு வருத்தமே, இந்த முறையும் யாருக்கும் என்னுடைய சம்மதம் தேவையில்லாமல் போய்விட்டது என நினைத்து குமுறியவள் , கார்த்திக்கின் மீது கோபத்தை சேர்த்து வைத்துக் கொண்டாள்.

 

காளிதாசனுக்கு நான்கு வருடம் கழித்து இப்போது தான் விடுதலை கிடைத்திருந்தது , இதற்கெல்லாம் காரணமாக இருந்தது வர்ஷூவும் கார்த்திக்கும் என அறிந்தவன் இப்போது அடிபட்ட புலியின் சீற்றத்துடன் அவர்களை தேடிக் கொண்டிருந்தான்.

 

வர்ஷூ பார்ப்பதற்கு வடநாட்டுப் பெண் போல இருப்பதால் அவள் தமிழ்நாடு என அவனுக்கு சந்தேகம் வரவில்லை, மேலும் அவர்களின் நம்பரை வைத்து ட்ரேஸ் செய்ய முடியாதபடி கார்த்திக் சிஸ்டத்தை ஹேக் செய்து அனைத்து அட்ரெஸ்ஸையும் மாற்றி வைத்திருந்தான்.

 

இருந்தும் காளிதாசன் புகழ்பெற்ற டில்லி டிடெக்டிவ் ஏஜென்சியின் மூலம் இவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறதை அறிந்து தான் ஹரியும் கார்த்திக்கும் இவ்வளவு நாளாக அவர்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

தனக்கு வர்ஷூவின் மீது தோன்றிய காதலைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் அனைவரிடமும் சொல்லி முடித்தான் கார்த்திக்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்